Everything posted by ராசவன்னியன்
-
அமைதியில்லாதென் மனமே என் மனமே..
1951ம் ஆண்டு "பாதாள பைரவி" என்ற இப்படம் தமிழிலும், தெலுங்கிலும் வெளிவந்து சக்கைபோடு போட்டு 200 நாட்கள் ஓடியது. அதில் வந்த இப்பாடலை இன்னமும் இரவில் மடியில் கேட்டுக்கொண்டே நான் தூங்குவதும் உண்டு..! பழைய கள்ளு..! அமைதியில்லாதென் மனமே என் மனமே அனுதினம் கண் முன் கனவே போல.. மனதே பிரேமை மந்திரத்தாலே.. அமைதியில்லாதென் மனமே என் மனமே...! ***** புதிய ஜில்லு..! (இசைக்கருவி ஒலிவடிவில்..)
-
பழைய கள்ளு, புதிய போத்தல்..
"நாங்கள்.. நாங்கள்"ன்னா யாரு? ஒங்க குழந்தைகளா..? ஒங்க பேரக் குழந்தைகளா..? இவர், அனுமந்தையா நம்ம தோழர் போலக் கிடக்கு..! 'புல்புல் தாரா'வில் பின்னுறார்..
-
பழைய கள்ளு, புதிய போத்தல்..
எழுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது இப்பாடல் மிகவும் பிரபலம்..! இப்பொழுது புது வடிவில்..
-
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா..
இன்றும் ஒருமுறை முழுமையாக பார்த்து ரசித்தேன்.. பாடல்கள் அத்தனையும் இனிமை..! அதிலும் "நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா.. தா.." இன்னமும் தாளம் போட்டு இதயத்தை வருடும் பாடல்..
-
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா..
முதல்ல அந்தப் படத்தை பாருங்கள்.. ஐயா..! எந்தவித விரசமுமில்லாத, மிக இனிமையான பாடல்களைக் கொண்ட படத்தை பார்க்காதவர்கள், இன்றைய தலைமுறை ஆட்களாகத்தான் இருப்பார்கள்! நீங்கள் இணத்த பதிவை நான் பார்க்கவில்லை ஐயா, மன்னிக்கவும்.
-
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா..
‘போன மாசம் ஒரு படம் பாத்தோமே... அது என்ன படம்?’ என்று படத்தின் பெயரையோ, நடிகரின் பெயரையோ, டைரக்டரின் பெயரையோ மறந்து கேட்போம். அப்படியெனில் கதையை? அதைவிட்டுத் தள்ளுங்கள். ஆனால் மொத்தக் கதையும் நமக்கு அத்துபடி.‘இந்தப் படம் பாத்துட்டீங்களா?’ என்று ஏதேனும் படம் குறித்துக் கேட்பதில் தவறில்லை. ஆனால் , ‘இந்தப் படத்தைப் பாத்திருக்கீங்களா?’ என்று கேட்டால் சுள்ளென்று கோபமாகிவிடுவார்கள். அந்தக் கேள்வியை அப்படிக் கேட்காமல், ‘எத்தனை தடவை பாத்தீங்க’ என்று கேளுங்கள். குதூகலமாகி, குஷியாக பதில் சொல்லுவார்கள். அந்தப் படம்... காதலிக்க நேரமில்லை. 1964ம் ஆண்டில் வந்த படம். கிட்டத்தட்ட, 55 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் இன்றைக்கும் புத்தம் புதிய காப்பியாக, நம் மனசுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறது காதலிக்க நேரமில்லை. 1957ம் வருடம் கல்யாணப் பரிசு படத்தை முதன் முதலாக இயக்கிய ஸ்ரீதர், 60ம் வருடத்தில் மீண்ட சொர்க்கத்தையும் விடிவெள்ளியையும் இயக்கினார். 61ம் வருடம் தேன் நிலவு படத்தைத் தந்தார். 62ம் வருடத்தில், நெஞ்சில் ஓர் ஆலயத்தையும் போலீஸ்காரன் மகளையும் வழங்கினார். 63ம் ஆண்டு நெஞ்சம் மறப்பதில்லை படத்தைக் கொடுத்தார். 64ம் வருடத்தில், கல்யாணப்பரிசு, விடிவெள்ளி, மீண்ட சொர்க்கம், தேன்நிலவு, நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ்காரன் மகள், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் எப்படியான வெற்றிகளை அவருக்குத் தந்ததோ... அதையெல்லாம் விட பன்மடங்கு வெற்றியை, வசூலை, பெயரை, புகழை, ரசிகர்களை அவருக்குக்கொடுத்த படத்தைத் தந்தார். அதுதான் காதலிக்க நேரமில்லை. நகைச்சுவைக்காகவே எடுக்கப்பட்ட முதல்படம் இதுதான் என்பார்கள். நகைச்சுவையும் காதலும் சேர்த்துச் செய்த கலவையாக வந்த படமும் இதுவே என்பார்கள். ஒரு நகைச்சுவை ப்ளஸ் காதல் படம் ஈஸ்ட்மென் கலரில் வெளியான முதல் படமும் இதுதான் என்பார்கள். இந்த நிமிடம் வரை, தமிழ் சினிமாவின் முதன்மையான நகைச்சுவைப் படம் என்று கொண்டாடிக்கொண்டிருப்பதும் இந்தப் படத்தைத்தான். எல்லோருக்கும் தெரிந்த முத்துராமன் இருக்கிறார். எல்லோருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக ரவிச்சந்திரனை அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர். எல்லோர் இதயங்களிலும் நெருங்கியிருக்கும் நாகேஷ் ... சொல்லவா வேண்டும். ஆனால் படத்தின் டைட்டிலில் முதல் பெயர் யாருடையது தெரியுமா? டி.எஸ்.பாலையா. நடிப்பில் மகா அசுரனான பாலையாவை, ஸ்ரீதர் அளவுக்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்ட இயக்குநர்கள் மிகவும் குறைவுதான் என்றுதான் சொல்லவேண்டும். கலர் படம். அப்படியொரு கலர் படம். டைட்டில் முடிந்ததும் வருகிற என்ன பார்வை... உந்தன் பார்வை... பாடலில், கேமிராவின் பார்வையே நம்மை பிரமிக்க வைக்கும். அந்தக் கால மெரீனாவும் டிரைவர் சீட்டுக்கு எதிரில் முத்துராமனின் முகமும் தெரியும்படியான காட்சி அமைத்தல் கனகச்சிதம். அப்படித்தான், உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா பாட்டிலும் கூட, காரின் சக்கரத்தில், காஞ்சனாவும் ராஜஸ்ரீயும் தெரிவார்கள். ஸ்ரீதரின் வலதுகரமாகவும் இந்தியாவின் மிக முக்கிய ஒளிப்பதிவு மேதையுமான ஏ.வின்செண்ட்டின் கண் ஜாலம், கை காலம் அவையெல்லாம்! பாலையா, காஞ்சனா, ராஜஸ்ரீ, நாகேஷ், ரவிச்சந்திரன், அவரின் தந்தை, முத்துராமன், அவரின் தந்தை (வி.எஸ்.ராகவன்), அவரின் தாயார், பாலையாவின் மேனேஜர், மேனேஜரின் மகள் சச்சு, ஆழியாறு, பொள்ளாச்சி, ஊட்டி... அவ்வளவுதான் கதாபாத்திரங்கள். அவர்களைக் கொண்டுதான் அதைக்கொண்டுதான் மொத்த ஆட்டமும் போட்டிருப்பார் ஸ்ரீதர். விஸ்வநாதன் வேலை வேண்டும் பாட்டு, அந்தக் கால ஸ்டைலின் ஆரம்பம். தங்கப்பன் மாஸ்டர்தான் டான்ஸ். அப்போது அவருக்கு உதவியாளர் சுந்தரம் மாஸ்டர். பிறகு பல வருடங்கள் கழித்து, தங்கப்பன் மாஸ்டருக்கு அஸிஸ்டெண்டாக சேர்ந்தவர் கமல் என்பது கொசுறுத் தகவல். பாடல் மொத்தமும் கண்ணதாசன். ஒரு பாட்டு தேன், இன்னொரு பாட்டு அல்வா, அடுத்த பாட்டு மைசூர்பா, இன்னொரு பாட்டு பாஸந்தி. எல்லாப் பாட்டுகளும் ஹிட்டு. விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் மெல்லிசை மன்னர்களானது இந்தப் படத்தில் இருந்துதான் என்று சொல்லுவார்கள். டைட்டிலிலும் அப்படித்தான் வரும். பிறகு படத்தின் சில்வர் ஜூப்ளிக்குப் பிறகு விழா எடுத்த போது, அவர்களுக்கு மெல்லிசை மன்னர்கள் பட்டத்தை வழங்கியதாகச் சொல்வார்கள். காஞ்சனாவுக்கு அறிமுகப்படம். அவரைக் காதலிக்கும் முத்துராமன், அவருடைய நண்பன் ரவிச்சந்திரன், பாலையாவின் மற்றொரு மகளான ராஜஸ்ரீயைக் காதலிக்க, நண்பனின் காதலுக்காக அப்பா வேஷம், பணக்கார வேஷம் போடுகிறார் முத்துராமன். பணக்காரர், எஸ்டேட் முதலாளி பாலையாவைத் தவிர, வேறு யாரும் இந்தக் கேரக்டரைச் செய்திருக்கவே முடியாது. காதலிக்க நேரமில்லை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்ததற்கு, பாலையாவின் நடிப்பும் பலம் சேர்த்தது. * இங்கிலீஷ் படம் மட்டும்தான் பாப்போம். *பணத்திமிர். இந்தப் பணக்கார வர்க்கத் திமிரை ஒடுக்கறதுக்காகவே ஒரு படம் எடுக்கிறேன். * பெட்ரோலுக்கு காசு வாங்கிட்டு, கம்பெனி கார்ல வரக்கூடாது. * கம்பெனி டிரஸ்ஸை எடுத்துட்டு வீட்டுக்குப் போகக் கூடாது. *யார் கேட்டாலும் படிச்சது அஞ்சாவதுன்னு சொல்லக்கூடாது. கான்வெண்ட்டுன்னு சொல்லணும், அப்பதான் கம்பெனிக்கு மரியாதை. * பணம் இருக்கட்டும் சார். கலைக்காக சேவை செய்ய ஆசைப்படுறேன். * அதை இப்ப சொல்லாதே. உன்னை வைச்சு படம் எடுத்து ஓட்டாண்டியாகி, அடுத்த படம் எடுக்க உங்கிட்ட வருவான் பாரு. அப்ப சொல்லு. * அசோகர்... உங்க மகருங்களா..? அடேங்கப்பா... இன்னும் சொல்ல ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. முத்துராமன் போனில் பேசிச் சிரிப்பார். போனை வைப்பார். பக்கத்தில் உள்ள பாலையாவும் சிரிப்பார். சம்பந்தி எதுக்குச் சிரிச்சீங்க என்பார். அவரு ஹாஸ்யமா ஏதோ சொன்னார் என்பார் முத்துராமன். ஹாஸ்யமாவா... என்று இன்னும் பலமாகச் சிரிப்பார் பாலையா. பலேய்யா! இயக்குநர் தாதா மிராஸி தெரியும்தானே. புதிய பறவையெல்லாம் இயக்கினாரே. அவர் கதை சொல்லும் ஸ்டைலை வைத்துதான், பாலையாவுக்கு நாகேஷ் கதை சொல்லும் சீன் எடுக்கப்பட்டது என்பார்கள். அந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் சிரிக்கலாம். ரசிக்கலாம். வியக்கலாம். இந்தப் படத்தில் நடிக்க அழைத்தபோது முடியாது என்று சொல்லிவிட்டாராம் சச்சு. கதாநாயகியாக நடிப்பதுதான் லட்சியம். நகைச்சுவை நடிகையாக வேண்டாமே என்றாராம். ஆனால் ஸ்ரீதர், கதை குறித்தும் கேரக்டர் குறித்தும் விவரமாகச் சொல்லவே ஒத்துக்கொண்டார். ‘நான் நடிக்க ஒத்துக்கிட்டதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. இதுதான் நான் நடிச்ச முதல் கலர்படம்’ என்று சொல்லிப் பூரிக்கிறார் சச்சு. ஸ்ரீதரும் கோபுவும் இணைந்து கதை வசனம் பண்ணியிருப்பார்கள். காமெடி படத்துல லாஜிக்கெல்லாம் பாக்கக்கூடாது என்று இன்றைக்கு சப்பைக்கட்டு கட்டுகிறோம். ஆனால், ஓர் காமெடிக்கதைதான் என்றபோதிலும் லாஜிக்கை எந்த இடத்திலும் மீறியிருக்க மாட்டார் ஸ்ரீதர். ஸ்ரீதர் வந்த பிறகுதான் டைரக்டர்கள் பக்கம் ரசிகர்களின் கவனம் போயிற்று. ஸ்ரீதர் வந்த பிறகுதான், முக்கோணக் காதல் கதை என்பது உருவாயிற்று. ஸ்ரீதர் வந்த பிறகுதான், பேச்சு வழக்கு ஸ்டைலில், தமிழ் சினிமாவின் வசனங்கள் வரத்தொடங்கின. அதில் முழு முதல் கலர் காமெடி, காதல் காதலிக்க நேரமில்லைக்கு வெகு நிச்சயமாக தனித்த இடம் உண்டு. பல முறை பார்த்திருக்கிறேன். பதினெட்டு வருடங்களுக்கு முன்பு புத்தம் புதிய காப்பி என்று வெளியிட்ட போது, முதல் நாள் இரவுக்காட்சி, அடுத்த நாள் இரவுக்காட்சி, மூன்றாம் நாள் இரவுக்காட்சி என்று பார்த்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. டிவியில் ஒளிபரப்பும் போதெல்லாம் வேறு எந்தவேலையோ போன் பேசுவதோ இல்லாமல், ரசித்துச் சிரித்து, பார்க்கிறவர்கள் எத்தனையோ பேர் உண்டு. கதை, கதையை விரிவாக்குகிற திரைக்கதை, அந்தத் திரைக்கதைக்கு வலு சேர்க்கிற வசனங்கள், பாடல்கள், பாலையாவும் நாகேஷூம் உடல்மொழியாலும் வசன உச்சரிப்புகளாலும் தனிக்கவனம் ஈர்த்த அசகாயத்தனம், முத்துராமனின் யதார்த்த நடிப்பு, காஞ்சனா, ராஜஸ்ரீயின் அழகு ப்ளஸ் நடிப்பு, அந்த சச்சுவின் அப்பாவின் அப்பாவித்தனம் (நாளைக்கே கல்யாணமா? எனக்குப் பட்டுச்சட்டை வாங்கணும், வேட்டி வாங்கணும்), ரவிச்சந்திரனின் இளமைத்துள்ளல், சச்சுவின் அழகு, கேமிரா, இசை, இயக்கம் என்று இன்னும் எத்தனை நூற்றாண்டுளானாலும் காதலிக்க நேரமில்லையை... நெஞ்சம் மறக்கவே மறக்காது! ஆமாம்... காதலிக்க நேரமில்லை படத்தை நீங்கள் எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள், ஞாபகம் இருக்கிறதா? காமதேனு ('நான் ஒரு ஐம்பது தடவைக்கு மேல் பார்த்திருப்பேன்..! இப்படத்தின் வசனங்கள் அனைத்தும் அத்துபடி' - ராசவன்னியன்)
-
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா..
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா.. தா.. தற்செயலாக யூடுபில் பழைய பாடல்களை தேடியபோது இந்த அருமையான பாடல் கிடைத்தது. இதில் என்ன சிறப்பு என்றால் பாடலை ரசித்து சிரிக்கும் செயலலிதா அம்மணி தான்.. ஆயிரம் விமர்சனங்கள் அவர் மீது இருந்தாலும், இப்பொழுது இருப்பது மாதிரி தமிழகத்தை வடக்கை அண்டி இருக்க விட்டிருக்க மாட்டார் என்பது மட்டும் திண்ணம்.. அவர் இல்லாதது மனதில் லேசான நெருடலே..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- ஆரவாரமில்லாத ஆழிப்பேரலை நடிப்பு..!
- ஆரவாரமில்லாத ஆழிப்பேரலை நடிப்பு..!
"படிக்காத மேதை" படத்தில் ரங்காராவின் நடிப்பும், சிவாஜியின் நடிப்பும் ஒருவருக்கொருவர் மிஞ்சி நிற்கும்.. குறிப்பாக இருவரும் பாசத்துடன் மோதிக்கொள்ளும் காட்சிகள் மிக அபாரம்.. இன்றுவரை பலமுறை பார்த்து ரசித்த காட்சிகள் இவை. நேரமிருந்தால் இப்படத்தை பாருங்கள், கண் கலங்குவீர்கள்.. அற்புதமான படைப்பு..- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்படியும் நடந்திருக்க வாய்ப்பிருக்கு..! 🤣- அன்பான லொல்லு..
இருவரின் செய்கைகளிலும் ஒரு அந்நோன்யத்தைப் பார்த்தவுடன், என் முகத்தில் புன்முறுவல் பூத்தது..!- ஆரவாரமில்லாத ஆழிப்பேரலை நடிப்பு..!
ஒவ்வொருவருக்கும் திரைப்பட நடிகர்களின் நடிப்பு ஒருவிதத்தில் வசீகரிக்கும், எனக்கு பிடித்த நடிகர் எஸ்.வி.ரங்காராவ் தான்..! தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவராயினும், தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் இவரின் ஆளுமை தனித்தன்மையானது. இன்றுவரை இவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாரும் நிரப்பவில்லை. ஆரவாரமில்லாத ஆழிப்பேரலை நடிப்பு! - எஸ்.வி.ரங்காராவ் அது ஒரு நிலாக்காலம்..! அப்போதெல்லாம் சினிமா மட்டுமே மக்களுக்கான ஒரே பொழுதுபோக்கு. திரை நட்சத்திரங்கள் எளிதில் மனத்துக்கு நெருக்கமானவர்களாக மாறிவிடுவார்கள். டெண்ட் கொட்டாயில் சினிமா பார்த்த அனுபவங்களை வீட்டுப் பெரியவர்கள் பகிர்ந்து கொள்ள, சுற்றி அமர்ந்திருக்கும் சிறுவர்கள் வாய் பிளந்தபடி ஒரு கற்பனை உலகை உருவாக்கிக் கொள்வார்கள். தியாகராஜ பாகவதர் முதல் விஜய் சேதுபதி வரை தமிழ் திரையுலகம் பல அற்புத கலைஞர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் ஒரு சகாப்தம். அவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து தமிழ்த் திரையுலகம் உள்ளவரை அவர்களுடைய கீர்த்தி நிலைத்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு அபூர்வ நடிகர்களைப் பற்றிய தொகுப்புதான் இது. கண்ணியமான தோற்றம். பாசமான தந்தை. அலட்டல் இல்லாத நடிப்பு. கணீர் குரல், அஜானுபாகுவான உருவச் சிறப்பு இவையெல்லாம் ஒருங்கே பெற்ற நடிகர் ஒருவர் உண்டென்றால் அவர் எஸ்.வி.ரங்காராவாகத்தான் இருக்க முடியும். எஸ்.வி.ஆர் என திரைத்துறையினரால் அன்புடன் அழைக்கப்பட்ட ரங்காராவ் பன்முகத் திறமை வாய்ந்தவர். 1918-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி ராஜமுந்திரியில் உள்ள தெளலேஸ்வரம் என்ற ஊரில் பிறந்தார் சமார்ல வெங்கட ரங்கா ராவ். பிரஸிடென்ஸி கல்லூரியில் பட்டப் படிப்பை (பி.எஸ்.ஸி) முடித்த இவர் டாடா நிறுவனத்தில் பணியில் அமர்ந்தார். ஆனால் அவருடைய கலைத்தாகம் அவரை திரைத்துறைக்கு அழைத்து வந்தது. மெதட் ஆக்டிங் என்ற வகையில் அவரது நடிப்பு ஆரம்பத்தில் இருந்தாலும், பிறகு தன் நடிப்புப் பாங்கை மாற்றிக் கொண்டு, அதற்கேற்ற உடல்மொழியுடன் மெருகேற்றிக் கொண்டார். எந்த படத்தில் நடித்தாலும், அந்தக் கதாபாத்திரமாகவே உருமாறும் திறன் கொண்ட அற்புத நடிகர் அவர். உதாரணமாகச் சொல்ல ஒன்றா இரண்டா? அவருடைய எல்லா படங்களையும்தான் குறிப்பிட வேண்டும். என்றாலும் அனைவரையும் கவரிந்த ஒரு சில படங்களில் காட்சிகளைப் பார்க்கலாம். எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஏவிஎம் ராஜன், எம்.ஆர்.ராதா விஜயகுமாரி மற்றும் எஸ்.வி.ரங்காராவ் நடிப்பில் வெளியான படம் 'நானும் ஒரு பெண்' ஏவிவிஎம் தயாரிப்பில் (முருகன் பிரதர்ஸ்) உருவான இப்படத்தை இயக்கியவர் ஏ.சி.திரிலோகசந்தர். 1963-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் தூணாக விளங்கியவர் எஸ்.வி.ரங்காராவ். ஜமீன்தாரராக அவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மருமகள் அழகியாகவும் அறிவானவளாகவும் வர வேண்டும் என்று நினைத்திருந்தவருக்கு கறுப்பான மருமகள் கல்யாணி (விஜயகுமாரி) வந்ததும், அவளை வெறுத்தார். கணவரின் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) அன்பும் இல்லாமல் மாமனாரின் வெறுப்பிலும் துவண்டுவிடாமல் அன்பினால் அவர்கள் இதயத்தை வெல்கிறாள். ஆனால் ஒரு கட்டத்தில் பெரியவர் அவள் மீது சந்தேகப்படும் விதமாக சூழல்கள் ஏற்பட, அவளை வீட்டை விட்டு வெளியேற்றுகிறாள். இறுதியில் இதற்கெல்லாம் காரணம் மைத்துனர் சபாபதி (எம்.ஆர்.ராதான்) என்ற உண்மையை கல்யாணி மூலமாக அறிகிறார். மருமகளின் திறமையாலும் அறிவாலும்தான் சொத்துக்கள் காப்பாற்றப்பட்டது என்பதை அறிந்து மன்னிப்பு கேட்பார். அப்போது கல்யாணி ''நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை மாமா, உங்களை விட்டுச் சென்ற நாங்கள் தான் தவறு செய்து விட்டோம்' என்று உருக்கமாகக் கூற அதற்கு அவர், ‘உன் பெருந்தன்மை என்ற ரம்பத்தால் என் இருதயத்தை அறுக்காதே கல்யாணி...நான் பாவி’ என்று வருத்தத்துடன் கூறி குற்றவுணர்வு மிக கட்டிலில் அமர்ந்து கண்ணீர் விடுவார். எத்தகைய இதயமானாலும் அந்தக் காட்சியில் உடைந்து போகும் அளவிற்கு இருக்கும் அவரது நடிப்பு. பிழியப் பிழிய அழ வைக்கும் காட்சியாக இருந்தாலும் சரி, பணச் செருக்குடன் மிதப்பாக நடக்கும் காட்சியாக இருந்தாலும் சரி அவரை மிஞ்ச அப்போது மட்டுமல்ல இப்போதும் ஆளில்லை. ரங்காராவுக்கு நிகர் ரங்காராவ் மட்டுமே. இன்னொரு மெய் சிலிர்க்கும் காட்சி மாயாபஜார் திரைப்படத்தில் கடோத்கஜனாக அவர் அறிமுகம் ஆகும் காட்சி. கதாயுதத்துடன் கம்பீரமாக அவர் தோன்றி கல்யாண சாப்பாடு மொத்தத்தையும் கபளீகரம் செய்யும் காட்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரித்து மகிழும்படி இருக்கும். அண்டா குண்டாவில் இருக்கும் அத்தனை பண்டங்களையும் சாப்பிட்டுவிட்டு ஸ்டைலாக தண்ணீர் குடத்தின் மூடியைத் தட்டிவிட்டு அப்படியே அதை அலாக்காக தூக்கி நீர் பருகும் காட்சி இப்போது நினைத்தாலும் சிரிக்க வைத்துவிடும். கல்யாண சமையல் சாதம் என்ற பாடல் காலத்தால் அழிக்க முடியாத புகழைப் பெற்றது ரங்காராவ் மற்றும் நடிகையர் திலகம் சாவித்ரியால் என்றால் மிகையில்லை. அந்தப் பாடல் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. மேலும் அது நம் நினைவலைகளை மீட்டி குழந்தைப் பருவத்திற்கு நம்மை அறியாமல் அழைத்துச் செல்லும். தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் மாறி மாறி நடித்த ரங்கா ராவுக்கு, தெலுங்கு திரை ரசிகர்கள் விஸ்வநட சக்ரவர்த்தி (உலகின் தலைசிறந்த நடிகர்) என்றொரு பட்டத்தை சூட்டி மகிழ்ந்தனர். இளம் வயதில் நாடக மேடையில் ஆங்கில நாடங்களில் நடித்த பெருமையும் உடையவர் அவர். குறிப்பாக ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர். அதன் பின் 1952-ம் ஆண்டு வெளியான பெல்லி செஸ்ஸி சூடு என்ற தெலுங்குப் படத்தில் ஜமீன்தாராக நடித்தார். அதற்கு முன் சிறு சிறு கதாபாத்திரங்களில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பெல்லி செஸ்ஸி சூடு என்ற திரைப்படத்தின் மூலம்தான் அவர் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார். அத்திரைப்படம் தமிழில் கல்யாணம் பண்ணிப் பார் என்ற பெயரில் வெளியானது. அதில் நடிகை சாவித்திரியின் தந்தையாக 60 வயது தோற்றத்தில் திரையில் தோன்றினார். ஆனால் அவருக்கு அப்போது 34 வயதுதான். தன் மீதான நம்பிக்கை அபரிதமாக இருந்த ரங்காராவுக்கு அதைப் பற்றி சிறிதும் கவலை இல்லை. தான் நடிக்க முன் வந்த கதாபாத்திரத்துக்கு அச்சு அசலாக உயிரூட்டினார் ரங்காராவ். அன்று முதல் பல படங்களில் அப்பா கதாபாத்திரம் என்றால் எஸ்.வி.ஆ ரை கூப்பிடுங்கள் என்று கூறுமளவிற்கு நித்ய புகழ் பெற்று விளங்கினார். ரங்காராவ் ஒரே காட்சியில் நடிந்திருந்தாலும் கூட திரை முழுவதும் அவரே நடிப்பில் நிறைந்திருப்பார். 30 ஆண்டு திரை வாழ்க்கையில் மொத்தம் 163 படங்களில் நடித்துள்ளார் ரங்காராவ். (தமிழ் படங்கள் 53 தெலுங்குப் படங்கள் 109) நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என திரைதுறையில் ஜொலித்தவர். மிஸ்ஸியம்மா, எங்க வீட்டுப்பிள்ளை, படிக்காத மேதை, மாயா பஜார், பக்த பிரகலாதா, அன்பு சகோதரர்கள், சர்வர் சுந்திரம், நம் நாடு, சபாஷ் மீனா எனப் பல தமிழ் படங்களில் நடித்த ரங்கா ராவ், அன்னை, சாரதா, நானும் ஒரு பெண், கற்பகம், நர்த்தன சாலா ஆகிய படங்களுக்கு குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றார். 1968-ம் ஆண்டு பந்தவ்யலு, 1967-ம் ஆண்டு சடாரங்கம் என இரண்டு தெலுங்குப் படங்களை இயக்கியுள்ளார் ரங்காராவ். இரண்டு படங்களுக்கும் நந்தி விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நர்த்தனசாலா படத்தில் கீசகன் பாத்திரத்துக்காக ஆப்பிரிக்க ஆசிய சர்வதேசப் பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். அவரது உருவம் பதித்த அஞ்சல் தலையை 2013-ம் ஆண்டு வெளியிட்டு சிறப்பு செய்தது அரசு. விஜயவாடாவில் ரங்காராவுக்கு மார்பளவு சிலையை திறந்து வைத்தார் நடிகர் சிரஞ்சிவி. 1974 பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தில் அவருக்கு இதய வலி ஏற்பட்டு ஓஸ்மானியா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ராவ். ஆனால் மீண்டும் மாரடைப்பு ஏற்படவே, ஜூலை 1974 மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு முன்பே இயற்கை எய்தினார். அவரது உடல் மறைந்தாலும், திரையில் மட்டுமல்ல இன்றளவும் பல ரசிகர்களின் நினைவில் வாழ்கிறார் எஸ்.வி.ரங்காராவ். காலம் சில கலைஞர்களுக்கு பொற்கம்பளத்தை விரித்து வைத்து அதில் அழகிய நட்சத்திரமாக ஒரு சிலரை போற்றிப் பாதுகாத்து வைத்துவிடும். அதிலொரு துருவ நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரங்காராவ். தினமணி- அன்பான லொல்லு..
இந்த மாதிரி யாராவது 'செல்ல அடி' வாங்கியிருக்கிறீர்களா?- அன்பான லொல்லு..
- செல்வி செயலலிதா மறைந்தபொழுது..
இந்த காணொளியை மட்டும் 2.5 கோடி பேர் பார்த்துள்ளர்கள்..- செல்வி செயலலிதா மறைந்தபொழுது..
"Thao Nguyen Xanh - Sad Romance" என் தட்டச்சு செய்து யூடூபில் தேடினால் இந்த ஒரு குறிப்பிட்ட வயலின் இசையை உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு இந்த இசை, தங்கள் மனதையும், ஆன்மாவிலும் ஊடுருவி பிழிவதாக குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விழுந்த அடி அப்படி..! ஆனால் வெளியே சொல்வது 'நான் சிங்கன்', ரெண்டு போத்திலை உள்ளே தள்ளினால் எல்லாம் அடங்கிப்போகுமென்று இங்கே உதார் விடவேண்டியது..! எல்லாம் அந்த 'பரிமளத்திற்கே' வெளிச்சம்..!- செல்வி செயலலிதா மறைந்தபொழுது..
இசையின் ஒரு வடிவம் செல்வி செயலலிதா அம்மையார் மறைந்தபொழுது, செயா தொலைக்காட்சி, அவரின் காணொளிகளை நேரலையாக ஒளிபரப்பியபோது, அதன் பின்னணியில் ஒரு வயலின் இசை மட்டும் மெல்லிதாக ஒலித்துக்கொண்டே இருந்தது மனதை மிகவும் பாதித்தது. இசையின் மூலம் மனதை வருடி, சோகத்தையும் உணர்த்தலாம் என்பதை இவ்விசையை உணர்ந்தால் புரியும்.. யுடுயூபில் தேடியதில், அந்த இசையொலி கிடைத்தது.. உணர்ந்து ரசிப்பீர்களென்ற நம்பிக்கையுள்ளது..! முழு வடிவம்..- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வழி இருக்கிறதே..! 😎 நான் ஆன்ட்ராய்ட் 9.0 இயங்குதளம் கொண்ட போனை பாவிப்பதால் அந்த அனுபவைத்தில் சொல்கிறேன். (ஆப்பிள் போனிலும் இதே முறைதான் இருக்க வாய்ப்புண்டு..!) இணைக்க வேண்டிய படத்தை தெரிவு செய்து, அந்த படத்தின் மேலேயே சிறிது நொடிகள் விரலால் தொடர்ந்து தொட்டுக்கொண்டே இருந்தீர்களென்றால் ஒரு சிறிய பெட்டி திறக்கும். அதிலுள்ள தெரிவுகளில் "Copy image location" ஐ தெரிவு செய்துவிட்டு, உடனே யாழின் பதிவுப் பெட்டியில் அதே போன்று விரலால் சிறிது நொடிகள் தொடர்ந்து தொட்டுக்கொண்டே இருந்தால் மறுபடியும் ஒரு சிறிய தெரிவு பெட்டி திறக்கும், அதில் "Paste" என்ற தெரிவை அழுத்தினால், குறிப்பிட்ட படத்தின் இணைப்பு யாழ்க் களத்தில் தோன்றிவிடும். இனி பக்கத்தில் ஒரு உண்டியல் வைத்துவிட வேண்டியதுதான்..! 🤣- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்படி அல்லவே திரு.பெருமள்..! யாழ்க் கள மென்பொருள் (Invision Board Community Software) உள்ளார்ந்த பல அம்சங்களை உள்ளடக்கியது. அதில் நீங்கள் இதற்கென HTML Tag தனியாக கொடுக்கத் தேவை இல்லை. நீங்கள் நேரடியாக எந்து வெளி இணைப்புகளை கொடுக்க இயலும். அதாவது எம்பெடிங்(Embedding) செய்வது போன்று. சுருக்கமாக சொல்லப்போனல், எப்படி பிற இடங்களில் பார்க்கிறீர்களோ, அவற்றை அப்படியே இங்கே பிரதிபலிக்கும் வல்லமை ( What You See Is What You Get ) இந்த யாழ் மென்பொருளுக்கு உண்டு..! அப்படி அல்லவே திரு.பெருமள்..! யாழ்க் கள மென்பொருள் (Invision Board Community Software) உள்ளார்ந்த பல அம்சங்களை உள்ளடக்கியது. அதில் நீங்கள் இதற்கென HTML Tag தனியாக கொடுக்கத் தேவை இல்லை. நீங்கள் நேரடியாக எந்து வெளி இணைப்புகளை கொடுக்க இயலும். அதாவது எம்பெடிங்(Embedding) செய்வது போன்று. சுருக்கமாக சொல்லப்போனல், எப்படி பிற இடங்களில் பார்க்கிறீர்களோ, அவற்றை அப்படியே இங்கே பிரதிபலிக்கும் வல்லமை ( What You See Is What You Get ) இந்த யாழ் மென்பொருளுக்கு உண்டு..!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திரு.நாதமுனி, லேப்டாப்பிலிருந்து ஒலியை பதிவு செய்யலாம். உதாரணமாக நீங்கள் சாட்(Chat) செய்யும் போது இந்த மென்பொருளை பாவனையில்(Running in the background) இருக்க வேண்டும். மென்பொருள் மெனுவில் ரெக்கார்ட்(Record) என்ற பொத்தாஇ அழுத்தி ஸ்டார்ட்(Start) செய்தால் ஒலிகளை பதிவு செய்ய ஆரம்பிக்கும். இந்து இலவச மென்பொருள் என்பதால் ஒலிக்கோப்புகளை சேமிக்க உச்சபட்ச அளவு உள்ளது. தொடர்ந்து பேசி பெரிய ஒலிக்கோப்புகளாக(Large Audio files) சேமிக்க இயலாது.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒளிப்படங்களை யாழில் நேரடியாக தரவேற்றம் செய்ய இயலாது.. பல நிமிடங்கள் ஓடும் ஒளிப்படங்களென்றால் யூடுயூப் (Youtube) தான் சிறந்தது. அதற்கு யூடுயூப் அல்லது ஜி மெயிலில் (Gmail) சொந்தமாக க|ணக்கு வைத்திருக்க வேண்டும்.(இலவசம் தான்) காணொளிகளை தரவேற்றம் செய்துவிட்டு சில நிமிடங்களில் அதன் இணைய இணைப்பு கிட்டும். அந்த லிங்க் முகவரியை யாழில் இணைத்தால் ஒளிப்படம் தெரியும். நான் காணொளிகளுக்கு யூடுயூபும் (Youtube), சிறுசிறு ஒலி வடிவங்களுக்கு சவுண்ட் கிளவுட் (Sound Cloud) இணையத்தையும் பாவிக்கின்றேன். காணொளி, மற்றும் ஒளி வடிவங்களை உருவாக்க, திருந்த, உல்டா செய்ய கோரல் 'வீடியோ ஸ்டுடியோ' (Corel Video Studio Ultimate)அல்லது சோனியின் 'வேகாஸ் புரோ' (Sony Vegas Pro) ஆகிய மென்பொருட்களை பயன்படுத்துவேன். https://www.videostudiopro.com/en/products/videostudio/ultimate/ https://www.vegascreativesoftware.com/us/vegas-pro/ மேலே இணைத்துள்ள மென்பொருட்களை விலைக்கு வாங்க வேண்டும், கொஞ்சம் மினக்கெட்டால் இவற்றில் பயிற்சி எடுத்து வல்லுநர் ஆகலாம். எளிது தான், கொஞ்சம் கிரியேட்டிவாக யோசிக்க வேண்டும். ** ஆடியோ ஒலிகளை(Audio clips) இணைக்க வெட்ட திருத்தம் செய்ய கீழேயுள்ள இலவச மென்பொருளை பயன்படுத்தலாம். https://www.wavosaur.com/ ** என்னுடைய தொகுப்புகளை இங்கே காணலாம்..! https://www.youtube.com/user/GRajavannian https://soundcloud.com/rasavannian நீங்கள் கேட்டது காணொளியை இணைப்பது மட்டுமே நோக்கமென்றால் வழி இதோ..! யூடுயூப் இணையதளத்தில் குறிப்பிட்ட காணொளிக்கு கீழே ஷேர் (SHARE) என ஒரு பொத்தான் இருக்கும். அதைனை சுட்டினால் ஒரு சிறிய பெட்டிக்குள் அந்த காணொளியின் இணைப்பு (Link code) கிட்டும். அதனை காப்பி(Copy) செய்து யாழின் பெட்டியில் நேரடியாக பேஸ்ட்(Paste) செய்தால் காணொளி இணைந்துவிடும்.. நன்றி! (நான்தான் தேவை இல்லாமல் உளறிவிட்டேனா..?)- நேசமணியின் இந்தி வகுப்பு..! "இதர் ஆவோ.."..
இதர் ஆவோ...! தமிழ் நாட்டில் அந்நியநாட்டு மொழியாம் 'இந்தி'யை திணிக்க முயலுகையில், நம் பார்போற்றிய கான்ராக்டர் "நேசமணி", இந்தி சொல்லித்தரும் பாங்கை இங்கே பார்க்கலாம்..!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.