Everything posted by ராசவன்னியன்
-
மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்..
இன்று தற்செயலாக இந்தக் கவிதையை யாழ்க் களத்தில் பார்க்க நேர்ந்தது. இதை ரசிகை என்ற அம்மணி பதிந்திருந்தார். என்னைக் கவர்ந்திருந்ததால் மீள் பதிவு இது..! ரசிகைக்கு நன்றி. அன்னை ஒரு பிறவி தருவாள் அடுத்தடுத்து பல பிறவி.... உன் மேல் ஆசை கொண்டவள் தருவாள். மண்ணில் தன் வாழ்வு முடியும் வரை உன்னை சுத்தி சுத்தியே வந்து.. உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள் தன்னை உனக்கு தந்தவளை... தரணியே நீதான் என்று வழ்பவளை.. தருணம் கிடைக்கும் போதெல்லாம் நாய் பேய் என்று நாக்கிழந்து பேசும் மனிதா ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால் உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்! போ.. போ....? நரம்பில்லா நாக்கு ஆயிரமும் பேசும்.அதற்கு மேலும் ...! Rasikai
-
தலைகளுக்கு என்ன நடக்குது..?
எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் பாருங்கள்..! 🤔 நல்லவேளை எனக்கு அவ்வளவு வழுக்கை இல்லை..!
-
தலைகளுக்கு என்ன நடக்குது..?
சாமிகளே, நீங்கள் சொல்ல வருவது, தாயகத்திலுள்ள மக்களைத் தானே..? 🤔
-
தலைகளுக்கு என்ன நடக்குது..?
தலைகளுக்கு என்ன நடக்குது..?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், யாழ்நிலவன். இன்றும் யாழில் தொடர நீங்கள்தான் காரணம். நலமுடன் வாழ்க..!
-
பிள்ளையார் முளைப்பாரா..?
பிள்ளையார் முளைப்பாரா..? 🤔
-
இப்படியும் விபத்து..!
இப்படியும் விபத்து..! மனுசனுக்கு 'எப்போ, எது, எப்படி நடக்குமென தெரியாது..!' என்பதை இந்தக் காணொளியை பார்த்தால் புரியும்..🙄 பெங்களூர் கே.ஆர்.புரத்தில் சாலை ஓரமாக ஆட்டோவை நிறுத்தி நின்றுகொண்டிருந்த ஆட்டோக்காரர், தான் நிற்பது சாலையில் அறுந்து தொங்கும் ஒரு கேபிள் மீதென உணராமலிருக்க, அந்தக் கேபிளை சாலையில் செல்லும் மற்றொரு ஸ்கூட்டர் இழுத்துச் செல்ல, அதனால் 10 அடி உயரத்திற்கு எழும்பி தூக்கியெறியப்படும் ஆட்டோ ஓட்டுனர், அவ்வழியே நடந்து செல்லும் ஒரு பெண்ணின் மீது விழ, அப்பெண்ணிற்கு மருத்துவ சிகிச்சையாக 54 தையல்கள் போடும் நிலைக்கு ஆளானது சோகம்..! அதிர்ஸ்டவசமாக இருவரும் காயங்களுடன் உயிர் பிழைத்துவிட்டனர்..!
-
இக்கோவில் எங்குள்ளது..?
கோவிலுக்கு அப்பால் வேலியை தாண்டி 'தொலை தொடர்பு' கோபுரமும் உள்ளது.
-
இக்கோவில் எங்குள்ளது..?
சீரான சாலையாவது போட்டுக் கொடுத்திருக்கலாம்..குண்டும் குழியுமாக செம்மண் தரையாக செல்கிறது.மழை காலமென்றால் துன்பம்தான். நன்றி கு.சா.. நான்கு நாட்கள் பக்ரீத் விடுமுறை, அதனால் வேலைகள் இந்த நாட்கள் மட்டும் நிற்கின்றன. நமஸ்காரமுலு சிறிகாரு.. நுவூ பாகன உன்னாரா..? 😜
-
இக்கோவில் எங்குள்ளது..?
மிகச் சரியான ஊகிப்பு..! மிகச் சரியான பதில். நான் பார்த்த காணொளியில், அடிவாரத்திலுள்ள மியூசியத்தில் சுவர்களில் போராளிகளை, 'பயங்கரவாதிகள்' எனவும், இலங்கை ராணுவத்தை 'காக்க வந்த புண்ணிய ஆத்மாக்கள்' எனவும் வர்ணித்திருப்பர். தொப்பிக்கல மியூசியம். குடுமிமலை கோவிலின் முகப்பு. Good attempt..! 😎
-
இக்கோவில் எங்குள்ளது..?
இப்பகுதியை மீட்க நடந்த சமரில், 700லிருந்து 800 போராளிகள் மடிந்ததாக ராணுவம் சொல்கிறது. இதற்கான மியூசியமும் அடிவாரத்தில் உள்ளது.
-
இதயம் இருகின்றதா..?
அமீரகத்தின் வடபகுதி எமிரேட்டான "ராஸ் அல் கைமா" (RAS Al Kaimah)வின் மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிப்லைன் (Zipline)உலகின் நீளமான ஒன்றாகும்.. துபாயிலிருந்து தோராயமாக 115 கி.மீ தூரத்தில் உள்ளது. 'மன தைரியம்' உள்ளவர்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டிய 'த்ரில்' ஒன்று.
-
இக்கோவில் எங்குள்ளது..?
"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடமாகும்.." அவ்வகையில் இது கேரளா-தமிழ்நாடு எல்லைப் பிரச்சினயில் சிக்கியுள்ள 'கண்ணகி கோவிலும்' அல்ல..! கோவிலின் வாசிலில் ஓம் என இரும்புக் கம்பிகளால் பதிக்கப்பட்டுள்ளதால், இது தமிழ்க் கடவுள் குமரனின் கோவிலாகும். எப்பொழுதும் தமிழ்க் கோவில்கள், அடுத்தவன் ஆதிக்கத்தில் இருண்ட காலமாய் சிக்கியிருப்பது (திருப்பதி சுசீந்திரம் சிதம்பரம் போன்ற) வரலாறுகள்.. இக்கோவிலும் அதில் தப்பவில்லை.. இக்கோவில் எங்கிருக்கிறது என ஊகிக்க முடிகிறதா..? க்ளூ: இங்கே செல்ல ராணுவத்திடம் அனுமதி பெற்றாக வேண்டும்..!
-
நம்ம... மதுரை, ராஜவன்னியன்...
தாங்கள் அனுப்பிய 'வாட்ஸ் அப்' செய்தியால்தான் அறிந்துகொள்ள முடிந்தது.. ஒரு மாதம் கழித்து மீண்டும் யாழில் சந்திக்கலாம்.. Till then, keep WhatsApping..!
-
நம்ம... மதுரை, ராஜவன்னியன்...
சரி, போட்டோவை இணைக்கலாமென தேடினால் இவைதான் கிடைத்தன..! 😎 கோட்டை மெட்ரோ நிலையம்
-
நம்ம... மதுரை, ராஜவன்னியன்...
லண்டன் "டவர் கில்ஸ்" மெட்ரோ நிலையத்தில் இறங்கி அருகே இருக்கும் சிறு பூங்காவில் (ஒரு ஆங்கிலேயரின் சிலையும் அங்கே இருந்தது) உட்கார்ந்து 'சாக்லேட் பாப்கார்ன்' கொரித்துக்கொண்டு, அப்படியே பொடிநடையாக சுரங்கப் பாதை மூலம் சாலையை கடந்தால் அங்கே ஒரு சிறிய அரண்மனை கோட்டை..! அருகேயிருந்த 'ஸ்டார் பக்ஸ்'ஸில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுவிட்டு, டவர் ப்ரிட்ஜ் பாலத்தை பார்க்க தேம்ஸ் நதியின் கரையோரம் நடந்தால், எதிர்புறம் 306 மீ உயர 'சார்ட்' கூம்பு வடிவ கட்டிடம்..😎 கடும் குளிரில் நடுங்கியபடி பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே நதிக்கரையோரம் டவர் பிரிட்ஜ் நோக்கி நடந்தேன்..! லண்டன் நகர மக்களின் ரசனை, லைஃப் ஸ்டைல், துபாய் நகரத்தைவிட வேறு விதமாக இருந்தது..🤩 கீழேயுள்ள காணொளியை இன்று பார்த்தபோது 8 மாதங்களுக்கு முன் சென்று வந்த லண்டன் காட்சிகள் மனக்கண்களில்..
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அப்புக்காத்து, அம்மாகாத்து எல்லாம் அப்படித்தான் காகிதக் கட்டுகளோடு திரிவார்கள்..! 😉
-
ஜும்பலக்கா, ரண்டக்க - பொருள் தெரியுமா..?
- ஜும்பலக்கா, ரண்டக்க - பொருள் தெரியுமா..?
- கொரானா...கொரானா..!
இன்று உச்சாநீதிமன்ற தீர்ப்பால் தமிழகத்தில் நாளை முதல் "கொரானா டான்ஸ்"..!- மயிலோடுது.. வான் மயிலோடுது..!
அபுதாபிக்கு சொந்தமான எதிகாட்(Etihad) ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் 380 விமானம் தயாரிக்கும் இந்தக் காணொளி...! விமானத்தின் ஒவ்வொரு பாகங்களும் பல்வேறு பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு கொண்டுவந்து பொருத்தி முழு விமானமாக வெளிவந்து பறந்து செல்வதை விபரித்திருப்பது மிக அருமை.. யாழ்க் களத்தில் துலூஸ் அருகே வசிப்பவர், இந்த ஏர்பஸ் இன்டஸ்ட்ரீஸ் பற்றி அதிகம் தெரிந்திருந்தால் விளக்கலாமே..?- மயிலோடுது.. வான் மயிலோடுது..!
அடுத்திருப்பது துபை எமிரேட்ஸ் ஏர்பஸ் 380யுடன் ஜெட்மேன்களின் சாகசம்..! 👌- மயிலோடுது.. வான் மயிலோடுது..!
"ரயிலோடுது, யாழ் ரயிலோடுது.." எப்படி "மயிலோடுது.. வான் மயிலோடுது.." என மருவியது என மலைக்கிறீர்களா..? எல்லாம் 'உல்டா' தான்..! பால்ய வயதில் கிராமத்து தெருக்களில் கோலி, கிட்டிப்புல் விளையாட்டுகளை விளையாடும்பொழுது ஆகாயத்தில் சத்தத்துடன் பறக்கும் விமானத்தை பார்த்து அதிசயிப்பது வழக்கம். பெரியாளானதும் 'ஒரு நாளாவது விமானத்தில் பறந்துவிட வேண்டும்' என்பது கனவாகவே இருந்தது. காலசுற்றலில் அக்கனவு பலமுறை நிறைவேறிவிட்டது.. ஏர்பஸ் 380 யில் சிலறை பறந்தாச்சு, கெலிகாப்டரில் சிலமுறை.. ஆனால் கன்கார்டில் பறக்க முடியவில்லை.. இந்த விமான ஈர்ப்பு சிறுவயதிலேயே ஆழமாக பதிந்துவிட்டதால், விமான தொழிற் நுட்பங்களை ஆர்வத்துடன் யுடுயூபிலும், இணைய குறிப்புகளிலும் சிரத்தையாக பார்த்து ரசிப்பதுண்டு.. அப்படி பார்த்து ரசித்த சில காணொளிகளை பகிர்கிறேன்..! முதலில் நம்ம 'ஈழ்ஸ்' வசிக்கும் ஊரில்..!! 😉 ஒரே சமயத்தில் இரு விமானங்கள் தரையிறங்கும் (Parallel landing) அதிசயம்..! 👇- பனாமா கால்வாய் - ஓர் அதிசயம்..!
நான் இந்தக் கால்வாயின் பல காணொளிகளை பார்த்துள்ளேன். மிக 'த்ரில்லிங்'கான பயண அனுபவமாகவே இருக்கும். கரையிலிருந்து 5 கி.மீ தொலைவில் நங்கூரமிட்ட கப்பலில் ஒருநாள் முழுவதும் தங்கியிருக்கிறேன். காலடியில் பூமி சுத்துவது போன்ற உணர்வுகளால் எனக்கு தலை சுத்தலும், வாந்தியும் வருவதுபோல இருந்ததால் மறுநாள் "போதும்டா சாமி ..!"என கரைக்கு திரும்பிவிட்டேன். சிலருக்கு கப்பல் பயணம் ஒத்துக்கொள்ளாது என நினைக்கிறேன். நன்றி, ஈழப்பிரியன்.- பனாமா கால்வாய் - ஓர் அதிசயம்..!
காணொளியில் விளக்கம் புரிந்திருக்குமென எண்ணுகிறேன். இக்கால்வாய் மட்டும் சாத்தியப்படாவிட்டால், நியுயார்க்கிலிருந்து, ஈழப்பிரியன் இருக்கும் சான்ஃப்ரான்சிஸ்க்கோவிற்கு கப்பலில் முழு தென் அமெரிக்க கண்டத்தையும் சுற்றிச் செல்ல இருபது நாட்களுக்கு மேல் பயண நேரம் பிடிக்கும். இதற்கான பொருட்செலவு, நேர விரயம், கடலில் அபாயங்கள் மிக அதிகமாக இருக்கும். பிரான்ஸ் நாட்டு பொறியாளர்களால் 1881ல் ஆரம்பித்த இத்திட்டம் 1894ல் பாதியில் கைவிடப்பட, இந்த திட்டத்தை, பின்னர் அமெரிக்க பொறியாளர்களால்1904ல் மறுபடியும் முன்னெடுத்து தொடங்கப்பட்டு 1914ல் முடிவுற்று கப்பல் போக்குவரத்து பாவனைக்கு திறக்கப்பட்டது. பனாமா கால்வாய் மூலம் கப்பல் போக்குவரத்தால் ஈட்டும் வருமானம் பனாமா நாட்டின் பொருளாதாரதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
Important Information
By using this site, you agree to our Terms of Use.