Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. படங்களை இணைக்க உதவிய அனைவருக்கும் நன்றி..🙏 நேரம் இருக்கும்போது படங்களை இணைக்க முயற்சிக்கிறேன்.
  2. "ஹிந்தி தெரியாதா? லோன் இல்லை" என கூறிய வங்கி மேலாளர் மீது மான நஷ்ட ஈடு கேட்டு ஓய்வுபெற்ற மருத்துவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து கடைசியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள யுத்தப்பள்ளமாகும். இவருக்கு யுத்தப்பள்ளம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் சொந்த நிலம் மற்றும் வீடு ஆகியவை உள்ளது. இவர் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்து வரவு-செலவு பார்த்து வருகிறார். ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார். வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டுள்ளார். அப்போது பேசிய வங்கி மேலாளர், "Do u know Hindi" (உனக்கு ஹிந்தி தெரியுமா?) என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் "I dont know Hindi, but I know Tamil and English" (எனக்கு ஹிந்தி தெரியாது ஆனால் தமிழும், ஆங்கிலமும் தெரியும்) என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் வட இந்திய வங்கி மேலாளரோ, "I am from Maharashtra, I know Hindi. Language problem" (நான் மகாராஷ்டிராவில் இருந்து வருகிறேன், எனக்கு ஹிந்தி தெரியும், மொழி பிரச்சினை) என தெரிவித்துள்ளார். மருத்துவர் மீண்டும் தனது ஆவனத்தை காண்பித்து, இதே வங்கி கிளையில்தான் கணக்கு வைத்துள்ளேன் என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது என தெரிவித்த போதும் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது என தெரிவித்துள்ளார். இதனால் சோர்வடைந்து வீட்டிற்கு திரும்பி வந்த மருத்துவர், மொழி பிரச்சனை காரணமாக அடிப்படை உரிமையை மறுத்து கடன் தர மறுத்ததால் தான் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்து வங்கி மேலாளருக்கு மான நஷ்ட்டஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மேலும் நீதிமன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார். கங்கை முதல் கடாரம் வரை சென்று போரிட்டு வெற்றி பெற்ற இராசேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹிந்தி தெரியாது என்ற காரணத்தினால், கடன் கிடையாது என மேலாளர் தெரிவித்தது தன்னை மிகவும் வேதனை படுத்தியதாக ஓய்வு பெற்ற அரசு தலைமை மருத்துவர் வருத்ததுடன் தெரிவித்தார். நியூஸ்7
  3. ஊரெல்லாம் கொரானா.. நாடெங்கும் கொரானா.. வாழ்க்கையே மாறிப் போச்சு..! 'இந்த கிராமங்களில் எப்படி இந்த கொரானா பயமில்லாமல் வாழ்கிறார்கள்..?' என்ற ஊர் நினைப்பு வந்தது.. அலைப்பேசியை எடுத்தேன்.. குக்கிராமத்தில் வசிக்கும் என் பள்ளித் தோழன் சுப்பு எடுத்தான்.. பேரப் பிள்ளைகளின் குறும்பு, ஊரில் வசிக்கும்/வசித்த ஆட்களைப் பற்றிய விசாரிப்புகள்.. கிராமத்து நினைவுகளை, அழியாத கோலங்களை பகிர்ந்து கொண்டோம்..! அதில் மீசை அரும்பும் வயதில்(1971) கிராமத்திலிருந்து மதுரைக்கு சென்று பார்த்த இந்தப் பாடலை பற்றி (முதலில் பார்த்த இந்திப் படம்.. மொழி இன்னமும் தெரியாது ) பேசி சிரித்தோம்.. "டேய், இன்னமும் பசுமையாய் கொரானா போல அப்பப்போ 36.4 பாகைக்கு மேலும் சூடேத்துடா சுப்பு.." என சிரிக்க.. அவனும் "கிழவா(?).. ஊருக்கு வந்து சேருடா..!" என முடித்தான் பாவி.. சிரித்துவிட்டு கைப்பேசியை வைத்தேன்..! 🤭
  4. கீழேயுள்ள இணைப்பில் உள்ள முகக்குறிகளை இங்கே இணைக்க முடியவில்லை. முயற்சித்துப் பார்க்கவும் திரு.கிருபன். http://smileys.smilchat.net/smiley/hello/happy/vil-fleurs4.gif
  5. மிக்க நன்றி திரு.கிருபன். நீங்கள் சொன்ன முறையில் படங்களை இணைத்துப் பார்த்தேன்.. சரிவரவில்லை. 😩
  6. சாமிகளே, பிற இணையதளங்களில் கிடைக்கும் smileys கோப்புகளை இணைக்க முடியவில்லை. https:// க்கு நாங்க எங்கே போறது..? 😜 "Member's solved count" ன்னு புதுசா ஒரு பச்சை புள்ளி தெரிகிறதே..? விளக்கினால் நன்று. நன்றி.
  7. "தமிழன்" என்று சொல்லிவிட்டு தமிழ் தேர்வில் வெற்றிப்பெற முடியாதா..?”: நீதிமன்றம் கேள்வி. "தமிழகத்தில் அலுவல் மொழியாக தமிழ் இருப்பதால், ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு என்று சொல்ல முடியாது..!" என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. தேனி டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் தேனி மின் பகிர்மான வட்டத்தில் 2018-ல் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்தார். இவர் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயிலாததால், பணியில் சேர்ந்து 2 ஆண்டிற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழித் தேர்வில் வெற்றிப்பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாததால் ஜெய்குமாரை பணிலிருந்து விடுவித்து கண்காணிப்பு பொறியாளர் கடந்த ஜூன் 16ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் சேர்த்து பணப்பலன்களை வழங்க உத்தரவிக்கோரி ஜெய்குமார் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், பணியில் சேர்ந்து 2 ஆண்டில் மொழித்தேர்வில் வெற்றிப்பெறாவிட்டால் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார் என மின்வாரிய விதியில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. மனுதாரர் தன்னை தமிழன் என்றும், தாய் மொழி தமிழ் என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரால் தமிழ் தேர்வில் வெற்றிப்பெற முடியவில்லை. தமிழ் பேச மட்டும் தெரிந்தால் போதாது, படிக்கவும், எழுதவும் தெரிய வேண்டும். தான் பணியில் நீடிக்க மொழித் தேர்வில் வெற்றிப்பெறுவது கட்டாயம் எனத் தெரிந்தும் மனுதாரர் அதில் ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளார்.தமிழகத்தில் அலுவல் மொழி தமிழ், அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் தான் நடைபெறுகிறது. மின்வாரியத்திலும் அப்படியே. இதனால் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது தவறு என்று சொல்ல முடியாது. மின்வாரியத்தின் நடவடிக்கை தவறல்ல.இருப்பினும் மனுதாரரை பணியிலிருந்து நீக்கினால் அவரது எதிர்காலம் பாதிக்கப்படும். அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கலாம். டிஎன்பிஎஸ்சி அடுத்து நடத்தும் மொழித் தேர்வில் அவர் பங்கேற்க வேண்டும். அதில் தோல்வி அடைந்தால் அவரை பணி நீக்கம் செய்யலாம். எனவே மனுதாரருக்கு டிஎன்பிஎஸ்சி அடுத்து நடத்தும் மொழித்தேர்வு வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். புதிய தலைமுறை
  8. ஏற்கனவே தனியாருக்கு விற்கபடப்போகும் அரசின் 24 பொதுத்துறை நிறுவங்களின் பட்டியல் வெளியாகிவிட்டது. அதில் "சேலம் உருக்காலை"(SAIL unit) நிறுவனமும் ஒன்று.
  9. "நம் நாட்டின் பெயரை இனி ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா’ என்றே எழுதுவோம்" என அண்ணா பிறந்த நாளன்று நாடு தழுவிய இயக்கம் நடத்தவிருக்கிறது தன்னாட்சித் தமிழகம். கூடவே, 'அம்பானிகள் ரயில் இயக்கும்போது, ஏன் தமிழ்நாடு ரயில்வே கூடாது..?' என்று பரப்புரையும் செய்துவருகிறார், தன்னாட்சித் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆழி.செந்தில்நாதன். மாநிலங்கள் தன்னாட்சியுடன் செயல்படுவது எந்த அளவுக்கு முக்கியம், அதிகாரம் ஓரிடத்தில் குவிவதால் என்ன நடக்கிறது, தமிழ்நாட்டுக்கென ஏன் தனியாக ரயில், கப்பல், விமானப் போக்குவரத்து வேண்டும்..? என்பன உள்ளிட்ட பல விஷயங்களைப் பேசுகிறார். எதற்காக இந்தப் பிரச்சாரம்? அதற்கு ஏன் அண்ணா பிறந்த நாளைத் தேர்ந்தெடுத்தீர்கள்? இன்று நாட்டில் நிலவுகிற முக்கால்வாசிப் பிரச்சினைகளுக்குக் காரணம் அதிகாரக் குவிப்பு. ஜிஎஸ்டி, நீட், புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை எல்லாமே மாநிலங்களின் பிரச்சினை மட்டுமல்ல; மக்களின் பிரச்சினையும்கூட. இந்த இக்கட்டான காலத்தில், இந்தியாவின் ஜனநாயகத்தையும், குடியரசு ஆட்சி முறையையும், மக்களின் பொருளாதாரத்தையும் காப்பாற்ற நல்ல வியூகம் தேவைப்படுகிறது. அந்த வியூகமாகத்தான் தன்னாட்சி, கூட்டாட்சி என்கிற முழக்கத்தைப் பார்க்கிறோம். இது வெறுமனே ஒன்றிய அரசிடமிருந்து மாநில அரசுக்குக் கூடுதல் அதிகாரத்தைப் பெற்றுத்தரக் குரல் கொடுக்கும் இயக்கமல்ல. இந்தியா என்பது ஒரு ஒற்றை அரசு அல்ல; பல்வேறு தேசியங்களின் ஒன்றியம் என்பதை உணர்த்தும் செயல்பாடு. தேசிய இனங்களின் பிரச்சினையை மிகச் சரியாகவும், நடைமுறை சார்ந்தும் அணுகியதில் அண்ணாவுக்கு இணையாக ஒரு தலைவர் இந்தியாவிலேயே கிடையாது. தொடக்கத்தில், தனிநாடு கோரிக்கையை முன்வைத்தாலும்கூட, பிறகு கூட்டாட்சி, தன்னாட்சி என்கிற இடத்துக்கு நகர்ந்தார். ஆகவே, அவரது பிறந்த நாளில் இதைத் தொடங்குவது மிகப் பொருத்தமானது. பொருளாதாரப் பிரச்சினைக்கும் மாநிலத் தன்னாட்சிதான் தீர்வு என்று சொல்வது ஏன்? இந்தியாவின் வளர்ச்சி என்பது மாநிலங்களின் வளர்ச்சிதான். மாநிலங்கள் உருவாக்கும் வளர்ச்சியையெல்லாம் கூட்டித்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர, இந்தியாவுக்கென தனியாக ஜிடிபி இல்லை. எந்தெந்த மாநிலங்களில் அந்த மாநிலத்தை ஆளும் கட்சியும் முதல்வரும் தனிப்பட்ட வகையில் மாநிலத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்களோ அந்த மாநிலங்களில்தான் வேகமான வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், மஹாராஷ்டிரம், குஜராத் எல்லாம் உதாரணங்கள். எந்த மாநிலங்களிலெல்லாம் மாநிலக் கட்சிகள் வலுவாக இல்லையோ அங்கே வளர்ச்சி வரவில்லை. உத்தர பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, பிஹார் எல்லாம் இதற்கு உதாரணங்கள். ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரத்யேகமான தனித்தன்மையும் வரலாற்றுப் பின்னணியும் இருக்கின்றன. அதைக் கருத்தில் கொள்ளாமல், அதிகாரக் குவிப்பாலும் தவறான நடவடிக்கைகளாலும் மாநிலங்களின் வளர்ச்சியைக் குறைத்துவிட்டது ஒன்றிய அரசு. ஒருபக்கம் பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, பதற்றமான சூழல் காரணமாக வளர்ச்சியைத் தடுத்தார்கள் என்றால், இன்னொரு புறம் மாநிலங்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய நிதியையும் முடக்கினார்கள். இவையெல்லாமும் சேர்ந்துதான் இன்று நாட்டின் ஜிடிபியை 23.9% அளவுக்குச் சரித்திருக்கின்றன. ஏகபோக உரிமைகள் அதிகமிருக்கும் இடத்தில் பொருளாதார நடவடிக்கைகள் பலமாக இருக்க முடியாது. நாட்டின் அத்தனை நிறுவனங்களும் சொத்துகளும் பணமும் நான்கைந்து பேரிடம்தான் இருக்கும் என்றால் எப்படி இந்தியா வளரும்? தமிழ்நாட்டுக்கென தனி ரயில்வே, கப்பல், விமானப் போக்குவரத்து வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறீர்களே? ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிகமிக முக்கியமானது உள்கட்டுமான வசதி. நாட்டின் எலும்பும் நரம்பும் அதுதான். வளர்ச்சியை நோக்கிச் செல்ல ஆசைப்படும் எல்லா நாடுகளும் அதனால்தான் உள்கட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்தியாவும் 1990-களிலிருந்து அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்னும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தை உருவாக்கினார். அது எந்தளவுக்கு சரக்குப் போக்குவரத்துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருந்தது என்பதைக் கண்கூடாகப் பார்த்தோம். ஆனால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் என்ன மாதிரியான உட்கட்டமைப்பு வசதிகள் தேவை என்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் சென்னைக்கு இணையாக வளர்ந்த நகரங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை இணைக்கக் கூடுதல் ரயில்களும் விமானங்களும் தேவை. ஆனால், இந்திய ரயில்வேயை அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்திய ஒன்றிய ஆட்சியாளர்கள், அதிக வருவாயைத் தருகிற தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணித்தார்கள். ஒற்றைத் திட்டத்தைப் பெற 30 ஆண்டுகள் குரல்கொடுக்க வேண்டியிருக்கிறது. டெல்லிக்கு வந்த மெட்ரோ ரயில், சென்னைக்கு வர எத்தனை ஆண்டுகள் ஆயின? இதே வேகத்தில் போனால், தமிழ்நாட்டுக்கு புல்லட் ரயில் எந்த நூற்றாண்டில் வரும்? ஒன்றிய அரசால் ஒரு பொதுத் துறை நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த முடியாதபோது, அதை ஏன் மாநிலங்களிடம் ஒப்படைக்கக் கூடாது? அதானிகளால் விமான நிலையத்தை நடத்த முடியும், அம்பானிகளால் தொடர் வண்டிகளை இயக்க முடியும் என்றால், ஒரு மாநில அரசால் செய்ய முடியாதா? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் ஒன்றிய அரசுப் பட்டியலின் கீழ் ரயில்வே துறையை வைத்ததே அது பொதுத் துறை நிறுவனமாக இயங்க வேண்டும் என்பதால்தான். தனியார் துறையிடம் அதை ஒப்படைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட பிறகு, அதன் முழு அதிகாரத்தையும் ஒன்றிய அரசு தனது கைகளில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? நாட்டிலேயே முதன்முறையாகப் பேருந்துப் போக்குவரத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் மாநிலம் இது. எனவே, தமிழ்நாடு ரயில்வே தொடங்கப்பட வேண்டும். விரும்பினால், ஒன்றிய அரசும் முதலீடு செய்யட்டும். சீனாவில் ஒவ்வொரு மாகாண அரசும் விமானப் போக்குவரத்தை நடத்துகிறது. எல்லா மாகாணங்களிலும் புல்லட் ரயில் ஓடுகிறது. தமிழ்நாடு ஏர்வேஸையும் வெற்றிகரமாக நடத்த முடியும். கப்பல் போக்குவரத்தும் தமிழ்நாடு அரசு ஏற்கெனவே நடத்தியதுதான். எனவே, தமிழ்நாடு ரயில்வே, தமிழ்நாடு ஏர்வேஸ், தமிழ்நாடு துறைமுகப் பொறுப்புக் கழகம் எல்லாமே காலத்தின் தேவை. இவை எல்லாம் நாங்கள் ஏதோ புதிதாகக் கண்டுபிடித்த கோரிக்கைகள் அல்ல. ஏற்கெனவே அண்ணா பேசியதும், 1974-ல் மாநில சுயாட்சித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றும்போது முதல்வர் கருணாநிதி அறிவித்ததும்தான். தமிழ்நாட்டை மாறிமாறி மாநிலக் கட்சிகளே ஆள்வதற்குப் பதிலாக, கர்நாடகம்போல மாநிலக் கட்சியும், தேசியக் கட்சியும் மாறிமாறி ஆள்கிறபோது, கூடுதல் நிதியும் வளர்ச்சியும் கிடைக்கும் என்கிற கருத்து இருக்கிறதே? இது மக்கள் கருத்து அல்ல. மக்கள் கருத்தாக இருந்திருந்தால், குறைந்தபட்சம் 2014 தேர்தலிலாவது அவர்கள் பாஜகவுக்கு வாக்களித்திருப்பார்கள். ஏன் அதிமுகவுக்கு வாக்களித்தார்கள்? தமிழ்நாடு இன்று இந்தளவு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு திமுக, அதிமுகதான் காரணம். தொடர்ச்சியாக அகில இந்தியக் கட்சிகளால் ஆளப்பட்ட எத்தனையோ மாநிலங்கள் எந்த வளர்ச்சியும் இன்றி இருக்கின்றனவே... அதற்கு என்ன பதில்? கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கப்பட்டும், அந்த மாநிலங்கள் தொடர்ந்து பின்தங்கியே இருப்பதற்கு என்ன காரணம்? காங்கிரஸும் பாஜகவும் மாறிமாறி ஆண்ட மத்திய பிரதேசம் என்ன நிலையில் இருக்கிறது? கட்சி வேறுபாடு பார்க்காமல் அந்தந்த மாநிலத்துக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு தர வேண்டும். அதைச் செய்யாமல் இருந்துவிட்டு, தேசியக் கட்சிக்கு வாக்களிக்கக் கோருவது அயோக்கியத்தனம். இந்தப் பரப்புரையில் எந்தெந்த மாநிலங்கள் பங்கேற்கின்றன? "யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா", "தன்னாட்சித் தமிழகம்" என்ற 'ஹேஷ்டேகி'ல் ட்விட்டர் பரப்புரையை நடத்துகிறோம். கேரளம், கர்நாடகம், பஞ்சாப், வங்கம், மஹாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநில கூட்டாட்சிவாதிகளிடம் ஆதரவு கேட்டோம். காலத்துக்கேற்ற முன்னெடுப்பு, நிச்சயம் கலந்துகொள்கிறோம் என்று அவர்களும் சொன்னார்கள். அண்ணா பிறந்த நாளில் அனைத்திந்திய அளவில் நடைபெறுகிற முதல் பரப்புரை இது என்பதால், அண்ணாவின் முழக்கங்களை, கருத்துகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பாகவும் இதைப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம். கூடவே, பிற மாநிலத் தலைவர்களைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தும் வேலையையும் செய்யப் போகிறோம். காந்தி, அம்பேத்கர் பிறந்த நாளைப் போல நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி அண்ணாவின் பிறந்த நாளையும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் மாநில அரசை வலியுறுத்துவோம். தமிழ் இந்து
  10. மதுரையின் சிறப்பையும், மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்றையும் விலாவாரியாக மிக அருமையாக விளக்கும் காணொளி.. மதுரை மாநகரை வான்வெளியிலிருந்து பார்க்கும் காட்சி அற்புதமாக உள்ளது..!
  11. இந்தித் திணிப்புக்கு எதிராக இந்திய அளவில் டிரண்டாகும் ஹேஷ்டாக் - யுவன்சங்கர் ராஜா படத்தால் தொடங்கியது.. "#ஹிந்தி_தெரியாது_போடா" இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் புகைப்படம் ஒன்றினால் டிவிட்டரில் இந்திய அளவில் ’ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஷ்டாக் டிரண்டாகி வருகிறது. மெட்ரோ படத்தில் நடித்த ஷிரிஷ் ட்விட்டரில் இசைமைப்பாளர் யுவன் சங்க ராஜாவும் தானும் பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் யுவன் சங்கர் ராஜா “நான் தமிழ் பேசும் இந்தியன்” என்ற வாசகம் கொண்ட டி-ஷர்டையும், மெட்ரோ ஷிரிஷ் ”ஹிந்தி தெரியாது போடா” என்ற வாசகம் கொண்ட டி-ஷர்டையும் அணிந்திருந்தனர். ஷிரிஷின் பதிவை ரீட்வீட் செய்த யுவன் சங்கர் ராஜா, அதற்கு ”தம்ஸ் அப்” பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் பதிவிற்கு பிறகு இந்த புகைப்படங்களை பகிர்ந்து அந்த இரு வாசகங்களையும் பதிவிட்டு வருகின்றனர் சமூக பதிவாளர்கள். சமீப காலத்தில் எழுந்த சர்ச்சைகள் டெல்லிக்கு வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை, ஹிந்தி தெரியாததால், "நீங்கள் இந்தியரா?" என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கேட்ட நிகழ்வு, சமீபத்தில் சர்ச்சையாகியது. "இன்று விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் காவலரிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா என கேட்டபோது, அவர், "நீங்கள் இந்தியரா?" என்று என்னிடம் கேட்டுள்ளார். இந்தி மொழி அறிவதை வைத்தே, இந்தியராக இருப்பதற்கு சமம் என்பது எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டு கனிமொழி ட்வீட் செய்திருந்தார். அந்த சமயத்தில் இது ஹிந்தி மொழித் திணிப்பு என பலர் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை பகிந்தனர். தென் இந்திய அரசியல் தலைவர்களும் கனிமொழியின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்குப் பிறகு, இந்திய மருத்துவ முறைகளுக்கான 'ஆயுஷ்' அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர்களுக்கான இணையவழிப் பயிற்சி முகாமில், இந்தியில் மட்டும் பயிற்சியை நடத்தியதாகவும், இந்தி தெரியாவிட்டால் வெளியேறலாம் என்று அதிகாரி கூறியதாகவும் தமிழக மருத்துவர்கள் குற்றம் சுமத்தினர். அது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. பிபிசி தமிழ்
  12. கடந்த புதனன்று சேலம் அருகே நடந்த விபத்து.. காணொளி சற்று பதறக் கூடிய காட்சி கொண்டது. மென்மையான இதயம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்..!
  13. நட்சத்திர ஓட்டல்களில் அபூர்வமாக சிலநேரம் ஒப்பந்த நிறுவனங்கள் 'பஃபே விருந்து' கொடுப்பார்கள், அப்பொழுது மிட்டாய் கடையை பார்ப்பதுபோல இந்த உணவுகளில் சிலவற்றை பார்த்திருக்கிறேன். இவற்றின் விலையை பார்க்கும்போது கிராமத்து வாழ்க்கையின் கடின உழைப்பும், செலவுகளும் மனசில் தோன்றும். பாலைவன வெயிலில் உழைத்து சேர்க்கும் பணத்தில் செலவழிக்க மனசு வராது. ஆகையால் இவற்றை உண்டது இல்லை.
  14. துபாய் ஷேக்குகளின் ஷோக்கான உணவுகள்.. ஷேக்குகள் சாப்பிடும் உணவு வகைகளின் விலையைக் கேட்டால் மூச்சடைத்துவிடும்..! 'இப்படியும் உணவு வகைகளா..?' எனவும் தோன்றும்..
  15. இதென்ன பெரியாரின் "திராவிடக் கொள்கை" பேசும் தலைப்பென எண்ண வேண்டாம்..! ஏதாவது நாட்டுப்புற பாடலை உயர்தர ஒலித் தரத்தில் கேட்கலாமென தேடியபோது இந்தப் பாடல் கிட்டியது. 8D ஒலித் தரத்தில் பதியப்பட்டுள்ள இந்தப் பாடல் இசையாலும், பாடல் வரிகளாலும் ஒருவிதத்தில் மயக்கியது எனலாம். பாடல் வரிகள் திரையில் தோன்றுவது இன்னமும் சிறப்பு. முடிந்தால் ஹெட்ஃபோன் பாவித்துக் கேளுங்கள், இன்னமும் ரசிக்கலாம்..!
  16. இப்படியும் மயிரிழையில் உயிர் பிழைத்தல்.. நம்ப முடிகிறதா..? கொல்லம், கேரளாவில் நடந்தது..!
  17. "என் கணவர் சண்டையே போடாமல் 'ஓவர் லவ்'வாக இருக்கிறார்”: 18 மாதங்களில் டைவர்ஸ் கேட்ட மனைவி..! "தன் கணவரின் அளவுக்கதிகமான அன்பை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கடந்த 18 மாதங்களில் ஒருமுறை கூட சண்டைபோடவில்லை" என்று ஒரு பெண் விவாகரத்துக் கோரியிருக்கிறார். உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் திருமணமாகி 18 மாதங்களிலேயே விவாகரத்துக் கோரியுள்ளார். விவாகரத்துக்காக சம்பலில் உள்ள ஷரியா நீதிமன்றத்தை அணுகிய அவர் சொன்ன காரணம் நீதிமன்றத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியது. காரணம், அவர் கணவர் தன்னுடன் சண்டை போடுவதில்லை. அளவுக்கதிகமாக நேசிக்கிறார் என்பதுதான் அவருடைய பிரச்னை. இந்தி நாளிதழான டைனிக் ஜாக்ரானின் அறிக்கைப்படி, அந்த பெண்ணுக்கு கணவரின் அதீத அன்பை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், கடந்த 18 மாதங்களாக ஒருநாள் கூட சண்டை போடாததால் சோர்வடைந்து விட்டதாக கூறியிருக்கிறார். மேலும் அந்த பெண்ணின் கணவர் சமைப்பதற்கும், வீட்டு வேலை செய்வதற்கும்கூட உதவுகிறாராம். ஒருநாள்கூட அவரிடம் கத்தாமல், எந்தவொரு பிரச்னையிலும் ஏமாற்றாமல் இருக்கிறாராம். இவ்வளவு அன்பால் அந்த பெண்ணுக்கு மூச்சே திணறிவிடுவதாகவும் கூறியிருக்கிறார். அந்த பெண் ஏதாவது தவறு செய்தால்கூட கணவர் மன்னித்துவிடுகிறாராம். ஆனால் அந்தப் பெண் சண்டைபோட விரும்புகிறாராம். எல்லாவற்றையும் இப்படி ஒத்துப்போகும் ஒரு நபருடன் வாழ விரும்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். விவாகரத்துக்கான காரணத்தைக் கேட்ட நீதிமன்ற அலுவலர் 'இந்த மனு அற்பமான காரணத்தைக் கொண்டுள்ளதாக' நிராகரித்துவிட்டார். இந்த மனுவை உள்ளூர் பஞ்சாயத்திடம் கொண்டுசென்றிருக்கிறார் அந்தப் பெண். வேறு ஏதும் காரணம் இல்லாததால், அவர்களும் அதை நிராகரித்துவிட்டனர். இதுபற்றி அந்த பெண்ணின் கணவர், 'அவள் ஒருதவறும் செய்ததாக நான் நினைக்கவில்லை. எப்போதும் சரியான ஒரு கணவராக இருக்க மட்டுமே தான் விரும்புவதாக' கூறியிருக்கிறார். 'தனது மனைவியின் விருப்பப்படி, மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு' அந்த பெண்ணின் கணவரும் ஷரியா நீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர்களுக்குள்ளேயே பேசி தீர்த்துக்கொள்ளுமாறு அனுப்பிவைத்திருக்கின்றனர். புதிய தலைமுறை இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..? மாதத்திற்கு ஒரு முறையேனும் கணவன் மனைவிக்குள் சிறுசிறு சண்டைகள் வந்திருக்கணுமே..?
  18. ஏறக்குறைய 47 வருடங்களுக்கு முன் சொந்த கிராமத்தை விட்டு கல்லூரி வாசலை தொட்ட நேரம் வந்த இந்தப்படம் "அலைகள்" (1973). அதிகம் கவனத்தை பெறாவிட்டாலும், இதில் இடம்பெற்ற இந்தப் பாடல் தமிழகத்திலும், ஈழத்திலும் மிகப் பிரபலமானது.. களைப்புடன் வீடு தேடி வந்து படுக்கையில் விழும்போது, இம்மாதிரி பாடல்களே மனதிற்கு அருமருந்து..! தமிழில் கர்நாடக நடிகர், விஷ்ணுவர்த்தன்(நடிகை பாரதியின் கணவர்) நடித்த முதல் படம் என நினைக்கிறேன். பாடகர் ஜெயச்சந்திரனின் இனிமையான குரலில், பொன்னென்ன பூவென்ன கண்ணே..! உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே.. ஒரு கல்யாண பெண்ணாக உன்னை, புவி காணாமல் போகாது பெண்ணே..!
  19. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஈழப்பிரியன் மற்றும் குமாரசாமி. சில வாரங்கள் கழித்து வந்துள்ளதால் கவனிக்க இயலவில்லை.
  20. என்னுரை: இரு சதாப்தங்கள் ஆயிற்று. இந்தியில் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே எனக்கு புரியும். அவை... 'இந்தி நகி மாலும்.. முஜே பைட்டியே ஆவோ மாதாஜி பிதாஜி' இவற்றை வைத்தே 21 வருடங்களை ஓட்டிவிட்டேன்.. இந்தி இன்னமும் புரியவில்லை.. இந்தியை விட சில 'அரபி சொற்கள்' அதிகம் புரியும் திட்டப்பணியில் வேலை செய்பவர்கள் பலர் வட இந்தியர்கள் இருந்தாலும், முதன்முறையாக என்னிடம் பேசும்போது மட்டும் இந்தியில் பேச எத்தனிப்பர். நான் பதில் சொல்லாமல் அமைதியாகிவிடுவதுண்டு. திரும்பவும் இந்தியில்கேட்டால், "நீங்கள் பேசுவது புரியவில்லை..! Sorry I can't understand what you are saying..!" என ஆங்கிலத்தில் சொல்வது வழக்கம். அத்தோடு அவர்களும் ஆங்கிலத்திற்கு மாறிவிடுவர். ஆங்கிலம் தெரியாத தொழிலாளிகள் என்றால், என்னிடமுள்ள பிற நாட்டுக்காரரை வைத்து சமாளித்து அனுப்பிவிடுவேன். யாராவது தொலைபேசியில் இந்தியில் 'மார்கெட்டிங்' செய்ய முயன்றால் "Sorry, wrong number..!" என இணைப்பை துண்டித்து விடுவதுண்டு. இதற்கு காரணம் எல்லையற்ற அபரிமிதமான இந்தி திணிப்பு, அதனால் எமக்கு அதன் மீது வெறுப்பு. (அதுவே தாய் தமிழ் மீது இன்னமும் அதிக பற்றை உண்டாக்குகின்றது என்றால் மிகையில்லை. 😍) ஆனால் 'இந்திய வட நாட்டவருக்கு இன்னமும் புத்தி வரவில்லை' என்பதுதான் யதார்த்தம். டாக்ஸி, ஓட்டல், ஏர்போர்ட் என எல்லா இடத்திலும் இந்தி உள்ளது, ஆனால் நான் ஆங்கில மொழிக்கு மட்டுமே பதில் அளிப்பது. அவர்கள் இந்தியில் மீண்டும் பேசினால் 'போவியா அங்கிட்டு..!' 😡 என அர்த்தமுடன் பார்த்துவிட்டு, "Sorry.." என நகர்ந்து விடுவதுண்டு. கீழேயுள்ள செய்தியை படித்தவுடன் இன்றும் இங்கே சந்திக்கும் சில நிகழ்வுகள் என் மனதில் எழுகின்றன. இந்தி பேசினால்தான் 'இந்தியரா'? நீங்கள் ஓர் இந்தியரா? சென்னை விமான நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் ஒன்றியத் தொழிலகக் காவல் படையைச் (சிஐஎஸ்எஃப்) சேர்ந்த ஒரு காவலர் இப்படிக் கேட்டிருக்கிறார். காரணம் கனிமொழிக்கு இந்தி தெரியவில்லை. இந்தச் சம்பவம் ஒரு பழைய விவாதத்தை மீண்டும் பொதுத்தளத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. அந்தக் காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கனிமொழி கேட்டுக்கொண்டிருக்கிறார். இது சரியானதுதான். ஒரு காவலரை மட்டும் குற்றப்படுத்துவது பிரச்சினைக்குத் தீர்வாக இராது. இந்தி பேசும் சிலரிடத்திலேனும் அப்படியான ஒரு கேள்வி தொக்கிக்கொண்டுதான் நிற்கிறது. தமிழர்கள் பலர் தமிழகத்துக்கு வெளியே இந்தக் கேள்வியை எதிர்கொண்டிருப்பார்கள். என்னுடைய அனுபவங்கள் இரண்டைச் சொல்கிறேன். இரண்டு சம்பவங்கள் முதல் சம்பவம் இருபதாண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஹாங்காங்கில் மாங்காக் என்கிற மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள நடைபாதையில் எதிர்ப்பட்ட என்னிடம், ‘சுங் கிங் மேன்ஷனுக்கு எப்படிப் போக வேண்டும்?’ என்று அவர் இந்தியில் கேட்டார். எனக்குக் கேள்வி புரிந்தது. அவர் சுற்றுலாப் பயணி என்பதும் புரிந்தது. எனக்குப் பதிலும் தெரிந்திருந்தது. அவர் விசாரித்த வணிக வளாகம் பல்வேறு தேசிய இனங்கள், குறிப்பாகத் தெற்காசியர்களும் ஆப்பிரிக்கர்களும் கூடுமிடம். அவர் கேள்விகேட்ட இடத்திலிருந்து மெட்ரோ ரயிலைவிடப் பேருந்தில் போவதுதான் சுலபமானது. நான் அவருக்கு உதவ விரும்பினேன். ஆனால், அதை என்னால் ஆங்கிலத்தில்தான் சொல்ல முடியும். அதை அவரிடம் தெரிவித்தேன். இப்போது காவலர் கனிமொழியிடம் கேட்ட அதே கேள்வியைச் சுற்றுலாப் பயணி என்னிடம் கேட்டார். ஹாங்காங்கில் பல்வேறு நாட்டினர் வசிக்கிறார்கள். இலங்கை, வங்க தேசம் போன்ற தெற்காசிய நாட்டினருக்கும் இந்தியர்களுக்கும் உருவ ஒற்றுமை இருக்கும். என்னை அப்படியான அண்டை நாட்டுக் குடிமகன் என்று கருதியிருக்கலாம். நான் அக்மார்க் இந்தியன்தான் என்று பதிலளித்தேன். அவர் எனது பதிலில் அதிருப்தியுற்றிருப்பார்போல. என்னுடைய கடவுச்சீட்டில் நான் ஓர் இந்தியக் குடிமகன் என்று குடியரசுத் தலைவரே சான்றளித்திருக்கிறார். நண்பருக்கு அது பொருட்டில்லை. அவர் இரண்டாவது முறையாகக் காவலர் கேட்ட கேள்வியை என்னிடம் கேட்கவில்லை. ஆனால் அது அவரது முகத்தில் அழியாமல் தேங்கியிருந்தது. என்னுடைய ஆலோசனைக்குக் காத்திருக்காமல் அவர் மெட்ரோ ரயில் நிலையத்தை நோக்கி நடந்தார். இரண்டாவது சம்பவமும் ஹாங்காங்கில் நடந்ததுதான். ஐந்தாண்டுகள் இருக்கும். ஒரு வெளிநாட்டு இந்தியர், தொழிலதிபர், இந்தியக் கட்டுமானத்தில் முதலீடு செய்ய விரும்பினார். ஹாங்காங்கின் நவீனக் கட்டுமான முறைகளைப் பார்வையிட வந்திருந்தார். அவருக்கு ஆலோசனை வழங்கிய நிறுவனம் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்துக்கு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். ஹாங்காங்கில் கட்டுமானத் துறையில் கட்டுப்பாடுகள் அதிகம். அதைப் பற்றித் தொழிலதிபர் கேட்டார். நான் பதில் சொன்னேன். அவர் உரையாடலை இந்தியில் நீட்டித்தார். நான் தணிந்த குரலில், “நாம் ஆங்கிலத்தில் பேசுவோம்” என்றேன். அந்த அறையில் அவரது உதவியாளர்களையும் என்னையும் தவிர இரண்டு சீனர்களும் ஓர் ஆங்கிலேயரும் இருந்தனர். “அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்” என்று தொழிலதிபர் பதிலளித்தார். நான், “எனக்கும் இந்தி தெரியாது” என்று சொன்னேன். தொழிலதிபர் ஆங்கிலத்துக்கு மாறிக்கொண்டார். அதற்கு முன் என்னை ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வையில் காவலர் கனிமொழியிடம் கேட்ட கேள்வி இருந்தது. அப்படித்தான் நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் ‘தமிழ்நாட்டுக்குள் பறக்கும் விமானத்தில் தமிழ் ஏன் ஒலிக்கவில்லை?’ என்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். உள்நாட்டு விமானங்களில் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் அறிவிப்புகள் வெளியாவதைப் பற்றிய கட்டுரை அது. நிறைய எதிர்வினைகள் வந்தன. பாரதிராஜா, தங்கர்பச்சான் போன்ற பிரபலங்களும் இப்படியான ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பதைச் சிலர் நினைவுகூர்ந்தார்கள். சிலர் தனியார் விமான நிறுவனங்களுக்கு இது குறித்து எழுதிய புகார்க் கடிதங்களையும், அதற்கு நிறுவனங்கள் எழுதிய சீனி தடவிய பதில்களையும் பகிர்ந்துகொண்டார்கள். ஆஸ்திரேலியாவில் இயங்கும் ஒரு வானொலித் தமிழ்ச்சேவை என்னை நேர்கண்டது. பல தமிழ் உள்ளங்களில் இந்தக் குறை கனன்றுகொண்டிருப்பது புரிந்தது. அது சமீபத்தில் மீண்டும் நிரூபணமானது. கடந்த மாதம் சென்னையிலிருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானத்தில் தமிழ் ஒலித்தது. ‘தற்போது நாம் கடல் மட்டத்துக்கு மேல் 16,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கிறோம். தற்போது நமது வான்வெளிப் பாதையானது, அழகிய காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சி மாநகரை நோக்கிச் செல்கிறது....’ பேசிய விமானி வடசென்னைக்காரர் விக்னேஷ். அந்தக் காணொலி வைரலானது. வாராதுபோல் வந்த மாமணியைத் தமிழ் நெட்டிசன்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். ஆதிக்க வெளிப்பாடு இந்த இடத்தில் இன்னொரு துயரச் சம்பவத்தையும் சொல்ல வேண்டும். கடந்த வாரம் துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியது. ‘நியூயார்க் டைம்ஸ்’ ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. விபத்துக்கான காரணங்களை ஆராயும் அந்தக் கட்டுரையில் நமக்குத் தெரிந்த ஒரு தகவலைச் சர்வதேச வாசகர்களுக்குச் சொல்கிறது. விமானத்தில் அறிவிப்புகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான் இருந்தன. இது சிறப்பு விமானம். கொள்ளைநோய் இக்கட்டில் சிக்கிக்கொண்ட இந்தியர்களைத் தாயகத்துக்கு அழைத்துவரும் விமானம். பயணிகளில் பலரும் உழைக்கும் வர்க்கத்தினர். அவர்கள் பேசுவது மலையாளம். விமானத்தில் ஒலிபரப்பான பாதுகாப்பு அறிவிப்புகள் எதுவும் அவர்களுக்குப் புரியவில்லை. நமக்குப் புரியும் மொழியில் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்று நம்மில் பலரும் எதிர்பார்க்கிறோம். இந்தியர்கள் எல்லோருக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று இந்தி பேசுபவர்களில் ஒருசாரார் நினைக்கிறார்கள். அப்படி நினைப்பவர்களில் ஹாங்காங் வந்த எளிய சுற்றுலாப் பயணியும் இருக்கிறார், பெரிய தொழிலதிபரும் இருக்கிறார், விமான நிறுவனத்தினரும் இருக்கிறார்கள், சென்னை விமான நிலையத்தில் கனிமொழியைக் கேள்வி கேட்ட காவலரும் இருக்கிறார். இது தனிப்பட்ட ஒருவரின் பிழையன்று. இது ஒரு ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு என்பதை இந்தியச் சமூகத்தின் அறிவாளர்கள் எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போது சீரிளமைத் தமிழும் கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் இன்னபிற மொழிகளும் பேசுவோர் அனைவரும் இந்தியர்கள்தான் என்று எல்லோரும் உணர்வார்கள். தமிழ் இந்து
  21. மறுநாள் (இன்று) வார விடுமுறை.. நள்ளிரவு தூங்கும் வரை வழக்கமாக பழைய பாடல்களை கேட்கும் எனக்கு, இந்தப்பாடல் வரிகள் கவர்ந்தன.. யூடுயூபில் தேடி படத்தை பார்த்தேன். பாடல்கள் அத்தனையும் அருமை.. படமும் பரவாயில்லை.. அசிரத்தையான ஆணின் கவனத்தை ஈர்க்க, "எனக்கென்ன குறை..? ஏன் இந்த பாராமுகம்..?" என பெண் பாடுவதாக கண்ணதாசன் வரிகளில், எம்.எஸ்.வி இசையில் மனம் கவர்ந்த பாடல்..! ஊகிக்க முடிகிறதா..?
  22. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியில்லை..! தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதியில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டு காலமாக இருமொழி கொள்கையில் உறுதியாக உள்ளனர். இதுதொடர்பாக, பல காலகட்டங்களில், தங்களது உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலமாகவெளிப்படுத்தியுள்ளனர். 1963ஆம் ஆண்டைய அலுவல் மொழிகள் சட்டத்தின் 3வது பிரிவில், இந்தியை அலுவல் மொழியாக பின்பற்றாத மாநிலங்களை பொறுத்த வரையில், மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் தான் இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும், 1965ஆம் ஆண்டில் இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அப்போதைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. அதனை எதிர்த்து, மாணவர்களும், மக்களும், தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டங்களை தீவிரமாக நடத்தினர். மக்களிடைய மும்மொழி கொள்கையைப் பற்றிய கவலைகள் நீங்காததால், பேரறிஞர் அண்ணா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் 23.1.1968 அன்று தமிழ்நாட்டில் உள்ள எல்லாப்பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து இந்தி மொழியை அறவே நீக்கிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது என்று வரலாறு போற்றத்தக்க தீர்மானத்தை நிறைவேற்றினார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி, பாட திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணாவால் தெளிவுற உரைக்கப்பட்ட இரு மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதுதான் மாண்புமிகு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் உறுதியான கொள்கையாக இருந்தது. அதன்படியே, அவர் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபோது, அதாவது, 13.11.1986 அன்று, இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அம்மா, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிக்கக் கூடாது என்பதிலும், அவ்வாறு எடுக்கப்படும் முயற்சியை எதிர்த்து முறியடிப்பதிலும் உறுதியாக உள்ளோம் என்று சூளுரைத்தார்.மேலும், இந்தியாவில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும், அம்மா வலியுறுத்தி வந்தார்கள். இவ்வாறு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும், இந்தி திணிப்பை ஆணித்தரமாக எதிர்த்து வந்தனர். இப்படிப்பட்ட மாபெரும் தலைவர்கள் வழி வந்த அம்மாவின் அரசும், மத்திய அரசு, வரைவு தேசிய கல்விக் கொள்கையை வெளியிட்ட போதே, அதில் மும்மொழிக் கொள்கை இடம் பெற்றதை சுட்டிக் காட்டி, அதனை தீவிரமாக எதிர்த்தது. மேலும், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இரு மொழிக் கொள்கையையே கடைபிடிப்போம் என உறுதிபட தெரிவித்து 26.6.2019 அன்றே மாண்புமிகு பாரத பிரதமரை வலியுறுத்தி நான் கடிதம் எழுதினேன். இரு மொழிக் கொள்கையையே அம்மாவின் அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்பதை கடந்த ஆண்டு எனது சுதந்திர தின உரையிலும், சட்டமன்றத்தில் நடைபெற்ற பல்வேறு விவாதங்களின்போதும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன். தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை இடம் பெற்று இருந்தாலும், மாண்புமிகு அம்மாவின் அரசு, மும்மொழிக் கொள்கையினை தமிழ்நாட்டில் எப்போதும் அனுமதிக்காது என்றும், இருமொழி கல்விக் கொள்கையை மட்டுமே தொடர்ந்து பின்பற்றும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மக்களின் உணர்வும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இரு மொழி கொள்கையை பின்பற்றுவதையே கொள்கையாக கொண்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மத்திய அரசு அறிவித்த தனது புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கின்றது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை ஏற்று, மத்திய அரசு அறிவித்த மும்மொழி கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ள மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ, பாதிப்பு ஏற்படும் போது, அந்த பாதிப்பினைக் களைய உடனடி நடவடிக்கை எடுக்கும் அரசு, மாண்புமிகு அம்மாவின் அரசு தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தினமணி
  23. கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா பாதிப்பு.. புதிய தலைமுறை
  24. அப்படி யாரு ஜெர்மனியில இருக்கிறார்கள்..? 🤔 எனக்கு தெரிஞ்சி 12 வயசுக்காரர் இருக்கிறார். 🤭 மற்றவர் ரொம்ப முதியவர், ஆனால் அவருக்கு வழுக்கை கம்மி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.