Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. நீங்கள் சொல்வது போலவே ஜாதி பேதம் அழிந்தால் அது இன்னொரு புதுயுகமாகவே இருக்கும். ஆனால் உண்மையில் நிலைமை தேய்ந்து கட்டெறும்பு ஆகிக் கொண்டல்லவா போகின்றது. அவர்களின் மாட்ரிமோனியல் வெப்சைட்டுகளை பார்த்திருப்பீர்கள் தானே, ஒவ்வொருவருக்கும் ஒன்றல்லவா இருக்கின்றது. அதில் பெருமை வேறு கொள்கின்றார்கள். இந்தப் பாடலும், வள்ளிக் கும்மியும் சமீபத்தில் பெரிய எடுப்பில் கொங்கு மண்டலம் எங்கும் கொண்டாடப்பட்டது: "சத்தியம் சத்தியமே, சின்னமலை சத்தியமே! கல்யாணம் செய்துக்கிறோம், கவுண்டர் வீட்டு பையனையே! இது போதும், இது போதுமே, எனக்கு வேறு ஏதும் வேண்டாம், அம்மா!" ஒவ்வொரு ஊர்களிலும் ஆயிரக்கணக்கான அவர்களின் இளம் பெண் பிள்ளைகள் பங்கு பற்றியிருந்தார்கள். உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நாங்கள் இங்கே கதைக்கும் தேசியம் இவர்களிடம் என்று போய் சேரும்? ஓரிரு மிகப் பெரிய நகரங்களை விட, மற்ற இடங்கள் எல்லாமே ஏதோ ஒரு 'பெல்ட்' என்று தானே இன்றுவரை அடையாளப்படுத்தப்படுகின்றது. பாமக அவர்களின் தேர்தல் அறிக்கையிலேயே 'ஏமாற்றுக் காதல்' பற்றி சொல்லியிருந்தனரே. திருமண வயதை 21 ஆக கூட்டுவோம் என்றது அது. அது தெட்டத் தெளிவாக பட்டியலின மக்களுக்கு எதிரான ஒரு எச்சரிக்கை தானே. ஆணவக் கொலைகளை நியாயப்படுத்தும் ஒரு முயற்சியும். இது எங்கே மாறுது. எங்கேயும், எதுவும் மாறவில்லையே. நாதகவும் இதில் எதையும் மாற்றவில்லையே. மாற்ற முயலவும் இல்லையே. நீட் சோதனையால் அனித்தா முதலாவதாக இறந்த பின், நாதக போராட்டத்திற்கு போகவில்லையே. விசிகவும், கம்யூனிஸ்டுகளும் தானே முதலாவது போராட்டத்தை ஆரம்பித்தனர். காரணம் என்னவென்று ரஞ்சித் ஒரு தடவை சொல்லியும் இருக்கின்றார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் முதலில் முன்னுக்கு நின்றது வைகோ. நாதக அங்கே ஆரம்பத்தில் போகவில்லை. இன்றும் இதுவே தான் நிலைமை. தொல்.திருமாவும், சீமானும், ரஞ்சித்தும் ஒரே மேடையில், ஒரே போராட்டத்தில் அமர்வார்களா, இல்லை தானே. எல்லோரையும் உள்வாங்காமல் அதை எப்படி உண்மையான தேசியம் என்று நாங்கள் சொல்ல முடியும்? எங்களிற்கு ஒரு தலைவர் இருந்தார். அவர் எங்கள் எல்லோரையும் உள்வாங்கி இருந்தார். அதனால் தானே அவரை தேசிய தலைவர் என்று நாங்கள் சொன்னோம். சமீப காலங்களில் தமிழக அரசியலில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்கள் என்றால் அது கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரே. விஜய்காந்திற்கும் எந்த அடையாளமும் இருக்கவில்லை. நாதகவோ, சீமான் அவர்களோ இந்த வரிசையில் இல்லை. அதனால் தான் ஒவ்வொரு தேர்தலிலும் முன்னரை விட அதிக வாக்குகளை அவர் பெறுவார் என்பது வெறும் ஊகம் என்பது என் அபிப்பிராயம்.
  2. 👍.... இவருடைய பெயரை மட்டும் சில செய்திகளில் பார்த்தும் மற்றும் நண்பர்கள் சொல்லக் கேட்டும் இருக்கின்றேன். பல வருடங்களாக கிரிக்கெட் பார்ப்பதில்லை. இங்கு களத்தில் நடக்கும் போட்டியால், @வீரப் பையன்26 மற்றும் @ஈழப்பிரியன் அண்ணையின் உந்துதலால் பார்க்க ஆரம்பித்து, முதல் தடவையாக இவரின் பந்து வீச்சை பார்க்கின்றேன். இந்தியாவிலிருந்து இப்படி ஒரு பந்து வீச்சாளரா என்று நம்ப முடியாமல் இருக்கின்றது. கபில், ஶ்ரீநாத், மனோஜ் பிரபாகர், வெங்கடேஷ் பிரசாத்.....என்று தான் தெரியும், இவர் பும்ரா இன்னொரு பரிமாணம்........
  3. 🤣......... யாரு சாமி இவங்க....ஆதவன், தமிழ்வின்,..........இப்படி பலர் நாங்கள் முந்தி சின்ன வகுப்புகளில் எழுதி வாசிக்கும் சிரிப்பு செய்திகளை சீரியஸாக போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
  4. அமெரிக்காவில் உள்ள பிரபல ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமா..............🙃........இங்கிலாந்தில் இருந்த பல்கலைக்கழகத்தை ஆதவன் குரூப் இரவோடு இரவாக அமெரிக்காவிற்கு கடத்தி வந்து விட்டார்களோ......... ஆதவனில் வேலை செய்பவர்கள் சிலருக்கு இந்த குளிசைகளை இனாமாக கொடுத்துப் பார்க்கலாம்.....நியாபக மறதியை சீர்படுத்துகின்றதா என்று.
  5. 🤣......... எல்லாரும் இப்படி தெறிச்சு ஓடினால், அந்த சூட்கேஸிக்குள்ள இருக்கிற கப்பை தூக்க மேற்கிந்திய தீவுகளில் இருந்து தான் ஆட்கள் வரவேண்டும்...........
  6. 😔..... அமித்ஷாவின் இந்த நடவடிக்கைக்கு தமிழிசை அவர்கள் எந்த அதிருப்தியும் காட்டவில்லை.... ஒவ்வொருவருக்குள்ளும் என்ன என்ன ஆசைகளோ, அதற்காக எதையெல்லாம் தாங்குவார்களோ........ கேரளா காங்கிரஸ் இது தான் சந்தர்ப்பம் என்று கீழே உள்ளதை பதிந்திருக்கின்றது.
  7. இதில் நாம் கூட்டணி கட்சிகள்......உங்கள் வெற்றிக்காக நானும், என் வெற்றிக்காக நீங்களும் பாடுபடுவோம்..... வாத்தியாரும் எங்களின் கூட்டணி தானே.......
  8. 'எங்கப்பா குதிருக்குள் இல்லை...' என்று இரண்டு பேருமே வாலண்டியரா வருகிறீர்களே.........
  9. இது சரியான முரட்டுத்தனமாக இருக்குதே............🤣. சரி உங்களுக்கும் வேண்டாம், எங்களுக்கும் வேண்டாம். இந்தியா இறுதிப் போட்டிக்கு வந்து, மேற்கிந்தியாவிடம் தோற்றுப் போகட்டும்......... இது என்னோட செலக்‌ஷன்........😜
  10. 🙃........... எப்படி பார்த்தாலும் இரண்டு பேரில் தான் அந்த சாஸ்திரம் சொல்லிற முகவெட்டு தெரியுது.......
  11. நீங்க தானா அது.......... சாஸ்திரியார் பலரை களத்தில் இறக்கி விட்டிருக்கின்றார் போல...... உலகக் கோப்பை தொடங்கின போது நிலவரம் தெரிந்திருக்கக்கூடாது என்று தான் சொல்லியிருந்தவர்....
  12. 🤣..... சாத்திரியார் நல்லா பின்னுக்கு நிற்கிறதிலோ ஒருவரோ...... கிருபன் போட்டியின் ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தவர். இன்றைய கிரிக்கெட் நிலவரம் எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாகத் தெரியுதோ, அவ்வளவுக்கு அவ்வளவு இந்தப் போட்டியில் முன்னுக்கு போவினம் என்று......🤣
  13. இரண்டு அணிகளும் மாமன் மச்சான் போல எடுக்கிறதும் கொடுக்கிறதுமா இருக்கின்றார்கள்...... இந்தியா வெல்ல வேண்டும் என்று பாகிஸ்தான் நினைக்கும்....🤭
  14. 🤣....... முன்னுக்கு தான்........ முதல் பத்திற்குள்ள நிற்கிறீங்க........
  15. 'அங்க ஒரு குத்து, இங்க ஒரு குத்து........' என்று நடிகர் ரஜனிகாந்த் தான் இந்த மெதேட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தினதாகச் சொல்கின்றார்கள்.........🤣 👍...
  16. 🤣.... துள்ளிக் குதிக்கா விட்டால் அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஏதும் நினைப்பினமோ என்றும் நாங்கள் துள்ளிக் குதிப்பம்.......நம்ம பிளட் அப்படி...........🤣.
  17. '......pledge allegiance to the flag.............' ..........🤣. அப்படி ஒரு நிலை வந்தால், அமெரிக்கா அந்தச் சண்டையில் ஏற்கனவே தோற்று விட்டது என்று அர்த்தம்....சமையலுக்கு கூட லாயக்கில்லாத ஆளுங்க...... 👍.... இப்ப இது ஞாபகத்திற்கு வருகின்றது.
  18. முதல் ஓவரிலேயே அமெரிக்காவின் இரண்டு விக்கெட்டுகள் போயிட்டுது..........இந்த இரண்டு அணிகளில் எந்த அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் மனசுக்கு தெரியல..........
  19. ❤️......... இந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, இலகுவாக கடந்து போய்க் கொண்டிருக்கும் எல்லோருக்கும், நான் உட்பட, 'பளார்' என்று ஒன்று விட்டிருக்கின்றது இந்தக் கட்டுரை. மிகவும் அருமை.
  20. அப்படியா தமிழன், கேசவ் மஹாராஜின் கடைசிப் பந்தைத் தான் சொல்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அது ஒரு No Ball என்ற சந்தேகம் சிலருக்கு வந்தது போல........
  21. 🤣..... நேபாளம் அணியின் தலைவரும் மிகவும் வருத்தப்பட்டார்.........தாங்கள் வெல்ல வேண்டிய ஒரு போட்டி மழையால் தடைப்பட்டு போய் விட்டதே என்று............. பையன் சார், இந்த பிட்ச் செய்த ஆஸ்திரேலியா கம்பனி தான் இனி ஐபிஎல் போட்டிகள் நடக்கும் மைதானங்களுக்கு பிட்சுகளை செய்யப் போகுதாமே.............😜
  22. நமீபியா 10 ஓவரில் 27/5. அங்கே பெய்கிற மழை இங்கேயும் ஏன் பெய்யக் கூடாது என்று நினைப்பார்களோ.....
  23. இலங்கைக்கு உய்வே கிடையாது போல.... ஃபுளோரிடா கிரிக்கெட் மைதானத்தில் விடாது அடைமழை கொட்டிக் கொண்டிருக்கின்றது. அநேகமாக மழை விடாது, இந்தப் போட்டி, இலங்கை எதிர் நேபாள், நடைபெற மாட்டாது என்பதே தற்போதைய நிலவரம்.
  24. இலங்கையர்களை இனிமேல் ரஷ்ய ராணுவத்தில் சண்டைக்கு சேர்க்க மாட்டோம் என்று ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு நேற்று உறுதி அளித்துள்ளார். அலி சப்ரி இப்பொழுது BRICS 2024 வெளிவிவகார அமைச்சர்கள் மாநாட்டிற்க்காக ரஷ்யாவில் நிற்கின்றார். இங்கே நான் நினைப்பதை தான் நீங்களும் நினைக்கிறீர்களோ தெரியாது.........பார்த்து அமைச்சரே, கடைசி ஆளாக அனுப்பி விடுவார்கள்........🤣 https://www.dailymirror.lk/breaking-news/Sabry-Russian-Foreign-Minister-discuss-Sri-Lankan-recruitment-to-Russian-forces/108-284597
  25. ப. சிதம்பரம் இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்த காலங்களில் இவர் ஒரு சிறந்த கட்டுரை ஆசிரியர் என்று தெரியாது. நிதி விவகாரங்களில் ஒரு சிறந்த ஆளுமை என்று மட்டுமே தெரிந்திருந்தது. 'அருஞ்சொல்' இதழில் தொடர்ச்சியாக நல்ல கட்டுரைகளை இப்பொழுது எழுதி வருகின்றார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், காங்கிரஸ் ஆதரவு அங்கங்கே தென்பட்டாலும், இவருடைய கட்டுரைகள் பொதுவாக நல்ல ஒரு வாசிப்பையும், புரிதலையும் கொடுப்பவை. நிர்மலா சீதாராமன் மீண்டும் நிதி அமைச்சரானது பற்றி சில மீம்ஸ்கள்/பகிடிகள் சுற்றி வருகின்றன. இவர்கள் இருவரில் ஒருவர் தான் நிதி அமைச்சர் ஆவார் என்பது வியப்பே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.