Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. சென்னை விமான நிலையம் - இரண்டு விமான ஓடு தளங்களுடன்..!
  2. 'படலைக்கு படலை' ன்னு காணொளி தொடர் நாடகம் வெளிவந்ததாமே..? யாருக்காவது அதனின் இணைப்பு தெரியுமா..? யூடுயூபில் இருக்கும் ஓரிரண்டு பதிப்புகள் தெளிவில்லாமல் உள்ளது.
  3. நானும் முதலில் இது சிவாஜிதான் என நினைத்தேன். க்ளோசப்பில் காட்டும்போது முகம் வேறு மாதிரி இருந்ததாலும், 'இப்படி மேடை நடிகராக சிவாஜி வர வாய்ப்பே இல்லை' என்பதாலும் இவர் நகல்தான் என்ற முடிவிற்கு வந்தேன். ஆனால் இவரின் உடல்மொழியும், அசைவும் அச்சொட்டாக சிவாஜியின் நடிப்பை ஒத்தேயிருக்கிறது.
  4. கனடாவில் இருந்து இயக்குனர்..! பெரும்பாலும் பாரிஸ் லாசப்பல் பகுதிகளில் படமாக்கப்பட்டு வெளிவரும் இந்த நகைச்சுவை தொடர்கள் சிலவற்றை நான் பார்த்துள்ளேன். (செல்ப்ஃபி அக்கம் பக்கம், சேம் டூ யூ போன்றவைகள்) சமீபத்தில் வெளிவந்துள்ள இந்த நகைச்சுவை காணொளி அருமை..! இதில் நடித்துள்ள கணபதி ரவீந்திரன், சிறீ அங்கிள் மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோரின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பு நன்றாக உள்ளது. ஈழத்திலும் நல்ல கலைஞர் உள்ளனரே, ஏன் அவர்களின் திறமைகள் அதிகம் வெளியே தெரிவதில்லை? வியப்பாக உள்ளது..!
  5. யாரு பார்த்த வேலையப்பு..? நகல் இருக்கலாம், ஆனால் நகலுக்கும் அசலுக்கும் வித்தியாசமே இல்லாமல் நடிப்பது சாதாரண காரியம் அல்ல.. நம்ப முடியவில்லை..!
  6. நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி..! ஏதோ வேலையாவது செய்யுதே, இங்கே அதுவும் இல்லை..!! கடந்த ஆறு மாதங்களாக யாழின் வரம் கிடைக்குமா, தரிசணம் கிட்டுமா..? என தவமிருக்க வேண்டியுள்ளது.
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தமிழ் தேசியன்.. வாழிய பல்லாண்டு..!
  8. மதுரை உணவகத்தின் மெனுவில் 'பழைய சோறு..!' மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள "நெல்லு பேட்டை" என்ற உணவகத்தில் பழைய சோற்று கஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.வீட்டில் மிஞ்சிய சோற்றை குப்பையில் கொட்டும் நகர்புற கலச்சாரத்துக்கு மத்தியில் உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழைய சோறு ஜி.எஸ்.டியுடன் மதுரையில் உள்ள ஓட்டல் ஒன்றில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது உணவு பழக்கங்கள் மாறிவரும் இந்த நிலையில் மீண்டும் ஆரோக்கியமான உணவை நோக்கி மக்கள் நகர தொடங்கி இருக்கின்றனர் என்பதற்கான அறிகுறிதான் மதுரை மாட்டுதாவணியில் பழைய சோறு விற்பனை செய்து வருகின்றனர்.பழைய சோற்றில் மோர் கலந்து பச்சைமிளகாயும், வெங்காயமும் சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு குளிர்ச்சியையும் உள்ளத்துக்கு சுறு சுறுப்பையும் கொடுத்தது. கால ஓட்டத்துக்கு ஏற்ப உடல் உழைப்பு குறைந்த பணிகளில் ஈடுபடும் படித்தவர்கள் மற்றும் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு செல்லும் நகரவாசிகள் இட்லி, தோசை என்றும் வட நாட்டு உணவான புரோட்டா, சப்பாத்தி, பூரி, பானி பூரி என்றும் அன்னிய உணவுகளான பீட்சா, பர்கர், சாண்ட்விட்ஜ் என்றும் திசைமாறினர்.இதனால் பெரும்பாலான வீட்டில் மிச்சமாகும் சாப்பாடு பழைய சோறாகி குப்பைக்கும், ஆடு மாடுகளுக்கும் உணவாக வைக்கப்பட்டு வருகின்றது. கஞ்சிகளையத்தில் பழைய சோறு, தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய், வெங்காயம், சீனியரக்காய் வத்தல், ஊறுகாய் என உச்சி வெயிலில் வரும் வாடிக்கையாளரை குளிர வைக்கும் பழைய சோறு காம்போவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் விலை ஜிஎஸ்டி உடன் சேர்த்து50 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். அதனை நம்மவர்கள் ஸ்பூனில் அள்ளி சாப்பிடுவதை காணும் போது, காலச் சக்கரம் வேகமாக சுழல்வதை கண்கூடாக காணமுடிகின்றது. தங்கள் ஓட்டலில் பழைய சோறு விற்பனை செய்யபடுவதாக இணையத்தில் தகவல் பரவியவுடன் ஏராளமான படித்த இளைஞர்கள் பழைய சோற்றின் மகத்துவம் அறிந்து ஓட்டலுக்கு தேடி வந்து சாப்பிடுவதாகவும், இன்னும் பலர் ஸ்விக்கி, உபர் ஈட்ஸ், சுமோட்டோ போன்ற ஆன்லைன் உணவு பரிமாற்ற நிறுவனங்கள் மூலம் ஆன்லைனில் ஆர்டர் செய்து பார்சலாக வாங்கிச்சென்று சாப்பிடுவதாக ஓட்டலின் மேலாளர் பெருமை கொள்கிறார். தொடர்ந்து தன் உணவகத்தை பாரம்பரிய உணவாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டைம்ஸ் தமிழ்
  9. யாயினி, பூரண நலம் பெற எனது வேண்டுதல்கள்!
  10. சிக்கும் பணம்: மக்கள் கோபம் சென்னை: தேர்தலுக்கு, 13 நாட்களே உள்ளன. கட்சிகள் தீவிர பிரசாரத்தில் இருக்கின்றன. தேர்தல் கமிஷனும், அதிகாரிகளை முடுக்கி விட்டுள்ளது.அனைத்தையும் தாண்டி, மக்கள் விவாதிக்கும் விஷயம்: பணம். "உங்க ஏரியாவில் குடுத்துட்டாங்களா...? எந்த கட்சில்லாம் குடுத்திருக்கு...? எவ்வளவு குடுத்தாங்க...? தவணையா, புல்லா...?" எந்த தொகுதியை சுற்றி வந்தாலும், காதில் விழும் விசாரணைகள் இப்படித்தான் இருக்கிறது.வேலுாரில், பல கோடி சிக்கிய செய்தி பரவியபின், மேற்படி கேள்விகள் வேகம் எடுத்திருக்கின்றன. 'ஓட்டுக்கு பணம் கொடுக்காதே' என்று கட்சிகளையும், 'ஓட்டை விலைக்கு விற்காதே' என்று மக்களையும் தேர்தல் கமிஷன் எச்சரிக்கிறது. சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்த கோஷங்களை பிரசாரமாக நடத்துகின்றன. பிரபலங்களும், தம் பங்குக்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுகின்றனர். ஆனால், பொதுமக்கள் இதையெல்லாம் ரசிக்கவில்லை என்பதுதான் கள எதார்த்தம். காரணம், ஓட்டுக்கு தரப்படும் பணம், 'தங்களுக்கு சொந்தமானது' என்ற எண்ணம், மக்கள் மனதில் இறுகிக் கிடக்கிறது. அரசியல்வாதி நம்மிடம் பல வழிகளில் கொள்ளை அடித்த பணத்தை, நமக்கு திருப்பிக் கொடுக்கும் நேரம் தான் தேர்தல். அதை தடுப்பது தான் தவறு என்கின்றனர். 'துரைமுருகன் வீட்டில் இத்தனை கோடி சிக்கியிருக்கிறது என்று செய்தி வாசிக்கின்றனர். அவர் என்ன, ஏர் பிடித்து வயலில் உழைத்து சம்பாதித்த பணமா அது? பொதுப்பணித்துறை அமைச்சராக பல ஆண்டுகள் உட்கார்ந்து சேர்த்த பணம் அது. அதில், ஒரு பகுதியை எடுத்து, தன் மகனின் வெற்றிக்காக மக்களுக்கு வினியோகிக்கிறார். அதை நாங்கள் பெற்றுக் கொள்வதில் என்ன தவறு,' என்று கேட்கின்றனர், வேலுார் தொகுதி வாக்காளர்கள். 'பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் ஜனநாயகம் செத்துப் போகுமே?' என்ற கேள்வி அவர்களுக்கு ஆவேசத்தை உண்டாக்குகிறது. 'ஆளும் கட்சியாக இருந்தால், தலைக்கு, ஆறாயிரம், இரண்டாயிரம் என்று, பேங்க் அக்கவுன்டில் போடுகின்றனர். அது லஞ்சம் இல்லையா? உண்மையிலேயே எங்கள் மீதான அக்கறை என்றால், ஆட்சிக்கு வந்த, நான்கு ஆண்டுகளில் இந்த யோசனை ஏன் உதிக்கவில்லை? தேர்தலை சந்திக்கும் நேரத்தில் பணம் கொடுக்க தோன்றுகிறது என்றால், அது லஞ்சம் அல்லாமல் வேறென்ன? ஆட்சியில் இருப்பவர்கள் பகிரங்கமாக எங்களுக்கு தருவதை, ஆட்சியில் இல்லாதவர்கள் ரகசியமாக தருகின்றனர். அரசாங்கம் கொடுப்பதை வாங்கினால் மட்டும் ஜனநாயகம் செத்துப் போகாதா?' என, கேட்கின்றனர். 'வருமான வரித்துறையின் ரெய்டு நடவடிக்கை, ஒருதலைப்பட்சமானது' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவதை, அனேகமாக எல்லா தொகுதி வாக்காளர்களும் ஆமோதிக்கின்றனர். 'ஆளும் கட்சியும் பணம் கடத்துது. பெரிய மனுசங்க போற வேன்லயும், கார்லயும் பொட்டிகள் போகுது. எந்த பறக்கும் படையும் அதை மட்டும் தொடுறது இல்ல. எதிர்க்கட்சிகள்னா மட்டும், வீடு தேடி, ரோடு தேடி, 'ரெய்டு' நடத்தி பிடிக்குது. இது ஓரவஞ்சனை இல்லாம வேற என்னவாம்?' என, பெண்களே குரல் உயர்த்தி கேட்கின்றனர். ஆர்.கே., நகர் தேர்தலில் நடந்த கூத்துகளை, அமைச்சரே பட்டுவாடா ஆவணங்களை தூக்கி எறிந்ததை, தேர்தலை ஆணையம் ரத்து செய்ததை, பதிவு செய்த வழக்கில் முதல்வரின் பெயரும் இருந்ததை, இன்றுவரை அதற்கெல்லாம் தேர்தல் கமிஷனோ, கோர்ட்டோ, அரசோ முடிவு கட்ட முன்வராததை, தேதி வாரியாக எடுத்து வீசுகின்றனர், கேள்விகளாக. புதிய, ஊடகத்தின் வீச்சு சுரீர் என உறைக்கிறது. 'இந்த நாட்டில், தேர்தல் மூலமாக தேர்ந்து எடுக்கப்படும், ஒரு மக்கள் பிரதிநிதி, தேர்தல் ஆணையத்திடம் பொய்யான செலவுக்கணக்கு தாக்கல் செய்து, தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறான் என்று சொன்னவர் யார், தெரியுமா?' என்று ஒரு இளைஞன் கேட்டபோது, சில நொடிகள் திணறித்தான் போனோம். அந்த பொன்மொழியை சொன்னவர், மறைந்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய். எல்லா விஷயங்களிலும் எதிரும், புதிருமாக இருக்கும் கட்சிகள் கைகோர்க்கும் ஒரே விஷயம், தேர்தல் சீர்திருத்தங்களை எதிர்ப்பதில் தான். கட்சிகள் கணக்கு காட்ட வேண்டியது இல்லை; வரி செலுத்த வேண்டியது இல்லை; நன்கொடை கொடுத்தவர்களின் பெயரை வெளியிட வேண்டியது இல்லை; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எந்த பதிலும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... என்று அரசியல் கட்சிகளுக்கு ஒட்டுமொத்த பாதுகாப்பு அரண் அமைத்துக் கொடுத்துள்ளது அரசு. எந்தக் கட்சியின் அரசு என்ற கேள்வியே எழவில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இது மாறாது. 'நோய் நாடி நோய் முதல் நாடி...ன்னு நம்ம வள்ளுவரே சொல்லிருக்கார். 'அஞ்சு வருசம் பதவில இருந்தா சம்பாதிச்சுரலாம்னு தெரிஞ்சுதான ஓட்டுக்கு, நாலாயிரம், அஞ்சாயிரம்னு குடுக்குறாங்க.. அப்படி சம்பாதிக்க முடியாம எல்லா வழியையும் அடச்சிட்டா இப்படி முதலீடு செய்ய மனசு வருமா? அத செய்யாம ஜனங்கள தடுக்கறதும் பயமுறுத்துறதும், வேஸ்ட்,' என, ஓய்வு பெற்ற ஆசிரியர் சுட்டிக்காட்டியதை மறுக்க இயலவில்லை. பொது புத்தியில் மக்கள், பணத்துக்காக ஒரு நியாயத்தைச் சொன்னால், அதை ஏற்க சட்டம் அனுமதிக்காது தான். ஆனால், சட்டத்தின் மீதும், சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தும் அமைப்புகள் மீதுமே நம்பிக்கை குறைந்து வருகிற சூழலில், மக்கள் பேச்சில் உள்ள நியாயத்தை அடியோடு புறக்கணிக்கவும் முடியாது. சமூக பொருளாதார சீர்திருத்தங்களைக் காட்டிலும், அவசரமாக நமக்கு தேவைப்படுவது, தேர்தல் சீர்திருத்தம் என்பதை, அரசியல்வாதிகள் உணர எச்சரிக்கை மணி அடிக்கின்றனர் வாக்காளர்கள். தினமலர்
  11. பிரேசில் நாட்டில் ரியோ-டி-ஜெனிரோ நகரத்தின் “சன்டோஸ் டுமொன்ட்” விமான நிலையத்திற்கு வடிவமைக்கபட்ட விமான தரவிறக்க வழி முறையானது(Landing approach) மிகுந்த ஆபத்தானதும், விமானிகளுக்கு மிகுந்த சவால் நிறைந்ததுமாகும். அதே நேரத்தில் விமானம் மலைக்குன்றுகளருகே வட்டமடித்து கட்டிடங்கள் மற்றும் நீர்நிலைகள் மீது இறங்கி ஓடுபாதையை அணுகும் முறை கண்கொள்ளா காட்சியாகும். ரசிப்பீர்கள்தானே? சில காணொளிகள்..
  12. முனிவர்ஜீ மற்றும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
  13. இதே இசைக்குழுவினர் "வீரபாண்டிக் கோட்டையிலே.." பாடலை என்னமாய் இசைக்கருவிகளால் நர்த்தனமாடியிருக்கிறார்களென பாருங்கள்..!
  14. ஓய்வு நேரங்களில் தொலைக்காட்சியின் யூடியூபில் பழைய தமிழ்ப் பாடல்களை பார்ப்பது வழக்கம். அப்படி உலாவரும் பொழுது, இந்த இசைக்குழுவின் வாத்திய இசை மிகவும் கவர்ந்தது. நீங்களும் கேட்டுப் பாருங்களேன், நிச்சயம் ரசிப்பீர்கள்..!
  15. தெரியவில்லை. ஆனால், அப்படி எந்த விமான உற்பத்தி நிறுவனமாவது ஏ-380 வடிவமைப்பில் மாற்றம் செய்து, சிறிய வடிவிலாவது தொடர்ந்து உற்பத்தி செய்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் இம்மாதிரி விமானங்களில் வசதிகள் அப்படி..! ஏ-380 யில், விமான எந்திரங்களின் எரிபொருள் பாவனை சிக்கனத்தை மேம்படுத்தி, இரு இந்திரங்களை கொண்டு இயங்குமாறு மறுசீரமைத்து உற்பத்தி செய்தால், விமான விற்பனை களைகட்டுமென துறை விற்பன்னர்கள் சொல்கிறார்கள்.
  16. 'சிலோன்' என்றொரு நாடை யாரும் கண்டுகொள்வதில்லை போலும். ஒரேயொரு தடவை மட்டும் எமிரேட்ஸ் ஏர்பஸ் 380 விமானம் கொழும்பில் இறங்கியது.
  17. ஒன்னும் சரிப்பட்டு வரவில்லை.. 😣 ஏதாவது புது 'ரவுட்டர்' வாங்கி தான் சோதிச்சு பார்க்க வேணும்.. அதுவரைக்கும் யாழ் இணையப் பக்கம் கிட்டினால் வாரன். ஆலோசனைக்கு நன்றி, திரு.மோகன்.
  18. நான் எடிசலாட் (Etisalat) இணைய வழங்குநரிடம் இணைப்பு வைத்துள்ளேன். இதே மாதிரி 'டியூ (Du) இணைய வழங்குநரின் அதிவேக இணைப்பு(100 Mbps) அலுவலகத்தில் உள்ளது.. அதிலும் சில நேரம் பிரச்சினை இருக்கிறது.. ஆனால் எனது வீட்டு இணைய இணைப்பு மாதிரி மோசம் இல்லை.
  19. சில மாதங்களாக இங்கே யாழ்க்களம் சரிவர வேலை செய்யவில்லை. Handshaking error, script running error பிழை செய்திகளை தினமும் காணலாம். அத்தி பூத்தாற் போல சில நிமிடங்கள் வரும்.. அதற்குள் யாழை பார்த்துவிட வேண்டும். நானும் சில நாட்களில் சரியாகிவிடுமென நினத்தேன்..ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. அதனால் வெறுத்துப்போய், களத்தை விட்டு ஒதுங்கிவிடுவது உண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.