-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
உடன்படுகின்றேன் இப்போது நேரம் குறைவாக இருப்பதால் அதிகம் எழுத முடியவில்லை மன்னிக்கவும்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
உண்மை இங்கே எந்த ஒரு அவசரமும் இல்லை எங்களால் முடிந்த அளவிற்கு ஏற்றமாதிரி உதவிகளை செய்யலாம் பேனர் தொடர்பாக நானும் முன்னர் எழுதி விட்டேன் . எனது அனுபவப்படி இப்போதைக்கு அது தேவையில்லை செயலில் காட்டிவிட்டு விளம்பரம் செய்யலாம் என நினைக்கின்றேன் அடுத்து ஒரு மலசல கூடம் அமைப்பதற்கான நிதி சேர்ந்தவுடன் அந்த வேலையை ஆரம்பிக்கலாம் . முதலில் எங்கே ஆரம்பிப்பது என்பதை எராளன் தெரியப்படுத்தவும். கள உறவுகளும் அதற்கான சம்மதத்தைத் தெரியப்படுத்திய பின்னர் ஆரம்பிக்கலாம் . எப்படியும் மாசி மாதத்தில் குறைந்தது ஒன்றையாவது கட்டி பயனாளியின் கைகளில் ஒப்படைக்கலாம் என்று நினைக்கின்றேன் .
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இணையவன் கூறுவதும் ஏற்கத்தக்கதே உதவி செய்யும் நோக்குடன் நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளினால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வரக்கூடாது .அது எங்கள் நோக்கமும் அல்ல . ஏராளன்.... நாங்கள் இந்த முன்னோடி என்ற அமைப்பை எங்கள் முயற்சி முடிவடையும் வரை பதியப்படாத ஒரு அமைப்பாக வே இயக்கப்போகின்றோம் . இல்லையா . ஆகவே இப்போதைக்கு இந்த பேனர் செய்யும் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைப்போம் . எங்கள் இலக்கு எட்டப்பட்ட பின்னர் தொடர்ந்தும் ஆர்வம் உள்ளவர்கள் ஆதரவு தருபவர்கள் என எல்லோரும் இணைந்து இந்த முன்னோடியை இலங்கையிலோ அல்லது இன்னுமொரு புலம்பெயர்ந்த நாட்டிலோ பதிவு செய்வதைப்பற்றி ஆராய்வோம். எல்லோரும் ஆதரவு தரும் சமயத்தில் ஒரு முடிவெடுத்து பதிவு செய்வோம் . அதன் பின்னர் யாருக்கும் பக்க விளைவுகள் இல்லாமல் ஒரு இலச்சினையை தேர்ந்தெடுத்து அடுத்த கட்டத்திற்கு நகர்வோம் இப்போதைய அதி முக்கியமான இலக்காக 10 இடங்களில் அடிப்படை வசதியற்றவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான சுகாதார வசதிகளை புதிய கழிவறைகள் அமைப்பதன் மூலம் தீர்த்து வைப்போம் . அதற்கான நிதியை நாங்களே சொந்தமாகவோ அல்லது எங்களது முயற்சியினால் மற்றவர்களூடாகவோ சேர்த்துக் கொள்ளலாம் மற்றவர்களும் தங்கள் கருத்துக்களைக் கூறினால் நல்லது. மக்களுக்கான சேவையில் ஈடுபடுகின்றோம் என்பதை விட மக்களுக்கு இத்தனை உதவிகளை நடைமுறையில் செய்து காட்டியுள்ளோம் என்று கூறும் போதே எங்களுக்கான ஆதரவும் எங்கள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து கோஷான் உங்கள் தேடலுக்கும் முயற்சிக்கும் நன்றிகள்🙏 இப்படியே படிப்படியாக முன்னேறலாம் இந்த வருடத்திற்குள் எங்கள் இலக்கை அடைந்து விடலாம் 👍
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
விக்கியர் காலத்தில் மாகாண சபை நிதிகள் பல துறைகளிலும் மக்களுக்கு உதவாமல் அரச திறைசேரிகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டது அதைக் கூற வந்தேன் கு சா அண்ணை
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
ஏராளன் எதோ பேச்சுக்கு கருத்தை எழுதி விட்டு விடாமல் எழுதிய கருத்தை செயலாக்கியவர் நீங்கள் தான். நாங்கள் நாலு பேர் வெளியில் இருந்து என்னவும் கதைக்கலாம் காசு தருவோம் என்று கூறலாம் அல்லது தரலாம்.... ஆனால் அந்த நேரத்தில் கிடைத்த அந்த நிதியை உடனேயே பயனாளிகளுக்கு கிடைக்கச் செய்து அவர்களின் அத்தியாவசியமான தேவையை நிறைவேற்றியவர் நீங்கள் தான். உண்மையாகவே சொல்கின்றேன் இங்கே இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு நீங்கள் தான் முதற் காரணம் . அரசியல் வேண்டாம் என்பதால் திருப்பி அனுப்பப்பட்ட நிதிகளைப் பற்றிப் பேச விரும்பவில்லை ஆகவே உங்ககளுக்கே நாங்கள் கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம் . தொடர்ந்தும் உங்களின் ஆதரவும் செயற்பாடும் முன்னோடி அமைப்பிற்குத் தேவை என்பதையும் கூறி உங்களுக்கு எங்களின் நன்றிகளையும் கூறிக்கொள்கின்றோம் . 🙏
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
யாழ் என்று தனியாக வரும்போது அது யாழ் மாவட்டத்தைக் குறிக்கும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தலாம் அதனால் கோஷான் கூறுவது போல முன்னோடி தனியாகவும் யாழ் இணைய உறவுகள் அல்லது உறுப்பினர்கள் ஒருங்கிணைக்கும் அடிப்படை சுகாதார வசதித் திட்டம் என்று கீழே உப தலைப்பாகவும் போடலாம் மற்றவர்களின் கருத்தையும் கேட்கலாம் யாழ் இணைய நிர்வாகம் இதை ஏற்றுக் கொல்கின்றதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நல்ல விடையம் அவர் தனது கூலியை ஒரு மட்டுப்படுத்திய, இரு தரப்பிற்கும் பாதிக்காத வகையில், ஏற்றுக் கொள்ளும் நிலையில் நாங்கள் தொடர்ச்சியாக அவருக்கே எங்கள் திட்டம் சார்பான வேலைகளை வழங்கலாம் .என்று நினைக்கின்றேன்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
தண்ணீர் கொள்கலன் வைப்பதற்கான ஏற்பாட்டையும் செய்து கொடுக்கலாம் என்பதே எனது கருத்தும் ஆரம்பித்த வேலையை முழுமையாக முடித்த திருப்தி எல்லோருக்கும் வரும் அராலி வேலையையும் தொடரலாம் அதற்கான நிதியை நீங்கள் விடுவிப்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
முதலில் அராலியில் ஒரு வீட்டுத்திட்டத்துடன் பூரணப்படுத்தாத வகையில் இருக்கும் கழிவறையைப் பூரணப்படுத்திக் கொடுப்பதற்கான ஆலோசனையை ஏராளன் முன்வைத்த பொது கு சா அண்ணை தானே அதற்கு எவ்வளவு செலவாகும் என அறியாத தரவும் எனவும் கேட்டிருந்தார். அதன் அடிப்படையிலும் நாங்கள் முன்னோடியினூடாக நடைமுறைப்படுத்த இருக்கும் திட்டங்களுக்கு ஒரு முன்னோடியாக இந்த அராலி உறவின் தேவையையும் அதன் பின்னர் பொன்னாலையில் வாழும் இயலாத சகோதரர்களுடைய தேவைகளையும் செய்து பார்க்கலாம் என்ற கோஷானின் ஆலோசனைப்படி எல்லோருமே ஏற்றுக் கொண்டு தானே ஏராளன் இவற்றை செய்து வருகின்றார். கு சா அண்ணை அதைக் கவனிக்காமல் இப்படி எழுதியிருக்கின்றார் என்று நான் நினைக்கின்றேன்.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கோஷன் அராலியிலும் பொன்னாலையிலும் நடக்கும் வேலைகளின் அடுத்த கட்டம் என்பதைக் கூறினேன் அராலியில் குழி வெட்டப்பட்டுள்ளது அதைக் கட்டி முடிக்க வேண்டும் பொன்னாலையில் பிளாற் மட்டுமே போட்டப்பட்டுள்ளது . கொமட் பொருத்த வேண்டும் ......அவர்கள் பிடித்துச் செல்வதற்காக வெள்ளிரும்பு குழாய்கள் இணைக்க வேண்டும்...... இதைத்தான் அடுத்த கட்டம் என்று நான் கூறியது
-
கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது.
ரஸ்யாவினால் அமெரிக்காவிற்கு கிறீன்லாந்து ஊடாக இத்தனை வருடங்கள் வரை எந்த ஆபத்தும் இருக்கவில்லை அல்லது இருப்பதாக எந்த அறிக்கையை ஒன்று கூட வரவில்லை ட்ரம்பின் வியாபாரத்திற்காக அந்த இடம் இன்று தேவைப்படுகின்றது
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அடுத்த கட்டத்திற்கான செயற்பாடுகளை தொடர்வது நல்லது என நினைக்கின்றேன் தேவைக்கு அதிகமான மூலப்பொருட்களை அடுத்த கட்ட வேலைகளுக்குப் பாவிக்கலாம் தானே
-
அரசியல் குழுவின் இறுதி முடிவு!; கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அரியநேத்திரன்
எனக்கொரு சந்தேகம். ஒரு அமைப்பிலோ அல்லது கட்சியிலோ பதில் பொறுப்பில் இருக்கும் ஒருவரோ அல்லது பதில் பொறுப்பில் உள்ளவரின் கீழ் உள்ள பிரதிநிதிகளின் ஆதரவுடனோ அந்த அமைப்பின் அல்லது கட்சியின் அதி முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா? இது பொதுவானதொரு கேள்வி . தமிழரசுக் கட்சி யாப்பு என்ன சொல்கின்றது என்பது தெரியவில்லை . அந்த யாப்பின் பிரகாரம் கட்சி இப்போது செயற்பட்டாலும் நாட்டு சட்டங்களுக்கு அந்த யாப்பு அமைவானதாக இருக்கின்றதா? இந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வரை அரியநேந்திரன் கட்சியில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பை வழக்குத் தாக்கல் செய்யும் பட்சத்தில் நீதிமன்றம் அளிக்குமா ?
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை எங்கள் கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகின்றோம்
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அனுப்புங்கள் அவருடைய தேவை விரைவில் பூர்த்தியடைய வாழ்த்துக்கள் உதவிய மற்றும் இன்னும் உதவக் காத்திருக்கும் உறவுகளுக்கும் நன்றிகள்🙏