Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. யோகா அவர்களது மார்க்கத்திற்கு எதிரானது, ஆதலால் அது அவர்களிடையே தடைசெய்யப்பட்ட ஒன்று என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றேன்...........
  2. தென் ஆபிரிக்கா 6 ஒவர்களில் 63/0....... இரண்டு அணிகளின் தலைவர்களும் தாங்கள் நாணயச் சுழற்சியில் வென்றால் பந்து வீச்சை தான் தெரிவு செய்வோம் என்றனர். Swing, bounce, moisture.............. என்றனர். அப்புறமாக அடி அடி என்று அடித்துக் கொண்டிருக்கின்றனர்.............. ஒரு குத்து மதிப்பா தான் சொல்லியினமோ..........
  3. பல வருடங்களின் முன் ஒரு படம் பார்த்திருக்கின்றேன். பிரெஞ்ச் படம் என்று ஞாபகம், ஏதோ ஒரு ஃபிலிம் பெஸ்டிவலில். ஒரு தந்தையும், மகனும் இந்தக் கடமைக்காக பிரான்சில் இருந்து மெக்கா போகின்றனர். இருவருக்கும் சுத்தமாக ஆகாது. குடும்பத்தின் வற்புறுத்தலில் வழித் துணையாக மகன் போகின்றார். வழியில் இன்னும் பிரிவினை அதிகமாகின்றது. ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில், ஞாபகமில்லை, மகன் தந்தையை புரிந்து கொள்கின்றார். தந்தை மெக்காவில் இறந்து போகின்றார். இறந்த உடல்களை ஒரு நிலவறையில் வரிசையாக அடுக்கி வைத்திருக்கின்றனர். அங்கேயே இறுதிச் சடங்குகள் செய்யும் வசதிகளும் இருந்ததாகவும் ஒரு ஞாபகம்.......
  4. 🤣......... தலை பத்திரம்............... ஒரு விலை வைத்து விடுவார்கள்.........🤣.
  5. நல்ல தகவல்கள். இல்லை, எனக்கு இதில் அனுபவம் இல்லை. Gatorade பற்றி வந்த சில கட்டுரைகளை வாசித்திருக்கின்றேன். மற்றும் அப்பப்ப வரும் செய்திகள். லயனல் மெஸ்ஸியின் புதிய தொழில் பற்றிய செய்தி போன வாரம் இங்கே வந்திருந்தது.
  6. 🤣......... சென்னை, திருச்சிக்கும் சேர்த்தே சோதனை வந்திருக்குது............
  7. தென் ஆபிரிக்கா எப்பவோ தோற்றிருக்க வேண்டும். நாளைக்கு மட்டும் என்ன புதுசாக நடக்கப் போகுது.... தோற்கும் நிலையில் இருந்து பின்னர் வென்றாலும் வென்று விடுவார்கள்................. நானும் நேற்று நடந்ததை ஒரு கெட்ட கனவாக மறந்து விட்டேன்.........🤣.
  8. இவை இரண்டும் தான் என்று நானும் நினைக்கின்றேன். எந்த புதிய நிறுவனத்தின் பொருட்கள் சந்தையில் வெற்றிகரமாக வந்தாலும், இவர்கள் இருவரில் ஒருவர் அதை வாங்கி, தங்களுடையதாக மாற்றிக் கொள்வார்கள். இங்கு கிட்டத்தட்ட எல்லா தொழில்களுமே அப்படித்தான்......... உங்கள் ஆராய்ச்சி அனுபவத்தை, நேரமிருந்தால், சுருக்கமாகவேனும் எழுதுங்கள். நாங்களும் இதன் பின்னால் இருக்கும் விடயங்களை அறிந்து கொள்கின்றோம். தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள், விளையாட்டுகள் மற்றும் இங்கு காஸ்ட்கோவில் எதை பெட்டி பெட்டியாக விற்கின்றார்கள் என்ற அளவில் தான் இருக்கின்றது எங்களின் தெரிவிற்கான காரணங்கள்.......
  9. 👍.... இதில் எதுவும் சட்ட விரோதமானது இல்லை. அவருடைய மனைவியின் சொத்தையே இந்த தொழிலில் முதலிடுகின்றார் என்று நான் சொல்ல வரவில்லை. அவர் மிகவும் செல்வாக்கானவர் என்றே சொல்ல வந்தேன். முதலீட்டாளார்களை கவர்ந்திழுப்பதற்கு இது அவருக்கு உதவும். முரளியின் சொத்து மதிப்பு 9 மில்லியன் டாலர்கள் தான் என்றால், இந்திய ரூபாயில் 70 அல்லது 75 கோடிகள், அது ஒன்றுமேயில்லை. டாக்டர் ராமமூர்த்தியின் சொத்து மதிப்பு எனக்குத் தெரியாது. சில நூறு கோடிகளாக இருக்கலாம். முதலீட்டாளர்கள் தான் இங்கு தேவை. Sports Drinks இன்று உலகெங்கும் கடகடவென்று வளரும் ஒரு பெரிய தொழில். இங்கு அமெரிக்காவில் லயனல் மெஸ்ஸி ஒன்றை ஆரம்பிக்கின்றார். Kobe Bryant இறப்பதற்கு முன் இதில் இருந்தார். கடந்த வருடம் அவருடைய நிறுவனத்தை கோக் வாங்கியது என்று நினைக்கின்றேன், அல்லது பெப்ஸி, இரண்டில் ஒன்று. கோபேயின் பங்காக 600 அல்லது 700 மில்லியன் டாலர்கள் வந்தது. இன்னும் சில பிரபல வீரர்களும் இதில் இருக்கின்றனர். Electrolytes, Alkaline Water, ..... இப்படி ஏதாவது சொல்லி, அவர்களும் நண்பர்களும் விளம்பரத்தில் வந்து, அவர்களின் ஒவ்வொரு சதங்களையும் பல டாலர்களாக மாற்றி விடுகின்றனர். அதே பழைய குளிர் தண்ணீருக்குள் ஒரு எலுமிச்சையையும், கொஞ்ச உப்பையும் போடுவதற்கு இன்னும் எதுவும் ஈடாகவில்லை, ஆனாலும் மார்க்கெட்டிங் என்று ஒன்று இருக்குதல்லவா.........
  10. 👍... சமீப தேர்தல் தோல்வியால் மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்து விட்டார்கள். அத்துடன் மாம்பழமும் போய் விட்டது. ஆனாலும் பாஜகவின் பங்காளிகள் என்றபடியால், மாழ்பழத்தை திரும்பவும் கொடுப்பார்கள். வாசனுக்கு சைக்கிள் சின்னத்தை உடனேயே கொடுத்தது போல. இடைத்தேர்தல்கள் மாநில தேர்தல் ஆணையங்களாலேயே நடத்தப்படுகின்றது என்கின்றனர். சத்ய பிரதா சாகு தான் தமிழக தேர்தல் தலைமை அதிகாரி, முடிவுகளை எடுப்பவர். அவருக்கு தான் மத்தியிலிருந்து நெருக்கடிகள் கொடுக்கப்படும்.
  11. 'நெடுந்தீவிற்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது.....' என்ற வரியையும், தயவு செய்து, சேர்த்து வாசிக்கவும்...........
  12. மக்களா.........இவர்களின் சில 'இன சனங்கள்' மட்டும் என்று தான் சொல்ல வேண்டும். தைலாபுரம் ஒரு ஜமீன் ஆகியது, அங்கு குடியிருப்பவர்கள் ஜமீன்தார்கள் ஆனார்கள் என்பது தான் இவர்களின் சாதனை.........
  13. அவர் மட்டும் என்றில்லை, அண்ணை......... முக்கியமாக இன்னும் பலரையும் காணவில்லை. திமுக அரசு என்றவுடன் ஒரு அறிக்கை கூட விடாமல் மௌனமாகவே இருக்கின்றார்களே......உதயநிதிக்கும், அவரின் ரெட் ஜயண்ட்ஸ்ஸிக்கும் அவ்வளவு பயம்.........ஜி வி பிரகாஷ் பரவாயில்லை போல, இது அரசின் தவறு என்று ஒரு அறிக்கையாவது விட்டுள்ளாரே..... ரஜனி எல்லாம்.........செருப்பால் என்னை நானே அடிச்சாலும் மனம் ஆறாது. ஏழு பேர்கள் விடுதலை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, யார் அந்த ஏழு பேர்கள் என்று கேட்டவர் தானே. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் போராடியவர்கள் சமூக விரோதிகள் என்றும் சொன்னவர். இப்ப, அம்பானி வீட்டு கல்யாண வீட்டில், அம்பானி கைலாசத்தையும், வைகுண்டத்தையும் ஒன்றாக பூமிக்கு கொண்டு வந்து விட்டார் என்றவர்....... இந்த மனிதனைப் பற்றி எழுதுவதை விட, குப்புறப் படுத்துக் கிடக்கலாம்...........
  14. அந்தப் பிள்ளைகளின் கல்விச் செலவை 10 ஆண்டுகளிற்கு, மாதம் 5000 ரூபாய்கள், அதிமுக ஏற்றுக் கொள்ளும் என்று எடப்பாடியார் இப்பொழுது அறிவித்திருக்கின்றார். திரை மற்றும் இன்ன பிற பிரபலங்களை இன்னும் அங்கே காணவில்லை.......... விஜய் தவிர.
  15. இறந்த ஒரு தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாக ஒரு செய்தியில் இருந்தது. அவர்கள் இவர்களின் பிள்ளைகளோ தெரியவில்லை......... ஏதாவது நிரந்தரமாக பிள்ளைகளுக்கு வருவது போன்று செய்தார்கள் என்றால் மிக்க நல்லது.
  16. உங்களின் பேத்தி மிகவும் விரைவாக குண்மடைந்து விடுவார் அண்ணை, யோசிக்காதேங்கோ. அன்று நீங்கள் அவசரம் அவசரமாக கலிஃபோர்னியா வந்தேன் என்று சொன்னவுடனேயே, மனதிற்குள் கொஞ்சம் யோசனையாக இருந்தது.
  17. அதிமுக ஆட்சியில் பதுங்கி இருக்கும் ரவுடிகளும், சமூக விரோதிகளும் திமுக ஆட்சியில் வெளியில் வந்து அராஜகம் செய்வது காலம் காலமாகவே தொடருவது. ஸ்டாலின் இந்த விசயத்தில் உசாராக இருந்து ஒரு மாற்றத்தை ஏறபடுத்துவார் என்று பார்த்தால், அவரும் அதே பழைய குதிரையில் ஏறி சறுக்கி விழுந்து கொண்டிருக்கின்றார். எல்லோர் மனதையும் கலங்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த விஷச் சாராய மரணங்களாவது, அரசினதும், அரச நிர்வாகத்தினதும் மற்றும் முழுச் சமூகத்தினதும் மனச்சாட்சியை தட்டி எழுப்ப வேண்டும்........😔.
  18. 🤣....... அப்படிச் சொல்லுங்க ஐயா..........மச்சம் மட்டுமே சாப்பிட்டு வளர்த்த உடம்பு இது எல்லே....... இப்ப அடுத்த இரண்டு புள்ளிகள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன......🤣
  19. அண்ணன் அவசரம் அவசரமாக கரீபியனுக்கு போய் இருக்கின்றார்......... நம்ம அணிக்கு பந்துவீச்சில் சில நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து விட்டு இப்ப வந்து விடுவார்.......... முன்னமே சொல்லியிருக்கின்றேன்........ யானை சரிந்தால் குதிரை.....இது ஒரு சின்ன சரிவு தான், யானையாக இருந்த அண்ணன் இப்பொழுது குதிரையாகி இருக்கின்றார்........😜.
  20. நீங்கள் சொல்வது போலவும் இருக்கக் கூடும். அத்துடன் இவர் தமிழ்நாட்டில் திருமணம் முடித்ததும் மிகப்பெரும் பணக்கார குடும்பம் ஒன்றிலேயே. 'மலர் ஹாஸ்பிடல்ஸ்' என்று தனியார் மருத்துவமனைகளை நடத்தி வரும் ராமமூர்த்தியின் மகளான மதிமலரே இவரின் மனைவி. இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எவரும் கிரிக்கெட்டில் பெரிதாக சம்பாதிக்கவில்லை. இவரின் இலங்கையில் இருக்கும் தொழிற்சாலை மிகவும் இலாபகரமானது என்ற தகவல் அந்த சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதுகாக்கும் அமைப்பால் வெளியிட்ட அறிக்கையில் இருந்ததாக ஒரு நினைவு. அப்பொழுதே இவர் ராஜபக்சாக்காளின் கூட்டத்தில் ஒருவர் என்றும் சொன்னார்கள். கச்சதீவை இந்தியா மீட்டால் மீன் வளம் அதிகரிக்கும் என்று ஒரு காரணமும் சொல்கின்றனர். இப்பொழுது கச்சதீவு இலங்கையிடம் இருப்பது தெரிந்து, அந்தப் பகுதியில் நீந்தும் மீன்கள் எல்லாம் வேற எங்கேயோ போய் முட்டை போடுகின்றன போல........🤣
  21. அது நாங்கள் தான், நாங்கள் தான்....... விக்கெட்டாய் விழுந்து போனோம்...சிக்ஸராக மீண்டும் பறந்து வருவோம்.....🤣
  22. 👍.... 3 சிக்ஸர், 3 ஃபோர்..... நல்ல காலம் ஒரு பந்தும் வந்து என் வீட்டுக் கூரையில் விழவில்லை....🤣
  23. இங்கிலாந்து மேற்கிந்தியாவை வென்றது என்றும் சொல்லலாம், ஆங்கிலேயர்கள் மேற்கிந்தியாவை துவம்சம் செய்தார்கள் என்றும் சொல்லலாம்.
  24. 🤣...... கதையோட கதையாக ஐநா சபை அமெரிக்காவின் கைப்பாவை என்றும் சொல்லி விட்டீர்கள்...... நல்ல நாடு தான்..... ஆனால் நினைப்பு கொஞ்சம் கூட.....🤣
  25. 🤣..... விளங்கவில்லையா.... 51 பக்கங்களையும் முதலில் இருந்து திரும்பவும் படிக்கச் சொல்லி விடுவார்கள்....🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.