Everything posted by ராசவன்னியன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முதலில் பரிமளம், ஒங்களுக்கு என்ன முறை..?🤗 என தெளிவுபடுத்தி சொன்னால் நல்லது..! 😜
-
தொட வரவோ..?
சாரை பாம்பு அல்லது பருந்து போல வானை ஆக்கிரமித்து மேக் 2.04 அதாவது மணிக்கு 2,180 கி.மீ வேகத்தில் செல்லும் கன்கார்ட் கம்பீரம் மீண்டும் வருமா..? கன்கார்ட் விமானத்திலிருந்து பார்த்தால் பூமியின் வளைவு தெரியும் என்கிறார்கள்..மேலே பறக்கும் உயரம் தரையிலிருந்து 18,300 மீட்டர்களுக்கு (60 ஆயிரம் அடி) மேல். கன்கார்ட் விமானத்தை விட அதிக வேகத்தில் பறக்கும் விமானங்களின் வடிப்பை பொறியாளர்கள் ஆராய்ந்துகொண்டிப்பதாக தகவல்கள்..
-
தொட வரவோ..?
ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பறக்கும் கன்கார்ட் சூப்பர் சோனிக் இங்கிலாந்து-பிரான்ஸ் கூட்டு முயற்சியான தொழிற்நுட்பம் வியக்கத் தக்கது.. நான் பலமுறை இந்த விமானம் பற்றிய குறிப்புகளை படித்துள்ளேன். கன்கார்ட் மூலம் லண்டன் to நியுயார்க் விமான பயண நேரம் 3 1/3 மணி நேரம் மட்டுமே.. 'கன்கார்ட்' தரையிறங்கும்போதும் மேலெழும்பும்போதும் அருகிலுள்ள கட்டிடங்களின் கண்ணாடி சட்டங்கள் ஒலி அதிர்வுகளால் உடைந்துவிடுவதுண்டு என் கேள்விப்பட்டுள்ளேன்.
-
தொட வரவோ..?
மூன்று வருடங்களுக்கு முந்தைய நினைவு.. பல வருட கனவான சென்னையில் சொந்தமாக நிலம் வாங்கி தனிவீடு கட்ட வேண்டுமென விருப்பம்.. கடும் வெயிலில் உழைத்து சேகரித்த செல்வத்தைக் கொண்டு சிறிய மனை ஒன்று வாங்கிப்போட்டு, பின்னர் ஓய்வு பெற்ற பின் அங்கே வீடு கட்டிகொள்ளலாமென முடிவெடுத்தேன். மனையை தேடினேன்..தேடினேன்..! சென்னை நகரத்திற்குள் குறிப்பிட்ட பணத்திற்குள், காலி மனை வாங்குவது கடினம்தான்.. பெருகி வரும் புறநகர் பகுதிகளில் தேடும்போது பம்பல், திருநீர்மலை பகுதிகளுக்கும் சென்று வந்தேன்.. டீசன்டான ஒரு பகுதியில் தேடும்போது ஒரு மனை பிடித்துப்போனது.. விலையும் கொஞ்சம் மலிவாக இருந்தது. கூட்டிச்சென்ற நிறுவன ஆட்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்..! திடீரென தலைக்கு மேலே காதைக் கிழிக்கும் சத்தம்..!! நானும், வீட்டம்மாவும் பயந்தே போனோம்.. 'என்னடா..'வென அன்னாந்து பார்த்தால், மிக தாழ்வாக பறந்து செல்லும் விமானம்..! சில நிமிடங்களில் அடுத்தடுத்து விமானங்கள் வந்தன. விசாரித்ததில், சென்னை மீனம்பாக்கம் விமான ஓடுதளத்தை அண்மித்து விமானங்கள் தரை இறங்கும் வழிப்பாதையில் அந்த காலி மனை அமைந்திருந்தது..! ஓய்வு பெற்று அந்த மனையில் புதிதாக கட்டும் வீட்டில் நிம்மதியாக தூங்க முடியுமா..??? அங்கு பிடித்த ஓட்டம், அதன்பிறகு அப்பகுதிக்கு போகவே இல்லை..! ஆனால் மேலே இணைத்துள்ள காணொளியில் பாருங்கள்.. ! லண்டன் ஹீத்துரூ விமான நிலையத்தின் ஓடுபாதைக்கு அண்மித்த பகுதியில் விமானங்கள் தரையிறங்கும் வழிப்பாதையில் வீடுகள் கட்டி வாழ்கிறார்கள்.. எப்படி இவர்களால் தூங்க முடிகிறது..? ஆச்சரியமே..!
- இடுக்கண் வருங்கால் நகுக..!
-
நவீன தொழில் நுட்பத்தில் புதிய பாம்பன் பாலம்..!
பாம்பன் தூக்கு பாலத்தின் அருகே புதிய தூண்கள் அமைக்கும் பணி மும்முரம். பாம்பன் கடலில் இரட்டை வழி தளத்துடன் அமையும் புதிய ரயில் பாலத்தில், கப்பல் செல்லும் கால்வாய் பகுதியில் இருபுறமும் தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைப்பதில் பாம்பன் பாலம் முக்கிய பங்காற்றுகிறது. பாம்பன் கடலில் உள்ள ரயில்பாதை அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளை கடந்து விட்டது. இதையடுத்து ரூபாய் 250 கோடியில் செலவில் மின்சார ரயில்களை இயக்கும் வகையிலான இரட்டை வழித்தடத்துடன் கூடிய புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவக்கப்பட்டது. தற்போதுள்ள ரயில் பாலத்திற்கு அருகிலேயே கட்டப்பட்டுவரும் பாலத்தின் பணிகள் கொரோனா காரணங்களால் சில மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. தளர்வுகளுக்கு பிறகு மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு தங்கு தடையின்றி நடந்து வருகிறது. கட்டுமானப் பொருட்களை அறையிலிருந்து படகுகளில் கொண்டு செல்வதற்காக பாம்பன் வடக்கு கடற்கரைப் பகுதியில் தற்காலிக படகு நிறுத்தும் தளம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அனைத்து பொருட்களும் பணி நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பொருட்களை எடுத்துச் செல்லும் பபடகுகள், கடல் நீரோட்டம் மற்றும் காற்றால் கட்டுப்பாட்டை இழந்து தற்போது உள்ள ரயில் பாலத்தின் மீது மோதாமல் இருக்க கடற்கரையில் இருந்து கடலுக்குள் பணிகள் நடைபெறும் இடம் வரை தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. பாம்பன் கடலில் தற்போது கப்பல் செல்லும் கால்வாய் பகுதியில் "வெர்டிக்கல் லிப்ட்(Vertical Lift)" அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் தூண்கள் அமைக்கும் பணி முடிந்து விட்டதால், இருபுறமும் விரைவாக மற்ற தூண்களை அமைத்துவிடலாம் என்பதால் கால்வாய் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வரும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து டிசம்பர் முடிய வடகிழக்கு பருவமழை காலம் துவங்கிவிடும் என்பதால், பாம்பன் கடலில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பும் இருக்கும். இதனால் பாம்பன் கால்வாய் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ஊழியர்கள் திட்டமிட்டு தீவிரமாக கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய தலைமுறை
-
இடுக்கண் வருங்கால் நகுக..!
புலவர் திரு.சண்முக வடிவேலுவின் அருமையான நகைச்சுவை துளிகள்..! அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள், நடக்கும் நிகழ்வுகளை கோர்வையாக அதே நேரத்தில் மிகச் சரளமாக அலுக்காத வண்ணம் ரசிக்கும்படி சொல்வது மிகப்பெரிய கலை.. தெலுகு பரீட்சை பேப்பர் திருத்துவது.. அப்பஞ் சுடுகாடு பார்க்க அழகாக இருந்தது.. ஒருவர் பொறை இருவர் நட்பு.. - கணவன் மனைவி விட்டுக்கொடுத்தல்.. பக்தி இலாமல் எப்படி சாமி கும்பிட்டு, பின் அதிலேயே வீழ்ந்தது.. திருக்குறள் சொற்பொழிவிற்கு வந்த கூட்டமென தவறாக எண்ணியது.. (ஆனால் கூட்டம் வந்தது புளியோதரை சர்க்கரை பொங்கலுக்கென தெரியாமல்) வீட்டில் மனைவியிடமும், பேத்தியிடமும் தோற்பதும் சுகமே.. 'தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது..' என திருக்குறளை முத்தாய்ப்பாக சொல்லி முடித்திருப்பது மிக அருமை..! 👌 பொறுமையுடன் பார்த்தால் மிகவும் ரசிக்கலாம்..!
-
நாளை நமதே..!
நாளை நமதே..! இன்று தற்செயலாக இந்தக் காணொளியை காண நேர்ந்தது.. பெரும்பாலும் திரைப்பாடல்கள் கச்சேரி அசல் பாடல்கள் போல அமைவதில்லை..! பாடகரின் அலட்டலும் இருக்கும், அசலை விட்டு வேறெங்கோ ராகமும் சென்று நம் பொறுமை சோதித்துவிடும். சிறு கச்சேரிகளில் திறமையாக பாடக்கூடியவர்களும் இருக்கிறார்கள்.. அவற்றில் நான் உணர்ந்த ஒன்று..கீழேயுள்ள காணொளி. இக்காணொளியில் முதலில் பாடும் பாடகரின் (கறுப்பு சூட் டில் இருப்பவர்) குரல்வளமும், பாடும் தொனியும் மிக அருமை. கொசுறு: இந்த காணொளியில், வளையமிட்ட இசைக்கலைஞரின் முகச்சாயல், அடிக்கடி வடிவேலு நகைச்சுவைக் காட்சியில் வரும் நடிகர் போல் உள்ளார். ஊகிக்க முடிகிறதா..? 🧐
-
'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும், மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..!
"பொய் கூறி திருமணத்தை நிறுத்தினேன்"-திருமணம் நிறுத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்! கடைசி நிமிடத்தில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண், மணமகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக விளக்கமளித்துள்ளார். நீலகிரி மாவட்டம் மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்துக்கும், தூனேரியைச் சேர்ந்த பிரியதர்ஷினிக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமக்கள் மணக்கோலத்தில் மேடையில் வீற்றிருந்தனர். படுகர் இன மரபுப்படி, மணமேடையில் மணப்பெண் 3 முறை சம்மதம் தெரிவித்த பின்பே தாலிகட்ட வேண்டும். அதன்படி சம்மதம் கேட்டபோது மௌனம் காத்த பிரியதர்ஷினி, மூன்றாவது முறை கேட்கையில் "சம்மதமில்லை" என்று கூறி, ஆனந்தின் கைகளை தடுத்தார். தான் விரும்பும் ஒருவர், "ஒரு மணி நேரத்தில் வந்து விடுவார்" என்று கூறியவாறே, எழுந்து அங்கிருந்து செல்ல முற்பட்டார். இதை மறுத்து தடுத்த பிரியதர்ஷினியின் உறவினர்கள், அவரை தாக்க முற்பட்டனர். இவை ஒருபுறம் நடக்க மாப்பிள்ளைக் கோலத்திலிருந்த ஆனந்தோ, செய்வதறியாமல் சங்கடத்தில் தவித்தார். இந்நிலையில் மணப்பெண்ணை அவரது பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றியதாகவும், அவர் காதலனை தேடி சென்னை வந்தததாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், தான் எங்கும் செல்லவில்லை, தனது பெற்றோருடன் தான் இருப்பதாக அப்பெண் விளக்கம் அளித்து ஆடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட இளைஞர் மீது பல்வேறு தவறான தகவல்கள் வந்ததாகவும் அதனாலேயே பொய் கூறி திருமணத்தை நிறுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். புதிய தலைமுறை நம்புகிற மாதிரி இருக்கிறதா..? எதை நம்புவது..?? 😜 இந்த அண்டா சராசரமே "அக்கா" கஜா அகர்வாலால் தான் இயங்குகிறது சாமி..! ஆளை விடுங்கள்..!! 😜🙏
-
'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும், மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..!
அட ஏன் சார், நீங்க வேறை..! ஏற்கனவே திருமணமானவரை குழப்பத்தில் ஆழ்த்தி, வரவிருந்த மாப்பிள்ளைக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, இப்பொழுது வீதியில் நிற்கும் பெண்ணின் செயலில் நியாயமும், தர்மமும் இருப்பதாக தெரியவில்லை. மாப்பிள்ளை தப்பித்தார் என சொல்லலாம்.
-
'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும், மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..!
சென்னையில் இருந்து வருவதாக வாக்குறுதி அளித்த காதலன் அரை மணி நேரத்தில் வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஊட்டியில் நடக்க விருந்த திருமணத்தை நிறுத்திய மணமகள் நாள் முழுக்க காத்திருந்தும் காதலன் வராத நிலையில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே மஞ்சூர் பகுதியில் உள்ள மட்டகண்டி கிராமத்தில் நடக்க இருந்த திருமணத்தை, மணமேடையில்..., தாலிகட்டும் நேரத்தில்..., மணமகனை தடுத்து 'தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை'யென போர்க்கொடி உயர்த்தி திருமணத்தை நிறுத்தியவர் மணப்பெண் பிரியதர்சினி..! "ஊரார் சுற்று போட்டாலும்...தாயார் அடிக்க பாய்ந்தாலும்... அஞ்சாமல் தன்னை தேடி தனது காதலர் இன்னும் அரைமணி நேரத்தில் இங்கு வருவார்" என்று கூறி திருமணத்தை நிறுத்திய மணமகள் பிரியதர்ஷினி, காதலனையாவது கரம் பிடித்தாரா ? என்பது பலரது கேள்வியாக இருந்தது. மணமகளின் கலாட்டாவால் கல்யாணம் நிறுத்தப்பட்டது கடந்த 29ந்தேதி...! அன்று முழுவதும் பிரியதர்ஷனி இலவுகாத்த கிளியாக காத்திருந்தும் கடைசிவரை அவரது சென்னை காதலன், அங்கு வரவில்லை... இதையடுத்து தங்களது மகளை காரில் அழைத்துச்சென்ற மணமகளின் பெற்றோர் அவரை 'லவ்டேல்' என்று அழைக்கப்படும் சுற்றுலா பகுதியில் சாலையில் இறக்கிவிட்டு, "இனி வீட்டிற்கு வரக்கூடாது" என்று எச்சரித்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது. திருமணத்துக்கு முன்பாக தான் அங்கு வந்து விடுவதாக வாக்குறுதி அளித்த காதலன், டாடா காட்டிய நிலையில், காதலனை தேடிச்சென்று கரம் பிடிப்பது என்ற லட்சியத்துடன் அந்தப் பெண் சென்னைக்கு புறப்பட்டதாக அந்த கிராமத்து மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையே திருமணத்தை நிறுத்திய தங்களது மகளால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானம் காரணமாக மனம் நொந்த பெற்றோர், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. அதே நேரத்தில் 'மணப்பெண் பியதர்ஷினி காதலிக்கும் நபர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்வதாகவும், முறைப்படி மனைவியை விவாகரத்து செய்து கொண்டால் மட்டுமே பியதர்ஷினியை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளமுடியும் என்பதால், காதலனுக்காக இலவு காத்த கிளியாக பட்டணத்தில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், திருமணத்தை நிறுத்திய மணமகள் பிரியதர்ஷினி..' என்கின்றனர் அவரது உறவினர்கள். பாலிமர் செய்திகள் டிஸ்கி: இதைத்தான் அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை என்பார்களோ..? கொடுமை..! ☹️ துணிவோடு நல்லா வாழ்ந்தால் சரிதான், வாழ்த்துக்கள்.. 💐
-
'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும், மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..!
'என்னை திருமணம் செய்ய சம்மதமா?' மாப்பிள்ளை கேட்டதும் மணப்பெண் செய்த காரியத்தால் அதிர்ந்த நீலகிரி..! தனக்கு மற்றோருவருடன் காதல் இருப்பதாக கூறி மண மேடையிலேயே மணமகனை மணமகள் நிராகரித்த சம்பவம் உதகையில் நிகழ்ந்துள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டகண்டி கிராமத்தைச் சேர்ந்த மணமகன் ஆனந்த் என்பவருக்கும் கோத்தகிரி அருகேயுள்ள தூனேரி கிராமத்தை சேர்ந்த பிரியதர்சினி என்பவருக்கும் கடந்த 29 -ஆம் தேதி திருமணம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். திருமணத்துக்காக மட்டக்கண்டி கிராமத்தில் உற்றார், உறவினர்கள் கூடியிருந்தனர். இவர்கள் படுகர் இனத்தை சேர்ந்தவர்கள். படுகர் இன மக்களின் சம்பிரதாயப்படி, தாலி கட்டுவதற்கு முன் மணப்பெண்ணிடம் மணமகன் மூன்று முறை 'திருமணம் செய்து கொள்ள சம்மதமா..?' என்று கேட்க வேண்டும் . மணப்பெண் 'சம்மதம்' என்று தெரிவித்தால் மட்டுமே மணமகன் தாலியை கட்ட முடியும். அதன்படி, மணமகன் ஆனந்த், மணப்பெண் பிரியதர்ஷினியிடத்தில் 'தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா..?' என இருமுறை கேட்ட போது அவர் மௌனமாக இருந்தார். மூன்றாவது முறையாக மணமகன் கேட்ட போது வெடித்து அழுது 'எனக்கு சம்மதமில்லை' என்று பிரியதர்ஷினி உரக்க கூற, திருமண பந்தலில் பதற்றம் தொற்றிக் கொண்டது. பிரியதர்ஷினியை சமாதானப்படுத்த பெற்றோர்கள் முயன்றனர், ஆனாலும் பலன் இல்லை. மணமகள் பிரியதர்ஷினி மணப்பந்தலில் கூறுகையில், ''தன்னை திருமணம் செய்து கொள்ள வேறு ஒருவர் வருகிறார். ஒரு மணி நேரம் பொறுத்திருங்கள். அவர் எனக்காக தனது திருமண பந்தத்தை முறித்துக் கொண்டவர். என் காதலரின் குழந்தைகளை நான்தான் பார்த்துகொள்ள வேண்டும். இவரை திருமணம் செய்து கொண்டால் அவருக்கு துரோகம் செய்தது போல் ஆகிவிடும். எனக்கு இந்த திருமணம் வேண்டாம்" என்றவாறே அங்கிருந்து செல்ல முற்பட்டார். 🤭 இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன மாப்பிள்ளை தாலி கட்டாமல் மண மேடையை விட்டு இறங்கி சென்று விட்டார். பின்னர், பெற்றோர் மணமகள் பிரியதர்ஷினியை காரில் ஏற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர். மேலும், இனி வீட்டுக்கு வர வேண்டாம் எங்கேயாவது சென்று விடும்படி கூறி அவரை அனுப்பி விட்டு பெற்றோர் மட்டும் வீட்டுக்கு அழுதபடி வந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, 'இத்தனை நாள் பொறுத்து இருந்து விட்டு மண நாள் வரை காத்திருந்து அந்த பெண் ஏன் சொல்ல வேண்டும். திருமண கனவில் இருந்த மற்றோரு ஆணை ஏன் அவமதிக்க வேண்டுமென்றும்..?' சமூகவலைத் தளங்களில் அந்த பெண்ணுக்கு கடும் கண்டனம் எழுந்து வருகிறது. பாலிமர் செய்திகள் டிஸ்கி: இதை சொல்ல, இந்தப் பொண்ணு மணமேடை வரை வந்திருக்க வேண்டிய தேவையே இல்லையே..! பாவம் மாப்பிள்ளையாக வந்தவர்..! ☹️
-
மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை காப்பாற்றிய வியாபாரி..!
மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவனை காப்பாற்றிய வியாபாரி..! கை கொடுத்த சகோதரி..! திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தோப்புப்பட்டி கிராமத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், அவனது 6 வயது சகோதரியின் கைகளை பற்றிக் கொண்டு உயிருக்கு போராடிய நிலையில், தெருவில் சென்ற வியாபாரி ஒருவரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே தோப்புப்பட்டியில் தாய் தந்தை வேலைக்கு சென்று விட வீட்டின் மாடியில் 3 வயது சிறுவன் தனது 6 வயது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது மாடியின் கைப்பிடி சுற்று சுவரில் அமர்ந்திருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக இடறி விழ அவனை அருகில் நின்ற சகோதரி கை கொடுத்து காப்பாற்ற முயன்றுள்ளாள், ஆனால் தவறிவிழுந்த சிறுவனை முழுவதுமாக மேலே தூக்க இயலவில்லை. இரண்டு பிஞ்சுகளுமே பயத்தில் அலறியுள்ளனர். இதனை பார்த்த பக்கத்து வீட்டுப்பெண்ணோ அந்த சிறுவனை காப்பாற்ற முயலாமல் அவசர அவசரமாக தனது செல்போனில் படம் பிடித்தபடியே அந்த வீட்டை நோக்கி ஓடியுள்ளார். அந்த வீட்டின் சுற்று அவர் அருகே சென்ற அவர் மனிதம் மறந்து அதனை படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். இதற்கிடையே சிறுவனின் அபயக்குரல், அந்த வழியாக சைக்கிளில் ஓமதிரவம் உள்ளிட்டவற்றை விற்றுச்சென்ற இளாங்குறிச்சியை சேர்ந்த முகமதுஷாலிக் என்ற வியாபாரியின் காதுகளில் விழுந்துள்ளது. அவர் உடனடியாக தனது சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்று அந்த சிறுமியை கையை விடச்செய்து மேலிருந்து கீழே விழுந்த சிறுவனை பத்திரமாக தாங்கிப்பிடித்து காப்பாற்றினார். இதனை படம் பிடித்த பக்கத்து வீட்டுப்பெண், கடைசிவரை காப்பாற்ற முயலாமல் வீடியோ எடுத்து, அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். வியாபாரியை பாராட்டும் நெட்டிசன்கள், வீடியோ எடுத்தவரை வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர். யாரென்றே தெரியாத வியாபாரி நடக்க இருக்கும் விபரீதத்தை உணர்ந்து விரைந்து சென்று காப்பாற்றிய நிலையில், படம் பிடித்த பக்கத்து வீடுப்பெண்ணின் அருகில் இருந்து, நன்றாக படம் பிடிக்கும்படி கூறிய உரையாடல் அந்த வீடியோவில் இடம் பெற்று உள்ளது. வியாபாரியை போன்ற மனித நேயமிக்கவர்கள் வாழும் இதே ஊரில்தான், கடைசி வரை வீடியோ மட்டும் எடுத்துக் கொண்டு உதவிக்கு செல்லக்கூட மனமில்லா வேடிக்கை மனிதர்களும் வாழ்கின்றனர்..! பாலிமர் செய்திகள்
-
ஏதோ மோகம்..ஏதோ தாகம்..! இப்படியுமா..?
கீழேயுள்ளது அசல் பாடல்..
-
ஏதோ மோகம்..ஏதோ தாகம்..! இப்படியுமா..?
காதல், காமம், தாபம் ஆகியவற்றை ஒருசேரக் குழைத்து, பெருவெள்ளமாக இசையில் கொடுத்த இளையராஜாவின் பாடலை, இரண்டே வயலின்களை வைத்துக் கொண்டு தத்ரூபமாக வாசித்திருப்பது மிக அருமை..! 😍 பாராட்டுக்கள்..!
-
யார் அந்த நிலவு..?
அதே பாடல், சற்று தெளிவான காணொளியில்..
-
30 அடி உயரத்தில் வீடுகள்..!
30 அடி உயரத்தில் வீடுகள்..! மதுரை - போடிநாயக்கனூர் செல்லும் 'மீட்டர் கேஜ்' இரயில் பாதையை அகல இரயில் பாதையாக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், அவ்வழித்தடத்தில் இரயில்வேக்கு சொந்தமான இடத்தை ஆண்டுகள் காலமாக ஆக்கிரமித்து வாழ்ந்து வரும் குடும்பங்களின் தற்போதைய நிலை.. ? 30 அடி உயரத்தில் அவர்களை வாழ வைத்துள்ளது..!
- 10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலை..!
- 10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலை..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்னங்க இது..! பச்சை புள்ளிகளின் ஒரு நாளைய அளவை குறைத்தாகிவிட்டதா..? இரண்டுக்கு மேல் பதிய முடியவில்லையே? 🤔 கள மென்பொருளின் புது பதிப்பு, பழைய நிலைக்கு(default) கொண்டு சென்றுவிட்டதோ?
-
மிதவை சைக்கிள்..!
மிதவை சைக்கிள்..! முச்சக்கர வாகனத்தில் காலியான தண்ணீர் கேன்களை மிதவையாக பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மிதவை சைக்கிள் முயற்சி, எந்தளவிற்கு பயன்படுமென தெரியாது, ஆனால் பாராட்டுக்குரியவர்கள்..! 👍
- 10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலை..!
- 10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலை..!
-
10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலை..!
10 ஆயிரம் அடி உயரத்தில் உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலை..! 10 ஆயிரம் அடி உயரத்தில் 9.02 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீண்ட சுரங்க நெடுஞ்சாலையான அடல் சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி 3-ம் தேதி திறந்து வைக்கிறார். உலகில் மிக நீளமான சுரங்க நெடுஞ்சாலையாக இது இருக்கிறது. 9.02 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்க நெடுஞ்சாலை, மணாலியையும் லாஹாவ் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியையும் இணைப்பதாக, ஆண்டு முழுக்க போக்குவரத்து நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டதாக இருக்கிறது. முன்னர் கடும் பனிப்பொழிவு இருக்கும் போது ஆண்டுதோறும் சுமார் 6 மாத காலத்துக்கு இந்த பள்ளத்தாக்குப் பகுதிக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு வந்தது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3000 மீட்டர்கள் (10,000 அடி) உயரத்தில், இமயமலையில் பிர் பஞ்சால் பகுதியில் அதிநவீன வரையறைகளுக்கு ஏற்ப இந்தச் சுரங்கம் வடிவமைக்கப் பட்டுள்ளது. மணாலி மற்றும் லே இடையிலான சாலைப் பயண தூரத்தை 46 கிலோ மீட்டர் அளவுக்குக் குறைப்பதாகவும், பயண நேரத்தை 4 முதல் 5 மணி நேரம் வரை குறைப்பதாகவும் இது இருக்கும். அடல் சுரங்கப் பாதையின் தெற்கு முனைப் பகுதி, 3060 மீட்டர் உயரத்தில் மணாலியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதன் வடக்கு முனையம் பகுதி 3071 மீட்டர் உயரத்தில் லாஹாவ் பள்ளத்தாக்கில் சிஸ்ஸு, டெலிங் கிராமம் அருகே அமைந்துள்ளது. குதிரை லாடத்தின் வடிவத்தில் அமைந்துள்ள ஒரே சுரங்கமாக, இரண்டு லேன்கள் கொண்ட இந்தப் பாதையில், வாகனங்கள் செல்ல 8 மீட்டர் அகலத்துக்கு இடவசதி உள்ளது. 5.525 மீட்டர் உயரம் வரையிலான வாகனங்கள் இதில் செல்லலாம். இந்தப் பாதை 10.5 மீட்டர் அகலம் கொண்டது. 3.6 X 2.25 மீட்டர் அளவில் தீ பிடிக்காத, அவசர கால சுரங்கம், பிரதான சுரங்கத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்கிறது. தினமும் 3000 கார்கள் மற்றும் 1500 லாரிகள் செல்லும் வகையில் அதிகபட்சம் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய வகையில் அடல் சுரங்கப் பாதை அமைக்கப் பட்டுள்ளது. அதிநவீன எலெக்ட்ரோ மெக்கானிக்கல் நடைமுறைகளைக் கொண்டதாக, காற்றோட்ட வசதி கொண்டதாக, SCADA கட்டுப்பாட்டில் இயங்கும் தீயணைப்பு அம்சங்கள் கொண்டதாக, வெளிச்சம் கொண்ட, கண்காணிப்பு முறைமைகள் கொண்டதாக இந்தப் பாதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப் பாதையில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் சில: a. இரு முனையங்களிலும் சுரங்கத்தில் நுழையும் இடத்தில் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள். b. அவசர கால தகவல் தொடர்புக்கு 150 மீட்டர் இடைவெளியில் தொலைபேசி இணைப்புகள் c. 60 மீட்டர்களுக்கு ஒரு இடத்தில் தீயணைப்பு குழாய் வசதிகள் d. 250 மீட்டர் இடைவெளியில் சிசிடிவி பொருத்தி, ஏதும் நிகழ்வுகளை தானாகவே கண்டறியும் வசதி. e. 1 கிலோ மீட்டர் இடைவெளியில் காற்றின் தரத்தை கண்காணிக்கும் வசதி f. வெளிச்சம் ஏற்படுத்துதல் / பயண வழிகாட்டி பலகைகள் 25 மீட்டர் இடைவெளியில் அமைக்கப் பட்டுள்ளன. g. சுரங்கப் பாதை முழுக்க வழிகாட்டும் தகவல் அறிவிப்பு வசதி. h. 50 மீட்டருக்கு ஒரு இடத்தில் தீ பிடிக்காத தரம் கொண்ட காற்று சீர் செய்யும் சாதனங்கள் i. 60 மீட்டர் இடைவெளியில் கேமராக்கள். ரோட்டங் கணவாய்க்கும் கீழே முக்கியமான இந்த சுரங்கப் பாதையை உருவாக்குவதற்கான வரலாற்று முக்கியத்துவமான முடிவு அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 2000 ஜூன் 03 -ம் தேதி எடுக்கப்பட்டது. தெற்கு முனையத்தை இணைப்பதற்கான சாலைக்கு 2002 மே 26 -ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. பெரிய புவியியல், மலைப்பரப்பு மற்றும் வானிலை சவால்களை முறியடிக்கும் பணியில் எல்லைப் பகுதி சாலைகள் அமைப்பு நிறுவனம் (பி.ஆர்.ஓ.) தொடர்ந்து மேற்கொண்டது. மிகவும் கடுமையான 587 மீட்டர் நீளம் கொண்ட செரி நளா பால்ட் பகுதி சாலையும் இதில் அடங்கும். இரு முனையங்களில் இருந்தும் இணைப்பு வசதி 2017 அக்டோபர் 15-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. 2019 டிசம்பர் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், ரோட்டங் சுரங்கப் பாதைக்கு அவரது பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 2020 அக்டோபர் 3-ம் தேதி காலை 10 மணிக்கு ரோட்டங்கில் அடல் சுரங்கப்பாதையைத் திறந்து வைக்கிறார். மணாலியில் தெற்கு முனையத்தில் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி லாஹாவ் ஸ்பிட்டி மற்றும் சோலாங் பள்ளத்தாக்கில் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். தமிழ் இந்து
-
பெண்டாட்டி ஊருக்கு போய்ட்டா..!
ஆமாம்.. இவர்களின் சில காணொளிகள் மிகவும் ரசிக்கக் கூடியதாக உள்ளன.பெரும்பாலும் பாரிஸ் நகர 'லாசப்பல்' பகுதியில் படமெடுத்துள்ளார்களென எண்ணுகிறேன். அடிக்கடி தமிழ்க் கடைகளை பார்க்க முடிகிறது. மேலேயுள்ள காணொளியில் அந்த அம்மணி, "இளசுகளை நம்பலாம், ஆனால் இந்த 50 வயசு கடந்த முக்கால் கிழடுகளை நம்ப முடியாது..!" என முத்தாய்ப்பாக இடித்துரைத்துவிட்டு செல்வது அருமை.😜🤭