Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. கெடுபிடிகளை தாண்டி, மோடிக்கு எதிரே கறுப்பு கொடியை காட்டிய ஐஐடி மாணவர்கள்! சென்னை: சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி கண்ணில் கறுப்புக்கொடிகள் பட்டுவிடக்கூடாது என்று எத்தனையோ சிரத்தையாக போக்குவரத்து மாற்றம், வான்வழி போக்குவரத்து திட்டமிடப்பட்டாலும், ஐஐடி வளாகத்தில் பிரதமருக்கு நேராக ஐஐடி மாணவர்கள் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பை பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தில் நடைபெறும் ராணுவ கண்காட்சி தொடக்க விழாவிற்கு பிரதமர் வருகை தந்த நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை நகர் முழுவதும் கறுப்பு நிறம் நிரம்பி வழிகிறது. பிரதமர் செல்லும் பாதைகளில் இந்த கறுப்பு அவர் கண்ணில் பட்டுவிடாமல் இருக்க சிறப்பான ஏற்பாடுகளை காவல்துறை செய்திருந்தது. இந்நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் இருந்து அடையாறு புற்றுநோய் மையத்திற்கு காரில் சென்ற பிரதமருக்கு ஐஐடி மாணவர்கள் கறுப்புகொடி காட்டினர். பிரதமர் மோடிக்கு எதிராக எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதமரின் கார் ஐஐடி வளாகத்தில் இருந்து அடையாறு புற்றுநோய் மையத்திற்கு சென்ற போது ஐஐடி மாணவர்கள் பிரதமருக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒன் இந்தியா
  2. 'கோ பேக் மோடி': உலக அளவில் டிவிட்டரில் முதலிடம் பிடித்த ஹேஷ்டாக் சென்னை: தமிழகத்துக்கு வந்திருக்கும் பிரதமர் மோடிக்கு எதிரான #கோ பேக் மோடி# என்ற ஹேஷ்டாக் உலக அளவில் டிவிட்டரில் முதலிடம் பிடித்துள்ளது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர், திரையுலகினர், பல்வேறு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பல தரப்பிலும் இன்று கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது ஒட்டுமொத்த தமிழகமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடி வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் கடத்தி வரும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் வலுத்து வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து டிவிட்டர் போன்ற சமூக தளங்களிலும் ஏராளமானோர் கருத்துகளை பதிவு செய்துள்ளனர். அந்த வகையில், இந்திய அளவில் மட்டும் அல்லாமல், கோ பேக் மோடி என்ற ஹேஷ்டாக் இன்று உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிரான இந்த ஹேஷ்டாக், இன்று உலக அளவில் முதலிடம் பிடித்திருப்பது, தமிழக மக்களின் போராட்டம் உலக நாடுகளை கவனிக்க வைத்திருப்பதையே காட்டுகிறது. தினமணி
  3. பிரதமருக்கு கருப்புக் கொடி போராட்டம்: தள்ளாத வயதில், தளராத தீரத்துடன் பங்கேற்ற ஹீரோ! சென்னை: தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் திமுகவினர் மட்டும் அல்லாமல், திரையுலகினர், ஏராளமான கட்சியினர், பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர். இன்று காலை கருப்புச் சட்டை அணிந்த ஏராளமானோர் விமான நிலையத்தை முற்றுகையிட்டு, பிரதமர் மோடிக்கு தங்களது எதிர்ப்பைக் காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல, தமிழகத்தில், ராணுவ கண்காட்சி நடக்கும் திருவிடந்தை உள்ளிட்ட பல பகுதிகளில் கருப்புச் சட்டை அணிந்து, கருப்புக் கொடியை கையில் ஏந்திய தொண்டர்களும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினர், நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகே "கோ பேக் மோடி" என்ற வாசகம் அடங்கிய கருப்பு பலூன்களையும் பறக்க விட்டனர். திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியும் கருப்புச் சட்டை அணிந்து மோடிக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஒரு முத்தாய்ப்பாய், ஓசூரைச் சேர்ந்த 77 வயது ஜேவி நாராயணப்பா என்ற திமுக தொண்டர், மிகவும் சிரமங்களுக்கு இடையே சென்னைக்கு வந்துள்ளார். தள்ளாத வயதிலும், தளராத மனத்துணிவோடு, கருப்புச் சட்டை அணிந்து, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டி தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்ற உணர்வோடு ஓசூரில் இருந்து சென்னை வந்து திமுக தொண்டர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஏராளமான தொண்டர்களுக்கு மத்தியில், மனதில் தளராத உணர்வோடு கருப்புக் கொடி ஏந்தியிருக்கும் நாராயணப்பா ஹீரோவாக மின்னுகிறார். இவரது புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது ஒன்றே தமிழனின் தேச உணர்வை பறைசாற்றும் என்று பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் தினமணி
  4. தமிழர் விரோத மோடிக்கு இன்று சென்னையில் கிட்டிய வரவேற்பு..படங்கள்!
  5. மனைவி என்பவர் சொத்து கிடையாது; தன்னுடன் வாழ, கணவன் கட்டாயப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி மனைவி என்பவர், திடப் பொருளோ அல்லது சொத்தோ கிடையாது. தன்னுடன்தான் சேர்ந்து வாழ வேண்டும்! என்று கணவர் விரும்பினால் கூட, மனைவிக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே அது நடக்கும், அவரைக் கட்டாயப்படுத்தி வாழ வைக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கணவர் தன்னை கொடுமைப்படுத்துகிறார், அவரிடம் இருந்து தனக்கு விவாகரத்து பெற வேண்டும். ஆனால், அதற்கு கணவர் சம்மதிக்க மறுக்கிறார். தன்னுடன் வாழ தொடர்ந்து கட்டாயப்படுத்துகிறார் என்று பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவைத் தாக்கல் செய்த பெண்ணும், அவரின் கணவரும் நன்கு படித்தவர்கள், இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள். இருவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆனால், அதற்கு இருவரும் சம்மதிக்கவில்லை, அந்தக் குழுவின் ஆலோசனையையும் இருவரும் ஏற்கவில்லை. இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன் அந்தப் பெண் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்தப் பெண்ணின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ‘பாதிக்கப்பட்ட பெண் கணவனால் மிகுந்த கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அவருடன் தொடர்ந்து வாழ அவருக்கு விருப்பமில்லை. விவாகரத்து கொடுக்க விரும்புகிறோம் என்ற போதிலும், அதற்கு கணவர் உடன்பட மறுக்கிறார். அவர் மீது கொடுத்த புகார்களை வாபஸ் பெறுகிறோம். ஆனால், கணவருடன் சேர்ந்து வாழ மனுதாரரை கட்டாயப்படுத்தக் கூடாது’ என்று தெரிவித்தனர். ஆனால், கணவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ‘மனைவி என்பவர் திருமணத்துக்குப் பின் கணவருக்கு சொந்தம், அவர் கணவருடன் தான் வாழ வேண்டும். மனைவிக்கு விருப்பமில்லாவிட்டாலும், அவரிடம் சமாதானம் பேசி நீதிமன்றம் சேர்த்து வைக்க வேண்டும்’ எனத் தெரிவித்தனர். இருதரப்புவாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: மனைவி என்பவர் ஒரு திடப்பொருள் கிடையாது. திருமணம் செய்துகொண்டதால், அவர் கணவருக்கு சொத்துகிடையாது. சொத்தாகவும் கருத முடியாது. திருமணத்துக்கு பின் மனைவியுடன் வாழ கணவருக்கு விருப்பம் இருந்தால் கூட மனைவி விரும்பினால் மட்டுமே வாழ முடியும். தன்னுடன்தான் வாழ வேண்டும் என்று மனைவியை கணவர் கட்டாயப்படுத்துதல் கூடாது. உங்களுடன் வாழ விருப்பம் இல்லாத ஒரு பெண்ணை எப்படி, உங்களுடன் வாழ கட்டாயப்படுத்த முடியும்? விருப்பமில்லாத பெண்ணுடன் வாழ வேண்டும் என்ற கணவரின் ஆசையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அந்தப் பெண்ணின் கணவர் அவரை ஒரு திடப்பொருள் போல், சொத்துபோல் நடத்தியுள்ளார். பெண் என்பவர், மனைவி என்பவர் சொத்து கிடையாது. இந்தவழக்கை ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழ் இந்து
  6. எனக்கும் இந்த உணர்வு இருந்தது.. ஆனால் பொறுப்பற்ற பெற்றோர்களும் சமூகத்தில் இருக்கிறார்கள்தானே..? எதிலும் வெளிப்படை என இப்போதிருக்கும் உலகில் பழைய சம்பிரதாயங்கள், கட்டுக்கோப்புகள் நீர்த்துப்போகும் காலம் இப்போது. ஆகவே ஆணென்ற திமிரில் அப்பன்கள் ஆட்டம் போடுவதும், பெண்ணென்று சமுதாய மதிப்பில் எல்லை பிறழ்வதும் தவிர்க்கப்பட வேண்டியவை.
  7. அப்படி பார்த்தால் திரைப்படங்களில் காதல், படுக்கையறை, வன்முறை காட்சிகளே காண்பிக்கக் கூடாதல்லவா..?
  8. அந்த உந்துருளியில் வருபவர் யார்? 'வைகோ'வா?
  9. அப்பன் எப்படி வேணுமென்றாலும் இருந்துவிட முடியாது. அப்பன், தன் குடும்பத்திற்கு பொறுப்பாக இருந்தால் ஏன் திட்டப் போகிறார்கள்..? அதுதானே இந்த நகைச்சுவையின் கரு..?
  10. வாழ்க்கையை எதிர்நோக்க தேவையான கல்வி, தன்னம்பிக்கையை சேமித்துக்கொடுத்தால் போதும் சார்.. கரைசேர்ந்துவிடுவார்கள்..! ஈழப்பிரியன் ஏன் சோகமாயிட்டார்..?
  11. பென்சனர் குரூப்..! நகரங்களில், கிராமங்களில் இம்மாதிரியான 'பெருசு'கள், உதார் விட்டுக்கொண்டு, வெட்டியாக பொழுதைக் கழிப்பதைக் காணலாம்.. இக்காணொளியும் அம்மாதிரியான மனிதர்களை பிரதிபலிக்கிறது..!
  12. நாங்களும் 'தினமலம்' என்றே பலரும் ஒருத்தருக்குள் அழைத்துக்கொள்வது.. பொதுவெளியில் நாகரீகம் கருதி அப்படி சொல்வதில்லை..! பாமர மக்களுக்கு அரசியல் முதற்கொண்டு மிக எளிமையான மொழி(?)யில் நாட்டு நடப்புகளை கவர்ச்சியாக வெளியிடுவதில் தினத்தந்தி ஃபார்முலாவை அப்படியே காப்பியடித்து காசு பார்ப்பது இந்த தினமலரின் வியாபார உத்தி. 'பலே ஆசாமி, படபடவென்று பேசினார்.. டமாலென குதித்தார், வலைவீச்சு, பாலியல் வல்லுறவு, கில்லாடி' போன்ற பதங்களை செய்திகளில் மிக அதிகம் பாவிப்பது தினத்தந்தியும், தினமலரும் தான். செய்திகளில் கொஞ்சம் 'தமிங்லிஷை' கலந்து அப்பாவி மத்தியத்தர தமிழர்களை ஈர்ப்பது விகடனின் வியாபார உத்தி..! உதாரணமாக, 'பேரிக்காட், கான்பிடன்ஷியல் நோட், விசிட், ஃப்லை செய்தார், வொர்க்கவுட் ஆகவில்லை..' இன்னபிற பதங்கள்..!!
  13. முக்கியமான தமிழர் விடயங்களில் தி.மு.க நிச்சயம் யோக்கியம் இல்லை.. இந்தி எதிர்ப்பு போராட்டமும் அதன் வெற்றியுமே இன்றளவிற்கு அவர்களின் அரசியல் மூலதனம்.. இந்த உரையாடல் குறூப்பாக திட்டமிட்டு ஊடக அலுவலகத்தை அழைத்து பதிவு செய்து அவற்றை ஒன்றிணைத்து வெளியிட்டுருக்கலாம்.. அவற்றின் உண்மைதன்மை அறிய இயலாது.
  14. டமில் நாட்ல என்னா சத்தம்..? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்து தொடரும் நிலையில், தில்லி உச்சநீதிமன்ற நீதிபதி திரு.தீபக் மிஸ்ரா அவர்கள், தமிழக அரசு வழக்கறிஞரை அழைத்து, "டமில் நாட்ல என்ன நடக்கிறது, ஏனிந்த சத்தம்? எல்லாம் 9ந் திகதி வழக்கு விசாரணைக்கு வருகிறது, தமிழ்நாட்டிற்கு நிச்சயம் தண்ணீர் வரும்" எனக் கூறியதாக செய்தி வெளியானது. அச்செய்தியை தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் தினமலர் என்ற ஊடகம், தமிழர்களை நக்கலடிக்கும் விதமாக கடைகளில் விற்கும் தினசரி விளம்பர தாள்களில் தலைப்புச் செய்தியாக அச்சடித்து தனது குதர்க்க ஆரிய புத்தியை வெளியிட்டுள்ளது. அதைக் கண்டு வெகுண்டெழுந்த சில தமிழர்கள், தினமலர் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.. அவற்றின் சில உரையாடல்கள் ஒலியாக..இங்கே..!
  15. அப்பன் பெரிய பதவியில இருக்கருங்கிற திமிரு..!
  16. ராஜன் விஷ்வா, சுமே அக்கா(?) ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  17. தமிழ்நாட்டில் ஒவ்வொன்றுக்கும் விலை இருக்கிறது.. சிறிது 'நரித்தனம்' இருந்தால் எளிதில் மக்களை திசைதிருப்பி விலைக்கு வாங்கிடலாம்.. அவ்வளவு 'பே சனங்கள்' திரியுதுகள்..! இங்கே தண்ணீர் உரிமைக்காக தமிழகம் அல்லாடுது..! ஓட்டுக்கும் இலவசங்களுக்கும் விலைபோகும் பொதுசனங்கள் ஒருபுறம், மற்றொரு பக்கம் இளசுகள், ஐ.பி.எல். க்கு 'டிக்கட் வாங்க' க்யூவில் அடிபடுதுகள்..!! ஏன் மற்ற நாட்டுக்காரன் ஏறி மேய மாட்டான்..?
  18. அ.தி.மு.க நடத்தும் அடடே உண்ணா விரதம்! சென்னை : அதிமுக நடத்தும் உண்ணா விரத போராட்டத்தில் கட்சியினர் இடையிடையே சாப்பாடு, நொறுக்குத் தீனி சாப்பிடுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து அதிமுக அரசு உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறது. மாவட்ட தலைநகரங்களில் கட்சி நிர்வாகிகள் காலையில் இருந்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். சென்னையில் அதிமுக போராட்டத்தை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைத்தார்கள். தற்போது இந்த போராட்டம்தான் பெரிய அளவில் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இந்த உணர்ச்சிகரமான போராட்டத்தை அதிமுக கொண்டாட்டம் போல கொண்டாடி வருகிறது. பல மாவட்டங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் களைகட்டி வருகிறது. முக்கியமாக பழைய எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பாடல்கள் இதில் ஒலிபரப்பப்பட்டு, அதற்கு தொண்டர்கள் நடனமாடி வருகிறார்கள். அதே சமயம் அதிமுகவினர் இடையிடையே நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டு வருகிறார்கள். கடலைமிட்டாய், சிப்ஸ், சாக்லேட், சமோசா, வடை என நிறைய தின்பண்டங்கள் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் சாப்பிடுவதை சமூக வலைதளத்தில் பலர் கலாய்த்து வருகிறார்கள். அதே சமயத்தில் புதுக்கோட்டையில் வேறு மாதிரி உண்ணாவிரத(!) போராட்டம் செய்து இருக்கிறார்கள். அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தின் இடையில் மதிய உணவு இடைவெளி கேட்டு வெளியே சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அதே சமயத்தில் இந்த உண்ணா விரத போராட்டம் காலையிலேயே பெரிய பிரச்னையை உருவாக்கியது. அதிமுக கட்சியினர் 10 மணிக்கு மேல்தான் பல இடங்களில் போராட்டம் தொடங்கினர். இதனால் காலை உணவை சாப்பிட்டுவிட்டு உண்ணா விரத போராட்டத்திற்கு கட்சியினர் வந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒன் இந்தியா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.