Everything posted by ரசோதரன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............. யாரு இந்த சிம்ரன் சிங்............... நல்லா அடிக்கிறாரே............. பெயரும் சூப்பர்................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தற்போதைய நிலவரப்படி எனக்கு பஞ்சாப் அணியில் விளையாடும் எல்லோரும் நல்லவர்களாகத் தெரிகின்றார்கள்........... லக்னோ ஆட்களுக்கு அடக்கம் இல்லை...........🤣. நாளைக்கு வேற கணக்கு...........😜.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இவர் யாரு, புதுசா இருக்கே................ இதை நீங்கள் முன்னமே சொல்லவில்லை............... இவரை விளையாட விடமுடியாது..............🤣 👍........... அவர்களுக்கு ஆதரவாக ஒரு பத்து பேர்கள் வெளியில் இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டு உயிரைக் கொடுத்து விளையாடுகின்றார்கள் போல..............
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பூரான் அவுட் என்ற தகவலை இங்கு களத்தில் பஞ்சாப் குரூப்பில் இருக்கும் பத்து பேரும் ஏப்ரல் பூல் என்று நினைக்க வேண்டாம்................. ஆள் உண்மையிலேயே அவுட் தான்..............🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............... எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு கேள்வி மனதுக்குள் இருந்தது, அண்ணா............ அதை எப்படி வெளியால் கேட்பது என்று கொஞ்சம் சங்கோஜமாகவும் இருந்தது............. கோஷான் ஒரு சின்ன மாற்றம் செய்தேன் என்றும் சொல்லியிருந்தார்.............🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்கு யாழ் களத்தில் பஞ்சாப் அணியின் பக்கம் நிற்பவர்களைப் பார்த்தால், நாளைக்கு லக்னோ அணி படுத்திருந்து கொண்டே வென்று விடுவார்கள் என்று தான் தெரிகின்றது.............. 🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............ வார நாட்களில் சில போட்டிகளை இந்த நேரத்தில் பார்க்கின்றேன். எல்லா அணிகளும் ஒரே மாதிரியே தெரிகின்றது........... ஆடுகளம் சிவப்பா, கறுப்பா, கலப்பா, பழுப்பா என்றும் இப்பொழுது பார்க்க ஆரம்பித்துள்ளேன்.......... ஈரம் இருக்குதா, இல்லையா என்று தொலைக்காட்சியில் பார்த்து கண்டுபிடிக்க முடியவில்லை...... 🤣🤣.......... கிரிக்கட்டை அமெரிக்க விளையாட்டுகள் போல கொண்டு வந்துவிட்டார்கள்........... இருந்தது இருந்தாச்சு, இன்னும் ஒரு நான்கு ஓவர்கள் இருந்து விட்டுப் போவது..............😜.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுவுமா...............................🙂. உங்களுக்கு தற்பொழுது இருக்கும் அதிர்ஷ்டத்திற்கு தவிட்டை தொட்டால் அது கூட தங்கம் ஆகும் போல................🤣. பையன் சார், நீங்கள் இன்றைக்கு அந்த நாலிலிருந்து மேலே போகப் போகின்றீர்கள்.............👍.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எல்லா சாத்திரங்களும், சாத்திரிமார்களும் பொய், புளுகு மூட்டைகள் என்ற அணி தான் என்னுடையது, பையன் சார்............... இவை ஒன்றிலும் அறவே எனக்கு நம்பிக்கை கிடையாது...... சும்மா பகிடிக்காக செம்பாட்டுச் சாத்திரியார் என்று எழுதியிருந்தேன், செம்பாட்டான் முன்னுக்கு நிற்கின்றபடியால்......... Oklahoma City Thunder நல்ல அணி தான், இப்ப முன்னுக்கும் நிற்கின்றார்கள். ஆனால் அனுபவம் குறைந்தவர்கள். Lakers, Nuggets and Celtics நல்ல அனுபவம் உள்ள அணிகள். Lakers வென்றால் அதிக சந்தோசம்................. Oklahoma City Thunder வென்றால் சந்தோசம்...........🤣. ** உங்களால் நான் இப்பொழுது ஐபிஎல் பார்க்க ஆரம்பித்துள்ளேன். மிக்க நன்றி.......❤️.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
செம்பாட்டு சாத்திரியார் நல்லாத்தானே சொல்லுகின்றார்.............🤣. எந்த அணி வெல்லும், எந்த அணி தோற்கும், எதுவுமே எவரின் கைகளிலும் இல்லை போல......... அதுவாக நடக்குது............ நடப்பதை நாங்கள் பார்க்கின்றோம்............🤣. ஒவ்வொரு போட்டியும் ஒரு சுரண்டும் அதிர்ஷ்டலாபச் சீட்டு போல...........😜.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கண்டியில் சில வருடங்கள் உதைபந்தாட்டம் விளையாடியிருக்கின்றேன். ரக்பி மற்றும் உதைபந்தாட்டம் இரண்டுக்கும் ஒரே மைதானம் தான். சில நாட்களில் ரக்பி போட்டி முதல் நடக்கும், பின்னர் உதைபந்தாட்டப் போட்டி................... மழை பெய்யும் நாட்களில் ரக்பி முடிந்த பின் முழு ஆடுகளமுமே உழுத சேற்று வயல் போல இருக்கும். தரையில் படுகின்ற, விழுகின்ற பந்துகள் அதன் இஷ்டத்திற்கு எந்தப் பக்கமும் தெறிக்கும்.......... பயிற்சியாளர் கத்துவார், 'டேய்............. முதலில் பந்தைக் கணியடா.........' என்று, அவர் தமிழ் தான், பழைய இலங்கை அணி வீரர்.......... சேத்துக்குள்ள என்னத்தை கணிக்கின்றது..........🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
19 பேர்கள் குஜராத்துக்காக நின்றிருக்கின்றார்கள்.............. நாங்க தனிமரம் கிடையாது........... நாங்க ஒரு தோப்பு..................🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
👍............. இவ்வளவு நுணுக்கங்களா................ ஆச்சரியமாக இருக்கின்றது. இங்கு விளையாடப்படும் பேஸ்பால் கிரிக்கெட்டின் சாயல் கொண்டது. ஆனால் இந்த நுணுக்கங்கள் குறைவானது........
-
செவ்வந்தியில் செவ்வந்தி
🤣................... கை சரியாகி விட்டது, வல்லவன்...........🙏.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🙄...... இப்ப சந்தோசம் தானே........🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மண்ணின் நிறம் என்ன என்று கூட தெரிந்து வைத்திருக்கின்றீர்களா................ எங்களில் சிலருக்கு ஒரு 10 புள்ளிகள் ஆரம்பத்தில் இலவசமாக கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்....... ஒரு நியாய தர்மம் வேண்டாமா..................🤣.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣.............. கெட்டது குடி...............🤣 KKR என்றால் கொல்கத்தா, DC என்றால் டெல்லி என்று பாடமாக்கிக் கொண்டு பாலர் வகுப்பில் நிற்கின்றேன்................. அதற்குள்ளே துணை முதல்வர் பதவியா.............. அமெரிக்காவில் கூட இந்த அநியாயம் நடக்காது.............🤣 வாழ்க்கையில் இன்று முதன்முதலாக ஐபிஎல் போட்டி ஒன்றை, முழுவதும் இல்லை என்றாலும், பார்த்தேன்................👍.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣..... சும்மா தான் இடையிலிருந்து இந்தப் போட்டியை பார்க்க ஆரம்பித்தேன். நேற்று, முந்தாநாள் எதுவும் பார்க்கவில்லை. நான் லக்னோவா அல்லது டெல்லியா என்பதும் ஞாபகத்தில் இருக்கவில்லை. பின்னர் டெல்லி தான் என்று கிருபன் அனுப்பியிருந்ததைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். ஆனால் டெல்லியின் நிலை என்னை விட பரிதாபமாகவே இருந்தது............ டெல்லி கொஞ்சம் தெரிந்த ஊராக, பெயராக இருக்கின்றதே என்று தான் நான் அதனைத் தெரிவு செய்திருக்க வேண்டும்........... இப்படி ஒரு சம்பவத்தை டெல்லிக்காரர்கள் செய்வார்கள் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை போல.............
-
செவ்வந்தியில் செவ்வந்தி
செவ்வந்தியில் செவ்வந்தி --------------------------------------- எங்கள் வீட்டு செவ்வந்தியில் செவ்வந்திப் பூ ஒன்று வந்துள்ளது என்று ஒருவர் இன்னொருவரிடம் சொன்னார் 'செவ்வந்தியில் செவ்வந்திப் பூவா..........' என்று ஆச்சரியப்பட்ட அடுத்தவரிடம் இது பரமரகசியம் எங்கும் பகிரக்கூடாது என்று சத்தியமும் கேட்கப்பட்டது அடுத்த அடுத்த நாளும் இருவரும் செவ்வந்தியும் பூவும் என்று இரகசியமாக பேசிக் கொண்டனர் மூன்றாவது நாளில் மூன்றாவது நபர் ஒருவர் செவ்வந்தி செவ்வந்தி என்றார் இவரைப் பார்த்து இப்படியே பலருக்கும் இது தெரிந்திருந்தது இவருக்கு தெரிய வர அவருடன் உறவு முறிந்தது பூ காய்ந்து செடி காய்ந்து மண்ணோடு மண்ணாக கலந்து போனது எப்போதும் போலவே முறிந்த உறவும் முறிந்தே கிடக்கின்றது ஒரு ரகசியம் என்று எவராவது ஆரம்பித்தாலே நான் காதுகளை மூடிக் கொள்கின்றேன்.
- செவ்வந்தி.jpg
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோ ஆதரவாளர்கள் யாராவது அவசரமாக ஆஸ்பத்திரிக்கு போக வேண்டுமா....................
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தனிக்காட்டுராஜா!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
❤️............... அந்த வரியை எழுதும் போது உங்களையும் நினைத்தேன்............. பலதில் ஏதோ ஒன்று தான் கடைசிவரை போகும், நீங்கள் அதில் ஒருவர்.................. அன்று பல பேர்கள் காதலித்தது கடவுளுக்கு மட்டும் தான் தெரிந்திருந்தது....... அந்தப் பிள்ளைகளுக்கு கூட இந்த விசயம் கடைசிவரை தெரிந்திருக்கவில்லை............🤣....... அதனால் பல பிள்ளைகள் தப்பி, இன்று நல்லா இருக்கின்றார்கள்.............😜.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣............. இந்த திரியில் எது மெயின் டிராக், எது காமடி டிராக் என்று பிரிக்க இயலாத அளவிற்கு இரண்டும் பின்னிப் பிணைந்து போய்க் கொண்டிருக்கின்றன............... நண்பனும் அப்படித்தான்................ பிரிவினை இல்லாதவன், எவராவது கதையுங்கள் என்று இருந்தான். நோக்கம் எல்லாம் ஒன்று தான்.............. வகுப்பில் இருந்த ஒரு பிள்ளையை நோக்கியதே........ முடிவும் அதே தான்.............. அந்தப் பிள்ளை வீட்டில் பார்த்த ஒருவரை கட்டிக்கொண்டு போனது.....
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
🤣................. ஒரு நண்பன், அவன் இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கின்றான். அவன் முன்னர் அடிக்கடி சொல்வான்: நல்ல விதமாகவோ அல்லது அப்படி இப்படியோ எப்படி என்றாலும் என்னைப் பற்றியே வகுப்பில் கதைத்தார்கள் என்றால் எனக்கு சந்தோசம் தான்..................🤣. ரஜனியின் 'எஜமான்' படத்தை அவன் பல தடவைகள் பார்த்தவன் போல...............