ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: பெல்ஜியம் ரஷ்யாவின் மிகவும் மதிப்புமிக்க சொத்தாக மாறியது எப்படி
Everything posted by ரசோதரன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்கு ஐஸ் ஹாக்கிப் பக்கம் வேறு எவரும் போவது கிடையாது....... வீட்டுக்கு மிக அருகில் ஒரு ஐஸ் ஹாக்கி பயிற்சி செய்யும் இடம் இருக்கின்றது, நான் இதுவரை ஒரு தடவை கூட அதன் உள்ளே போனதேயில்லை................. இங்கு எல்லா விளையாட்டுகளிலும் அடிகள் விழும். இந்த வாரம் சுய ஆக்கத்தில் இதனை அடிப்படையாக வைத்து ஒரு கதை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். இன்னமும் எழுதவில்லை. அமெரிக்கன் ஃபுட்பாலில் இரக்கமே இல்லாமல் அடிப்பார்கள். இங்கு கால்பந்தாட்டத்தில் கூட அடி செமையாக விழும். வாலிபாலில் லிபரோ என்று ஒருவர் விளையாடுவார். மிகவும் உயரம் குறைந்தவராக, வேறு ஒரு நிறத்தில் பனியன் போட்டிருப்பார். எதிர் அணியின் ஒவ்வொரு அடிக்கும் தரையோடு தரையாக உருண்டு பிரள்வார்............. 'இது யார் பெற்ற பிள்ளையோ...........' என்று பார்க்கின்றவர்கள் பாரிதாப்படுவார்கள்...............🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............ 'ஒரு மண்ணும் ஒழுங்காகத் தெரியாது..................' என்பதற்கான சொல் தான் சகலகலாவல்லவன் போல ....... மெல்லிய, வாடிய, வளர்ச்சி குறைந்த ஒரு எலிஃபண்ட் என்று அனுமானத்தை மாற்ற முடியுமா...........🤣. இங்கு நாட்டு நிலைமை அவ்வளவு நல்லா இல்லை. ரியல் மாட்ரிட் விளையாட்டுக் கழகத்தின் சின்னத்தை பச்சை குத்தியிருந்த ஒருவரை நாடு கடத்திவிட்டார்கள். அவர் ஏதோ ஒரு ஆயுதக் குழுவினரைச் சேர்ந்தவர் என்று, அது தான் அந்த பச்சையாம் என்று........🫣 எலிக்கு சோடியாக நான் வழமையானதை எழுதாமல், பதிலாக எலிஃபண்ட் உள்ளே வந்த கதை இதுதான்...............🤣
-
பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
'எல்லோர் சார்பிலும் நான் மன்னிப்புக் கேட்கின்றேன்..............' என்பது இந்த உலகில் இருக்கும் பெரிய பம்மாத்துகளில் ஒன்று................🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
👍............ நாங்கள் இங்கு அமெரிக்க மேற்கு கரையில் வருடாவருடம் ஒரு போட்டியும் நடந்துகின்றோம். இருபது வருடங்களாக போய்க் கொண்டிருகின்றது. அமெரிக்க மேற்கு கரையின் பல இடங்களிலிருந்தும் நம்மவர்கள் வருவார்கள். எப்போதும் September Labor Weekend இல் தான் இந்தப் போட்டிகளை நடத்துகின்றோம். இந்த தடவை லாஸ் ஏஞ்சலீஸ்ஸில் இது நடக்கப் போகின்றது..... நீர்வேலியானும், நானும் நிற்போம். முன்னர் ஒரு தடவை ஈழப்பிரியன் அண்ணா வந்திருக்கின்றார். நீங்கள் முடிந்தால் வாருங்கள்..................
-
இறை குறைபடுமோ ? - சுப.சோமசுந்தரம்
❤️........................ குறைபட்ட இறையமைப்புகள் வாழ்க்கைகளில் நிறைவைக் கொடுப்பதேயில்லை, மாறாக அவை பல வாழ்க்கைகளை கெடுத்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், உலகெங்கும் இந்த குறைபட்ட இறையமைப்புகள் குறிப்பிட்ட சில பிரிவினர்களுக்கு அதிகாரங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அதனால் அவை ஊக்குவிக்கப்பட்டு, அதனூடாக இவை மனிதர்களிடையே அடுக்குகளையும், அழிவுகளையும் உண்டாக்குகின்றன. நரபலி, பலதாரங்கள் என்பன இன்று நாகரிக சமூகங்களால் ஒதுக்கப்பட்டவையாகிவிட்டன. இவை எந்த இறையமைப்பினதும் புதிய அறைகூவல்களால் ஒதுக்கப்படவில்லை, மாறாக மனிதர்களின் பொதுப்புத்தியில் ஏற்பட்ட மாற்றங்களால் மட்டுமே இவை இல்லாமல் ஆக்கப்பட்டன. இந்த வாரம் கூட தலைகளில் தேங்காய்களை அடித்து உடைக்கும் ஒரு திருவிழாவை தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தேன்.....................🫣.
-
பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
🤣................ இதை வாசித்த பின் எல்லாமே பம்மாத்துகளாகவே தெரிகின்றது.............. நானே ஒரு பம்மாத்து போலவும் தோன்றுகின்றது..................🤣. தலைவர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், இலக்கியவாதிகள்,...................... இப்படி பம்மாத்து விட்டுக் கொண்டிருக்கும் வரிசை மிக நீண்டது. நீங்கள் சொல்லியிருப்பது போலவே மக்களிடம் சில சந்தர்ப்பங்களில் இவர்கள் கையேந்தி நிற்க வேண்டியிருப்பதால், உண்மைகளை பூசி மெழுகி பம்மாத்துக் காட்டுகின்றார்கள். ஆனால் எலான் மஸ்க் இன்று இங்கு காட்டிக் கொண்டிருக்கும் பம்மாத்தும், அதற்கு மக்கள் அவருக்கு காட்டிக் கொண்டிருக்கும் எதிர் விளைவுகளும் புதியதொன்றாக வரலாற்றில் நிற்கப் போகின்றது........ பெரியார் போன்ற வெகு சிலரை விட, மற்ற எல்லோருக்கும் மக்கள் ஆதரவு தேவை என்பதை மஸ்க் மறந்து போனார்............🤣. சமீபத்தில் நடந்த பம்மாத்துகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில மக்களை விஜய் அவரின் பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து நிவாரணம் வழங்கியது உச்சமான ஒன்று. விஜய் சொன்ன காரணம்: நான் அங்கு வந்தால் உங்களுடன் உட்கார்ந்து ஆறுதலாக பேசமுடியாது. நீங்கள் இங்கு வந்ததால், நாங்கள் மிகவும் சாவகசமாகப் பேசலாம்...............🫣. அண்ணாமலையின் சவுக்கடி இன்னொரு சிரிப்பு பம்மாத்து.................. ஈழத்திலும் பம்மாத்துக்கு குறைவில்லை. அர்ச்சுனா தினமும் பம்மாத்துக் காட்டுவார். சுமந்திரன், சிறிதரன், அவர்களின் ஆதரவாளர்கள் என்று பம்மாத்துக்கு எந்தக் குறைவும் இல்லை.............. என்ன, இவர்கள் வெறும் பம்மாத்துகள் என்று மக்களுக்கு தெரிந்து விட்டது தான் இந்தப் பம்மாத்துகளுக்கும், அண்ணா போன்றோரின் மக்கள் நலன் நோக்கிய பம்மாத்துகளுக்கும் இருக்கும் வித்தியாசம்...............
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போகின்றோம் பிரபா................ நீங்களும் அங்கு வருகின்றீர்களா....... வீடுகளில் எல்லோரும் எலிகள் தானே, அல்வாயன்.............. வெளியில் தான் எலிஃபண்ட்......🤣.
-
வணக்கம்
வணக்கம் செழியன். உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன்!!
-
பார்த்தீனியம்
இந்த தகவல்களை நான் முன்னர் அறிந்திருக்கவில்லை, நிழலி.................👍. 2016ம் ஆண்டே தமிழ்நதி இந்த நாவலை வெளியிட்டு விட்டார் என்று இருக்கின்றது. ஆனாலும், இன்று தான் அவரையும், அவரின் எழுத்துகள் பற்றியும் கேள்விப்படுகின்றேன்........ தமிழ்நாடு என்னை/எங்களை முழுங்கிவிட்டது...............🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣........... ஒரு கை உடைந்து போனால் என்ன, அடுத்த கை இருக்குதே என்று அதையும் உடைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்.................😜. போன வருடம் வாலிபாலில் இடது முழங்கால் சில்லு வெடித்தது. எக்ஸ்ரே எடுத்த போது, செலவு ஒன்று தான் வலதுகாலையும் எடுப்போம் என்று சொன்னார்கள். சரி என்று நீட்டி நிமிர்ந்து படுத்திருந்தபடியே மெதுவாக தலையை ஆட்டினேன். இடக்கால் வெடிப்பை உறுதி செய்த மருத்துவர், வலக்கால் எப்படி இருக்கிக்கின்றது என்று பார்த்தார்........ வலக்கால் சில்லு ஏற்கனவே வெடித்து, ஆனால் இப்ப ஒட்டியிருக்கின்றது என்று சொன்னார்.......🫢. அன்று வீட்டில் என்னை மிதிக்காமல் விட்டதே பெரிய விசயம்.........🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நன்றி கந்தப்பு. ஒன்றைத் தெரிவு செய்கின்றேன்..................👍. 🤣....... நூற்றுக்கு நூறு எடுக்கப் போகின்றனோ என்று கொஞ்சம் சங்கடமாக இருந்தது.................. அது தான் ஒரு கேள்வியை அப்படியே விட்டனான்....................🤣. @கிருபன் என்னுடைய Fair Play Award தெரிவு CSK.................. சிரமத்திற்கு மன்னிக்கவும்.
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் என்னுடைய ஆழ்நத அனுதாபங்கள், நெடுக்காலபோவான். தந்தையின் ஆன்மா அமைதியுடன் ஓய்வடைய வேண்டுகின்றேன்......................🙏.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
64 வது கேள்விக்கு RCB எனது தெரிவு. Fair Play Award அது NO Team என்றே இருக்கட்டும்........... 🤣. மிக்க நன்றி கிருபன்.
-
மனிதச்சிலந்தி / சிலந்தி மனிதன்?
பின்னிய இழைகளை உணர்ந்து அறுத்தாலும், சிலந்திக்கு ஏதோ பிரச்சனை போல என்று சொல்லி விடுவார்கள் போல.............🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் PBKS புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் GT வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RR ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் GT திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் DC வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் GT சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் PBKS ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் MI திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RR வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் DC சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் DC புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RR வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் PBKS ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RR ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் DC வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RCB சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் KKR ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் MI ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் GT திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் LSG வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் SRH குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK MI RCB SRH குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) MI #2 - ? (3 புள்ளிகள்) CSK #3 - ? (2 புள்ளிகள்) RCB #4 - ? (1 புள்ளி) SRH குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! PBKS "செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team" MI "புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team" RCB "வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator" RCB "ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2" RCB இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RCB இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PBKS இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Varun Chakravarthy இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Rohit Sharma இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Varun Chakravarthy இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) NO Team
-
முழிக்கும் மொழி
கே.பி. ரத்நாயக்க போன்றோர் படித்திருக்கின்றார்கள், அண்ணா. இவை யாவும் ஆங்கில மொழிக் கல்வி இருந்த காலத்திலேயே நடந்தவை என்று நினைக்கின்றேன். ஹாட்லியில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதி இருக்கின்றது. அங்கே தனியாகவே இவர்கள் தங்கியிருக்கக்கூடும். இந்தப் பாடசாலை ஒரு காலத்தில் கல்விக்கு மட்டும் இல்லாமல், கடுமையான ஒழுக்க விதிகளை கொண்டதாகவும் இருந்தது. சில மிகப் பழைய அதிபர்களின் பெயர்களை உச்சரிக்கும் போதே ஒரு மரியாதையுடன் கூடிய பயம் தெரியும், உதாரணம்: அதிபர் பூரணம்பிள்ளை. இதன் காரணமாகவே இங்கு வந்திருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். அன்று யாழ் நகரில் இருந்த எந்தப் பாடசாலையை விடவும் இங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்திருக்கக்கூடும், அதை பல பெற்றோர்கள் விரும்பியும் இருக்கக்கூடும். சுயபாஷா கல்விக் கொள்கை வந்த பின், இப்படி வந்தவர்கள் மிகக்குறைவு அல்லது முற்றாகவே இல்லை என்று நினைக்கின்றேன். 1970ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல்களாக வர ஆரம்பித்த பின் எந்தப் பாடசாலையுமே தப்பவில்லை. விதிவிலக்காக ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே பாடசாலைகளிலும் கவனமெடுத்து படிப்பித்தார்கள். இந்தக் காலத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து படிக்க வந்தவர்கள் தனியார் கல்வி நிலையங்களில், அதிலும் குறிப்பாக சில ஆசிரியர்களிடம் , படிக்கவே வந்தார்கள். பாடசாலைகள் அதே பழைய பெயர்களுடன் ஏனோ தானோ என்று இயங்கிக் கொண்டிருந்தன.
-
பார்த்தீனியம்
🙏......... நல்ல நெகிழ்வான தலைப்பும், அடக்கமும் தான், வில்லவன்............... 🤣............... அந்த இடமே சிதைந்து அழிந்து போகட்டும் என்ற நோக்கம் சிலருக்கு இருக்கும் போல, சுவி ஐயா.......
-
முழிக்கும் மொழி
🤣....................... சுவி ஐயாவிடம் பலப்பல அனுபவங்களும் இருக்கின்றன போல..............🤣. நீங்கள் சொல்லியிருக்கும் மூன்று வழிகளும் சிறப்பானவையே............ டன்னிங் க்ரூகர்.........................! ஐடியில் தேவையில்லாத ஆணிகளை கழட்டியும், அடித்தும் கொண்டும் இருக்கின்ற எங்களைப் போன்ற சிலர் கிடைக்கின்ற எல்லாவற்றையும் வாசித்துக் கொண்டு இருக்கின்றோம் போல.........🤣. நிறையவே வாசித்திருக்கின்றேன், வில்லவன்......... பாதிப்பும் நிறையவே இருக்கின்றது..............😜.
-
கிழவனை கண்டா வரச்சொல்லுங்க
❤️............... அப்படியே வந்தார் என்றால் முதலில் அந்த தடியுடன் நிர்மலா சீதாராமனிடம் கூட்டிப் போகவேண்டும். அந்த அம்மா பாராளுமன்றத்திலேயே அடியும் நுனியும் தெரியாமல் பேசுகின்றார். இணையத் தளங்களில் அடித்து விடப்படும் ஒற்றை வரிகளை பாராளுமன்றத்திலுமா, அதுவும் நிதி அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், அடித்து விடுவது...................🫣. அதற்கப்புறம் நிறைய பார்த்தீனியங்களை அவர் சுத்தப்படுத்த வேண்டும்............. இந்தச் சொல் அவரை விட்டுப் போகாது போல...............🤣.
-
பார்த்தீனியம்
👍........... இன்று ஓணாண்டியார் விஷச்செடி என்று ஒரு திரி ஆரம்பித்திருந்தார். அந்த திரியின் தொடர்ச்சி இது............. சீ. பார்த்தீனியம் அ. பார்த்தீனியம் T. பார்த்தீனியம் என்று என்னை/எங்களைச் சுற்றி மூன்று இருக்கின்றன.................🤣.
-
பார்த்தீனியம்
பார்த்தீனியம் பற்றி சிறு வயதில் ஒரு கட்டுரையை எங்கேயோ வாசித்திருந்தேன். இந்தப் பெயரே புதுமையாக இருந்தது, அப்படியே மனதில் அது ஒட்டியும் விட்டது. பின்னர் தான் இந்தச் செடியை/களையை அதன் பெயருடன் சேர்த்து அடையாளம் கண்டுகொண்டேன். இந்த ஆக்கத்தில் இன்றைய உலகில் இருக்கும் சில அரசியல்வாதிகளை பார்த்தீனியங்களாக உருமாற்றி விட்டுள்ளேன்.............
-
பார்த்தீனியம்
பார்த்தீனியம் ---------------------- கள்ளியும் முள்ளும் இருந்த வறண்ட நிலத்தில் பச்சையாக ஒன்று புதிதாக வந்தது பார்க்க அழகாகவும் படபடவென்று வளருதே என்றும் இன்னும் வளர்த்தனர் அதில் இருக்கும் முட்கள் அவை என்ன முட்கள் அவை வளர வளர போய்விடும் என்றனர் அதை வளர்த்தவர்கள் கெட்ட வாடை வருகுதே என்றால் ஆனால் பசுமையாக இருக்குதே இது நிலத்தை காக்கும் ஆடு மாட்டைக் காக்கும் இப்படி ஒன்று முன்னர் இருந்ததேயில்லை என்றனர் நாங்கள் மூக்குகளை பொத்தி விட்டால் அதன் வாடை அண்டாது என்றும் சொன்னவர்கள் வாய்களை அடைத்தனர் கள்ளியும் முள்ளும் காணாமல் போனது பச்சை செடியின் சாதனை ஆனது பரந்து வளர்ந்த பச்சை செடி விஷத்தை கொட்டிக் கொட்டி வறண்ட நிலத்தை இன்னும் கெடுத்து அருகில் வருபவற்றை முள்ளாலும் கிழித்து கெட்ட வாடையை பரப்பி சீரழித்துக் கொண்டே இருக்கின்றது இதுவரை மூக்குகளை மூடிக் கொண்டு இருந்தவர்கள் இனி கண்களையும் மூட வேண்டியது தான் விஷத்தை முளையிலேயே கிள்ளாமல் எத்தனை தடவைகள் தான் தவற விடுவது.
- Parthenium.jpg
-
கண் கண்ட தெய்வம்
🤣................ முன்வரிசைகளில் இருப்பதற்கு மிகத் தெளிவான சில காரணங்களே உண்டு: உயரம் அல்லது முன்னரே ஒதுக்கப்பட்ட இருக்கை, கண் பார்வையின் திறன், எதிலும் கவனமெடுக்கும் ஆர்வம் போன்றன.............. ஆனால் பின்வரிசைகளில் இருப்பதற்கு பின்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை வைத்திருக்கின்றார்கள் போல............