Everything posted by ராசவன்னியன்
-
காவலும் இல்லாமல்.. வேலியும் இல்லாமல்..!
சில வாரங்கள் களத்திற்கு வரமுடியாத வேலை சூழல் உள்ளதால், களம் திரும்பும் வரை, நினைவுறுத்தும் வகையில், எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்றான இந்த பாடலை பதிவு செய்துவிட்டு செல்கிறேன்..! பிறிதொரு நாளில் சந்திப்போம்..!
-
கனமழையால் வெள்ளம் சூழ்ந்த சிதம்பரம் நடராஜர் கோயில்..
- கனமழையால் வெள்ளம் சூழ்ந்த சிதம்பரம் நடராஜர் கோயில்..
கனமழையால் வெள்ளம் சூழ்ந்த 'சிதம்பரம் நடராஜர்' கோயில்..! தொடர் கனமழை காரணமாக, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வலுவிழந்த 'புரெவி' புயல் நீண்டநேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தில் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடிய விடிய பெய்த கன மழையால் சிதம்பரம் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சிதம்பரம் தாலுகாவில் மட்டும் 34 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. தொடர்ந்து பெய்யும் கன மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பாதாள சாக்கடை பணியும் நடந்து வருவதால், தண்ணீர் செல்ல வழியில்லாமல் சிதம்பரம் நடராஜன் கோயிலுக்கும் வெள்ள நீர் புகுந்துள்ளது. கோயிலுக்குள் வந்த மழைநீரை வெளியேற்ற முடியாமல் கோயில் நிர்வாகம் விழிபிதுங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர் புதிய தலைமுறை- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- "காலை வணக்கம் தலைவரே..!" - என்னத்தை சொல்ல..
Rajinikanth political entry reality..!- விண்ணோடும், முகிலோடும்..!
- விண்ணோடும், முகிலோடும்..!
விண்ணோடும், முகிலோடும்..! இம்மாதிரி பஞ்சு பொதிகளுடன் விண்ணோடும், முகிலோடும் விளையாடும் வகையில் செயற்கை பிம்பங்களை பார்த்து ரசிப்பதும் ஒருவித ஈர்ப்புதான்..! Twitter.- "காலை வணக்கம் தலைவரே..!" - என்னத்தை சொல்ல..
ம்ம்.. உருட்டுக் கட்டை ஞாபகம் இருக்கட்டும்..! இன்னமுமா ஜொள்ளு..? 😜 'டீச்சர்' என்பது இருபாலரையும் குறிக்கும் பொதுவான சொல்.- "காலை வணக்கம் தலைவரே..!" - என்னத்தை சொல்ல..
இந்தக் காணொளியில் ஒரு சிலரின் கருத்துக்கள் பரவாயில்லை, குறிப்பாக ஒரு டீச்சர்(நீல நிற டி சர்ட்) மற்றும் ஒருவர் பின்னடி பை மாட்டியிருப்பவர்..! "தமிழனை, தமிழன்தான் ஆள வேண்டும்" "அரசியலில் தெளிவான தத்துவம், சிந்தனை இருக்க வேண்டும்" என்ற முத்தாய்ப்பான கருத்துக்கள் அருமை..- "காலை வணக்கம் தலைவரே..!" - என்னத்தை சொல்ல..
மேலேயுள்ள காணொளியில் ரசுனிக்கு சொம்படிக்கும் அந்த ஜென்மங்களை சாத்த வேண்டுமென பலரும் முகம் சுளித்தார்கள்.. அதன் விளைவு கீழே..! 🤣- "காலை வணக்கம் தலைவரே..!" - என்னத்தை சொல்ல..
என்னத்தை சொல்ல..! இந்த மாதிரி 'மெண்டல்கள்' இருக்கும் வரை, தமிழ்நாடு உருப்பட்ட மாதிரிதான்..! 😡- சஷ்டியில் இருந்தால்..? கடவுளே..!
எனக்கும் இது ஏதோ விரதம் சம்மந்தமான சொல் என்றே தோன்றுகிறது. விரதம் முடிந்து இப்படி சாப்பிட வேணும்..!- சஷ்டியில் இருந்தால்..? கடவுளே..!
ஆனால் பாருங்கோ, இந்த "பாரணை" என்டால் என்னென்டு துண்டற விளங்கேல்ல..!- சஷ்டியில் இருந்தால்..? கடவுளே..!
ஓய்வு நேரத்தில் IBC-யில் வரும் இந்த "Tea கடை" நிகழ்ச்சியை அடிக்கடி பார்ப்பதுண்டு..! இவ்வாரநிகழச்சியில் "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.." என்பதற்கு, பொன்னம்பலம் ஈஸ்வரன் (அம்மான்)சொல்லும் விளக்கம் ரசிக்கும்படி இருந்தது. டிஸ்கி: இம்மாதிரி சீரியல்களை நாங்கள் பார்க்க வெளிக்கிட்டமென்டால், நாங்களும் ஈழத்தமிழில் கதைச்சுடுவோமென்ட அச்சம் வருதுடாப்பா, கடவுளே..! 😝- உன்னை தினம் தேடும் தலைவன்..
உழவன் மகன்(1987) திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல்..! இந்த காணொளியில் பாடும் மொத்த குழுவினரும் நன்றாக பாடியிருந்தாலும், பாடகரின் உடல்மொழி செம காமெடி.. பார்த்தால் புரியும்..!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அமீரகத்துக்கு வரச் சொல்லுங்கள். மின்சாரம் பற்றி நிறைய கதைக்கலாம்.- பெர்லின் மெலோடி..! கேட்டதுண்டா..?
சிறுவயதில் கிராமத்திலுள்ள "டென்ட் கொட்டா"யில் படம் ஆரம்பிக்கும் முன் சுழலவிடும் இசையில் இது முதன்மையானது.. குவித்து வைத்த மணல்மீது உட்கார்ந்து சகதோழர்களுடன் படம் பார்த்த அந்த இனிமையான நினைவுகள்.. ! என் பால்ய வயது தோழர்கள் சிலர் மறைந்துவிட்டனர்.. இந்த இசையை கேட்கும்போதெல்லாம் அழியாத கோலங்களாய் அவர்களின் நினைவை இரைமீட்டிச் செல்லும்..! Simply Nostalgia revisited..- இளமை டா..டா.. டடா.. டாடா..!
யாரோ நம்மை போன்ற ஒரு புண்ணியவான் துபாயிலிருந்து இதே பாடலை பாடியிருக்கிறார் போலும்.. "துபாய் மெரீனா" மற்றும் "ஷேக் சயத்" சாலையையும் காணொளியில் காட்டியுள்ளார்..!- இளமை டா..டா.. டடா.. டாடா..!
ரொம்ப நாட்கள் கழிந்து, இன்று தீபாவளிக்காக கேட்ட ஜிக்கியின் இனிமையான பாடல்.. என்னை அக்காலத்திற்கே இழுத்துச் சென்றது..!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி யாயினி. நான் அந்த கண்ணோட்டத்தில் கவனிக்கவில்லை..! அலுவலக கணனி பாருங்கள், அதனால் பெரும்பாலும் உள்நுழையாமல் பார்ப்பதே வழக்கம். மீண்டும் பரிசோதித்துப் பார்க்கிறேன்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தமிழரசு.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கனம் கோர்டார் அவர்களே..! நாங்களும் எத்தனை நாளுக்குதான் உங்கள் டெர்ம்ஸ் & கன்டிசன்களை ஒத்துக்கொண்டே இருப்பது..? 😂 ஒவ்வொரு முறையும் களத்தினுள்ளே நுழையும்போது மேலேயுள்ள 'கருப்பு பட்டை' சிலநேரம் வெறுப்பை உண்டக்குகிறதே..! அதுவும் கைப்பேசி மூலம் என்றால் சொல்லவே வேணாம், தாவு தீர்ந்துவிடும்..!!🤗 இவ்வழிமுறைக்கு ஒரு முடிவு வேணாம்..? 🤔 ஒருமுறை ஒத்துக்கொண்டு உள்நுழையும்போது, ஏதாவது "குக்கீஸ்/பக்கீஸ்" மூலம் கணனியில் நிரந்தரமாக சேமிக்க வழி இருக்கா..? சொல்லுங்கள் சாமி, புண்ணியமா போகும்.😜- 'டைட்டானிக்' பாணியில்.. படகு முனையில் நின்று வெட்டிங் ஷூட் விபரீதம்..! மணமக்கள் மூழ்கி பலி.
“டைட்டானிக்” பாணியில்.. படகு முனையில் நின்று வெட்டிங் ஷூட் விபரீதம்..! மணமக்கள் மூழ்கி பலி. காவிரி ஆற்றில் படகில் அமர்ந்து திருமணத்துக்கு முந்தைய போட்டோ சூட் (Photo Shoot) செய்த போது படகு கவிழ்ந்ததால் மணமகனும், மணமகளும் நீரில் மூழ்கி பலியாயினர். "வெட்டிங் போட்டோ சூட்" என்ற பெயரில் போட்டோ கிராபர்கள் நடத்தும் விபரீத விளையாட்டு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு. முன்பெல்லாம் திருமணம் முடிந்த பின்னர் தான் மணமகனும், மணமகளும் சேர்ந்து வெளியிடங்களுக்கு சென்று போட்டோ சூட் எடுத்துக் கொள்வார்கள். தற்போது திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தாலே தங்களை ஒளி ஓவியர்களாக காட்டிக் கொள்ளும் போட்டோ கிராபர்களிடம் சிக்கி அந்த மணமகனும் மணமகளும் படும் பாடு இருக்கின்றதே சொல்லி மாளாது அந்தவகையில் கேரளாவில் உள்ள மணமக்களை வைத்து ஒளி ஓவியர்கள் செய்யும் போட்டோ சூட் எல்லாமே எல்லை மீறியதாக இருக்கும்..! அப்படி ஒருமுறை படகில் அமரவைத்து தண்ணீர் ஊற்றுவதாக நினைத்து மணமக்கள் அமர்ந்திருந்த படகை கவிழ்த்து பால் ஊற்ற முயன்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது தண்ணீர் அளவு குறைவாக இருந்ததால் அந்த தம்பதிகள் உயிர் பிழைத்தனர். அதே பாணியில் கடுமையான ஆழம் நிறைந்த காவிரிஆற்றில் திருமணத்துக்கு முந்தைய போட்டோ சூட் நடத்திய விபரீத போட்டோ கிராபரின் கேமரா ஆங்கிள் மாறியதால் படகு கவிழ்ந்து மணமக்கள் இருவரும் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறி உள்ளது. கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த முதுக்குத்தூரை சேர்ந்த சந்துரு மற்றும் சசிகலாவுக்கு கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வருகிற 22 ந்தேதி திருமணம் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் திருமணத்துக்கு முந்தைய போட்டோ சூட் செய்வதற்காக மணமக்களை அழைத்துக் கொண்டு காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு படகில் சென்றுள்ளனர் படப்பிடிப்பு குழுவினர். புகைப்பட கலைஞர் ஒரு படகிலும், மணமக்கள் மற்றொரு படகிலும் அமர்ந்திருந்துள்ளனர். ஹாலிவுட்டின் டைட்டானிக் ஜோடியை போல இருவரையும் கையை நீட்டிக் கொண்டு படகின் முனையில் நிற்கவைத்து படமெடுப்பதற்கு திட்டமிட்ட போட்டோ கிராபர், படகின் ஒருமுனையில் மணமக்களும் மறுமுனையில் படகோட்டியையும் நிற்கவைத்துள்ளார். அப்போது முன்பக்க பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. இதில் மணமகன் சந்துருவும், மணமகள் சசிகலாவும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர் படகோட்டி நீந்தி கரைக்கு வந்ததால் உயிர் தப்பினார். புகைப்பட குழுவில் எவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் மணமக்களை காப்பாற்ற இயலவில்லை என்று கூறப்படுகின்றது. பின்னர் பரிசலில் சென்று நீரில் மூழ்கிய இருவரது சடலங்களையும் காவல்துறையினர் மீட்டு வந்தனர் திருமண புகைப்படம் என்பது ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வின் பொக்கிஷம் போன்றது, அதற்காக அதீத கற்பனை திறனை காட்டுவதாக நினைத்து எந்த வித பாதுகாப்பு முன்னேற்பாடும் இன்றி நடு ஆற்றில் படப்பிடிப்பு நடத்திய வில்லங்க போட்டோகிராபரால் இந்த விபரீத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர். பொதுவாக வெட்டிங் சூட் பாதுகாப்பானதுதான், பிரமிக்க வைப்பதாக கூறி ஒளி ஓவியர்கள் வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று மேற்கொள்ளும் முயற்சிகள் விபரீதமாகி விடுகின்றது என்பதற்கு இந்த சம்பவமும் சாட்சியாகி இருக்கின்றது. பாலிமர் செய்திகள்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கடைசியில் 'கரணவாய்' பரிமளத்தை 'இணைவி' ரேஞ்சுக்கு மூன்றாம் தாரமாக்கிவிட்டதற்கு கண்டனங்களை பதிவு செய்கிறேன். 😡😜- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த சமாளிப்பு வேணாம்..! 🤗 ராமர் சீதையை கல்யாணம் கட்டி தன் மனைவியாக்கினார். நீங்கள் பரிமளத்தை என்ன செய்தீர்கள்..? பரிமளம் உங்களுக்கு மனைவியா..? துணைவியா..? இணைவியா..? தோழியா..? அதை சொல்லுங்கள்.😜 - கனமழையால் வெள்ளம் சூழ்ந்த சிதம்பரம் நடராஜர் கோயில்..
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.