Everything posted by ராசவன்னியன்
-
துபாய் எக்ஸ்போ 2020 நாளை முடிவடைகிறது..
"துபாய் எக்ஸ்போ 2020" நாளை முடிவடைகிறது.. கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஆறு மாதங்களாக அமீரகத்தின் கவர்ச்சியான துபாய் எக்ஸ்போ 2020 நாளையுடன் (31-03-2022) பிரியா விடைபெறுகிறது. நான் இரண்டு முறை அங்கே சென்றும் முழுவதும் சுற்றிப்பார்க்க இயலவில்லை. அவ்வளவு பெரிய பரப்பளவில் ஏறக்குறைய 192 பல்வேறு நாட்டு அரங்குகள், காட்சியமைப்புகள்.. இனிமேல் இம்மாதிரியான "மெகா திருவிழா"வை வாழ்க்கையில் மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமாவென தெரியவில்லை.. உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்..! 😍
-
சீனா உருவாக்கிய பாலைவனப் பூமி...நகராகுமா..?!
பார்க்க அலங்காரமாய் தெரிந்தாலும், கடலுக்குள் மண்ணை நிரப்பி கையை சுட்டுக்கொண்ட நாடுகள் உண்டு. எதிர்பார்த்தளவு வருமானம்,வரவேற்பு இல்லாமல், பணிகள் இன்னும் முடியாமல் இருக்கும் மணற்திட்டுகள் அதிகம்.
-
'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
- முடங்கியதா..சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவு மேம்பாலசாலைத் திட்டம்?
30 மாதங்களுக்குள் மதுரவாயல் - துறைமுகம் ஈரடுக்கு (2 Tier) பறக்கும் சாலை பணிகளை முடிக்க முடிவு..! 😍 இந்தப்பக்கம் சிறீபெரும்புதூர் அருகே பானூர், பரந்தூர் என இரு இடங்களில் ஏதாவது ஒன்றில் சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைய அரசு உதேசித்துள்ளது. அதேசமயம் முந்தைய ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை மேம்பாலம் வழியாக போக்குவரத்தை ஆரம்பிக்கப்பட்ட திட்டம் மறுபடியும் இப்பொழுது புத்துயிர் பெறுவது நல்ல விசயம்.- சென்னை விமான நிலையத்தில் 5 திரையரங்குகளுடன் கூடிய 6 அடுக்கு மால்..
சென்னை விமான நிலையத்தில் 5 திரையரங்குகளுடன் கூடிய 6 அடுக்கு மால்..! சென்னை விமான நிலையத்தில் "5 சினிமா தியேட்டர்"...! பிளைட் வர நேரத்திற்குள் படம் பார்க்கலாம்..! 5 கோடி செல்வதில் தியேட்டர் அமைக்க பட உள்ளது என்றும் கூடுதலாக புட் கோர்ட்(Food Court) அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக 80 சதவீத மக்கள் வெளியிலிருந்தும், 20 சதவீத மக்கள் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்து உள்ளார். விமான நிலையத்தில் பயணிகள் நேரத்தை ஜாலியாக கழிக்க, 5 திரைகளை கொண்ட தியேட்டர் அமைக்கும் பணியில் இறங்கி உள்ளது பிரபல தனியார் நிறுவனமான பி.வி.ஆர்(PVR Cinemas) நிறுவனம். அப்போது இந்த நிறுவனத்திற்கு மட்டும் 50 நகரங்களில் 584 திரைகளை கொண்டுள்ளது. இந்த நிலையில் 2000 திரைகளை அடுத்த ஆண்டுக்குள் ஏற்படுத்த வேண்டும் என திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர், பல அடுக்கு கார் பார்க்கிங் வசதிகளுடன் செய்ய, சர்வதேச அளவில் தரமாக அமைக்க உள்ளது. இது குறித்து பி.வி.ஆர்.நிறுவன அதிகாரி கருத்து தெரிவித்து உள்ளார். மேலும், விமான நிலையத்தில் திரை அரங்கு வைக்கப்பட்டால், கண்டிப்பாக மக்களுக்கு மிக சிறந்த பொழுதுபோக்காக அமைந்துவிடும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆசியாநெட்- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- 'செம்மொழியான தமிழ் மொழி' - புர்ஜ் கலீஃபாவில்..
- அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
ஏதாவது ஊக்கு அல்லது கம்மலின் திருகாணி கழண்டு மெத்தை விரிப்பிலோ அல்லது மெத்தையிலோ விழுந்திருக்கும். புரண்டு படுக்கும்போது அழுத்தத்தால் உடம்பில் பிராண்டியிருக்கும்..! 🤔 வடிவா சோதிச்சு பாருங்கோ..!- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
- 'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
கு.சா, உங்கள் பார்வைக்கு..! 😍- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
நுண்செயலிகளின் வகைகள்: பொதுவாக நுண்செயலிகள் இயங்கும் வேகத்தை, "ஜிகா ஹெர்ட்ஸ்" (Ghz) என்று கடிகார அளவீட்டு வேகத்தில் குறிப்பிடுவார்கள்.நுண்செயலிகளின் உள்ளீட்டு வடிவமைப்பும் பலவித ஆராய்ச்சி முன்னேற்றங்களின் பயனாக காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகிறது. இவற்றை தலைமுறை மாற்றம் எனவும் குறிப்பிடுவது உண்டு. உதாரணமாக, முதல் தலைமுறை நுண்செயலிகள்(First Generation Processors) 1971ம் ஆண்டில் ஆரம்பித்து இதுவரை 50 வருடங்களில் 12வது தலைமுறை நுண்செயலிகள்(12th Generation Processors) சந்தைக்கு வந்துவிட்டன. "பழையன கழிதலும், புதியன புகுதலும்.." போன்று இப்பொழுது 10 வது தலைமுறைக்கு முன்பிருந்த நுண்செயலிகளைக்கொண்ட கணணிகளை சந்தையில் யாரும் வாங்குவதில்லை. அதேபோல நுண்செயலிகள் உள்ளீட்டு கட்டளைகளை நிறைவேற்றும் செயல்முறை(Internal processing power) வடிவமைப்பும் 4பிட் (4Bit) வகையில் ஆரம்பித்து 4, 8, 16, 32 Bit என ஒவ்வொருவகையாக பரிணாம வளர்ச்சியடைந்து இப்பொழுது பயனாளர்களின் பொது சந்தையில் 64பிட் (64Bit) நுண்செயலிகள் வரை வெளிவந்துவிட்டன. இவ்வகை பிட்(Bits)களைக்கொண்ட நுண்செயலிகளை கையாள, கணணியின் இயங்குதளமும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டுமே..? ஆகையால் கணணிகளின் இயங்குதளமும்(Operating System) அவ்வாறே மாற்றம்பெற்று இப்பொழுது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் (Microsoft Windows) இயங்குதளமும் 64பிட் வகையில் கிடைக்கின்றன. இப்பொழுது ஒரு சந்தேகம் வரலாம், 64பிட்(Bit) நுண்செயலிகளைக் கொண்ட கணணியில் 32பிட்(Bit) இயங்குதளத்தை(Operating System) நிறுவ இயலுமா..? அது செயல்படுமா..? எனக் கேட்டால், நிச்சயம் செயல்படும், ஆனால் இது 'யானை பலத்தை பசுவின் பலமாக குறைத்து பயன்படுத்துவது' போன்றது. இன்னொரு முக்கிய விசயம், 32பிட் (Bit) நுண்செயலிகளைக்கொண்ட கணணியில் 64பிட்(Bit) இயங்குதளத்தை(Operating System) நிறுவ முடியாது. நுண்செயலி பயனாளர்கள் சந்தையில் இன்டெல்(Intel) நுண்செயலிகளைக்கொண்ட கணணிகளே மிக அதிக பயனாளர்களை கொண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆகையால இனிவரும் திரிகளில் இவ்வகை நுண்செயலிகளை பற்றியே பார்ப்போம்..! கீழேயுள்ள படம் இன்டெல்(Intel) நுண்செயலிகளின் சில வகைகளை விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள்.. உங்களில் எத்தனை பேர் இம்மாதிரி தொழிற்நுட்ப விடயங்களை தீர விசாரித்து கணணிகளை வாங்குவீர்கள்..? அல்லது கடைக்காரர் சொல்வதை அப்படியே நம்பி வாங்கிவிடுவீர்களா..? 🤔 இத்திரிகளின் முடிவில், 'எம்மாதிரி சிறந்த கணணிகளை ஒவ்வொரு பட்ஜெட்களுக்குள் முக்கிய அம்சங்களை கருத்தில்கொண்டு ஒப்பீடு செய்து வாங்குவது..?' என சொல்கிறேன்.. அதற்கு முன்னால் நான் சொல்லிவரும் விடயங்கள், உங்களுக்கு புரிகிறதா..? என சொன்னால் நல்லது.😇 இல்லையெனில், நான்பாட்டுக்கு "குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதை"யாக எழுதி இத்திரி முடிந்துவிடும்..! 😛- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
- 'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
பிடிக்கவில்லை. ஒரே தடுமற்றமா இருக்கு..! 😔 சிரமமாக உள்ளது, பலமுறை அதை வெறுப்பில் தூக்கி எறிந்துள்ளேன். 'ஆன்ராய்ட்' கைப்பேசியில் மிக எளிதாக கையாண்ட வசதிகளை, கட்டளைகளை ஐபோனில் பெற சுற்றி வளைத்து வரவேண்டியதாக உள்ளது. மொத்தத்தில் 'ஆன்ட்ராய்ட்' கைப்பேசி கிராமத்து பெண் மாதிரி, எளிதாக நம் சொல்படி கேட்கும். 'ஐபோன்' சென்னை மாநகராட்சி மாதிரி கரடு முரடு.. நாம் தான் அதன் சொல்படி கேட்டு வளைந்து போக வேணும். நன்றி..! 🙏 என் பக்கத்துல பொண்ணுகளே இல்லையே..? 🤔- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், இணையவன். 🌹- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
நுண்செயலியை பற்றி.. நுண்செயலி(Micro Processor) என்பது ஒருவகை 'எலக்ட்ரானிக் சர்க்யூட்' ஆகும், இது எலக்ட்ரானிக் சாதனம் செயல்பட வேண்டிய சக்தியை செயலாக்குகிறது. இது கட்டளைகளையும், நிரல்களையும் சரியான முறையில் செயல்படுத்துகிறது. ஒரு கணினியின் மத்திய செயல்முறை அலகு (CPU) ஒரு நுண்செயலியின் எடுத்துக்காட்டு. இந்த எலக்ட்ரானிக் கூறு, ஒரு கணினியின் மதர்போர்டின் ஒரு பகுதியாகும். இது ஆயிரக்கணக்கான மற்றும் சில நேரங்களில் மில்லியன் கணக்கான டிரான்சிஸ்டர்களுடன் ஒருங்கிணைந்த சுற்று (Integrated Circuit) என்று வகைப்படுத்தப்படுகிறது. ஒரு சாதனத்தில் அதன் செயல்பாட்டின் முக்கியத்துவத்துடன், சில நேரங்களில் மனிதர்களின் மூளை மற்றும் இதயத்துடன் ஒப்பிடும்போது, "சிறியது" என்பதைக் குறிக்கும் அதன் ஆங்கில அர்த்தத்திற்கு இது மைக்ரோ என்று அழைக்கப்படுகிறது. நுண்செயலிகளை அவற்றின் உள் மற்றும் வெளிப்புற வேகத்தால் வேறுபடுத்தி அறியலாம். இது வினாடிக்கு செயலாக்கப்பட்ட பிட்(Bits)களையும், நினைவக அணுகல் திறன் (Bus Speed) மற்றும் கணணி மட்டத்தில் செயலாக்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் நிரல்களின் திறனையும் தீர்மானிக்கிறது. நுண்செயலிகளின் வகைகளும் உற்பத்தியாளரால் வேறுபடுகின்றன. நுண்செயலியை வடிவமைத்து, உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் பெரும்பாலான நிறுவனங்கள் இன்டெல் (intel), ஏ.எம்.டி(AMD) மற்றும் குவால்காம்(Qualcomm). ஒவ்வொரு வகை நுண்செயலியும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தையும், உள் தரவின் நினைவக அணுகல் அகலத்தையும் கொண்டுள்ளது. இவை Mhz என்று கடிகார வேகம் போல அளவிடப்படுபவை.- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
கணணியின் உட்புற "மதர்போர்டு" (MotherBoard) "மதர்போர்டு" என்பது கணணியின் அடித்தளம்(Foundation) போன்றது. நமது வீட்டை கட்ட திட்டமிடும்போது என்னென்ன அறைகள், எத்தனை தளங்கள், பின்னாளில் வீட்டை விரிவாக்கம்(Extension) செய்ய எப்படி இப்பொழுதே அஸ்திவாரம் போடுவது என சிந்தித்து கட்டுவதுபோல தான் கணணியின் மதர்போர்டும். இதனை வாங்கும்போதே சிறந்த போர்டை தேர்ந்தெடுப்பது மிக அவசியம். ஏனெனில் இந்த போர்டு மீது இணைக்கும் மற்ற உபகரணங்கள்(Additional cards) நாம் விரும்பும் வேகத்தில், வசதியில் செயல்பட இந்த போர்டு வடிவமைப்பை சரிபார்த்து வாங்க வேண்டும். எனது கையில் இருப்பதுதான், கணணியின் மூளை என சொல்லப்படும் நுண்செயலி (Micro Processor) இது 15 வருடங்களுக்கு முன் சந்தைக்கு வெளிவந்த "இன்டெல் கோர்-2 (Intel Core 2)" என்ற வகையை சார்ந்தது. கணணியில் பிரித்தெடுத்த Intel Processor நுண்செயலி - மேற்புறமும், அடிப்புறமும். நுண்செயலி மதர்போர்டில் உட்காரும் இடம்.- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
- கொடுமை.. அட்ராசிடீஸ்..!
நல்ல பாடல்..! மேடையில் பாடிய பாடகரும் (சந்திரசேகர்) நன்றாகவே பாடுகிறார்..!! ஆனால் கீழே ஆடியவர்கள் நடனம்(????) என்ற பெயரில் அவர்களின் கொடுமையை (அட்ராசிடீஸை) சகிக்க முடியவில்லை.😡 'தண்ணி கேஸ்' போலிருக்கு..! 🤔- இன்டெல் சிப்பி, மெல்ல மெல்ல..
- 'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
சரி, சென்னை செல்ல விருப்பமா..? 🤗- 'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
ஒங்க ஊர்க்காரர் சொல்லியிருப்பார் போலுள்ளதே..? 😉- 'துபை எக்ஸ்போ 2020'-இளையராஜா இசைக் கச்சேரி அனுபவம்..!
வெள்ளை கோடிட்ட செவ்வகத்துக்குள், நான் நிற்கிறேன்..! 😎
Important Information
By using this site, you agree to our Terms of Use.