Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. மன்னிக்கவும்.. இப்படியொரு நியாப்படுத்துதலை எதிர்பார்க்கவில்லை.. ! எப்படிப்பட்ட ஹார்மோன்களும் கட்டுக்குள் இருக்க வேண்டும், அவரவர் வீட்டிற்குள் அதை வைத்துக்கொள்ள வேண்டும், பொது இடத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையிலும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் யாரும் நடக்க அனுமதிக்கக் கூடாது.. இதில் வயது வித்தியாசம் ஏன்? பொது மக்களுக்கு சட்டம் ஒழுங்கு மீது நம்பிக்கை இருக்க வேண்டுமெனில் இம்மாதிரியான பொறுக்கித்தனத்தை வயது தாட்சன்யமில்லாமல் அடக்கி ஒடுக்க வேண்டும்..
  2. சென்னை மின்சார ரயிலில், கத்தி பொல்லுகளுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் அட்டகாசம்..!
  3. தீபாவளிக்கு தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை: உச்ச நீதிமன்றம் புது தில்லி: தீபாவளிக்கு தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லியில் பட்டாசுகளை வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை பிறப்பித்து உச்ச நீதிமன்ற நீதிபதி மதன்வீர் லோகு தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. தில்லியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதால், மாசு அதிகமாக ஏற்படுவதாகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதையடுத்து, தீபாவளி பண்டிகை முடியும் வரை தில்லி மற்றும் தில்லியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி: தில்லியில் காற்று மாசு ஏற்படுவதைத் தடுப்பதற்காக தில்லி மற்றும் என்சிஆர்(NCR) பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது என்று 2016, நவம்பர் 11-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து பட்டாசு உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுவை கடந்த மாதம் 11-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தாற்காலிகமாக விலக்கிக் கொண்டது. மேலும், தில்லியில் தசரா, தீபாவளி பண்டிகைகளுக்கு பிறகு நிலவும் சுற்றுச்சூழல் மாசுவை கணக்கிட்டு பட்டாசு விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. பட்டாசுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுவைக் கணக்கிட குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே தில்லியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள பட்டாசுகளை மட்டும் தீபாவளி, தசரா பண்டிகளையின்போது விற்பனை செய்ய வேண்டும். புதிதாக பிற மாநிலங்களில் இருந்து பட்டாசுகளைக் கொண்டு வரக் கூடாது என்று உத்தரவிட்டிருந்து. இதனிடையே, தில்லி மற்றும் தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு முழுமையாக தடை விதித்து கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவையே அமல்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன், கடந்த ஆண்டு பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது, பட்டாசு உற்பத்தியாளர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. தில்லியின் காற்று மாசுக்கு பட்டாசுகளும் ஒரு காரணம் என்று நீதிமன்றம் கூறி, பட்டாசு விற்பனைக்கு முழுமையான தடை விதித்தது. அப்படி இருக்கும்போது, பட்டாசு உற்பத்தியாளர்கள் கடந்த மாதம் தாக்கல் செய்த மனுவை மீண்டும் விசாரித்து, தில்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை தாற்காலிகமாக விலக்கிக் கொண்டுள்ளது ஏற்புடையதல்ல. ஆகையால், பட்டாசு விற்பனைக்கு கடந்த ஆண்டு பிறப்பித்த முழுமையான தடை உத்தரவையே அமல்படுத்த வேண்டும் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'உச்ச நிதிமன்றம் கடந்த மாதம் பிறப்பித்த உத்தரவில் எந்த மாதிரியான மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள்? தில்லியில் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் அதன் பின்பு நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது நடைபெற்ற பல்வேறு விவகாரங்களின் அடிப்படையில் தடை உத்தரவு தாற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது' என்று கூறியிருந்தார். இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிவடைந்து, தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்கவும், விற்பனை செய்யவும் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தினமணி
  4. இதே போன்ற செய்திக்கு 'தற்ஸ்தமிழி'லில் ஒரு வாசகர் அளித்துள்ள கருத்து இது..
  5. "மோடியே எனது மணவாளன்” போராட்டம் நடத்தும் சாந்தி சர்மா! 'பிரதமர் நரேந்திர மோடியைதான் திருமணம் செய்வேன்' என ஜந்தர் மந்தரில் ஒரு மாதமாக ஜெய்ப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் போராட்டம் நடத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடிக்கு நாடு முழுவதும் அதிகமான ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் உருவாகி உள்ளனர். அவர்களில் சிலர் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச காத்திருப்பவர்கள் மத்தியில், மோடியின் மீது அதிக காதல் பாசம் கொண்ட ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த 40 வயதுடைய 'ஓம் சாந்தி சர்மா' என்ற பெண், பிரதமர் மோடியைதான் திருமணம் செய்வேன் என ஜந்தர் மந்தரில் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் மோடி புகைப்படம் மற்றும் வாசகம் அடங்கிய பேனருடன் ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறார். ஓம் சாந்தி சர்மா பேசுகையில், “எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. ஆனால், திருமணம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. நான் இப்போது தனிமையில் இருக்கிறேன். அதுபோல, அவரும் (மோடி) என்னைப் போல் தனிமையில் இருக்கிறார். என்னை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் என பலரும் அணுகுகிறார்கள், ஆனால் பிரதமர் நரேந்திர மோடியை திருமணம் செய்துகொண்டு அவருக்கு சேவையாற்ற விரும்புகிறேன்,”என தெரிவித்தார். மேலும் “பிரதமர் நரேந்திர மோடியும் தனியாக இருந்து அதிகமான வேலையை செய்து வருகிறார். நான் அவரை சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டேன் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவருக்கு உதவி தேவை என்பது எனக்கு தெரியும், அவருக்கு சேவையாற்ற நானும் விரும்புகின்றேன்” என குறிப்பிட்டுள்ளர். “இங்குள்ள மக்கள் என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள், மோடிஜியை திருமணம் செய்ய நான் விரும்பவில்லை என்று அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், ஏனென்றால் அவரிடம் எனக்கு ஒன்று இருக்கிறது, பெரியவர்களை மதிக்க வேண்டும் என சிறு வயதிலிருந்தே சொல்லி கொடுத்திருக்கின்றனர். நான் மோடியை மதிக்கிறேன். எங்கள் கலாச்சாரம், குழந்தை பருவத்தில் இருந்து பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து, அவற்றின் வேலையில் அவர்களுக்கு உதவி செய்யவே விரும்புகின்றேன். பார்ப்பவர்கள் எல்லாம் மனநோயாளி என நினைத்து சிரிக்கின்றனர். ஆனால், என் மனநிலை நன்றாக உள்ளது. பணத்துக்காக நான் அவரை திருமணம் செய்துகொள்ள நினைக்கவில்லை!” என தெரிவித்துள்ளார். சாந்திக்கு தனது முதல் திருமணத்தில் 20 வயதுடைய மகள் உள்ளார். அவளது எதிர்காலத்தைப் பற்றி அவர் கவலை கொள்ளவில்லை, ஜெய்ப்பூரில் தனக்கு நிறைய நிலம் மற்றும் பணம் இருப்பதாகக் கூறுகிறார். மோடிக்கு சில பரிசுகளை வழங்குவதற்காக நிலங்கள் சிலவற்றை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும், மோடி இங்கு வந்து என்னை சந்திக்கும் வரையில் போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை திருமணம் செய்துகொள்ளவதற்காக போராட்டம் நடத்தி வரும் சாந்தி, ஜந்தர் மந்தரில் தங்கி குர்துவாஸ் மற்றும் கோவில்களில் சாப்பிட்டு வருகிறார். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவினால் வேறு இடத்திற்கு மாற்றுவதைப் பற்றி சாந்தி சர்மா கவலை கொண்டுள்ளதாக தெரிகிறது. “என்னை அரசு இங்கிருந்து அகற்றுமா, அகற்றினால் நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியாது, ஒரு மாதமாக போராட்டத்திற்கு இவ்விடம் மிகவும் வசதியாக இருந்தது” என கூறியுள்ளார். தினமணி குறிப்பு: வட இந்தியர்களே இப்படித்தானா...? ஏதோ ஆகிவிட்டது..!
  6. சிம்மக்கல், வடக்கு வெளி வீதி. யானை மலை, ஒத்தக்கடை. மேல கோபுர தெரு, மேல மாசி வீதி சந்திப்பு. கீழச் சித்திரை வீதி.
  7. அப்பாவிகளா..? படிப்பறிவும், நாகரீகமும் மேம்பட்டுவரும் தற்போதைய உலகில், கொஞ்சமும் மூளையை பயன்படுத்தி சிந்திக்காமல், அறுபது எழுபது வயதுகளில் குழந்தைகளை இப்படி பெற்றுத் தள்ளினால் மனிதனுக்கும், மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்..? தாம்பத்தியம் ஆரோக்கியமன இயல்பே, ஆனால் அதை இப்படி அப்பட்ட உருவமாக வெளியேற்றித் தள்ளுவது சமூக பொறுப்பற்ற செயல், கண்டிக்கபட வேண்டியது.. வெட்கம் கெட்ட செயல்!
  8. அட, நீங்க வேறை கடுப்பை கிளப்பிகொண்டு..? மகளுக்கு கலியாணமாகி பேரக்குழந்தை இருக்கும் வயதில் இன்னொரு மகனை பெற்ற பெண்ணின் தகப்பனாருக்கு வெட்கமாயில்லை? அதற்கு உடந்தையான அந்த தாயிக்கும் அதை தடுக்க துப்பில்லை.. வெட்கக்கேடு..!
  9. 'மீம்ஸ்' கிரியேட்டர்களை 'பீன்ஸ்' கிரியேட்டர்களாக்கி கலாய்க்கும் கேப்டன்..! வார இதழொன்றில் தேமுதிக தலைவர், கேப்டன் விஜயகாந்தின் நேர்காணல் வாசிக்கக் கிடைத்தது. தற்கால அரசியல் நிலைமைகள், அதில் தனது நிலைப்பாடு, தேமுதிகவின் அரசியல் எதிர்காலம், தனது மகன்களின் வளர்ச்சி, கமல், ரஜினியின் அரசியல் பிரவேசத்தில் தனது கருத்துகள் என்பது குறித்தெல்லாம் பதில் சொல்லிக் கொண்டே வந்தவர், அடுத்ததாக தன்னைக் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் மீம்ஸ்கள் குறித்த கேள்வியொன்றுக்கு அளித்த பதில் சரியான அகடவிகடம். விஜயகாந்த் என்றைக்கு தேமுதிக வைத் தொடங்கினாரோ, அன்று முதல் அவர் தமிழக 'மீம்ஸ்' கிரியேட்டர்கள் அத்தனை பேரின் செல்லப் பிள்ளையாகி விட்டார் என்றால் அது மிகையில்லை! இணையத்தில் எங்கெங்கு காணினும் அவரைக் குறித்து வெளிவரும் நகைச்சுவையான மீம்ஸ்களுக்கு ஒருபோதும் பஞ்சமே இருப்பதில்லை. ஆனால் அன்பார்ந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இதுவரை தெரிந்திராத விஷயம் ஒன்று உண்டென்றால் அது அவர்கள் இத்தனை பாடுபட்டு, மெனக்கெட்டு உருவாக்கி ஹிட்டுக்கு மேல் ஹிட் அடிக்க வைத்துக் கொண்டிருக்கும் கேப்டன் மீம்ஸ்கள், சாட்சாத் அந்த கேப்டனுக்கே புரிவதில்லை என்பது தான். இணையத்தில் வெளிவரும் மீம்ஸ்களை, தான்... பல நாட்களாக 'பீன்ஸ்' என்று தான் புரிந்து கொண்டிருந்ததாக பச்சைக் குழந்தையாகப் பதில் சொல்லி இருக்கிறார் விஜயகாந்த்! 'அடப்போங்கையா, மீம்ஸ் கிரியேட்டர்ஸ்! இப்படி ஒரு ஒன்றும் தெரியாத அப்பாவியையா 'மீம்ஸ்களில் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்..?' என்ன ஒரு அநியாயம்! தினமணி
  10. ஒரே நேரத்தில் தாயும், அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த உலக அதிசயம்! சிரியாவின் துருக்கிய மருத்துவமனையில், ஒரே நாளில் ஒரே நேரத்தில் தாயும் அவரது மகளும் பிள்ளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மத்திய துருக்கியின், கோனியாவைச் சேர்ந்தவர் பாதிமா பிரின்சி(42), அவரது மகள் காதா பிரின்சி(21). இவர்கள் இருவரும் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த செவ்வாய்கிழமை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் பிரசவ சிகிச்சை பார்த்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் ஒரே நாளில், ஒரே நிமிடத்தில், ஒரே நொடியில் ஆளுக்கொரு அழகான ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளனர். இதுபோன்ற அபூர்வ நிகழ்வு உலகிலேயே இது தான் முதன்முறை என்ற மருத்துவர்கள், இதுவொரு அதிசயம் என்று தெரிவித்துள்ளனர். இவர்களின் குழந்தைகளுக்கு துருக்கியின் குடியரசுத் தலைவர் ரஜப் தையிப் அர்துகான், தாயின் பிள்ளைக்கு ரஜப் என்றும், மகளின் குழந்தைக்கு தையிப் என்றும் பெயர்களைச் சூட்டியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பாதிமா பிரின்சியும், அவரது மகள் காதா பிரின்சியும் சிரியாவை விட்டு வெளியேறி துருக்கியில் அடைக்கலம் புகுந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தினமணி
  11. விளை பொருட்களை சேமித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய குளிரூட்டப்பட்ட கிடங்கு அமைக்கும் பணி முடிவடையாததால் பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் சிரமம் உள்ளது.. ஆனால் நான்கு வெளிநாடுகளுக்கு(அமீரகம், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர்) விமான சேவை உள்ளதால் பயணிகளுக்கான சுங்க அதிகாரிகள் முனையம் அங்கே இருப்பதாக அறிந்தேன். Madurai airport gets custodianship for international cargo handling Madurai: Madurai airport will become an international terminal in every sense by April 2017, when it will start handling international cargo as the Department of Central Excise and Customs on Thursday issued custodianship for the same to Airports Authority of India. Announcing this, Airport Director V.V. Rao said a few infrastructure facilities, including security measures, needed to be put in place before international cargo movement was allowed from Madurai airport. ..... ..... However, Mr. Rao said efforts would be taken up to put up cold storage facility at the earliest. http://www.thehindu.com/news/national/tamil-nadu/Madurai-airport-gets-custodianship-for-international-cargo-handling/article16834925.ece
  12. இருண்டு கிடந்த திட்டத்திற்கு வெள்ளிசம் கிட்டியுள்ளதோ? அன்னை செயலலிதாவின் ஈகோவால் கிட்ப்பில் போடப்பட்ட சென்னை துறைமுகம்-மதுரவாயல் மேம்பால சாலை திட்டப்பணிகளை மறுபடியும் புத்துயிரூட்டி ஆரம்பிக்கும் விதமாக, மத்திய அரசின் நிறுவனமான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்,(NHAI) விரிவான திட்ட வரைவு ஆலோசனைக்கான(DPR) ஒப்பத்தப் புள்ளிகளை ஊடங்களில் கோரியுள்ளது.. http://www.nhai.org/Doc/22sep17/Technical Evaluation RESULT.pdf
  13. ட்ராவலேட்டர் (Travelator) சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு (காமராஜர் முனையம்) முனையத்திற்கும், வெளிநாட்டு (அண்ணா முனையம்) முனையத்திற்கும் இடையேயான தூரத்தை பயணிகள் சிரமமின்றி அடைய 'ட்ராவலேட்டர்' அமைக்கும் பணி பல வருடங்களுக்குப் பின், வடிவமைப்பு அங்கீகரிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. இவ்வசதி மக்கள் பாவனைக்கு வந்தபின் பயணப்பொதிகளுடன் இறங்கும் பயணிகள், அதிக சிரமமின்றி இரு முனையங்களுக்கும் சென்று வரலாம்.. வெளிநாடுகளில் சர்வதேச விமான நிலையங்கள், பெரும்பாலும் நிலத்தடி தொடருந்துகளை முனையங்களுக்கிடையே இயக்கிவரும் வேளை, ஏழைக்கேற்ற எள்ளுருண்டையான இந்த 'ட்ராவலேட்டர்'களை மத்திய அரசிடமிருந்து சென்னை விமான நிலையம் பெற, பல வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.. 'ட்ராவலேட்டர்' மாதிரி வடிவமைப்பு நிறுத்தப்பட்ட 'ட்ராவலேட்டர்'களின் கூண்டுப் பாதை தற்பொழுது 'ட்ராவலேட்டர்' அமைக்கும் பணி துவக்கம்.
  14. இது தான் உண்மையென தோன்றுகிறது.. என்னதான் இந்திய வல்லரசு கானல் நீரை நினைத்து இடித்தாலும், அது ஏகாதிபத்தியத்துக்கு இன்னமும் அடிமைதான். இந்த சகதியில் சிக்கி உழலும் தலைவிதி தமிழனுக்கு...! காலம் மாறும், சந்தர்ப்பமும் வரும், பயன்படுத்தலாமென காத்திருக்க வேண்டியதுதான். தம்மிடம் இல்லாததைப் அடுத்த இடத்தில் பார்த்து ஏங்குவது மனிதனின் இயல்புதானே ஐயா? இக்கரைக்கு அக்கரை பச்சை.. குழுமத்திற்கு வருகை தந்து கருத்திட்ட அனைவருக்கும் நன்றி..!
  15. ஒருவேளை, ஈழம் சிறிலங்காவிலிருந்து பிரிந்து சென்றால் தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்து செல்ல முடியுமா..?
  16. “சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?" வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னை திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார். மறுபடியும் ஒரு முறை கேட்டார், "தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?” “ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் ரோடு, எதித்தாப்ல போய் நில்லுங்க, தாம்பரம் பஸ் வரும் ! " சரி என தலையாட்டிவிட்டு, எதிர்புற ரோட்டில் நுழைந்து, பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் கிண்டியை நோக்கி விறு விறு வென நடக்க துவங்கினார், "அய்யா ! அடுத்த பஸ்ஸ்டாப் ரொம்ப தூரம், இங்கயே நில்லுங்க ! என நான் சொல்ல சொல்ல, "இல்ல தம்பி நான் நடந்தே போய்டுவேன்" என வேகத்தை குறைக்காமல் அதே விறுவிறு நடையை தொடர்ந்தார். ‘அட, பெருசு சொன்னா கேக்கிறாரா பாரு!' என சலித்து நின்ற என்னை, என் மனசாட்சி மைக்ரோ நொடியில் வெளியே வந்து உலுக்கி அவர் வறுமையை மூளையில் உறைக்க வைத்தது. குற்ற உணர்வுடன் அவரை துரத்தி பிடித்தி “பஸ் காசு தரேன், பஸ்ல போங்க” என்றேன், என்ன நினைத்தாரோ என்னவோ “ஏமாத்திட்டாங்க தம்பி, நல்லா ஏமாத்திட்டானுக! அதான் நடந்தே ஊருக்கு போறேன்" என்றார். “யாரு ஏமாத்தினாங்க ?, எங்க தாம்பரமா உங்க ஊரு” “இல்ல தம்பி, காஞ்சிபுரம் !“ ஒரு நிமிடம் ஆடிப்போய், அதிர்ச்சி விலகாமல் கேட்டேன், "இப்போ காஞ்சீபுரத்துக்கா நடந்து போறீங்க !" "ஆமாந்தம்பி, காஞ்சிபுரத்தில் ஒரு ஓட்டல்ல க்ளீனிங் வேலை பாத்துட்டு இருந்தேன், இங்க செகுயூரிட்டியா வாய்யா, 8000 சம்பளம்னாங்க, அதாங்க 6 நாளுக்கு முன்னாடி தெரிஞ்சவர் கொணாந்து இங்க விட்டார். ரோகினி, ராகினி தியேட்டர்ல டூட்டி போட்டாய்ங்க, போனப்புறம் தான் தெரிஞ்சது, அது 24 மணி நேரம் வேலை தம்பி, 18 மணி நேரத்துக்கு மேல நின்னே இருக்கணும், நைட்டு இரண்டாவது ஆட்டம் முடிஞ்சவுடன் ரெண்டு மணிக்கு மேல தியேட்டர் படிக்கட்ல படுத்துக்கலாம், ஐஞ்சு மணிக்கு க்ளீனிங் ஆளுக வந்ததும் மறுபடியும் வேலை ஆரம்பிச்சுரும், உடம்பு வலி முடியல தம்பி, அப்படியே பிச்சு திங்குதுங்க, ஒரு நாள் பூரா வேலை பாக்க முடியலைங்க சார், டூட்டி மாத்தி விட முடியுமான்னு கேட்டேன், வேலை கிடையாது, கெளம்புன்னுட்டாங்க, ஐஞ்சு நாலு உழைச்ச காசையாவது கொடுங்கனு கேட்டா, போட்ட சோத்துக்கு எல்லாம் சரியா போச்சுன்னு சொல்லிட்டாங்க தம்பி, அதான் ஊருக்கே போய் பழைய வேலையே பாக்கலாம்னு கெளம்பிட்டங்க" என அவர் சொல்லிமுடித்தவுடன் ஆத்திரமும், பரிதாபமுமாக “ஐயா, அவனுகள விடுங்க, ஒரு நிமிஷம் இருங்க பஸ் காசு தரேன் பஸ்ல போங்க" என்று பணத்தை எடுத்தேன். “அட விடுங்க தம்பி, இதே வேகத்தில் போன நைட்டு பன்னெண்டு மணிக்கு முன்ன ஊருக்கு போய்டுவேன், ஒரு நா பேரனுக்கு உடம்பு சரியில்லைன்னு வேண்டிக்கிட்டு திருப்பதிக்கு 10 மணி நேரத்தில போயிருக்கேன், இதல்லாம் சாதாரணமுங்க, என்ன நா பூரா நின்னு உழைச்ச காசை ஏமாத்திட்டானுக, அதாங்க தாங்க முடியல என மறுபடியும் நடையை தொடர, விடாப்பிடியாய் இழுத்து பிடித்து கையில் இருந்த இருநூறை அவர் கையில் திணித்தேன். ஒரு நிமிடம் என்னை உற்று பார்த்தவர் நான் எதிர்பாரா நொடியில் சடாரென காலில் விழ எத்தனித்தார். “அட என்னங்கய்யா இது !” என அதிர்ந்து போய், அரையடி நகர்ந்து அவரை தோளை பிடித்து தூக்க கண்களில் கண்ணீருடன் கை கூப்பி நின்றார். “ஐயா, இதுக்கு ஏன் அழுவறீங்க!, போகும் போது சாப்பிட்டு போங்க என்றேன்,” கண்ணை துடைத்துக்கொண்டே சில அடி நகர்ந்தவர், திரும்பி வந்து, “பணம் தந்தத்துக்கு அழுவல தம்பி, காலைல ஒருத்தர்கிட்ட, சார் வேலைல இருந்து விரட்டிட்டாங்க சார்னேன், சில்லறை இல்லப்பானு சொல்லிட்டார். அப்பத்தான் புரிஞ்சது, இந்த ஊர்ல உதவினு கேட்டாலே பிச்சைக்காரனு நினைச்சுக்குவாங்கன்னு, ஆனா கேட்காமலியே புடிச்சு நிறுத்தி நீங்க காசு தந்தீங்களா, அதான் அடக்க முடியாம அழுதுட்டேன், அது சரி, நீங்க எந்த ஊர் தம்பி ? " அவர் கேட்டவுடன் பழக்கதோஷத்தில் கோயமுத்தூர்ங்க என் சொல்ல எத்தனித்தவன் ஒரு நொடி யோசனைக்கு பின், அவர் கையை பிடித்து தீர்க்கமாக சொன்னேன், “நானும் சென்னை தாங்க !" நண்பர் அனுப்பிய முகநூல் இணைப்பு
  17. "ரோட்ல.. பஸ்ல.. தியேட்டர்ல.. எங்கே போனாலும், ஒங்க இம்சை, தாங்க முடியலைடா..!" இன்று 'K டிவி'யில் இந்த நகைச்சுவை காட்சியை பார்த்ததில் புன்னகைத்தேன்..! அருமையான நகைச்சுவையை உருவாக்கியவருக்கு பாராட்டுக்கள்..!!
  18. திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண ஆண்டை கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது 25வது திருமண நாளை கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார். நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, "25ஆம் ஆண்டு திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம்.இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன..?" என்று கேட்டார். இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது. "நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம்..அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம். எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது.ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது. அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இது தான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள். மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்..!!! இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே? அறிவில்லையா?" என்று கேட்டேன். அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து, "இதுதான் உங்களுக்கு முதல் முறை" என்றாள். அவ்வளவு தான். அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது" என்றார் கணவர். -படித்தது..
  19. எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்..! - ஓ.பி.எஸ் சென்னை : தங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2 ஆயிரத்து 315 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களும், 58 சிறப்பு ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் பழனிசாமி இன்று வழங்கினார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கலையரங்கிள்ல நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வமும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், "எங்களைப் போன்ற நல்ல அரசயில்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியைப் போலவே தற்போதும் கல்வித்துறை அதே வளர்ச்சிப் பாதையை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஜெட் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்" என்றும் கூறி ஐஸ் வைத்தார் ஓ.பன்னீர் செல்வம். தற்ஸ்தமிழ்
  20. குடும்ப அட்டை குளறுபடிகள்.. தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான உணவுப்பொருள் வழங்கல் மற்று நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதன் வாடிக்ககையாளர்களுக்கு மேம்பட்ட குடும்ப அட்டை (Smart Card) வழங்குவதில் மிகுந்த ரசனையுடன் சேவையாற்றி வருகிறது.. அவற்றை இப்படங்கள் மூலமாக ரசிக்கலாம்.. ஈழத்தின் சங்கக் கடைகளில் இப்படி குளறுபடிகள் நடந்துள்ளனவா? படங்கள் உதவி : தற்ஸ்தமிழ்
  21. ஏற்கனவே காவிரியின் பாதி உயிரை கர்நாடகாவிற்கு விற்றுவிட்டார்கள்.. காவிரி உற்பத்தியாகும் குடகு பகுதி முன்பு சென்னை ஒருங்கிணைந்த மாநிலமாக இருக்கும்வரை தமிழர்களே அப்பகுதியில் பெருமளவு வசித்தார்கள்.. மொழிவாரி மாநிலமாக பிரிக்கையில் அப்பகுதி கர்நாடகாவிற்கு போய்விட்டது..
  22. அவர் அனைத்தையும் களைய நினைத்திருப்பார், ஆனால் வகிக்கும் பதவியின் கெளரவமும், சுற்றிலும் பெண்களும் இருப்பதாலும் வெட்கத்தில் தவிர்த்திருப்பர் என எண்ணுகிறேன்.. அவரை சூழ்ந்திருப்பது அவரின் அல்லக்கைகள். பொதுமக்கள் ஆற்றில் குளிக்கும்போது யாரும் சேர்ட், பெனியன் எல்லாம் போட்டுக் கொண்டு குளிப்பதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.