Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. தஞ்சை பெரிய கோயிலின் அற்புதம், கழுகுப் பார்வையில்..
  2. வாய்ப்புக்கள் தேடி வந்தோரை பெரும்பாலும் வாழ்வில் ஏற்றிய செழிப்பான துபை..
  3. மதுரையில் பிறந்து, சென்னையில் புகுந்து, புலத்தில் வாழும்போது சில நகரங்களை, தமிழ்நாட்டின் பகுதிகளை ஆகாயத்திலிருந்து பார்க்கும் வாய்ப்புகள் கிட்டின. மனித தலைகளும், இயந்திரங்களின் ஓட்டமுமாய் மதுரை, சென்னை, துபை போன்ற நகரங்கள் கடந்த சில வாரங்களாக கொரானா என்ற அரக்கனின் பிடியில் விழுந்து வெறிச்சோடிகிடந்தன. அவற்றில் சென்னை நகரத்தில் வெறிச்சோடிய பகுதிகளை இங்கே காணொளியில் பார்க்கும்போது இனியொரு நிகழ்வு இப்பிறவியில் பார்க்க வேண்டாமென தோன்றுகிறது..! 🙄 (அருமையான காணொளி தொகுப்பு)
  4. கேட்கும்போதே இதயத்தை தீண்டிச் செல்லும் இனிய பாடலுக்கு கண்ணம்மாகவே வாழ்ந்து காட்டிய தேவிகா.. நெஞ்சம் மறப்பதில்லை.. அது நினைவை இழக்கவில்லை..! நான் காத்திருந்தேன்.. உன்னை பார்த்திருந்தேன்.. கண்களும் மூடவில்லை.. என் கண்களும் மூடவில்லை..!
  5. இப்பொழுதும் ரசித்துக் கேட்கும் பாடல்.. சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ..? இந்தக் கட்டுக்கரும்பினை தொட்டுக்குழைந்திட யார் வந்தவரோ..? யார் நின்றவரோ.. யார் வந்தவரோ..?
  6. தேவிகா நடித்த 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படம் முழுவதுமே ஒரு மருத்துவமனை அரங்கமைப்பில் ஒரு மாதத்திற்கும் குறைவான காலகட்டத்தில் எடுக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற படம். இப்படத்திற்கு சனாதிபதி விருதும் வழங்கப்பட்டது. சொன்னது நீதானா..? சொல் சொல் சொல் என்னுயிரே..! சம்மதம் தானா..? ஏன், ஏன், ஏன் என்னுயிரே..! ஏன், ஏன், ஏன் என்னுயிரே..! தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா..? தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா..? ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா..! ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா ..!!
  7. தேவிகா நடித்த சில பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தவற்றில் மிக அற்புதமான பாடல்.. சுசீலாவின் மிக இனிமையான குரலும், தேவிகாவின் அற்புதமான முகபாவங்களும் நம்மை நெஞ்சுருக வைப்பவை..! கங்கைகரை தோட்டம்.. கன்னி பெண்கள் கூட்டம்.. கண்ணன் நடுவினிலே..! ஓ.. ஓ.. கண்ணன் நடுவினிலே.. காலை இளம் காற்று.. பாடிவரும் பாட்டு.. எதிலும் அவன் குரலே.. ஓ.. ஓ.. எதிலும் அவன் குரலே..
  8. கண்ணதாசன் பாடல் வரிகளில் அமைந்த மிகவும் பிடித்தமான ஒரு பாடல்..! இதிலும் தேவிகாவின் நடிப்பு அற்புதம்..!! நினைக்கத் தெரிந்த மனமே, உனக்கு மறக்கத் தெரியாதா..? பழகத் தெரிந்த உயிரே, உனக்கு விலகத் தெரியாதா..? உயிரே விலகத் தெரியாதா..?? மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா..? மலரத் தெரிந்த அன்பே, உனக்கு மறையத் தெரியாதா..? அன்பே மறையத் தெரியாதா..??
  9. வாலியின் பாடல்களில் மிகவும் பிடித்தமானது, அதைவிட சிறப்பு இப்பாடலில் தேவிகா அருமையாக நடித்திருப்பது..! உறவு என்றொரு சொல் இருந்தால், பிரிவு என்றொரு பொருள் இருக்கும்.. காதல் என்றொரு கதை இருந்தால், கனவு என்றொரு முடிவிருக்கும்..
  10. காதல் பரிதவிப்பை காட்ட சிவாஜியை சுண்டியிழுக்கும் இந்த பாடலில், தேவிகா கதைக்கேற்றவாறு விரசமில்லாமல் நடித்திருப்பது அருமை..! அழகே வா.. அருகே வா.. அலையே வா.. தலைவா வா.. அழகே வா.. ஒரு மொழியறியாத பறவைகளும்.. இன்ப வழியறியும் இந்த உறவறியும்! இரு விழியிருந்தும் நல்ல மொழியிருந்தும், இங்கு வழியிருந்தும் ஏன் மயங்குகிறாய்..!
  11. டிஸ்கி: எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் தேவிகாவும் ஒருவர்.. குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களுக்கேற்ற அற்புதமான நடிப்புத் திறன் கொண்டவர், ஆனால் சொந்த வாழ்க்கையில் சரியான துணை அமையாமல் அவர் கண்ட துயரம் பரிதாபமானது. அவரை பற்றிய கட்டுரை படிக்க நேர்ந்தது, பகிர்கிறேன்..! 60களில் கே.ஆர்.விஜயா, காஞ்சனா, ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா என பல கதாநாயகிகள் அறிமுகமாகித் திரையில் மின்னினாலும், வண்ணப் படங்களின் விகிதம் கூடினாலும் 50களின் நாயகிகளும் அவர்களுடன் சரி சமானமாகப் போட்டியிட்டார்கள். அவர்களில் தேவிகாவுக்கும் முதன்மையான இடம் உண்டு. பாவ மன்னிப்பு, கர்ணன், நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, வாழ்க்கைப்படகு, வானம்பாடி, நீலவானம், மறக்க முடியுமா?, பழநி, சாந்தி, பந்தபாசம், அன்புக் கரங்கள், முரடன் முத்து, ஆனந்தஜோதி, ஆண்டவன் கட்டளை, அன்னை இல்லம் என்று தொடர்ச்சியாக பல நல்ல படங்களைக் கொடுத்தவர் தேவிகா. கொஞ்சமும் சோடை போகாத நடிப்பு அத்தனை படங்களிலும். அவற்றில் சில படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் தேவிகாவின் கதாபாத்திரமும் அவரின் நடிப்பும் எப்போதும் சோடை போனதில்லை. இயக்குநர்களின் தேர்வுக்கு ஏற்ற நாயகியாக… இயக்குநர் ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, சுமைதாங்கி மூன்று படங்களிலும் நாயகியாக நடித்தவர் தேவிகா. ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தின் நாயகியாக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் விஜயகுமாரி. ஆனால் அவர் தனக்கு இணையாக எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிக்க வேண்டும் என்று இயக்குநருக்குப் பரிந்துரைத்ததுடன் அல்லாமல், அந்த நிலைப்பாட்டில் பிடிவாத மாகவும் இருந்ததால் அவருக்கு மாற்றாகக் கொண்டுவரப்பட்டவர் தேவிகா. ஒருவிதத்தில் தேவிகா நன்றி சொல்ல வேண்டியது நல்வாய்ப்பைத் தவறவிட்ட விஜயகுமாரிக்குதான். படத்தில் கதாநாயகி சீதாவாகவே மாறிவிட்டார் என்றும் சொல்லலாம். மிக அழுத்தமான ஒரு பாத்திரம் அது. தனக்குள்ளாகவே குமைந்து, வெளியில் சொல்ல முடியாத துயரங்கள் மனதில் பாரமாக அழுத்த, அதை மறைத்துக்கொண்டு போலியாகச் சிரித்து கணவனின் உடல்நலம் பெற வேண்டும் என்பது ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, முன்னாள் காதலனை நம்பவும் முடியாமல் ஒரு டாக்டரான அவரிடம் கடுமை காட்டவும் விரும்பாமல் அடக்கி வாசிக்க வேண்டிய பாத்திரம். அந்தப் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து உள்வாங்கிக்கொண்டு மிகப் பிரமாதமாக நடித்திருந்தார். இரு ஆண்களுக்கு இடையில் மனத் தவிப்போடு நடமாட வேண்டிய ஒரு பெண்ணைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தினார். ‘சொன்னது நீதானா?’ பாடல் காட்சியில் அவரது தவிப்பும் துயரமும் நம்மையும் தொற்றிக் கொள்ளும். காதலில் தோற்றுப் போன பெண்களுக்கும் வாழ்க்கை உண்டு என்பதைத் தன் படங்களில் அழுத்தமாகச் சொன்னவர் இயக்குநர் ஸ்ரீதர். அவரது ‘கல்யாணப் பரிசு’ படத்துக்கு முன்னர் காதலில் தோற்ற கதாநாயகிகள் இயக்குநரால் கொல்லப்பட்டார்கள் என்பதே வரலாறு. 1962ஆம் ஆண்டின் சிறந்த நடிகையாக தேவிகா கொண்டாடப்பட்டார். சிறந்த மாநில மொழிப்படத்துக்கான விருதும் வெள்ளிப் பதக்கமும் இப்படம் வென்றது. தான் நடித்த கதாபாத்திரங்களிலேயே தன்னை மிகவும் ஈர்த்த ஒரு பாத்திரமாகவும், அந்தப் படத்தை முதன்முதலாகப் பார்த்தபோது, தன்னை மீறிய மன அழுத்தத்தால் கட்டுண்டு, கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுததாகவும் தேவிகா குறிப்பிட்டிருக்கிறார். தேவிகாவை மட்டு மல்லாமல், பல ஒட்டு மொத்தப் பெண்களையும் கவர்ந்த படம் இது. கண்ணுக்குக் கண்ணான கண்ணம்மா ’நெஞ்சம் மறப்பதில்லை’ நாயகி கண்ணம்மாவை யாருக்குதான் பிடிக்காது. இரு மாறுபட்ட வேடங்களை முற்பிறவி, இப்பிறவிகளில் அவர் எடுத்திருந்தாலும் கிராமிய மணம் கமழ அள்ளி முடிந்த கூந்தலும், கணுக்காலுக்கு மேலான பாவாடை தாவணியில் கள்ளம் கபடம் இல்லாத ஏழைப் பெண்ணான கண்ணம்மாவே முதலிடம் பிடிக்கிறார். பாழடைந்த பங்களாவில் எதையோ கண்டு பயந்து மிரண்டு தன்னிலை இழந்தவராய் மான் போல் மிரள மிரளக் கண்களை உருட்டி விழிக்கும் விஜயாவுக்கு அடுத்த இடம்தான். அத்துடன் படம் நெடுக வந்து நம்மை ஆக்கிரமித்து மனங்களைக் கொள்ளையிட்டவளும் கண்ணம்மாதான். தேவிகாவுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்புகளில் இந்தக் கண்ணம்மாவுக்கு ஒரு தனித்த இடமுண்டு. சாதி வெறி தலைக்கேறிய ஜமீன்தார், அந்த எளிய பெண்ணைச் சுட்டுக் கொல்லும் காட்சியில் நம்மையும் அறியாமல் கலங்க வைத்து விடுவார். ஆனால், அப்போதைய படங்களில் சாதிக்கு எதிரானதாகச் சொல்லப்படவேயில்லை. காதலுக்கு எதிரானதாகவே காட்சிப்படுத்தப்பட்டது. சாதி இங்கு மறைபொருளாகவே சுட்டப்பட்டது. இரு வேறு மதங்களும் காதலின் பின்னணியும் அசல் வாழ்க்கையில் ஒரு ரஹீமும் ஒரு மேரியும் காதலித்துத் திருமணம் செய்து கொள்வது பற்றி இன்றைய காலகட்டத்தில் யோசிப்பதும் கூட குற்றமாகி விடக்கூடிய பரிதாபமான சூழலில் இருக்கிறோம் என்பதே வேதனை. ஆனால், 60களில் அப்படி இரு கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களுக்கிடையே காதலையும் வளர்த்து அதைத் திருமண பந்தம் நோக்கித் திருப்பிய கதைக்களம் பீம்சிங்கின் ‘பாவமன்னிப்பு’ திரைப்படத்தில் உருவாக்கப்பட்டது. அப்போது அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் அது கண்டு கொந்தளித்ததாகத் தெரியவில்லை. ஆனால், இன்றைக்கு எதிர்ப்புகள் மட்டுமல்லாமல் கலவரங்களும் உருவாக்கப்படும் சூழல் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், அவர்கள் இருவரும் இந்து மதத்தைச் சார்ந்தவர்களே, சந்தர்ப்ப சூழ்நிலையின் பொருட்டு இஸ்லாமியராகவும் கிறித்தவராகவும் வளர்க்கப்பட்டதாகக் கதையின் திருப்புமுனை அமையும். தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் உள்ளூர ஒரு அச்சம் இருந்திருக்கவும் வாய்ப்பிருக்கலாம். ஆனால், படத்தில் அனைத்து மதங்களும் ஒன்றே என்பதாகக் காட்சிகள் பின்னப்பட்டு, படமும் ஓஹோவென்று ஓடியது. கிறிஸ்துவ, இஸ்லாமிய ஒருங்கிணைப்பையும் இந்தக் காதலர்களின் வழியாகப் படம் பேசியது. தேவிகா, அந்த மேரி பாத்திரத்தை ஏற்று அதற்கான நியாயத்தைச் செய்திருந்தார். இந்தப் படத்துக்குப் பிறகே படவுலகில் அவர் உச்சநிலையை எட்டிப் பிடித்தார்; ஏராளமான பட வாய்ப்புகளும் தேடி வந்தன. ‘பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது’ பாடலும் பெரு வெற்றி பெற்றது. இரு பெண்கள், இரு குரல்கள் இரு கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் படங்களில் இருவரும் இணைந்து பாடுவதாகக் காட்சிப்படுத்தப்பட்ட பல பாடல்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. பெரும்பாலும் பீம்சிங் இயக்கிய பல படங்களிலும் அத்தகைய காட்சிகள் இடம் பெற்றதுண்டு. தேவிகாவும் சாவித்திரியும் பாடும் ‘அத்தான்… என்னத்தான்…’ பாடல் ஒரு கிளாசிக் ரகப் பாடல் என்றே சொல்லலாம். பருவ வயது வந்த இரு இளம் பெண்கள் தங்கள் காதலனை மனதில் இருத்தி, அவன் நினைவில் பாடுவதாக அமைந்த இப்பாடல் கண்ணதாசனின் கைவண்ணத்தில், மெல்லிசை மன்னர்களின் இசைத்திறனால் சாகாவரம் பெற்று கம்பீரமாக நிற்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் வர்க்க பேதத்தையும் கொண்ட பெண்கள் இருவரும், காதல் என்ற உணர்வுக்கு ஆட்படும்போது ஒரே மனநிலையை எட்டிப் பிடிக்கும் காட்சியமைப்பு உன்னதமானது. ‘இதயத்தில் நீ’ படத்தில் இடம் பெற்ற ‘சித்திரப்பூவிழி வாசலிலே வந்து யார் நின்றவரோ’ பாடலும் ஏறக்குறைய இதே பாணியில் அமைந்த பாடல்தான். தேவிகா, லட்சுமிராஜம் இணைந்து சுசீலா, ஈஸ்வரியின் குரலில் மயங்க வைத்தார்கள். இருவர் இணைந்து நடிக்கும்போதும் தேவிகாவிடம் ஒரு தனித்தன்மையும் வசீகரமும் கூடுதலாகவே தென்பட்டது. வன்தொடர்தல் என்று அறியாமலே… ‘பெண்களை வன்தொடர்தல்’ என்ற சொல்லாக்கம் தற்போது பரவலாகியிருக்கிறது. அதன் நேரடி அர்த்தம் ஒரு பெண்ணைப் பின் தொடர்ந்து சென்று அவளுக்குத் தொந்தரவு தருவது. அது ஈவ்டீஸிங் குற்றமாகவும் இன்றைக்குக் கருதப்படுகிறது. ஆனால், இவர் நடித்த ஒரு பாடல் காட்சி மிக மிகப் பிரபலமானதுடன் புகழ் பெற்ற காட்சியும் கூட. நாகரிகமான படித்த இளைஞன் ஒருவன், கடற்கரையில் பொது இடத்தில் ஒரு இளம் பெண்ணைப் பின்தொடர்ந்து செல்வதுடன் அவளின் நடையையும் தோற்றத்தையும் புகழ்வதாகக் கேலி செய்யும் பாடல் 60களில் வானொலியிலும், அசலாகவே கல்லூரி மாணவர்கள் மாணவிகளைப் பார்த்துப் பாடும் பாடலாகவும் இருந்தது. அதுதான் ‘தி கிரேட்’ ‘நடையா…. இது நடையா… ஒரு நாடகமன்றோ நடக்குது….’ ஆனால், காட்சியின் முடிவில் சம்பந்தப்பட்ட பெண் பாத்திரமான கீதா, அந்த இளைஞனை போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்புக்குள் தள்ள வைப்பாள். அது குறித்த விழிப்புணர்வு பெண்களிடையே அப்போது ஏற்பட்டதா என்றால் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். நாயகியாக நடித்தவர் தேவிகா. நாயகன் சிவாஜி. அது அவரின் சொந்தப் படமும் கூட. பின்னர் அந்த மோதலே காதலை நோக்கி இட்டுச் செல்வதாகவும் காட்சிகள் மாறும். காகித ஓடம் கடலலை மீது போனதை மறக்க முடியுமா? 1966ல் வெளியான ‘மறக்க முடியுமா?’ கலைஞர் கருணாநிதியின் வசனத்தாலும் பாடல்களாலும் மிளிர்ந்தது. படத்தின் இறுதிக்காட்சிகள் நம்மை உறைய வைத்து விடும். தேவிகாவின் விழி வீச்சு வாள் வீச்சைக் காட்டிலும் கூர்மையாகித் தைத்தது. அக்காட்சியில் வசனங்கள் ஏதுமின்றிப் பேசாத கதைகளைப் பேசின அந்த விழிகள். கலைஞரின் சொற்களில் மிளிர்ந்த ‘காகித ஓடம் கடலலை மீது, போவது போலே மூவரும் போவோம்’ பாடல், காட்சிச் சூழலுக்கு ஏற்ப அமைந்து ரசிகர்களின் கரவொலியால் அதிர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தியின் இசையும் தனித்து வென்றது. தெலுங்கில் வெளியான ‘சந்தானம்’ தமிழில் ‘மறக்க முடியுமா?’ என்றானது நிச்சயமாக மறக்க முடியாததுதான். கலைஞரின் வசனங்களைப் பேசி தேவிகா நடித்த முதலும் கடைசியுமான படமும் இதுதான். ‘மறக்க முடியுமா?’ படத்தை அடுத்து தேவிகா ஜெய்சங்கருடன் ‘தெய்வீக உறவு’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இது அவர் இரட்டை வேடம் ஏற்று நடித்த படமும் கூட. வேறு படங்களில் தேவிகா இரட்டை வேடம் ஏற்கவில்லை. மற்றொரு படமான ‘தேவி’ மலையாளத்திலிருந்து தமிழுக்குப் பெயர்க்கப்பட்டது. முத்துராமன் நாயகனாக நடிக்க ‘தேவி ஸ்ரீதேவி… தேடி அலைகின்றேன்’ என்ற தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் இசையில் அமைந்த பாடல் மட்டுமே பிரபலமானது. கால மாற்றத்தின் பரிணாம வளர்ச்சி 1968க்குப் பின் தமிழில் புதிய நட்சத்திரங்களின் வரவால் கதாநாயகி வாய்ப்புகள் குறையத் தொடங்கிற்று. சிவாஜி கணேசனுடன் அதிகப் படங்களில் நடித்தவர் என்ற நிலை மாறி கே.ஆர்.விஜயா அந்த இடத்தை எட்டிப் பிடித்தார். 70களில் வெளியான ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் சிவாஜிக்கு அண்ணியாக நடித்தார். ‘அபூர்வ சகோதர்கள்’ படத்திலும் ஏ.வி.எம்.ராஜன், ஜெய்சங்கர் போன்ற நாயகர்களின் அண்ணியானார். ‘பாரத விலாஸ்’ படத்திலும் பஞ்சாபிப் பெண்ணாக குணச்சித்திர வேடம். கடைசியாக சிவாஜிக்கு ஜோடியாக ‘சத்யம்’ படத்தில் நடித்தார். ‘ஆனந்த ஜோதி’ யில் மாஸ்டர் கமலஹாசனின் அக்காவாக நடித்தவர், இப்படத்தில் இளம் கமலஹாசனின் அண்ணியாக அவதாரம் எடுத்தார். 70களில் தமிழை விட தெலுங்குப் படங்களிலேயே அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அதன் பிறகு பல ஆண்டுகள் பட வாய்ப்புகள் இன்றி இருந்தவரை மீண்டும் 1986ல் கமல் கதாநாயகனாக நடித்த ‘நானும் ஒரு தொழிலாளி’ படத்துக்காக அழைத்து வந்தார் ஸ்ரீதர். தேவிகாவுக்கு இதிலும் கமலின் அண்ணி வேடமே வாய்த்தது. பத்தாண்டு கால இடைவெளியில் சற்றே வயது கூடிய, உடல் பெருத்துப் போன தேவிகா பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தார். தேவிகாவின் குண நலன்கள் தேவிகாவை வைத்துப் படமெடுக்காத இயக்குநர்கள் மூவர். கிருஷ்ணன் -பஞ்சு இரட்டையர்கள், கே.எஸ்.கோபால கிருஷ்ணன், கே.பாலசந்தர் ஏதோ சில காரணங்களால் தேவிகாவை அணுகவில்லை. சின்னப்பா தேவரின் தேவர் பிலிம்ஸ், டி.ஆர்.ராமண்ணாவின் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனங்களிலும் தேவிகா நடிக்க அழைக்கப்பட்டதில்லை. ஆனால், மற்ற இயக்குநர்கள் பாராட்டும் வகையில்தான் தேவிகா இருந்தார். அவர் இருக்கும் படப்பிடிப்பு அரங்குகள் அவரது கள்ளமில்லாத கலகல சிரிப்பாலும், தின்று தீர்த்த வேர்க்கடலைத் தொலிகளாலும் நிறைந்திருக்கும் என்று பலரும் குறிப் பிட்டிருக்கிறார்கள். குறிப்பாக கால்ஷீட் பிரச்சனைகள் செய்யாதவர் என்பதும் அப்போதைய இயக்குநர்கள் குறிப்பிட்ட காரணங்களில் முதன்மையானது. நடிகை சரோஜா தேவி இதே காரணத்துக்காகவே புறக்கணிக்கப்பட்டவர். கட்டுப்பெட்டித்தனமாகப் பழமைவாதம் பேசும், அதைத் தீவிரமாக ஆதரிக்கும் உறவுகளைக் கொண்ட குடும்பத்திலிருந்து திரையுலகுக்கு வந்தவர் என்பதால் ஒழுக்க நியதிகள் பேசிய உறவுகள் அவரை முற்றிலும் நிராகரித்தன. அதனால் அவரும் நிர்தாட்சண்யமாக அவர்களிடமிருந்து விலகியே இருந்தார். தானே தேடிய வாழ்க்கைத் துணை உறவுகளற்று இருந்ததாலோ என்னவோ தனக்கான வாழ்க்கைத் துணையையும் தானே தேர்வு செய்து கொண்டார். பிற்காலத்தில் நடிகை தேவயானி புகழின் உச்சியில் திரைவானில் நட்சத்திரமாக ஜொலித்தபோது, உதவி இயக்குநரான ராஜகுமாரன் மீது காதல் கொண்டு, பின் அவர் இயக்குநர் ஆனதும் தன் வீட்டையும் உறவுகளையும் மீறி திருமணம் செய்துகொண்ட சம்பவமே நினைவுக்கு வரும். ஆனால், இவர்கள் காதலுக்கு முன்னோடியாக தேவிகாவின் காதல் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் எந்தத் திரைப்பட நடிகையும் எடுக்காத ஒரு துணிச்சலான தீர்மானமான முடிவெடுத்து தனக்கு இணையாக, இயக்குநர் பீம்சிங்கிடம் அப்போது ஒரு உதவி இயக்குநராகப் பணியாற்றிய தேவதாஸை தேர்வு செய்தார். தேவதாஸின் தந்தை ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘அசோக்குமார்’ திரைப்படத்தைத் தயாரித்தவர் அவர்தான். மகனுக்கு திரைப்படத்தில் ஆர்வம் இருப்பதை அறிந்து, இயக்குநர் பீம்சிங்கிடம் உதவி இயக்குநராகச் சேர்த்துக் கொள்ளும்படி சிபாரிசு செய்தவரும் அவர்தான். ‘பாசமலர்’ படத்திலிருந்து தேவதாஸ் உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். முதலில் தேவிகாவின் காதலை அவர் ஏற்க மறுத்தபோதும், தேவிகாவின் மாறாத அன்பும் பிடிவாதமும் அவரைச் சம்மதிக்கச் செய்தன. உதவி இயக்குநராக இருந்த தேவதாஸ், படம் தயாரித்து இயக்குநராக மாறக் காரணமாக இருந்தவரும் தேவிகாதான். அவரே ‘வெகுளிப்பெண்’ படத்தைத் தயாரித்தார். இதன் மூலக்கதை நாடகமாக நடத்தப்பட்ட ‘வெள்ளிக்கிழமை’யின் கதாசிரியர், இயக்குநர் கலைஞானம். ஜெமினி கணேசன், தேவிகா இணையாக நடிக்க முத்துராமனின் அண்ணியாக மாறினாலும் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார். அப்படம் 1971 ஆம் ஆண்டின் சிறந்த மாநிலப் படத்துக்கான ஜனாதிபதி விருது பெற்றது. அவ்வளவு தீவிரமாகக் காதலித்து மணந்து கொண்டதன் பலனாகக் கிடைத்தவர் மகள் கனகா மட்டுமே. இந்தத் திருமண பந்தம் நீடிக்கவில்லை என்பது கசப்பான உண்மை. இதுவே அவரது இயல்பான குணத்தையும் மாற்றி, பிடிவாதக்காரராகவும் சிடுசிடுப்பு நிறைந்த பெண்ணாகவும் மாற்றி இருக்கலாம். மகள் கனகா நடிகையானபோதும், தேவிகாவின் குறுக்கீடுகளும், தலையிடுதலும் கனகாவின் திரையுலக வீழ்ச்சிக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. தேவிகா நடிகையாக இருந்த காலமும் அவர் மகள் கனகா நடிக்க வந்த காலமும் வேறு வேறு என்பதையும் அவர் உணரவில்லை. மன உளைச்சல்கள் நோயாளியாக்கி 60 வயது நிறையும் முன்பாகவே, மகளை நிராதரவாக்கி விட்டு 2002ல் மறைந்தார் தேவிகா. அசலும் திரையுலக பிம்பமும் திரைப்படங்களில் அன்பே உருவான பெண்ணாக, மென்மையான குணநலன்களை பிரதிபலிக்கும் தேவதையாக, கணவன், காதலன், தந்தை என ஆண் பாத்திரங்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவர்களாகவே பெரும்பாலும் அக்காலக் கதாநாயகிகள் பலரும் சித்தரிக்கப்பட்டார்கள். சொல்லப்போனால் அவர்களை சிருஷ்டித்தவர்கள் ஆண்களே. ஒரு ஆண் மனது பெண் எவ்வாறானவளாக இருக்க வேண்டுமென விரும்பியதோ, விரும்புகிறதோ அவ்வாறே தங்களுக்கேற்ற கதாநாயகிகளை களிமண் பொம்மைகளைப் போல உருவாக்கினார்கள். அவற்றில் ஒரு சில விதி விலக்குகள் இல்லாமல் இல்லை. ஆனால், பிற்காலத்தில் அந்த நாயகியை அதே பிம்பத்தோடே அணுகியவர்களுக்குப் பெரும் அதிர்ச்சிதான் பலனாகக் கிடைத்தது. ஒரு பெண் எப்போதும் மென்முறுவல் தவழ மென்மையானவளாகவே வாழ்வதென்பதும் சாத்தியமல்ல. அசல் வாழ்க்கை வேறு; திரையில் காண்பிக்கப்பட்ட நகல் பிம்பம் வேறு என்ற புரிதல் இல்லாமல் அணுகியவர்கள் ‘சிடுசிடு’ முகத்தையும் கண்டு அதிர்ந்துதான் போனார்கள். அது நிச்சயமாக தேவிகாவின் தவறல்ல. பெண்ணுக்கே உரித்தான ஆசாபாசங்களும், வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களையும் அனுபவித்துத் துவண்டு போன ஒரு சாதாரண பெண் அவர் என்ற புரிதலுடன் அணுகினால் அவரது நடவடிக்கைகள் ஏமாற்றம் அளித்திருக்காது. சில சினிமா பத்திரிகையாளர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவம் குறித்து எழுதியபோதும், பேசியபோதும் எனக்குள் இவ்வாறான சிந்தனைகளே அலை பாய்ந்தன. எது எவ்வாறு இருப்பினும், தன் நடிப்பாற்றலால் கலையுலகுக்கு அவர் ஆற்றிய சேவை, எளிய ரசிக மனங்களைக் கொள்ளை கொண்ட தன்மை இவை போதும் தேவிகாவை நினைக்கவும் ரசிக்கவும். தன் ஆடல், பாடல், நடிப்பால் நம்மை மகிழ வைத்த ஒரு கலைஞருக்கு நாம் திருப்பிச் செலுத்தும் மரியாதை அதுவேயாகும். குங்குமம்
  12. ஆத்திக் குடிக்கிறீங்களோ, இல்லை ஊத்திக் குடிக்கிறீங்களோ.. ஒரு ஆள்தான், ஒரு ஆளுக்கு ஏன் நாலு கிளாஸ்..? ஒருவேளை கரணவாய்...................?
  13. வடிவா இருக்கீங்க, கு.சா.. ! ஆனால், ஆளையும் கடைசியில் நடுங்குவதையும் பார்த்தால், எழுபது வயசு மாதிரி தெரியலையே..? ரெண்டு குடி போத்தலுக்கு ஏன் நாலு கிளாஸ் இருக்கு..? 🙄 விளக்குவீர்களா..?
  14. என்ன சாமிகளே, திண்ணைக்குள் எந்த வெளி இணைப்பு படங்களும்(URL to image) தெரியமாட்டேங்குது.. கொரானா விளைவா..?
  15. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி பகுதியை சேர்ந்த லோகமணி என்ற ஏழை பெண்ணின் தாய்மை உணர்வை பாராட்டி மாநிலத்தின் தலைமை காவல் இயக்குநரான (DGP) திரு.கவுதம் சவாங் அவர்கள் அழைத்து நேரடி காணொளி மூலம் "போலீஸ் சல்யூட்" அளித்து கெளவரப்படுத்தியுள்ளது அனைவரையும் நெகிழ்ச்சியுற செய்துள்ளது. ஊரடங்கு உத்தரவின் போது ரோந்து பணியில் ஈடுப்பட்ட போலீசாருக்கு ஏழை பெண் ஒருவர் குளிர்பானங்கள் வாங்கிக்கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக மக்கள் அனவைரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதாரத்துறையினர், போலீசார், தூய்மை பணியாளர்கள் போன்றார் நேரடியாக களத்தில் இறங்கி கொரோனாவுக்கு எதிராக போராடிவருகின்றனர். இந்நிலையில், ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாரிடம் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் குளிர்பானங்களை அளித்த சம்பவம் காணொளியாக வெளியாகி வைரலாகிவருகிறது. மேலும், அங்கிருந்த அதிகாரி ஒருவர் 'அந்த பெண் யார்? என்ன வேலை செய்கிறார்? எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்..?' என விசாரிக்கிறார். அதற்கு தான் 3500 சம்பளம் வாங்குவதாக அந்த பெண் கூறியுள்ளார். தனது ஏழ்மையிலும் தங்களுக்குகாக உச்சி வெய்யிலில் பணிசெய்யும் காவலர்களுக்கு ஏழை பெண் ஒருவர் குளிர்பானம் வாங்கிக்கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. -நேற்றைய தின செய்தியில் படித்து நெகிழ்வுற்றது.
  16. சென்னையில் கரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்பு; ஆம்புலன்ஸை உடைத்து ஊழியர்கள் மீது தாக்கு: 20 பேர் கைது சென்னையில் மனிதாபிமானமற்ற செயலாக கரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவித்து அவரது உடலைக் கொண்டுவந்த மருத்துவப் பணியாளர்களைத் தாக்கி, ஆம்புலன்ஸை உடைத்த சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். நேற்றிரவு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடலைப் புதைக்க அண்ணாநகர் எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் வேலங்காடு சுடுகாட்டுக்குக் கொண்டு வந்தனஃப்ர். அப்பகுதி அருகே உள்ள அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சிலர், மருத்துவர் உடலை இங்கே கொண்டு வரக்கூடாது, திருப்பி எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறித் தகராறில் ஈடுபட்டனர். உடன் வந்த பணியாளர்கள் எடுத்துச் சொல்லியும் கேட்காமல் கற்களாலும், கட்டைகளாலும் ஆம்புலன்ஸைத் தாக்கினர். இதனால் ஆம்புலன்ஸின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது. ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் ஆனந்துக்கும் (30) அவருடன் வந்த மற்றொரு பணியாளர் தாமோதரனுக்கும் (28) மண்டை உடைந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட அவர்களிடம் தப்பித்து பிரேதத்துடன் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்குத் திரும்பிச் சென்றனர். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவர் தலையிலும் தையல் போடப்பட்டு கட்டுப் போடப்பட்டது. இருவரும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். சம்பவம் குறித்துத் தகவலறிந்த போலீஸாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரேதத்தை இரவு 1 மணியளவில் வேலங்காடு கல்லறைக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தனர். மேலும் அப்போதும் போலீஸாருடனும், அதிகாரிகளுடனும் தகராறு செய்து, பணி செய்ய விடாமல் தடுத்த 20 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோரைத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது ஐபிசி பிரிவு 188 (ஊரடங்கை மீறுதல்), பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஐபிசி 269 (தொற்றுநோய் தடுப்பு சட்டம்), 145 (சட்டவிரோதமாக கூடுதல்), 341 (இயங்கவிடாமல் தடுத்து சிறைப் பிடித்தல்), 294 (பி) (அவதூறாகப் பேசுதல்), 353 (ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (1) கொலை மிரட்டல் மற்றும் பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரோனா குறித்த சமூகப் பரவல் மீது அக்கறையில்லாமல், அரசின் எச்சரிக்கையை மதிக்காமல் ஒரு பக்கம் மக்கள் சாலைகளில் திரிகின்றனர். இன்னொரு பக்கம் இறந்தவர்களின் உடலைப் பாதுகாப்புடன் புதைக்க முயன்றால், தடுக்கின்றனர். இச்சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடக்கின்றன. நேற்று ஈரோடு நம்பியூரிலும் மரணமடைந்த 17 வயதுச் சிறுவனின் உடலைப் புதைக்கவிடாமல் தகராறு செய்துள்ளனர். "உண்மையிலேயே கிருமித் தொற்று பரவாமல் இருக்க வேண்டுமானால், அரசு கூறியுள்ள ஊரடங்கை முறையாகக் கடைப்பிடித்து அவசியமான நேரத்தில் மட்டுமே வெளியில் வர வேண்டும். அந்த நேரத்திலும் சமுதாய விலகலைக் கடைப்பிடிப்பதுதான் சரி. அதைவிடுத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தெளிவின்மையைக் காட்டுகிறது" என்று காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழ் இந்து கொரோனாவால் இறந்த டாக்டர்.. அடக்கம் செய்ய விடாமல் தாக்கிய மக்கள்.. நடந்தது என்ன? உடனிருந்தவர் பேட்டி சென்னை: நேற்று கொரோனா காரணமாக பலியான மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய கீழ்பாக்கம் பகுதி மக்கள் அனுமதிக்காத சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட மருத்துவர் நேற்று சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பலியான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் நரம்பியல் நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்போடு அனுமதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனை ஒன்றில் இவர் நிர்வாக இயக்குநராக இருந்தவர். அப்போலோவில் தீவிரமாக இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பலியானார். உடல் அடக்கம்: அப்போலோ மருத்துவமனையில் இருந்து நேற்று இரவு இவரின் உடலை மயானத்தில் தகனம் செய்ய எடுத்து சென்றுள்ளனர். நேற்று இரவு இவரின் உடலை தகனம் செய்ய கீழ்பாக்கம் பகுதிக்கு எடுத்து சென்றனர். மாநகராட்சி அனுமதியுடன் கீழ்பாக்கம் பகுதியில் உடலை தகனம் செய்ய கொண்டு சென்றுள்ளனர். இந்த செய்தி அறிந்து மக்கள் வேகமாக கீழ்ப்பாக்கத்தில் உடல் தகனம் செய்யப்பட வேண்டிய இடத்திற்கு வந்துள்ளனர். அங்கு வந்த கீழ்பாக்கம் பொதுமக்கள் இவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனம்: அதோடு அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மிக மோசமாக தாக்கி உடைத்து உள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுனரை கற்களை கொண்டு தாக்கியுள்ளனர். இதையடுத்து அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மருத்துவரின் உடலோடு வேகமாக அங்கிருந்து தப்பித்து சென்றனர். மருத்துவரின் மனைவி மற்றும் குழந்தைகளும் ஆம்புலன்சில் இருந்துள்ளனர். அவர்களும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்துள்ளனர். கீழ்பாக்கம் சென்றது: அதன்பின் அங்கிருந்து உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவரின் உறவினர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை விட்டுவிட்டு, அவர்களுக்கு முதலுதவி அளிக்க கூறியுள்ளனர். அங்கிருந்து ஒரு மருத்துவர் இரண்டு உதவியாளர் மட்டும் அந்த மருத்துவரின் உடலை ஆம்புலன்ஸ் ஒன்றில் எடுத்துக் கொண்டு வேளங்காடு மயானத்துக்கு எடுத்து சென்றனர். கொண்டு சென்றனர்: பின் வேளங்காடு மயானத்தில் இரவோடு இரவாக உறவினர்கள் இல்லாமல், மருத்துவர் உடலை புதைத்து உள்ளனர். இந்த கோர சம்பவம் குறித்து விளக்கிய பலியான மருத்துவரின் நண்பர் மருத்துவர் பாக்கியராஜ் முக்கிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் தனது வீடியோவில் , என்னுடைய நண்பர் கொரோனா காரணமாக பலியானார். அப்போலோ கிரீம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் பலியானார். புதைக்க முடியவில்லை: அவரின் உடலை அனுமதியோடு அடக்கம் செய்ய சென்றோம். ஆனால் மக்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. எங்குமே அவரின் உடலை அடக்கம் செய்ய முடியவில்லை. இதை நான் கண்ணீரோடு சொல்கிறேன். அவர் ஒரு சிறந்த மருத்துவர். ஆனால் அவருக்கு மக்கள் மரியாதை செய்யவில்லை. மக்களுக்கு உதவி செய்ய பணியாற்றிய மருத்துவருக்கு இதுதான் நிலை. அடியாட்கள் போல வந்து கல்லையும், கட்டையும் வைத்து மிக கொடூரமாக தாக்கினார்கள். மருத்துவரின் உடலை போட்டுவிட்டு ஓடிவந்தோம். உருக்கமாக கண்ணீர்: அந்த அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டது. கடைசியில் வேறு இரண்டு மருத்துவர்கள் அவரின் உடலை மீட்டு வந்து அடக்கம் செய்தனர். "இதுதான் மருத்துவர்களுக்கு நீங்கள் செய்யும் மரியாதையா? இதுதான் நீங்கள் எங்களுக்கு கொடுக்கும் நன்றிக்கடனா? அவரின் ஆத்மா சாந்தி அடையுமா சொல்லுங்கள்?.. எங்களை எல்லாம் கல்லை வைத்து ஏன் அடிக்கிறீர்கள்..? இனி யாருக்கும் இப்படி ஒரு நிலை வர கூடாது" என்று டாக்டர் பாக்யராஜ் உருக்கமாக கூறியுள்ளார்.
  17. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நிலாமதி அக்கா..!
  18. அருமையான பாடல்களின் இரைமீட்டல்கள்.. ஒவ்வொரு பெண் பாடகர்களை பற்றிய சிறு குறிப்புகளை சேர்த்திருப்பது இன்னமும் சிறப்பு..! 😎
  19. நேற்றைய திருப்பூர் கேரம் போர்டு வீரர்களுக்கு அடுத்து, இன்று சேலம் கிரிக்கட் வீரர்களின் ஓட்டம்..! 🤣
  20. "குருமா" வருதுன்னு சொன்னாங்களா.. அதான் தலையில வேப்பிலை வச்சுக்கிட்டேன்..! வெள்ளந்தி பாட்டி. சென்னை: "எதுக்கு தலையில வேப்பிலை வெச்சிருக்கீங்க..?" என்று கேட்டதற்கு, "குருமா வருதுன்னு சொன்னாங்க, அந்த குருமாவுக்காக ஆண்டவனை வேண்டிக்கிட்டு வேப்பிலையை வெச்சிக்கிட்டேன்.. நிறைய பேர் குருமா நோவு வந்து சாகறாங்களாமே.. என்னமோ தீங்கு வருதாம் நமக்கு..!" என்று துப்புரவு பணியாளர் ஒருவர் வெகு இயல்பாகவும், வெள்ளந்தியாகவும் பதிலளிக்கிறார்.. இன்னும்கூட இந்த வைரஸின் பேர் வாயில் நுழையாமல் பல கிராம மக்கள் உள்ளனர். ஆனால் பெரிய நோய் என்று மட்டும் புரிந்து கொண்டுள்ளனர். கொரோனாவுக்கு கிராமப்புறங்களில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீரை வீடு, வாசல்களில் தெளித்து வருகின்றனர். எனினும் கொரோனா வேப்பிலை, மஞ்ச தண்ணீரில் குணமடையும் என அறிவியல்பூர்வமாக நிரூபணமாகவில்லை. அந்த வகையில் பெண் ஒருவரின் வீடியோ வைரலாகி வருகிறது..! இவர் தன்னுடைய தலையில் வேப்பிலையை செருகி உள்ளார். தூய்மை பணியாளர். புதுச்சேரியை சேர்ந்தவர். நெற்றி நிறைய குங்குமம், மஞ்சள் பூசி மங்கலமாக காணப்படுகிறார். இவரிடம் செய்தியாளர் ஒருவர் "தலையில எதுக்கு வேப்பிலையை வெச்சிருக்கீங்க..?" என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த பெண் முழுக்க முழுக்க வெகுளித்தனமான பதிலை வெகு யதார்த்தமாக சொல்கிறார். "நாடு விட்டு நாடு, நகரம் விட்டு நகரம், என்னமோ தீங்கு வருதாம்.. நாங்க இந்த பாண்டிச்சேரியில எவ்வளவோ உழைக்கிறோம், போறோம், வர்றோம்.. எங்களுக்கெல்லாம் லீவும் கிடையாது, ஒன்னும் கிடையாது.. இந்த குருமா வருதுன்னு சொன்னாங்க.. உடனே எங்க ஊரு பசங்க என்னை அனுப்பல.. நீ போனால் திரும்பி வரமாட்டேன்னு சொன்னாங்க.. ஆனால் கடவுள் நம்பிக்கை இருக்கவும் தலையில வேப்பிலையை வெச்சிக்கிட்டு வந்திட்டேன்" என்றார். செய்தியாளர் அவரிடம் "எந்த நோய்க்காக வெச்சிருக்கிறதா சொன்னீங்க..?" என்று திரும்ப கேட்கிறார்.. அதற்கு "குருமா வருதுன்னு சொன்னாங்க, அந்த குருமாவுக்காக ஆண்டவனை வேண்டிக்கிட்டு வேப்பிலையை வெச்சிக்கிட்டேன்.. நிறைய பேர் குருமா வந்து சாகறாங்க.. யாருக்கும் அந்த நிலைமை வரக்கூடாது" என்றார். உடனே செய்தியாளர், "அப்படியில்லை, குழந்தை பெத்தவங்கதான் தலையில வேப்பிலை வெச்சிப்பாங்க, நீங்க ஏன் வெச்சிருக்கீங்க..?" என்று கேட்க, "குருமாங்க.. மீண்டும் (தூய தமிழ்) நான் சொல்றேன், குருமா நோவு வருதுங்க.." என்றார். கொரோனா ஒரு தொற்று என்பதை மட்டும் கிராம மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அம்மை போன்ற கொள்ளை நோய்களை எப்படி விரட்டினார்களோ, அதுபோலதான் இந்த கொரோனாவையும் கிராம மக்களில் பலர் கையாண்டு வருகின்றனர். எனினும் யதார்த்தமாக பேசும் இந்த பெண்ணின் வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர். ஒன் இந்தியா
  21. களத்தின் முகப்பில் பயனர்களை கவர இந்த "ஆப்சன்" ரொம்ப நல்லாவே இருக்கு..! Good indeed..
  22. நான் நாலஞ்சு தடவை இந்த காணொளியை பார்த்து சிரித்துவிட்டேன்.. 🤣 'காரம் போர்டை' தூக்கிகொண்டு ஓடுபவரின் புத்திசாலித்தனமும், பின்னர் அவர் கீழே போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடுவதும், அதற்கு ஏற்றாற்போல பின்னணி இசையும், குரலும் மிக அருமையாக பொருந்துகிறது. யார் செய்த வேலையோ..? 👌
  23. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன..? கொரானா ஊரடங்கை மீறி கூட்டம் சேர்க்கும் ஆட்களை விரட்டி விரட்டி படமெடுக்கும் இந்த தொழில் நுட்பத்தை பார்த்து பயந்து ஓடும் நபரின் செயல் வியந்து சிரிக்க வைக்கிறது.. நல்ல புத்திசாலி, லுங்கி அவிழ தலைதெறித்து ஓடுவது வேடிக்கை..!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.