Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ரசோதரன்

  1. இந்த அரசியல் கட்சிகளிடம் ஒரு நாலைந்து 'டெம்பிளேட்' அறிக்கைகள் இருக்குது போல: போட்டியிட்டால் ஒன்று, போடியிடா விட்டால் ஒன்று, கூட்டணி வைத்தால் ஒன்று, கூட்டணி வைக்கா விட்டால் ஒன்று, ....... 'நம்பர் டூ நான் தான், நான் தான்...' என்று எல்லோருமே சொல்கின்றனர், இந்த நேரத்தில் போய் எடப்பாடியார் பதுங்கலாமா? ஜெயலலிதாவே இடைத் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்த்தார் என்றால், அவர் எப்பவுமே ஒன்று அல்லது இரண்டு தானே. அவர் இருந்த போது, யாராவது நான் தான் நம்பர் டூ, ஜெயலலிதா நம்பர் த்ரீ என்று சொல்லி இருக்கத்தான் முடியுமா...... அப்படி யாராவது சொல்லி இருந்தால், அடுத்த முறை ஆட்சிக்கு வந்த அம்மா செய்த முதல் வேலை அந்த ஆளைத் தூக்கி உள்ளே போடுவதாகத்தான் இருந்திருக்கும். இடைத் தேர்தலில் பெரும்பாலும் ஆளும் கட்சி தான் வெல்லும். இது ஒன்றும் புதிது இல்லை. ஆனாலும் எதிர்க்கட்சிக்கு என்று ஒரு கடமை இருக்குதல்லவா? விக்கிரவண்டியில் 40, 30, 30 வீதங்கள் என்பது சாதிவாரியான கணக்கு. பாமக தங்களின் 40 வீதத்தில் பெரும்பான்மையை எடுக்கலாம் என்று கணக்கு போடுகின்றது. ஆனாலும் இது பலமாகப் பிரியும். அவர்களில் எல்லோரும் பாமகவிற்கும், மருத்துவர் குடும்பத்திற்கும் விசுவாசமானவர்கள் இல்லை. திமுக விசிகவுடன் உதவியுடன் அவர்களின் 30 வீதத்தை முழுசாக தாங்களே எடுக்கலாம் என்று நினைக்கின்றனர். மிகுதி 30இல் நாதக, பாஜக என்று பல பங்குகள் பிரியும். இந்த நிலையில் அதிமுக போட்டியிட்டாலும், இரண்டாவது இடம் கிடைப்பது சந்தேகமே. அதனால் தான் எடப்பாடியார் விலகுகின்றார் போல. ஆனாலும், தமிழ்நாடு தேர்தல் களநிலவரம் 2026ம் ஆண்டும், கூட்டணிக் கட்சிகளில் மாற்றம் இல்லை என்றால், இதுவே தானே. ஒரு வேளை எடப்பாடியார் பாமகவிற்கு இப்பவே விட்டுக் கொடுப்பது பின்னர் 2026 இல் வரப் போகும் கூட்டணிக்கு ஒரு அச்சாரமாகவும் இருக்கலாம்.
  2. 🤣....... குஷ்புவின் 'கோவில்' என்று தான் இன்றும் சொல்கின்றனர்.......சமீபத்தில் கூட செய்திகளில் அடிபட்டது..... 'அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பிச்சைக் காசு........' என்று குஷ்பு தெய்வம் சொன்ன விவகாரத்தில் என்று நினைக்கின்றேன்...... தவளைக்கும் தவளைக்கும் நடந்தாலும் அது திருமணமே... கழுதைக்கும் கழுதைக்கும் நடந்தாலும் அது கல்யாணமே...... இல்லாவிட்டால்.......மழை பெய்யாது, வானம் பொய்க்கும்....அந்த அந்த ஊர் மக்களையே கேட்டும் பார்க்கலாம்............😜.
  3. சிக்கல்கள் எதுவும் இல்லையென நம்புகின்றோம்........... நீங்கள் இருவரும் செய்ததும், சமீபத்தில் இந்தியாவில் நீட் தேர்வில் நடந்ததும் ஒன்றே என்று இங்கு ஒரு வதந்தி உலாவுகின்றது.........🤣....... அவர் வென்றால் வரும் புகழில் ஒரு பங்கு உங்களுடையது.......😜.
  4. 'அகழ்' இணைய இதழில் ஹால் சிரோவிட்ஸின் கவிதைகள் சிலவற்றை க.மோகனரங்கன் மொழியாக்கம் செய்துள்ளார். நாங்கள் சாதாரணமாக சொல்லிக் கொள்ளும் சில பகிடிகளை கவிதையாக எழுதியது போன்றுள்ளது. இலகுவான வாசிப்புக்கு ஏற்ற இந்தக் கவிதைகள் வாசிக்கும் போது புன்னகைக்க வைக்கின்றன. அங்கிருந்த இரண்டு கவிதைகளை இங்கு இணைத்துள்ளேன். மிகுதிக்கான இணைய இணைப்பு அடியில் உள்ளது. ************************************************************************* 1. புகழ் விளையாட்டு ------------------- உங்களுக்கு பிரபலமாக இருக்க வேண்டும் என்கிற தேவை உள்ளது என் சிகிச்சையாளர் கூறினார், ஆனால் முதலில் உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன் எல்லா பிரபலமான நபர்களையும் நீங்கள் பார்த்தீர்களானால் அவர்கள் அனைவருக்கும் வேலை இருக்கிறது. ஜார்ஜ் புஷ், அவர் வேலை எதுவும் செய்வது போல் தெரியவில்லை ஆனால் அவர் ஒருமுறை ஜனாதிபதியாக இருந்தார். நீங்கள் எங்கிருந்தாவது தொடங்க வேண்டும். அல்லாது போனால் உங்கள் சொந்த தலைக்கு உள்ளேதான் நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள் ஆனால் எல்லோருமே அப்படித்தான். *************************** 2. புத்தகங்களை இரல் தருவது --------------------------- நீங்கள் எப்போதும் தருபவராக இருக்கிறீர்கள், பெறுவது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென என் உளநல சிகிச்சையாளர் கூறினார். ஒரு பெண்ணைச் சந்திக்கும் போதெல்லாம், நீங்கள் முதலில் செய்வது உங்கள் புத்தகங்களைக் இரவலாகத் தருவதுதான். அவற்றைத் திருப்பித் தருவதற்காக அவள் திரும்பவும் உங்களைப் பார்க்க வருவாள் என்று எண்ணுகிறீர்கள். ஆனால் என்ன நடக்கிறது? அவற்றைப் படிக்க அவளுக்கு நேரம் இல்லை, அவள் உங்களை மீளவும் பார்த்தால் அவற்றைப் பற்றி பேசவேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறாள் தவிரவும் நீங்கள் இன்னும் அதிகமாக நூல்களை இரவல் தரவும் கூடும். அதனால் அச் சந்திப்பையே அவள் ரத்து செய்துவிடுகிறாள். நீங்கள் நிறைய புத்தகங்களை இழப்பதோடு அது முடிகிறது. மாறாக நீங்கள் அவளிடம் இரவல் பெறுபவராக வேண்டும். https://akazhonline.com/?p=7575
  5. வென்றாலும் நல்லது தான்...... கிருபனுக்கு சிரமம் குறையும், ஆப்கானிஸ்தான் அந்தக் குரூப்பில் புள்ளி அடிப்படையிலும் முதலாவதாக வருவதால்........ கோஷான் மீண்டும் முதலிடத்திற்கு வரக்கூடும்... (இங்கு களத்தில்) அமெரிக்காவில் வசிப்பவர்கள் கீழே போனதிற்கு ஆப்கானிஸ்தானே காரணமாகும்........🤣.
  6. கொடுத்து வைத்த மனிதர்..........பைடன், ட்ரம்ப் கூட அமெரிக்காவிற்குள் இப்படி மாநிலம் மாநிலமாக போய் வருவதில்லை..........🤣.
  7. 🤣.... நியூயோர்க் மைதானத்தையும் கழட்டி அடுக்கியாச்சு.........இனிமேல் உகண்டாவை தாண்டி எவரும் கீழே போக முடியாது.......
  8. கடும் கோபத்தில் இருக்கின்றார் இலங்கை அணியின் தலைவர் ஹசரங்க. யார் மேல என்றால்............இந்த சோஷல் மீடியாவில் நாள் முழுக்க உட்கார்ந்து, நொங்கு நொங்கு என்று நொங்கிக் கொண்டிருக்கின்றவர்கள் மேல... இன்றைய ஆங்கில டெய்லி மிரர்ரில் முழுவதும் இருக்கின்றது: https://www.dailymirror.lk/headline/Wanindu-Hasaranga-slams-social-media-trolls-Trying-to-make-other-Sri-Lanka-fans-angry/419-285072 போன வருடம் இந்தியாவில் நடந்த உலகக் கோப்பையில் 9வது ஆக வந்தோம். அந்தப் பிரச்சனைக்கே ஒரு முடிவை நாங்கள் இன்னும் பேசி, தீர்வு காணவில்லை, அதுக்குள்ள இன்னுமொரு உலகக் கோப்பை என்றால் என்ன செய்வது.......... இப்படி அவர் வெடித்திருக்கின்றார்..........😶. 'தீர்வு' என்ற சொல்லையே தீவின் அகராதியிலிருந்து எடுத்து விட்டார்கள் போல.........
  9. ஆசை தோசை அப்பம் வடை எல்லாம் காற்றில பறக்குது.........பபுவா நியூகினியா ஒரு four அடித்து விட்டார்கள்.......😔
  10. நீங்களுமா........... இரண்டு பேருக்கும் இடையில் டெலிபதி வேலை செய்திருக்கின்றது...........🤣.
  11. மழையால் இந்தப் போட்டி ஒரு ஐந்து ஓவர் போட்டி ஆகி பபுவா நியூகினியா 35 ஓட்டங்கள் மட்டுமே அடித்து இந்த உலக கோப்பையில் ஆகக் குறைந்த ஓட்டங்கள் எடுத்த அணியாகினால் உகண்டா மட்டுமா சந்தோசப்படும்............ 😜.
  12. 🤣........ அசோசியேட் மெம்பர்ஸை மட்டும் தான் ஹசரங்க அடிப்பார் என்று சொல்லியிருந்தவர்கள்........ அதுவும் சரிதான், ஃபுல் மெம்பர்ஸை அடிச்சா அவர்கள் திருப்பி அதிகமா அடிக்கிறாங்களே....
  13. 👍... இலங்கை மிக இலகுவாக வென்றது. பையன் சார் போட்ட போட்டில், இலங்கை அணி ஒழுங்காக விளையாடியது... பங்களாதேஷும் பெரிதாக கஷ்டப்படாமலேயே வென்றது....
  14. பங்களாதேஷ் கலங்குது..... இலங்கையும் பங்களாதெஷூம் தான் இப்ப பரம எதிரிகளாம் கிரிக்கெட்டில். பரம எதிரியை கவிழ்க்க இலங்கைக்கு இது ஒரு சந்தர்ப்பம்....😉
  15. நெதர்லாந்த் வென்று, பங்களாதேஷ் தோற்று, மொத்த ஓட்ட எண்ணிக்கை வித்தியாசம் 53 அல்லது கூடவென்றால், பங்களாதேஷும் அவுட்.....😚
  16. 🤣... முக்கிய வெஜிடபிளான முட்டைக்கோவா மிஸ்ஸிங்....
  17. 🤣...... அம்பானியும், அதானியும் இலங்கை அணியை வாங்கிய பின், 2026 இல் உலக கோப்பையை வாங்குது இலங்கை அணி....
  18. உங்களுக்கு சிரமம் குறைந்த வழியை தேர்ந்தெடுங்கள், கிருபன். முடிவு எதுவானாலும் நல்லதே. மிக்க நன்றி கிருபன்.
  19. 🤣.... தெரியும் நீங்கள் அதைக் கவனிக்காமல் எழுதி இருப்பீர்கள் என்று, ஆனாலும் அதை வாசித்தவுடன் எனக்கு ஒரே சிரிப்பு...... சுவி ஐயா, இங்குள்ள பெரிய மிருகமே கரடி தானாம்........எந்தப் பக்கம் பொருத்திப் பார்த்தாலும் சரியாகப் பொருந்துகின்றதே..........🤣 🤣....... அப்ப அதானி என்ன கொக்கா அல்லது தொக்கா.........நான் அதானிக்கு தான் விற்க வேண்டும் என்கின்றேன்.........
  20. எல்லாரும் இந்த திரிக்கு வருவதே அதற்கு மட்டும் போல என்று தெரியுதே........ தெருக்களில் நடந்து நடந்து 'ஹாஹா....ஹாஹா...' என்று குழுக்களாக செய்வார்களே, அது போல, மிக நல்ல பயிற்சியாம்.
  21. 🤣.... எட்டுப் பச்சைகள் என்றார்கள்......10 நிமிஷத்திலேயே எல்லாம் சிரித்து முடிந்து போயிட்டுது....
  22. 🤣.... கவனித்தேன், ஏராளன். ஆனாலும் நமக்கு பையன் சாரை எதிலாவது இழுக்காமல் பொழுது விடியாதே.......
  23. 🤣......... இந்த ஒரு சொல்லுக்காக அமெரிக்காவில் அரைவாசியை உங்களுக்கு எழுதி வைக்கின்றேன்......அமெரிக்கா சந்திரனை பிடித்தால் அதிலும் அரைவாசி உங்களுக்கே........ ஒரு சின்ன சந்தேகம்........ ஜாம்பவான் என்பதை 'ஜம்பவான்' என்று எழுதியதில் ஏதும் உட்குத்து உள்ளதோ, பையன் புலவரே......🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.