Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. 👍....... முன் அனுபவம் தேவையில்லை என்று சில வேலைக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படித்தான் இங்கேயும் நினைத்து உள்ளே வருகின்றார்கள். ஒரு துறையில் சிறப்புத் தேர்ச்சியும், திறமையும், ஆளுமையும் இருப்பவர்கள் எல்லா துறைகளிலும் அப்படியே சிறப்பாக வருவார்கள், செய்வார்கள் என்று கருதுவது முதிர்ச்சி அடையாத ஜனநாயகத்தின் ஒரு இயல்பு என்று சமீபத்தில் ஒரு இடத்தில் வாசித்திருந்தேன். அப்படியே பொருந்துகின்றது.
  2. நம் பிரார்த்தனைகள் எல்லாம் போய்ச் சேருமிடம் என்று ஒன்று இருக்குதா என்று கூட தெரியவில்லை. ஆனாலும், பல நேரங்களில் வேறு வழி எதுவும் இருப்பதில்லை......... இந்தக் கட்டுரையில் சொல்லியிருப்பது போலவே.
  3. தாங்கள் இலஞ்சம் வாங்குகின்றோம் என்று கூட அவர்களுக்கு தெரிவதில்லை. செய்யும் வேலைக்கு சம்பளம் வாங்குவது போல வாங்கி விட்டுப் போய்க் கொண்டிருக்கின்றார்கள்......... சமீபத்தில் அங்கு அடுத்தடுத்து மூன்று விமான நிலையங்களில் தூண்களும், கூரைகளும் விழுந்து விட்டன.... காரணம் தேடினால் கடைசியில் எவ்வளவு இலஞ்சம் கைமாறியது என்று தெரிய வரும்..........🫣 இலஞ்சத்தையும், ஊழலையும் எப்படி கட்டுப்படுத்துவது, இல்லாமல் ஆக்குவது என்பதிற்கு இயக்குனர் ஷங்கர் தான் அவர்களின் வழிகாட்டி...........🫣
  4. 🤣......... 'தோழர் இரும்பு' என்று சிறுகதையை இங்கே 'அகழ்' இதழில் இருந்து எடுத்துப் பகிர்ந்திருந்தேன். வேறு ஒரு விதத்தில் நன்றாக இருந்தது.
  5. 🤣.......... என்னைப் போலவே பல பேர், இலட்சக் கணக்கில், இங்கே சுத்தித் திரிகின்றார்கள்.......🤣. ஊழலையும், இலஞ்சத்தையும் ஒழிக்க தங்கள தல, தளபதி வந்து விட்டார் என்று இன்னும் நம்புகின்றார்கள்....... இவர்கள் ஏதாவது ஒரு அரச அலுவலகத்திற்கு போய்ப் பார்த்தால் உண்மை விளங்கும், திரையில் தெரிவது வெறும் மாய விம்பம் என்று. சிறு பிள்ளைகளின் மண்சோறு விளையாட்டுகள் போன்றது இந்தக் கோஷங்கள்........
  6. மண்சோறு ----------------- ஜெயலலிதா இறந்து விட்டாராம் என்று செய்தி பரவி ஊரே கதவுகளை அடித்து மூடிக் கொண்டிருந்தது. வெளியில் எங்கும் போகாதே என்றும், தான் இப்பொழுது என் வீட்டிற்கு வந்து கொண்டிருப்பதாகவும் மாமி தொலைபேசியில் கூப்பிட்டுச் சொல்லியிருந்தார். மாமியின் வீடு திருச்சியின் மாநகரப் பகுதியில் ஒரு எல்லையில் இருந்தது. நான் தங்கி நிற்கும் வீடு, போன வாரம் வரை அங்கு உயிருடன் இருந்த என் தந்தையின் வீடு அது, நகரின் இன்னொரு எல்லைப் பகுதியில் இருந்தது. மாமி என் தந்தையின் கடைசி தங்கை. ஊர் இருக்கும் இந்தப் பதட்டத்தில், ஏன் இந்தப் பதட்டம் என்றும் எனக்கு விளங்கவில்லை, இவர் ஏன் நகரின் குறுக்காக வருகின்றார் என்றும் எனக்கு தெரியவில்லை. 'உனக்கு என்ன தெரியும்......... இவங்கள் கொளுத்திப் போடுவாங்கள்......' என்று விளக்கம் சொன்னார் மாமி. கடையை, வாகனத்தை, ஆட்களைக் கூட கொளுத்துவார்களாம். ஒரு பஸ்ஸுடன் சில பிள்ளைகளுக்கு நடந்தது எனக்குத் தெரியாது என்றார். தெரியும் என்று சொல்வதை விட, தெரியாது என்று சொல்லி, அவர் சொல்வதைக் கேட்பது ஒப்பீட்டளவில் இலகுவான ஒரு விடயம். பின்னர் சிறிது நேரத்தில் ஜெயலலிதா இன்னும் இறக்கவில்லை என்ற செய்தி வந்தது. முதல் வந்தது வதந்தி என்றனர். அப்பலோவில் அன்று அவர் இட்லி சாப்பிட்டதாகவும் செய்தி வந்து கொண்டிருந்தது. மாமி அதை நம்பவில்லை. இவங்கள் பொய் சொல்கின்றனர் என்றார் அவர். என்னை விமானச் சீட்டை மாற்றிக் கொண்டு உடனேயே அங்கிருந்து கிளம்பச் சொன்னார். எந்த நேரத்திலும் எதுவும் நடக்கும், நான் அங்கு நின்று செய்வதற்கு ஒரு காரியமும் இல்லை என்பதும் அவரின் இன்னொரு நியாயம். அடுத்த நாள் வீட்டிற்கு ஒருவர் வந்தார். அந்த நபரை முன்னர் எங்கேயோ பார்த்திருக்கின்றேன் என்று தோன்றியது. அவரே ஞாபகப்படுத்தினார், சில வருடங்களின் முன் அவர் என் அம்மாவின் இறப்பு சான்றிதழ் எடுத்து தந்த உதவியை. நல விசாரிப்புகளின் பின், சும்மாவா வந்தீர்கள் என்று கேட்டேன். இல்லை, மாமி தான் வரச் சொல்லியிருந்தார் என்றார். என் விமானச் சீட்டை மாற்றுவதற்கு மாமி ஏற்பாடு செய்கின்றார் போல என்று மெல்லிய சிரிப்பு வந்தது. வந்த மாமி, இவர் என் தந்தையின் மரண சான்றிதழ் எடுத்து தருவார் என்றார். அது எனக்கு தேவையே இல்லை, அதை வைத்து நான் என்ன செய்ய என்று வேண்டாம் என்று சொன்னேன். இங்கு எல்லோரும் அதை எடுப்பார்கள், எடுத்துக் கொண்டு போவார்கள், கட்டாயம் எடுக்கத்தான் வேண்டும் என்றார் மாமி. அம்மாவின் சான்றிதழை எடுத்ததை நினவு கூர்ந்தார். அது இப்பொழுது எங்கே இருக்குதோ. சரி, ஏதோ உங்களின் விருப்பம் என்று ஒதுங்கினேன். ஒரு பிரபல நடிகர் அரசியலில் இறங்கியிருந்த காலமும் அது. அவர் இந்த பிறப்பு, இறப்பு மற்றும் பல சான்றிதழ்களைப் பெற எவ்வளவு இலஞ்சம், எப்படி கொடுக்கப்படுகின்றது என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருந்தார். ஆதாரங்கள் தன்னிடம் இருக்கின்றது என்றார். ஆதாரங்கள் இருந்தால், அதை எடுத்துக் கொண்டு கவர்னரிடம் போகலாம் தானே என்று சில பத்திரிகையாளர்கள் அங்கேயே கேட்டு இருந்தனர். மக்கள் தான் என்னுடைய கவர்னர் என்று சொல்லியிருந்தார் அந்த நடிகர். அவர் என்ன சொன்னாலும் எவருக்கும் எதுவுமே புரியாது என்பது அவரின் தனித்துவம். நடிகர்கள் மட்டுமே புது அரசியல் கட்சிகள் தொடங்கும் தேசம் அது. அதுவே ஒரே விதமான கொள்கை மற்றும் அறிக்கைகளுடனேயே ஆரம்பிப்பார்கள். ஊழலற்ற, இலஞ்சமற்ற, சமத்துவ சமுதாயம்.........என்று அந்த அறிக்கை போகும். அந்த நபரை எவ்வளவு காசு என்று கேட்டார் மாமி. என்ன காசு, அது தான் அந்த பிரபல நடிகர் இதிலிருக்கும் இலஞ்சம் எல்லாவற்றையும் வெளிக் கொண்டு வந்து விட்டாரே, இனிமேல் என்ன காசு என்றேன் நான். மாமி அருகில் நின்றபடியால் சில வார்த்தைகளை முழுதாகச் சொல்லாமல் விழுங்கிய அந்த நபர், இப்பொழுது ஒவ்வொரு சான்றிதழுக்கும் முன்பிருந்த இலஞ்சத்தை விட இரண்டு மடங்குகள் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.
  7. ராஜபக்ச குடும்பத்திற்கு 13 வீதம் மட்டுமே ஆதரவு காணப்படுகின்றது என்பது ஆச்சரியம். சிங்கள மக்கள் கடந்த சில வருடங்களில் சரியாகக் கஷ்டப்பட்டு விட்டார்கள் போல...... ஆனால் ஜேவிபிக்கு அவர்கள் காட்டும் 34 வீதமான ஆதரவு சட்டிக்குள் இருந்து நெருப்புக்குள் விழுந்த கதையாக முடிவதற்கும் சாத்தியங்கள் உண்டு.
  8. 👍........ தொடர்ந்து பார்ப்பதாகவே உள்ளேன், அண்ணை. @வீரப் பையன்26 சாருடன் மல்லுக்கு நிற்க வேண்டுமே..........🤣.
  9. 🤣........ இங்கு ஒரு பேராசிரியர் தபாலில் மற்றும் வேறு வழிகளில் குண்டு அனுப்பி சில சக பேராசிரியர்களையும் மற்றவர்களையும் காயப்படுத்தியும், சிலரை கொலை செய்ததும் ஞாபகத்திற்கு வருகின்றது.......Unabomber என்று அழைக்கப்பட்டார்........🫣
  10. 🤣....... சின்ன வயதில் நிறையவே பார்த்திருக்கின்றேன், அண்ணை. ஆனால் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட் பார்த்ததும் இல்லை, எந்த வீரர்களையும் தெரியாது. கிரிக்கெட்டில் ஒரு கோமா நிலை மாதிரி...... அமெரிக்கன் விளையாட்டுகள் பரிச்சயமாகி, நாளும் பொழுதும் அதனுடனேயே போய்க் கொண்டிருக்கின்றன. இப்பொழுது தான் முதன் முதலாக T20 விளையாட்டைப் பார்த்தேன்........
  11. 🙏........ நீங்கள் இப்படி சொல்ல எனக்கு பயமாக இருக்கின்றது. மனதில் தோன்றுவதை எழுதிக் கொண்டிருக்கின்றேன். இங்கு சிலருக்கு பிடித்திருக்கின்றது என்பது மிகவும் சந்தோசம். 'இங்கு படைக்கப்பட்டவை எல்லாம் உண்பதற்காகவே........' என்று பாரதத்தில் வியாசர் பீஷ்மருக்கு ஒரு இடத்தில் சொல்வார். பீஷ்மர் வியாசரைப் பார்க்க அவரின் குடிலுக்கு போயிருக்க, அங்கு வியாசரின் குடிலின் முன் நின்ற நிறைமாத பசுவை ஒரு சிங்கம் இழுத்துப் போகும் போது இந்த உரையாடல் வருகின்றது. கண்ணதாசன் பாடலில் சொல்லியிருப்பது போல, சிலந்தி போலவே எல்லா உயிர்களும் வலைகளை பின்னி வைத்திருக்கின்றன. சிலந்தியின் வலை கண்ணுக்குத் தெரிகின்றது, அதன் கீழே கண்ணும் கருத்துமாக ஒளித்திருக்கும் பல்லியின் வலை தெரியவில்லை, ஆனால் வலை அங்கும் இருக்கின்றது.
  12. 🤣........... பெரும் பரோபகாரர்கள்....... எங்களை விட மற்றவர்கள் எல்லோருக்கும் நல்லாகவே பரோபகாரம் பார்ப்பார்கள். அவர்களை கேட்டால், நீங்களும் அப்படித்தானே என்று எங்களைச் சொல்வார்கள்.........😜
  13. சிலந்தி வலை ---------------------- காற்றில் ஈரப்பதன் குறைந்ததும், வருடம் முழுவதும் கடுமையான குளிர் அற்றதுமான ஒரு இடத்தில் நீண்டகாலமாக வசித்து வருகின்றேன். எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் கோடைகாலம், அதன் பின்னர் வரும் மூன்றோ அல்லது நாலு மாதங்கள் கூட குளிர் என்று சொல்லி விடமுடியாதவை. உலர்ந்த காலநிலைக்கென்றே சிலந்திகள் படைக்கப்பட்டிருக்கின்றன போல. உலகில் 40,000 வகை சிலந்திகள் இருக்கின்றன என்று சொல்கின்றனர். அந்த 40,000 வகைகளும் இங்கேயே இருக்கின்றன என்று நினைக்கின்றேன். சிலந்தியின் வலையில் அப்பாவிப் பூச்சிகள் மட்டும் தான் அகப்பட்டு அல்லாடிச் சாகின்றன என்றில்லை. வீட்டுக்கு வருபவர்கள் வீட்டில் எங்கோ ஒரு மேல் மூலையைப் பார்த்து, 'அது என்ன........, சிலந்தி கட்டினதா...........' என்று கேட்டு விட்டால், நாமும் தான் வீட்டில் அகப்பட்டுப் போகின்றோம். இந்தப் பூமியையே காலால் எட்டி உதைத்து உருட்டித் தள்ளி விடுவோம் என்று வீட்டுக்குள்ளே வீரம் பேசும் பெண் பிள்ளைகள், அதே வீட்டிற்குள் பயந்து ஒடுங்கி அடங்கி நிற்பது ஒரு நூலில் மேலிருந்து கீழே தலை கீழாக இறங்கி வரும் சிலந்திகளுக்கும், சரசரவென்று காலில் ஏறி கடந்து ஓடும் கரப்பான் பூச்சிகளுக்குமே மட்டுமே. பல போதைப் பொருட்களின் வீரியத்தை, தாக்கத்தை அறிய அவற்றை சிலந்திகளுக்கு கொடுத்து அதன் பின்னர் அவை பின்னும் வலைகளின் அமைப்பை ஆராய்ந்து பார்த்திருக்கின்றனர். அவை பின்னியவை எல்லாமே கோணல், ஓட்டை வலைகள். ஒரு புழு பூச்சியும் அங்கே சிக்காது. இந்த ஆராய்ச்சி அறிக்கையின் பின்னர் அந்தக் குறிப்பிட்ட போதை மருந்துகளின் விற்பனை குறைந்ததா அல்லது கூடியதா என்ற தரவுகளை எவரும் வெளியில் விடவில்லை. சில சிலந்திகள் தாங்கள் கட்டும் வலையில் அவை தங்குவதில்லை. 'என்னடா........ வலை வெறுமனே இருக்குதே.........' என்று நான் வலையைப் பின்னிய சிலந்திகளை சில தடவைகள் தேடியும் இருக்கின்றேன். வலையில் இருந்து போகும் ஒரு ஒற்றை இழையில், சிறிது தூரத்தே இருந்து பார்த்துக் கொண்டிருப்பார் அதன் சொந்தக்காரர். ஒரு நாலைந்து வலைகள் சொந்தமாக வைத்திருக்கும் தண்டையல், முதலாளி போன்றவர் இவர். எல்லா சிலந்திகளும் வலை பின்னித் தான் இரையை பிடிக்கும் என்றில்லை. கொய்யா மரத்தில் ஏறி, அடுத்த கொப்பில் கைவைக்க, அங்கே ஒரு புலி முகம் நிற்க, சர்ரென்று சறுக்கி கீழே வந்து, உள்ளுக்குள் போயிருக்குமோ என்று பயப்பட, அந்தப் பயத்தில் எல்லா இடமும் ஏதோ ஊர்வது போன்று உணர்வு வர, பதறி அடித்து எல்லா உடுப்புகளையும் கழட்டி எறிந்த நிகழ்வும் உண்டு. புலிமுகம் அப்படியே மேலே அந்தக் கொப்பிலிருந்தே இந்தக் கூத்தை பார்த்துக் கொண்டிருந்திருக்கும். வீட்டின் முன் வாசலுக்கு வெளியே இரண்டு பக்கங்களிலும் வரிசையாக ஒரு பத்து அடிகளுக்கு பூச்செடிகள். எல்லாமே ரோஜாவின் வகைகள் தான். உயர்த்தி மண் போட்டு, அதற்கு கான்கிரீட்டால் எல்லை போட்டு வளர்க்கப்படுகின்றன. நடுவால் போய் வரும் பாதை. நித்திரைக்கு போக முன் வெளியே எட்டிப் பார்த்து விட்டு வருவோமே என்று போனேன். முகத்தில் அடித்தது ஒரு சிலந்தி வலை. பின்னேரம் இது இங்கே இருக்கவில்லை. அதற்கிடையில் முழு வலையை ஒரு சிலந்து கட்டி விட்டதா என்று ஆச்சரியமாக இருந்தது. முதலே வேறு எங்கோ கட்டி வைத்து, அப்படியே தூக்கி வந்து, இரண்டு வரிசை பூச்செடிகளுக்கும் இடையில் பொருத்தும் தொழில்நுட்பமாகவும் இருக்குமோ என்றும் ஒரு யோசனை வந்தது. முகத்தில் பட்டு அறுந்த சிலந்தி வலையில் இருந்து ஒரு சிலந்தி கீழே விழுந்து ஓடுவது தெரிந்தது. 'அடப் பாவமே....... என்னால் இதனுடைய இன்றைய இரவுணவு இல்லாமல் போய் விட்டதே.........' என்று பார்த்து நிற்க, திடீரென்று பூச்செடி ஒன்றின் அடியிலிருந்து தோன்றிய பல்லி ஒன்று அதன் நாக்கை நீட்டி சிலந்தியை வளைத்து எடுத்துக் கொண்டது.
  14. ஊரில் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கின்றேன். சில நாட்களில் வீட்டில் ஏதாவது நடந்து இரத்தம் நிற்காமல் ஓடும் போதும் கூட, இன்று இப்பொழுது கடல் பெருக்கு போல என்று கூட சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், பின்னர் படித்த விஞ்ஞான விளக்கங்கள் இதை நிராகரித்தன.......... எதுவாயினும், கடலில் காயம் பட்ட பின்னர், கரைக்கு வந்து முறையான சிகிச்சை கிடைப்பதற்கு அதிக நேரம் எடுத்திருக்கக்கூடும்.
  15. பிளாஸ்டிக் தாங்கிகள் நல்லது என்று தான் சொன்னார்கள். அதன் பின்னர் வேறு ஏதாவது கருத்துகளோ அல்லது ஆராய்ச்சி முடிவுகளோ வந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. கால ஓட்டத்தில் காங்கிரீட் தாங்கிகளில் ஏற்படும் சிறு வெடிப்புகள் மூலம் உள்ளிருக்கும் இரும்புக் கம்பிகள் துருப்பிடிப்பதும், அது நீரில் கலப்பதும் ஆபத்தே. இந்த சிறிய வெடிப்புகள் பல காலம் தெரியாமலேயே உள்ளுக்குள் இருக்கக்கூடும். கீழிருக்கும் அத்திவார மண் சிறிது மேலும் கீழுமாக அசைந்தாலே காங்கிரீட்டில் சின்ன சின்ன வெடிப்புகள் வர ஆரம்பிக்கலாம். இந்த வகை பிளஸ்டிக்குகள் மிக உயர் தரமானவை, அடர்த்தி கூடியவை, பாதுகாப்பானவை என்று சொல்கின்றார்கள்.
  16. மேலே @Kadancha சொல்லியிருப்பதை வைத்துப் பார்க்கும் போது, அப்படி வந்த சீலா ஒன்று அந்த மீனவரின் கழுத்துப் பகுதியை பலமாக காயப்படுத்தி விட்டது என்றே தெரிகின்றது.
  17. அந்தப் பெண் உடல்நலம் முற்றாக தேறிவிட்டார், அண்ணை. எங்களின் பார்வைக்கும், அறிவிற்கும் அப்பாற்பட்டவையாகவே பல விசயங்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன, நடக்கின்றன என்று சொல்ல முயன்றிருக்கின்றேன்........
  18. 🤣........... இது அடிக்கடி சந்திக்கும் ஒரு நிகழ்வு...... பல வருடங்களின் முன் ஒருவர் நாடு மாறிப் போனார். இங்கிருந்து ஐரோப்பாவிற்கு. பெட்டிகள் கட்டுவதற்கு உதவிக்குப் போயிருந்தேன். அவரிடம் பல விளையாட்டுக்களுக்கான பந்துகள் இருந்தன........ ஆனால் எல்லாம் அவற்றினுடைய அட்டைப்பெட்டிக்குள் ஒரு தடவை கூட வெளியில் எடுக்கப்படாமலேயே இருந்தன........
  19. 😔........ முதல் தடவையாக இப்படி நடந்ததை கேள்விப்படுகின்றேன். முரல் மீன்களால் இப்படி ஒரு ஆபத்து இருக்கின்றது என்று கூட நினைத்ததில்லை.......😔
  20. நன்றிகள் சுவி ஐயா.........🙏. சமீபத்தில் ஒரு பெரிய வங்காள எழுத்தாளர் 'I didn't write anything that I didn't see' என்று சொல்லியிருந்ததாக ஒரு இடத்தில் பார்த்தேன். அதன் பின்னரேயே இப்படி எழுதலாம் என்று நினைத்து, என் அனுபவங்களை சில மாற்றங்களுடன் முயன்று கொண்டிருக்கின்றேன். ஆனாலும் நடந்தவைகளை அப்படியே எழுத முடியாமல் இருக்கின்றது, சுவி ஐயா. உண்மையில் நடந்தவைகளிலும், நடந்து கொண்டிருப்பவைகளிலும் பல நிகழ்வுகள் பொதுவான நம்பிக்கைக்கு எதிரானவை. இந்தக் கதையில் வரும் சம்பவத்தில் கூட, அந்தப் பெண் உயிர் பிழைத்தாலும், அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள்.........😔. ஒரு குறுங்கதையிலோ அல்லது ஒரு சிறுகதையிலோ இந்த உண்மையிலேயே நடந்த முடிவை எழுதினால், அது மிகவும் செயற்கையான ஒரு முடிவாக தோன்றக்கூடும்.
  21. நட்சத்திரங்களுக்கு அப்பால் --------------------------------------------- உடனடியாக உங்களுடன் நாங்கள் கதைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்ன போது நேரம் இரவு 10:30 மணி. நேற்றிலிருந்து அங்கேயே நின்று கொண்டிருந்தேன். இந்த இரண்டு நாட்களில் எங்களுடன் வேலை செய்யும் வேறு பலரும் மாறி மாறி எங்களுடன் வந்து நின்றனர். இன்றிரவு மற்றவர்களை வீடுகளுக்கு போகச் சொல்லி விட்டு நானும் நண்பனும் மட்டுமே அங்கே இருந்தோம். இங்கிருக்கும் மிகச் சிறந்த மருத்துவமனைகளில் இது ஒன்று. உலகத்திலேயே மிகச் சிறந்தவற்றில் இது ஒன்று. அதி அவசர மற்றும் இதயம் சம்பந்தான பிரிவுகளிற்கு என்று இருக்கும் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் நண்பனின் மனைவி அனுமதிக்கப்பட்டிருந்தார். இரண்டு வாரங்களாக இன்னொரு மருத்துவமனையில் இருந்த அவர், நேற்றிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டிருந்தார். இங்கு ஒருவருக்கு எப்பொழுது, எங்கே, என்ன சிகிச்சைகள் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் மருத்துவ காப்புறுதி நிறுவனங்களின் பங்கு பெரியது. நான்கு மருத்துவர்களும், ஒரு ஆலோசகரும், நண்பனும், நானும் ஒரு அறையில் அமர்ந்திருந்தோம். அந்த ஆலோசகர் நண்பனுக்கு அருகில் அமர்ந்திருந்தார். இன்னும் ஒரு நாலோ அல்லது ஆறோ மணித்தியாலங்கள் தான் நண்பனின் மனைவி தாங்குவார் என்று ஒரு மருத்துவர் மெதுவாக, ஒரு அமைதியுடன் சொன்னார். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து விட்டோம், ஒவ்வொன்றாக ஒவ்வொன்றும் செயலிழந்து போய்க் கொண்டிருக்கின்றன என்றனர் மற்ற மருத்துவர்கள். நண்பனின் மனைவியின் கையில் ஏற்கனவே ஊதா நிற காப்பு கட்டி விட்டதாகவும் சொன்னார்கள். நண்பன் அழுது கொண்டே வெளியில் ஓடினான், அவன் பின்னால் ஆலோசகர் ஓடினார். நடுகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. நடுங்கியபடியே, அப்படியே நடந்தால், இங்கு மருத்துவமனையில் எவ்வளவு நேரம் வைத்திருக்க முடியும் என்று கேட்டேன். அதன் பின் 24 மணி நேரங்கள் என்றனர். அதன் பின்னர் எங்கு கொண்டு போகலாம் என்ற பல தெரிவுகள் அடங்கிய ஒரு விபரக்கொத்தை கையில் கொடுத்தனர். பக்கங்களை புரட்டினாலும் எதையும் கோர்வையாக வாசிக்க முடியவில்லை. 'இப்ப என்ன செய்வது.........' என்று கேட்டான் என் தோளில் சாய்ந்திருந்த நண்பன். பல வயதுகள் இளையவன். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகியிருக்கவில்லை. 'ஒன்றும் ஆகாது........ அப்படியே என்றாலும் நான் பார்க்கின்றேன்........' என்றேன். இன்னும் அழுதான். இங்கு பொதுவாக எல்லா மருத்துவமனைகளிலும் இரவு எட்டு மணியுடன் பார்க்க வருபவர்களை தங்க விடமாட்டார்கள். ஆனால் இந்த மருத்துவமனையில் அந்தக் கட்டுப்பாடு கிடையாது. இங்கிருக்கும் நோயாளிகள் எல்லோருமே இறுதிக் கட்டத்தில் இருப்பவர்கள். ஆதலால் உறவினர்கள், நண்பர்கள், வேண்டியவர்கள் எந்த நேரத்திலும் வந்து போகலாம். பலர் அங்கு இருக்கும் பெரிய வரவேற்பறை மற்றும் சில வெறுமையாக இருக்கும் அறைகளில் களைப்பிலும், அசதியிலும் கண்ணயர்ந்தும் விடுகின்றனர். அங்கு காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களை அதே பரிதாபத்துடனும், இரக்கத்துடனும் பார்க்கின்றனர், ஆனாலும் ஒருவருக்கு ஒருவர் என்ன சொல்வதென்று ஒருவருக்கும் தெரிவதில்லை. நேற்றிலிருந்து இப்படியே இருப்பதால் எங்கள் இருவருக்கும் கொஞ்ச ஓய்வு தேவை என்று அங்கிருந்த அறை ஒன்றில் போய் இருக்குமாறு சொன்னார் அந்த நேரத்திற்கு வந்திருந்த தாதி ஒருவர். கேரளாவைச் சேர்ந்தவர். தமிழிலேயே கதைத்தார். சிறிது நேரத்திலேயே நண்பன் கண்ணயர்ந்து விட்டான். ஆறாவது தளத்தின் பால்கனியில் நின்று வானத்தை பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். முற்றிலும் கருமை, அந்தக் கருமையின் மேலே எண்ண முடியாத அளவு நட்சத்திரங்கள் பூத்துக் கிடந்தன. நட்சத்திரங்களை தவிர்த்து, அவற்றின் இடையே இருக்கும் இடைவெளிகளின் ஊடாக ஏதோ ஒன்று எல்லாவற்றிற்கும் மேலே இருக்குதா என்று தேடிக் கொண்டிருந்தேன். தாதி என்னை தட்டி எழுப்பும் போது ஆறு மணியாகி விட்டது. எழும்பியவுடனேயே நடுங்கவும் ஆரம்பித்து விட்டது. நண்பன் இன்னும் கண் முழிக்கவில்லை. தாதியைப் பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை என்றார். ஒரு மாதம் வரை நண்பனின் மனைவி அங்கிருந்தார். பின்னர் 40 நாட்கள் உடலை அசைக்கும், நடக்கும் தெரபிகளுக்கு என்று அவரை வேறு ஒரு இடத்திற்கு மாற்றினர். அதன் பின்னர் மூன்று மாதங்களில் அவர்கள் இருவரும் இந்த நாடு போதும் என்று இந்தியாவிற்கே போய்விட்டார்கள்.
  22. மார்க் கியூபன் என்ன சொல்லியிருக்கின்றார் என்று பாருங்கள்: "Feeble, Capable and Ethical vs Vigorous, Unethical and Incapable of telling the truth. I'll vote ethical every time." அவர் ஒரு AI Analysis ம் செய்திருக்கின்றார்........ https://www.newsweek.com/mark-cuban-trump-biden-election-chat-gpt-x-twitter-1919360
  23. ஜோ பைடனை மாற்ற வேண்டி வந்தாலும், கமலா ஹாரிஸ் தவிர வேறு எவரையும் இப்பொழுது பிரேரிக்க முடியாத ஒரு சிக்கல் இருக்கின்றது. பல மாநிலங்களில் ஏற்கனவே வேட்பாளர்களின் பட்டியல் நிரப்பப்பட்டு விட்டது. ஜனநாயக் கட்சியில் ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸின் பெயர் மட்டுமே உள்ளது. இன்னும் நாலு மாதங்களே இருக்கின்றன, வேறு மாற்றங்களுக்கு போதிய நேரம் இல்லை. ஆனால், பைடன் வென்று பதவிக்கு வந்த பின் வேறு மாற்றங்கள் செய்யக் கூடியதாக இருக்கும்.
  24. 'நாட்டாமை' படத்தில் வரும் மிக்சர் சாப்பிடும் காட்சி இன்னும் சுற்றிக் கொண்டிருக்கின்றது............🤣
  25. போட்டிகளை சிறப்பாகவும், உற்சாகமாகவும் நடத்திய @கிருபன் க்கு நன்றிகளும், வாழ்த்துகளும். வெற்றி பெற்ற @பிரபா, @ஈழப்பிரியன் அண்ணை, @கந்தப்பு மற்றும் பங்குபற்றிய எல்லோருக்கும் வாழ்த்துகள். போட்டிக்கு என்னை வெருட்டி இழுத்துக் கொண்டு வந்த @ஈழப்பிரியன் அண்ணைக்கு என் நன்றிகள். சாரே......... @வீரப் பையன்26 சாரே............ நாளைக்கு என்ன செய்யிறது........ எனக்கு கையும், காலும் ஓடாதே....... நீர் ஒரு அதிசயப் பிறவி ஐயா........🙏.....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.