Everything posted by ராசவன்னியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், இணையவன்.
-
இங்கே பார்ரா அலப்பறைய..!
பாலைக்குள் களப்பணிகள் ஆய்வு முடிந்து களைப்புடன் வீடு திரும்பியவுடன் உற்சாகமூட்டுவது, பழைய திரைப் பாடல்கள்.. இன்று "தென்றலுக்கு என்றும் வயது.." என கூகிளில் தேடினேன்.. பாடல் மிக இனிமையாக இருந்தாலும், கிட்டிய காணொளிகள் யூடுயூபில் தரமாக இல்லை.. அசிரத்தையுடன் மீண்டும் தேடியபோது இந்தக் காணொளி கிடைத்தது.. கார் சுற்றிவரும் வீதிகளையும், கட்டிட அமைப்புகளையும் பார்த்தால், நான் சமீபத்தில் லண்டன் வீதிகளில் டாக்ஸியில் வலம் வந்த வீதிகள் போன்ற அமைப்புகள்.. பாடியவரும் பரவாயில்லாமல் பாடுகிறார்.. ஆளைப் பார்த்தால் 'ஈழத் தமிழர்' போல தெரிகிறார்.. தரமற்ற அசல் காணொளி..
-
போக போக தெரியும்..!
ஆயிரம் ரூபாய்க்கு கிட்டும் இந்த பேங்கோ(Bangos) கருவியின் இசையை வைத்து வடிவமைக்கப்பட்ட பாடலை இன்றளவும் ரசிக்குபடி செய்திருப்பது விசுவநாதன்-ராமமூர்த்தியின் அருமையான இசையமைப்பு.. இப்பாடலை கேட்கும்போது, நம்மையும் அறியாமல் மேசையினை விரல்களால் தாளம் போட்டு தட்ட தோன்றும்..!
-
யாருடாப்பா பேரான்டி..நீ..?
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறி-> , உண்மையில் தன்னுடைய பேரன் (பேரனுக்கு வயது 12) பெயரில் யாழில் எழுதுகிறார்..! பல எழுத்தாளர்கள், புனைப் பெயரில் பெண்ணாக எழுதுவதில்லையா..? இது தெரியாமல் 'தொன தொன'ன்னு கேள்வியெல்லாம் கேட்கப்படாது..!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனங்கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தமிழ் சிறி அண்ணா..!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அகஸ்தியன் மற்றும் நுணா..! (ஆட்களைப் பார்த்தால், நாற்பதுக்கு மேல் என்பதை நம்ப முடியவில்லையே.. )- ஒருநாள்.. உன்னோடு ஒருநாள்..
'ஜில்லுன்னு ஒரு மாலை' நிகழ்ச்சியில் இது வந்துள்ளது. இப்பொழுதும் வருகிறதா..? என்பது தெரியவில்லை..கு.சா...! கோழிகள் எப்படி இருந்தால் நமகென்ன..? இசை காதுக்கு இனிமையாய் இருந்தால் சரி..!- ஒருநாள்.. உன்னோடு ஒருநாள்..
தேவராஜ்-மோகன் இயக்கத்தில் உருவான "உறவாடும் நெஞ்சம்" படத்தில் வந்த மீசை அரும்பும் கல்லூரி பருவத்தில் கேட்ட பாடல் இது.. மனதை வசீகரிக்கும் இசை..திரும்பத் திரும்ப காசெட் ரெக்கார்டரில் கேட்ட பாடல்.. இசைஞானியின் ஆரம்பகால பாடல்களில் பிரசித்தி பெற்றவைகளில் இதுவும் ஒன்று..! இந்தப் பாடலின் காணொளியை யுடுயூபில் தேடியபோது இந்தக் காணொளிதான் கிடைத்தது..!! பாடலுக்காகவே பார்க்கலாம்..- உன்ன நெனச்சி நெனச்சி உருகிப் போனேன் மெழுகா..!
இப்பொழுதெல்லாம் ஒரு பாடல் மிகப் பிரபலமாகிவிட்டால், யூடுயூபில் அதே பாடலை பலரும் பாடி காணொளியை தரவேற்றி மற்றவர்களை கொல்பவர்களே அதிகம். சில விதிவிலக்குகளும் உண்டு.. அதில் கீழேயுள்ள காணொளியில் நன்றாக பாடியுள்ளார்..!- யாழ்ப்பாண வானில் மசால் வடை..!
அழைப்பிற்கு மிக்க நன்றி.. நேரம் அமையும்போது அவசியம் சந்திக்கலாம்..- யாழ்ப்பாண வானில் மசால் வடை..!
உறுதிபடுத்தியதற்கு நன்றி.. தாவலாம்.. ஆனால் யாழ்ப்பாணத்தில் யாரையும் தெரியாது..! இரு வருடத்திற்கு முன் பாஞ் வற்புறுத்தி அழைத்தார்.. அலுவலக சூழ்நிலையினால் அப்பொழுது செல்ல இயலவில்லை.- யாழ்ப்பாண வானில் மசால் வடை..!
காணொளியில், விமானம் பலாலியில் தரையிறங்கும் முன் படத்தில் தோன்றும் அம்புக் குறியீட்டு இடம் காங்கேசன் துறை சிமெண்ட் ஆலைபோல தெரிகிறது.- யாழ்ப்பாண வானில் மசால் வடை..!
சார், சும்மா கதை விடப்படாது.. நீங்கள் இணைத்த காணொளியிலும் கடலை உள்ளது.. அதுக்குப் பேரு 'பட்டாணிக் கடலை'..! பட்டாணியை ஊறப்போட்டு மசித்து மாவாக்கி வடை சுடுகிறார்.- 20 ஆண்டுகளில் உருவாகப் போகும் புதிய நாடுகள்..
இன்று யூடுயூபில் வலம் வந்தபோது, இந்த சுவாரசியமான காணொளியை பார்க்க நேர்ந்தது.. பாவம், அவருக்கு மலரத் துடிக்கும் சில நாடுகளை சேர்க்க மறந்துவிட்டார் போலும்..! உங்களுக்கு என்ன தோன்றுகிறது..?- யாழ்ப்பாண வானில் மசால் வடை..!
சென்னையில், மசால் வடை மதுரையில், ஆமை வடை திருச்சி , தஞ்சையில் கடலை வடை நெல்லை, தூத்துக்குடியில் பருப்பு வடை கேரளாவில் பரிப்பு வடை பேருதான் வேறு வேறு, தயாரிக்கும் முறையும், சுவையும் ஒன்றுதான்..!- யாழ்ப்பாண வானில் மசால் வடை..!
சர்வதேச விமான பறப்புகளில், குப்பூஸ் பார்த்திருக்கேன், சப்பாத்தி உண்டிருக்கேன், கட்லெட் கடித்திருக்கேன்.. ஆனால்... மசால் வடையை இப்பொழுதுதான் பார்க்கிறேன்..! பின்னுறீங்களேப்பா.. நீங்க வேற லெவல்..!! அபாரம்..!- உன்ன நெனச்சி நெனச்சி உருகிப் போனேன் மெழுகா..!
பல நாட்கள் கழித்து இளையராஜாவின் இசையில் இந்தப் பாடல் மிகவும் பிடித்தது..! இப்பாடலின் பின்னணியில் காட்சிகளின் வனப்பு மிக அருமை.. புல்வெளிக் குன்றுகளில் மின்விளக்குகளை அமைத்து ஒளிரவிட்டு, அருகில் சிறு குளத்தில் அன்னப் பறவைகளை நீந்தவிட்டுள்ள காட்சியமைப்புக் கலை, கண்கவரும் வண்ணம் அமைந்துள்ளது. கீழே இரண்டாவது காணொளியில் கிராபிக்ஸ் தொகுப்பு பாடல் வரிகளுடன் நம்மையும் கூடவே பாடத் தூண்டுகிறது..!- இனி பேசுவ ? மரண அடி தந்த ஆய்வாளர்..
மேலே காணொளியில் பேசுபவர், முனைவர்.கோ.தெய்வநாயகம் அவர்கள், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாரக பணியாற்றியவர். இன்னொரு காணொளியும் இருக்கு..!- இனி பேசுவ ? மரண அடி தந்த ஆய்வாளர்..
இதென்ன புது கண்டுபிடிப்பா இருக்கே..? அதற்கு உங்கள் வரைவிலக்கணம் எப்படியோ..?- பொண்ணோட அப்பாவை வரச் சொல்லுயா..!
படத்தை யூடுபில் பாருங்கள் புரியும்..! உங்கள் காலத்து நடிகர்கள் நடித்து, மெருகேற்றியது. நானும் இன்றைக்குதான் முழுப்படமும் பார்க்கப் போறேன்..!!- பொண்ணோட அப்பாவை வரச் சொல்லுயா..!
ஒங்க ஆசையைக் கெடுப்பானேன்..? இதோ..!- பொண்ணோட அப்பாவை வரச் சொல்லுயா..!
"இதுவரைக்கும் தம்பி பப்ளிக்மேனா இருந்தான்.. இன்னைக்குதான் தம்பி பிஸினஸ்மேன் ஆயிட்டான்..!" "டேய்.. மீடிங்ல பேசுறையெல்லாம் பிஸினஸில் பேசாதே..!" "மாமா..! பொண்ணுக்கு ஏஜ் என்ன..?" என விசாரிக்க, "ஐயையோ ..அது யாரையுமே ஏசாது தம்பி, ரொம்ப நல்ல பொண்ணு..!"என அப்பாவியாக பதிலளிக்க, "ஏன் மாமா.. டான்ஸ் ஏதாவது தெரியுமா..?" என எம்.ஆர்.ராதா திரும்பக் கேட்க, "ஐயையே..! அதெல்லாம் எனக்கு தெரியாது தம்பி..!" என கே.டி.சந்தானம் நெளிய.. அனைத்தும் விரசமில்லாத நகைச்சுவை...!- இனி பேசுவ ? மரண அடி தந்த ஆய்வாளர்..
வரலாற்று ஆய்வாளர் திரு.தெய்வநாயகம் அவர்களின் பேச்சு, அவசியம் காண வேண்டிய காணொளி..!- பொண்ணோட அப்பாவை வரச் சொல்லுயா..!
அறுபது வருடங்களுக்கு முன்(1960) வந்த படத்தின் (கவலை இல்லாத மனிதன்) நகைச்சுவை காணொளியை இன்று காண நேரிட்டது.. டி.எஸ்.பாலையா, சந்திரபாபு, எம்.ஆர்.ராதா ஆகிய மூன்று நகைச்சுவை ஜாம்பவான்களும், கவிஞர் கே.டி. சந்தானமும் ஒன்று சேர்ந்து கலக்கியிருக்கிறார்கள்..! என்ன யதார்த்தமான நகைச்சுவை..! - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.