Everything posted by ரசோதரன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............. எங்க வீட்டு மருமகனும் அந்த அடுத்த மூனா வரிசையில் நிற்கின்றார்................. அவரும் கொஞ்சம் பின்னால் தான் நிற்கின்றார்............. [அடுத்த மூனா -- அடுத்த முதல்வர்]
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............ முதலில் வரிசையில் வந்து நிற்கவேண்டும்..................... அடுத்த மூனா ஆகின்றவர்களின் வரிசை சென்னையில் தொடங்கி செங்கல்பட்டு வரை நீண்டு கிடக்குது ஏற்கனவே................🤣
-
ஒரு முட்டை ஆயிரம் டாலர்
🤣............. வெளிநாடுகளில் தான் இப்படி போல.............. ஊரில் மனிதர்களுக்கு தான் சுதந்திரம் குறைவு............ விலங்குகள், பிராணிகள், பறவைகளுக்கு நல்ல சுதந்திரம் இருந்தது.............😜. நாய் நாயின் வேலையையும், கோழி கோழியின் அலுவலையும் தடங்கல்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டன............... ஊரிலும் நான் நிறைய லவ் பேர்ட்ஸ் என்று (தவறாக) சொல்லப்படும் parakeets வளர்த்தேன். இங்கு அமெரிக்காவிலும் வளர்த்தேன். ஊரில் ஒரு பெரிய கூட்டுக்குள் 50 க்கும் மேற்பட்ட குருவிகள், அவை முட்டைகள் போடுவதற்கு தேங்காய் மட்டையிலான சின்ன சின்ன கூடுகள் என்று இருந்தன. அநேகமாக எந்தச் சண்டையும் இல்லாமல், ஒவ்வொரு சோடியும் ஒரு தேங்காய் மட்டை கூட்டைப் பிடித்துக் கொண்டு இனிதே வாழ்ந்து வந்தன. இங்கு அமெரிக்காவில் கூட்டுக்குள் ஆரம்பத்தில் இரண்டே இரண்டு சோடிகள், இரண்டு முட்டைக் கூடுகள் இருந்தன. திடீரென்று சண்டை போட ஆரம்பித்தன. சண்டை என்றால் இரத்தம் ஓட ஓட இரண்டு பெண்குருவிகளும் புரண்டு புரண்டு சண்டை போட்டன. அப்புறம் இன்னுமொரு கூடு வாங்க வேண்டியதாகப் போய்விட்டது. இங்கு என்ன டிசைனோ...................🤣.
-
ஒரு காரின் கடைசி வாக்குமூலம்
இது என்னுடைய காரும், கதையும் தான்...............👍. அப்பவே வில்லவனுக்கு சொல்லியிருந்தேன். இதை எழுதும் போது நோக்கம் என்று விசேடமாக எதுவும் இருக்கவில்லை. ஆனால் அதிபர் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகளின் பின், இந்தக் காரையே திருத்தி திருத்தி இன்னும் நாலு வருடங்கள் ஓடலாம் என்றிருக்கின்றேன்.............................🤣.
-
இன்றைய அதிசயம்
உலகத்தில் இன்று நடப்பவைகள் எல்லாமே ஏற்கனவே நடந்த பழைய விடயங்களே என்று சொல்லப்படுவதும் உண்டு. இங்கு எதுவும் புதுமையில்லை, எதுவும் அதிசயமே இல்லை என்றும் அதற்கு ஒரு பொருள் வரும் போல....... இந்த வார விடுமுறையில் ஒரு நண்பர் வீட்டுக்கு போயிருந்தேன். அங்கிருந்து கிளம்பும் போது செக்கலாகிவிட்டது. இங்கு ஏற்கனவே கோடை காலம் வந்துவிட்டது. எங்கும் குருவிகளின் ஆட்சி தான். நண்பரின் வீட்டின் முன் ஒரு அடர்த்தியான, பெரிய மரம். அதன் உள்ளிருந்து கீச், கீச் என்று ஒரே அணுங்கல் சத்தங்கள். சிறு குருவிகள் நித்திரையாகும் முன் சில ஏற்பாடுகளை செய்துகொள்ளும். அப்போது இந்த அணுங்கல்கள் வரும். 'ஒரே குருவிகள் போல............' என்று நான் அண்ணாந்து பார்த்தபடியே நின்றேன். 'ம்............ இந்த மரத்தை வெட்டவேண்டும். இது பெரிசா வளர்ந்திட்டுது................' என்றார் நண்பர். அப்பொழுது தான் அந்த மரத்தை வடிவாகப் பார்த்தேன். குருவிகளின் அணுங்கல்கள் மட்டும் இல்லை, இருளும் வெளிச்சமும் கலந்த அந்தப் பொழுதில் அந்த மரமும் மிக அழகாக இருந்தது. அந்த மரத்தை ஏன் வெட்ட வேண்டும்................. அதிசயமாகவே இருந்தது. ஆனால் நான் ஏன் என்று கேட்கவில்லை....................🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்த பஞ்சாப் சிங்கங்களை நான் அன்றைக்கு தனி ஒருவனாக ஆதரித்து தோற்று ஓடினேன்............ உங்கள் இருவருக்கும் நாளை ஜெயம் உண்டாகட்டும்...............🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யார் இந்த ரஷீட் என்ற சின்னப்பையன்............... நல்லா அடிக்கின்றாரே......... இவர் ஏன் சென்னை அணியில் விளையாடுகின்றார்.................🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்லபடியாகப் போய்க் கொண்டிருப்பதை நடு ஆற்றில் தள்ளிவிடும் திறமை இந்த சென்னை அணிக்கு இருக்கின்றது.................🤣. 180 அடிக்க வேண்டும் என்றால், 160 இல் அப்படியே நின்று விடுவார்கள்................😜.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஐஸ்வர்யாராஜின் வீட்டுக்காரர் பெயர் அபிஷேக்பச்சன் என்று தெரியும். எதுக்கும் தேவைப்படாத அந்த அபிஷேக்கை விட இந்த கிரிக்கெட் அபிஷேக்கை தெரிந்து வைத்திருக்கலாம்........😜. எனக்கு தெரிந்த கோலியையும், ரோகித்தையும் தெரிவு செய்து வைத்திருக்கின்றேன்.......... வைக்கப் போகின்றார்கள் இருவரும் ஆப்பு எனக்கு......🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பயணம் இனிதாக அமையட்டும், பையன் சார்...................👍. மிரட்டல் குறிப்பு: இங்கு நான் வாழும் நாட்டில் ஒருவர் கிரீன்லாந்தை பிடிக்கப் போவதாக மிரட்டிக் கொண்டிருக்கின்றார். நீங்கள் தமிழ்நாட்டில் இருந்து திரும்பிய பின்னும் இந்த திரியில் இணையாவிட்டால், டென்மார்க்கையும் போய்ப் பிடியுங்கோ என்று அவரிடம் சொல்லி விடுவேன்............🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பம்மல் கே சம்பந்தம் இன்றைக்கு கையை விட்டிட்டுது, அண்ணா........ நாளைக்கு பஞ்ச தந்திரத்துடன் வருகின்றேன்................🤣. தெனாலியில் நாய் கலைக்க கமல் பயத்தில் ஓடிப் போய் ஓட்டப் போட்டியில் முன்னுக்கு வந்தது போல என் நிலை அச்சு அசலாக.......... எத்தனை அணிகள், எத்தனை வீரர்கள், எத்தனை நிற பிட்சுகள்.......... பஞ்சாப் அணியில் விளையாடுகின்ற சிம்ரன் மட்டும், ஏனோ தெரியல்ல, மனதில் அப்படியே நிற்கின்றார்..........😜. சென்னையே வெண்ணை என்று கூப்பிடக் கூடிய நிலையில் இருந்த ஹைட்ரபாத் இப்படி அடிப்பார்கள் என்று யார் நினைத்தது................ இப்ப சென்னை தான் கடைசியா............🫣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தனித்து வெல்லும் கட்சி என்று நினைத்திருக்க, கடைசியில் தவெக போல தனியவே நில் என்று விட்டிட்டார்கள்...........🤣. ஒரு பிள்ளைக்கு மட்டும் புள்ளி கிடைக்காத அநீதி இன்றைக்கு உங்கள் எல்லோரின் நினைவுகளிலும் நடுச்சாமத்தில் வந்து, அது உங்களின் நித்திரைகளை குழப்பட்டும்...............🤣🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எனக்கு இன்றைக்கு இரண்டு முட்டைகள்...... அடைக்கு வைத்து குஞ்சுகளாக்கி களத்தில் ஓடவிடுவம்.......🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
PBKS என்ற பெயர் 'பம்மல் கே சம்பந்தம்' போல இருக்குதே என்று தான் நான் இந்தப் போட்டியில் இந்த அணியை தெரிவு செய்திருப்பேன்..............🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இது தான் த்ரிலிங்கான இடம்.....................🤣.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
'சென்னை தடவியதும், கொல்கத்தா தூக்கி தூக்கி அடிக்கின்றதும் ஒரே பிட்சா............' என்று அந்த பிரகாஷ்ராஜ் மீம்ஸ் போடுவதற்கு பையன் சார் தான் வரவேண்டும்......................- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............ இன்றைக்கு சென்னைக்கு விழுந்த அடியில் அதிகமான இலாபம் உங்களுக்குத்தான்.............................. சென்னையின் நிலை அமெரிக்க பங்குச்சந்தையை விட மகா மோசமாக இருக்கின்றது......... சுத்தமாக முடிந்து விட்டது சென்னை.................🫢.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🫢.......... சென்னை சாம்பியன்ஸ் ஆகும் என்று போட்டவர்கள் தான் அதிகம் என்று நினைக்கின்றேன்.........☹️.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்கே இப்ப வெள்ளிக்கிழமை காலை, நேரம் 8:10............. இந்த நேரத்தில் நான் இந்தக் கொடுமையை பார்க்க வேண்டும் என்று என் தலையில் எப்பவோ எழுதப்பட்டு விட்டது என்று என்னை நானே சமாதனப்படுத்துவதை தவிர வேறு வழி எதுவும் தெரியவில்லை..............🤣.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னை நாட்டு மக்களின் ரசனை வயது கடந்தது............. பல துறைகளிலும்...................🤣.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣................... சுவி ஐயா - நந்தன் இந்தக் கூட்டணி நிலையானது போல........... புலவர்/செம்பாட்டான்/ரசோதரன் என்று மூன்றாவதாக ஒருவர் முறை வைத்து சேர்ந்து கொள்கின்றார்.....................😜.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு ஓவரில் மட்டும் 30 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று பங்களூரை யாரோ தவறாக திசை திருப்பி இருக்கின்றார்கள்..................🤣.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுவி ஐயா தலைமையில் இது நல்ல கூட்டு அண்ணா.............. ஆறும் அசல் தங்கங்கள் அண்ணா (நாளை இந்தப் போட்டி முடியும் வரை).............😜. மூன்று கூட்டாளிகள் அநேகமாக சேர்ந்து தான் வருவினம், போவினம்.......... நாங்கள் ஒன்று இரண்டு பேர்கள் அப்பப்ப அவர்களுடன் சேர்ந்து கொள்கின்றோம்..............🤣.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுவே சென்னை, மும்பை என்றால் கலைத்து பிடிக்கின்றோம் என்று ஓட ஆரம்பித்து, எப்படியும் இடையில் களைத்துப் போய், சரி அடுத்த போட்டியில் பார்ப்போம் என்று விட்டு விடுவார்கள் என்று நம்பிக்கையாகச் சொல்லலாம்..................🤣. - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.