Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. ஸ்கண்டினேவியன் மக்கள் நல்ல மக்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்................ சுத்தமான அப்பாவிகளும் என்று இன்று தான் தெரிகின்றது..............🤣. இங்கெல்லாம் ஒரு தடவை ஹாய் சொன்னால் திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருப்பார்கள்...... இரண்டாவது ஹாய் சொன்னால், சுட்டாலும் சுடுவார்கள்..........🤣.
  2. கிரிக்கெட்டுக்கு இப்படி ஒரு எதிர்காலம் இருக்கின்றது என்று தெரிந்திருந்தால், பிந்திப் பிறந்து கிரிக்கெட் விளையாடி இருக்கலாம் போல.......................😜.
  3. பையன் சார், நீங்கள் எவ்வளவு தான் ஆறுதல்படுத்தினாலும், நான் பாகிஸ்தான் கொடியை ஒரு வாரத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடுவதாக உள்ளேன்................🤣.
  4. அவர் போக வைப்பார்.................... ஆனால் பரிசுப் பணத்தில் பாதிக்கு மேலேயே கேட்பார்...... 🤣......... நான் இன்னும் இன்னா இல்லை ஏற்கனவே அவுட்டா........
  5. ஒரு முதல்வருக்கு இருக்க வேண்டிய அடக்கமும், பணிவும் இல்லாததால், இன்றைய முதல்வர் முன்னால் நடந்து கொண்டு போக, பின்னால் அவருக்கு குழி தோண்டுவதாக சமூகம் முடிவெடுத்திருக்கின்றது...............🤣.
  6. களத்தில் என்னுடன் போட்டியில் நிற்பவர்கள் எல்லாம் என் உறவுகள், நட்புகள், ஐயாமார்கள், அண்ணன்மார்கள், தம்பிமார்கள் என்றவுடன் கையில் இருக்கும் காண்டீபம் நழுவி நழுவி விழுகின்றதே........ இதில் அம்புகளை எடுத்து அவர்களுக்கு நான் எங்கே விடுவது..... என் உறவுகளுக்காக என்னையே நான் தீக்குண்டத்தில் அமிழ்த்தப் போகின்றேன்.............🤣.
  7. என்னுடைய விளையாட்டு நேரம் வந்துவிட்டது....................... அங்கே போய் விராட் கோலி போல இன்றைக்கு நல்லா விளையாடப் போகின்றேன்...........🤣. அல்வாயன் அங்கேயே நிற்பார் போல................👍.
  8. அரியும் சிவனும் ஒன்று, இதை அறிந்தவனுக்கு முட்டை...................... என்று தொடர்வதாக இருக்கின்றேன்...........🤣. திடீரென்று கண்கள் பரந்து விரிந்து, எல்லாமே சொந்தபந்தமாகவும் தெரிகின்றது..........🤣.
  9. தவெகவில் பெண் ஆளுமைக்கு மட்டும் இல்லை, பல வெற்றிடங்கள் இருக்கின்றன. இன்னமும் 25 மாவட்டங்களுக்கு செயலாளர்களை அறிவிக்கவில்லை. செயலாளர்கள் கூட்டம் என்று விட்டு, அதை இப்போது பிற்போட்டுவிட்டார்கள். 'நீங்கள் கூட்டதை கூட்டுங்கள், நான் தலைமையேற்க வருகின்றேன்...........' என்று சொன்ன ரஜனியிலிருந்து ஒரு அடி முன்னுக்கு போயிருக்கின்றார் விஜய். ஆனால் இன்னும் நூறு அடிகள் போகவேண்டும் வேகமாக. நேற்று கமல் அவர் கட்சியின் ஆண்டுவிழாவில் பேசியிருந்தார். தான் ஒரு தோற்றுப் போன அரசியல்வாதி என்று சொன்னார். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்றும் சொன்னார். இவர் அரசியலுக்கு வந்த போதே இதைத்தானே நாங்களும் சொன்னோம்........ என்ன ஆனாலும், நேற்று கமலின் பேச்சைக் கேட்டபோது கவலையாக இருந்தது. கமல் இறங்கிய அளவுக்கு கூட விஜய் இன்னும் இறங்கவில்லை. அவர் இறங்கி வரவேண்டும்.......... கிஷோர் தவெகவிற்கு 20 வீதம் அளவு வாக்கு வங்கி இருக்கின்றது என்கின்றார். இது உண்மையென்றால், இது ஒரு பெரிய எண். அதிமுகவின் அளவே அது தான். தவெக நடவடிக்கைகளை ஒழுங்காக்கி விரைவில் ஒருங்கிணைத்தால், அவர்கள் பலமான ஒரு மாற்றுச் சக்தியாக வரலாம். காளியம்மா போன்றவர்கள் இதற்கு இன்னும் வலுச்சேர்ப்பார்கள்.
  10. பையன் சார், வழமையாக எழுதுவதை போலல்லாமல் நிதானமாக எழுதியிருக்கின்றீர்கள்...........👍. பொதுவாகவே பல இடங்களிலும் விவாதங்கள் ஒரு நாயக வழிபாடு அல்லதோ கொள்கை பரப்புச் செயலாளரின் அறிக்கை போன்று இருக்கும், முற்று முழுதாக ஒரு பக்கம் மட்டுமே சாய்ந்திருக்கும், கருத்துகளால் நிறைந்திருக்கின்றன. என் தலைவர், என் கட்சி தப்பே செய்ய மாட்டார்கள் என்ற நிலைப்பாடு தான் எல்லாவற்றையும் முந்தைய நிலைப்பாடாக பல இடங்களிலும் இருக்கின்றது. என்ன சாட்சி என்ற கேள்விக்கு ஆதாரம் காட்டினால் கூட, அது பொய் ஊடகம், இது உண்மையான ஊடகம் என்றும், நீங்கள் அதை நம்புவது போல நாங்கள் இதை நம்புகின்றோம் என்றும் போய்க் கொண்டேயிருப்பார்கள். நீங்கள் இன்று அங்கேயும் தப்பு இருக்கின்றது என்று சொன்னது மிக நல்லதொரு ஆரம்பம், ஆரோக்கியமான ஒரு விவாதத்திற்கு. இவர்கள் எவரும் பிரிந்து போவது நாதகவிற்கு குறுகிய காலத்தில் இழப்பே இல்லை. இது எம்ஜிஆர் திமுகவிலிருந்து பிரிந்து போனது போலவோ அல்லது மஹிந்த சுதந்திரக்கட்சியிலிருந்து போனது போலவோ அல்ல. ஆனால், எந்தப் பதவியிலும் இல்லாத அல்லது மிகவும் குறைவாகவே வெளியில் தெரிந்த இளைஞர்கள் நாதகவை விட்டுப் போவதும், அதற்கான காரணம் அவர்கள் எதிர்பார்த்து வந்த நாதக இதுவல்ல என்பதும் நீண்ட காலத்தில் பெரும் சேதத்தை விளைவிக்கும். இன்னொன்று, இது மிக முக்கியமான ஒன்று, ஆனால் இங்கு களத்தில் பலரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை: நாகரீகமற்ற பொதுவெளிச் பேச்சுகள் நடுநிலையான மக்களை இன்னும் தூரப்படுத்தும். சுற்றிவர நிற்பவர்கள் கைதட்டி ரசித்து சிரிக்கலாம். ஆனால் இந்த ரசிகர்களின் ஒவ்வொரு கைதட்டலிலும் இன்னும் நாலு பொதுமக்கள் தூரத்தே போய்விடுவார்கள். இந்த முதிர்ச்சி இல்லாமல், சீமானாலும், அர்ச்சுனாவாலும் எதையும் அடையமுடியாது.
  11. அப்படி எல்லாம் அவராக பதவி விலகிப் போகமுடியாது.................. பையன் சாரிடம் நாங்கள் சொன்னால், அவர் அவரைப் பிடித்து ஒரு சந்தைக்கு அனுப்புவார்............🤣. குல்தீப் என்றால் தெரியாது, சுப்மன் ஹில் என்றால் தெரியாது................. ஆனாலும் இந்தக் கலகலப்பிற்காகத்தானே இங்கே போட்டியில், விராட் கோலி கிரிக்கெட் விளையாடுவது போல, நாங்கள் சிலரும் கலந்து கொள்ளுகின்றோம்................
  12. அமெரிக்கா உக்ரேனுக்கு கொடுத்த மொத்த உதவிகள் 500 பில்லியன்கள் அல்ல. இது அமெரிக்கா உக்ரேனிடம் இருந்து இலாபத்துடன் சேர்த்து எடுக்க நினைக்கும் தொகையின் அளவு. அமெரிக்கா கொடுத்தது கிட்டத்தட்ட 150 பில்லியன் டாலர்கள். அதிலும் 119 பில்லியன் டாலர்களே கணக்கில் வந்திருக்கின்றது. மிகுதி இன்னும் அங்கே போய்ச் சேரவில்லை. அதற்கிடையில் பென்டகனில் ஆடிட்டிங் ஆரம்பமாகிவிட்டது. கொடுத்த உதவிகளில் பெரும்பங்கு அமெரிக்க ஆயுத தயாரிப்பு மற்றும் பாதுகாப்புச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
  13. நான் பாகிஸ்தானை தெரிவு செய்துவிட்டு பதுங்கி இருக்கின்றேன், எனக்கு என்ன வாழ்த்துகள், பையன் சார் .............🤣. எவ்வளவு ரன்கள் அடிக்கின்றார்கள்............... இந்த பந்து வீச்சாளர்கள் போட்டி முடிய, எங்கேயாவது தனியப் போய் அழுவார்களா.................
  14. 'It is not over until it is over.................' என்பது விளையாட்டு வீரர்களின் ஒரு தாரகமந்திரம்.................. மனதை விடக்கூடாது.................
  15. நடந்து கொண்டிருக்கும் விடயங்களை ஒவ்வொருவரும் அவரவர் பார்வையிலேயே ஊகித்துக் கொள்கின்றனர். என் பார்வை அவர்களுக்கு எதிர்காலம் கிடையாது என்று சொல்கின்றது ஏனென்றால் அதுவே தான் எனக்கு பிடித்த தெரிவு. நீங்கள் சொல்வது சரியாகவும் இருக்கலாம். 2026ம் ஆண்டில் எந்த வெற்றிடமும் இல்லை, எந்த அலையும் இல்லை, அந்த தேர்தல் ஒரு சரியான நிலவரத்தை காட்டும் என்று நினைக்கின்றேன். அதுவரை இப்படியே போய்க் கொண்டிருப்போம்..........👍.
  16. இது பல இடங்களிற்கும் ஒரு பொதுவான பண்பு போல, வில்லவன்....... எனக்கும் இதே தெருவில் ஆரம்பத்தில் இதே அனுபவம் தான். இங்கிருந்த மற்றவர்கள் எல்லோரும், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், அப்ப 25 வருடங்களின் முன்னரேயே 50 வயதுகளை தாண்டியவர்கள். மிகவும் வசதியானவர்களும் கூட. 'யார் இவன் ஒரு சின்னப் பொடியன் இங்கே.......' என்ற பார்வையிலேயே ஆரம்ப காலங்கள் கடந்து கொண்டிருந்தது. உரையாடல்கள் இல்லாமல், ஒற்றை வரி அல்லது சில வரிகள் என்றும் பின்னர் மாறியது. வலியதும், கொடியதும் விதி என்பார்கள். காலம் என்றும் சொல்லலாம். சில வருடங்களின் பின்னர், தொடர்ச்சியாக ஓரிரு நாட்களுக்கு என்னைக் காணாவிட்டால், 'சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போய் விட்டாய்.................' என்று உரிமையாக கோபப்படுவார்கள்................... அவர்களின் பேச்சு துணை நான் தான்................. தெருவில் 12 வீடுகள், எழுதினால் சுராவின் 'ஒரு புளியமரத்தின் கதை' போல ஒரு பெரும் நாவலே எழுதலாம்...................... அவ்வளவு கதைகள் இந்த மனிதர்கள் ஒவ்வொருவரிடமும். அதுவே தான் சுவி ஐயா........🙏. பலதும் பொருளற்றவை போல என்று சில நேரங்களில் தோன்ற ஆரம்பித்துவிட்டது. எல்லாமே கடகவென்று நடந்து முடிந்து, கொஞ்சம் வேகமாகவே இந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டேனோ என்றும் தோன்றுகின்றது............🤣
  17. இது நாள் வரை பலரும் கேட்கும் ஒரு கேள்வி ஏன் அமெரிக்கா உலகம் முழுவதும் எல்லாப் பிரச்சனைகளிலும் தலையிடுகின்றது. இந்த வாரம் வந்த ஐரோப்பிய யூனியன் மற்றும் இங்கிலாந்தின் படைபலம், நவீனமயமாக்கல் மற்றும் பாதுகாப்புச் செலவீனங்கள் பற்றிய கட்டுரைகள் ஒரு தெளிவைக் கொடுத்தன. உண்மையிலேயே ஐரோப்பிய யூனியனும், இங்கிலாந்தும் வெறும் வெற்றுக் கோதுகள் தான். அவர்கள் இன்றிருக்கும் நிலையில் அவர்களால் எவரையும் எதிர்க்கமுடியாது. அமெரிக்காவின் பின்னால் பதுங்கி நிற்பது தான் அவர்களால் செய்யமுடிந்தது. இனிமேலாவது வேறு திசையில், சொந்தக் கால்களில் செல்ல முயற்சி செய்யலாம். கடந்த வாரம் ஜே டி வான்ஸ் இதையே தான் இப்படிச் சொன்னார், 'பெரியவர்களின் மேசையில் சிறியவர்களுக்கு இடமில்லை......'
  18. இங்கிலாந்து மட்டும் இன்றைக்கு தோற்றது என்றால், அப்படியே அவர்கள் எல்லோரையும் கீரைச் சந்தைக்கு அனுப்பி விடுவார் பையன் சார்............
  19. திமுகவுடனான பேச்சுவார்த்தை நாகபட்டினம் சட்டமன்ற தொகுதி அல்லது ஒரு ராஜ்யசபா பதவி என்ற அளவில் வந்து நிற்கின்றது. காளியம்மா கேட்பது கொஞ்சம் அதிகம் தான், ஆனாலும் இதைக் கொடுக்காவிட்டால் இவர் தவெக பக்கம் போய் விடுவார் என்பது தான் திமுகவின் சிக்கல். இவரின் தலைமையில் ஒரு தனிக்கட்சியை நாதகவிற்கு போட்டியாக உருவாக்கி விடலாம் என்று கூட திமுக திட்டம் போடுகின்றது. இந்த வாரம் நாதகவின் கொள்கை பரப்புச் செயலாளரும் கட்சியிலிருந்து விலகினார். சீமான் நானே பஸ்ஸை ஓட்டுகின்றேன், நீங்கள் எல்லாம் பின்னால் இருப்பவர்கள்..... என்று கட்சியிலிருப்பவர்களை பார்த்துச் சொல்கின்றார். ஒரு நாள் ஓட்டுநர் திரும்பிப் பார்க்கும் போது, பஸ்ஸே காலியாக இருக்கப் போகின்றது..............
  20. உயிர்களுக்கு பொதுவாகவே வயதானால் ஒரு அனுபவமும், பக்குவமும் வரும் போல.............. ஆனால் மனிதர்களுக்கு மருத்துவர்கள் சொல்ல வேண்டும், இன்னும் இத்தனை நாட்கள் தான் இருக்கின்றது என்று............ அதன் பின் தான் வரும் ஞானம்........ வயதாகிப் போனது அண்ணா....... பாய முடியாது............. நாங்களும் அப்படித்தானே.... எல்லாமே ஆடி அடங்கத்தான் வேண்டும்....................
  21. சில வேளைகளில் இப்படியான ஒரு மனநிலை ஒரு முழுப் பைத்தியக்காரத்தனமோ என்றும் தோன்றும்............... ஆனால் ஒரே தெருவிலேயே, ஒரே வீட்டிலேயே 25 வருடங்களுக்கும் மேலாக இருக்கும் நான், இந்த தெருவில் இருக்கும் பலர் முடிந்து போனதை பார்த்திருக்கின்றேன். ஒவ்வொருவரின் கடைசி வருடங்களிலும் அவர்கள் எதிர்பார்த்தது சக மனிதர்களின் ஆதரவையும், அன்பையும் அன்றி வேறெதுவுமே இல்லை..........
  22. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிறி அண்ணா!
  23. 🤣................... பையன் சார், உங்களின் இந்த ஒரு வரியால், எனக்கு எதிர்காலமே பிரகாசமாக தெரியுது.............😜.
  24. மண் அரிப்பைத் தடுக்கும் என்பது நாங்கள் அங்கே கண்கூடாகவே பர்த்தது. என் ஊர் மிகவும் மணல் பாங்கானது. அங்கு கடற்கரை ஓரம் தென்னை மரங்களும், உள்ளே பனைமரங்களும் வளர்கின்றன. இந்த மரங்களின் நாருரி வேர்கள் அந்த மண்ணை அப்படியே சேர்த்தே வைத்திருக்கின்றன. இவை நீரை எப்படி தேக்கி வைக்கின்றன என்று தெரியவில்லை. Word Wide Web என்பது போல Root Wide Web என்று மரங்களின் வேர்கள் பற்றிய ஒரு கட்டுரையை சில காலத்தின் முன் வாசித்திருக்கின்றேன். வேர்கள் முடிகின்றன என்று நாங்கள் நினைக்கும் புள்ளியிலிருந்து மைல்கள் நீளமான வேர்கள் நுண்ணுயிர்களால் ஆக்கப்படுகின்றன என்றும், அவை எப்படி தாய் மரத்துடன் கொடுத்தும், எடுத்தும் வாழ்கின்றன என்றும் அதில் இருந்தன. எங்களின் பனை, தென்னைக்கும் இந்த இயல்புகள் இருக்கின்றது போல.
  25. அதுவே தான். சீன வாகன இறக்குமதிக்கு எக்கச்சக்கமான வரி விதிப்பு மற்றும் சீனப் பொருட்களின் தரங்களைப் பற்றிய பொதுவான குறைந்த அபிப்பிராயம் என்பன சீன வாகனங்களை இங்கே வரவிடாமல் தடுக்கின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.