Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. இந்த காணொளியில் முன்று உயர நிலைகளிலுள்ள தொட்டி போன்ற அமைப்பில் தண்ணீரை நிரப்பி கப்பலை உயர்த்தி கடத்தி ஏரியில் விட்டு, பின்னர் ஏரியின் பரப்பு முடிந்ததும் மறுபுறம் கடலில் கப்பலை விட தண்ணீர் தொட்டி அமைப்புகளில் உயரத்தை கீழிறக்கி கடத்துவதை காணலாம்.
  2. அமெரிக்காவின் கீழே, அட்லாண்டிக் கடல்-பசிபிக் கடல் இரண்டுக்குமிடையே அமைந்துள்ள பனாமா நாட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பனாமா கால்வாய் பொறியாளர்களின் சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சுற்றுவழி கடல்பாதையை தவிர்க்க, நாட்டின் குறுக்கே கடல்மட்டத்திலிருந்து 85 அடி உயரத்தில் அமைந்துள்ள மலையின் ஏரியின் இருபுறமும் மிகுந்த உயிர்பலி, சிரமங்களுக்கிடையே கால்வாய்கள் வெட்டி மூன்று தொட்டி போன்ற நிலைகளில் தண்ணீர் நிரப்பி, கப்பல்களை உயர்த்தி ஓடவிட்டு மறுபுறம் கடத்தும் தொழிற்நுட்பம் வியக்கத்தக்கது.. காணொளியை பார்த்தால் எளிதாக புரியும்..!
  3. படத்தின் ஆரம்பமே பதற்றத்துடன்ஆரம்பித்தது. பாத்திர அறிமுகங்கள் அதிரடியாக இருந்தது. விஜயபாஸ்கர் "என்ட்ரி" செம மாஸ். அடுத்து, அடுத்து அறிமுகமான பீலா, தப்லிக் எல்லாம் டெம்போவை கூட்டியது. அப்புறம் கோயம்பேடு காய்கறி சந்தையில் கொரானாவை இலவச இணைப்பாக கொடுத்து....கதை பாதியில் முடியாமல் பார்த்துக் கொண்ட பட குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். படம் நெடுகிலும் டைரக்டர் செம மாஸ் காட்டிக்கொண்டே இருந்தார். போலிசின் துரத்தல்களும், விளாசல்களும் ட்ரோன் "ஷாட்களும்" பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமரவைத்தது. டிவி விவாதங்களும் புள்ளி விபரங்களும் திகில் கிளப்பின.கடைசியில் அதே போலீசாரை சாராய கடையில் வாட்ச்மேனாக போட்டது காமெடியின் உச்ச கட்டம். இடைவேளையின் போது நல்ல ட்விஸ்டு வைப்பார் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்தபோது, டாஸ்மாக் சீனை வைத்து படத்தின் டெம்போவை குறைத்து விட்டார். தயாரிப்பாளர் பைனான்ஸ் பிரச்சனையால் படத்தை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் குழம்பி போய்விட்டது நன்றாக தெரிகிறது. நாளாக நாளாக, படத்தை எப்படியாவது முடிக்கவேண்டும் என்று.., அவரே குழம்பி போய் கதையை நகர்த்துகிறார். படத்தின் கிளைமாக்ஸ் என்ன என்று தெரியாமல் பார்வையாளர்கள் உள்ளேயும் இருக்கமுடியாமல், வெளியேயும் போக முடியாமல் தவிப்பது தவிர்க்க முடியாதது ஆகி விட்டது. மொத்தத்தில் 50 நாட்கள் ஓடிய படம் ...சாராய பிஸினஸ் செய்யலைனா....தமிழ் நாடே நடு தெருவில் நிற்கும் என்பதையும் அப்படி ஒரு பிச்சைகார தனமா நாட்டை வைத்துள்ளார்கள் என்பதையும்.. மக்களுக்கு உணர்த்தியது..! - படித்ததில் ரசித்தது.
  4. நீதிமன்ற நிபந்தனைகள் மீறல்: டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு. நீதிமன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படாததால் டாஸ்மாக்(TASMAC) மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என்றும், ஆன்லைனில் விற்று டோர் டெலிவரி செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மே 7-ம் தேதி முதல் மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மே 6-ல் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் 'தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும், ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே வழங்க வேண்டும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும். அதற்கு மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது. 'அவை மீறப்படும் பட்சத்தில் கடைகளை மூட உத்தரவிட நேரிடும்..!' எனவும் எச்சரித்து அனுமதி அளித்தது. இந்நிலையில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அதுவரை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிடக் கோரியும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான மௌரியா வழக்குத் தொடர்ந்தார். அவரது மனுவில், “மதுபானத்துக்காக குடிமகன்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லக் கூடும் என்பதால் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதாக அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. ஊரடங்கு அமலில் உள்ளபோது அனுமதியின்றி அண்டை மாநிலங்களுக்குச் செல்பவர்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. கரோனா பரவாமல் தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுவை விற்க அனுமதிப்பது நோய் பாதிப்பை அதிகரிக்கும்'' என்று குறிப்பிட்டார். இந்த மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா ஆஜராகி வாதிட்டார். நேற்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை. மே 6-ம் தேதி அன்று நீதிமன்ற உத்தரவில் தனி மனித இடைவெளி, கூட்டம் சேரக்கூடாது, 5 பேருக்கு மேல் நிற்கக்கூடாது என்ற உத்தரவு மீறப்பட்டதாகக் கூறினார். அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் கார்த்திக் ராஜா தாக்கல் செய்தார். மேலும் அவர் வாதிடுகையில், ''தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. கூட்டம் அதிகமாகக் கூடியது. தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க முடியாதபோது மதுபானம் அத்தியாவசியப் பொருட்களின் கீழ் வராத நிலையில் எப்படி அனுமதிக்கப்படுகிறது. குற்றச்செயல்கள் அதிகம் நடக்கின்றது. காய்கறி மளிகைப்பொருட்கள் ஆன்லைனில் விநியோகிப்பது போல் மதுபானங்களை விநியோகிக்கலாம்'' என்றார். ஆன்லைனில் 2 பாட்டில்களுக்கு மேல் கொடுக்கக்கூடாது, பில் தரவேண்டும். ஆதார் எண் அவசியம், தனி மனித இடைவெளி, கும்பல் சேரக்கூடாது, இவை மீறப்பட்டால் கடைகளை அடைக்கும்படி உத்தரவிட நேரிடும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோல வழக்கறிஞர் ஜி. ராஜேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தற்போது டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பதால் தனிமனித இடைவேளை பின்பற்றவில்லை எனவே ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார் குன்றத்தூர் சேர்ந்த வழக்கறிஞர் திலீபன் தாக்கல் செய்த வழக்கில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் இதே போல சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்கிலும் வழக்கிலும் மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படக்கூடாது என்றும், ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்யலாம் என்றும் டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை மே.14-க்கு ஒத்திவைத்தது. இதனால் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. தமிழ் இந்து
  5. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு : உயர் நீதிமன்றம் தமிழகத்தில் 'பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட' சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..! 'டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை' என தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், 'தனிநபர்களுக்கு மட்டும் மது விற்கப்படும். இணையவழியில் விற்பனை செய்ய முடியாது. அதே நேரத்தில் மது விற்பனையின்போது பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படும்' என்று தமிழக அரசு கூறியிருந்தது. இதைத் தொடர்ந்து, 'டாஸ்மாக் கடைகள் திறப்பதற்குத் தடையில்லை' என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேசமயம், 'கடைகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்' என்று நிபந்தனைகள் விதித்திருந்தது. இந்நிலையில், 'உயர்நீதிமன்ற நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படவில்லை' என்று தொடரப்பட்ட வழக்கில், 'தமிழகத்தில் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட' சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், 'மே 17 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது' என்றும் 'ஆன்லைனில் மட்டும் மது விற்பனையைத் தொடரலாம்' என்றும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தினமணி
  6. வாட்சப்ல வாழ்க்கை நடத்துறான் பய புள்ள..! மோகனசுந்தரம் காமெடிகளில் பெண்களை பற்றிய சீண்டல்கள் யதார்த்தமாக இருப்பதில்லை..அதை தவிர்த்து இக்காணொளி வெளிநாட்டு வாழ்க்கை பற்றியது பரவாயில்லை ரசிக்கலாம்..!
  7. என்னை பொறுத்தவரை ஆணோ, பெண்ணோ மது அருந்துதல், புகை பிடித்தல் போன்றவை சிற்றின்பமேயானாலும், அளவுடனேயானாலும் தவறுதான். இதில் சிறிய தவறு, பெரிய தவறு என ஏதுமில்லை..! 'இவை தீங்கானவை' என ஆயிரம் விளம்பரங்கள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்களை அரசும், சான்றோர்களும் படிச்சு படிச்சி சொன்னாலும் மண்டையில் ஏற்றிக்கொள்ளாதவர்களை பற்றி என்ன சொல்வது..? 😡
  8. பின் ஏன் சார் மப்புறுப்பினாராகினீர்கள்..? 🙄😋 (தவறாக எண்ண வேண்டாம்..!) ஜீரணிக்க மனம் மறுக்கிறது.. என்ன செய்வது..? தாய்க்குலம் வாழ்க..!
  9. திரு.துல்பன், அப்படியே புலம்பெயர் தமிழர்கள், அங்கிருக்கும் சமூக சூழலால் வலிந்து ஏற்று அல்லது சகித்துக்கொண்டாலும், தாயகத்திலும், தென்னிந்தியாவிலும் அவ்வாறே எல்லா பெண்களும் இருப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்பது இல்லையே..?
  10. சார், அப்படி நடக்காது என்ற நம்பிக்கையில், உரிமை என வாய்மொழியாக சொல்வது வேறு, நடைமுறையில் அப்படி நடந்தால் சகித்து தாங்கிக்கொள்வீர்களா..?
  11. ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த ஆண்கள் பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் சில காலம் வாழ்ந்து அங்கிருக்கும் கலாச்சாரங்களை உதட்டளவில் உள்வாங்கியிருப்பவர்கள். ஆனால் மனசளவில் தன் இல்லாளோ, பெண் குழந்தைகளோ இப்படி குடித்து கும்மாளமிட அனுமதிப்பார்களா..? தான் பிற பெண்களை பார்த்து ஜொள்ளு விடுவதுபோல, வீட்டுப்பெண்களும் பிற ஆண்களை பார்த்து ஜொள்ளுவிட அனுமதிப்பார்களா.? எப்பேர்பட்ட குடிகார ஆண்மகனும் தான் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் மனைவி, பிள்ளைகள் தன் கைக்குள்ளே அடங்கி, சொல்கேட்டு தம் கலாச்சாரப்படி நடக்கவேண்டுமென நினைக்கும் ஆணாதிக்க உலகமிது. 🙄 சும்மா வாதத்திற்காக எதுவேண்டுமானாலும் சொல்லப்படாது. Lip service is not fair..! 😡
  12. ஒருவேளை இவர்கள், தங்களின் ஆண் துணைவருக்கு வாங்கி செல்ல வரிசையில் நிற்கிறார்களோ..? 🙄
  13. மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..! பிரபல இயக்குனர் விமர்சனம்.. கொரோனா அச்சத்தால் நாடு முழுவதும் மே 17-ன் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு சில தளர்வுகளை அறிவித்துள்ள மத்திய அரசு, மதுபானக் கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. இதையடுத்து தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா, ஆந்திராவில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மதுப்பிரியர்கள் மதுவாங்க குவிந்தனர். இதனிடையே பெங்களூருவில் உள்ள ஒரு மதுபான கடையின் முன்பு இளம் பெண்கள் மதுபானம் வாங்க வரிசையில் நின்றிருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் இது குறித்து பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா டுவிட்டரில் விமர்சித்துள்ளார். பெண்கள் மது வாங்க வரிசையில் நிற்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ள அவர், "இங்கே பாருங்கள், மதுபான கடையின் முன் யார் நிற்கிறார்கள் என்று..? இன்னமும் குடிகார ஆண்களிடமிருந்து பெண்களை காப்பாற்ற வேண்டும் என்று நாம் பேசி வருகிறோம்..! " என பதிவிட்டுள்ளார். ராம்கோபால் வர்மாவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாலை மலர் டிஸ்கி: ஆணுக்கு சரிநிகர் சமானமாக வாழ உரிமை கேட்பது, இதுக்குதானா அம்மணிகளா..?
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், சுவி..
  15. "நாடே லாக்டவுன்ல கெடக்குது நான் மட்டும் டியூசன் போகணுமா…? எங்க அப்பா, அம்மா, மிஸ்சை கைது பண்ணுங்க ஆபீசர்...!" போலீசாரை வீட்டுக்கே கூட்டிச்சென்ற 5 வயது பொடியன். குருதாஸ்பூர்: நாடே லாக்டவுன்ல முடங்கியிருக்கும்போது தன்னை மட்டும் படிப்பதற்கு டீயூசன் அனுப்பவதாக கூறி பஞ்சாப்பில் 5 வயது சிறுவன் ஒருவன் காவல் நிலையத்துக்கு சென்று புகார் கூறி அதிகாரியை வீட்டுக்கே அழைத்து சென்றான். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய அளவில் நாளை மறுதினம் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கடந்த இரண்டு மாதங்களாக நர்சரி பள்ளி தொடங்கி கல்லூரிகள், ஐஐடிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு கூட ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புக்களும் நிறுத்தப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில், ஊரடங்கு நேரத்தில் தன்னை கட்டாயப்படுத்தி டியூசன் அனுப்புவதால் 5 வயது சிறுவன் அதிருப்தி அடைந்தான். அனைவரும் வீ்ட்டில் இருக்கும்போது தன்னை மட்டும் பெற்றோர் வற்புறுத்தி டியூசன் அனுப்பி வைப்பதால் அவனுக்கு அழுகையும் ஆத்திரமும் வந்தது. இதனைத்தொடர்ந்து 'பொறுத்தது போதும்!' என பொங்கி எழுந்த பொடியன் டியூசனுக்கு செல்லாமல், காவல் நிலையத்துக்கு சென்றுள்ளான். 'ஊரடங்கு நேரத்தில் படிக்கச்சொல்லி தன்னை டியூசன் அனுப்பிவைப்பதாக' போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளான். 'டியூசன் அனுப்பி வைக்கும் அப்பா, அம்மா, டியூசன் சொல்லி தரும் ஆசிரியை என மூன்றுபேரையும் கைது செய்ய வேண்டும்' என்றும் சிறுவன் கூறியுள்ளான். சிறுவனின் அழுகையை அடக்கிய படாலா டிஎஸ்பி குர்திப் சிங், சிறுவனை அழைத்துக்கொண்டு டியூசன் எடுக்கும் ஆசிரியை வீட்டிற்கு சென்றார். வீட்டின் கதவு தட்டப்பட்டதால் வெளியே வந்த ஆசிரியை, போலீசார் கூட்டத்தை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் டிஎஸ்பி அவரிடம் "டியூசன் எடுக்கிறீர்களா..?" என கேட்டபோது ஆசிரியை "இல்லை" என மறுத்துவிட்டார். ஆனால் சிறுவனோ 'ஆசிரியை தனக்கு மட்டும் டியூசன் எடுப்பதாக' தெரிவித்தான். இதனைத் தொடர்ந்து அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். பின்னர் 'ஊரடங்கு நேரத்தில் இதுபோன்று நடந்துக் கொள்ளக்கூடாது' என டிஎஸ்பி ஆசிரியைக்கு அறிவுறுத்தினார். பின்னர் சிறுவனின் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் டிஎஸ்பி அறிவுரை கூறி சிறுவனை ஒப்படைத்தார். ‘‘நாங்க எல்லாம், எங்க காலத்துல டியூஷன் மிஸ் குட்டினாலும் பொறுத்திட்டு வந்தோமேடா... நீ போலீசையே கூட்டிட்டு வந்திருக்கேயடா...’’ என்று வடிவேலு பாணியில் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் சிறுவனின் பெற்றோர். 🤩 தினகரன்
  16. “எங்க அப்பா, அம்மா, மிஸ்சை கைது பண்ணுங்க” : டியூசன் அனுப்பியதால், போலிஸாரிடம் புகார் அளித்த சிறுவன்! 'ஊரடங்கு சமயத்தில் தன்னை டீயூசன் அனுப்புவதாக' கூறி 5 வயது சிறுவன் போலிஸாரின் புகார் அளித்த சம்பவம் பஞ்சாப்பில் நடந்துள்ளது. கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊர்டங்கால் பல முக்கிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவனை ஊரடங்கு நேரத்தில் அவரது பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி டியூசன் அனுப்பி வைத்துள்ளனர். அதனால் அதிருப்தி அடைந்த சிறுவன், டியூசன் செல்லாமல் படாலா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளான். அழுகையும், ஆத்திரமுமாய் வந்த சிறுவனை அழைத்து போலிஸார் "ஏன் இங்கே வந்தீர்கள்..?" என கேட்டுள்ளனர். அப்போது தனது அழுகையை நிறுத்தி பேச தொடங்கிய சிறுவன், 'அனைவரும் வீ்ட்டில் இருக்கும்போது தன்னை மட்டும் பெற்றோர் வற்புறுத்தி டியூசன் அனுப்பிவைப்பதாக' போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளான். அதுமட்டுமின்றி, 'தன்னை டியூசன் அனுப்பி வைத்த அம்மா, அப்பா மற்றும் டியூசன் டீச்சர் ஆகியோரை கைது செய்யவேண்டும்..!' என கூறியுள்ளான். இதனையடுத்து சிறுவனை அழைத்துக்கொண்டு டியூசன் எடுக்கும் ஆசிரியை வீட்டிற்கு சென்ற டி.எஸ்.பி குர்திப் சிங், அவரிடம் "டியூசன் எடுக்கிறீர்களா?" எனக் கேட்டார். அப்போது ஆசிரியர் "இல்லை" என மறுக்க, சிறுவன் உடனே "இல்லை.. இல்லை.. தனக்கு மட்டும் டியூசன் எடுப்பதாக" கூறியுள்ளான். பின்னர் அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து "இனி டியூசன் எடுக்கக்கூடாது..!" என ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு அங்கிருந்து சிறுவனின் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் அறிவுரை கூறி சிறுவனை ஒப்படைத்தார். இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கலைஞர் செய்திகள் டிஸ்கி: இரண்டாவது காணொளியில் சிவப்பு சட்டையணிந்த தந்தைக்கு போலீஸார் 'அறிவுரை' சொல்வதும், அவர் தர்ம சங்கடத்தில் திணறி பையனை தடுப்பதும், பொடியன் துணிந்து போலீஸாரை அழைத்துக்கொண்டு டியூசன் டீச்சரின் வீட்டுக்கே சென்று கதவை தட்டி புகார் சொல்வதையும் பார்க்கையில், பொடியன் படு சுட்டியாக இருப்பான் போல தெரியுது..!
  17. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.