Everything posted by ரசோதரன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இது யாரு Axar Patel............. இந்தப் பொடியனை கணக்கில் எடுக்காமல் விட்டு விட்டோமே.......... இவருக்கும் வைக்கிறம் இப்ப ஒன்று......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இனி எவராலும் தடுக்க முடியாது.............. ஆள் மாறி விட்டது, ஆனாலும் சூனியம் வேலை செய்யுது......🤣.
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
இதிலென்ன சிரமம்..... நேரம் கிடைக்கும் போது இங்கு களத்தில் எழுதுவதும், பொழுது போக்காக அலட்டுவதும் எங்களின் வழமை தானே........👍. இங்கு மாநிலங்கள் அதிக சுயாட்சி உடையவை. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாநிலமும் ஒரு நாடு போன்று. அதிலும் சில பெரிய மாநிலங்கள், உதாரணம்: கலிஃபோர்னியா, டெக்சாஸ், நியூயோர்க், ஒரு குட்டி வல்லரசு போன்றவை. மாநில அரசினதும், மக்களினதும் ஆதரவில்லாமல் பெரிதாக எவராலும் எதையும் அந்த அந்த மாநிலங்களில் மாற்றவோ அல்லது புகுத்தவோ முடியாது.
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
இல்லை, இவர் சுடப்பட்டு கொல்லப்படவில்லை. இயற்கையாகவே இறந்தார், 2004ம் ஆண்டில். ஆனால் 1981இல் ஒரு தடவை சுடப்பட்டு உயிர் பிழைத்தார், எம்ஜிஆர் போன்றே. அதன் பின் அவர் மக்களால் மிகவும் விரும்பப்பட்டார் என்று சொல்கின்றனர் இங்கு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பார்த்து வைரவா, நீலக் கலர் சட்டை போட்டிருக்கிறவர்களை மட்டுமே குத்த வேண்டும்......... இது தான் சாட்டென்று கிரவுண்ட்ல நிற்கிற எல்லாரையும் குத்தக் கூடாது, வைரவ சாமியே...............
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
றீகன் அவர்களின் வரலாறு எனக்கு தெரியவில்லை, ஆனால் அமெரிக்கர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பும், மரியாதையையும் தெரியும். அவரின் திட்டங்களும், கனவுகளும், மற்றைய அதிகார மையங்களின் திட்டங்களுடன் ஒத்துப் போயிருக்கக் கூடும். உண்மையில் ட்ரம்ப் உருப்படியாக, அவர் பெயர் சொல்லும் படி என்ன செய்தார் என்றே தெரியவில்லை. அவரில் பட்ட காற்றுக் கூட கலிஃபோர்னியாப் பக்கம் வராது. சில சென்டிமெண்டுகள், எமோஷன்ஸ் என்பதை விட, அவரின் சாதனைகள் என்று ஏதாவது மிஞ்சுமா என்று தெரிய வில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣..... கோலிக்காக சாமிகிட்ட வேண்டுதல் ஒன்றும் வைக்கத் தேவையில்லை. ஏற்கனவே கோலிக்கு யாரோ மாலைதீவில் போய் சூனியம் வைத்து விட்டார்கள்.....................மற்ற இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் நாங்கள் தான் வைக்க வேண்டும்............🤣.
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
🤣......... நீங்கள் ஒரு வக்கீல் ஆகியிருக்க வேண்டியவர்.... எங்கிருந்து கட்டளைகள் எங்கு போகின்றன என்பது முக்கியம் என்று நினைக்கின்றேன். என்னுடைய அனுமானத்தின் பிரகாரம், ரஷ்யா மற்றும் அது போன்ற நாடுகளில் கட்டளைகள் அரச தலைவரிடமிருந்தே ஆரம்பிக்கின்றது. ஆரம்பகட்ட தகவல்களை அவர் பலரிடமிருந்து அல்லது நம்பிக்கையான ஒரு சிலரிடமிருந்தோ பெற்றுக் கொள்வார். அமெரிக்கா போன்ற நாடுகளில் கட்டளைகள் அரச தலைவரிடமிருந்து ஆரம்பிப்பதில்லை. அவர் ஓரளவு பின்னரேயே கலந்து ஆலோசிக்கப்படுவார். இறுதி முடிவில் அவரின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். கிட்டத்தட்ட இங்கு தனியார் நிறுவனங்களும் இப்படியே நடத்தப்படுகின்றன.
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
இது ஒரு பொம்மை பதவி இல்லை. ஆனால், கூட்டுப் பொறுப்பின் ஒரு பகுதியே அரச தலைவர். உலகமகா யுத்தங்கள் போன்ற விதிவிலக்குகள் தவிர, எந்த முடிவும் பலராலேயே எடுக்கப்படும். ஒவ்வொரு துறைக்கும் செனட் கமிட்டி என்று ஒன்று உள்ளது. அவர்கள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். 20, 30, 40 வருடங்களாக செனட் பதவிகளில் இருப்பவர்கள். அதை விட பாதுகாப்பு, இராணுவம், உளவு என்று பல அதிகார மையங்கள் உள்ளது. வெளி உலகத்திற்கே இன்னும் தெரியாத சில மையங்கள் அல்லது அதிகாரங்கள் கூட இருக்கக்கூடும். அரச தலைவர் தன்னிச்சையாக ஒரு முடிவை எடுக்கவே முடியாது, விதிவிலக்கான பெரும் நெருக்கடி காலங்களைத் தவிர.
-
குறுங்கதை 3 -- கிழக்கிலும் மேற்கிலும்
கிழக்கிலும் மேற்கிலும் ----------------------------------- கடந்த சில நாட்களாக அந்த மனிதரை அங்கு கண்டு கொண்டிருக்கின்றேன். இருவரும் ஒரு புன்முறுவலுடன் விலகிப் போய்க் கொண்டிருந்தோம். அவர் எந்த நாட்டவர் என்று சொல்லத் தெரியவில்லை. அவர் ஒரு ஆபிரிக்க அமெரிக்கராக இருப்பதற்கே சாத்தியம் அதிகம் போன்றது அவரது தோற்றம். காலையில் ஓட வருபவர்கள் மிகவும் குறைந்த குளிர்காலம் அது. இருவருக்கும் அந்தக் குளிரில் வெறும் டீ சேட்டும் காற்சட்டையுமாக நிற்கும் மற்றவர் கொஞ்சம் விநோதமானவராகத் தெரிந்திருக்கும். 'இந்தியரா......' என்று அவர் தான் ஆரம்பித்தார் ஒரு நாள். அந்த ஆங்கில உச்சரிப்பு அமெரிக்க உச்சரிப்பு இல்லை. 'இல்லை, ஶ்ரீ லங்கா....' என்று சொல்லி விட்டு, 'நீங்கள் .........' என்று இழுத்தேன். 'ஓ....... சிலோன்....' என்று என் பதிலைத் திருத்தி விட்டு, அப்படியே தலையை மேலும் கீழும் அசைத்து விட்டு அருகில் இருந்த பெஞ்சில் இலகுவாக அமர்ந்தார். இந்த லாவகத்தை நான் எங்கோ பார்த்திருக்கின்றேன், ஆனால் எங்கேயென்று சட்டென்று ஞாபகத்திற்கு வரவில்லை. 'கரிபியன்........' என்றார் அவர். அதே தான், அவர்களை நான் நிறையவே பார்த்திருக்கின்றேன். சிறுவனாக ஊரில் இருந்த காலங்களில் மேற்கிந்திய அணி தான் என் அணி, விவ் ரிச்சர்ட்ஸ் தான் என் வீரர். அவர் வந்து நிற்கும் தோரணையே 'இந்த ஊரில் எங்களுடன் போட்டி போட யாராவது இருக்கிறீர்களா............' என்று கேட்பது போல இருக்கும். அந்த நாட்களில் அந்த அணியின் மீது ஒரு கிறக்கத்தில் கிடந்தோம் நாங்கள் பலர். அதே தொனி தான் இவரிலும் தெரிந்தது. பின்னர் தினமும் கதைக்கத் தொடங்கினோம். கிரிக்கெட்டில் ஆரம்பித்த கதைகள் பின்னர் அப்படியே தனிப்பட்ட விடயங்களுக்கு தாவியது. என்னிடம் சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை. மிகச் சாதாரணமான ஒரு பாதையில், சாதாரணமாக ஒரு நடை நடந்தது போன்றது என் அனுபவங்கள். அவரோ அதற்கு எதிர். அங்கு ஒரு காவலராக ஒரு காட்டில் வேலை செய்திருக்கின்றார். காட்டை கொள்ளை அடிக்க வருபவர்களுடன் ஓயாது போராடுவது தான் அவரது வாழ்க்கையாக இருந்திருக்கின்றது. காட்டின் ஊடாக ஓடும் ஆற்றில் முதலைகள் போன்று வேடமிட்டுக் கூட 'கரிபியன் வீரப்பன்கள்' வந்துள்ளார்களாம். நிஜ முதலைகள் மனித முதலைகளை தண்ணீரில் அமுக்கிய கதைகளையும் சொன்னார். 'நேற்று சிலோனைப் பற்றி ஒரு புத்தகம் வாசித்தேன்.....' என்றபடி ஆரம்பித்தார் ஒரு காலையில். உங்கள் இருவர் மீதும் தப்பில்லை என்றார். யார் அந்த இருவர் என்று நான் கண்களைச் சுருக்கினேன். சிங்களீஸ் அன்ட் டமில்ஸ் என்றார். முழுத் தப்புமே பிரிட்டிஷ் அரசின் மேல் தான் என்றார். அவர்கள் எல்லா இடத்திலும், எல்லா நாடுகளிலும் இதையே செய்தனர் என்றார். சிறுபான்மையை உயர்த்தி, பெரும்பான்மையை தாழ்த்தி, பின்னர் அப்படியே ஒரு நாள் இரவோடிரவாக விட்டுவிட்டு ஓடி விட்டார்கள் என்று. வெஸ்ட் இண்டீஸையும் அவர்கள் தானே ஆண்டனர், அங்கேயும் இப்படியா செய்தனர் என்றேன் நான். நாங்கள் வெஸ்ட் இண்டீஸ், நீங்கள் ஈஸ்ட் இண்டீஸ், இதன் அர்த்தம் என்னவென்று உனக்கு தெரியுமா என்று கேட்டார். இதுக்கு என்ன பெரிய அர்த்தம் தேட வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் உலகின் மேற்கில் இருக்கிறீர்கள், நாங்கள் உலகின் கிழக்கில் இருக்கின்றோம், அது தானே என்று கேட்டேன். கூர்ந்து பார்த்து விட்டுச் சொன்னார், 'இதன் அர்த்தம் நீங்கள் கிழக்கில் இருக்கும் அடிமைகள், நாங்கள் மேற்கில் இருக்கும் அடிமைகள்.' அப்படியே இன்னும் ஒன்றும் சொன்னார்: இனிமேல் வெஸ்ட் இண்டீஸ் என்று சொல்லாதே, கரிபியன் என்றே சொல்லு என்று.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
புகை மூட்டம் இப்ப விலகி விட்டது.......கோலி இரண்டாவது பந்தில் காலியாகுன்றார், ரோகித் நாலாவது பந்தில் டக் அவுட் ஆகின்றார்.... அடுத்து வந்தவர் அடுத்த பந்தை வாங்கக் கூடாத இடத்தில் வாங்கி அப்படியே திரும்பிப் போகின்றார்.......................... அப்படியே தென் ஆபிரிக்கா வெல்லுது........🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா தான் வெல்லும் என்று மனம் சொல்லுது, ஆனால் அந்த அணி எப்படி வெல்லும் என்று அந்த மனதுக்கு சொல்லத் தெரியவில்லை. ஒரே புகை மூட்டமாக இருக்குது............🤣. இந்தியா வென்றால் சிலர் சிலரை ஏறி மிதித்துக் கொண்டு மேலே போகப் போகின்றார்கள்.........
-
மாலைத்தீவு ஜனாதிபதிக்குப் பில்லிசூனியம் – இரு அமைச்சர்கள் கைது!
டப்பென்று நம்ம நாட்டு, அயல் நாட்டு அரசியல்வாதிகளை இவர்கள் இருவரும் அறிவாளிகளாக மாற்றி விட்டார்கள். தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூ அண்ணையே பரவாயில்லை போலயே....... சூனியம் வைத்தது கூட பெரிதில்ல.......... சூனியம் வைத்ததிற்காக கைது செய்திருக்கின்றார்கள் பாருங்கள்...... 🫣.....
-
'தமிழ்நாட்டுக்கு நல்ல தலைவர்கள் வேண்டும்' - மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியது என்ன?
அதே பேச்சுத் தான், அப்படி ஒன்றும் அதிர்வலையை ஏற்படுத்துவது போல இதில் ஒன்றும் விசேடமாக இல்லை. இதே பேச்சை சிவாஜி, ரஜனி, கமல், பாக்கியராஜ், டி ராஜேந்தர்.... என்று அரசியலுக்கு வந்து போன பல நடிகர்கள் பேசியிருக்கின்றனர். வாங்கோ, வந்து பாருங்கோ, களம் என்னவென்று அப்பத்தான் தெரியும். நிச்சயம் மூன்றாவது அணி ஒன்று பலமிக்கதாக வேண்டும். இவர்கள் இருவரும் சேர்ந்தால் அது பலமே....👍.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இது உசுப்பேத்துவது மாதிரி தெரியவில்லையே......... ஒரு முசுப்பாத்தி மாதிரி எல்லோ கிடக்குது.......🤣. இந்தியா போகா விட்டால் பாக்கிஸ்தான் வென்றிடும் என்று சொன்னா, அதில் ஒரு நியாயமும்,உசுப்பும் இருக்குது.........
-
பைடன்- ட்ரம்ப் நாளை நேருக்கு நேர் விவாதம்!
அவர் சிறந்தவரா அல்லது இவர் சிறந்தவரா என்ற ஒப்பீடு இவர்கள் இருவருக்கும் இடையில் இல்லை என்று நினைக்கின்றேன். இப்பொழுது நாடு இருக்கும் நிலையில் அது சிறந்ததா அல்லது இது சிறந்ததா என்பதே நடுநிலையான வாக்காளர்களின் சிந்தனையாக இருக்கும். என்னுடையது அதுவே. நாட்டையே, அமெரிக்காவை மட்டுமே, முன்னிலைப்படுத்தியே இவர்கள் ஒரு பக்கம் சாய்வார்கள். பொதுவாக உலக நடப்புகள் வெறும் ஊறுகாய் மட்டுமே, வேறு எதுவுமே இல்லாவிட்டால் அதை கையில் எடுப்பார்கள். இரண்டு கட்சிகளினதும் தீவிர ஆதரவாளர்களும், ட்ரம்பின் ரசிகர்களும் என்ன ஆனாலும் மாறப் போவதில்லை. பங்குச் சந்தை போன்றே இந்த நாடும். வல்லுநர்கள் ஏதேதோ சொல்வார்கள், ஆனால் நடப்பதோ வேறு ஒன்று. ஏற்கனவே இருக்கும் பொறிமுறையில், சில சின்ன மாற்றங்களுடன், தான் நாடு போய்க் கொண்டிருக்கும், ஆனாலும் ட்ரம்ப் வந்தால் குடியேறிய மற்றும் அகதிகளாக வந்த முதலாவது தலைமுறைக்கு உள்ளூர ஒரு பயம் இருக்கும். இனவாதம், தூய்மைவாதம் போன்றன வெளியில் வந்து நடனமிடும். விவேக் ராமசாமி போன்றும் பலர் முன்னே வருவார்கள். மாற்றுக் கருத்துகள் சொல்வார்கள். நாங்கள் சிரித்துக் கொண்டேயிருக்க நான்கு வருடங்கள் ஓடி விடும். இளைஞர்கள் இங்கு மெதுமெதுவாகவே முன்னுக்கு வரலாம். அவர்கள் அதி வேகத்தில் முன்னே வருவதற்கு இங்கு ஒரு வெற்றிடம் பொதுவாக ஏற்படுவதில்லை. ஏற்கனவே ஒரு அதிகார, பதவி வரிசை இரு கட்சிகளிலும் இருந்து கொண்டேயிருக்கும். ஆனாலும் இரு கட்சிகளிலும் இப்பொழுது அந்த வரிசை பலமாக இல்லை, முக்கியமாக ஜனநாயக் கட்சியில். கலிஃபோர்னியா கவர்னர், நியூசம், அடுத்த தலைவராகப் பார்க்கப்படுகின்றார். அமெரிக்காவைப் பொறுத்த வரை அவர் ஒரு இடதுசாரி, அது ஒரு பலவீனம். விவேக் தவிர வேறு எந்த இளையவரும் தொடுவானம் வரை இல்லை. விவேக்கை ஒருவரும், அவர் தவிர, பெரிதாக பொருட்படுத்துவதில்லை. நடைமுறை சாத்தியமற்ற அதிரடியான கருத்துகள் மூலம் கவனம் பெறுவார், வேறு எதுவும் இல்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
😗.......... இலங்கை அணித் தலைவர் கடந்த உலகப் போட்டியிலும் ஒன்பதாவதாகத் தானே வந்தோம் என்று சொன்னது இதைத் தானா......... அப்படியே பழகி விட்டார்கள் போல..........
-
குறுங்கதை 2 -- சாரதாஸ் இலவசம்
இதில் பல வகை மற்றும் நிலைகள் இருக்கின்றன போல......... சில வகை மூப்புடன் ஏறபடும் இயற்கை என்கின்றார்கள். வேறு சில வகை பயங்கரமானவை என்கின்றனர். சிலவற்றை பார்த்தும் இருக்கின்றேன். இந்தப் பூமியிலிருந்து அவ்வளவு இலேசாக போக முடியாது போல...... ஏதோ ஒன்றிடமாவது அடி வாங்கித்தான் பிறவிப் பெரும்பயனை முடிக்க வேண்டும் ...........🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கை அணி அதே அணி தானே........... அது போதும் நாங்கள் களப்போட்டியில் முன்னேற..........😜.
-
குறுங்கதை 2 -- சாரதாஸ் இலவசம்
துவாயை அங்கேயே வைத்து விட்டு வந்திருக்கின்றேன்......... யாராவது எடுத்துக் கட்டி, எனக்காக பலியாகட்டும்........🤣
-
குறுங்கதை 2 -- சாரதாஸ் இலவசம்
சாரதாஸ் இலவசம் ---------------------------- அவரை அங்கே பார்த்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. அவருக்கு அப்பொழுது 75 அல்லது 80 வயதுகள் இருக்கும். ஆனாலும் அவரில் என்றுமே வயது தெரிவதில்லை. நல்ல உயரமும், அவரின் திடகாத்திரமான நிமிர்ந்த உருவமும் என்றும் அப்படியே இருக்கின்றது. நான் மிகச் சிறுவனாக இருந்து போது அவர் கால்ப்பந்து விளையாடியதை பார்த்திருக்கின்றேன். பின்னர் நான் வளர்ந்து, ஓரிரு வருடங்கள் அவருக்கு எதிராக விளையாடியிருக்கின்றேன். அங்கிருந்த பல கழகங்களில் அவர் ஒரு கழகம், நான் வேறு ஒரு கழகம். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். தனக்கு ஞாபகமில்லை என்று மிகவும் தயக்கத்துடன் சொன்னார். என் தந்தையை அவருக்கு ஞாபகம் இருந்தது. என்னைப் போல ஆயிரம் பேரை பார்த்திருப்பீர்கள் என்று சொல்லி அந்தச் சூழ்நிலையை கொஞ்சம் இலகுவாக்கி விட்டு, அவரின் பல பழைய விளையாட்டு மற்றும் அது சம்பந்தமான நிகழ்வுகளையும் சொல்ல ஆரம்பித்தேன். மிகவும் உற்சாகமானார். நான் அறியாத பல நிகழ்வுகளைச் சொன்னார். திருமணத்தின் பின் பலர் கழகம் மாறிய கதைகளைச் சொன்னார். பெண் வீட்டுக் கழகத்திற்கு மாறாமல் இருந்த ஒரு சிலரைப் பற்றியும் சொன்னார். ஓடிப் போய் தமிழ்நாட்டில் அகதிகளாக இருந்த காலத்தில், எங்களின் பல கழகங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு அணியாகி, தமிழ்நாடெங்கும் போட்டியிட்ட கதையைச் சொன்னார். ஒரு தடவை அவர்களின் காவல்துறை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிகவும் அடக்கமாக விளையாடியதை சொல்லிச் சிரித்தார். கதையின் நடுவே, நான் வேட்டியின் மேல் கட்டியிருந்த துவாயைக் காட்டி இது அந்த நாளில் சாரதாஸ் இலவசமாகக் கொடுக்கும் துவாய் என்றார். கட்டுக் கட்டும் போது இந்த துவாய்கள் பலவற்றை அவர்கள் இலவசமாக தருவார்கள் என்றார். கட்டு என்பது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடலினூடு கடத்தப்படும் பொதிக்கான உள்ளூர் பெயர். துவாயை அப்பொழுது தான் சரியாகப் பார்த்தேன். மிகவும் சாதாரண நூல் துவாய். நீட்டாகவும் குறுக்காகவும் கோடுகள். மொத்தமே இரண்டு நிறங்கள் தான் அதில் இருந்தது. அதிலும் ஒரு நிறம் மிகவும் தனித்துவமானது. ராசவள்ளிக் கிழங்கை சீவிக் கழுவின தண்ணீரின் மெல்லிய நிறம். எனக்கு அந்த துவாயை மிகவும் வேண்டிய, நெருங்கிய ஒருவரே கொடுத்திருந்தார். புதிது என்று சொல்லியே கொடுத்தார், ஆனால் இலவசமாகக் கிடைத்தது என்று அவர் சொல்லவில்லை. அவர் கட்டு கட்டும் தொழிலில் என்றும் இருந்ததில்லை. யாரோ அவருக்கு இலவசமாகவே கொடுத்திருக்க வேண்டும். கதைத்து முடித்து விட்டு கிளம்பும் போது தனக்கு இப்ப எதுவுமே ஞாபகத்தில் தங்கி நிற்பதில்லை என்றார். என்னையும் மறந்து, இங்கு கதைத்தவற்றைக் கூட அநேகமாக மறந்து விடுவேன் என்றார். திரும்பவும் என்னை மறந்து விடப் போகின்றாரோ என்ற கவலை உடனே வந்தாலும், அது உடனேயே மறைந்து, அவரைப் பார்த்ததும், நீண்ட நேரம் கதைத்ததும் ஒரு இனிய நினைவாக உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருந்தது. அடுத்த நாள். திருவிழாவில், அதே இடத்தில் அவர் இன்னொருவருடன் கதைத்துக் கொண்டிருந்தார். அருகில் போய் நின்றேன். அவருடைய கதையின் நடுவே என்னுடைய துவாயை மட்டும் இடைக்கிடை பார்த்துக் கொண்டேயிருந்தார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மூவரும் ஒன்றாக இருப்பதை வடிவாக, கடைசியாக பார்த்துக் கொள்ளுங்கள்......... இதற்கப்பால் நாங்கள் மூவரும் பிரிந்து போவதாக தீர்மானித்து விட்டோம்..........😜.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவர் சகோதரன் தீயா..... சரி, அது இருக்கட்டும். பையன் சார், நீங்க எல்லா தோசையும் சுட்டபடியால், சாதா தோசை, ரவா தோசை, பேப்பர் தோசை, மசலா தோசை, அனியன் தோசை, இப்படி ............ நாங்கள் எது எதுவென்று சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டம்..........🤣. 🤣.......... அகஸ்தியர் ஒருவருக்கு மட்டும் தான் அந்த வல்லமை அன்றும் இன்றும் இருக்கின்றது..........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கூடாரத்தையே காலி செய்து கொண்டிருக்கின்றார்கள்.............. பபுவா நியூகினியா மாதிரியே விளையாடுகின்றார்கள் இங்கிலாந்து.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்படியும் ஒரு விதி இருக்கா........... பகிடி தானே.