Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. ஏதோ ஆட்டுப் பாலை குடிக்கிற மாதிரி ஆலம் பாலை குடிக்கப் போகிறேன் என்று சொல்றீங்க..... அது பால் இல்லைங்க....... கல்லால் குத்தி அப்படியே காய விடவேண்டும்.........பேசாம ஒரு சூயிங்கம் பக்கற்றை வாங்குங்கோ.........🤣.
  2. ரிப்பீட்டட் ஆடியன்சஸ் கொஞ்சம் அதிகம் தான்........ நீங்களும், பையன் சாரும், நானும் சேர்ந்தே ஒரு 30,000 விசிட்ஸ் வரும் போல..............😜.
  3. ஆழ்ந்த இரங்கல்கள்.......... சிலருக்கு மட்டுமே மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும், அதையும் பயன்படுத்தாமல் விட்டவர்கள் அவர்களில் பலர். சம்பந்தர் ஐயாவும் அப்படியான ஒருவர் என்று முடிகின்றது அவரின் பயணம்.
  4. இல்லை சுவி ஐயா, இது என்னூரில் இருக்கும் இடம். முன்னர் இங்கு இப்படி நடப்பதில்லை. பாண்டவர்கள் நீர்க்கடன் முடித்த பின்னரயே பாஞ்சாலி கூந்தலை அள்ளி முடித்தார் என்று ஒரு சிறுகதை சில வருடங்களின் முன்னர் வாசித்திருந்தேன். அன்றிலிருந்து இந்தச் சொல் அப்படியே ஒட்டிக் கொண்டுவிட்டது. வீரப்பனின் கதை முடிந்தது சந்தியில் இருக்கும் அரச மரத்தடியில்....... ஏராளமான கதைகள் இரண்டு மரத்தடிகளிலும் இருக்கின்றன........👍
  5. அதிபர் ஜோ பைடன் - ட்ரம்ப் விவாதம் ஜனநாயகக் கட்சியினருக்கு ஒரு அதிர்ச்சியாகவே முடிந்து விட்டது. ஜோ பைடனுக்கு இப்பொழுதே 81 வயது. அது அப்படியே எல்லா வகைகளிலும் வெளிப்படுகின்றது, தெரிகின்றது. அவரால் முடியாமல் இப்பவோ, எப்பவோ போட்டியிலிருந்தோ அல்லது பதவியிலிருந்தோ விலகினால், அடுத்தது யார் என்பது ஒரு பெரிய விடயம் இங்கே. கமலா ஹாரிஸ் தான் முறையான தெரிவு. ஆனால் அவர் தான் சரியான தெரிவு என்றில்லை. அவர் உட்பட ஏழு பேர்களை விவாதிக்கின்றார்கள்.
  6. நீர்க்கடன் --------------- கடற்கரையின் ஓரத்தில் கடலை பார்த்தபடி தீர்த்தமடம் இருக்கின்றது. ஊரில் மற்றும் அயல் ஊரில் இருக்கும் கோவில்கள் என்று எல்லாவற்றிலும் தீர்த்த திருவிழா என்றால் அது சமுத்திர தீர்த்தம் தான். தீர்த்தமடத்தின் கிழக்கே மிக அருகிலேயே அந்தியேட்டி மடம் இருக்கின்றது. பின்னர் ஒரு வீடு, ஒரு சின்ன வெறும் காணி, அதற்கப்பால் சுடலை இருக்கின்றது. தீர்த்தமடத்தின் மேற்கே ஒரு ஆலமரம், அதன் மேற்கே இன்னொரு அரைச்சுவர்கள் மற்றும் கூரையுடன் கூடிய ஒரு கட்டிடம். ஒரு புரோகிதர் அந்த ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி ஒரே கூட்டம். அன்று சித்ரா பௌர்ணமி. அம்மாவை இழந்தவர்கள் தங்களின் அம்மாக்களுக்கு அங்கே நீர்க்கடன் செய்ய வந்திருந்தனர். இதுவரை தங்கள் அம்மாக்களுக்கு நீர்க்கடன் செய்யாதோர் அதைச் செய்ய இது ஒரு நல்ல இடமும், நேரமும் என்றனர். எனக்கு இந்த நடைமுறை முற்றிலும் புதியதாக இருந்தது. இங்கு இப்படி எதுவும் நான் இங்கு இருந்த காலங்களில் நடந்ததேயில்லை. அந்த ஆலமரத்தை கல்லால் குத்தி, வரும் மரத்தின் பாலை அப்படியே காய விட்டு, பின்னர் அதை சூயிங்கம் என்று வாயில் போட்டுக் கொள்ளும் அளவிற்கு அந்த ஆலமரத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. பின்னர் ஒரு தடவை, 84 ம் ஆண்டு என்று நினைக்கின்றேன், இராணுவம் எங்கள் ஊரையும், அயல் ஊர்களையும் சுற்றி வளைத்தது. பல இளைஞர்களை இராணுவம் கைது செய்து இந்த இடத்திற்கு கொண்டு வந்திருந்தது. கைது செய்து கொண்டு வந்தவர்களை அந்த ஆலமரத்தின் அருகே இருக்கும் அரைச்சுவர்க் கட்டிடத்தில் ஒரு சுவரைப் பார்த்து முழங்காலில் இருக்க வைத்திருக்கின்றது. பின்னர் அவர்கள் எல்லோரும் அந்த இராணுவத்தால் சுடப்பட்டார்கள். இதில் ஒருவர், சுடப்படுவதற்கு முன் அல்லது சுடப்பட்ட பின், அன்று அங்கு எவருமே உயிர் தப்பாதபடியால் எது உண்மை என்று என்றும் தெரியப் போவதில்லை, ஓடிப் போய் தீர்த்தக் கடலில் விழுந்து இறந்திருந்தார். நாங்கள் போய் பார்க்கும் போது கடலின் நிறம் அதன் நீல நிறமாகவே இருந்தது. அது தன்னை உடனேயே சுத்தப்படுத்தி விட்டு, கரைக்கு வந்து போய்க் கொண்டிருந்தது. தீட்டே இல்லாத கடல். புரோகிதர் ஒரு தர்ப்பையை என் விரலில் கொழுவி விட்டு, இன்னொன்றை என் இடுப்பு வேட்டிக்குள் செருகி விட்டார். அப்படியே கடலில் இறங்கி, கிழக்கே பார்த்து அம்மாவை நினைத்து கும்பிட்டு விட்டு, இடுப்பில் இருக்கும் தர்ப்பையை கடலில் விடச் சொன்னார். கங்கா, யமுனா, காவேரி என்று ஏதோ சொன்னார். ஒரே கூட்டமாக இருந்தபடியால், ஒதுங்கி ஒரு ஓரமாகவே இறங்கினேன். நிமிர்ந்தால் சூரியன் சுள்ளென்று முகத்தில் அடித்தது. அம்மாவை எப்படி கும்பிடுவது என்று தெரியவில்லை. தோட்டங்களுக்குள்ளாலும், ஒழுங்கைகளுக்குள்ளாலும் என்னை துரத்திக் கொண்டு பள்ளிக்கூடம் வரை கொண்டு வந்து விட்டுப் போன அம்மாவின் முகம் மட்டும் தான் மனதில் வந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரு நாளும் அடி விழவேயில்லை. இடுப்பில் இருக்கும் தர்ப்பையை எடுத்து கடல் நீரில் விடும் நேரத்தில், அதே இடத்தில் அன்றொரு நாள் முகம் குப்புற ஒருவர் மிதந்து கொண்டிருந்தது ஞாபகமும் வந்தது. அந்த நினைவையும் கலைக்காமல், அப்படியே தர்ப்பையை கடலில் விட்டேன்.
  7. 👍...... இதை யாராவது எதிர்பார்த்து இருக்க முடியுமா........ அவர்கள் நல்லாவே விளையாடினார்கள்....👍
  8. விடுங்க சார், எதுக்கு கவலைப்படுறீங்க............ கடைசி மூவரில் நீங்க ஒருவரா வருவீங்க என்று இங்க பேசிக் கொண்டிருந்தாங்க சார்........ நீங்க நடுவிற்கு மேலயே வந்திட்டீங்க........... இந்தியா இருக்கும் பக்கமா பார்த்து ஒரு கும்பிடு போடுங்க.........
  9. நேற்று நடந்த விவாதத்தின் பின் ஜோ பைடனின் ரேட்டிங் போல இன்று இங்கு என்னுடைய நிலை போய்க் கொண்டிருக்கின்றது.............
  10. 🤣........... தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக............. இல்லை, இல்லை...... எங்க இனத்தில் எவருமே ராஜினாமா செய்தது கிடையவே கிடையாது ........... ஆதலால் லாகூரில் மீண்டும் மோதுவதாக முடிவெடுத்திருக்கின்றோம்...........
  11. இப்ப பையன் சார் வந்து கரகம், காவடி என்று ஆடப் போகின்றாரே.......
  12. சரி என்று சொல்லிவிட்டார்கள்......... எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது........ கீதாசாரம் தான் இப்ப கைகொடுக்கும்.............🤣
  13. 🤣.... எல்லா வளங்களையும் சரியாக உபயோகப்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள்...... இது தான் அது....... 🤣... ஒரு த்ரில்லர் ஆக்காமல் விட மாட்டார்கள் போல.........
  14. சரி, சரி........... இந்தியா இனி அடுத்த வருட சாம்பியன்ஸ் ட்ராபியில் லாகூரில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்............
  15. அதுவே தான்......👍. இன்னமும் சில தமிழ்நாட்டவர்கள் எங்களை 'சிலோன்காரர்கள்' என்று சொல்கின்றனர். அந்தச் சொல் அவ்வளவு ஒரு நல்ல உணர்வைக் கொடுப்பதில்லை. இலங்கையர்கள் என்று சொன்னால் நல்லாக இருக்குமே என்று தோன்றும்.
  16. போட்டி அங்கேயும் இங்கேயுமாக ஊசலாடுகின்றது. இந்தியா வென்றால் அக்சார் ஹீரோ......... தோற்றால் கோலி ஒரு கோழி முட்டை.........
  17. இந்த தடவை இஸ்ரேல் - பலஸ்தீன சண்டை ஆரம்பித்த போது, 'அருஞ்சொல்' இதழில் ஒரு கட்டுரைத் தொடர் வந்திருந்தது. ஐந்து பாகங்கள், சிறிது நீண்ட கட்டுரைகள். பல ஒற்றுமைகள் இருக்கின்றன, ஆனால் நாங்கள் பொதுவாக இதுவரை நினைத்திருக்கும் கோணத்தில அல்ல. இது இன்னொரு பார்வை. https://www.arunchol.com/karthik-velu-on-israel-history
  18. 🤣...... அங்க என்ன நடந்தாலும், இங்க களத்தில் கடைசி மட்டும் நிற்பம்............ ஆனால் நிலைமை சரியில்லை.........
  19. அந்த பொடியனை நேற்று கணக்கில எடுக்காமல் விட்டிட்டம்........ அவர் கொஞ்சம் அடிச்சிட்டார்....
  20. கோலியின் பிளானும், என்னுடைய பிளானும் ஒன்றே........ அவுட் ஆகுமட்டும் இப்படியே நிற்பம் என்ற பிளான்.......
  21. இன்னும் இரண்டு ஓவர்களில் ஒரு கட்சி மாறும் அறிவிப்பு வந்தாலும் வரக்கூடும்.............😜. 'பாரத் மாதாக்கு ஜே..........' என்று சொன்னாலும் நல்லாத்தான் இருக்குது........ இது புதிசு........ ஆனா நல்லா இருக்குது..........
  22. எதுக்கும் தயாராகவே இருக்கிறேன்.......... முக்காடு போடுவதற்கு ஒரு துணி கூட எடுத்து பக்கத்திலேயே வைத்திருக்கிறன்.........🤣 இப்ப இரண்டு விக்கெட்டுகள் விழாட்டி அந்தப் பக்கம் அடங்காது போல..........
  23. 🤣........ என்ன பெரிய கரி........ ஏற்கனவே கரிபியன்ஸ் வெளியில போகேக்க அவையளே நிறைய பூசி விட்டுத்தான் போனவ......
  24. நல்ல மட்டையடி வீரர் என்றால் ரோகித் மாதிரி அடிப்பாரா...........😜. இவரையும் தட்டிறம்......... கோப்பயைத் தூக்கிறம்.......
  25. பேப்பர் தான் நேற்றே அவுட் ஆனதே....... நீங்கள் சிலர் பார்க்கவில்லை போல...........🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.