Everything posted by ரசோதரன்
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
திராவிடம், தமிழ்த்தேசியம், தனித்தமிழ், பிராமணீயம், இந்துத்வா, முற்போக்கு என்று தமிழ்நாட்டில் இருக்கும் எந்தப் பிரிவும் இந்தச் சண்டையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு கருத்தையும் வைக்கவில்லை. மாறாக இந்தியாவின் மத்திய அரசுக்கு முழு ஆதரவையும், பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தையும் எல்லோரும் முன்னின்று நடத்தினார்கள். முழு இந்தியாவிலுமே இது தான் நிலைமை. இந்தியா என்றுமே உடையாது. பெரும்பாலான ஈழத்தமிழர்களுக்கு இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடே இந்தியா, இந்தியன் என்று ஒரே குரலில் முழங்கியது ஈழத்தமிழர்களுக்கு பெரிய ஏமாற்றம். கடஞ்சா அடிக்கடி சொல்லும் யதார்த்தம் இது தான்...............🤣. அவர்கள் முதலில் எப்போதும் இந்தியர்கள். நாங்கள் ஈழத்தமிழர்கள் அவர்களுக்கு இடையிடையே அவர்களின் உள்ளூர் அரசியலுக்கு, சமூக ஊடக வருமானத்திற்கு தேவைப்படும் சிறு ஆயுதங்கள். தமிழ்நாட்டு தலைவர்களின் நேற்றைய முள்ளிவாய்க்கால் நினைவு நாள் பத்திரிகை அறிவுப்புகள் போல. உலகெங்கும் இருக்கும் ஒவ்வொரு ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கையும் தமிழ்நாட்டுடன், இந்தியாவுடன் எப்படி இணைந்திருக்குது என்று பார்த்தால், எங்களின் உழைப்பில் ஒரு பகுதியை இந்தியாவுக்கு நாங்கள் தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டிருப்பது தெரிகின்றது. நாங்கள் கேரளா போனால் என்ன, காசிக்கு போனால் என்ன, அவர்களின் சினிமாக்களை, தொலைக்காட்சி நிகழ்வுகளை விடாமல் பார்த்தால் என்ன, அவர்களின் கிரிக்கெட்டைப் பார்த்தால் என்ன, ஆடை அணிகலன்கள், பண்ட பாத்திரங்கள், உணவுப் பொருட்கள், இந்தியாவில் வீடு வளவுகள் முதலீடுகள்................. இந்தியாவும், தமிழ்நாடும் இல்லையென்றால் எங்களின் பல வீடுகளே வெற்றிடம் ஆகிவிடும் போல............................ ஆபிரிக்க தேசங்கள் கூட ஒரு நாள் முன்னேறிவிடும். ஆனால் பாகிஸ்தான் என்றும் முன்னேறாது. மாறி மாறி இராணுவ ஆட்சிகளும், பல பிரதேசங்களில் இருக்கும் ஆயுத குழுக்களின் ஆட்சிகளும், அடக்குமுறைகளும் அந்த தேசத்தை ஒரு இம்மியளவு கூட முன்னேற விடப்போவதில்லை. சீனாவும், இந்தியாவும் மக்கள் தொகையிலும் மற்றும் விவசாய உற்பத்திகளும் தவிர்த்து வேறு எந்த வகையிலும் ஒப்பிடப்பட முடியாதவை ஆகிவிட்டன. சீனாவின் சீரான தொழில்நுட்ப வளர்ச்சி சீனாவை அமெரிக்காவிற்கு அருகில் கொண்டு வந்து சேர்ந்திருக்கின்றது. இந்தியா ஒரு முட்டைக்கோது என்ற சந்தேகம் தான் இப்போது வலுத்திருக்கின்றது. ஆனால் பாகிஸ்தான் ஒரு உடைந்த முட்டைக்கோது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நீங்கள் அடிமடியிலேயே கைவக்கின்றீர்கள்.................🤣. வடக்கு - கிழக்கு - மலையகம் என்ற பிரதேச வேறுபாடுகள் இல்லாமல், இந்து - இஸ்லாம் - கிறிஸ்தவம் என்ற சமய வேறுபாடுகள் இல்லாமல், தமிழ் இனம் என்ற ஒற்றை அடையாளத்துடன் நாங்கள் பிரிந்து போக விரும்பினோம். அதுவும் கூட இலங்கைப் பெரும்பான்மை அரசால் சிறுபான்மை மக்களாகிய எங்களுக்கு தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வந்து அநீதிகளின் பின்னர் மட்டுமேயே. வடக்கு, கிழக்கு, மலையகம் என்றோ அல்லது இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்றோ உட்பிரிவுகளாக எங்களைப் பிரிக்க நினைப்பது எங்களை பலவீனமாக்கும் அல்லது அழிக்கும் செயல்கள் என்று தானே நாங்களும் மீண்டும் மீண்டும் சொல்லுகின்றோம். இலங்கை அரசோ அல்லது சர்வதேசமோ அப்படியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது இன்றும் கூட எங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கின்றோம். இந்த உட்பிரிவுகள் மூலம் பிரித்தாள்வது நியாயம் மற்றும் நல்லது என்று நீங்கள் சொல்வதைத்தான் நான் யதார்த்தம் இல்லை என்கின்றேன். இது நல்லது இல்லை, மாறாக இது ஒரு அடையாளத்தை சிதைக்கும்,அழிக்கும் திட்டமிட்ட ஒரு செயல். அடையாளம் என்பது மொழியாகவோ அல்லது சமயமாகவோ தான் இருக்க வேண்டும் என்றில்லை. நாடு, பிரதேசம் என்பவையும் அடையாளமே.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இதைத்தானே பிரதேச, சமூக முரண்பாடுகளை தோற்றுவிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் இந்திய அரசின் நடவடிக்கைகள் என்று நான் மேலே எழுதியிருந்தேன். இது எப்படி நியாயம் ஆகும்.............. காத்தான்குடியையும், அக்குறணையையும் மட்டும் பிரித்து ஒரு தன்னாட்சி பிரதேசமாக அறிவித்தால், அந்த இரு ஊர் மக்களும் அதை வரவேற்பார்கள் தான், ஆனால் அது நியாயமா................ 'யதார்த்தம்' என்ற சொல் எப்போதும் சில மலையாளப் படங்களை நினைவூட்டுகின்றது. அடூரின், அரவிந்தனின் மற்றும் இவர் போன்றவர்களின் படங்கள். சில வேளைகளில் அந்தப் படங்களை பார்ப்பது போலவே இருக்கின்றது உங்களின் எழுத்துகள்................. நமக்குத்தான் ஏதோ புரியவில்லையோ என்று சந்தேகம் வருகின்றது.................🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைய கிரிக்கெட் உலக நிலவரங்கள் மிகவும் நன்கு தெரிந்தவர்களில் சிலர் (நீங்கள், கந்தப்பு, வசீ, செம்பாட்டான்......... போன்றோர்) பட்டைக் கிடங்குக்குள் விழுந்து கிடப்பது தான் களத்திற்கு நல்லது. அதுதான் மற்றவர்களுக்கு ஒரு மோட்டிவேஷனைக் கொடுக்கும்.................😜.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣.................. ஒரு பச்சைத் தமிழனாக சென்னையின் பக்கம் நின்று கீழே போயிருக்க வேண்டும். ஏனோ சென்னையை விட்டுவிட்டேன். பங்களூரு கிளைமேட் தான் ஒத்து வருகின்றது....................🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவர்களைத் தாண்டி முன்னால் போக முடியாது போல இருக்குதே......... வீதியை மறித்துக்கொண்டு இரண்டு வாகனங்கள் போவது போல போய்க் கொண்டிருக்கின்றார்கள்............🤣.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஜம்முவும், காஷ்மீரும் பிரிக்கப்படவில்லையே. பௌத்த மக்கள் அதிகமாக வாழும் லடாக் பகுதி தானே காஷ்மீரிலிருது பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு எங்களுக்கு உதவியாக இருக்கின்றது மற்றும் இது எவ்வாறு ஜம்முவிற்கும், காஷ்மீருக்கும் நியாயமான ஒன்று என்றும் எனக்குப் புரியவில்லை. அன்றைய மன்னர்கள் வரிசையையும், ஆங்கிலேய ஆட்சியாளர்களையும் சில அடிப்படைகளாக தெரிந்துகொண்டு விட்டு, இன்றைய இந்தியா இன்றைய காஷ்மீரை என்ன செய்கின்றது என்று ஆராய்வது தான் பிரதானம். உலகில் எங்கென்றாலும் அன்றைய தரவுகளின் படி இன்று எப்படி உரிமையும், பங்கும் கோரமுடியும்.
-
டிரம்ப் வைச்சான் பாரு ஆப்பு இந்தியாவுக்கு.
வளசரவாக்கம் பகுதிக்கு முன்னர் போயிருக்கின்றேன், பையன் சார். நீங்கள் சொல்வதைப் போலவே அதை ஒரு குட்டி யாழ்ப்பாணம் என்றே சொல்கின்றனர். அகரமுதல்வனின் ஒரு சிறுகதையில் கூட இந்த இடத்தை பற்றி நல்ல ஒரு விபரிப்பு இருந்தது ஞாபகம். தமிழ்நாட்டிலும், முழு இந்தியாவிலுமே உணவுகளினதும், உணவும் பொருட்களினதும் விலைகள் மிகக்குறைவு. இவ்வளவு மக்களுக்கும் அவர்கள் எப்படி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றார்கள் என்பதே ஒரு வியப்பு தான். இந்தியாவும், சைனாவும் சில வகைகளில் பெரிய அதிசயங்கள். திருச்சியிலும் ஓரிரு பகுதிகள் இவ்வாறானதே. ஶ்ரீனிவாச நகர், அம்மையப்ப நகர் என்பன எம் மக்களால் நிரம்பி வழிகின்றன. குட்டி யாழ்ப்பாணம் என்பதை விட அவற்றை குட்டி வல்வெட்டித்துறை என்று சொல்லலாம். திருச்சியிலிருந்து சென்னை வரும் வழியில் என்று நினைக்கின்றேன். பிரதான வீதியின் அருகே நடிகர் ராஜேஷின் ஒரு உணவகம் இருந்தது. மிகவும் எளிமையான ஒரு அமைப்பாக, ஆனால் அருமையான சாப்பாடு அங்கே கிடைத்தது. விலையும் கட்டுப்பாடாகவே இருந்தது. அங்கே ஏழு நட்சத்திர விடுதிகள், ஐந்து நட்சத்திர விடுதிகள் என்றும் இருக்கின்றன. நான் போனதில்லை. அங்கே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனித்தனியே கட்டணம் அறவிடுவார்கள் போல. ஐந்து நட்சத்திரம் என்றால் ஐந்து மடங்கு விலை...............🤣. தட்டுக்கடை, ஈரோடு மெஸ், முணியாண்டி, கண்ணப்பர்,...................இப்படி ஆயிரம் இடங்கள் இருக்கின்றன அங்கே.........................👍
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஆங்கேலேயர்கள் வெளியேறிய பின், காஷ்மீரின் பகுதிகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி இந்தியாவுடனும், மறு பகுதி பாகிஸ்தானிடனும் இணைக்கப்பட்டது சரியல்ல என்பதே என் பார்வையாக இருக்கின்றது. அந்தக் காலப்பகுதிகளில் இப்படியான ஒரு தீர்வு வெவ்வேறு காரணங்களுக்காக உலகின் வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதாவது ஒரு நாட்டை இரண்டாகப் பிரித்து தனித்தனியேயான இரு நாடுகளாக ஆக்கிவிடுதல். ஆனால் காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு வேறு இரு நாடுகளுடன் அவை இணைக்கப்பட்டன. அந்த நாட்டையும், மக்களையும் சுதந்திரமான ஒரு நாடாகவே விட்டிருக்க வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன். பெரும்பாலான பகுதிகளில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மை ஆகவும், ஒரு பகுதியில் இந்துக்கள் பெரும்பான்மை ஆகவும், இன்னொரு சிறிய பகுதியில் பௌத்த மக்கள் பெரும்பான்மை ஆகவும் இருப்பது ஒரு பிரச்சனை அல்ல. அவர்கள் ஒரு நாடாகவும், அதற்குள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களாகவும் தங்கள் நிர்வாகத்தை உருவாக்க ஐநாவும், இந்தியாவும், பாகிஸ்தானும் உதவியிருக்கலாம். இன்றைய பாஜக அரசின் பிரச்சாரங்களும், செய்கைகளும் முழு இந்தியாவையுமே ஒரு ஒற்றைப்படைத் தன்மையை நோக்கியே செலுத்துகின்றது. இந்த இந்திய அரசும், அதன் பின் நிற்பவர்களும் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை காவி அடையாளத்தை போர்த்தவே முனைகின்றார்கள். மிகச் சாதரணமாக திருவள்ளுவருக்கே காவி உடையை அணிவித்து விடுகின்றார்கள் இவர்கள். உலகத் திருமறை என்று ஐயன் எழுதியது பலவும் அப்படியே வீணாகிப் போகும் இவர்களின் செயலால். வரலாற்றில் அது ஒரு இந்து அரசாக இருந்தது, பின்னர் முகலாயர்களே அதை ஒரு பெரும்பான்மை இஸ்லாமிய பிரதேசமாக மாற்றினார்கள், இப்போதும் மீண்டும் அதை நாங்கள் வென்றெடுப்போம் என்ற முனைப்பு தவறு என்றும் சொல்கின்றேன். அவர்களின் அரசியலை அந்த மக்களே தீர்மானிக்கவேண்டும். அங்கு நடைபெறும் இந்திய ராணுவ அடக்குமுறைகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. இவர்களின் அடக்குமுறைகளுக்கு நாங்களும் ஒரு வாழும் சாட்சிகள். எவ்வளவு தான் தொழில்நுட்பமும், தொடர்பாடலும் முன்னேறினாலும், இவர்களால் என் ஊரில் நடத்தப்பட்டவையே என் ஊருக்கு வெளியே தெரியாத நிலைதான் இன்றும் நீடிக்கின்றது. அங்கிருந்தே இவர்கள் காஷ்மீரில் செய்யும் கொடுமைகளை நான் ஊகித்துக் கொள்கின்றேன். 2019ம் ஆண்டில் அந்த மக்கள் மீது முழுத் தடை ஒன்றை இந்திய அரசு அமுல்படுத்தியது எல்லோருக்கும் தெரிந்ததே. அது அப்பட்டமான உரிமைகள் மீறலும், அடக்கி ஒடுக்கப்படுவதும் தானே. இலங்கை அரசு எங்களுக்கு செய்தது போன்றதே இதுவும். வெறும் கண்டனங்களை மட்டும் உலகம் எழுப்பும், பாதிக்கப்படும் மக்களுக்கு கைகொடுக்க எவரும் வருவதில்லை. ஒரு மாநிலமாக இருந்த காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிக்கப்பட்டுவிட்டது. எங்களின் வடக்கு, கிழக்கை பிரித்ததும், பிரதேச/சமூக முரண்பாடுகளை தூண்டி விட்டதும், இதுவும் அடிப்படையில் ஒரே செயல்கள்.
-
டிரம்ப் வைச்சான் பாரு ஆப்பு இந்தியாவுக்கு.
இப்பவே அங்கே இந்த விலையா.....................🫢. இங்கு ஆயிரம் டாலர்களே அதிகம் என்று, ஆப்பிளுக்கு பதிலாக கொய்யாக்காய், கோவைக்காய் என்று ஏதோ ஒன்றைச் சந்தையில் வாங்கிக் கொண்டிருக்கின்றேன்.............🤣. வீடு புகுந்து பகல் கொள்ளை அடிப்பது போல இந்த நிறுவனங்கள் நடந்து கொள்கின்றன. மக்களும் இவர்களிடம் மாட்டுப்பட்டுவிட்டார்கள்........................
-
டிரம்ப் வைச்சான் பாரு ஆப்பு இந்தியாவுக்கு.
ஆப்பிள் நிறுவனத்தில் சீனா, தாய்வான், இந்தியா ஆகிய நாடுகளில் பணிபுரியும் நன்கு பயிற்சி பெற்ற தொழில்நுட்பவியலாளர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சங்கள் என்று ஒரு புள்ளிவிபரம் இருக்கின்றது. அமெரிக்காவில் இருக்கும் இந்த வகையான மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கையே இரண்டரை லட்சங்கள் தான். அவர்களின் ஊதியமோ பல மடங்குகள். இன்று ஆயிரம் டாலர்களாக இருக்கும் ஒரு ஐஃபோன் இங்கு அமெரிக்காவில் செய்யப்பட்டால் அதன் விலை 2500 டாலர்கள் ஆகும் என்கின்றனர். கணிதமும், விஞ்ஞானமும் படிப்பதென்றாலே மேசைக்கு கீழே குனிந்து மறைந்து ஓடும் நிலை தான் அமெரிக்காவில் இருக்கின்றது. இன்று ஒரு மாற்றம் ஆரம்பித்தால் கூட, இன்னும் சில தலைமுறைகள் போக வேண்டும் ஆப்பிள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை இங்கே உருவாக்கிக் கொள்ள. அமெரிக்காவில் இருக்கும் பல நிறுவனங்களின் நிலை இதுதான். அமெரிக்க அதிபர் 'வெதர் ரிப்போர்ட்' போல தினமும் ஒன்று சொல்வார். அவற்றை அவ்வளவாகக் கணக்கில் எடுக்காமல், பெரிய பல்தேச நிறுவனங்கள் சீனா, தாய்வான், இந்தியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மெக்சிக்கோ என்று அவர்களின் பொருட்களின்/சேவைகளின் உற்பத்தி தளங்களை உருவாக்கவேண்டும். ஏற்கனவே இதையே தான் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நன்றி கடஞ்சா. ஒரு காலத்தில் இவர்கள் பற்றி நிறையவே வாசித்திருக்கின்றேன். தொடர்ந்து வாசித்துப் பார்க்கின்றேன். சிலவற்றை வாசிக்கும் போதே அவை பிரதானமாக ஒரு பக்கசார்பான பிரச்சாரங்கள், பரப்புரைகள் என்று தெரிந்துவிடும். தரவுகளற்ற தகவல் குவியல்களாக, அனுமானங்களாக அவை இருக்கும். உலகில் சில நாடுகளில் நடப்பவை மிகக்குறைவாக வெளியே தெரியும். சீனா, ரஷ்யா, வட கொரியா, மியான்மார், பாகிஸ்தான் என்பன சில உதாரணங்கள். அவர்களின் அரசியல் அப்படிப்பட்டது. ஆதலால் பாகிஸ்தான் பக்கம் இருக்கும் காஷ்மீர் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியே தெரிவதில்லை என்பதில் மாற்றுக் கருத்தும், ஆச்சரியமும் இல்லை. ஓரளவாவது ஜனநாயகமும், உரிமைகளும் உள்ள நாட்டில் வெகு சிலராவது கேள்விகளை கேட்பார்கள்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
பையன் சார், 90 வீதம் என்றால் இங்கு அமெரிக்காவில் அநேக வகுப்புகளில் A- மட்டுமே கிடைக்கும். A+ எடுக்க வேண்டும் என்றால் 95 வீதத்திற்கு மேல் வரவேண்டும். இன்னும் ஒரு ஆறு வீதத்தை எப்படி எடுக்கலாம் என்று யோசிக்கின்றேன்..................🤣. இரு நாடுகளையுமே பலரும் பொய்யர்கள் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். இதில் போதாக்குறைக்கு அதிபர் ட்ரம்ப் வேற அவருடைய கனவுகளையும், நினைவுகளையும் நிஜமாகவே நடந்த நிஜங்கள் என்று விளங்கி கதைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றார். வயது நல்லாப் போகப்போக இப்படியான ஒரு தடுமாற்றப் பிரச்சனை வருவது சாதரணமே............... தமிழ்நாட்டில் அமைச்சர் துரைமுருகன் இன்னொரு உதாரணம்.................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
கடஞ்சா, நீங்கள் இப்படி சொல்வதற்கு ஆதாரங்கள் ஏதாவது இருக்கின்றனவா? பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு காஷ்மீருக்கு மட்டும் இருந்த சிறப்பு உரிமைச் சட்டங்களை (சட்டம் 370 மற்றும் 35A) நீக்கியதற்கான பிரதானமான காரணமாக இந்திய ஒருமைப்பாட்டையும், காஷ்மீரினூடாக முழு இந்தியாவிற்கும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு/பயங்கரவாத பிரச்சனைகளையுமே காரணங்களாக முன்வைத்தது. ஒரு தேசத்துக்குள் இரண்டு தேசங்கள் இருக்க முடியாது என்பதே பாஜகவினதும், இதை ஆதரித்த இந்திய மக்களினதும் நிலைப்பாடாக இருந்தது. இந்திய ஒன்றிய அரசின் இந்த முடிவை பல தமிழர்களும் ஆதரித்தார்கள். பலரினதும் பார்வையில் ஒரு பொதுவான இஸ்லாமிய வெறுப்பு மட்டுமே இருந்தது. ஒரு வரலாற்றுப் பார்வை அல்ல. இன்று இதே போன்று தான் எம் மக்களிடையே இந்தியாவிற்கு எதிரான, பாகிஸ்தானிற்கு ஆதரவான பார்வையும் உள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் இருக்கும் தேச வழமைச் சட்டம் போன்ற கூறுகளும் இங்கே சிறப்பு உரிமைகளாக இருப்பதால், காஷ்மீர் மக்கள் தவிர்ந்த ஏனையோர் அங்கு நிலம் வாங்க முடியாது. காஷ்மீரின் அபிவிருத்தியை இது தடுக்கின்றது என்ற பொருளாதாரக் காரணியும் சொல்லப்பட்டது. இந்தச் சிறப்புச் சட்டங்கள் நீக்கப்பட்ட பின், காஷ்மீர் அபிவிருத்தி அடைந்து உள்ளதா? காஷ்மீரிய மக்கள் தாங்கள் இந்தியர்கள் என்று இப்போது சொல்கின்றார்களா? ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின், அன்று பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பயந்தே அன்றைய சுதந்திர நாடான காஷ்மீர் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தங்களே இந்த சிறப்பு உரிமைகள். இன்று அவர்களுக்கு இரு பக்கங்களாலும் நெருக்கடிகளைத் தவிர வேறு எதுவுமே இல்லை. எனக்கு ஒரு காஷ்மீரிய குடும்பம் நல்ல நண்பர்களாக இருக்கின்றார்கள். இந்துக் குடும்பம். எங்களுக்கு இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம், எங்களைத் தனியே விட்டுவிடுங்கள் என்று தான் அவர்கள் சொல்லுகின்றார்கள். ஏனைய காஷ்மீர் மக்களின் அபிப்பிராயம் எனக்குத் தெரியாது, ஆனால் என்னுடைய அபிப்பிராயமும் இதுவே.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
நாளாக நாளாக இந்தக் கேள்வி தான் பிரதானமாக ஆகின்றது. எங்கள் நாட்டில் நடந்த ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் போலவே இவர்கள் சொல்லும் கதைகள் எதுவும் பொருத்தமாக இல்லை. இந்த தாக்குதல்களைச் செய்தவர்களைப் பற்றிய தகவல்கள் உண்மையிலேயே இந்திய அரசுக்கு தெரியாது என்றால், இந்தியாவின் உளவுத்துறையை முதலில் உடனடியாக சீரமைக்க வேண்டும். ரஃபேல் விமான விடயத்தை பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
அகண்ட பாரதம், அகண்ட அமெரிக்கா, அகண்ட ரஷ்யா, அகண்ட சைனா................. இப்படி பெரியவர்கள் எல்லோருமே அகலப் போகின்றோம் என்று அடம் பிடித்தால் யார் தான் இங்கே ஒடுங்கிப் போவது........... பாகிஸ்தான், கனடா, உக்ரேன், தாய்வான் இவர்கள் ஒடுங்கி ஒதுங்க வேண்டுமா...... கூட்டத்தின் உரு குறைந்தால் அல்லது இறங்கினால், உடுக்கும் அடித்து, இன்னும் கொஞ்ச சாம்பிராணி புகையும் போடுவது போலவே இந்தப் பேச்சு.............
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியாவில் டிக்டாக் கிடையாதா................ எனக்கு இது தெரியாது, பையன் சார். அதற்கு ஈடாக அவர்கள் வேறு ஏதாவது வைத்திருப்பார்கள் போல. ரீல்ஸ் என்றும் ஒன்று இருக்கின்றது தானே............. நான் இதுவரை ஒரு டிக்டாக் வீடியோ தன்னும் என் வாழ்நாளில் பார்க்கவில்லை என்று தான் நினைக்கின்றேன். யூடியூப்பில் 'கோலமாவு கோகிலா' போன்ற படங்களின் காமடிக் காட்சிகளையும், ராஜா சாரின் பாடல்களையும் இடைக்கிடை இரவுகளில் பார்ப்பேன். மற்றபடி வேறு எதுவும் இல்லை. பிரான்சின் ரஃபேல் போர் விமானத்தை விட நான் பழசாகவே இருக்கின்றேன் போல........... அப்படியே இருக்கட்டும். மேலும் இந்த வகையான ஊடகங்கள் மீது எனக்கு துளியும் நம்பிக்கை கிடையாது. தெறித்துப் பறக்கும் பரபரப்பான தலைப்புகளை பார்த்தாலே சிரிப்பு தான் வருகின்றது. இதைச் செய்பவர்கள் ஏதோ தங்களின் வயிற்றுப்பாட்டுக்கு, வாழ்க்கையை கொண்டு செல்ல இதை ஒரு தொழிலாக செய்கின்றார்கள் போல. சில மாதங்களின் முன் ஒரு கணவனும், மனைவியும் தங்களின் யூடியூப் தளத்திற்கு போதிய ஆட்கள் வரவில்லை என்று தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தியை பார்த்து மிகவும் கவலைப்பட்டேன். மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும் மிகமுக்கிய வேறுபாடுகளில் ஒன்று வாசிக்கும், அதை கிரகிக்கும் இயல்பு. தமிழர்களிடையே வாசிக்கும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது. இப்பொழுது இந்தக் காணொளி ஊடகங்கள் இந்த நிலையை இன்னும் சிக்கலாக்கி விடும் போல.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
🤣.................. போர் விமான நிறுவனத்தையே பங்குச்சந்தை சுட்டு விழுத்தி விட்டுவிடும் போல........... உலகில் இந்தப் பங்குச்சந்தை மட்டும் இல்லாவிட்டால், எங்களின் தலை ட்ரம்ப் என்ன ஆட்டம் ஆடியிருப்பார்.............🤣.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
காஷ்மீரில் உல்லாசப் பிரயாணிகளின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் எத்தனை பேர்கள் வந்தார்கள், எங்கிருந்து உள்ளே நுழைந்தார்கள், பின்னர் எவ்வாறு வெளியேறினார்கள், அவர்கள் இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு இந்திய அரசு இன்னமும் விடைகள் சொல்லவில்லை. எத்தனை ரஃபேல் யுத்த விமானங்களை இழந்தார்கள் என்று இந்தியா இன்னமும் சொல்லவும் இல்லை. சண்டையில் இழப்பு என்பது தவிர்க்க முடியாதது என்றும், தங்களின் விமானிகள் எல்லோரும் பத்திரமாக திரும்பி விட்டார்கள் என்றுமே இதுவரை உத்தியோக பூர்வமாக சொல்லியுள்ளார்கள். விமானங்கள் விழுந்தும், விமானிகள் திரும்பியும் உள்ளார்கள் என்று தான் சொல்ல வருகின்றார்கள் போல. ரஃபேல் எப்படித் தாக்கப்பட்டது என்பது தான் இந்தியா - பாகிஸ்தானுக்கு வெளியே இருக்கும் முக்கிய கேள்வி. சீனாவின் ஜே - 10 யுத்த விமானமே ரஃபேலை ஆகாயத்திலிருந்து ஆகாயத்திற்கு ஏவும் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்தியது என்றால், இனிவரும் பெரும் போர்களில் ரஃபேலின் பயன்பாடு முடிந்து விட்டது என்று அர்த்தம். இந்திய விமானிகளிலும், அவர்களின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளிலும் கூட தவறேதும் இருந்திருக்கலாம். 'வாளில் தவறு இல்லை. வீரனில் தான் தவறு...............' என்பது இன்றைய அதியுயர் தொழில்நுட்ப காலத்துக்கும் அப்படியே பொருந்துமா என்று தெரியவில்லை. ஆனால் பயிற்சியின் போது கூட அமெரிக்காவின் எஃப் - 35 விழுந்திருக்கின்றது. ரஃபேல் விழுந்தது கூட பயிற்சிக் குறைபாட்டால் கூட நடந்திருக்கலாம். விமானங்கள் விழுந்தும் விமானிகள் பத்திரமாக திரும்பியிருக்கின்ரார்கள் என்றால், விமானங்கள் தாக்கப்படுவதற்கு சில கணங்கள் முன் விமானிகளுக்கு தெரிந்து இருக்கவேண்டும். அப்படியாயின் இவர்களால் ஏன் எதிர்த்தாக்குதலை நடத்த முடியவில்லை என்ற கேள்வியும் இங்கே எழுகின்றது. ரஃபேல் போனால், இன்று அதற்கு மாற்றாக மேற்குலகில் இருப்பது அமெரிக்காவின் எஃப் - 35 மட்டுமே. எல்லாமே அமெரிக்கா எதிர் சைனா என்றே கடைசியில் வந்து நிற்கின்றது.
-
அமெரிக்கா – சீனா வர்த்தக உடன்பாடு: 115% வரி குறைப்பு
'பருத்தி மூட்டை குடோனுக்குள்ளேயே இருந்திருக்கலாம்.................' என்ற தமிழ்ச்சினிமா காமடி இது..................................🫣. தொழிற்சாலைகளை ஆரம்பித்து, உற்பத்திகளை உற்பத்தி செய்யப் போகின்றார்கள் என்று நினைத்தவர்களுக்கு, மீண்டும் கிடைக்கப் போவது 'Made in China' தான்................ இன்றைய உலகில் வேற தெரிவே இல்லை. உலகத்திற்கு அமெரிக்கா விமானம் செய்யும், சீனா ஊசி செய்யும், இந்தியா மனிதர்களை உற்பத்தி செய்யும்.....................
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
👍............... 2020ம் ஆண்டு இந்தியா வல்லரசாகும் இந்திய அரசியல்வாதிகளும், அவர்களை நம்பிய இந்திய மக்களும் ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலகட்டத்திலேயே என்னுடைய சில இந்திய நண்பர்கள் 3020ம் ஆண்டில் கூட தாங்கள் ஒரு வல்லரசாக வர முடியாது என்ற உண்மையை தெளிவாக காரணங்களுடன் சொல்லுவார்கள். சில மதிய இடைவேளைகளில் இரண்டாகப் பிரிந்து நின்று வாக்குவாதப்படுவார்கள். வட இந்தியா, தென் இந்தியா என்று உள்நாட்டில் இருக்கும் அபிவிருத்தி இடைவெளி ஒரு காரணம் என்றால், அபிவிருத்தி அடைந்ததாக சொல்லிக்கொள்ளும் தென் இந்திய மாநிலங்களில் இருக்கும் சமூகநீதியின் சீர்கேடான நிலைமை அவர்களை மேலே செல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக, தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களின் முன் மோட்டார் சைக்கிள் ஓடினார் என்பதற்காக பட்டிலியன இளைஞர் ஒருவரின் கைகள் அதே ஊரைச் சேர்ந்த வேறு சிலரால் வெட்டப்பட்டன. தமிழ்நாட்டிலேயே தினமும் இப்படியான கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றது. மற்றைய மாநிலங்களின் நிலை இதைவிடக் கொடுமை. இந்தியாவில் ஒரு சமச்சீரான முன்னேற்றம் வரும் என்ற நம்பிக்கை முற்றுமுழுதாக அற்றுப் போய்விட்டது. நேபாளத்தையும், இலங்கையையும், மாலதீவையும், பூட்டானையும் சுற்றிவர வைத்துக் கொண்டு இந்தியா அதன் வலிமை இது என்று நினைக்கின்றது. ஒன்றுமேயில்லாதா பாகிஸ்தானுடன் கூட ஒரு திட்டவட்டமான நடவடிக்கையை இந்தியாவால் நடத்த முடியாது. இந்த யுத்தத்தாலும், உடனேயே வந்த யுத்த நிறுத்தத்தாலும் இந்தியாவிற்கு கிடைத்ததோ அல்லது இந்தியா சாதித்ததோ ஒன்றுமேயில்லை. மாறாக, இன்னும் சில காலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மீண்டும் இந்தியாவிற்குள் புகுந்து இன்னொரு தாக்குதலை நடத்துவதைக் கூட இந்தச் சம்பவங்கள் எந்த வகையிலும் தடுக்கப் போவதுமில்லை.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
😌............ இல்லை பையன் சார், பொதுவெளியில் உரையாடுவதற்கும், கருத்துகளை பகிர்வதற்கும் என்று சில வரையறைகள் உண்டு. எங்களின் தனிப்பட்ட அல்லது ஒரு குழுவின் விருப்பு வெறுப்புகளின் காரணமாக, நாடுகள், மதங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் போன்றவற்றை அவமதித்தல் சரியல்ல என்றே எனக்குத் தெரிகின்றது.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
சர்வதேச நாணய நிதியத்தின் கடனில் மட்டும் தங்கியிருக்கும் பாகிஸ்தானால் ஒரு வார யுத்தத்தை நடத்துவதே முடியாத காரியம். அவர்களின் உள்நாட்டு அரசியல் நிலையும் மிகவும் தளம்பலாகவே தொடர்ந்தும் இருக்கின்றது. ஓரிரு வருடங்களின் முன் இலங்கையில் இருந்த அதே பொருளாதார நெருக்கடி பாகிஸ்தானில் சில வருடங்களாகவே இருந்து வருகின்றது. இம்ரானை சிறையில் அடைத்து விட்டு, பாகிஸ்தானில் ஒரு நிழல் இராணுவ ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இராணுவத் தளபதி அசீம் முனீர் தனது நிலையை தக்கவைக்க அங்கிருக்கும் தீவிரவாதக் குழுக்களின் தயவை நாடிக் கொண்டிருக்கின்றார். இது இந்தியாவிற்கு கிடைத்த நல்லதொரு சந்தர்ப்பம். ஆனால் வழமை போலவே இந்தியா இந்தத் தடவையும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தியக் குடியரசு தினத்தன்று டெல்லியின் வீதிகளில் தங்களின் இராணுவ பலத்தை ஊர்வலமாகக் காட்டுவதை விட வேறு எதையும் இந்திய இராணுவத்தால் சாதிக்க முடியுமா என்று தோன்றுகின்றது. நவீன ஆயுதங்கள் மட்டும் போதாது, அதை இயக்குபவர்களும் அதே அளவிற்கு முக்கியமானவர்கள் என்று தோன்றுகின்றது. இப்பொழுது சீனா இலகுவாக அப்படியே அருணாச்சல் பிரதேசத்தை இரவோடு இரவாக கைப்பற்றலாம். இந்தியாவில் யூடியூப்புகளும், சமூக ஊடகங்களும் மட்டும் சீனாவிற்கு எதிரான நடவடிக்கைகளை நடத்தும். எந்தப் போரும் அழிவைக் கொண்டுவரும். அத்துடன் சம்பந்தப்பட்ட நாடுகளை சில பல வருடங்கள் பின்னுக்கும் கொண்டு செல்லும். ஆனாலும் சில போர்கள் தவிர்க்கப்படக்கூடாதவை. கடந்த 2000 ஆண்டுகளில் 1500 வருடங்களுக்கு மேல் அந்நிய ஆட்சிகளின் கீழ் இருந்ததாலோ என்னவோ, இந்திய, இலங்கைச் சமூகங்களின் சுயமரியாதை சில இடங்களில் கேள்விக்குறியாக இருக்கின்றது. ஓரிருவர்களும், வெகு சில சந்தர்ப்பங்களும் மட்டுமே விதிவிலக்கு, உதாரணம்: எங்களின் தலைவரும் அவருடைய போராட்டமும். இந்தப் போர்நிறுத்த அறிவிப்பால் இந்திய, பாகிஸ்தான், ஈழத்தமிழ் யூடியூப்காரர்கள் வருமானத்தை இழக்கப் போகின்றார்கள். யூடியூப் நான் இதுவரை காலமும் நினைத்திருந்ததை விட மிகப் பெரும் ஒரு வியாதி என்று தெரிகின்றது. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இப்படியான பலவும் வந்து போயிருக்கின்றன. ஆதலால் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. வரும் சந்ததிகள் இதிலிருந்து பிழைத்துக்கொள்ளும்.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
இந்தியாவின் மத்திய அரசுக்கு, குறிப்பாக பாஜக அரசுக்கு, எதிராக இருக்கும் மாநில அரசுகளின் தலைவர்கள் மட்டும் இல்லாமல், அந்த எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இருக்கும் ஊடகங்கள் கூட இந்த விவகாரத்தில் இந்திய மத்திய அரசுக்கும், இந்திய இராணுவத்திற்கும் மிகவும் ஆதரவான கருத்துகளையே வெளியிடுவார்கள். அது தான் சரியும், முறையும் கூட. ஒரு போர்க் காலத்தில் எந்த மாநில நலன்களையும் விட நாட்டின் இறைமையும், ஒற்றுமையுமே பிரதானமானது. ஈழத்தமிழர்களுக்கும், இந்தியாவுக்கும் இடையில் ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்த போதும் இதையொத்த ஒரு கருத்தையே சில இந்திய தமிழ் மற்றும் தமிழரல்லாத நண்பர்கள் எனக்குச் சொல்லியிருந்தனர். விஜய்காந்த் கூட இப்படியான ஒன்றைச் சொன்னதாகப் பார்த்திருக்கின்றேன். ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியாவின் போக்கு, அது காட்டும் நெளிவுசுழிவுகள், அதன் தயக்கம் தான் யோசிக்க வைக்கின்றன. ஒரு பிராந்திய வல்லரசு என்றும், உலகின் பலமான ஒரு இராணுவ அமைப்பு தங்களிடம் உள்ளது என்றும் சொல்லும் இந்தியாவால் கொடுக்கப்படும் பதில் தாக்குதல்கள் மிக விரைவானதாகவும், பலமானதாகவும், கச்சிதமானதாகவும் இருக்கவேண்டும். இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் இஸ்ரேல், அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் அணுகுமுறை முற்றிலும் வேறாக இருந்திருக்கும். இந்த நாடுகள் செய்வது மிக அதிகமாக இருக்கும், ஆனால் வெளியிடப்படும் தகவல்கள் மிகக் குறைவாகவே இருக்கும். இந்தியாவின் பதிலடிகள் சமூக ஊடகங்களில் தான் அதிகமாக இருக்கின்றது, பாகிஸ்தானில் அல்ல.
-
ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்
ஜெய்ஷ் இ முகமது என்ற பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் பற்றிய ஒரு கட்டுரை இந்திய ஊடகங்களில் வந்திருந்தது. அந்தக் கட்டுரையை வாசித்த பின், இந்தியா எந்த வகையிலும் ஒரு போருக்கு தயாரான, ஆளுமை உள்ள நாடாகத் தெரியவில்லை. யாராவது இலங்கை போன்ற இளைத்தவர்கள் கிடைத்தால் மட்டுமே இந்தியாவால் மார்தட்டிக் கொள்ள முடியும் போல. மற்றபடி இந்திய அரசுக்கோ, ஊடகங்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ இது இன்னுமொரு சினிமாவே. இவர்கள் இப்படியே இருந்தால், யாராவது வந்து இவர்களை நொறுக்கித் தள்ளப் போகின்றார்கள்................🫣.