Everything posted by அன்புத்தம்பி
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை. ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரச சபைக்கு வந்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான். அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தான். அந்த ஏழை சொன்னான், “அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் நான் வந்தேன்.” அரசனுக்கு கோபம் வந்து விட்டது. “யாரிடம் புளுகுகிறாய்.? நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?” என்று உரத்தக் குரலில் சுத்தினான். உடனே ஏழை சொன்னான், “அரசே, நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள். நான் பொய்யன் என்பதை உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டு விட்டதால், போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்” என்று பணிவுடன் கேட்டான். கோபத்திலும், அவசரத்திலும் தாம் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்த அரசன், “நீ சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ள முடியாது!” என்று அவசரமாக மறுத்தான். ஏழை விவசாயி சொன்னான், “சரி, நான் சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் போகிறது. உண்மை என்று ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா. எனவே, எனக்குத் தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து, கடனை அடையுங்கள்.” கையைப் பிசைந்த அரசன், அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு வாறார் ஐயா வாறாரு கறுப்பர் சாமி வாறாரு- இறைவனிடம் கையேந்துங்கள்
ஓசை யொலியெலா மானாய் நீயே உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே வாச மலரெலா மானாய் நீயே மலையான் மருகனாய் நின்றாய் நீயே பேசப் பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே தேச விளக்கெலா மானாய் நீயே திருவையா றகலாத செம்பொற் சோதீ.- இரசித்த.... புகைப்படங்கள்.
- மனதுக்கு இதமான இசை
Meditation Music for Relaxing and Studying- இறைவனிடம் கையேந்துங்கள்
சித்தன்குறிச்சி ஊரின் ஸ்ரீ முருகா மூர்த்தியே எங்கள் சித்தம் நிறைந்திருக்கும் கருணை ஒளி கீர்த்தியே கோயில் கொண்டு குடியமர்ந்து வாழ வந்த சாமியே சின்ன கையியல்வேலை காவி உறைகாக்கும் கந்த சாமியே மண்ணில் சிலை கொண்ட ஸ்ரீ முருகா சித்தர் வரம் பொருளாய் கொலு அமர்ந்த சீர் அழகா- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஓடலிராசையா- கே.எஸ்.பாலச்சந்திரன் KS Balachandran பாலச்சந்திரன் இலங்கையில் அறியப்பட்ட வானொலி நடிகர்களில் ஒருவர். ஏறக்குறைய 20 ஆண்டுகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர்.- இறைவனிடம் கையேந்துங்கள்
சிவபுராணம் தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன் (திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்) சிவபுராணம் நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க நமச்சிவாய இமைப் பொழுதும் என் நெஞ்சில்! நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன்பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள்மகிழும் கோன் கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் குழல் வெல்க ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி! தேசன் அடி போற்றி ! சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீர் ஆர் பெருந்துறை நம்தேவன் அடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஓய உரைப்பன் யான் கண் நுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய் எண் நிறைந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர் பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் புல் ஆகிப் பூடு ஆய்ப் புழுஆய் மரம் ஆகிப் பல் விருகம் ஆகிப் பரவை ஆய் பாம்பு ஆகிக் கல் ஆய் மனிதர் ஆய்ப் பேய் ஆய்க் கணங்கள் ஆய் வல் அசுரர் ஆகி முனிவர் ஆய் தேவர் ஆய்ச் செல்லா அ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றே உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே! வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா பொய் ஆயின எல்லாம் போய் போய் அகல வந்து அருளி மெய்ஞானம் வி.மிளிர்கின்ற மெய்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல் விக்கும் நல் அறிவே ஆக்கம் அளவு இறுதி இல்லாய் அனைத்து உலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய்! சேயாய் நணியானே மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே கறந்த பால் கன்னலோடு நெய் கலந்தாற் போலச் சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள் ஓர் ஐந்துடையாய்! விண்ணோர்கள் ஏத்த மறைந்து இருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிப் புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்த அன்பு ஆகிக் கசிந்து உள் உருகும் நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி நிலம் தன் மேல் வந்து அருளி நீள் கழல்கள் காட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே! மாசு அற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே! தேசனே தேன் ஆர் அமுதே! சிவபுரனே பாசம் ஆம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறு ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆர் உயிர் ஆய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே அன்பருக்கு அன்பனே! யாவையுமாய் அல்லையுமாய் சோதியனே! துன் இருளே! தோன்றாப் பெருமையனே ஆதியனே! அந்தம் நடு ஆகி அல்லானே ஈர்த்து என்னை ஆட் கொண்ட எந்தை பெருமானே கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கு அரிய நோக்கே நுணுக்கு அரிய நுண் உணர்வே போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே காக்கும் எம் காவலனே ! காண்பு அரிய பேர் ஒளியே ஆற்று இன்ப வெள்ளமே ! ஆத்தா மிக்காய் நின்ற தோற்றச் சுடர் ஒளியாய்ச், சொல்லாத நுண் உணர்வாய் மாற்றம் ஆம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் தேற்றனே ! தேற்றத் தெளிவே ! என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே! உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட் கிடப்ப ஆற்றேன் எம் ஐயா! அரனே ஓ ! என்று என்று போற்றிப் புகழ்ந்து இருந்து பொய் கெட்டுமெய் ஆனார் மீட்டு இங்கு வந்து வினைப் பிறவி சாராமே கள்ளப் புலக் குரம்பை கட்டு அழிக்க வல்லானே நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே தில்லையுள் கூத்தனே! தென் பாண்டி நாட்டானே! அல்லல் பிறவி அறுப்பானே! ஓ என்று சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக் கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
ஓடுது ஓடுது கரிக்கோச்சி- மனதுக்கு இதமான இசை
Meditation Music for Relaxing and Studying- பழைய திரைப்பட,நிழற் படங்கள்
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
கால கணபதி கருணை கணபதி தர்மத்தை காத்திட வருவாயா விரகணபதி சக்தி கணபதி நல்வழி தந்திட வருவாயா நிதிய கணபதி நிர்த்திய கணபதி எம்மை காத்திட வருவாயா- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
சாம்பல் மண்ணில் வீற்றிருக்கும் துர்க்கை அம்மன் தாயே மாநிலமும் தொழுதெற்க்கும் எங்கள் தேவி நீயே நாடி உன்னை சரணடைந்தோம் துர்க்கை அம்மன் தாயே நாயகியே திருவருளால் காக்கவேண்டும் நீயே- இரசித்த.... புகைப்படங்கள்.
- இறைவனிடம் கையேந்துங்கள்
முனியாண்டி வடிவெடுத்து அமர்ந்தவனே முனியாண்டி வடிவெடுத்து அமர்ந்தவனே இந்த பூவுலகும் பாடுகின்ற பரம் பொருளே- சிரிக்க மட்டும் வாங்க
- இறைவனிடம் கையேந்துங்கள்
பருத்தி நகர் கிழக்கே வல்லிபுரம் அமர்ந்த பராமதாமா பாற்கடலில் குடியிருக்கும் கண்ணா உன்னிடம் வந்தோம் நாம் கருணை கடலே அருள் புரிவாய் இன்பம் துன்பம் இரண்டிலுமே நாம் இணைந்து வாழ்ந்திட அருள் புரிவாய்Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கொஞ்சம் சிரிக்க ....