Everything posted by ரசோதரன்
- Parthenium.jpg
-
கண் கண்ட தெய்வம்
🤣................ முன்வரிசைகளில் இருப்பதற்கு மிகத் தெளிவான சில காரணங்களே உண்டு: உயரம் அல்லது முன்னரே ஒதுக்கப்பட்ட இருக்கை, கண் பார்வையின் திறன், எதிலும் கவனமெடுக்கும் ஆர்வம் போன்றன.............. ஆனால் பின்வரிசைகளில் இருப்பதற்கு பின்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை வைத்திருக்கின்றார்கள் போல............
-
முழிக்கும் மொழி
வசதியுள்ளவர்களில் பெரும்பாலானோர் இதையே தான் அங்கு செய்கின்றார்கள். அங்கு சில தனியார் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை பாலர் வகுப்புகளில் சேர்ப்பதற்கே வருடா வருடம் வரிசையில் நிற்பவர்கள் ஏராளமானோர். இந்த விடயத்தில் மொழிக்கொள்கை அங்கு ஒரு பொருட்டே அல்ல.................... ஆனால் இங்கு மதிய உணவு இடைவேளையின் போதும், தேநீர் இடைவேளைகளின் போதும், சந்திப்புகளிலும், அங்கு அரசியல் மேடைகளிலும் மொழிப்பற்றும், மொழி எதிர்ப்பும் அனலாகப் பறக்கும்...............🤣.
-
முழிக்கும் மொழி
ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பினால் கிடைத்த தகவல்கள் மூலம் நேற்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை வாசித்து இருக்கின்றீர்கள் போல, வில்லவன்..............🤣. எங்களின் பிரபஞ்சம் இன்னொரு பெரிய பிரபஞ்சத்தின் ஒரு கருந்துளைக்குள் இருக்கின்றதோ என்று அந்தக் கட்டுரையில் சந்தேகம் எழுப்பியிருந்தார்கள்..........🤨. நீங்கள் சொல்லியிருப்பது போலவே, பல இடங்களிலும் இது ஒரு ஆதிக்க அல்லது அதிகாரப் போட்டியின் ஒரு பக்கமாகவே வெளிப்படுகின்றது. அதிகாரத்தை அடைவதற்கு, அடைந்ததை விஸதரிப்பதற்கு இது ஒரு இலகுவான வழியாகின்றது. மனிதர்களை மிக இலகுவாக உணர்ச்சிக் கொந்தளிப்பில் தள்ள மதங்களாலும், மொழிகளாலும், சில அடையாளங்களாலும் முடிகின்றது.
-
கண் கண்ட தெய்வம்
🤣............... அண்ணா, இந்தப் பெரிய அமெரிக்க கிணற்றுக்குள் விழ முன், ஊர் என்னும் குட்டிக் கிணற்றுக்குள் எங்களை விட்டால் ஆளே இல்லை என்று இருந்தோம் என்று சொல்லவந்தேன்................ எங்கள் ஒவ்வொருவரினதும் முதல்நாள் வெளிநாட்டு அனுபவங்களை எழுதித் தொகுத்தால், அது நல்லதொரு முழுநீள நகைச்சுவை நாவலாக வரும்............. என்னுடைய முதல்நாளில், அந்த ஊரில் இருக்கும் ஒரு சின்ன விடுதியில் அறை ஒன்றை எடுத்துக் கொடுத்திருந்தார்கள். அது சரியான குளிர் பிரதேசம். காலையில் வகுப்புகள் ஆரம்பிக்கின்றன. நான் வருவதற்கு சில நாட்கள் பிந்திவிட்டன. காலையில் குளிப்பம் என்று போனால், தண்ணீர் விறைக்கும் குளிரில் வந்தது. அன்று அதுகூட எனக்கு தெரியாது............... ஓடிப்போய் சில வேலைகளை முடித்து, வகுப்புகளுக்கும் போய் விட்டு, அங்கிருந்த உணவு விடுதிக்கு சாப்பிடப் போனால், அவர்களின் மொழியே சுத்தமாக புரியவில்லை....... ஆனாலும் இரண்டு பக்கங்களும் ஆங்கிலமே பேசுவதாக நினைத்துக் கொண்டிருந்தன.........🤣. ஒரு கிளாஸ் பாலாவது கொடுங்கள் என்று நான் சொன்னதை தட்டுத்தடுமாறி அவர்கள் புரிந்து கொண்டார்கள். அப்படியே, 'இரண்டு வீதமா, ஒரு வீதமா அல்லது முழுப்பாலா................' என்று கேட்டார்கள்................. ஏற்கனவே இருந்த பசி மயக்கத்தை விட, அந்தப் பால் கேள்வி என்னை அப்படியே சரித்து விழுத்தியது..................🤣.
-
வாழ்ந்து பார்க்க வேண்டும்
இந்த இடத்தில் கண் கலங்கிவிட்டது............... எவ்வளவு தான் நேசமாக, உயிருக்கு உயிராக இருந்து வாழ்ந்தாலும், சில வேளைகளில், சில சந்தர்ப்பங்களில், மனிதர்கள் கையில் இருப்பதையே போட்டு உடைத்து விடுகின்றார்கள்........ சிலது மீண்டும் ஒட்டவே முடியாமல் போகின்றன, அப்படியே கிடைத்த இந்த ஒரேயொரு வாழ்க்கையும் அல்ங்கோலமாகிவிடுகின்றது...............😌.
-
கண் கண்ட தெய்வம்
🤣........... நல்லா சேர்த்து சேர்த்து யோசிக்கின்றீர்கள், அண்ணா..........
-
கண் கண்ட தெய்வம்
🤣......... இதில் கோபிக்க என்ன இருக்கின்றது, அல்வாயன்........... நானே இதைத்தானே சொல்லுகின்றேன்..........
-
கண் கண்ட தெய்வம்
அட ராமா......... எல்லா வகைகளிலும் ஒன்று இன்னொன்றின் பிரதி போலவே தெரிகின்றது.........🤣.
-
கண் கண்ட தெய்வம்
🤣................... சமைக்கும் ஆண்கள், சமையலில் கருத்து சொல்லும் ஆண்களை நான் சூப்பர் சிங்கர் போட்டிகளில் வந்து பாடுபவர்களை பார்ப்பது போன்றே, அதே ஆச்சரியத்துடன் பார்க்கின்றேன்........ இது என்ன திறமை, இவர்களுக்கு மட்டும் இது எப்படி அமைந்தது என்ற அதே ஆச்சரியம்....... உலகத்தில் உள்ள எல்லோரையும் சமையலில் வரிசைப்படுத்தினால், நான் கட்டக் கடைசியில் வருவேன். போட்டியே கிடையாது. என்னளவிற்கு சமையல் பற்றி எதுவுமே தெரியாத ஒருவரை நான் இன்னமும் சந்திக்கவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட என்னை விட சமைப்பார் என்றே நினைக்கின்றேன்................... பெண்களின் கராத்தே என்றவுடன் ஞாபகத்தில் வந்த விடயம் ஒன்று. அப்போது இங்கு நாங்கள் வந்த புதிது. நான் படித்துக் கொண்டிருந்தேன். மனைவியும் இங்கே வந்துவிட்டார். என்னுடன் அதே பல்கலையில் இலங்கையில் இருந்து வந்த பெண்மணி ஒருவரும், அவர் ஆங்கிலத்தில் மேற்படிப்பு, படித்துக் கொண்டிருந்தார். தமிழ்ப் பெண்தான். முதலில் அவர் யாரென்று எனக்குத் தெரியாது. வீட்டுக்கும் வருவார். பின்னர் அவர் யாரென்று, அவரின் பின்புலமும் தெரிந்தது. அவர் இலங்கையில் மிகப்பிரபலமான ஒருவர் தான், ஆனால் நான் ஒரு கிணற்றுத் தவளை, என் வீட்டுக்காரி என்னுடன் சேர்ந்த இன்னொரு தவளை. ஒரு நாள் அவர் வீட்டுக்கு வந்து, 'வாங்கோ, கராத்தே வகுப்புக்கு போவோம்........' என்று கேட்டிருக்கின்றார். வீட்டில் வெருண்டு போய்விட்டார்கள். 'இது என்னணை..........' என்று நான் வந்ததும் சொன்னார். எனக்கு ஒரே சிரிப்பு தான்............... பின்னர் அந்தப் பெண் தனியவே கராத்தே வகுப்புகளுக்கு போனார் என்று நினைக்கின்றேன். ஆனால் அது ஒரு காலம்................. இப்ப என் வீட்டுக்காரி ஒரு கராத்தே வகுப்பே நடத்தும் அளவிற்கு முன்னேறிவிட்டார்.................. அந்தப் பெண்மணி இலங்கையில் ஒரு பல்கலையில் ஒரு பேராசிரியராக இருப்பதாக செய்திகளில் பார்த்திருக்கின்றேன். ஆங்கிலத்துடன், கராத்தேயும் கற்றுக் கொடுக்கின்றாரோ தெரியவில்லை............ உண்மையிலேயே மிகவும் துணிந்தவர் அவர்..........👍.
-
கண் கண்ட தெய்வம்
🤣......... அடுப்படி, கோவில் போன்ற இடங்களில் சுதந்திரத்தை உணர்கின்றார்கள் போல............. ஆனால் சமீபத்தில் சுமே அக்காவின் கதை ஒன்றில் வந்தது போல, அடுப்படியிலும் அவர்களின் சுதந்திரத்திற்கு இப்பொழுது தடைகள் வர ஆரம்பித்துவிட்டன.............
-
கண் கண்ட தெய்வம்
நீங்கள் போயிருந்தது இன்னொரு கோவில் என்று நினைக்கின்றேன், விசுகு ஐயா. அந்தக் கோவிலை பின்னர் மிகப் பெரிதாகக் கட்டினார்கள். அங்கு தான் சுற்றுலா வருபவர்கள் போவார்கள். அதே சுவாமி நாராயணன் கோவில் தான். இந்தப் பெரிய கோவில் என் வீட்டிலிருந்து ஒரு அரை மணி தூரத்தில் இருக்கின்றது. இங்கு குஜராத் மக்கள் மிகவும் வசதியானவர்களாக இருப்பதால், இதே கோவிலை பல இடங்களில் அமைத்திருக்கின்றார்கள். மாலிபு கடற்கரையுடன் இன்னொன்று இருக்கின்றது. மேல் கோவில் வெங்கடாசலபதி, கீழே இருக்கும் கோவில் சிவன். 'ஜீன்ஸ்' படத்திலும், வேறு படங்களிலும் இந்தக் கோவில் வந்திருக்கின்றது. இங்கு சுற்றுலா வருபவர்கள் அங்கேயும் போவார்கள். 🤣................ இந்த வழிபாடு எப்படி ஆரம்பாகியது என்பது தான் எப்போதும் தோன்றும் எண்ணம், அண்ணா....... சிவலிங்கம், சிவனைத் தவிர, எதைக் குறிக்கின்றது என்று எங்கள் எல்லோருக்கும் தெரியும். இது உலகம் முழுவதும் பல நாடுகளில், பல சமூகங்களில் இருந்த ஒரு வழிபாட்டு முறையே. மனிதர்கள் எப்படி இந்தக் குறியீட்டை தெய்வத்தின் வடிவமாக்கினார்கள் என்று தான் தோன்றிக் கொண்டேயிருக்கின்றது..........
-
கண் கண்ட தெய்வம்
வேறு பல நாடுகளில் வரும் பிரச்சனைகள் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன், நீங்கள் சொல்லியிருப்பதைப் போலவே............... ஆனால் இங்கே லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் நாங்கள் சிலர் மட்டுமே இருந்து கொண்டு, இங்கேயும் அதே பிரச்சனை வந்தது என்னும் போது, முதலில் நம்ப முடியாமல் இருந்தது, பின்னர் கொஞ்சம் அதிர்ச்சி ஆகவும் இருந்தது........😌 இடையில் சில விடயங்களை தவற விட்டிருந்தேன் என்று பின்னர் தெரிந்து கொண்டேன், வில்லவன். நீங்கள் சொன்ன பின் தான் முடிவிலும் ஒரு நிறைவு இல்லை புரிகின்றது. மனதில் இருந்தது சரியாக வெளியில் வரவில்லை என்று நினைக்கின்றேன். பொதுவாகவே எதையும் எழுத ஆரம்பித்தால் ஒரே மூச்சில் எழுதிவிடுவேன். இதை அவசரம் அவசரமாக எழுதும் போது, எண்ணமும் சொல்லும் வேறு வேறாகிப் போய்விட்டது........ ஐயர் குண்டாக இருக்க வேண்டும் என்று நினைத்து, அதை செயற்கை நுண்ணறிவுக்கு சொன்ன நான், முதலில் கதை முழுவதையும் எனக்கு சொல்லியிருக்க வேண்டும்..........🤣. மிக்கநன்றி வில்லவன். உங்களின் ஓவியங்கள், எழுத்து, வாசிப்பு எல்லாமே மிகக் கூர்மையானவை..........❤️.
-
கண் கண்ட தெய்வம்
மிக்கநன்றி அண்ணா. மனிதர்களின் சக்தி அளவற்றது தானே, அண்ணா...............🤣. இங்கு பின்னர் ஒரு இலங்கை தமிழர்களின் கோவிலும் ஆரம்பித்தது. என்னுடைய வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம். என்னுடைய மனைவி அவர் எப்போதும் போகும் பழைய கோவிலுக்கே போய்க் கொண்டிருந்தார். நான் என் வழியில் அவர் பின்னால் போய்க் கொண்டிருந்தேன்.............🤣. நாங்கள் இலங்கை தமிழர்களின் கோவிலுக்கு போவதில்லை என்று ஒரு சமயம் பிரச்சனையை கிளப்பிவிட்டார்கள். முகத்துக்கு நேரே எவரும் எதுவும் சொல்லவில்லை, ஆனாலும் சிலர் ஒன்றாகக் கூடும் போது, தேவைப்பட்டால் இதையும் கதைத்துக் கொண்டார்கள். பின்னர் என்னவோ ஏதோ நடந்து, அவர்கள் இரண்டாக உடைந்தார்கள். இன்னொரு கோவிலை ஆரம்பித்தார்கள். அவர்களின் பூசகர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாறினார். இன்னொரு பூசகர் வந்தார். கூட்டம் இரண்டாகியது. ஒரு கூட்டம் மறு கோவிலுக்கு போவதில்லை. இப்பொழுது அந்த இரண்டு கோவில்களும் மூடப்பட்டு விட்டன என்று சொல்கின்றனர். கடவுள்களை உருவாக்கி, பிரித்து, அழிக்கும் மனிதர்களின் சக்தி அளவற்றது தானே...........🤣.
-
சிம்பொனி என்றால் என்ன?
தமிழ் இலக்கிய உலகில் அறவே இல்லை என்று நினைக்கின்றேன். ஆனால் தமிழ்ச் சினிமா உலகில் இப்படி இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்பொழுது இயக்கம் என்று மட்டும் போடும் இயக்குனர்களே கிடையாது................ எழுத்து & இயக்கம் என்று போடுபவர்களே எல்லோரும். இந்த எழுத்து எனப்படும் கதை & திரைக்கதையின் முதல் பிரதியில் உதவி இயக்குனர்களின் பங்கில்லை. வேறு சிலரே மறைவில் இருந்து எழுதிக் கொடுக்கின்றார்கள் போல..............
-
கண் கண்ட தெய்வம்
மிக்கநன்றி ஓணாண்டியார்................ நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரியே. இந்த மாற்றங்களை பதிவு செய்தே ஆகவேண்டும் என்று தான் ஆரம்பித்தேன். அத்துடன் இந்த வாரம் யாழில் ஒன்றும் எழுதவில்லையே என்பதும், தனிப்பட்டவகையில், எனக்கு ஒரு குறையாக இருந்தது. அவசர அவசரமாக மிகவும் சுருக்கி எழுதிவிட்டேன் என்று பின்னர் புரிந்தது......... எங்கேயும் பின்னுக்கு இருக்கும் போது கொஞ்சம் ஒட்டாத தன்மை ஒன்று, விலகி நின்று பார்க்கும் போக்கு ஒன்றும் இருக்கின்றது போல என்று நான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்........... சரியாகத் தெரியவில்லை, ஆனால் பிடித்திருக்கின்றது...............🤣.
-
சிம்பொனி என்றால் என்ன?
🤣................ சாரு இந்த வாரம் இன்னோரு கட்டுரையில் கிட்டத்தட்ட இப்படி எழுதியிருந்தார்: என்னுடைய 75 புத்தகங்கள் இப்பொழுது விற்பனையில் இருக்கின்றது. விற்பனையின் மூலம் எனது பங்காக வருடத்திற்கு ஒரு இலட்சத்திற்கும் கொஞ்சம் அதிகமாக வருகின்றது. மாத வருமானம் பத்தாயிரம் ரூபாய் சொச்சம். இதை வைத்துக்கொண்டு நான் சென்னையில் எப்படி வாழ்வது....................... நான் இந்தச் சமூகத்திற்காகத்தானே என்னை வருத்தி எழுதிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் தான் என்னைப் பார்க்கவேண்டும்..................தெருமுனையில் இஸ்திரி போடுபவரே மாதம் இருபதினாயிரத்தை விட அதிகமாக பெறுகின்றார். இந்த விடயத்தில் சாருவில் அன்றிலிருந்து இன்றுவரை எந்த மாற்றமும் இல்லை. தமிழில் முழுநேர எழுத்தாளராக வாழவே முடியாது, விதிவிலக்கு ஜெயமோகன் போன்ற ஓரிருவர், அதுவும் விட்டுக் கொடுப்புடன் சினிமாவில் பணியாற்றுவதால்........ தமிழில் இலக்கியம் எழுதி சம்பாதிக்கவே முடியாது....... முடிந்தால் இலவசமாக எழுதுவதே உள்ளவற்றில் நல்ல தெரிவு.................🤣.
-
சிம்பொனி என்றால் என்ன?
எழுத்தாளர் சாரு இந்த வாரம் இந்த நிகழ்வு பற்றி இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கின்றார். இளையராஜாவின் மீதான சாருவின் பார்வை முன்னரே தெரிந்தவர்களுக்கு 'இசையும் சமூகமும்' என்னும் கட்டுரையால் அதிர்ச்சி ஏதும் ஏற்படாது. அவரின் தளத்தில் பல கட்டுரைகள் இதே பார்வையுடன் இருக்கின்றன. 'ஸிம்ஃபனி' என்னும் கட்டுரை மிகச் சிறியது, ஆனால் முக்கியமானது. லிடியன் நாதஸ்வரம் என்ற 20 வயதுகள் ஆன தமிழ் இளைஞர், இசைக் கலைஞர் அடுத்த வருடம் சர்வதேச இசை நாள் அன்று தான் ஒரு ஸிம்ஃபனி அரங்கேற்றப் போவதாகச் சொல்லியிருக்கின்றார். இணையத்தில் போய்க் கொண்டிருக்கும் லிடியன் - இளையராஜா உரசல்களின் பின்னணி இதுவே. இசையும் சமூகமும்: https://charuonline.com/blog/?p=15463 ஸிம்ஃபனி: https://charuonline.com/blog/?p=15461
-
கண் கண்ட தெய்வம்
இந்த வாரம் சுய ஆக்கங்கள் பகுதியில் எதுவும் எழுதவில்லையே என்று அவரசரமாக எழுதிப் போட்டதில், இதே கதையில் பதியப்பட்டிருக்க வேண்டிய ஒரு முக்கிய விடயத்தை எழுத மறந்துவிட்டேன். பின்னர் இதே கதையை எப்போதாவது விரித்து எழுதினால், அப்போது அதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். இங்கு ஆரம்பிக்கப்பட்ட கோவில்கள் ஆரம்பத்தில் எவ்வாறு ஒரு சமூக நீதியுள்ள கோவில்களாக இருந்தன என்றும், பின்னர் காலப்போக்கில், மக்கள் திரள் அதிகம் ஆக ஆக, அதே கோவில்கள் ஒரு பிரிவினரால் எப்படி கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும் எங்காவது பதிய வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்தக் கதை அதற்கு மிகவும் பொருத்தமான இடம். இவ்வாறான கோவில்களில் ஏற்பட்ட அதிகார மாற்றத்தால் நடந்த சில சம்பவங்கள் முன்பு ஊரில் நடந்தவற்றுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாதவை..................🫣.
-
தூத்துகுடி கொத்தனாரு….
இதே போன்ற முயற்சிகளில் இந்த துறையில் இப்பொழுது தான் பிரபலமானாலும், இலக்கிய உலகில் இது போல காலத்துக்கு காலம் நடந்து கொண்டேயிருக்கின்றது.சில ஈழப் பின்புலம் உள்ள எழுத்தாளர்கள் உட்பட சிலர் மிகவும் வெளிப்படையாகவும், பல இடங்களில் வேண்டும் என்றே திணித்து எழுதுவது போன்றும் எழுதிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான சொற்களும், விவரணைகளும் இருந்தாலே அது ஒரு உச்சமான இலக்கியம் என்றும் ஒவ்வொரு காலத்திலும் ஒரு பிரிவினரால் கருதப்படுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் வெறும் வார்த்தை ஜாலங்கள், அது எந்த வகை என்றாலும், டி ராஜேந்தர் வகை என்றாலும், அராத்து வகை என்றாலும், தூத்துக்குடி கொத்தனார் வகை என்றாலும், காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போய்விடும். ஒரு உடனடி மனக் கிளர்ச்சியை மட்டுமே கொடுக்கும் எந்த படைப்பும் நீண்ட காலம் தங்கி நிற்பதும் இல்லை. ஒரு மனிதனின் அடிமனதில் போய் தங்கி நிற்பதுக்கு எதுவும் இல்லாத எந்த வகையான படைப்பும் மறைந்து விடும் என்பதே என் அனுபவம்.
-
கண் கண்ட தெய்வம்
🤣............... மிக்க நன்றி சுவி ஐயா. 'கணவனே கண் கண்ட தெய்வம்..........' என்று சொல்லும் ஒரு வழக்கு இருந்தது.............. ஆனால் உண்மையில் யார் தான் கண் கண்ட தெய்வம் என்று கொஞ்சம் வேடிக்கையாக எழுத முயற்சி செய்திருந்தேன்............
-
"அமெரிக்க விருந்தாளி" நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை 15/3.
வாழ்த்துகளும், மிக்க மகிழ்வும் தியா.
-
கண் கண்ட தெய்வம்
கண் கண்ட தெய்வம் ---------------------------------- வரிசை நீண்டு உள் வாசலைத் தாண்டி வெளிவரை வந்திருந்தது. நான் வருவதற்கு கொஞ்சம் சுணங்கிவிட்டது. வேறு வழி இல்லை, இவ்வளவு தூரம் வந்தாகி விட்டது, வரிசையில் நின்று கடமையை முடித்து விட்டே போவோம் என்று வரிசையின் முடிவில் நின்றேன். வீட்டுக்கு போய் செய்வதற்கும் வேலைகள் என்றும் ஏதும் இல்லை. தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு அலைவரிசையில் முன்னரே பார்த்த, பிடித்த படம் ஏதாவது ஓடினால், அதை மீண்டும் பார்க்கலாம், அவ்வளவுதான். இப்பொழுது எல்லாம் புதிதாக எந்தப் படத்தையும் பார்ப்பதற்கு பொறுமை இல்லை. மனைவி இருந்திருந்தால் சிவராத்திரிக்கு எப்போதோ கோவிலுக்கு வந்திருப்பார். பின்னர் 'நீங்கள் இப்ப வரலாம்...........' என்று ஒரு செய்தியை கோவிலில் இருந்து சரியான நேரத்துக்கு அனுப்பியிருப்பார். வீட்டிலிருந்து ஒரு பதினைந்து நிமிட நேர தூரத்தில் தான் கோவில் இருக்கின்றது. ஒரு இருபத்து ஐந்து வருடங்களின் முன் இது ஒரு தேவாலயமாக இருந்தது. இப்பொழுது கூட கோவிலின் கூரைக்கு மேலால் நீண்டு நிற்கும் ஒரு மெல்லிய நீண்ட கூம்பு வடிவிலான தேவாலயக் கோபுரத்தை பார்க்கலாம். அன்று இங்கு வர்த்தகம் செய்து வசதியாக இருக்கும் குஜராத் மக்கள் இந்த இடத்தை தேவாலயத்துடன் சேர்த்து வாங்கினார்கள். தேவாலயத்தில் சில மாற்றங்களை செய்து அதை ஒரு கோவிலாக மாற்றினார்கள். அதன் அருகிலேயே இன்னொரு பெரிய கோவிலையும், குஜராத் முறைப்படி, கட்டினார்கள். அதை மந்திர் என்று சொல்லுகின்றார்கள். சிவபெருமான், அம்மன், பிள்ளையார், முருகன் என்று தென்னிந்திய மக்களுக்கு தேவையான கடவுள்களை பழைய கோவிலும், புதிய கோவிலில் வட இந்திய மக்களுக்கு தேவையான கடவுள்களையும் வைத்தார்கள். ஒரே ஒரு தடவை இந்த மந்திருக்குள் போயிருக்கின்றேன். அது ஒரு அயலவரின் மகனின் திருமண நிகழ்வு. அவர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் தான். மந்திருக்குள் சுவாமியின் முன் பெண்கள் அரைவட்ட வரிசைகளில் அமர்ந்து இருந்தார்கள். அதன் பின் ஒரு சின்ன இடைவெளி விட்டு ஆண்கள் அமர்ந்து இருந்தார்கள். எப்பவுமே, நித்திய பூசையில் கூட, இப்படித்தான் இருப்பார்களாம். பெண்களுக்கும், ஆண்களுக்கும் பின்னால் நான் நின்று கொண்டிருந்தேன். எங்கே போனாலும் பின்னுக்கு நிற்பது அல்லது இருப்பது என்பது சௌகரியமாக இருக்கின்றது. பின் வரிசைக்கு பின்னால் இருந்து எவரும் கவனிக்காமல் இருப்பது ஒரு சுதந்திரமான உணர்வைக் கொடுக்கின்றது போல. தென்னிந்தியக் கடவுள்கள் இருக்கும் கோவிலில் ஆரம்பத்தில் ஒரு வட இந்தியரே பூசை வைத்தார். அப்பொழுதெல்லாம் இங்கு இந்தியர்கள் வெகு குறைவு. ஒரு சிலர் மட்டுமே கோவிலுக்கு வந்து போவார்கள். என்னுடைய மனைவி மிகவும் ஒழுங்காகப் போய் வருவார். அங்கிருந்த கடவுள்களுக்கு அந்த வட இந்திய பூசகருக்கு அடுத்தபடியாக மிகவும் பழக்கமானவர் என் மனைவியே. விசேட நாட்களில் மட்டும் என்னை கோவிலுக்கு வரச் சொல்லுவார். அதுவும் ஒரு குறுகிய நேரத்துக்கு மட்டுமே. இருவருக்கும் ஒருவரை ஒருவர் மிகவும் நன்றாகத் தெரிந்திருப்பதால், இந்த விடயத்தில் நாங்கள் இருவரும் முட்டி மோதிக்கொண்டதில்லை. பின்னர் ஒரு தமிழ் பூசகர் தென்னிந்தியாவில் இருந்து வந்தார். தமிழ் தான் அவருடைய மொழி என்றாலும் வேறு பல மொழிகளும் கதைப்பார். ஆங்கிலத்தைக் கூட தமிழ் போன்ற ஒரு உச்சரிப்பு மற்றும் நிறுத்தங்களுடன் தயக்கமில்லாமல் நீட்டாக கதைப்பார். நல்ல குரல். அருமையாகப் பாடுவார். எல்லோருக்கும் அவரைப் பிடித்துவிட்டது. அத்துடன் இந்தியர்களும் பெருமளவில் இந்த நாட்டிற்கு வர ஆரம்பித்துவிட்டார்கள். வந்தவர்கள் அப்படியே கோவிலுக்கும் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பித்தனர். பூசகருக்கு என்னைத் தெரியாது. ஆனால் நான் மனைவியுடன் போவதால், 'சார் வாங்கோ..............சௌக்கியமா.............' என்று நன்றாகப் பழகியவர் போலக் கேட்பார். ஓரிரு தடவைகள் மனைவியினால் போக முடியாத போது, பாலோ பழங்களோ திரவியங்களோ கொடுக்க நான் போயிருக்கின்றேன். பூசகர் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை. முதல் தடவை ஏமாற்றமாக இருந்தது. அதன் பின்னர் எதிர்பார்ப்பை மிகவும் குறைத்தே வைத்திருந்தேன். மனைவியும், பிள்ளைகளும் இன்னொரு நாட்டிற்கு ஒரு குடும்ப விசேடத்திற்கு போயிருந்தனர். என்னால் போக முடியாத நிலை. தை மாதத்தில் இருந்து சித்திரை நடுப்பகுதி வரை எனக்கு வேலை அதிகம். வேலையில் வேலை இல்லாவிட்டாலும், இந்த நான்கு மாதங்களில் விடுமுறை எடுப்பதை தவிர்க்குமாறு சொல்லியிருக்கின்றார்கள். மற்றைய மாதங்களில் முழுச் சுதந்திரமும் இருப்பதால், இது ஒன்றும் அநியாயமாகத் தெரியவில்லை. இதனால் குடும்ப விசேடத்தில் பல வருடங்களின் பின் காணும் சிலரின் 'என்ன, உங்களுக்கு இப்படி வயதாகிப் போட்டுதே.............' என்ற அழகியல் விமர்சனங்களையும் கேட்க முடியாமலும் போய்விட்டது. வரிசை மெதுமெதுவாக அசைந்தது. நான் கோவிலுக்குள் மண்டபத்துக்குள் வந்திருந்தேன். மண்டபத்தின் நடுவே கொடித்தம்பத்திற்கு அருகில் ஒரு சிவலிங்கத்தை வைத்திருந்தார்கள். அதன் அருகே பால் கலன்கள் பல இருந்தன. இன்று எல்லோருமே பால் கொண்டு வருவார்கள். நான் தனியாக இருப்பதால் பால் கொண்டு வரவில்லை. அடுத்த தடவை ஏதாவது ஒரு காரணம் சொல்லி மனைவியிடம் இரண்டு கலன்களாக கொடுத்து விடுகின்றேன் என்று மனதாரச் சொன்னேன். வரிசையில் நிற்கும் ஒவ்வொருவரும் சிவலிங்கத்திற்கு மூன்று தடவைகள் பாலால் அபிஷேகம் செய்வார்கள். பின்னர் சிவலிங்கத்தை சுற்றிக் கும்பிடுவார்கள். சிலர் அதிக நேரம் எடுப்பார்கள். கூட்டமும் இப்ப மிக அதிகம். அதனால் தான் வரிசை நீண்ட பெரிய மலைப்பாம்பு போல அசைந்து கொண்டிருந்தது. இங்கு வந்து போவர்களுக்கு பல சடங்குகளும், சம்பிரதாயங்களும் நன்றாகவே தெரிந்திருக்கின்றது. மந்திரங்கள் கூட தெரிந்திருக்கின்றது. பூசகருடன் சேர்ந்து வடமொழியில் பலரும் சொல்லுகின்றனர். எனக்கு 'வேதம் புதிது' போன்ற சினிமா படங்களில் வந்த சில வரிகளை மட்டும் அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது. மற்றபடி சமஸ்கிருதத்தின் ஓசை நல்லாவே இருக்கின்றது என்ற ஒரு பொதுப்படையான அபிப்பிராயம் மட்டுமே இருக்கின்றது. இரவு முழுவதும் தொடர் பூசைகள், யாகங்கள் என்று ஒரே கூட்டமாக இருக்கும். பல பூசகர்களும் வந்திருந்தனர். வழமையான பூசகர் தான் இன்றும் பெரிய ஆள். மண்டபத்தின் ஒரு பக்கத்தில் அவரைச் சுற்றி மற்றைய பூசகர்கள் அமர்ந்து யாகம் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரே குரலில் மந்திரங்களோ சுலோகங்களோ சொல்லிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த சின்னக் கிண்ணத்தில் பாலை வார்த்து சிவலிங்கத்தின் உச்சியில் விட்டேன். அது சிவலிங்கத்தின் எல்லாப் பக்கங்களிலும் வழிந்து ஓடியது. பளிங்கு கறுப்பில் பால் வடிந்து கோடு கோடாக ஓடுவது அழகாக இருந்தது. குனிந்து மூன்றாவது தடவை கிண்ணத்தில் பாலை நிரப்பிக் கொண்டிருக்கும் போது, 'என்ன சார்................ அம்மா எங்கே................' என்றபடியே பூசகர் முன்னுக்கு நின்றார். அம்மா ஊரில் இல்லை என்று தட்டுத்தடுமாறி சொன்னேன். கையில் ஒரு மாலை வைத்திருந்தார். அதை என் கையில் திணித்தார். இதே போன்ற மாலைகளை வீட்டில் இருக்கும் பூஜை அறையில் நான் பார்த்திருக்கின்றேன்.
- APriest.jpg
-
எடப்பாடி முதல்வர் வேட்பாளர் இல்லை.. சீமான்தான்.. பாஜக மாஸ்டர்பிளான்.. ரவீந்திர துரைசாமி பளீர்
🤣............... இந்த ரவீந்திரன் துரைசாமி சும்மாவே இருந்திருக்கலாம்................