Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. அவரே தான்...................👍. அவருடைய மகன் ஒருவரும் நானும் பாடசாலையில் ஒரே வகுப்பு, ஆனால் வெவ்வேறு டிவிசன். பரஞ்சோதி மாஸ்டர் நல்லாத்தான் படிப்பித்தார் என்று நினைக்கின்றேன்........... எனக்குத்தான் கொடுத்துவைக்கவில்லை.................🤣. இப்பவும் இங்கே இராணுவ ஹெலிகாப்டர்கள் தாழப் பறந்து போகும் போது, பழைய ஞாபகங்கள் வரும்..................
  2. 🤣..................... அவர் அங்கே கை வைத்தார், இவர்கள் இங்கே கை வைக்கின்றார்கள்................. என்று தானே சொல்லுகின்றீர்கள். எனக்கென்னவோ சேதாரம் ஒரு பக்கம் மட்டும் தான் என்று தெரிகின்றது......
  3. 🤣.................. அங்கே எந்த அரசியல்வாதியின் பாதையிலும் பல நடிகைகள் வந்து போயிருப்பார்கள் தானே, விசுகு ஐயா....... சிலர் பகிரங்கமாகக் கூட இருப்பார்கள்................. இப்ப விஜய்க்கு கூட சொல்லுகின்றார்களே.................. கருணாநிதிக்கு, கமலுக்கு இருக்காதவர்களா......... பையன் சார், யுவர் ஆனர் என்று சொல்லிக் கொண்டே, நீதிமன்றில் (களத்தில்) கடுமையான வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கின்றீர்கள்............ வரப் போகின்றார்கள் காவலர்கள்.........🤣. 'விஜயலட்சுமி சரிதம்.......' முழுக்க வாசித்தேன். இதற்கு முன்னர் ஶ்ரீவித்யாவின் கதையைக் கூட வாசித்திருக்கின்றேன். கௌதமியின் கதை,........ இன்னும் எத்தனையோ கதைகள் இருக்கின்றன. சீமான் மட்டும் தான் இப்படி இந்த விடயத்தில் மாட்டுப்பட்டு நிற்கின்றார்.
  4. அப்பொழுது GELT வகுப்புகள் நடந்த காலம். ஜேவிபி பிரச்சனையால் பல்கலைகள் மூடியிருந்தன. நாங்கள் அனுமதி பெற்றுவிட்டு வீட்டிலேயே இருந்தோம். இப்படியே சும்மாவே இருக்கின்றார்களே என்று அரசாங்கம் இந்த வகுப்புகளை ஆரம்பித்தது. ஆங்கிலம் படிபித்தார்கள். அத்துடன் சில இடங்களுக்கு வேலை அனுபவம் அல்லது அறிமுகம் பெறவும் அனுப்பி வைத்தார்கள். வகுப்புகள் சில நாட்களில், வேலை சில நாட்களில் என்று போய்க் கொண்டிருந்தது என்று நினைக்கின்றேன். ஆங்கில வகுப்பின் நாலாம் நாள். நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் நடந்து கொண்டிருந்தது. வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் ஒன்று வந்து சுட்டார்கள். மேசைக்கு கீழே ஆங்கில ஆசிரியரையும் கண்டேன். அதற்குப் பின் நான் அந்த வகுப்புகளுக்கு போகவேயில்லை. அரசாங்கம் தான் நாங்கள் சும்மா இருக்கின்றோம் என்று நினைத்தது, ஆனால் ஊரில் நாங்கள் உண்மையிலேயே பிசியாக இருந்தோம்....................... வேலைக்கு கட்டாயம் போக வேண்டி இருந்தது. வரவு எடுத்து, அதை நிரப்பி, எங்கோ அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கச்சேரி, டிப்போ, துறைமுகம், மருத்துவமனை, இப்படியான இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். பருத்தித்துறை டிப்போவிற்கு எங்களில் சிலரை அனுப்பியிருந்தனர். அதில் சிலர் அங்கிருந்த கராஜில் போய் புதினம் பார்த்தார்கள். சிலர் டிப்போ அலுவலகத்தில் நின்றனர். அங்கு எங்களின் பயிற்சிக் காலம் முடிந்த பின், பஸ் சேவையை எப்படி முன்னேற்றலாம் என்று எங்கள் ஒவ்வொருவரையும் கட்டுரை எழுதித் தரும்படி கேட்டிருந்தனர். நாங்கள் கூடிப் பேசி, நிறைகளையும் குறைகளையும் பட்டியலிட்டு, தீர்வுகளையும் கதைத்துக் கொண்டோம். தனித்தனியே எழுதியும் கொடுத்தோம். பின்னர் ஒரு நாள் எங்களை எல்லாம் டிப்போவிற்கு கூப்பிட்டிருந்தனர். எல்லோரையும் பொதுவாக பாராட்டி விட்டு, எங்களில் ஒரே ஒரு ஆள் மட்டும் கண்டைதையும், கடியதையும் எழுதியிருக்கின்றார் என்று கோபப்பட்டனர். இனிமேல் இவர்கள் எவர்களையும் நம்பவே கூடாது அன்று நினைத்தேன்................🤣.
  5. கார்த்திக் கதையோட கதையாக தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்றும் சொல்லிவிட்டார்..................🤣. இந்திய அரசியலில் ஒரே ஒரு நடிகையால் இப்படி ஒரு தலைவரும் 15 வருடமாக இழுபட்டது கிடையாது......................... தினமும் இதே வேலையாகவே கிடக்குது..........
  6. அடுத்த பத்து வருடங்களுக்கு 4.5 டிரில்லியன் டாலர்கள் வரிக் குறைப்பிற்கு திட்டம் போட்டுள்ளனர். செலவில் 2.0 டிரில்லியன் குறைக்கும் திட்டமும் இருக்கின்றது. சரி, இவர்களால் செலவில் இரண்டு டிரில்லியனைக் குறைக்க முடியும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், இந்தக் கணக்கில் மட்டும் துண்டு விழும் 2.5 டிரில்லியன் டாலர்களுக்கு எங்கே போவது........... இன்னும் பல கவர்ச்சிகரமான திட்டங்கள், லலிதா ஜூவலரி விளம்பரங்கள் போல, வரும் போல....... நான் முதலில் தலைப்பை மட்டும் வேறொரு இடத்தில் பார்த்து விட்டு, ஏதோ ஒரு புதுவகை கிரெடிட் கார்ட் போல என்று போக, பிறகு தான் தெரிந்தது இது அமெரிக்கக் குடியுரிமை என்று....... எங்களின் பெண்களிடம் ஒரு பழக்கம் இருக்கின்றது. எப்பவும் ஒரு சிறியளவு காசையாவது மாதம் மாதம் எடுத்து, காசாகவே சேர்த்து வைத்துக்கொள்வார்கள். அது அவர்களின் ஒரு திருப்தி என்று விட்டுவிட வேண்டியது தான்............... நாடு போகிற போக்கில், இங்கு ஒவ்வோரு வீடாக போய், இந்த அரசாங்கம் அதையும் கேட்டு வாங்குவார்கள் போல......
  7. பையன் சார், அன்றைக்கும் இந்த ஆச்சருக்கு எதிராகத்தானே ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்று சொன்னீர்கள்.................... ஆச்சர் காட்சை விட்டிடுவார், ஆனால் எங்களை விடமாட்டார் போல............🤣. எப்போதும் தமிழனா அடுத்த முக்கிய அமைச்சர்.........👍.
  8. அதுவே தான் நிழலி..................... இதை நீங்கள் சொன்னவுடன் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகின்றது. எனக்கு கனடாவில் நடந்தது. மிகச் சாதாரண ஒரு சந்தர்ப்பத்திலேயே நாங்கள் எப்படி திக்குமுக்காடிப் போகின்றோம் என்பதிற்கு அந்த சம்பவம் ஒரு உதாரணம். பின்னர் அதையே ஒரு கதையாக எழுதுகின்றேன். 🤣.............. அதற்குப் பின்னர் ஒரே ஒரு தடவை மட்டுமே அந்த பஸ்ஸில் எங்களை ஏற்றினார்கள் என்று ஞாபகம். நாங்கள் முன்னெச்சரிக்கையாக 'நாங்கள் வேலாயுதம் ஸ்கூல்........' என்று சொன்னோம். எங்களை எவரும் கவனிக்கவேயில்லை..................🤣.
  9. 🤣.................. எங்களின் நட்புகளுக்கும், எங்களுக்கும் இருக்கும் பொருத்தம் தான் உள்ளதிலேயே சிறப்பான பொருத்தம்..................🤣. 'ஶ்ரீரங்கத்து தேவதைகள்......' கதைகளில் வருவது போல பல கதைகள் அன்று ஊரில் நடந்திருக்கின்றது. ஆனால் என்னுடைய வட்டத்திற்கும் அதற்கும் சம்பந்தமே கிடையாது....... வெறும் பார்வையாளர்கள் தான்..............
  10. தலைப்பு மட்டும் தான் இன்னமும் மிஞ்சி இருக்குது..................... இந்தக் கதை நான் எழுதினது இல்லை............ 🤣.
  11. இதற்காகத்தான் கோழிக்குஞ்ச கோழிக்குஞ்சு என்று ஒரே சொல்லாகவே சேர்த்து எழுதியிருந்தனான். அப்படி இருந்தும் நந்தன் அதைப் பிரித்து விட்டார்..........🤣.
  12. கமலுக்கு தனக்கு எவை தெரியாது என்றே தெரியாது................🤣. நேற்று இங்கு Warren Buffett அவருடைய நிறுவன பங்குதாரர்களுக்கு வருட அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கடைசியில் இப்படி ஒன்றைச் சொல்லியிருந்தார்: என்னிடம் நல்ல விளையாட்டுத் திறமைகள் இல்லை. நல்ல குரல் எனக்கில்லை. மருத்துவம் சுத்தமாகத் தெரியாது. இப்படி எந்த விதமான தனித் திறமைகளும் என்னிடம் கிடையாது. அதனால் தான் இந்தப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டேன்..........................
  13. நான் எழுதவில்லை, அல்வாயன்................... வேறு யாரும் எழுதியிருந்தார்களோ தெரியவில்லை. உங்களுக்கும் இந்த பஸ்களை தெரிந்திருக்கும் தானே..................
  14. நல்ல பகிடி, விசுகு ஐயா.................... கமலின் மநீம அழிந்தது பற்றி ஒரு எள்ளளவு கவலை வருகின்றது தான்................ அது அழியும் என்றே தெரிந்திருந்தாலும்.....................
  15. எங்களை ஒன்றாகவே சேர்ந்து படிக்க விட்டிருக்கலாம் என்று தான் தோன்றுகின்றது, சுவி ஐயா...... அப்பொழுது 'பெண்கள் மட்டும்' என்று சில பஸ்கள் போய்வரும். மெதடிஸ் பெண்கள் பாடசாலைகள் போன்றவற்றுக்காக ஓடியவை. மெதடிஸ் பெண்கள் பாடசாலை 3:20 க்கும், ஹாட்லி 3:30 க்கும் முடியும். ஒரு நாள், ஆறாம் வகுப்பில் என்று நினைக்கின்றேன், எங்களுக்கும் 3:20 பாடசாலை முடிந்தது. பஸ் நிலையத்திற்கு ஓடிப் போனால், 'பெண்கள் மட்டும்' பஸ் வந்தது. சின்னப் பொடியள் தானே என்று எஙகளில் சிலரையும் அதில் ஏற்றினார்கள். அங்கிருந்த சில அக்காமார்கள் சுற்றிவர வந்துவிட்டார்கள். அவரைத் தெரியுமா, இவரைத் தெரியுமா என்று சில அண்ணன்மார்களின் பெயர்களைச் சொல்லிக் கேட்டார்கள். ஹாட்லி என்றால் நீங்கள் என்ன பெரிய இதுவா, அதுவா...... என்றும் சிலர் பொய்க்கோபங்களும் காட்டினார்கள். இரண்டு பாடசாலைகளும் ஒன்றாக இருந்தால் நல்லாக இருக்குமே என்று அன்றே தோன்றியிருக்குது போல.................🤣.
  16. பல வருடங்களின் முன், இங்கு ஒரு வீடில்லாமல் வாழ்ந்த (homeless and then foster homes) பிள்ளை ஒன்று Princeton பல்கலைக்கு தெரிவானது. இங்கு Princeton போன்ற சில பல்கலைக் கழகங்களுக்கு தெரிவாவது என்பது அரிதிலும் அரிதான ஒரு விசயம். ஆனால் இந்தப் பிள்ளைக்கு கிடைத்தது. உங்களின் அப்பா, அம்மா மேல் எந்தக் கோபமும் இல்லையா என்பது போல ஒரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. பெற்றோர்கள் இருவரும் இடையில் பிரிந்து போக, இந்தப் பிள்ளை தெருவிற்கு வந்திருந்தது. 'அவர்களுக்கு அவர்களின் பிரச்சனைகள்.......' என்று சுருக்கமான ஒரு பதிலை இந்தப் பிள்ளை சொன்னது. நாங்கள் ஊரில் வளர்ந்த காலகட்டமும் ஒரு நிலையில்லாத காலம் தானே....... எதைப் பார்ப்பது, எதை விடுவது என்று தெரியாமல் சிரமப்பட்டுப் போனார்கள் பல பெற்றோர்கள். பல விடயங்களில் எங்களை அப்படியே விட்டுவிட்டார்கள்...................
  17. செய்திகளில் காட்டினார்கள். நல்ல கூட்டம்.............. 'இது வெறும் டிரெய்லர், மே 11 இல் இருக்குது மெயின் பிக்சர்........' என்று அன்புமணி பேசினார். ஒரே அதிமுக ஆதரவுப் பேச்சாகவும் இருந்தது. கூட்டணிகள் மெதுவாக துலங்க ஆரம்பிக்கின்றன.......
  18. யாழ் களமே 12 - 12 ஆகப் பிரிந்து நின்றபடியால், கலவரம் வந்தாலும் வரலாம் என்று மழை அதுவாக வந்துவிட்டது......................🤣.
  19. உண்மையில் இது தான் நாதகவை அழிக்கப் போகின்றது. எந்த பதவியிலும் இல்லாத, சாதாரண இளைஞர்களை இழப்பது. அதிமுகவின் வாக்கு வங்கி 20 வீதங்கள் ஆகிவிட்டது என்ற அறிக்கை, இது பொய்யாகக் கூட இருக்கலாம், இதையே சொல்லுகின்றது. சாதாரண தொண்டர்கள் கட்சியின் மேல் நம்பிக்கை இழப்பது எந்தக் கட்சியையும் மூழ்கடிக்கும். 'எங்கேயய்யா எங்களின் ஆட்கள்...........' என்பது போல ராமதாஸ் சமீபத்தில் ஒரு பாமக செயலாளர்கள் கூட்டத்தில் கேட்டிருந்தார். அவர்கள் போய் விட்டார்கள்........................
  20. நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்................. 'என்னுடைய வாழ்க்கையின் சாயலும் இதில் இருக்குதே.............' என்று ஏராளமான புலம்பெயர்ந்த நம்மவர்கள் சொல்லக்கூடிய நிகழ்வுகள்..............👍.
  21. இன்னும் வயது போகப் போக, அப்பாக்கள் மீது பெரிய அபிமானமே பிறக்கும் என்கின்றார்கள். 'என்னுடைய அப்பாவிற்கு எல்லாமே தெரியும்.......' என்ற ஒரு சிறுபராயம், பின்னர் 'அவருக்கு ஒன்றுமே தெரியாது..........' என்ற இளையபராயம், கடைசியில் 'அவருக்கு என்னை நல்லாவே தெரிந்திருந்தது........' என்று ஒரு சுற்று சுற்றி வந்து விடுவோம் போல......... ஆனாலும், ஊரிலேயே மட்டுமே வாழ்ந்த என்னைப் போன்றவர்களின் நிலைமை கொஞ்சம் வேறுபட்டும் இருந்தது. நான் விளையாடுவேன் என்றே வீட்டில் தெரிந்திருக்கவில்லை. ஆனால் நான் எந்நேரமும் கிரவுண்டிலேயே இருந்தேன். வீட்டில் அதைக் கவனிக்கவில்லை. பின்னர், உதைபந்தாட்டக் கழகங்களுக்கிடையில் ஒரு தகராறு வந்து, வீடு வரை விசயம் போன பின் தான், 'அட................. இவனும் விளையாடுகின்றானா...........' என்று முழித்தார்கள்................ அந்தப் பிரச்சனையிலும் 'என்னவோ................... உன் இஷ்டம்..........' என்று விட்டுவிட்டார், அப்பா......... அவருக்கு என்னை நல்லாவே தெரிந்திருக்கின்றது............🤣.
  22. 🤣................ நீங்கள் பரவாயில்லை, அண்ணா.......... அக்காவை உங்களுக்கு முன்னரே தெரியும் தானே........ நாங்கள் பலர் உலகத்தின் ஒரு பக்கம் என்னவென்றே தெரியாமலேயே வளர்ந்தோம்..................
  23. 🤣.......... இரண்டு பஸ்கள் பிரேக்டவுண் ஆகி நிற்கின்றன போல.......... பழைய பஸ் டிப்போ கதை ஒன்று இப்ப நினைவில் வருகின்றது.......🤣. அசத்தலான படங்கள் வில்லவன்.........👍.
  24. மூன்று கோழிக்குஞ்சுகள் -------------------------------------- 'பாடசாலை நாட்களில் உனக்கு எத்தனை பெண் நண்பிகள் இருந்தார்கள்?' 'அப்படி ஒருவருமே இருக்கவில்லை............' கொஞ்சம் திடுக்கிட்ட அவன் என்னைக் கூர்ந்து பார்த்தான். 'ஏன்.......... உன்னுடைய வகுப்பில் பெண் பிள்ளைகள் எவரும் படிக்கவில்லையா............' 'இல்லை.......நான் ஒரு ஆண்கள் பள்ளியில் படித்தேன்.' 'அது என்ன ஆண்கள் பள்ளி என்றால்...........' 'ஆண்கள் பள்ளி என்றால் அங்கே ஆண்பிள்ளைகள் மட்டுமே படிப்பார்கள். பெண்கள் இருக்கமாட்டார்கள்...........' அப்படியான பாடசாலைகளும் உலகில் இருக்கின்றனவா என்று கேட்டுவிட்டு, அவன் இதுவரை கேட்டிராத ஒரு புது நகைச்சுவைக்கு சிரிப்பது போல சத்தமாகச் சிரித்தான். அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த எல்லோரும் திரும்பி எங்களையே பார்த்தனர். எனக்குத் தான் அது கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அவன் அதைப் பொருட்படுத்தவே இல்லை. அவன் சிரித்து முடித்து விட்டு, 'பெண்கள் பாடசாலை என்றும் உங்கள் நாட்டில் இருக்கின்றதா............' என்று கேட்டான். இன்னும் அதிகமாகச் சிரிப்பானோ, நிலத்தில் விழுந்து உருளப் போகிறானோ என்ற தயக்கத்தில் பதில் சொல்லாமல் இருந்தேன். ஆனால் அவன் என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஆ................. பெண்கள் பாடசாலைகளும் இருக்கின்றன...........' இந்த தடவை அவன் சிரிக்கவில்லை. அவன் கடுமையாக யோசிப்பது தெரிந்தது. நான் அவனுடன் வேலை செய்ய ஆரம்பித்து ஆறு மாதங்களே ஆகியிருந்தன. அவன் கடுமையாக யோசிக்கின்றான் என்பதை என்னால் கண்டுபிடித்துவிடமுடியும். அவன் வேலையில் அடிக்கடி யோசிப்பான். அவன் அவனுடைய நாட்டிலிருக்கும் பல்கலையில் மிகச் சிறப்பான சித்தி பெற்று, பின்னர் மேற்படிப்பிற்காக அமெரிக்கா வந்தவன். அப்படியே இங்கேயே தங்கிவிட்டான். எங்களுடன் வேலை செய்த பலரும் அவன் கொஞ்சம் மந்தமானவன் என்றே நினைத்திருந்தனர். ஆனால் உண்மையில் அவன் ஒரு அதிபுத்திசாலி. ஓரளவு உயரமான அவன் மெல்லிதாக இருந்தான். முதுகு கொஞ்சம் வளைந்து இருந்தது. அதனால் அவனது தோற்றத்தில் ஒரு பலவீனம் தெரிந்தது. அந்தப் பலவீனத் தோற்றத்தை வைத்தே அவனைப் பற்றிய கணிப்புகள் உருவாகி இருந்தன. அவன் தனக்கு தன் நாட்டில் பாடசாலை நாட்களில் ஒரு பெண் நண்பி இருந்ததாகச் சொன்னான். அவர் தான் இன்று உன்னுடைய மனைவியா என்ற என் கேள்வியை காதில் வாங்காதது போல யன்னல்களுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிய மௌனத்தின் பின், தான் ஒரு கோழிக்குஞ்சு வளர்த்தேன் என்று ஆரம்பித்தான். 'ஒரேயொரு கோழிக் குஞ்சா, ஏன் கூட்டமாக வளர்ப்பது தானே.....' என்று நான் ஆச்சரியப்பட்டேன். அவனுடைய நாட்டில் செல்லப் பிராணியாக ஒன்றே ஒன்றைத்தான் வளர்க்கலாமாம். அவனுடைய பெற்றோர்கள் ஒரு உயர் தொடர்மாடிக் குடியிருப்பில் 25 வது தளத்தில் இருக்கும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். அந்த நாட்களில் அவனுடைய நாட்டில் ஒரு குடும்பத்துக்கு ஒரேயொரு பிள்ளை, ஒரேயொரு செல்லப்பிராணி என்று அந்த அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் கொஞ்சம் சிக்கனமானவை. 25 வது தளத்தில், ஒரு பூட்டிய வீட்டுக்குள் ஒரு கோழிக்குஞ்சு நாள் முழுக்க, அதன் வாழ்க்கை முழுக்க என்ன செய்யும். அவன் பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் கோழிக்குஞ்சை கையில் கொண்டு கீழே வந்துவிடுவான். கோழிக்குஞ்சு அங்கே தரையில் மேயும், சுற்றுத்திரியும். பின்னர் அவனின் பெற்றோர்கள் வேலையால் வரும் நேரத்தில் நால்வரும் ஒன்றாக வீட்டிற்குள் போவார்கள். அவனுடைய பெண் நண்பி பின்னர் ஒரு நாள் அவன் வகுப்பில் இருந்த சிறந்த விளையாட்டு வீரனின் தோழியாக ஆகினார் என்று நான் முன்னர் கேட்ட கேள்விக்கு இப்பொழுது பதில் சொன்னான். நான் ஏற்கனவே அந்தப் பெண்ணை மறந்து விட்டு, அவனின் ஒற்றைக் கோழிக்குஞ்சை பற்றி யோசிக்க ஆரம்பித்திருந்தேன். 'உன்னுடைய கோழிக்குஞ்சு ஆணா அல்லது பெண்ணா........' என்று கேட்டேன். 'குஞ்சாக இருக்கும் போது எப்படித் தெரியும்..................' நாலு நாட்களிலேயே ஒரு குஞ்சு பேட்டுக்குஞ்சா அல்லது சேவல்க்குஞ்சா என்று தெரிந்துவிடும். ஆனால் ஒரேயொரு குஞ்சை 25 வது மாடியில் வளர்ப்பவர்களுக்கு இந்த அனுபவம் கைவர எத்தனை வருடங்கள் தேவைப்படும் என்று தெரியவில்லை. 'அது வளர்ந்திருக்கும் தானே...............' 'நீ பெண்களுடன் ஒரே வகுப்பில் படிக்கவே இல்லையா................' என்று கேட்டான். கோழிக்குஞ்சுக்கு என்ன ஆகியிருக்கும் என்ற என் நினைப்பை ஓரமாக தள்ளிவிட்டு, பெண்களுடன் ஒரே வகுப்பில் இருந்திருக்கின்றேனா என்று கணக்குப் பார்க்க ஆரம்பித்தேன். ஐந்தாம் வகுப்பு வரை படித்திருக்கின்றேன். ஆனால் அதை எல்லாம் கணக்கில் சேர்க்கமுடியாது. கோழிக்குஞ்சு என்ன குஞ்சு என்று தெரியாமல் அதை வளர்ப்பது போல அந்த சின்ன வகுப்புகள். பின்னர் 11 ம், 12 ம் வகுப்புகளில் தனியார் கல்வி நிலையங்களில் பெண் பிள்ளைகள் இருந்திருக்கின்றார்கள். சமீபத்தில் அவர்களில் ஒருவரை இன்னொரு நாட்டில் ஒரு குடும்ப விழாவில் சந்தித்தேன். அவர் என்னைத் தெரியவே தெரியாது, நாங்கள் ஒன்றாகப் படிக்கவேயில்லை என்று பலர் முன்னிலையில் சொன்னார். இனிமேல் எவரையும் என்னுடன் ஒரே வகுப்பில் படித்ததாக சொல்லுவதில்லை என்ற முடிவை அன்று எடுத்திருந்தேன். பல்கலை வகுப்புகளில் பெண்கள் இருந்தார்கள். அவர்கள் முன் வரிசைகளில் இருப்பார்கள். நானும், என் நண்பன் ஒருவனும் எப்போதும் கடைசி வரிசை. அது பருத்தித்துறையும், காலியும் போல. ஒன்றுக்கு இன்னொன்று என்னவென்றே தெரியாது. 'இல்லை..................... நான் பெண்களுடன் படிக்கவேயில்லை..............' அவன் ஒன்றும் சொல்லாமல் சாப்பிட்டான். வெள்ளைச் சோற்றின் மேல் அவித்த பச்சைக் கீரையும், ஏதோ ஒரு அவித்த மாமிசமும் அன்று கொண்டு வந்திருந்தான். அநேக நாட்களில் அப்படித்தான் வெறும் அவியல்களாக மட்டுமே கொண்டுவருவான். 'ஒரு நாள் கோழிக்குஞ்சும், நானும் கீழே போயிருந்த பொழுது, சிறிது நேரத்தில் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது................' அது அப்படியே பெரிய மழையாக கொட்ட ஆரம்பித்தது என்றான். அவன் ஒரு வீட்டின் முன்னால் போய் ஒதுங்கி நின்றிருக்கின்றான். மழை விட்டதும், அவனின் கோழிக்குஞ்சை தேடி ஓடினான். 'மழையில் கோழிக்குஞ்சுகள் என்ன செய்யும்...............' என்று கேட்டான் அவன். 'அவைகள் மழை படாத இடமாக ஒதுங்கும்..............' 'ம்ம்............ நான் எல்லா இடமும் தேடினேன்...............' மீண்டும் யன்னலுக்கு வெளியே பார்த்தான். அவனின் கண்களில் விழுந்த வெளிச்சத்தில் கண்கள் ஈரத்துடன் பளபளத்தன.
  25. வரட்டும் அண்ணா இவர்களும், இந்த வடிவான பிள்ளைகளும் நிற்கும் படங்கள்................ அதே படத்தில் இவர்களை துக்கிப் போட்டு, எங்களைப் போட்டு எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம்.............🤣. கொஞ்சம் சகிப்புத்தன்மை வேண்டும் தான் போல.................😜.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.