Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. ‘செயல்திட்டம்’தான்; ‘காவிரி மேலாண்மை வாரியம் அல்ல’: உச்ச நீதிமன்றம் விளக்கம்! புது தில்லி: காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் செயல்திட்டம் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறோமே தவிர, 'காவிரி மேலாண்மை வாரியம்' என்று கூறவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், மனுவை அடுத்த வாரம் ஏப்ரல் 9ம் தேதி திங்கட்கிழமை விசாரிப்பதாகக் கூறியுள்ளது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இன்றே விசாரிக்கக் கோரிய நிலையில், அடுத்த வாரம் திங்கட்கிழமை விசாரணைக்கு ஏற்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 'தமிழகத்தின் நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது' என்று கூறிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, 'தமிழகத்துக்கு உண்டான நீர் நிச்சயம் கிடைக்கும்' என்றும் உறுதி அளித்தார். இந்த மனு மீது, நீதிபதி ஒரு சில விளக்கங்களை அளித்தார். அதில், உச்ச நீதிமன்றம் வெளியிட்ட காவிரி தீர்ப்பில் 'செயல் திட்டம்' என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது, 'மேலாண்மை வாரியம்' என்று குறிப்பிடப்படவில்லை. காவிரி பிரச்னையை முழுமையாக தீர்ப்பதற்குரிய திட்டத்தை 'ஸ்கீம்' என்று குறிப்பிட்டோம். அதாவது, மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒரு முழு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டதாக நீதிபதி விளக்கம் அளித்தார். மேலும், தமிழக அரசு தரப்பிடம், 'கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொடர்ந்துள்ள வழக்கை அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம். உங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்த நீரின் அளவில் எந்த மாற்றமும் செய்யப்படாது. உங்களுக்கு உரிய நீர் நிச்சயம் கிடைக்கும்' என்று உறுதி அளித்தனர். இந்த நிலையில், 'தமிழகத்துக்கு உரிய நீர் கிடைக்க வேண்டும் என்றால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே தீர்வாக இருக்கும்' என்று தமிழகம் கருதுகிறது. எனவே, தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர் தேவையான ஆவணங்களை திரட்டி உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தத் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தினமணி
  2. நீதியே, உன் வலிமை இதுதானா..? உச்ச நீதிமன்றத்தின் மாண்பும் வலிமையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது. ஏற்கெனவே, இதே காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை கர்நாடக அரசு காற்றில் பறக்கவிட்டது. நீதிமன்றம் கடுமையான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது, காவிரி நடுவர் மன்றம் அமைப்பதற்கான கெடு தேதி முடியும் வரை கைகட்டி இருந்துவிட்டு, தமிழகத்தின் கதறல்கள் காதிலேயே விழாதது போல மவுனம் காக்கும் மத்திய அரசுக்கு என்ன கடுமைகாட்டப் போகிறது உச்ச நீதிமன்றம்..? சட்டத்தையும் நீதியையும் இறுதி நம்பிக்கையாக கொண்டிருக்கும் மக்களுக்கு, அந்த நம்பிக்கையை நிலைநாட்டிக் காட்டவேண்டிய கட்டாயம் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. கழுவிய மீனில் நழுவிய மீனாக கடமையைத் தட்டிக்கழிக்க இது அத்தனை சாதாரண வழக்கல்ல. நெடுஞ்சாலையை ஒட்டி மதுக்கடைகள் கூடாது என்ற தீர்ப்புக்கே தண்ணி காட்டும் வகையில் நெடுஞ்சாலைகளை எல்லாம் ஒரே மூச்சில் உள்ளூர் சாலைகளாக மாற்றி 'பெப்பே' காட்டிய அசகாய சூர அரசியல்வாதிகளின் தேசமிது. அப்போது போல் இப்போதும் அரசியல் சித்து விளையாட்டுக்களை உச்ச நீதிமன்றம் கண்டும் காணாது இருந்துவிட்டால், நீதிபதிகள் நியமனம் தொடங்கி மற்ற செயல்பாடுகள் வரையில் அரசியல் குறுக்கீடு இருப்பதாக நீதியரசர்களே எழுப்பிவரும் குற்றச்சாட்டு குமுறல்களுக்கும் மக்கள் ஆதரவு கிடைக்காது. அதேசமயத்தில், கர்நாடக தேர்தலுக்காகத்தான் மத்தியை ஆளும் பாஜக அரசு இப்படியொரு சகுனி வேலை செய்கிறது என்பது உண்மையானால்... இனி, என்றைக்குமே அவர்கள் தமிழகத்தில் தலையெடுக்கக்கூடாது; அப்படியொரு தீர்ப்பை மக்கள் தரவேண்டும். காமதேனு
  3. 'கூகுள்' வரைபடத்தில் இணைகிறது, நீலகிரி மலை ரயில்! நீலகிரி மலை ரயிலை, 'கூகுள்' வரைபடத்தில் இணைப்பதற்கான ஆய்வுப் பணிகளை அந்நிறுவனத்தார் புதன்கிழமை தொடங்கியுள்ளனர். நீலகிரி மலைகளின் இடுக்குகளிலும், எழில் கொஞ்சும் அடர்ந்த வனப் பகுதிகளிலும் நாள்தோறும் பயணிகளைச் சுமந்தவாறு தவழ்ந்து செல்கிறது மலை ரயில். ஆசியக் கண்டத்தில் மிக நீளமான மீட்டர் கேஜ் மலை ரயில் பாதை இதுவாகும். குன்னூரில் உள்ள என்ஜின் மையம், தெற்கு ரயில்வேயில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஒரே நீராவி இன்ஜின் பணிமனையாகும். இந்தப் பணிமனை கடந்த 1899ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். மேட்டுப்பாளையம்-குன்னூர் பிரிவில் பயன்படுத்துவதற்காக நீராவி என்ஜின்கள் சுவிட்சர்லாந்திலிருந்து தருவிக்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்படுகின்றன. இந்த ரயில் பாதை பல இடங்களில் செங்குத்தாக இருப்பதால் பல் சக்கரத்தின் உதவியுடன் மலை ரயில் இயக்கப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு மேல் மலைப் பாதையில் நீராவி என்ஜின் இயக்கப்பட்டுள்ளதால், சற்று பழுதடைந்துள்ளது. மேலும், நிலக்கரி விலை உயர்வு காரணமாகவும் தற்போது உதகை - குன்னூர் இடையே மலை ரயிலில் டீசல் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட பின், குன்னூரில் இருந்து உதகைக்கு மலை ரயில் 40 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த மீட்டர் கேஜ் மலை ரயில், சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் சிறப்பு வாய்ந்த ரயிலாகத் திகழ்கிறது. 11.516 மீட்டர் நீளமும், 2.15 மீட்டர் அகலமும் உள்ளதாக, 4 பெட்டிகளையும் கொண்டுள்ளது. இந்த நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை 46 கி.மீ. தொலைவு செல்ல 208 வளைவுகளையும், 250 பாலங்களையும், 16 சுரங்கப் பாதைகளையும் கடந்து செல்கிறது. பசுமை நிறைந்த மலைகளின் நடுவே தவழ்ந்து வரும் இந்தக் குட்டி ரயில் நூற்றாண்டைக் கடந்துள்ளது. இதில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், நீலகிரி மலை ரயிலை உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என ரயில்வே துறை, நீலகிரி பாரம்பரிய ரயில் பாதுகாப்புச் சங்கம் ஆகியவை வலியுறுத்தி வந்தன. இதைத் தொடர்ந்து 2005 ஜூலை 15-ஆம் தேதி டர்பன் நகரில் நடந்த உலகப் பாரம்பரியக் குழுவின் 29-ஆவது கூட்டத்தில் இக்கோரிக்கை ஒருமனதாக ஏற்கப்பட்டது. அதன்பின் நீலகிரி மலை ரயிலை யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய ரயிலாக அறிவித்தது. இதனால், உதகை ரயில் நிலையமும் மலை ரயிலும் உலக சுற்றுலா ஏட்டில் இடம் பெற்றன. இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் வந்த 3 பேர் கொண்ட கூகுள் நிறுவனத்தினர் மலை ரயில் முன்பு நவீன கருவிகளைப் பொருத்தி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இந்நிறுவனம் இணையத் தேடுபொறி தொழில்நுட்ப நிறுவனமாகும். அவர்கள் கல்லாறு, ஹில்குரோவ், ரன்னிமேடு, பழைய அருவங்காடு, கேத்தி, உதகை உள்ளிட்ட இடங்களில் மலை ரயிலை நிறுத்தி, தங்களுக்குத் தேவையான விவரங்களை சேகரித்துக் கொண்டனர். இந்தப் பணிகள் நிறைவுற்றதும், விரைவில் மலை ரயில், 'கூகுள்' வரைபடத்தில் இணைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. தினமணி
  4. தன் உபயோகத்திற்கு பயன்படுத்தியதற்கு போலீஸ்காரர்கள் எந்தக் காலத்தில் பணம் கொடுத்திருக்கிறார்கள்..? சென்னை கொத்தவால் சாவடியை அண்டிய பகுதிகளிளுள்ள நடைபாதை கடைகளில், எளிய வியாபாரிகளை மிரட்டி அவர்கள் காய்கறிகளை அள்ளிக்கொண்டு செல்லும் காட்சிகளை அடிக்கடி பார்க்கலாம்.
  5. மெரினா போராட்டம்; கிளம்பிய இடத்திற்கே திரும்பிய குதிரை! மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களைப் பிடிக்க குதிரை மேல் ஏறி போலீஸார் துரத்த, அது கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்த காமெடி நடந்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் மத்திய அரசு அலட்சியம் காட்ட காலக்கெடு முடிந்த பின்னர் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு எழுச்சி போல் மீண்டும் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸார் பாதுகாப்பு மெரினாவில் அதிகப்படுத்தப்பட்டது. ஆனாலும் சனிக்கிழமை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக அதிக அளவில் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வந்தனர். அவர்களுடன் போராட்டக்காரர்களும் ஊடுருவி வந்தனர். பின்னர் கடல் நீர் அருகே வரிசையாக நின்று பதாகைகள் ஏந்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோஷமிட்டனர். இதை முகநூலில் பலரும் ஷேர் செய்ததால் அது காட்டுத்தீயாய் பரவியது. இந்நிலையில் வெளியே சர்வீஸ் சாலையில் இருந்த போலீஸாருக்கு இந்த தகவல் தெரிந்து வேக வேகமாக மணற்பரப்பில் போராடும் இளைஞர்களைப் பிடிக்க ஓடி வந்தனர். சில போலீஸாரால் ஓட முடியவில்லை. போராட்டக்காரர்களைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அங்குள்ள வாடகை குதிரைகளின் மீது ஏறி போராட்டக்காரர்களை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குதிரைக்காரர்களை அழைத்து குதிரை மேல் ஏற்றி கடல் அருகில் வேகமாக கொண்டு போ என்று கூறியுள்ளனர். அதற்கு குதிரை ஓட்டுபவர்கள் “சார் குதிரை ஒரு வட்டம் அடித்து பழக்கப்பட்டது. அதைத்தாண்டி போகாது” என்று கூறியுள்ளனர். “அதிகாரி சொல்லும் போது மறுத்து பேசுகிறாயா..? டூ வாட் ஐ ஸே...!” என்று கூறி குதிரையில் ஏறி போராட்டக்காரர்களை பிடிக்கக் கிளம்பியுள்ளனர். ஆனால் அது பழக்கப்பட்ட குதிரை என்பதால் ஒரு சுற்று சுற்றிவிட்டு கிளம்பிய இடத்திற்கே மீண்டும் வந்துவிட்டது. குதிரைக்கு, காவிரி மேலாண்மை வாரியம் தெரியுமா? காவலர்களைப் பற்றித் தெரியுமா? யார் ஏறினாலும் ஒரு ரவுண்டு அவ்வளவுதான். அதன்படி கிளம்பிய இடத்திற்கே திரும்பிய குதிரையை மீண்டும் கடல் அருகே கொண்டுசெல்ல போலீஸார் கேட்ட போது, "சார் மீண்டும் ஒரு சுற்று சுற்றிவிட்டு இங்குதான் வரும்.. ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள் இறங்கி நடந்து போய் பிடியுங்கள்..!" என்று குதிரைக்காரர்கள் கூறியுள்ளனர். 'வடிவேல் காமெடி போல் நம்ம நிலை ஆகி விட்டதே!' என்று போலீஸாரும் மூச்சு வாங்க போராட்டக்காரர்களை பிடிக்க ஓடினர். தி இந்து வடிவேலுவின் 'மெரினா குதிரை' காமெடியை பார்க்காதவர்களுக்கு இந்தக் காணொளி.. மெரினா பீச்சில் பெண்களிடம் நகையை திருடிவிட்டு 'மெரினா குதிரை'யில் தப்பிச்செல்லும் வடிவேலு, வட்டத்துகுள்ளேயே ஓடி பழக்கப்பட்ட அக்குதிரை, எல்லைக்கோடு அடைந்ததும் திரும்பி வரும்போது, "பெரிய ராஜா தேசிங்கு.. குதிரையில போறாரு..!" என 'என்னத்தே கன்னையா' நக்கலாக சொல்லும் இந்த நகைச்சுவை, சென்னையில் மிகப் பிரபலம்! மெரினா பீச்சிற்கு குடும்பத்தோடு செல்லும்போது இக்குதிரைகளை கண்டிருக்கிறேன்..!
  6. காவிரிக்காக மெரினாவில் இன்று போராட்டம் 'காவிரி மேலாண்மை வாரியம்' அமைக்கக்கோரி மெரினாவில் இன்று போராட்டம் ஆரம்பித்த மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றது சென்னை காவல்துறை..
  7. வாட்ஸ்ஆப்பில் ஒரு புதிய அம்சம் இணைப்பு வாட்ஸ்ஆப் இன்று, மிகவும் அமைதியாக அதன் ஆண்ட்ராய்டு பீட்டா ஆப்பில் ஒரு புதிய அம்சத்தை உருட்டியுள்ளது. அது வேறு எந்த அப்டேட்டும் அல்ல, மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மொபைல் நம்பர் சேன்ஜ் (Mobile Number Change option) அம்சம் தான். இனி ஒரு பயனர் அவரின் வாட்ஸ்ஆப் மொபைல் நம்பரை மாற்றியதை மொத்தம் மூன்று வழிகளில் அவரின் நண்பர்களுக்கு தெரிவிக்கலாம். இந்த அப்டேட் ஆனது ஆண்ட்ராய்டின் சமீபத்திய வாட்ஸ்ஆப் பீட்டா(Beta) பதிப்பில் காணப்பட்டுள்ளது. அதில் மொத்தம் மூன்று விருப்பங்கள் உள்ளன. மொபைல் நம்பரை மாற்றியதை அனைத்து தொடர்புகளுக்கும் அறிவிக்க வேண்டும் அல்லது சாட்டில் உள்ள தொடர்புகளுக்கு மட்டும் அல்லது கஸ்டம். தற்போது வரையிலாக, னைத்து தொடர்புகளுக்கும் அறிவிக்க வேண்டும் என்கிற விருப்பம் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஒரு பயனர் மொபைல் நம்பரை மாற்றும் போது, அவரின் காண்டாக்ட்ஸில் உள்ள ஒவ்வொரு நம்பருக்கு அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போது பீட்டா பதிப்பில் காணப்பட்டுள்ள அப்டேட்டின் படி, மேலே குறிப்பிட்டுள்ளபடி மொத்தம் மூன்று விருப்பங்களில் இந்த அறிவிப்பை நிகழ்த்தலாம். முதல் விருப்பமானது, வழக்கம்போல எல்லா தொடர்புகளுக்கும் அறிவிப்பை அனுப்பி வைக்கும். இரண்டாவது விருப்பமானது, நீங்கள் கடந்த காலத்தில் சாட் செய்த நம்பர்களுக்கு மட்டும் அறிவிப்பை அனுப்பி வைக்கும் கடைசி விருப்பமானது, நீங்கள் உங்களின் மொபைல் நம்பர் மாற்றத்தை பற்றி அறிவிக்க விரும்பினால் மட்டுமே, அறிவிப்புகள் அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய அம்சமானது, இப்போது, சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா(Beta) பதிப்பான 2.18.97ல் மட்டுமே கிடைக்கிறது. எனினும், வாட்ஸ்ஆப் நிறுவனம், இந்த அம்சத்தினை மிக விரைவில் ஐஓஎஸ் ஆப்களில் வெளியிடும் என என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோ (Beta Info) வின் படி, இந்த அம்சம் விண்டோஸ் மொபைல் பயனர்களுக்கும் கிடைக்கும். ஒன் இந்தியா
  8. பிரதமர் மோடி இந்த நாட்டுக்கு தேவையா? காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது விடயமாக இன்றைய நியூஸ்7 தொலைக்காட்சி விவாதத்தில் 'வழக்கறிஞர் பிரசன்னா'வின் சில கருத்துக்கள் கவர்ந்ததன.. அவற்றில் இது ஒன்று..
  9. பழுதான கைப்பேசியில் இழந்த தரவுகளை மீட்க.. பழுதான கைப்பேசியிலூள்ள தொடர்பு எண்கள், மற்றும் பலதரப்பட்ட கோப்புகளை எப்படி மீளப் பெறுவது..? திருத்தும் கடைகளுக்கு உங்கள் கைப்பேசியை எடுத்துச் சென்றால் அதைலுள்ள உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றை உங்களுக்கு தெரியாமலேயே அவற்றை திருடி தவறான வழிகளில் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.. இதை தவிர்க்க இணையத்தில் பல மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது.. அவற்றில் நான் சமீபத்தில் பயன்படுத்தியது dr.fone என்ற இந்த மென்பொருள்.. கைப்பேசியின் உள்ளக சேமிப்பு செல்லிலிருந்து பத்திரமாக அனைத்து தகவல்களையும் மீட்டுவிட்டேன். பயன்படுத்தி பாருங்கள்! கவனிக்க: கைப்பேசியின் உள்ளக மெமரியை ஃபார்மேட்(Format or Wipe) செய்யாமல் இருந்தால் மட்டுமே இந்த மென்பொருள் தரவுகளை மீட்டுத் தரும். டாக்டர் ஃபோன்
  10. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நிழலி.. உலகிலேயே அதிக வயதாகி கலக்கும், அம்மணிக்கு 150வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
  11. சிலமுறை கடிபட்டிருக்கிறேன்..! அதனால் என் மனைவிதான் பேரனுக்கு ஊட்டிவிடுவது.. தூக்கிக் கொஞ்சும்போது முகத்திலும், நெஞ்சிலும் உதைவிடுவான் பாருங்கள்.. சொல்ல முடியாத ஆனந்தம், அதை அனுபவித்தால் மட்டுமே புரியும்.. பொடியன் சார் இப்போ வளர்ந்து, பாலர் பள்ளிக்குச் செல்கிறார்..
  12. அடங்கொக்க மக்கா..! கணவனாக 'நகர்ப்புற பையனா? இல்லை கிராமத்து பையன் வேண்டுமா?' என சென்னை பெண்களை கேட்டபொழுது, பலரின் பதில்கள் சென்னை பெண்களின் மனநிலையை இக்காணொளியில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது..!
  13. "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம்..!" - நவநீதிகிருஷ்ணன் ஆவேசம் டெல்லி: 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம்' என்று ராஜ்யசபாவில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் மிரட்டல் விடுத்தார். காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்தில் திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. 'உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை இல்லை' என்று கர்நாடகம் தனது வாதத்தை முன்வைக்கிறது. எனினும் மத்திய அரசு அதற்கான நடவடிக்கையை ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் நவநீதிகிருஷ்ணன் எம்பி காவிரி விவகாரத்தை எழுப்பினார். அப்போது அவர் "உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாவிட்டால் அரசியல் சட்டத்தால் என்ன பயன்? தமிழகத்தில் அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் அதிமுக எம்பிக்களாகிய நாங்கள் ராஜினாமா செய்வதற்கு பதில் தற்கொலைதான் செய்து கொள்வோம்..!" என்று ஆவேசமாக கூறினார். ஒன் இந்தியா
  14. காவிரி: குழுவா? வாரியமா? 'கெடு' முடியும் நிலையில் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு! டெல்லி: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பில் பிறப்பித்த உத்தரவில் திட்டம் என குறிப்பிட்டுள்ளது குழுவா? இல்லை வாரியமா? என சந்தேகத்தை விளக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. சுமார் 200 ஆண்டுகளாக காவிரி விவகாரம் நீடித்து வருகிறது. மத்தியில் எந்த தலைமையிலான ஆட்சி வந்தாலும் சரி காவிரி பிரச்சினை என்பது இடியாப்பச் சிக்கலாகவே இருந்தது. இந்நிலையில் கடந்த 2007-இல் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்தும் கூடுதல் நீர் கேட்டும் தமிழகம், கர்நாடகம், புதுவை, கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த விவகாரத்தில் கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 6 வாரங்களுக்குள் உத்தரவு 6 வாரங்களுக்குள் உத்தரவு அதில் காவிரி நீரை பகிர்வது தொடர்பாக நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை காட்டிலும் தமிழகத்துக்கு குறைந்த அளவிலான நீரே ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் காவிரி நீரை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு திட்டத்தை மத்திய அரசு 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. கர்நாடகம் மறுப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் திட்டம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அது காவிரி மேலாண்மை வாரியம் என்றுதான் இருக்க வேண்டும் என்றில்லை என்று கூறும் கர்நாடக அரசு கூறுகிறது. காவிரி விவகாரம் கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறவுள்ளதை அடுத்து காவிரி விவகாரத்தில் அந்த மாநிலத்தை பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு, காவிரி மேற்பார்வை குழுவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நேரம் இல்லை தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அனைத்து கட்சி பிரதிநிதிகளும் பிரதமரை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பிரதமர் நேரம் கொடுக்கவில்லை. கர்நாடக மறுப்பு தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது கடந்த 15-ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்ற தீர்மானம் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. அதுபோல் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் ஏற்படக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினர். கெடு முடிவு இந்நிலையில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள கெடு நாளை முடியவுள்ளது. இந்த நேரத்தில் காவிரி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டம் என்பது குழுவா அல்லது வாரியமா என்று சந்தேகம் உள்ளதாகவும் அதை நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி காவிரி வழக்கில் விளக்கம் கேட்டு மனுவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒன் இந்தியா
  15. 'அந்தா வருது, இந்தா வருது'ன்னு இழுத்தடித்து, ஒரு வழியா 'ட்ரவலேட்டரை' திறந்துவிட்டார்கள்..!
  16. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு எப்போது சென்றால் உடனே சாமி தரிசனம் செய்யலாம்..? மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் 'பொது தரிசனம்' செய்வதாக இருந்தால் சுமார் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் வரிசையில் கால்கடுக்க காத்திருந்து அம்மனைத் தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. அதற்குக் காரணம் எப்போது பூஜை நடைபெறும், எப்போது திரை விலக்கப்படும் என்ற விவரம் அறிந்திடாததேயாகும். மீனாட்சியம்மனை எப்போது தரிசிக்கலாம்? மீனாட்சியம்மனுக்கு எந்த நேரத்தில் பூஜை செய்யப்படும் என்ற தகவலினை தெரிந்துகொண்டு அந்த நேரத்தில் சுலபமாக சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு வரலாம். தினமும் காலை 5 மணிக்கு அம்மன் சன்னதி வாசலில் சித்தி விநாயகர், முருகனுக்கு பூஜை செய்யப்படும். காலை 5.10 மணிக்கு பள்ளியறையில் உள்ள சுவாமி, அம்மனுக்கு பூஜை செய்தவுடன், காலை 5.15 மணிக்கு, மூலஸ்தானத்தில் தீபாராதனை காட்டி, திரை விலக்கப்படும். காலை 5.30 மணிக்கு பள்ளியறையிலிருந்து சுவாமி, தனது சன்னதிக்கு புறப்படுவார். அங்கு காலை 5.45 மணிக்கு பூஜைகள் செய்து, திரை விலக்கப்படும். பின், பரிவார தெய்வங்களுக்கு பூஜை செய்யப்படும். காலை 6.30 மணிக்கு அம்மன் சன்னதியில் அபிஷேகத்திற்காகத் திரை போடப்படும். காலை 6.45 மணிக்கு திரை விலக்கப்பட்டு, தீபாராதனை நடக்கும். மீண்டும் திரை போடப்பட்டு காலச்சந்தி பூஜை நடத்தப்படும். பின் காலை 7.15 மணிக்கு திரை விலக்கப்பட்டவுடன், காலை 10.30 மணி வரை பக்தர்கள் அம்மனை தரிசிக்கலாம். சுவாமி சன்னதியிலும் இதேமுறை பின்பற்றப்படுகிறது. மீண்டும் காலை 10.30 மணிக்கு திரை போடப்பட்டு அபிஷேகம் நடத்தப்படும். காலை 10.45 மணிக்கு திரை விலக்கப்பட்டு, தீபாராதனை காட்டி, மீண்டும் திரை போடப்படும். காலை 11.15 மணிக்கு திரை விலக்கப்பட்டவுடன் அலங்கார கோலத்தில் மதியம் 12.30மணி வரை அம்மனையும், சுவாமியையும் தரிசிக்கலாம். பின் நடை சாத்தப்படும். பக்தர்களின் வசதிக்காக, மாலை 3.45 மணிக்கு பூஜை செய்து, 4 மணிக்கு திரை விலக்கப்படும். இரவு 7.30 மணி வரை தரிசனம் செய்யலாம். இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜைக்காக திரை போடப்பட்டு, இரவு 8 மணிக்கு விலக்கப்படும். அம்மனை இரவு 9.15 மணி வரை தரிசிக்கலாம். பின், பள்ளியறை பூஜை நடக்கும். ஒருசில நாட்களில் சற்று முன்னுக்குப் பின் மாறுதல் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால்,விசேஷ நாட்களில் கூடுதல் அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்படுவதால் பூஜை நேரத்தில் கட்டாயம் மாறுபடும். தினமணி
  17. கொழும்பானுக்கும் தனிகாட்டுராஜாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
  18. பறக்கும் ரயில்கள்(MRTS) வழித்தடம் மெட்ரோவிடம் ஒப்படைப்பு ? சென்னை பறக்கும் ரயில் வழித்தடத்தை, மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தை இனி மெட்ரோ ரயில் நிர்வாகம் பார்த்துக்கொள்ளும். இவ்வழித்தடம் 20 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. மெட்ரோ ரயில் நிர்வகிக்கும்பட்சத்தில் இந்த வழித்தடங்களின் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். பறக்கும் ரயில் நிலையங்களில் ஏராளமான இடங்கள் காலியாக உள்ளதால் அதனை கடைகள், உணவகங்களுக்குவாடகைவிட்டு வருமானத்தை பெருக்கும் முயற்சியில் மெட்ரோ நிர்வாகம் ஈடுபடும் என தெரிகிறது.சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையிலான பறக்கும் ரயில் சேவையை நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.பஸ் கட்டண உயர்வுக்கு பின்பு, இந்தப் பயன்பாடு 20 சதவிதம் உயர்ந்துள்ளது. இவ்வழித்தடத்தில் பயணிகள் சேவையை மேம்படுத்தவும்,பராமரித்து மேம்படுத்தவும் சென்னை மெட்ரோ ரயிலிடம் ஒப்படைக்க முடிவு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.இதற்கான திட்டத்தை தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து வரைவு அறிக்கை தயார்செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் அதன் மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சாலுடன் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ்ரேஸ்தா சந்தித்து வரைவு அறிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு கட்ட ஆலோசனை கூட்டங்களுக்கு பிறகு இறுதி அறிக்கை தயார்செய்யப்பட்டு மெட்ரோ ரயில்வசம் பறக்கும் ரயில் வழித்தடம் ஒப்படைக்க முடிவுகள் மேற்கொள்ளப்படும் என தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய தலைமுறை செய்தி
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்.. வாழிய பல்லாண்டு!
  20. பின்னிரவில் ஏகாந்தமாய் அமரும் சந்தர்ப்பங்களில், மெல்லிய விளக்கொளியில் பழைய பாடல்களை கேட்பதுண்டு.. ! வார இறுதியான நேற்றிரவு, அப்படி கேட்ட பாடல்களில் கீழ்க்கண்ட பாடல்களை ரசிக்க முடிந்தது..! மிக்ககுறைந்த இசைக்கருவிகளோடு சிரத்தையாய் பழைய பாடல்களை இசைத்து, நம் மனக்கண் முன்னே ரசித்த அக்கால படத்தின் பிம்பங்களை நிழலாடவிட்டுள்ளனர் இந்த குழுவினர்.. ** பழைய பாடல்களை ரசிப்பவர்களுக்கு மட்டுமே இப்பதிவு, பொறுமையாக ரசிக்கவும்.. "தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் கண்கள் உறங்கிடுமா..?" "எனை ஆளும் மேரி மாதா... துணை நீயே மேரி மாதா...!"
  21. நல்ல பதிவை அவ்வப்போதே ஊக்குவிப்பது நல்லதுதானே..? வரம்பை கூட்டாமல், கடனோ, உடனோ பெற்று அவ்வப்போதே கரைசேர்க்க வழிமுறை இருந்தாலும் நன்றே..!
  22. யாருங்கோ அது, எங்க பேட்டை பக்கம் வாறனென்டு சொன்னது..?
  23. விருப்ப புள்ளிகள் (பச்சை) வழங்க இருக்கும் அதிகபட்ச வரம்பு ஒரு நாளைக்கு 5 என இருக்கிறதென எண்ணுகிறேன். ஒரு பதிவிற்கு பச்சை வழங்க விருப்பப்படும்போது இருப்பு இல்லையெனில், எல்லையை தாண்டும் பொழுது மேற்கண்ட 'பிழை' செய்தி வருகிறது.. சிறிது நாட்கள் கழித்து அத்திரியை மீண்டும் பார்த்து, பச்சைகள் வழங்க ஞாபகமும், சிரத்தையும் இருப்பதில்லை.. ஆகவே இந்த உச்ச வரம்பை மீளாய்வு செய்து, ஆவவென செய்ய வேண்டுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.