Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by அன்புத்தம்பி

  1. குபேர குசேலா 1943 ஆர். எஸ். மணி, மற்றும் பி. எஸ். இராமையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பாபநாசம் சிவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
  2. எம் மண்ணின் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம். ஒன்பது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த சாதனையாளர் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் – ஆழிக்குமரன் ஆனந்தன் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் – ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார். ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் இவருக்கு ‘ஆழிக்குமரன்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார். சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஆழிக்குமரன் ஆனந்தன் படைத்த ஒன்பது கின்னஸ் சாதனைகளும் பின்வருமாறு; சாதனை 1971 ஆம் ஆண்டில் பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்திக்கடந்தது. சாதனை 1978 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 128 மணி நேரம் Twist Dance (60 பதுகளில் பிரசித்திபெற்ற ஒரு வகை நடனம்) ஆடியது. சாதனை 1979 ஆம் ஆண்டில் 1487 மைல் தூரத்தை 187 மணி நேரத்தில் இருசக்கர வாகனம் மூலம் இடைவிடாது ஓடி முடித்தமை. சாதனை 1979 ஆம் ஆண்டில் 33 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்றமை. சாதனை 1979 ஆம் ஆண்டில் 136 மணி நேரம் Ball Punching செய்தமை. சாதனை 1980 ஆம் ஆண்டில் 2 நிமிட நேரத்தில் 165 தடவைகள் குந்தி எழுந்தது (Sit-ups). சாதனை 1980 ஆம் ஆண்டில் 9100 தடவைகள் High Kicks செய்தமை. சாதனை 1981 ஆம் ஆண்டில் 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் இடைவிடாது நடந்து கடந்தமை சாதனை 1981 ஆம் ஆண்டில் 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் (சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில்) செங்குத்தாக நின்றமை. ஓர் மோட்டார் சைக்கிள் விபத்தின் விளைவால் இவரது மண்ணீரலை அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியின்போது 6 மணிநேர துணிகர முயற்சியின் பின் வலுவான சாதகமற்ற நீரோட்டத்தாலும் , நீரின் குறைந்த வெப்பநிலையாலும் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவிக்கொண்டார். சாதனை முயற்சியின் போது “குளிர்ந்த கடலே கவலை தருகிறது” அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை” என்று தெரிவித்தார். இதுதான் அவர் 1984 ஆம் ஆண்டு ஆகஸ்து 6 ஆம் தேதி ஆங்கிலக் கால்வாய்யை கடக்கும் முயற்சியின் போது இறக்கும் முன்னர் கூறிய கடைசி வார்த்தை. ஆழிக்குமரன் ஆனந்தன் கின்னஸ் சாதனைகளைப் படைத்தது மட்டுமன்றி, இலண்டன் பல்கலை கழகத்தில் விஞ்ஞான பட்டதாரி பட்டத்தையும் இலங்கையில் சட்டமானிப் பட்டத்தையும் பெற்று கல்வியிலும் சிறந்து விளங்கினார். என்பது குறிப்பிடத்தக்கது. ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைத்திறமைகளை கௌரவப் படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கம் இவரின் படம் பொறித்த ஒரு ரூபா முத்திரையினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது எத்தனை பேர் அறிவோம் இவரை, எம் மண்ணின் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம். வரலாற்றுத் தகவல்கள்.
  3. ஆவாரம்பிட்டியில் நீ உறைந்தாய் நாவலடியில் குடியிருந்தாய் நாவில் தினம் தொழுவோம் அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா
  4. "அப்பா நான் ஒரு கேள்வி கேட்கவா ?" என்றாள் மகள். " என்னடாம்மா கேளு..?" "ஒரு மணி நேரத்தில் எவ்ளோ சம்பாதிப்பிங்கப்பா ?" அப்பா : " நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?" மகள் : "சும்மா தெரிஞ்சிக்கத்தாம்பா...! சொல்லுங்கப்பா ." அப்பா : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ...! மணிக்கு நூறு ரூபாய் சம்பாதிப்பேன் சராசரியா ...!" மகள் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50 ரூபாய் எடுத்துக்கவா ?" அப்பாவிற்கு கோபம் வந்தது ! "நீ இவ்ளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ?? ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நான் இங்க உங்களுக்காக நாய்போல உழைக்கிறேன்..." அந்த சின்னபெண் அமைதியாக அவள் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டாள் ! அப்பா மகளின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார் . ஒரு மணி நேரம் கழித்து சாந்தம் அடைந்து யோசித்தார் ஏன் இப்படி மகள் கேள்வி கேட்டாளென்று ..! ஒருவேளை அவளுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகளிடம் சென்றார் . "தூங்கிட்டியாடா ?" "இல்லப்பா,. முழிச்சிட்டுதான் இருக்கேன் ..." "நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட ஐம்பது ரூபாய் .." அந்த மகள் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தாள் . "ரொம்ப தேங்க்ஸ் ப்பா... " அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்தன .. அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் .! அந்த சிறுமி மெதுவாக பணத்தை எண்ணி சரி பார்தாள்.! பிறகு அப்பாவை பார்த்தாள்...! "உனக்கு எதுக்கும்மா இவ்வளவு பணம்? அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேர்த்து வச்சி இருக்குயே ..." மகள் : "ஏன்னா நான் சேர்த்து வச்சிருந்தது அம்பது ரூபாய். இப்போ இதையும் சேர்ந்த்தா என்கிட்டே நூறு ரூபாய் இருக்கு ...! இதை நீங்களே வச்சிக்கோங்கப்பா..! இப்போ நான் *உங்களோட ஒரு மணி நேரத்தை வாங்கிக்கலாமா ?* நாளைக்கு ஒரு மணி நேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்கப்பா ...! *எனக்கு உங்ககூட ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட ஆசையா இருக்குப்பா ..!* " அந்த அப்பா உங்களைப்போலவே உடைந்து விட்டார் ...! மகளின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார் ...! தன் மகளிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டார்! வாழ்க்கைக்கு பணம் முக்கியம் ! அதோடு குடும்ப உறவுகள் அதிமுக்கியம் ! *உழைப்பதற்காக வாழாதீர்கள் ! வாழ்வதற்காக உழையுங்கள் !*
  5. ஆவாரம் பிட்டியிலே அமர்ந்தவளே ஆவாரம் பிட்டியிலே அமர்ந்தவளே உன் மணியோசை கேட்டு மனம் மகிழுத்தம்மா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.