Everything posted by ரசோதரன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🙄...... இப்ப சந்தோசம் தானே........🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மண்ணின் நிறம் என்ன என்று கூட தெரிந்து வைத்திருக்கின்றீர்களா................ எங்களில் சிலருக்கு ஒரு 10 புள்ளிகள் ஆரம்பத்தில் இலவசமாக கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்....... ஒரு நியாய தர்மம் வேண்டாமா..................🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣.............. கெட்டது குடி...............🤣 KKR என்றால் கொல்கத்தா, DC என்றால் டெல்லி என்று பாடமாக்கிக் கொண்டு பாலர் வகுப்பில் நிற்கின்றேன்................. அதற்குள்ளே துணை முதல்வர் பதவியா.............. அமெரிக்காவில் கூட இந்த அநியாயம் நடக்காது.............🤣 வாழ்க்கையில் இன்று முதன்முதலாக ஐபிஎல் போட்டி ஒன்றை, முழுவதும் இல்லை என்றாலும், பார்த்தேன்................👍.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣..... சும்மா தான் இடையிலிருந்து இந்தப் போட்டியை பார்க்க ஆரம்பித்தேன். நேற்று, முந்தாநாள் எதுவும் பார்க்கவில்லை. நான் லக்னோவா அல்லது டெல்லியா என்பதும் ஞாபகத்தில் இருக்கவில்லை. பின்னர் டெல்லி தான் என்று கிருபன் அனுப்பியிருந்ததைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். ஆனால் டெல்லியின் நிலை என்னை விட பரிதாபமாகவே இருந்தது............ டெல்லி கொஞ்சம் தெரிந்த ஊராக, பெயராக இருக்கின்றதே என்று தான் நான் அதனைத் தெரிவு செய்திருக்க வேண்டும்........... இப்படி ஒரு சம்பவத்தை டெல்லிக்காரர்கள் செய்வார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை போல.............
-
செவ்வந்தியில் செவ்வந்தி
செவ்வந்தியில் செவ்வந்தி --------------------------------------- எங்கள் வீட்டு செவ்வந்தியில் செவ்வந்திப் பூ ஒன்று வந்துள்ளது என்று ஒருவர் இன்னொருவரிடம் சொன்னார் 'செவ்வந்தியில் செவ்வந்திப் பூவா..........' என்று ஆச்சரியப்பட்ட அடுத்தவரிடம் இது பரமரகசியம் எங்கும் பகிரக்கூடாது என்று சத்தியமும் கேட்கப்பட்டது அடுத்த அடுத்த நாளும் இருவரும் செவ்வந்தியும் பூவும் என்று இரகசியமாக பேசிக் கொண்டனர் மூன்றாவது நாளில் மூன்றாவது நபர் ஒருவர் செவ்வந்தி செவ்வந்தி என்றார் இவரைப் பார்த்து இப்படியே பலருக்கும் இது தெரிந்திருந்தது இவருக்கு தெரிய வர அவருடன் உறவு முறிந்தது பூ காய்ந்து செடி காய்ந்து மண்ணோடு மண்ணாக கலந்து போனது எப்போதும் போலவே முறிந்த உறவும் முறிந்தே கிடக்கின்றது ஒரு ரகசியம் என்று எவராவது ஆரம்பித்தாலே நான் காதுகளை மூடிக் கொள்கின்றேன்.
- செவ்வந்தி.jpg
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோ ஆதரவாளர்கள் யாராவது அவசரமாக ஆஸ்பத்திரிக்கு போக வேண்டுமா....................
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தனிக்காட்டுராஜா!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
❤️............... அந்த வரியை எழுதும் போது உங்களையும் நினைத்தேன்............. பலதில் ஏதோ ஒன்று தான் கடைசிவரை போகும், நீங்கள் அதில் ஒருவர்.................. அன்று பல பேர்கள் காதலித்தது கடவுளுக்கு மட்டும் தான் தெரிந்திருந்தது....... அந்தப் பிள்ளைகளுக்கு கூட இந்த விசயம் கடைசிவரை தெரிந்திருக்கவில்லை............🤣....... அதனால் பல பிள்ளைகள் தப்பி, இன்று நல்லா இருக்கின்றார்கள்.............😜.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............. இந்த திரியில் எது மெயின் டிராக், எது காமடி டிராக் என்று பிரிக்க இயலாத அளவிற்கு இரண்டும் பின்னிப் பிணைந்து போய்க் கொண்டிருக்கின்றன............... நண்பனும் அப்படித்தான்................ பிரிவினை இல்லாதவன், எவராவது கதையுங்கள் என்று இருந்தான். நோக்கம் எல்லாம் ஒன்று தான்.............. வகுப்பில் இருந்த ஒரு பிள்ளையை நோக்கியதே........ முடிவும் அதே தான்.............. அந்தப் பிள்ளை வீட்டில் பார்த்த ஒருவரை கட்டிக்கொண்டு போனது.....
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣................. ஒரு நண்பன், அவன் இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கின்றான். அவன் முன்னர் அடிக்கடி சொல்வான்: நல்ல விதமாகவோ அல்லது அப்படி இப்படியோ எப்படி என்றாலும் என்னைப் பற்றியே வகுப்பில் கதைத்தார்கள் என்றால் எனக்கு சந்தோசம் தான்..................🤣. ரஜனியின் 'எஜமான்' படத்தை அவன் பல தடவைகள் பார்த்தவன் போல...............
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்கு ஐஸ் ஹாக்கிப் பக்கம் வேறு எவரும் போவது கிடையாது....... வீட்டுக்கு மிக அருகில் ஒரு ஐஸ் ஹாக்கி பயிற்சி செய்யும் இடம் இருக்கின்றது, நான் இதுவரை ஒரு தடவை கூட அதன் உள்ளே போனதேயில்லை................. இங்கு எல்லா விளையாட்டுகளிலும் அடிகள் விழும். இந்த வாரம் சுய ஆக்கத்தில் இதனை அடிப்படையாக வைத்து ஒரு கதை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்னமும் எழுதவில்லை. அமெரிக்கன் ஃபுட்பாலில் இரக்கமே இல்லாமல் அடிப்பார்கள். இங்கு கால்பந்தாட்டத்தில் கூட அடி செமையாக விழும். வாலிபாலில் லிபரோ என்று ஒருவர் விளையாடுவார். மிகவும் உயரம் குறைந்தவராக, வேறு ஒரு நிறத்தில் பனியன் போட்டிருப்பார். எதிர் அணியின் ஒவ்வொரு அடிக்கும் தரையோடு தரையாக உருண்டு பிரள்வார்............. 'இது யார் பெற்ற பிள்ளையோ...........' என்று பார்க்கின்றவர்கள் பாரிதாப்படுவார்கள்...............🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............ 'ஒரு மண்ணும் ஒழுங்காகத் தெரியாது..................' என்பதற்கான சொல் தான் சகலகலாவல்லவன் போல ....... மெல்லிய, வாடிய, வளர்ச்சி குறைந்த ஒரு எலிஃபண்ட் என்று அனுமானத்தை மாற்ற முடியுமா...........🤣. இங்கு நாட்டு நிலைமை அவ்வளவு நல்லா இல்லை. ரியல் மாட்ரிட் விளையாட்டுக் கழகத்தின் சின்னத்தை பச்சை குத்தியிருந்த ஒருவரை நாடு கடத்திவிட்டார்கள். அவர் ஏதோ ஒரு ஆயுதக் குழுவினரைச் சேர்ந்தவர் என்று, அது தான் அந்த பச்சையாம் என்று........🫣 எலிக்கு சோடியாக நான் வழமையானதை எழுதாமல், பதிலாக எலிஃபண்ட் உள்ளே வந்த கதை இதுதான்...............🤣
-
பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
'எல்லோர் சார்பிலும் நான் மன்னிப்புக் கேட்கின்றேன்..............' என்பது இந்த உலகில் இருக்கும் பெரிய பம்மாத்துகளில் ஒன்று................🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
👍............ நாங்கள் இங்கு அமெரிக்க மேற்கு கரையில் வருடாவருடம் ஒரு போட்டியும் நடந்துகின்றோம். இருபது வருடங்களாக போய்க் கொண்டிருகின்றது. அமெரிக்க மேற்கு கரையின் பல இடங்களிலிருந்தும் நம்மவர்கள் வருவார்கள். எப்போதும் September Labor Weekend இல் தான் இந்தப் போட்டிகளை நடத்துகின்றோம். இந்த தடவை லாஸ் ஏஞ்சலீஸ்ஸில் இது நடக்கப் போகின்றது..... நீர்வேலியானும், நானும் நிற்போம். முன்னர் ஒரு தடவை ஈழப்பிரியன் அண்ணா வந்திருக்கின்றார். நீங்கள் முடிந்தால் வாருங்கள்..................
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
❤️........................ குறைபட்ட இறையமைப்புகள் வாழ்க்கைகளில் நிறைவைக் கொடுப்பதேயில்லை, மாறாக அவை பல வாழ்க்கைகளை கெடுத்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், உலகெங்கும் இந்த குறைபட்ட இறையமைப்புகள் குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு அதிகாரங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் அவை ஊக்குவிக்கப்பட்டு, அதனூடாக இவை மனிதர்களிடையே அடுக்குகளையும், அழிவுகளையும் உண்டாக்குகின்றன. நரபலி, பலதாரங்கள் என்பன இன்று நாகரிக சமூகங்களால் ஒதுக்கப்பட்டவையாகிவிட்டன. இவை எந்த இறையமைப்பினதும் புதிய அறைகூவல்களால் ஒதுக்கப்படவில்லை, மாறாக மனிதர்களின் பொதுப்புத்தியில் ஏற்பட்ட மாற்றங்களால் மட்டுமே இவை இல்லாமல் ஆக்கப்பட்டன. இந்த வாரம் கூட தலைகளில் தேங்காய்களை அடித்து உடைக்கும் ஒரு திருவிழாவை தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தேன்.....................🫣.
-
பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
🤣................ இதை வாசித்த பின் எல்லாமே பம்மாத்துகளாகவே தெரிகின்றது.............. நானே ஒரு பம்மாத்து போலவும் தோன்றுகின்றது..................🤣. தலைவர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், இலக்கியவாதிகள்,...................... இப்படி பம்மாத்து விட்டுக் கொண்டிருக்கும் வரிசை மிக நீண்டது. நீங்கள் சொல்லியிருப்பது போலவே மக்களிடம் சில சந்தர்ப்பங்களில் இவர்கள் கையேந்தி நிற்க வேண்டியிருப்பதால், உண்மைகளை பூசி மெழுகி பம்மாத்துக் காட்டுகின்றார்கள். ஆனால் எலான் மஸ்க் இன்று இங்கு காட்டிக் கொண்டிருக்கும் பம்மாத்தும், அதற்கு மக்கள் அவருக்கு காட்டிக் கொண்டிருக்கும் எதிர் விளைவுகளும் புதியதொன்றாக வரலாற்றில் நிற்கப் போகின்றது........ பெரியார் போன்ற வெகு சிலரை விட, மற்ற எல்லோருக்கும் மக்கள் ஆதரவு தேவை என்பதை மஸ்க் மறந்து போனார்............🤣. சமீபத்தில் நடந்த பம்மாத்துகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில மக்களை விஜய் அவரின் பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து நிவாரணம் வழங்கியது உச்சமான ஒன்று. விஜய் சொன்ன காரணம்: நான் அங்கு வந்தால் உங்களுடன் உட்கார்ந்து ஆறுதலாக பேசமுடியாது. நீங்கள் இங்கு வந்ததால், நாங்கள் மிகவும் சாவகசமாகப் பேசலாம்...............🫣. அண்ணாமலையின் சவுக்கடி இன்னொரு சிரிப்பு பம்மாத்து.................. ஈழத்திலும் பம்மாத்துக்கு குறைவில்லை. அர்ச்சுனா தினமும் பம்மாத்துக் காட்டுவார். சுமந்திரன், சிறிதரன், அவர்களின் ஆதரவாளர்கள் என்று பம்மாத்துக்கு எந்தக் குறைவும் இல்லை.............. என்ன, இவர்கள் வெறும் பம்மாத்துகள் என்று மக்களுக்கு தெரிந்து விட்டது தான் இந்தப் பம்மாத்துகளுக்கும், அண்ணா போன்றோரின் மக்கள் நலன் நோக்கிய பம்மாத்துகளுக்கும் இருக்கும் வித்தியாசம்...............
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போகின்றோம் பிரபா................ நீங்களும் அங்கு வருகின்றீர்களா....... வீடுகளில் எல்லோரும் எலிகள் தானே, அல்வாயன்.............. வெளியில் தான் எலிஃபண்ட்......🤣.
-
வணக்கம்
வணக்கம் செழியன். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன்!!
-
பார்த்தீனியம்
இந்த தகவல்களை நான் முன்னர் அறிந்திருக்கவில்லை, நிழலி.................👍. 2016ம் ஆண்டே தமிழ்நதி இந்த நாவலை வெளியிட்டு விட்டார் என்று இருக்கின்றது. ஆனாலும், இன்று தான் அவரையும், அவரின் எழுத்துகள் பற்றியும் கேள்விப்படுகின்றேன்........ தமிழ்நாடு என்னை/எங்களை முழுங்கிவிட்டது...............🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣........... ஒரு கை உடைந்து போனால் என்ன, அடுத்த கை இருக்குதே என்று அதையும் உடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்.................😜. போன வருடம் வாலிபாலில் இடது முழங்கால் சில்லு வெடித்தது. எக்ஸ்ரே எடுத்த போது, செலவு ஒன்று தான் வலதுகாலையும் எடுப்போம் என்று சொன்னார்கள். சரி என்று நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தபடியே மெதுவாக தலையை ஆட்டினேன். இடக்கால் வெடிப்பை உறுதி செய்த மருத்துவர், வலக்கால் எப்படி இருக்கிக்கின்றது என்று பார்த்தார்........ வலக்கால் சில்லு ஏற்கனவே வெடித்து, ஆனால் இப்ப ஒட்டியிருக்கின்றது என்று சொன்னார்.......🫢. அன்று வீட்டில் என்னை மிதிக்காமல் விட்டதே பெரிய விசயம்.........🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நன்றி கந்தப்பு. ஒன்றைத் தெரிவு செய்கின்றேன்..................👍. 🤣....... நூற்றுக்கு நூறு எடுக்கப் போகின்றனோ என்று கொஞ்சம் சங்கடமாக இருந்தது.................. அது தான் ஒரு கேள்வியை அப்படியே விட்டனான்....................🤣. @கிருபன் என்னுடைய Fair Play Award தெரிவு CSK.................. சிரமத்திற்கு மன்னிக்கவும்.
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் என்னுடைய ஆழ்நத அனுதாபங்கள், நெடுக்காலபோவான். தந்தையின் ஆன்மா அமைதியுடன் ஓய்வடைய வேண்டுகின்றேன்......................🙏.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
64 வது கேள்விக்கு RCB எனது தெரிவு. Fair Play Award அது NO Team என்றே இருக்கட்டும்........... 🤣. மிக்க நன்றி கிருபன்.