Everything posted by ராசவன்னியன்
-
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்..
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தால், தென் மாவட்ட மக்களுக்கு இனிப்பான செய்தி குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுவதன் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளால் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் விண்வெளி ஆய்விலும், ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்துவதிலும் அமெரிக்கா, ரஷியாவுக்கு சவால் விடும் வகையில் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. உலக அளவில் மிக மிக குறைந்த செலவில் விண்ணுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவதில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. இதனால்தான் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து உள்பட வளர்ந்து விட்ட அனைத்து நாடுகளும் தங்களது செயற்கைகோள்களை மிக சுலபமாக விண்ணுக்கு அனுப்ப இந்தியாவின் உதவியை நாடி வருகின்றன. இஸ்ரோவின் இந்த வளர்ச்சி நமது எதிரி நாடான சீனாவின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு போட்டியாக சீனா சில புதுமையான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இஸ்ரோவுக்கு போட்டியாக புதிய ஏவுதளங்களை உருவாக்கி வருகிறது. இதையடுத்து இந்தியாவும் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆந்திராவில் சென்னைக்கு அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்துதான் ராக்கெட்டுகளை விண்ணுக்கு செலுத்தி வருகிறார்கள். அங்கு இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. எதிர்காலத்தில் மேலும் 2 ராக்கெட் ஏவுதளங்கள் தேவை என்ற நிலையில் நாடு முழுவதும் பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சில மாநிலங்கள் அந்த வாய்ப்பை தட்டி பறிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கின. ஆனால் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாட்டின் தென் பகுதியில் ராக்கெட் ஏவு தளம் அமைந்தால் அது எதிர்கால தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்ற கருத்து அதிகரித்தது. தென் தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்ட கடலோர பகுதிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இறுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு மிக அருகில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கலாம் என்று முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தனர். உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள் அமைப்பு, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் ராக்கெட் ஏவுதளங்கள் வெவ்வேறு 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப அடிப்படையில் 2 இடங்களில் ராக்கெட் ஏவு தளம் இருப்பதுதான் சிறப்பானது, பாதுகாப்பானது என்ற அடிப்படையில் வளர்ந்த நாடுகள் அதை செய்துள்ளன. எனவே குலசேகரப்பட்டினத்தில் 3-வது, 4-வது ராக்கெட் ஏவு தளத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த வார இறுதியில் பாராளுமன்றத்தில் மத்திய அணுசக்தி துறை மந்திரி ஜிதேந்திரசிங் இதை உறுதிப்படுத்தினார். குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார். குலசேகரப்பட்டினம் இயற்கையாகவே விண்ணுக்கு ராக்கெட்டை அனுப்பும் சூழலில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒவ்வொரு தடவையும் ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தும்போது தெற்கு நோக்கி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட்டை ஏவும் போது அப்படி ஏவு முடிவது இல்லை. அதற்கு காரணம் இலங்கை குறுக்கிடுவது தான். சர்வதேச அளவில் ஒரு நாடு தனது விண்கலத்தை விண்ணுக்கும் செலுத்தும் போது மற்ற நாட்டின் மீது பறக்க விடக்கூடாது என்று விதி உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படும்போது அதன் நிலைகள் இலங்கை மீது விழுந்து விடாதபடி கவனமாக செலுத்த வேண்டியது உள்ளது. இலங்கை மீது பறப்பதற்கு முன்பாகவே ராக்கெட்டின் முதலாம், இரண்டாம் நிலைகள் எரிந்து கடலில் விழும் வகையில் செலுத்தப்பட வேண்டியது உள்ளது. அதுமட்டுமின்றி ராக்கெட்டை அதிகப்படியாக திசை திருப்பி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பறக்க விடப்படும் ராக்கெட்டுகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியது இருப்பதோடு செலவும் அதிகமாகிறது. குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தினால் மிக சீக்கிரத்தில் அது தெற்கு திசை சென்று விடும். அதை திசை திருப்ப வேண்டிய வேலையும் இல்லை. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளி பாதை 13 டிகிரி கோணத்தில் உள்ளது. ஆனால் குலசேகரப்பட்டினத்தில் இருந்து தெற்கு நோக்கிய விண்வெளி பாதை 8 டிகிரி கோணத்தில் அமைந்து இருக்கிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 13 டிகிரிக்கு ராக்கெட் செலுத்தப்படும்போது அது இலங்கையை சுற்றி 4 கட்டங்களாக பிரிந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டால் 3 கட்டங்களில் ராக்கெட்டை செலுத்தி விடலாம். இதனால் செலவும் மிக மிக குறைவு. அதாவது ஒவ்வொரு தடவையும் ராக்கெட்டை செலுத்தும்போதும் 120 கோடி ரூபாய் மிச்சமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான எரிபொருளும் மிக மிக குறைவாகவே தேவைப்படும். மேலும் மகேந்திரகிரியில் உள்ள திரவ எரிபொருள் மையம் குலசேகரப்பட்டினத்திற்கு மிக மிக அருகில் உள்ளது. எனவே ராக்கெட்டுக்கு தேவையான திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களை மகேந்திரகிரியில் இருந்து உடனடியாக கொண்டு வந்து விட முடியும். இவை மட்டுமின்றி ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினம் பூமத்திய ரேகைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. தட்பவெட்ப சூழ்நிலையும் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்தில் அதிக சாதகமாக உள்ளது. இதனால்தான் ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இது தவிர ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்தில் அதிக எடையுள்ள விண்கலத்தை விண்ணுக்கு செலுத்த முடியும். மங்கள்யான் விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 1,350 கிலோ எடையுடன் ஏவப்பட்டது. அது குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்பட்டு இருந்தால் 1,800 கிலோ எடை வரை சுமந்து சென்று இருக்கும். எனவே எதிர்காலத்தில் அதிக எடையுள்ள செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்துவதற்கு குலசேகரப்பட்டினம்தான் மிக மிக ஏற்றது என்ற முடிவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளும், மத்திய அரசும் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது முதல் கட்டமாக ராக்கெட் ஏவுதளத்துக்கு தேவயான 2,300 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. குலசேகரப்பட்டினத்தில் 3 கிராமங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள மாதவன் குறிச்சி, படுக்கப்பத்து, பள்ளக்குறிச்சி ஆகிய 3 ஊர்களில் குறிப்பிட்ட பகுதிகள் ராக்கெட் ஏவுதளத்துக்கு தேவைப்படுவதாக கருதப்படுகிறது. இந்த ஊர்களில் நிலம் கையக்கப்படுத்துவதற்காக தற்காலிகமாக திருச்செந்தூரில் அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. 8 பிரிவுகளை கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த அலுவலகத்தில் பொறுப்பு ஏற்று செயல்பட தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் 13 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவும் தாசில்தார் தலைமையில் இயங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் செயல்படுவதை கண்காணிக்க டி.ஆர்.ஓ. பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்களது முதல் கட்ட பணிகளை தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி அடிக்கடி பார்வையிட்டு வருகிறார். கலெக்டர் சந்தீப் நந்தூரி இது தொடர்பாக கூறுகையில், “ராக்கெட் ஏவு தளத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தனியார் நிலங்கள் கையகப்படுத்தும்போது அதற்குரிய இழப்பீடுகள் சட்டப்படி வழங்கப்படும். ராக்கெட் ஏவு தளத்துக்கான 2,300 ஏக்கரில் 80 சதவீதம் இடம் பட்டா நிலங்களாக உள்ளது. 20 சதவீதம் நிலம் அரசின் புறம்போக்கு நிலங்கள் ஆகும். மாதவன்குறிச்சி அருகில் உள்ள கூடல்நகர் என்ற கிராமத்தில் 27 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும். அவர்களுக்கு தேவையான அளவுக்கு இழப்பீடு கொடுக்கப்படும். அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். ராக்கெட் ஏவுதளத்துக்காக கையகப்படுத்தும் 2,300 ஏக்கரில் 1,781 ஏக்கர் இடம் மாதவன்குறிச்சி கிராம சுற்று வட்டாரத்தை கொண்டு இருக்கும். அங்கு 131 ஏக்கர் இடம் அரசின் புறம்போக்கு நிலங்களாக உள்ளது. படுக்கபத்து மற்றும் பள்ளக்குறிச்சியில் 491 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். திருச்செந்தூர், கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் 22 ஏக்கர் நிலம் ராக்கெட் ஏவு தளம் பகுதிக்காக கையகப்படுத்தப்படும். குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள அமரபுரம், அழகப்பப்புரம் ஆகிய கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த பணியில் கிராம நிர்வாக அலுவலர்களும் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் புராதான சின்னங்கள், கோவில்கள், மரங்களை கணக்கெடுத்து வருகிறார்கள். இன்னும் சில மாதங்களில் இந்த பணிகள் அனைத்தும் முடிவு பெற்று விடும். அதன் பிறகு ராக்கெட் தளம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும். 2 ஆண்டுகளில் ராக்கெட் தளத்தை அமைத்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சில ஆயிரம் கோடி ரூபாய்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து விண்ணுக்கு ராக்கெட்டை ஏவி விடவேண்டும் என்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகளும் தீவிரமாக உள்ளனர். குலசேகரப்பட்டினத்தை விரைவாக தயார் படுத்தினால்தான் சீனாவுக்கு பதிலடி கொடுத்து சர்வதேச அளவில் விண்வெளி வர்த்தகத்தில் வெற்றி பெற முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்த திட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இது தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு தென் மாவட்ட மக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த திட்டம் பற்றி பேசப்பட்டபோது தென் மாவட்ட மக்களிடம் எதிர்பார்ப்பு உருவானது. 2013-ம் ஆண்டு முதல் இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் கனிமொழி எம்.பி. தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதோடு தென் மாவட்ட மக்கள் சார்பிலும் மனுக்கள் வழங்கப்பட்டன. அவை அனைத்துக்கும் வெற்றி கிடைக்கும் வகையில் தற்போது குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளத்துக்கான தொடக்க பணிகள் நடந்து வருகின்றன. இது தென் மாவட்ட மக்களுக்கு இனிப்பான செய்தியாக மாறி உள்ளது. ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி கடலோர பகுதிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருகின்றன. தூத்துக்குடி துறைமுகம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. அவற்றுக்கு இடையே குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளமும் சேர்ந்து கொள்ளும்போது தென் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி பிடிக்கும். இது தென் தமிழக மக்களின் வாழ்வையே நிச்சயமாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. மாலை மலர்
-
பனிவிழும் மலர்முகம் - லண்டன்..!
இருபது வருடங்களாக கடும் (சில சமயம் 50பாகை) வெப்பத்ததையே பார்த்து பழகிய எனக்கு, கடந்த இரு வருடத்தில் இரண்டு முறை இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு கிட்டியது. வடக்கு அயர்லாந்தில் 4 பாகை குளிரைக் கண்டு அரண்டு போய் அறைக்குள்ளேயே ஒடுங்கியிருந்தேன். கடந்த மாதம் லண்டன் சென்று முக்கிய இடங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது. நான் பார்த்து ரசித்த பிரசித்திபெற்ற இடங்கள் கீழேயுள்ள காணொளியில் உறைபனியில் போர்த்தியிருப்பதை காணும்போது இன்னும் கால்கள் சில்லிடுகின்றன. வெப்பத்தையாவது தாங்கிக்கொள்ளலாம், ஆனால் இந்தக் குளிரையும், பனிக்கட்டிகளையும் காணும்போது 'எப்படி இவற்றை தாங்கி வாழ்கிறார்கள்..?' என வியப்பு மேலிடுகிறது.
-
தொடுவதென்ன.. தென்றலோ, மலர்களோ..?
கிராமத்தின் பள்ளிப் பருவத்தில், இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பபட்டு, நான் விரும்பிக் கேட்ட பாடல் இது..! ஏறக்குறைய 45 வருடங்கள் கழித்து, அதே பாடலை யாழ்ப்பாணத்தில்(2016) எஸ்.பி.பி பாடியபோது..! 😎
-
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்..!
எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது, அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..! அவள் மானுடப் பெண் என்றாலும், அவளை மணந்து, அவளுடன் வாழவேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது..!! அந்த மானுடப் பெண்ணை மணந்து, அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பன் ஆனார் எமதர்மன்.. அவர் மணந்த பெண் நல்லவள் தான்..என்றாலும் நாளாக, நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.. 'மேல் உலகம் போய் தப்பிவிடலாமா..?' என்று நினைக்க ஆரம்பித்தார்.. மனைவியை பிரிந்து செல்ல முடிவு செய்தார்..! ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால், மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை..!! தத்தளித்தார்.. மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார்.. "மகனே..! நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.. மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.. எப்படித் தெரியுமா..? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால், நான் அங்கு இருப்பேன்.. உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன்.. நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே.. நீ வைத்தியம் செய்து, அவர் இறந்து போனால், உன் புகழ் குறையும்..! எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும், நான் அங்கு இல்லையென்றால், தைரியமாக மருந்து கொடு.. அவன் பிழைத்து எழுந்து கொள்வான்.. அதனால் உன் புகழ் மேலும், மேலும் பரவும்..!!" என்றார் எமன்.. மகனை அணைத்து கண்ணீர் விட்ட எமதர்மன், மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் இவ்வுலகை விட்டு நழுவி விட்டார்.. மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான்.. அவன் வைத்தியம் செய்தால், எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான்..! ஒருவர் கூடச் சாகவில்லை.. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்..!! யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது, எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான்.. இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது..! கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள்.. யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை.. இவனை அழைத்தார்கள்.. "என் மகளைக் காப்பாற்றினால், அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன்" என்றார் ராஜா..! அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி..! எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார்..!! 'வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்.. ஆனால் பிழைத்துவிட்டால், அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.. இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார்.. எப்படி அவரை விரட்டுவது..?' 'பளிச்'சென்று யோசனை பிறந்தது.. வாசல் பக்கம் பார்த்து கத்தினான்..! "அம்மா....! அப்பா உள்ளே இருக்கார்.. ரொம்ப நாளா அப்பாவைக் காணோம், காணோம்னு தேடினேயே..!! இங்க இருக்கார்..!!!" என்று அலறினான். அவ்வளவுதான், 'துண்டைக் காணோம், துணியைக் காணோம்' என்று எமன் ஒரே ஓட்டமாக ஓடியே விட்டார்..! நீதி.. 👇 'எமனாயிருந்தாலும் சரி, இல்லை எவனாயிருந்தாலும் சரி.. பொண்டாட்டிக்கு பயந்தே தான் ஆகணும்..!' 😎😋 - 'வாட்ஸ் அப்'பில் வந்தது..!
-
ராஜா ராஜா சோழன் நான் எனும் ........
வணக்கம், வருக Mr.ஏராளன்..!
-
ராஜ ராஜ சோழன், நான்..!
அட, அவா யாரை, எப்போ கலியாணம் கட்டினா நமக்கென்ன, சிறீ..? 🤔 வாங்க, அடுத்த தலைப்பு பத்தி பேசுவோம்..! 😉
-
அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம்..! - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம்: உச்ச நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு புது தில்லி: அயோத்தியில் ராமஜென்மபூமியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. சர்ச்சைக்குரிய இடத்துக்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகோராவின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்ற ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை அளித்திருப்பதே இந்த தீர்ப்பின் முக்கியம்சமாகும். அந்த தீர்ப்பில், அயோத்தியில் ராமஜென்மபூமி இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இதுவரை சர்ச்சைக்குரியதாக இருந்த அயோத்தி ராமஜென்மபூமி இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு இன்னும் மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும். மத்திய அரசு உருவாக்கும் அறக்கட்டளை, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை புதிதாக ஏற்படுத்த உள்ள அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே தீர்ப்பில், ராமர் கோயில் கட்டுவது தொடர்பான முக்கியம்சமாக உள்ளது. வழக்கின் பின்னணி: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பாபா் மசூதி அமைந்திருந்த சா்ச்சைக்குரிய 2.77 ஏக்கா் நிலத்துக்கு சன்னி வக்ஃபு வாரியம், நிா்மோஹி அகாரா, மூலவா் ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் உரிமை கோரி வந்தனா். இதுதொடா்பான வழக்கை விசாரித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம், அந்த நிலத்தை 3 தரப்பினரும் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ஆம் ஆண்டில் தீா்ப்பளித்தது. அந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீா் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு விசாரித்தது. இந்த விவகாரத்தில் சமரசத் தீா்வு காண்பதற்கு உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா தலைமையிலான மத்தியஸ்த குழுவை உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் நியமித்தது. அந்தக் குழுவின் சமரசப் பேச்சுவாா்த்தையில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் ஒருமித்த முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் உச்சநீதிமன்றம் வாதங்களைக் கேட்டு வந்தது. அனைத்து வாதங்களையும் அக்டோபா் 17-ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும் என்று ஹிந்து மற்றும் முஸ்லிம் தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தொடா்ந்து 40 நாள்கள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அக்டோபா் 16-ஆம் தேதியுடன் இறுதிவாதங்கள் நிறைவடைந்தன. அன்றைய தினம், உச்சநீதிமன்றம் அமைத்த மத்தியஸ்த குழு, சமரசப் பேச்சுவாா்த்தையின்போது எடுக்கப்பட்ட முடிவுகளையும், தீா்வுகளையும் அறிக்கையாக முத்திரையிட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதைத் தொடா்ந்து, சன்னி வக்ஃபு வாரியம் சில நிபந்தனைகளின் பேரில், நிலத்தின் மீது உரிமைகோருவதை விட்டுக் கொடுக்க சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகின. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நவம்பா் 17-ஆம் தேதியுடன் ஓய்வுபெறுகிறாா். எனவே, அதற்குள்ளாக இந்த வழக்கில் தீா்ப்பு வழங்கப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தினமணி
-
ராஜ ராஜ சோழன், நான்..!
அட, இந்த அம்மணிதானா..? இவங்க நடிச்ச படம் அப்படியொன்றும் 'ஓகோ'ன்னு ஓடலையே, சிறீ..? பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால், யாரையோ கலியாணம் கட்டி, குழந்தை குட்டிகளென செட்டிலாகி போச்சே..!
-
ராஜா ராஜா சோழன் நான் எனும் ........
மேலேயுள்ள பதிவு, எந்த இணையத்தில் உள்ளது அம்மணி..? யாழ் களத்தில் யார் வேண்டுமானாலும் அங்கத்தவராகி தமிழ்நாடு குழுமத்தில் எழுதலாமே..? இதற்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. பதிவின் கருத்தை கருத்தை ஆமோதிக்கும் அதேவேளை, இந்த சப்பை விவகாரத்திற்கு ஒருமித்து குரல் கொடுப்பதை விடுத்து, பல வருடங்களாக 'ஈழத்தில் வாழ்வா..? சாவா..? என சந்ததிகளின் இருப்பே கேள்விக்குறியாகும் நிலையிலும் ஈழத்தமிழர்கள் ஒருமித்து குரல் கொடுக்கவில்லை, ஆதரவளிக்கவில்லை' என்ற வேதனையான உண்மையையும் வருத்ததுடன் உணர்ந்து, இனியாவது ஆக்கப்பூர்வமான வழிகளில் ஈடுபடுவது நல்லது. இதுவே அனைத்து தமிழர்களின் எதிர்பார்ப்பாகும். நன்றி..!
-
ராஜா ராஜா சோழன் நான் எனும் ........
வணக்கம், வருக அம்மணி..!
-
ராஜ ராஜ சோழன், நான்..!
இந்தப் பெயரில் ஒரு நடிகை இருந்தாங்களா என்ன..? அந்த அம்மா எந்தப் படத்தில் நடித்தார்கள் சிறீ?
-
ராஜ ராஜ சோழன், நான்..!
இது ஒரு அனுமானத்திலும், எனது அனுபவத்திலும் உணர்ந்து சொல்வதுதான். விதிவிலக்குகள் இருக்கலாம், மாறுபடலாம். பலதரப்பட்ட நாட்டு மக்களை இங்கே பார்க்கும் வாய்ப்புள்ளது. பெரும்பாலும் வட தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் மாநிறமாகவும், அவர்களின் முகம் உருட்டாக அல்லது சதுர வடிவமாகவும், மூக்கின் அமைப்பு சற்று சிறிதாக, குறுகலாக இருக்கும். ஆனால் தெற்கே கன்னியாகுமரி பகுதியில் பிறந்தவர்கள் சற்று நிறம் கம்மியாக, முக அமைப்பு சற்று நீண்டும், மூக்கு நீளமாகவும், அகன்றும் இருக்கும்.மூக்கிற்கும், மேலுதட்டுக்கும் இடையே சற்று இடைவெளி அதிகமாக இருக்க, அதை மறைக்க கெட்டியான மீசை வைத்திருப்பார்கள். இந்தியாவின் வடகிழக்கு நோக்கி செல்ல செல்ல முகம் உருட்டாகி மூக்கும் சிறிதாக மழுங்கி சப்பையாகிவிடும். இலங்கையை எடுத்துக்கொண்டால் ஏறக்குறைய கன்னியாகுமரி பகுதி மாதிரிதான், ஆனால் பற்கள் சற்று தூக்கலாக தெரியும். இவைகளெல்லாம் அந்தந்த பகுதிகளின் பூகோள அமைப்பு, மற்றும் வளங்களினால் மாறுபடும் ஜீன்களின் வர்ண ஜாலங்கள்..!
-
ராஜ ராஜ சோழன், நான்..!
'நானும் பாட்டுப் பாடுறேன் பேர்வழி'யென அஸ்ட கோணலாய் ஆடி பந்தா காட்டும் சில தன்னார்வ பாடகர்களுக்கிடையே இந்தக் காணொளியில் வருபவர் எளிமையாக ஆர்ப்பாட்டமில்லாமல் நன்றாக பாடியுள்ளார். முகச்சாயலில், இவர்கள் ஈழத்தை சார்ந்தவராக இருக்கலாமென தோன்றுகிறது..!
-
இந்த இடம் தெரியுமா..?
எலியட்ஸ் கடற்கரை சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் அமைந்த கடற்கரை ஆகும். மெரீனா கடற்கரையின் தெற்கில் அமைந்த இக்கடற்கரை அருகில் அஷ்டலட்சுமி கோயிலும் வேளாங்கன்னி தேவாலயமும் அமைந்துள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இக்கடற்கரை வெள்ளையர்கள் மட்டுமே வரக்கூடியதாக இருந்தது. முந்தைய சென்னை ஆளுனர் எட்வர்ட் எலியட்டின் பெயரால் வழங்கப்பட்ட இந்தக் கடற்கரை பரவலாக 'பெசன்ட் நகர் கடற்கரை' என்றே அறியப்படுகிறது. சென்னையின் இளைய தலைமுறையினர் கூடும் இடமாக தற்போது இது உள்ளது. பல வகைப்பட்ட உணவகங்களும் மனமகிழ்மன்றங்களும் அவர்களுக்கான ஈர்ப்பை கூட்டுகின்றன. வார இறுதி நாட்களில் வண்டிகளை நிறுத்தக்கூட இடம் கிடைக்காத நிலை உள்ளது. கார்ல் ஸ்மித் நினைவுச் சின்னம் (karl schmidt memorial) பெசன்ட் நகர் கடற்கரையில் கோயிலின் நுழைவு வாயில்போல உள்ள கட்டிடத்தைப் பல சினிமாவில் பார்த்திருப்போம். இந்தக் கட்டிடம் டச்சு மாலுமி ஸ்மித் நினைவாகக் கட்டப்பட்டது. சென்னை இங்கிலாந்து அரசாட்சியின் கீழ் இருந்த காலகட்டத்தில் பெசண்ட் நகர் கடற்கரையில் 1930-ம் ஆண்டு டிசம்பர் 30 அன்று விளையாடிக்கொண்டிருந்த ஒரு ஆங்கிலச் சிறுமி கடல் அலைகளுக்குள் சிக்கிக் கொண்டுவிட்டாள். இதைக் கண்ட டச்சு மலூமி, அந்தச் சிறுமியைப் போராடிக் காப்பாற்றியிருக்கிறார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த மாலுமி கடல் அலைகளுக்குள் சிக்கி இறந்துபோய்விட்டார். அவரது வீரத்தைப் போற்றும் வகையில் சென்னை ஆளுநர் அவருக்கு நினைவகம் எழுப்ப உத்தரவிட்டார். அதுதான் இந்தக் கட்டிடம். சுதந்திரம் அடைந்த பிறகு கைவிடப்பட்ட நிலையில் இருந்த இந்தக் கட்டிடத்தை இப்போதுதான் 2014-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி புதுப்பித்துள்ளது. - தமிழ் இந்து குறிப்பு.
-
இந்த இடம் தெரியுமா..?
Exactly...! சரியான இடத்திற்கான பதில்..! 😍
-
இந்த இடம் தெரியுமா..?
உங்கள் காலத்து பாடலில்.. இந்த வரலாற்று சின்னம் இடம் பெற்றுள்ளது..! 😎
-
இந்த இடம் தெரியுமா..?
பல திரைப்படங்களின் பாடல்களில் சென்னையின் இந்த வரலாற்று சின்னத்தை பார்த்திருப்பீர்கள்..! (அம்புக் குறியீடு காட்டும் இடம்) எந்த இடம், என்ன சின்னம் என ஊகிக்க முடிகிறதா..?
-
தமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்!
தமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்! மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 முதல் தனித்தியங்கத் தொடங்கின. அதேநாளில், தமிழகமும் தனி மாநிலமானது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள் கன்னியாகுமரி என்ற மாவட்டமாகத் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த மாநிலங்கள் இந்நாளை விசேஷமாகக் கொண்டாடிவரும் நிலையில், தமிழ்நாடு அரசும் இந்த ஆண்டு முதல் நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு தினமாகக் கொண்டாடத் தொடங்கியுள்ளது. சென்னை மாகாணத்திலிருந்து பிரிந்த மாநிலங்களில் தனி மாநில அந்தஸ்தைப் பெற்றதற்காகக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. அன்றைய சென்னை மாநிலம், தமிழ் பேசும் சில பகுதிகளைப் பக்கத்து மாநிலங்களுக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்ததால், அது தமிழகத்தில் வருத்தத்தையே ஏற்படுத்தியிருந்தது. பழைய எல்லைப் பிரச்சினைகள் தற்போது விவாதிப்பதற்கு இல்லை என்பதோடு, தமிழகம் தனி மாநிலமானதும் கொண்டாடப்படுவதற்குரிய நிகழ்வு என்பதைத் தமிழ்நாடு அரசு வெளிப்படுத்துகிறது. மொழிவாரி மாநிலங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு சென்னை மாகாணம் உருவாக்கப்பட்டது. ஹைதராபாத் நீங்கலான ஆந்திரம், மைசூர் நீங்கலான கன்னடம், கேரளத்தின் மலபார் பகுதிகள் ஆகியவையும் சென்னை மாகாணத்துடனேயே இணைக்கப்பட்டிருந்தன. இந்திய விடுதலைப் போராட்டம் வெற்றியை நோக்கி நகர ஆரம்பித்த காலத்திலேயே மொழிவாரி மாநிலங்களுக்கான குரல்களும் எழத் தொடங்கிவிட்டன. தென்னிந்தியாவில் விசால ஆந்திரம், சம்யுக்த கன்னடம், ஐக்கிய கேரளம் ஆகியவற்றுக்குத் தனித்தனி இயக்கங்கள் தொடங்கப்பட்டன. 1937-ல் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திர, கர்நாடக மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியது. 1938-ல், வார்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம், விடுதலைக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படும் என்று உறுதியளித்தது. அதே ஆண்டில், பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கத்தைத் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, சி.பா.ஆதித்தனார், கி.ஆ.பெ.விசுவநாதம், ம.பொ.சிவஞானம் ஆகியோர் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தினர். விடுதலைக்கு முன்பு மொழிவாரி மாநிலக் கொள்கையை வலியுறுத்திய காங்கிரஸ் கட்சி, விடுதலைக்குப் பின்பு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. மொழிவாரி மாநிலங்கள் நாட்டின் ஒற்றுமையைக் குலைத்துவிடுமோ என்ற அச்சம்தான் அதற்கான முக்கியக் காரணம். சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரை ஆந்திரத்தைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசமைப்பு நிர்ணய அவையின் ஆலோசகரான பி.என்.ராவ், எஸ்.ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, டி.பிரகாசம் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பது குறித்து 1948-ல் அரசமைப்பு நிர்ணய அவையால் நியமிக்கப்பட்ட என்.கே.தார் ஆணையம், அம்முடிவு நாட்டின் ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கக்கூடும் என்று கருத்துத் தெரிவித்தது. தார் ஆணையத்தின் முடிவுக்குக் கடும் அதிருப்தி நிலவிய நிலையில் ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோரைக் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்தது. மூன்று தலைவர்களைக் கொண்ட அந்தக் குழுவும் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படக் கூடாது என்றே பரிந்துரைத்தது. ஆனாலும், ஆந்திர மாநிலத்தை மட்டும் உடனடியாகப் பிரிக்க வேண்டும் என்று கூறியது. திராவிட நாடு கேட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்த போதும் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் விவகாரத்தில் அதற்கு ஆதரவாகத் தீவிர குரல் கொடுத்தது அண்ணாவின் திமுக. மொழிவாரி மாநிலங்கள் அமைப்பு, தமிழ் மாநிலத்துக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல் இந்த இரண்டு விஷயங்களுக்காகவும் அது தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது. ஆந்திரப் பிரிவினைக்கான குரல்கள் தீவிரமடைந்த நிலையில் நேரு, படேல், பட்டாபி குழுவின் பரிந்துரையின்படி, சென்னை மாநிலத்திலிருந்து ஆந்திரத்தைப் பிரிப்பது குறித்து இறுதி முடிவெடுப்பதற்காக சென்னை மாநில அரசால் பி.எஸ்.குமாரசாமி ராஜா தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டது. குழு உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடுகள் எழுந்த நிலையில், தனி மாநிலம் வேண்டி ஆந்திரத்தில் போராட்டங்கள் தீவிரமானது. சென்னையைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் வேண்டும் என்று 1952-ல் பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் தொடங்கினார். அவருடைய மரணம், ஆந்திரத்தில் நடந்துவந்த போராட்டங்கள் மேலும் தீவிரமானதையடுத்து, ஆந்திர மாநிலக் கோரிக்கையைப் பிரதமர் நேரு உடனடியாக ஏற்றுக்கொண்டார். சென்னை யாருக்கு? ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்த பிரதமர் ஜவாஹர்லால் நேரு, அம்மாநிலத்தின் தலைநகர் எது என்று அறிவிக்கவில்லை. அதையே வாய்ப்பாகக் கொண்டு ‘மதராஸ் மனதே’ என்ற முழக்கத்தை வைத்தார்கள் ஆந்திரத் தலைவர்கள். சென்னை இரு மாநிலங்களுக்கும் தற்காலிகத் தலைநகராக இருக்க வேண்டும், மத்திய அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்ட தனிப் பிரதேசமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு விதமான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. சென்னை தமிழகத்தின் தலைநகரமாகவே தொடர வேண்டும் என்பதை விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே வலியுறுத்திவந்தார் தமிழரசுக் கழகத் தலைவரான ம.பொ.சிவஞானம். ஆந்திரத் தலைவர்களின் கோரிக்கையை அடுத்து, சென்னையைக் காக்கும் தீவிரப் போராட்டத்தில் இறங்கினார் அவர். 1953-ல் சென்னை மாநகராட்சியின் சிறப்புக் கூட்டத்தில் சென்னை தமிழகத்துக்கே உரியது என்ற தீர்மானத்தை முன்மொழிந்து, அதை ஒருமனதாக நிறைவேற்றச் செய்தார். அப்போதைய சென்னை மாகாண முதல்வராகப் பதவி வகித்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் சென்னை தமிழகத்துக்கே உரியது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதைத் தெரிவித்தார். பிரதமர் நேருவைச் சந்தித்த ராஜாஜி, சென்னையை ஆந்திரத்தின் தற்காலிகமான தலைநகராகச் செயல்பட மத்திய அரசு அனுமதித்தால், முதல்வர் பதவியிலிருந்து தான் விலக நேரும் என்று அறிவித்தார். சென்னையை ஆந்திரத்தின் தற்காலிகத் தலைநகராக அறிவிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு ஆயிரக்கணக்கில் தந்திகள் அனுப்பப்பட்டன. தமிழகத்தின் எதிர்ப்பை அடுத்து மத்திய அரசு தன் முடிவை மாற்றிக்கொண்டது. 1953 அக்டோபர் 1-ல் உருவான ஆந்திர மாநிலத்தின் தலைநகராக கர்நூல் அறிவிக்கப்பட்டது. அதற்கடுத்து, சென்னையின் வளர்ச்சியில் ஆந்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதால், தமிழகம் ஆந்திரத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மத்திய அரசு நியமித்த வாஞ்சு கமிட்டி இழப்பீடாக இரண்டு கோடி முப்பது லட்சம் வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதை எதிர்த்து சென்னை சட்டமன்ற மேலவையில் கடுமையாக விவாதித்தார் ம.பொ.சிவஞானம். இதற்கு முன்பு அசாம், ஒரிசா, பஞ்சாப் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது இழப்பீடு அளிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார். அவருடைய வாதத்தை முதல்வர் ராஜாஜியும் ஏற்றுக்கொண்டார். சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் பிரிந்து சென்ற நிலையில், தென்கன்னடமும் மலபாரும் தொடர்ந்திருந்தன. அதேநேரத்தில், தென்திருவிதாங் கூரைச் சேர்ந்த தமிழர்களிடத்தில் மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்துடன் இணைய வேண்டும் என்ற குரலும் எழுந்தது. தமிழர்களின் தொடர் போராட்டங்கள், உயிரிழப்புகளுக்குப் பிறகு தமிழர்கள் அதிகளவில் வசித்துவந்த தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை ஆகிய சில பகுதிகள் தமிழகத்துடன் இணைந்தன. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பசல் அலி ஆணையத்தின் பரிந்துரையின்படி இந்த இணைப்புகள் நடந்தேறின. ஆனால், தமிழர்கள் வசித்த மற்ற பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு, செங்கோட்டை வனப்பகுதி மற்றும் நெய்யாற்றின் கரை ஆகியவை தமிழகத்தோடு இணைக்கப்படவே இல்லை. தொல்தமிழகத்தின் வட எல்லையாகவும், வடஆற்காடு மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்துவந்த வேங்கடத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்கும் முயற்சியும் தோல்வியில்தான் முடிந்தது. தமிழ்நாட்டின் பகுதிகளை உள்ளடக்கிய சித்தூர் மாவட்டத்தை ஆந்திரத்துடன் இணைத்ததை எதிர்த்து, தமிழரசுக் கழகமும் திமுகவும் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போராட்டத்தின் விளைவாக, 1960-ல் ஆந்திரத்திடமிருந்து திருத்தணி மீட்கப்பட்டது. தமிழ்நாடு பெயர் மாற்றம் தமிழுக்கென்று தனி மாநிலம் அமைந்தாலும், அதற்கு சென்னை மாநிலம் என்ற பெயரே தொடர்ந்தது. 1956-ம் ஆண்டிலேயே சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழறிஞர்களும் தொடர்ந்து இந்தப் பெயர் மாற்றத்தை வலியுறுத்தினர் என்றாலும், சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பெயர் மாற்றத் தீர்மானம் தோல்வியைத் தழுவியது. பெயர் மாற்றத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட சங்கரலிங் கனார் 78-ம் நாளில் உயிர்விட்டார். எந்தக் கோரிக்கைக்காகத் தியாகி சங்கரலிங்கனார் தனது உயிரை விட்டாரோ அதை அண்ணா முதல்வராகப் பதவியேற்றபோது நிறைவேற்றிவைத்தார். 1967 ஜூலை 15 அன்று பெயர் மாற்றத் தீர்மானத்தை முன்மொழிந்தார் அண்ணா. 1968 ஜனவரி 15 அன்று தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது. விடுதலைக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தில் தமிழ்நாடு தனது மொழி, இன உரிமைக்காகக் கட்சி பேதமின்றி பெரும் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. தியாகங்களையும் புரிந்திருக்கிறது. அதன் விளைவாகவே இன்றைய தமிழ்நாடு இந்த உரிமைகளைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்தான் அந்த தியாகங்களுக்கான சரியான மரியாதை. வடக்கெல்லைப் போராட்டம் விடுதலைப் போராட்ட வீரரும் தமிழறிஞருமான ம.பொ.சிவஞானம், சுதந்திர சோஷலிஸ தனிக் குடியரசு என்ற கொள்கையை முன்வைத்து 1946 நவம்பர் 21-ல் தமிழரசுக் கழகத்தைத் தொடங்கினார். ‘தமிழ் வளர, தமிழர் வாழ, தமிழ்நாடு செழிக்க தமிழரசு வேண்டும், சுதந்திர அரசியலை நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை தமிழருக்கு உண்டு’ என்பது தமிழரசுக் கழகத்தின் முக்கியக் கொள்கையாக இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, வடவேங்கடம் தென்குமரியே தமிழகத்தின் வடக்கு தெற்கு எல்லையாக இருக்க வேண்டும் என்று போராட்டத்தைத் தொடங்கி நடத்தினார் ம.பொ.சி. தனது ‘தமிழ் முரசு’ இதழில் திருவிதாங்கூரைத் தமிழகத்துடன் இணைத்து நில வரைபடம் ஒன்றை வெளியிட்டதோடு, அப்போராட்டத்தில் ஈடுபட்ட திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்துக்கும் உறுதுணையாக நின்றார். தமிழக - ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் திருத்தணியை மீட்டதில் ம.பொ.சி.யின் பங்கு மிக முக்கியமானது. ஆந்திரத்துடன் சித்தூரை இணைத்ததை எதிர்த்து, வடக்கு எல்லைப் பாதுகாப்புக் குழுவுக்குத் தலைமையேற்றார் ம.பொ.சி. சித்தூர், புத்தூர், திருத்தணி ஆகிய ஊர்களில் அவர் முன்னின்று நடத்திய பொது வேலை நிறுத்தமும் கடையடைப்பும் மறியல்களும் மத்திய அரசுக்குக் கடும் சவாலை ஏற்படுத்தின. ம.பொ.சி.யின் மீது கடும் கோபத்துக்கு ஆளான பிரதமர் நேரு, வார்த்தைகளை அள்ளி வீச, ம.பொ.சி.க்கு ஆதரவாகத் தமிழகமே திரண்டெழுந்தது. நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில், முதல்வர் ராஜாஜியின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய அரசு தமிழக - ஆந்திர எல்லைச் சிக்கலைத் தீர்க்க பதாக்கர் ஆணையத்தை நியமித்தது. அந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி தமிழகத்துடன் திருத்தணி இணைக்கப்பட்டது. தெற்கெல்லைப் போராட்டம் இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னர் 1920-ம் ஆண்டு வாக்கிலேயே காங்கிரஸ் கட்சி மொழிவழிப் பிரதேசங்களின் அடிப்படையில் செயல்பட ஆரம்பித்தது. 1945-ல் காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை உள்ள பகுதிகளை ஐக்கிய கேரள மாகாணமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்படத் தொடங்கியது. திருவிதாங்கூர், கொச்சி, மலபார் பகுதிகளை உள்ளடக்கியதாக இது இருந்தது. கேரளப் பிரதேச காங்கிரஸ் கட்சியும், கொச்சி சமஸ்தானத்தைச் சேர்ந்த காங்கிரஸ் இயக்கமான பிரஜா மண்டலமும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த காங்கிரஸ் இயக்கமும் இக்கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தன. ஐக்கிய கேரளக் கோரிக்கையில் தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் தென்திருவிதாங்கூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளும் இருந்தன. எனவே, அக்கோரிக்கையை நாகர்கோவிலைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான பி.எஸ்.மணி கடுமையாக எதிர்த்தார். அவரது முன்முயற்சியால் திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் தொடங்கப்பட்டது. பின்பு, அது திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்று பெயர் மாறியது. மார்ஷல் நேசமணி, நதானியல், பி.சிதம்பரம் பிள்ளை, காந்திராமன் உட்பட பல தலைவர்கள் இவ்வியக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டனர். திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்துக்குக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், நாடகக் கலைஞர் ஔவை டி.கே.சண்முகமும் நிதியுதவிபுரிந்து ஆதரித்தனர். இதற்கிடையே தேவிகுளம் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த தமிழர்கள் தாக்குதல்களுக்கு ஆளாகினர். தமிழர்களின் போராட்டங்கள் தீவிரமானது. துப்பாக்கிச் சூட்டில் 11 தமிழர்கள் பலியானார்கள். கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தன. பத்தாண்டு கால இடைவிடாத போராட்டத்தின் பலனாகத்தான் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பாதியளவேனும் தமிழகத்தோடு இணைந்தது. தமிழ் இந்து
-
அண்ணாத்தே ஆடுறார்.. ஒத்துக்கோ.. ஒத்துக்கோ..!
முதலில் தனியாக பாடிக்கொண்டிருந்த பாடகரின் பாடலுக்கு சிறிதுநேரம் கழித்து, ஒருத்தர் பின் ஒருத்தராய் நடனமாட வந்து சேர்ந்து, இறுதியில் குழுவாய் ஆடுவது வேடிக்கை..!
-
அண்ணாத்தே ஆடுறார்.. ஒத்துக்கோ.. ஒத்துக்கோ..!
கல்லூரியில் படிக்கும்பொழுது விடுதியில் சிலசமயம் இசைக்குழுக்களின் கச்சேரி நடப்பதுண்டு. அம்மாதிரி சமயங்களில் சிலர் தண்ணியை போட்டுக்கொண்டு குத்துப்பாட்டுக்களுக்கு ஆடுவதுண்டு..! ஆனால் நடனம் தெரியாவிட்டாலும் சிலசமயம் நம்மையும் அறியாமல், பாட்டுக்கு சுருதி ஏற ஏற நம் கால், கைகள் தாளம் போடுவதுண்டு. சிலர் தம்மையும் அறியாமல் வயது வித்தியாசம் பாராமல் ஆண்களும், பெண்களும் எழுந்து ஆடுவதும் உண்டு.. அம்மாதிரியே இந்தப்பாடலும் சிலரை ஆட வைத்துள்ளது..!
-
மாங்குயிலே.. பூங்குயிலே..!
பாடலுக்காவே வருடக்கணக்கில் ஓடிய சில குறிப்பிட்ட தமிழ் படங்களில் இப்படமும், பாடலும் மிகப் பிரபலமானவை. அம்மாதிரி சாகாவரம் பெற்ற பாடல்களை சில இசைக்குழுக்கள், நானும் பாடுகிறேன் பேர்வழியென கொன்று குதறிப்போடுவதும் உண்டு. அம்மாதிரி இல்லாமல் சிறப்பாக பாடிய இந்த இசைக்குழுவின் திறமை நிச்சயம் பாராட்டத்தக்கது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், திரு.சசி வர்ணம்
-
சூப்பரு, எனக்கு ரெண்டு நாளு லீவு வேணும்..!
அடுத்த வாரம் வட அயர்லாந்து பயணம் இருக்குமென தெரிகிறது. அழைப்பிற்கு நன்றி. டிசம்பரில் சுவிஸ் பயணமிருக்கலாம், அப்பொழுது ரெண்டு நாள் லீவு போட்டு ஜெர்மனி பக்கம் வாரன். பாஞ் பொடியரோடு விளையாடிக்கொண்டிருக்கிறதை பார்க்கவாவது வரணும்.
-
சூப்பரு, எனக்கு ரெண்டு நாளு லீவு வேணும்..!
இப்படியும் ஒரு நகைச்சுவை..!
-
அமைதியில்லாதென் மனமே என் மனமே..
கருவுற்ற சமயத்தில் தூங்கும்போது தாய்க்கு அதிக பாரம் இருக்கக் கூடாது கண்டியளோ? அதனால்தான் கருவின் ஆரோக்கியத்திற்கு இடதுபுறம் ஒருக்களித்து படுக்க சொல்வார்களென கேள்வி. இதுக்கு மேல் கேட்கப்படாது. 😜