Everything posted by ரசோதரன்
-
ட்ரம்பின் வர்த்தக வரிகளுக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி!
அமெரிக்க மக்கள் நீலம் அல்லது சிவப்பாகவே இருக்கின்றார்கள். இங்கு இதைத் தவிர்த்து சிந்திப்பவர்கள் மிகக் குறைந்துவிட்டார்கள். இது போன்ற அதிதீவிரங்களை ஒரு சமூகம் ஏற்றுக் கொள்வதால் வரும் நீண்டகால பிரச்சனை இது. கண்மூடித்தனமான ஆதரவை வழங்குதல் மற்றும் தங்கள் தரப்பின் எல்லாவற்றையும் நியாயப்படுத்தல். இரு பக்கங்களும் சரிக்கு சரியாக இருப்பதால், அது அதிதீவிர பக்கத்துக்கே சாதகமாக இருக்கின்றது. ஏதோ ஓர் பெரிய இழப்பு வந்தால் அன்றி, இந்தச் சமூகம் தானாக மாறப் போவதில்லை............😌.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
🤣......... சனி, ஞாயிறுகளில் களப்பக்கம் வருவதற்கு நேரம் கிடைப்பது அரிது........ நீங்கள் வேற யாரோ ஒருவர் மணிக்கட்டால் பந்தை திருப்புவார் என்று எழுதியிருந்ததைப் பார்த்து, நானும் அதை முயற்சிக்க, மணிக்கட்டு கொஞ்சம் திரும்பிவிட்டது..............
-
ட்ரம்பின் வர்த்தக வரிகளுக்கு சீனா, கனடா, மெக்சிகோ பதிலடி!
'நீங்கள் எல்லோரும் பெரிய பணக்காரர்கள் ஆகப் போகின்றீர்கள்............ இவ்வளவு பணத்தையும் எப்படி செலவு செய்வது என்றே நீங்கள் முழிக்கப் போகின்றீர்கள்...................' இப்படித்தான் ட்ரம்ப் ஆரம்பத்தில் சொன்னார்.................... ஆனால் இப்ப இந்த இருவரும் போடும் கூத்தால், அழிந்து மிஞ்சி இருக்கப் போகும் பணத்திற்கு நாங்கள் முட்டை கூட வாங்க இயலாமல் போகும் போல.....................🤣. வீதிகளில் டெஸ்லா வாகனங்களைக் கண்டாலே ஐம்புலன்களையும் அடக்க வேண்டி இருக்கின்றது.......... அவ்வளவு ஒரு ஒவ்வாமையை உண்டாக்கி விட்டனர் இவர்கள்...........
-
மீனவர்கள் பிரச்சனை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட தமிழக வெற்றிக் கழகம்!
அடுத்த ஆறு மாதங்களுக்கு தமிழகத்திற்கு போராட்ட காலம் தான்.......... பலத்தை காட்டினால் தானே பேரம் பேசலாம்.............. தவெக ஆயிரம் பேருக்கு மட்டன், சிக்கன் பிரியாணி கொடுத்த நோன்பு திறப்பு விழாவில் வெளியில் இலட்சம் பேர்கள் நின்றார்கள் என்கின்றார்கள். ஐம்பது சீட்டெல்லாம் பத்தாது, 234 இல் அரைவாசி கொடுங்கள் என்று எதுவுமே செய்யாமலே, கூட்டத்தை கூட்டிக் காட்டாமல் கேட்க முடியாது தானே............... ஆயிரம் பேர்கள் சாப்பிட்டு விட்டு போட்ட கழிவுகளை எவருமே அகற்றவில்லை. அங்கங்கே கழிவுகள் கொட்டப்பட்டு அந்த இடமே அலங்கோலமாக இருந்தது. தானாக எழுதிக் கொடுக்காத ஒன்றைப் பேசப் போகின்றேன் என்று வெளிக்கிட்டு, என்ன சொல்லப் போகின்றாரோ என்று திக்திக்கென்று நெஞ்சு அடிக்குது............... சொந்தத்தில் ஒரு வசனம் கோர்வையாக வராது போல................. அர்ணாப் கோஸ்வாமியிடம் கமல் மாட்டி முழித்ததை விட, ஒரு பெரிய சம்பவம் விரைவில் நடக்கப் போகின்றது................. மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டி நீங்களே போராடுவீர்களா...................... லூசுக் கூட்டம், பிரச்சனையே நீங்கள் மட்டும் தானே......................🫣.
-
எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை.. சீமான்தான்.. பாஜக மாஸ்டர்பிளான்.. ரவீந்திர துரைசாமி பளீர்
முழுவதுமே சிரிப்புத்தான்............... அதிலும் இந்த ஒற்றைவரி அல்டிமேட்.............
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நீங்கள் இருவரும் தெரிவு செய்திருந்த பந்து வீச்சாளர் தான் விளையாடவில்லை................. நான் தெரிவு செய்திருந்த அணியே போட்டிகளில் விளையாடவில்லை............🤣. நோன்புக்காலம்......... நான் அதை மறந்து விட்டேன் போல.......🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டியை மிகச் சிறப்பாக நடத்திய @கிருபன் கிருபனுக்கு மிக்க நன்றி. @வீரப் பையன்26 பையன் சார், சொல்லி அடித்து விட்டீர்களே......... வாழ்த்துகளும் மிக்க மகிழ்ச்சியும்...........❤️. முதலிடத்தை பகிர்ந்து கொண்ட செம்பாட்டான், எப்போதும் தமிழன், புலவர், நீர்வேலியான் மற்றும் கந்தப்பு ஆகியோருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள். @செம்பாட்டான் செம்பாட்டான், முதல் போட்டியிலேயே தூள் கிளப்பியது மட்டும் அல்ல, போட்டிகளை கலகலப்பாக வைத்திருந்தமைக்கும் மிக்க நன்றி..........👍. பிற்குறிப்பு: இங்கு வல்லுநர்களால் கூறப்பட்ட பல தகவல்களை தொகுத்து சுருக்கி பாகிஸ்தான் கிரிக்கெட் சம்மேளனத்திற்கு அனுப்புவதாக உள்ளேன்.................🤣.
-
முழிக்கும் மொழி
👍............ பல விடயங்களை தொட்டுச் சென்றிருக்கிறீர்கள், வில்லவன்............. ஒவ்வொன்றும் முக்கியமானவை. இடப்பெயர்வுகளால் ஒரு பண்பாடே அழிக்கப்படும் என்பதற்கு நாங்களே வாழும் சாட்சியங்கள். 'ஒருவரின் மொழியை அழி, அது அவரின் தொடர்ச்சியையே நீ அழித்து போல.........' என்று சொல்வார்கள். இடப்பெயர்வுகளால் இதுவே தான் நடந்து கொண்டிருக்கின்றது. நீர்கொழும்பு, புத்தளத்தில் கூட உள்நோக்கிய சிங்கள மக்களின் மற்றும் வெளிநோக்கிய தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள் இந்த நிலையைத் தோற்றுவித்திருக்கின்றன. சிலாபத்தில் இருக்கும் உடப்புக்கு போயிருக்கின்றேன். அந்த ஊர் அங்கே எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்ற யோசனை அங்கே நிற்கும் போதே வந்தது. சுற்றிவர இருக்கும் எல்லா ஊர்களும் முற்று முழுதாக மாறிவிட்டன. திருப்பூரில் ஏராளமான வட இந்திய மக்கள் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். சமீபத்தில் அவர்களின் பிள்ளைகள் அங்கிருக்கும் தமிழ் பாடசாலைகளில் தமிழில் கல்வி கற்பதை ஒரு செய்தியில் காட்டினார்கள். இப்படியே அவர்கள் அங்கேயே தங்கி விட்டால், அவர்களின் அடுத்த அடுத்த தலைமுறை தமிழ்மொழி மட்டும் பேசுபவர்களாக மாறிவிடுவார்கள். பர்மாவில் இராணுவ ஆட்சி வந்த ஆரம்பத்தில் தமிழ் பாடசாலைகள் தடைசெய்யப்பட்டன. அங்கு பர்மிய மொழி மட்டுமே ஒரேயொரு மொழியாக மாறியது. இவை போன்றன பாடசாலைக் கல்வி தொடர்பான மொழிக்கொள்கை அல்ல. இவை ஒன்றில் பெரும்பான்மை அரசுகளின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள், அல்லது ஒரு மக்கள் திரள் ஒரு நல்ல வாழ்வைத் தேடிப் போய் அதற்கு கொடுக்கும் விலையாகவும் இது இருக்கின்றது.
-
முழிக்கும் மொழி
முழிக்கும் மொழி --------------------------- இருமொழிக் கொள்கையா அல்லது மும்மொழிக் கொள்கையா எது சரி, எந்த வழியில் போவது என்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடத்தில் வார்த்தைப் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது வெறுமனே வார்த்தைப் போர்கள் தான். இந்தப் போர்க் களத்தில் நிற்கும் பெரும்பாலான முன்னணி தளபதிகளின் குடும்பங்களில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படுகினறன. ஆனாலும் தமிழைக் காப்பதற்காக, தமிழை வளர்ப்பதற்காக தாங்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிரானவர்கள் என்று இவர்கள் வெளியில் சொல்லிக் கொள்கின்றனர். இதில் பலரும் மும்மொழிகளும் படிப்பிக்கும் தனியார் பாடசாலைகளின் உரிமையாளர்களாகவும் கூட இருக்கின்றனர். வழமையான அரசியல் தான் இங்கேயும். மேடையில் ஏறி வாக்குகளுக்காகவும், கைதட்டலுக்காகவும் எதைப் பேச வேண்டும் என்று தெரிந்து அதையே பேசுவது, மேடையிலிருந்து இறங்கிய பின் தங்களின் குடும்ப நலன்களையும், தங்களின் வளமான எதிர்காலத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு, மேடையில் பேசியதற்கு முற்றிலும் எதிரான செயல்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயக அரசியலின் தவிர்க்க முடியாத ஒரு பக்கம். சர்வாதிகாரிகளுக்கு இந்த இரட்டை நிலைப்பாடுகள் தேவையில்லை. ஊரில் சிறுவயதில் ஒருமொழிக் கொள்கையுடனேயே என் இளமைக்காலம் கழிந்தது. அந்த ஒரு மொழி கூட எந்தப் பாடசாலையிலும் கற்றதால் வந்தது அல்ல. என்னுடைய அம்மாச்சியும், அம்மாவும், அப்பாவுமே அந்த ஒரே மொழியை எனக்கு கொடுத்தார்கள். அம்மாச்சி கதைகள் சொல்வார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கமரூன் போன்றவர்களால் கூட அம்மாச்சியை நெருங்கமுடியாது. அவர் ஒரே சேலையையே தினமும் உடுத்திக் கொண்டே தமிழ் வார்த்தைகளால் பிரமாண்டங்களை உருவாக்கினார். பின்னர் ஊரில் இருந்த வாசிகசாலைகள் அம்மாச்சியின் இடத்தை நிரப்ப முயன்றன. தமிழ் சொற்களும், வசனங்களும் அவ்வாறே உள்ளே புகுந்தன. தமிழையே சொல்லிக் கொடுக்காத பாடசாலைகளில் இன்னொரு மொழியை சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நான் போன எந்தப் பாடசாலையிலும் ஆங்கிலத்தை மருந்துக்கு கூட படிப்பிக்கவில்லை. என்னுடைய பாடசாலை நாட்களில் ஹாட்லிக் கல்லூரியில் படித்தவர்கள் சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடும். ஆனால், பின்நோக்கிப் போய் நிதானமாகப் பார்த்தால், அவர்களுக்கும் உண்மை தெரியவரக்கூடும். அன்று ஆங்கில மொழியில் பரிச்சயம் வருவதற்கு வளரும் சூழலில் ஏதாவது சிறிய அளவில் தன்னும் ஒரு ஆங்கில புழக்கம் இருந்திருக்க வேண்டும் அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போயிருக்க வேண்டும். இவை அமையாவிடத்து ஆங்கிலமும் அமையாது. சிங்கள மொழியின் நிலை இன்னும் பரிதாபம். அதைக் கற்றல் முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்தது. ஊரில் ஒரு இடத்தில் 'மேக்கட்ட கீயா......' என்று பெரிதாக தமிழில் எழுதப்பட்டிருந்தது. பல வருடங்களின் பின், ஊரை விட்டு வெளியே வந்த பின் தான், இவை சிங்கள மொழிச் சொற்கள் என்பது தெரியவே வந்தது. அது எழுதப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த வீட்டில் ஒரு அக்கா இருந்தார். அப்போது அந்த அக்காவை ஒரு அண்ணன் விரும்பிக் கொண்டிருந்தார். அந்த அண்ணனின் நண்பர்கள் தான் இந்த சிங்கள மொழி வசனத்தை தமிழில் அங்கே எழுதியிருந்தனர். அவர்களுக்கு எப்படி சிங்கள மொழி தெரிய வந்தது என்றால் அவர்களில் சிலர் வெளிநாடு அல்லது கப்பலில் போவதற்காக கொழும்பிற்கு போய் வந்து கொண்டிருந்தார்கள். போகும் வழிப்பாதையில் வழித்துணையாக சிங்கள மொழியில் சில சொற்களையும், வசனங்களையும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள். நான் பின்னர் தேவை காரணமாக சிங்கள மொழியையும், ஆங்கிலத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஒரு மொழியை வெறும் மொழியாகவே பார்க்கும் போது அது உண்டாக்கும் ஆச்சரியம் அளவில்லாதது. எப்படி இவை உண்டாகியிருக்கும், எப்படி சத்தங்களை வார்த்தைகளாக உருவாக்கினார்கள், எப்படி உணர்வுகளை வார்த்தைகளாக வெளிப்படுத்தினார்கள் என்பது மனிதர்களின் கூட்டு ஆற்றலுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு. எந்த மொழியையும் மனிதர்களுடன், நிலத்துடன், வரலாற்றுடன், பண்பாட்டுடன் சேர்த்து பார்க்கும் போது பேதங்கள் வர ஆரம்பித்து, அவை பெரும் மோதல்களாவும் ஆகிக்கொண்டிருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை பாடசாலைகளில் புகுத்தும் போது, ஒரு மொழியைக் கொண்டு இன்னொரு மொழியை அழிக்க முற்படுகின்றார்கள் என்பதே இன்று சொல்லப்படும் பெரும் குற்றச்சாட்டு. உதாரணமாக, தமிழ் மொழியை இந்தி மொழியால் அழிக்கப் பார்க்கின்றார்கள் அல்லது தமிழ் மொழியை சிங்கள மொழியால் அழிக்கப் பார்க்கின்றார்கள் என்பன. ஆங்கிலத்திற்கு இந்தக் கட்டுப்பாடு அநேக நாடுகளில் இல்லை. ஆங்கிலம் இன்று உலக இணைப்பு மொழி ஆகிவிட்டது, ஆகவே ஆங்கில மொழியை இரண்டாவது மொழியாகக் கொண்ட இருமொழிக் கொள்கைக்கு பெரும்பாலான நாடுகளில், பிரதேசங்களில் எதிர்ப்புக் காட்டப்படுவதில்லை. கோவாவில் இருக்கும் மக்கள் கொங்கணி என்னும் மொழியைப் பேசுகின்றார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுது கர்நாடகாவில் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் அந்தப் பிரதேசத்தின் பேச்சு மொழியாக துளு இருக்கின்றது. கன்னடம் கர்நாடக மாநிலத்தின் மொழி. இந்த மக்கள் மூன்று மொழிகளிலும் முதலில் பரிச்சயம் ஆகின்றனர். ஆண்கள் தங்கள் பகுதி பெண்களுடன் துளு மொழியிலும், ஆண்களுடன் கொங்கணி மொழியிலும், பிறருடன் கன்னடத்திலும் உரையாடுகின்றனர். இதைவிட ஆங்கிலமும், இந்தியும் பாடசாலைகளில் கற்றுக்கொள்கின்றார்கள். இந்த தகவல்களை அங்கிருந்த வந்த ஒரு நண்பன் சொன்னான். அவனுடைய ஆங்கில மொழித்திறனும் அபாரம். அவன் இந்தி மொழியையும் மிக நன்றாகப் பேசுகின்றான் என்றே வட இந்திய நண்பர்கள் சொன்னார்கள். அவனுக்கு தமிழும் ஓரளவு தெரிந்திருக்கின்றது. பழைய கன்னட மொழி அப்படியே தமிழ் தான், ஆனால் இதை இங்கு இருக்கும் வேறு எந்த தமிழர்களுக்கும் சொல்லாதே என்று அவன் எனக்கு சொன்னான். எத்தனை மொழிகளை சிறுவயதில் கற்க ஆரம்பிக்கலாம் என்பதில் பெரிய சிக்கல்கள் இல்லை என்றே தெரிகின்றது. மூன்று அல்லது நான்கு மொழிகளை கற்றுக் கொள்ளலாம் என்றே சொல்கின்றனர். இந்த மொழிகள் புழங்கும் சூழல் இருந்தால், இன்னும் மிக இலகுவாக இவைகளை கற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்கின்றனர், என்னுடைய கொங்கணி - துளு - கன்னட - ஆங்கில - இந்தி மொழிகள் தெரிந்த நண்பன் போல. அதிக மொழிகளை தெரிந்திருப்பதால் அது நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை விடவும் பல பயன்கள் உண்டு. உதாரணமாக, அதிக மொழிகள் தெரிந்திருப்பவர்களின் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும், சிக்கல்களுக்கு தீர்வுகளைக் காண்பதில் அதிக நெளிவுத்தன்மை இருக்கும் போன்றன. இலங்கையில் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் சிலர் மும்மொழி வல்லுநர்கள் என்றனர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்றும் தெரிந்த அவர்களால் ஏதாவது நல்லது நடக்கப் போகின்றது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடந்தது போல தெரியவில்லை. ஒரு வேளை அவர்கள் தங்களுக்கு மட்டும் தேவையானவற்றை தங்களின் திறமைகளின் ஊடாக பெற்றுக் கொண்டார்களோ என்னவோ. அரசியலில் பலதும் பொய்த்துப் போகின்றன. எவரும் இன்னும் ஒரு மொழியை அறிந்து கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவற விடுவது சரியென்று தெரியவில்லை. அதுவும் வசதியுள்ளவர்களுக்கு இந்த வசதி கிட்டும் போது, வசதியில்லாதவர்கள் மட்டும் இதை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம். மற்றும் உலகெங்கும் பத்து கோடிப் பேர்கள் வரையும், தமிழ்நாட்டில் மட்டும் ஒன்பது கோடிப் பேர்கள் வரையும் பேசும் தமிழ் மொழி இன்று இன்னொரு மொழியால் அழிந்து போகும் என்றால், பிரச்சனை உள்ளே வரும் அந்த புதிய மொழியால் இல்லை, அது எங்களில் என்று தானே அர்த்தம்.
- ForeignLanguage.jpg
-
காற்றாடி
மிக்க நன்றி அண்ணா.............. சும்மா உள்ளே வந்தவனை முதல் நாளிலிருந்தே வளர்த்து விட்டவர்களில் முதன்மையானவர் நீங்கள் தான்.........🙏 எது தோன்றுகின்றதோ அதை அப்படியே எழுதுகின்றேன். ஜெயகாந்தனின் 'சினிமாவுக்கு போன சித்தாளு..........' உடனே ஞாபகத்தில் வந்தது............🤣.
-
காற்றாடி
மிக்க நன்றி வாத்தியார் அண்ணா......🙏. வேலை நேரங்களில் இடையிடையே எதையாவது எழுதிக் கொண்டிருக்கின்றேன். இங்கு களத்தில் பலருக்கும் அது பிடித்து இருப்பது மிகச் சந்தோசம்........
-
காற்றாடி
மிக்க நன்றி இணையவன்................👍. சில நேரங்களில் முழு வாழ்க்கையுமே எதுவுமே நடக்காத, மிகச் சாதாரண ஒன்றாகத் தோன்றுகின்றது. பின்னர் சிறிது சிறிதாக பட்டியல் போட ஆரம்பித்தால், பலவற்றையும் கடந்து, அனுபவித்து வந்திருப்பதும் தெரிகின்றது............... நீங்கள் சொல்லியிருப்பது ஆச்சரியத்தை கொடுத்தது. இதே அனுபவங்கள் உள்ள இன்னொருவரை ஏதோ ஒரு வகையில் நான் சந்திப்பேன் என்று நினைத்தே இருக்கவில்லை.....
-
அமைதி மணம்
ஆகஸ்ட் 2ம் திகதி அந்த நாள்.... எழுதி எழுதி தீராத ஒரு நாள் அது....... வள்ளங்கள் செய்யும் இடம், அங்கே மரம் அரியும் பெரிய கிடங்கு ஒன்று. சிறுவயதில் அங்கே தான் ஒளித்து பிடித்து விளையாடுவோம். மரம் அரியும் கிடங்கின் மேல் நீட்டுப் பக்கமாக பெரும் மரங்களைப் போட்டு, கிடங்குக்குள் ஒருவரும் மரத்தின் மேல் ஒருவரும் நின்று கொண்டு, பெரிய வாளால் மரங்களை நீண்ட பலகைகளாக அரிவார்கள். மரத்தூள் பல நிறங்களில் அந்தக் கிடங்குக்குள் அடுக்கு அடுக்காக படியும். அப்படியே கீழே நின்று வெட்டுபவரின் மீதும் அது படியும். படுத்திருக்கும் பெரிய வெட்டிய மரங்கள், பலகைகள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விறகுகள், செய்து கொண்டிருக்கப்படும் வள்ளங்கள், தளபாடங்கள், ஆயுதங்கள், கிடங்கு, கூரை என்று எல்லா இடங்களும் பதுங்க வசதியான ஒரு இடம் அது. அந்த மேத்திரியார்கள், அங்கு வேலை செய்பவர்கள் எங்களை தடுப்பதும் இல்லை. ......... கடைசியில், வேறு வழியே இல்லாமல், அந்த கிடங்குக்குள் கொல்லப்பட்ட சிலரை போட்டு எரித்தார்கள்...............
-
ராணுவ ரகசியம்
எங்களை சுற்றி இருந்த விளையாட்டு திடல்கள்/மைதானங்களுக்கு நெற்கொழு, தீருவில், சிதம்பரா, நெடியகாடு, எள்ளங்குளம் என்றெல்லாம் பெயர்களை வைத்த நாங்கள் இதற்கும் ஒரு நல்ல பெயராக அப்பவே வைத்திருக்க வேண்டும்................ 🤣......... உங்களுக்கு பனை ஓலை, எனக்கு பனம்பாத்தி............. பாடசாலையில் எனக்கு ஆங்கில வகுப்பில் ஆசிரியையாக வந்து இருந்து விட்டுப் போன குலசேகரம் டீச்சரே இதை மொழிபெயர்க்க கஷ்டப்பட்டிருப்பார்....................🤣.
-
ராணுவ ரகசியம்
இந்த விடயத்தில் இவர்கள் செய்த இந்தக் கொடுமைகள் அப்படியே மறைக்கப்பட்டன..................😌. இவை எதையும் நிரூபிக்க முடியாது தான், ஆனால் எங்களில் பெரும்பான்மையானவர்களுக்கே இப்படி எல்லாம் நடந்தன என்று இன்றுவரை தெரியாது...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பத்தோடு பதினொன்றாக இருக்காமல், தனித்தன்மையுடன் இருப்போம் என்று தான் நானும் வித்தியாசமாக பாகிஸ்தானை தெரிவு செய்தேன்..................... பாகிஸ்தான் முதல் சுற்றிலேயே வெளியேறி விட்டதால் இந்த ஆடுகளம் தப்பிவிட்டது..................🤣.
-
ராணுவ ரகசியம்
🤣.............. இங்கு வந்து முதலாம் திகதியுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது. களத்தில் ஓரளவு வந்து போகும் நட்புகளில் யார் யாருக்கு எந்த எந்த விடயங்களில் ஒவ்வாமைகள் இருக்கின்றன் என்ற புரிதல் எனக்கு ஓரளவுக்கு வந்துள்ளது என்று நினைக்கின்றேன்........ நிலைமை கையை மீறும் போது, அந்த விடயங்களில் காந்தி தாத்தாவின் மூன்று பொம்மைகளாகி விடுவது தான் என் தெரிவாக இருக்கின்றது......................🤣. இந்தியாவில், தமிழ்நாட்டில், இங்கிருக்கும் இந்தியர்கள் என்று எங்கேயும் நானும் இந்த 'இந்திய ராணுவ' மணத்தை அறிந்ததில்லை......... சீக்ரெட் ரெசிபி போல.....................
-
ராணுவ ரகசியம்
கோஷானும் ஒன்றை சொல்லியிருக்கின்றார். பொதுவாகவே எவரும் இந்த விடயங்களை எங்கும் எழுதியதை நான் இதுவரை காணவில்லை. அதனால் தான் முற்றாகத் தவிர்த்தேன்......... 👍................உங்களுக்கு இந்த இடம் நல்லாவே தெரிந்திருக்கின்றது......... மழை காலங்களில் தீருவிலில் வெள்ளம் நிரம்பி வழியும், ஆகவே சில நாட்களில் இங்கு போய் பந்தடிப்போம்......... 🤣........... தேங்காய் எண்ணெய்யும், நல்ல எண்ணெய்யும் கலந்த ஒன்று தான் வரும்.........🤣.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உண்மையே வசீ................ பொதுவாகவே பலரும் சில விடயங்களை இலேசாகவும், வேறு சில விடயங்களை அதிக அர்த்தங்கள் உள்ளவையாகவும் ஆக்கிக் கொள்கின்றனர். இன்னும் சிலருக்கு வாழ்வில் எல்லாமே வெற்றி - தோல்வி வரை போகும் போட்டிகள் தான்........ ஆடுகள் போல சிலரும் உள்ளனர். இங்கே ஒரு கடி, அங்கே ஒரு கடி என்று சும்மா மேய்ந்து கொண்டு, எல்லாவற்றையும் இலேசாக கடந்து போகும் மனிதர்கள்............
-
ராணுவ ரகசியம்
இதுவே தான் என் நண்பர்கள் பலருக்கும் நடந்தது. 1987ம் ஆண்டு ஏலெவல் தான் எங்களின் வகுப்பு. பரீட்சைக்கு இரண்டு மாதங்களின் முன்னர், இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை ஆரம்பித்து நாங்கள் ஊரை விட்டு ஓடினோம். பின்னர் இந்திய ராணுவம் வந்தது. பல நண்பர்கள் முதல் தடவை பரீட்சை எடுக்கவேயில்லை. எடுத்தவர்களில் மிகவும் திறமையானவர்கள் சிலருக்கு கூட மிகவும் மோசமான பரீட்சை முடிவுகள் வந்தன. அப்படியே இந்தியா அல்லது வேற நாடுகள் என்று போனார்கள். அப்படிப் போனவர்களில் மிகச் சிலரே மேற்கொண்டு படித்தனர். இன்று நண்பர்கள் பலரும் காசு பணம் சேர்த்து விட்டார்கள். ஆனாலும் வாழ்க்கையில் சில தவறவிடக் கூடாத விடயங்களை தவற விட்டு விட்டதாகச் சொல்லுவார்கள்...................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
போட்டிகள் தொடங்க முன்னர், பாகிஸ்தான் இந்தியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தும் என்று நானும் ஒரு சாத்திரம் சொல்லியிருந்தேன்................... நான் தான் வீழ்ந்து போனேன்.................🤣.
-
ராணுவ ரகசியம்
🤣............... மூன்று தடவைகள் நாய்க்கடி வாங்கியிருக்கின்றேன் என்று சொல்ல எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது................... ஏனென்றால் இதை வைத்தே சில பகிடிகளை சொல்லுவார்களே என்று. உங்களுக்கும் மூன்று தடவைகள் இது நடந்திருக்கின்றது என்பது ஒரு புதுத் தைரியத்தை கொடுக்கின்றது...........🤣. அடுத்த தடவை ஊருக்கு போகும் போது, எப்படியும் இந்தச் சந்தர்ப்பம் அமையத் தான் போகின்றது..... மெதுவாக அவைகளைக் கண்டும் காணாமல் போகப் போகின்றேன்...... ஆனால் நான் பாடுவதாக இல்லை......... இங்கு வட கலிஃபோர்னியாவில் ஒரு நண்பர் மிருக வைத்தியராக இருக்கின்றார். சில மாதங்களின் முன் என்று நினைக்கின்றேன், சிகிச்சைக்கு வந்த ஒரு பெரிய நாயை அவர் எதற்காகவோ தூக்கவோ அல்லது அசைக்கவோ முற்பட, அது திமிறியதில், அவருக்கு இடுப்பு பிடித்து, பல நாட்கள் சிரமப்பட்டார்.........
-
ராணுவ ரகசியம்
அவர்களுக்கு ஆட்களுக்கா பஞ்சம், சுவி ஐயா.................. ஒவ்வொரு இடத்திலும் இப்படிக் கூட்டமாகவே நின்றார்கள். இந்திய ராணுவம் உலகின் நாலாவது பெரிய ராணுவம் என்று இதை வைத்து தான் சொல்லியிருக்கின்றார்கள்........................🤣.
-
ராணுவ ரகசியம்
எங்கள் பகுதிகளில் தமிழ் இந்திய இராணுவ வீரர்கள் மிகக்குறைவாகவே இருந்தார்கள் என்று நினைக்கின்றேன். தமிழில் கதைக்கும் ஒருவரை ஓரளவு ஞாபகம் இருக்கின்றது, ஆனால் அவர் கூட கேரளா என்று தான் நினைக்கின்றேன். அவர் தான் எங்களை அந்த சுற்றி வளைப்புக்குள் மாட்டி விட்டவர் என்று நினைக்கின்றேன்........🤣. நான் அப்பாவிடம் உங்களுக்கு ரகசிய தகவலைச் சொன்ன அந்த இராணுவ வீரர் யார் என்று கடைசிவரை கேட்கவில்லை................