Everything posted by ராசவன்னியன்
-
வெந்நீர் வைப்பது எப்படி..?
அடுத்தது அரிசியை கழுவிப் போட்டு சோறு பொங்க வேண்டியதுதான்.. நீளமான பாசுமதி அரிசியா..? இல்லை, தஞ்சாவூர் பொன்னி அரிசியா..? எது நல்லது..?? என குழப்பத்தில் உள்ளேன்.😎 இந்த வெள்ளிக்கிழமை விடுமுறையில் செய்து பழகணும்.
-
வெந்நீர் வைப்பது எப்படி..?
அடுத்து வருவது.. கவிதை..!
-
வெந்நீர் வைப்பது எப்படி..?
இது பரம்பரை பரம்பரையாய் தலைமுறைகள் கடந்து வந்த பாட்டி சமையல் முறை. கிராமத்தில் என் பக்கத்து வீட்டு பாட்டி எனக்கு கற்று கொடுத்த ரகசியம். இந்த சமையல் முறையை செய்து பார்த்துவிட்டு நீங்களும் படம் போடுங்கள் ஐயா..! 😎 You are welcome, Mr. Ku.Sa..!
-
வெந்நீர் வைப்பது எப்படி..?
இன்று தமிழ் புத்தாண்டு தினம்..! 'நம்ம யாழ் உறவுகளுக்கு ஏதாவது தெரிஞ்ச விசயத்தை பகிர்ந்தால் நல்லது' என தோன்றியது.. பெரும்பாலும் எல்லா திரிகளிலும் பங்களிப்பு செய்தாகிவிட்டது..மிச்சம் இருப்பது இரண்டே வகைதான்.. சமையல் கவிதை சமையலில் பல விற்பன்னர்கள் இங்கே இருந்தாலும், யாரும் ரத்தின சுருக்கமாக 'வெந்நீர் வைப்பது எப்படி..?' ன்னு பதிவு செய்யவில்லை..! 'அந்த குறையை ஏன் விட்டு வைப்பானேன்..?' என நான் முன்வந்துள்ளேன்.. கிழேயுள்ள காணொளியில் உள்ளது போல, ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பில் மிதமான சூட்டில் சூடேற்றவும்.. சிறு சிறு குமிழ்கள் வந்து தண்ணீர் கொதிக்க துவக்கும்.. நன்றாக ஆவி பறக்கும்வரை காத்திருந்துவிட்டு கரண்டியால் தண்ணீரை கிளறிவிடவும்.. பின் அடுப்பின் நெருப்பை நிறுத்தி மூடிவிட்டு பாத்திரத்தை தட்டால் மூடி வைக்கவும். ஒரு பதினைந்து நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால் குடிக்க வெதுவெதுப்பான சுவையான வெந்நீர் ரெடி..!
-
யாழ் உறவுகளுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
யாழ் உறவுகளுக்கு,
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், திரு.பாஞ்..!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சைக்கிள் வடை or பஞ்சாமிர்த வடை
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதெப்படி 'நீங்கள்தான் செய்தது' என நம்புவது..? காணொளியை போட்டல்தான் நம்புவோம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சாமியார் வடை..! OK..?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓ.. 68 போல தெரிந்தது.. கண்ணாடி போடாமல் வாசித்துவிட்டேன். அதனால் என்ன, அவரின் அனுபவ கருத்துக்கள் அண்ணனாகவே தெரிகிறது..! (ம்.. சமாளித்து வைப்போம்..)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரான் அண்ணாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக..
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அட, இதென்ன எல்லா திகதிகளும் தமிழ் மாதங்களுக்கு மாறிடிச்சி..? நல்லாவே இருக்கு..!
-
அருமையான தமிழ் பாடல்கள்.. Audio
அருமையான தமிழ் பாடல்கள் யாழ்க் கள உறவு திரு.பாஞ் அவர்கள், அருமையான இந்த பாடல்கள் தொகுப்பை 'வாட்ஸ் அப்'பில் பகிர்ந்தார்.. உங்களுக்காக நானும் அதை இங்கே பகிர்கிறேன்..!
-
MP4A கோப்பு என்றால் என்ன..?
MP4 Audio (MP4A) கோப்பு என்றால் என்ன..? MP4A எனப்படும் MPEG-4 கோப்பு, ஆடியோ டிராக்(Audio Track)குகளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு வடிவமாகும். 1990 களின் பிற்பகுதியில் வெளியானதிலிருந்து, இந்த வடிவம் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. MP3 கள், .WAV கள் மற்றும் .WMA கள். வடிவமைப்பின் டெவலப்பர்கள், 2004 ஆம் ஆண்டில், அதன் ஆடியோ தரம் திறன்களை மேம்படுத்துவதற்கு வடிவமைப்பில் இரண்டாவது பதிப்பை வெளியிட்டனர். வடிவமைப்பாளர்கள் ஆடியோ MP4A வடிவமைப்புடன் இணைந்து MP4 வீடியோ வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர். பொதுவாக MP4 விரிவாக்கத்துடன் உள்ள கோப்புகள் வீடியோ கோப்புகள் மற்றும் MR4A நீட்டிப்பு கண்டிப்பாக ஆடியோ டிராக்குகளுக்கு பயன்படுத்தப்படும். மோஷன் பிக்சர் எக்ஸ்பர்ட்ஸ் குரூப்(MPEG) 1999 ஆம் ஆண்டில் MP4 ஆடியோ வடிவத்தை வெளியிட்டது. இந்த குழு என்பது ஆடியோ சாதனங்கள் மற்றும் ஆடியோ கோப்புகளுக்கான ஆடியோ மற்றும் வீடியோ கோப்பு வடிவங்களை உருவாக்கும் சர்வதேச நிறுவனமாகும். அவர்களது படைப்புகளில் MPEG-2, MPEG-3 மற்றும் MPEG-4 கோப்பு வடிவங்கள் ஆகியவை உள்ளடங்கும். எம்.பி.ஈ.ஜி எம்பி 4A கோப்பு வடிவத்தை மிகவும் ஒலி அழுத்தி ஒலித் தரத்தை தக்கவைத்துக் கொண்டது. இன்டர்நெட்டின் புகழ் அதிகரித்தது ஆன்லைனில் உலகின் மிகப்பெரிய கோரிக்கையை உருவாக்கியது. வலை உரிமையாளர்கள் கோப்பின் அளவை ஒரு குறைந்தபட்சமாக வைத்திருக்க வேண்டும் ஆனால் முடிந்தவரை அதிகமான ஆடியோ தரம் காப்பாற்ற வேண்டும் என்று வடிவமைத்தனர். MP4A வடிவமைப்பு அடிக்கடி ஸ்ட்ரீமிங் ஆடியோ வலைத்தளங்களில் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் குறைந்த கோப்பு அளவு விரைவான ஏற்றுதல் அனுமதிக்கிறது. ஐபாட், மைக்ரோசாஃப்ட் ஜுன், சான்டிஸ்கா சன்ஸா போன்ற எம்பி 3 பிளேயர்கள் மற்றும் ஆப்பிளின் iTunes மென்பொருளைப் போன்ற டிஜிட்டல் மீடியா பிளேயர்களில் MP4A வடிவத்தை காணலாம். XBOX 360 மற்றும் பிளேஸ்டேஷன் 3 போன்ற வீடியோ விளையாட்டு அமைப்புகள் MP4A கோப்புகளைப் பயன்படுத்துகின்றன. MP4A கோப்புகள் ஆடியோ மேம்பட்ட கோடிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. இந்த AAC குறியாக்கமானது MP4 வடிவமைப்பை ஆடியோ ஒலி தரத்தை தக்கவைத்துக்கொள்வதை அனுமதிக்கிறது. MPEG-4 வடிவமைப்பில் அவர்களின் டிஜிட்டல் நிலைத்தன்மையின் அறிக்கையில் வெளியிடப்பட்ட பொதுவான எம்பி 3 ஆடியோ வடிவத்தைவிட AAC தொழில்நுட்பம் MP4A வடிவமைப்பை அதிக நம்பகத்தன்மையை வழங்குவதாக ஃபெடரல் டிஜிட்டல் ப்ரெசர்வேஷன் ஏஜென்சி ஆவணங்கள் கூறுகின்றன. இந்த ஃபெடரல் ஏஜென்சி லைப்ரரி ஆஃப் காங்கிரஸின் கீழ் வேலைசெய்யும் டிஜிட்டல் நகல்களை நூலகத்தில் பதிவுசெய்வதற்காக பொறுப்பேற்கிறது. MP4A வடிவமைப்பு ஸ்டீரியோ வடிவத்தில் 48 வெவ்வேறு ஆடியோ டிராக்குகளை மீண்டும் உருவாக்க முடியும். இதில் 16 குறைந்த அதிர்வெண் தடங்கள், 16 overdub / பன்மொழி தடங்கள் மற்றும் 16 தரவு ஸ்ட்ரீம் டிராக்குகள் அடங்கும். 48 டிராக்குகளை அனுமதிக்கிறது அசல் ஒலி பதிவு ஒலி ஆற்றல் அதிகரிக்கிறது. MP4A வடிவமைப்பில் ஆப்பிள் லாஸ்ஸஸ் குறியாக்கத்திற்கான ஆதரவு, ஐபாட், ஐபாட், ஐபோன் மற்றும் மேக் கம்ப்யூட்டர்கள் உட்பட ஒவ்வொரு ஆப்பிள் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படும் உயர் நம்பக சுருக்க தரநிலை ஆகியவை அடங்கும். https://ta.computersm.com/10-what-is-an-mp4a-file-34806
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமேரியர் & ராஜன்விஷ்வா. இப்போ எந்த நாட்டில் கொண்டாடுகிறீர்கள்..? விமானம் கிளம்பிடுச்சா..?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஐயர்வாள், சுந்தரத் தெலுங்கில் எவ்வளவு பாந்தமா சுவாஹே, ரஸ்துன்னு கலந்தடிச்சி மந்திரம் சொல்கிறார், ரசியுங்கோ. அபச்சாரம் மாதிரி பேசாதேள்..!
-
இனித்திடும் இனிய தமிழே....!
உண்மைதான்.. இவருடைய பேச்சுக்கள் யூடுயூபில் வந்தால் உடனே தள்ளிவிட்டு அடுத்த காணொளிக்கு சென்றுவிடுவேன். பேச்சுக்கள் ஒரே அபத்தமாக இருக்கும்..!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ்க் களம், ரெண்டு நாளா ரொம்ப சுணங்குது.. பக்கம் தெரியவே ரெண்டு நிமிசங்கள் ஆகுது.. என்னன்னு கொஞ்சம் பாருங்கோ சாமிகளே..! நன்றி.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நடித்த நடிகர், நடிகைகளை விட ஜேசுதாஸ், வாணி ஜெயராம் ஆகியோரின் குரல் வளமும்,பாடலும் அதற்கான எம்.எஸ்.வியின் இசையுமே மிக சிறப்பு இந்தப் பாடலில்..!
-
அத்துமீறிய தம்பிக்கு லத்தியடி..!
அத்துமீறிய தம்பிக்கு லத்தியடி..! உலகம் முழுவதும் கொரானா பயத்தில் ஒடுங்கிப்போய் வீட்டுக்குள் அடங்க, இந்த மைனருக்கு முதல்வர் வந்து ஏன் ஊரடங்கு என்று விளக்கம் சொல்ல வேண்டுமாம்..! நல்ல கவனிப்பு..!!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னாது சிவக்குமாரும் அம்பிகாவுமா..? நல்லவேளை, பி,யூ.சின்னப்பாவும், ஏ.சகுந்தலாவும் என சொல்லாமல் விட்டீர்களே..!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
'கொரானா' வந்தாலும் வந்தது, அலுவலக வேலை போக சில விருப்பமான பாடல்களை தேடி எடுக்க நேரமும் கிட்டியது.. அப்படி தேடியதில், இந்தப் பாடல் எனக்கு பிடித்தவற்றில் ஒன்று..! (படம் 'மொக்கை டப்பா'வாக இருந்தாலும்..! ) 'தமிழ்ச் சேவையர்' ரசிப்பார் என்ற நம்பிக்கையுமுண்டு..!!
-
அத்தான் என்னத்தான்..!
அத்தான்..என்னத்தான்..! "கொரானா" தொற்றை தவிர்க்க உலகமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் அடைந்து கிடக்கும் குடும்பஸ்தர்கள், மனைவியை கவர பின்வரும் அருமையான யுக்திகளை கையாண்டால், எப்பொழுதும் இன்பமே..! 21 வாழ்வியல் சூத்திரங்கள். 1. வீடு மனைவியின் அதிகார வரம்பிற்குட்பட்டது. அங்கு நீங்கள் அதிகாரம் செலுத்த முயலாதீர்கள். கிட்டாதாயின் சட்டென மற. 2.எப்போதும் அடக்கத்தை கடைப்பிடியுங்கள். அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். 3.வீடு என்பது நீங்கள் தங்குவதற்கு விசா பெற்றுள்ள இடம். குடியுரிமை பெற முயற்சிக்காதீர்கள். வினாச காலம் விபரீத புத்தி. 4.உங்கள் அன்றாட கடன்களையும் கடமைகளையும் அனுமதி பெற்று கைக்கொள்ளுங்கள். அனுமதி ஒரு வெகுமதி. 5.உணவும் பானங்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் உடனடியாக கிடைக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்து விடாதீர்கள். கிடைக்கும் நேரத்தில் மறக்காமல் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஆசைப் பட்டால் அவஸ்தை. 6. சும்மா இருக்குறதுக்கு ஒட்டடை அடிக்கலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் ஒட்டடை அடித்து விடுங்கள். இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான முதல் கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். முந்தினால் முதலுக்கு மோசமில்லை. 7. சும்மா இருக்குறதுக்கு ஃபேன் துடைக்கலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் ஃபேன் துடைக்க ஆரம்பியுங்கள். ஏங்க ஜாக்கிரைதைங்க, பாத்து க்ளீன் பண்ணுங்க என்று கரிசன வாசகம் உங்கள் காதுகளை எட்டும். இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான இரண்டாவது கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். சுத்தம் சோறு போடும். 8. சும்மா இருக்குறதுக்கு அந்த பாத்ரூமை க்ளீன் பண்ணலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் பாத்ரூம் க்ளீன் பண்ண ஆரம்பியுங்கள். ஏங்க இதையெல்லாம் நீங்க பண்றீங்க, வேலையாள் வச்சி பண்ணிக்கலாங்க என்று கரிசன வாசகம் உங்கள் காதுகளை எட்டும். இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான மூன்றாவது கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். சுத்தம் சுபம். 9. இப்போது சிங்க்கில் இருக்கும் பாத்திரங்களை கழுவ துவங்குங்கள். ஏங்க, இதெல்லாம் நீங்க செய்யிற வேலையாங்க, போயி பேப்பர் படிங்க, டீ போட்டு எடுத்துட்டு வர்றேன் என்று ஒரு வாசகம் வரும். அது திருவாசகம். இப்போது உங்கள் மதிப்புயர்வு உறுதியாகி விட்டது. பாத்திரம் அன்புக்கு பாத்திரம். 10. அழுக்கு துணி களை சேகரித்து வாஷிங் மிஷினில் போடுங்கள். பின், இன்னும் ஏதாவது இருக்காம்மா என்று தணிந்த குரலில் கேளுங்கள். பின்னர் வாஷிங் மிஷினை இயக்கி விட்டு நாற்காலியில் அமருங்கள்.இப்போது நீங்கள் கால்மேல் கால் போட்டு தைரியமாக அமரலாம். உங்கள் மதிப்புயர்வு ஏற்கனவே உறுதியாகி விட்டதால் உங்களுக்கு ஒன்றும் ஆகாது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள். 11. இனி வாஷிங் மிஷின் துவைத்த துணிகளை மாடிக்கு எடுத்து சென்று கொடியில் கிளிப் போட்டு காய வையுங்கள்.இது மிக முக்கியமான செயல். தவறினால் கஷ்டப்பட்டு கிடைத்த மதிப்புயர்வு பரமபத பாம்பிடம் சிக்கியதைப்போல் சர்ரென சருக்கி விடும். கவனம் கவசம். 12. துணி காய வைத்தபின் வீட்டுக்குள் (கால்மேல் கால் போட்டு) அமர்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். இப்போது உங்களுக்கு ஒரு டீ அன்பு கொஞ்சம் தூக்கலாக வழங்கப்படும். அசந்து விடக்கூடாது. மெல்ல எமுந்து, பெட்ஷீட், தலையனை போன்றவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்த டீ வழங்கப்பட்டது என்பது பிறிதொரு யோசனையில்தான் புரியவரும். காரணமில்லாமல் காரியமில்லை. 13. சாப்பாட்டு நேரம். ஆச்சரியமாயிருக்கும். உங்களுக்கு பிடித்த உணவு வகைகள் வரிசை கட்டி நிற்கும். இந்த உள்ளடங்கு காலத்துல எதுக்கும்மா இவ்வளவு சிரமம் எடுத்துக்கிறே என்று (சம்பிரதாயமாகவாவது மறக்காமல்) கூற வேண்டும். புகழோடு தோன்றின் இகழ் இல்லை. 14. உண்டபின் அமைதியாக உறங்கி ஓய்வு எடுக்க அனுமதி உண்டு. வாய்திறக்க அனுமதி இருந்தாலும் அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இருப்பது சிறப்பு. ஆதலின் மௌனமாய் இருத்தல் நன்று. 15. உறங்கி எழுந்த பின் அற்புதமாய் ஒரு டீ வரும். நீங்கள் ஆனந்தமாய் அதை பருகலாம். அதன்பின், காயப்போட்ட துவைத்த துணிகளை எடுத்து வந்து விட வேண்டும். இதில் காலதாமதம் வேண்டாம். நீங்கள் ஆனந்தமாய் பருக வழங்கப்பட்ட டீ இதற்காகத்தான் என்பது விரைவில் புரிய வரும். செய்கை நன்றே. 16. இப்போது அதி தீவிரமான கண்கானிப்புக்கு ஆட்படுவீர்கள். நீங்கள் காய வைத்து எடுத்து வந்த துணிகளை மடித்து வைக்க வேண்டும். இல்லையேல் பரமபத பாம்பு வேலை நடந்து உங்கள் அறிவு கூறாக்கப்பட்டுவிடும் ஜாக்கிரதை. முடிவே விடிவு. 17. நீங்கள் இப்போது ஆல் பாஸ் கேட்டகரியில் உள்ளீர்கள். நிம்மதி நிச்சயம். இரவு உணவு ஏக சுவையாய் பரிமாரப்படும். எப்பிடித்தான் இவ்வளவு வேலையை இழுத்துப்போட்டு செய்றியோம்மான்னு சொல்லீட்டி ( இங்க ரிப்பீட் அனுமதிக்கப்படும்) உறங்கப் போயிரனும் நல்ல பிள்ளையாய். புகழுரை தெளிவுரை. 18. இந்த தினசரி யதார்த்தங்களைத்தவிர, உங்கள் கவனத்தை பரண் மேல் ஒரு நாள் இருத்த வேண்டும். பரண் சுத்தம் பரம சௌக்கியம். 19. இதேபோல் அலமாரியின் மேல் கவனம் செலுத்த வேண்டும்.அற்புத பலன் தரும். அற்புத பலன் தரும் அலமாரி சுத்தத்தை அவ்வப்போது மேற்கொள்வதால் இல்லத்தில் ஆனந்தம் தாண்டவமாடும். அலமாரி அருள் மாரி. 20. கொஞ்சம் கஷ்டமானாலும் கடினம் பாராமல் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, ஒவ்வொரு நாளும் வீட்டின் ஏதாவது ஒரு மூலையை தேர்வு செய்து மூலை சலவை, அதாவது மூலையை சுத்தம் செய்ய வேண்டும். மூலை சலவை மூளை சலவை போக்கும். 21. நீங்கள் அறிவாளி🤔 என்பதையோ, புத்திசாலி🥱 என்பதையோ எப்போதும் நினைவில் கொள்ளாதீர்கள். கொண்டது கொல்லும். மேலே உள்ள 21 சூத்திரங்களையும் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நினைவில் இருத்துங்கள். சூத்திரம் சாத்திரம், 21 நாட்கள் மட்டுமல்ல, 21 யுகங்கள் கூட நீங்கள் வெற்றிகரமான குடும்பஸ்தனாக இருக்கலாம். வாழ்த்துக்கள்..! -வாட்ஸ்அப்பில் வந்தது..
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நினைவு நாளா..? அது பற்றி எனக்கு தெரியாது.. பாடல் ஞாபகம் வந்தது,கேட்டேன்.. ஜஸ்ட் கோயின்சிடன்ஸ்..! இவ்ளோ பெரிய மண்டையை போட்டு பயமுறுத்தாதீங்க..கவி..!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தமிழ்ச் சேவை-2 சுவி ஐயா, நேயர் விருப்பமாக, எனக்கு பிடித்த இந்தப் பாடலை சுழல விடுங்கள்..!