Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. இன்னும் ஒரு இரண்டு நாள் பொறுத்தால்....... அடுத்த களப் போட்டியை தொடங்கி விடுவம்...........🤣. தென் ஆபிரிக்கா உள்ளே. இன்று இந்தியா அல்லது இங்கிலாந்தில் ஒன்று உள்ளே போகும்.
  2. 🤣......... பிராணிகளின் பழக்கவழக்கங்களை இங்கு படிப்பிப்பார்கள் போல இருக்குது............ பல்கலையில் பல Animal Science பாடங்கள் இருக்கின்றன. மகள் அதில் எல்லா பாடங்களையும், அம்மாவை பழிவாங்கும் ஒரு நோக்கத்துடன் போல....🤣, எடுத்திருக்கின்றார் என்று நினைக்கின்றேன். பூனை கண்ணை கண்ணை அடித்தால் ஒரு காரணம், மல்லாக்காக படுத்திருந்தால் ஒரு காரணம், மியாவ் சொன்னால் ஒரு காரணம், புல்லைக் கடித்தால் ஒரு காரணம் என்று என்னுடைய 'பூனை அறிவு' அதி வேகமாக வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது........... ஒரு வீட்டை பூனை தன்னுடைய வீடாக நினைத்தால் அந்த வீட்டில் உச்சா, சிச்சா எதுவும் போகாதாம் என்றும் சொல்லியிருக்கின்றார்கள். சுவர் ஏறி பக்கத்து வீடுகளில் தான் அது உச்சா, சிச்சாவிற்கு போய் வருமாம் .... 😶
  3. என் வீட்டிலும் இரு பிள்ளைகளும் தலையால் கிடங்கு, கிணறு என்று தோண்டிப் பார்த்தார்கள். மனைவி அசரவேயில்லை. ஆனாலும் இப்ப மூன்று வருடங்களாக ஒரு தெருப்பூனை (stray cat) அப்படியே வீட்டுடன் ஒட்டிவிட்டது. அது அதிகமான நேரங்களில் வீட்டிற்கு வெளியிலேயே சுற்றிச் சுற்றி இருக்கின்றது. விஜய்யின் 'லியோ' படம் வந்த பின், படம் பிடிக்கா விட்டாலும் இந்தப் பெயர் பிடித்திருந்தபடியால், தெருப்பூனை இப்போது லியோ ஆகிவிட்டது. லியோ பற்றி சில கதைகள் எழுதலாம். அந்தளவிற்கு அது விசயம் வைத்திருக்கின்றது. ஒரு நாள் எங்கள் வீட்டு முன்பக்கத்தில் அடித்துக் கொல்லப்பட்ட ஒரு சிறு பிராணியின் மாமிசம் இருந்தது. பின்னர் ஒரு நாளும் இப்படியே இருந்தது. விசயம் என்னவென்றால், இந்த வகை பூனைகள் அவை அண்டி வாழும் மனிதர்களுக்கு இப்படித்தான் தங்கள் நன்றியை தெரிவித்து கொள்ளுமாம். லியோ எங்களுக்கு உணவு தேடிக் கொடுக்கின்றது..........❤️.
  4. 🤣........ விராட் கோலிக்கு சுயபுத்தி கொஞ்சம் அதிகம்......... எவர் சொல்லையும் கேட்க மாட்டார் போல.......🤣.
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், ஈழப்பிரியன் அண்ணை.
  6. தவறு விட்டு, விளைவு நடந்த பின், தவறு விட்டு விட்டோமே என்று தெரிகின்றது. இந்தப் போட்டியில் என்னுடைய சில அணித் தெரிவுகளைச் சொன்னேன்.........🤣.
  7. 👍........ இந்தியாவிற்கு என்றே இந்த உலகக்கோப்பை நடத்தப்படுகின்றதோ.........
  8. செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்கும், பூனைகளுக்கும் இடையில் இருக்கும் ஒரு வித்தியாசத்தை இப்படிச் சொல்வார்கள்: தன்னை இப்படி கவனித்துக் கொள்ளும் இந்த வீட்டு மனிதர்கள் கடவுள்கள் என்று நினைக்குமாம் அந்த வீட்டில் வளர்க்கப்படும் நாய். இந்த வீட்டு மனிதர்கள் தன்னை இப்படிக் கவனித்துக் கொள்வதால் தான் ஒரு கடவுள் என்று நினைத்துக் கொள்ளுமாம் அந்த வீட்டில் வளர்க்கப்படும் பூனை......🤣.
  9. இப்படித்தான், இதே வார்த்தைகளைத் தான், இங்கும் சொல்லியிருந்தனர்..........😔.
  10. கடைசியில் இந்த முடிவிற்கும் வந்து விட்டோமா..............🤣.
  11. 🤣.......... எழுதி விட்டு திருப்பி வாசித்துப் பார்க்கும் போதே தெரிந்தது........ இந்த இடத்தில் ஒரு குத்து விழும் என்று......🤣.
  12. உங்கள் இரண்டு பேருக்கும் நிறைய இரகசியங்கள் தெரிந்திருக்குது.........ஆனால், இப்ப போட்டி முடியிற நேரத்திலதான் எங்களுக்கு இதைச் சொல்லித் தருகிறீர்கள்......🤣. இந்த ரகசியத்தை முதலே நீங்கள் எங்களுக்கு சொல்லியிருந்தால், நாங்கள் அவுஸை விட்டிட்டு ஆப்கானைத்தான் தெரிவு செய்திருப்போம்......😜.
  13. செல்லப்பிராணி ------------------------ நான் அங்கு போன போது அது என்னைப் பார்த்து இரவில் வந்த ஒரு திருடனைப் பார்த்து குலைப்பது போல குலைத்தது. பின்னர் அவர்கள் சில வார்த்தைகள் அதட்டிச் சொன்ன பின் தான் அது என்னை உள்ளே விட்டது. என்னை முழுவதுமாக மோப்பம் பிடித்து வைத்துக் கொண்டது. அதை நாய் என்று சொல்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை. அதற்கு ஒரு பெயர் இருந்தது. அதன் பெயர் சொல்லியே அதைக் குறிப்பிட வேண்டும் என்பது அங்கு ஒரு விதியாக இருந்தது. நான் அங்கு பத்து நாட்கள் தங்க வேண்டி இருந்தது. அங்கு போய் அடுத்த நாளிலிருந்தே அது என்னுடன் மிகவும் நெருங்கி விட்டது. காலையில் கண் விழித்தால் அது கட்டிலின் அருகில் நிற்கும். எங்கு அமர்ந்தாலும் அது அருகே வந்து முதுகால் தேய்த்து விட்டு என் காலுடன் ஒட்டி ஒட்டி நிற்கும். தடவிக் கொடுத்தால் கிறங்கிக் கிடக்கும். இரவிலும் ஒரு தடவை கட்டிலடிக்கு வந்து நான் அங்கு தான் படுத்திருக்கின்றேன் என்று உறுதிப்படுத்தி விட்டுப்போகும். அந்த வீட்டவர்கள் மீதும் அது இதேயளவு பாசத்தை கொட்டிக் கொண்டிருந்தது. அங்கிருந்து கிளம்பும் நாளன்று அது வீட்டு வாசலில் குறுக்காக படுத்திருந்தது. இந்த வீட்டிலிருந்து எவரையும் போக விடமாட்டேன் என்பது போல. கடும் போராட்டத்தின் பின் நான் காரில் ஏற, அதனால் ஒன்றும் முடியாமல் போக, ஓவென்று அழுதது. பிராணி ஒன்று அழுததை அன்று தான் நேரில் பார்த்தேன். சில மாதங்களில் பின் ஒரு நாள் அவர்கள் என்னை தொலைபேசியில் கூப்பிட்டனர். அதை அன்று கருணைக்கொலை செய்ய வேண்டி இருந்ததாகச் சொன்னர். ஒரு தீரா நோய், வேறு வழி எதுவும் இருக்கவில்லை என்றனர். அழுது தீர்த்தனர். அப்படிக்கூட என்னால் என் நினைவை தீர்க்க முடியவில்லை. 'விட்டுப் போகாதே......' என்று அழுத அதன் கண்கள் என்னை விட்டுப் போகாமல் எல்லா இடமும் கூடவே வந்து கொண்டிருந்தது. அடுத்த வாரம். அங்கேயிருந்துது இன்னொரு அழைப்பு. இந்த தடவை வீடியோ அழைப்பு. புதிதாக ஒரு குட்டி அங்கு நின்றது. குட்டிக்கும் அதே பெயர் தான். 'குட்டி ஓடுது, குட்டி ஒளியுது, குட்டி ஒழுங்காகச் சாப்பிடுதில்லை, குட்டிக்கு பயிற்சி கொடுக்க வேண்டும், ...............' இப்படியே பல விதமாக சொல்லி, அதன் பின்னால் ஓடி ஓடி காட்டிக் கொண்டிருந்தனர். செல்லப்பிராணிகளை மனிதர்கள் எப்படி தொடர்ந்தும் உயிருக்கு உயிராக நேசித்து வளர்க்கின்றார்கள் என்ற கேள்வி அன்றுடன் என்னை விட்டு போனது.
  14. 🤣...... நாங்களும் தான் இப்ப முட்டை முட்டையாக வாங்கிக் கொண்டிருக்கின்றோமே...... ஆனா, அதை எல்லாம் அடை வைச்சிருக்கிறம். அடுத்த களப் போட்டியில் பேடும், சேவலுமா இறங்கி ஓடும் பாருங்கோ..........🤣. இன்னும் நாலு நாளில நாங்க நொந்து போகக் கூடாது என்றால், ஆப்கான் கோப்பையை வெல்ல வேணும்.... எனக்கு அந்த ஆப்கான் கோச் மேல நல்ல நம்பிக்கை இருக்குது..... அவர் கிரிக்கெட்டை தாண்டியும் யோசிக்கிறார்...... ஆடல், பாடல், ஆவேசம், நடிப்பு என்று வீரர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கின்றார்.......😜.
  15. கடவுளே, இது உங்களுக்கு நாங்கள் வழங்கும் கடைசி சந்தர்ப்பம். இந்த தடவையாவது பையன் சார் சொல்வது போல நடக்க நீங்கள் திருவருள் புரியவேண்டும். இங்கிலாந்தோ அல்லது ஆப்கானோ வென்றால், எங்களுக்கு கெட்ட கோபம் வரக்கூடும்........🤣.
  16. 🤣..... ஒன்றிரண்டு கேள்விகளுக்கு கொஞ்சம் யோசித்து பதில் எழுதி விட்டேன், டீச்சர். அந்த ஒன்றிரண்டும் தான் பிழைச்சது. அந்த இடைவெளியில கூட்டாளி 'see you later........' என்று சொல்லிவிட்டார் ........🤣.
  17. உலகத்திற்கு நல்லது USA தனியவா அல்லது NATO கூட்டமைப்பா என்று முடிவெடுக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை .........
  18. வாரணாசியில் ஆரம்பத்தில் பின்தங்கியிருந்த மோடிஜீ, பின்னர் எண்ண எண்ண முன்னுக்கு போன மாதிரி இங்கு ஒருவர் போய்க் கொண்டிருக்கின்றார்........🤣.
  19. போய் விட்டு வந்து என்னவானது என்று சொல்லக் கூடியவற்றை சொல்லுங்கள். நலமே நடக்கும் என்பது என் நம்பிக்கை.....🙏. இங்கும் சிலரை இந்த நிலையில் பார்த்து இருக்கின்றேன். இது போகப் போக மிகவும் கொடிய நிலையாக மாறும். நினைவுகளுடன், உடல் உறுப்புகளும் அவற்றின் வழமையான தொழிற்பாடுகளை, இயங்கங்களை படிப்படியாக மறந்து விடும்........😔.
  20. 🤣.............. இடையில் மழை ஆரம்பிக்க ஆப்கான் கோச் slow down, slow down என்ற மாதிரி மேல இருந்து கையைக் காட்டினார்...... அந்த நேரம் பார்த்து இந்த ஆப்கான் வீரர் காலைப் பிடித்துக் கொண்டு அப்படியே விழுந்து வேதனையில் உருண்டு பிரண்டார்......... கதையில் இது என்ன புது திருப்பம் என்று பங்களாதேஷ் திடுக்கிட்டது......... ஹோட்டலில் ஒன்றாக சேர்ந்து இந்த மாட்சை பார்த்துக் கொண்டிருந்த அவுஸ் வீரர்கள் 'நடிக்கிறான்......நடிக்கிறான்......' என்று அழுது புரண்டனர்........... தாங்களும் இந்த சீனில் நடிக்க வேணுமாக்கும் என்று நினைத்த அங்கு நின்ற பங்களாதேஷ் வீரர் அந்த ஆப்கான் வீரர் எப்படி சரிந்து வீழ்ந்தார் என்று நடித்துக் காட்டினார்....... அபடியே பங்களாதேஷின் கடைசி மூன்று விக்கெட்டும் விழுந்தது.......... ஆப்கான் கோச் 'வெல் டன், பாய்ஸ்.....' என்று சிரித்தார். 🤣........ இந்த சாமியார் வைச்சிருக்கிற தாடி மீசை கிறிஸ்மஸ் தாத்தா ஒட்டிக் கொண்டு வாறது......... இவர் சுத்தமா வேலைக்கு ஆகமாட்டார்....... இவரின் மடியில் ஏறி இருந்து ஒரு ஃபோட்டோ வேணுமென்றால் எடுக்கலாம்...............🤣.
  21. எதுக்கு நீங்க இவ்வளவு ஃபீல் பண்ணி அழுகிறீங்க........... ஆப்கான் அரையிறுதி விளையாடப் போகுதே என்றா.........
  22. கந்தப்பு மெதுமெதுவாக மேலே ஏறி சத்தமில்லாமல் நான்காவது இடத்திற்கு வந்து விட்டார்......... ஆரம்பத்தில் முட்டை, முட்டை என்று கேவிக்கேவி அழுதவர், எல்லாவற்றையும் சத்துமா உருண்டையாக்கி சாப்பிட்டு இருக்கின்றார் போல....... உங்களின் அணி எதுவென்று சொன்னால், நாங்கள் தேசிக்காய் உருட்டி அதைக் கவிழ்த்து விடுவம்...........பையனின் அணிகளை அப்படித்தான் கவிழ்த்தனாங்கள்..........😜.
  23. பங்களாதேஷின் நடவடிக்கைகளைப் பார்க்க நல்லாவே ஏறினது.........நாங்கள் அரை இறுதிக்கு போக மாட்டம், ஆனால் உங்களையும் போக விட மாட்டம் என்று அப்படியே நடுவில நிற்கினமாம்........ விக்கெட் அல்லது கால் என்று ஆப்கான் பந்துகளைப் போட்டு கதையை முடித்தனர்............❤️.
  24. ஒரு நிபுணர் (ஆகிய நான்.....😜....) அப்படியே போட்டியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தபடியால், பங்களாதேஷ் தோற்கப் போகின்றது என்ற முடிவை உலகத்திற்கு சொல்ல மறந்து விட்டார்....... உலகம் கொஞ்சம் பதட்டப்பட்டு போனது.......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.