Everything posted by ரசோதரன்
-
துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி
👍..... நீதித்துறையை ஒரு ஆயுதமாக தங்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் ட்ரம்ப் மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் குற்றச்சாட்டுக்கு ஒரு பதிலும் இதனால் கிடைத்திருக்கின்றது. இரண்டு குற்றம் சாட்டப்பட்டவர்களும் ஒரு நாள் சிறைத் தண்டனை கூட பெறப் போவதில்லை என்பதும் இன்னொரு நிஜம்..............
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
நிஜமாகவே சாதி அரசியல் தாண்டி வருமா தமிழ்நாடு? விசிகவிற்கு வாக்களிக்கும் இளைஞர்கள் என்றாவது நாதகவிற்கு வாக்களிப்பார்களா? ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுடன் வேலை மற்றும் விளையாட்டு என்று பல வருடங்களாக பழகியதில், இதுவரை நாதகவிற்கு வாக்குப் போடும் ஒருவரை கூட நான் கண்டதில்லை. வெகு சிலரைத் தவிர, மற்றயோர் எல்லாம், வயது வேறுபாடின்றி, 'அவர்களின் ஆள் பார்த்தே' வாக்களிக்கின்றனர். பெரிய கட்சிகளும் அதற்கேற்பவே வேட்பாளர்களை நிற்பாட்டுகின்றன. விதிவிலக்கு ஓரிரு நட்சத்திர வேட்பாளர்கள் மட்டுமே. ஒரு இளைஞன் சிறிது வித்தியாசமாக இருக்கின்றான். இனத் தலைவர், குலத் தலைவர் என்று இரண்டு தலைவர்களை ஆராதிக்கின்றான். இனத் தலைவராக சீமானை வரிந்து உதவிகளும் செய்கின்றான். ஆனால் அவனுடைய மற்றும் அவனின் குடும்ப வாக்குகள் என்றும் குலத் தலைமைக்கே. எப்போதும் அவன் மாம்பழத்திற்கே வாக்குப் போடுவான். சீமானின் வீடியோக்களை அடிக்கடி அனுப்புவான். ஆனால், தேர்தலில் வாக்களிக்கும் சமயங்களில், 'இது வேற - அது வேற' என்பதில் மிகவும் தெளிவாகவே இருக்கின்றான். கமலுக்கும் இதே போன்ற ஒரு பிரபலம் தான் இளைஞர்களிடையே இருக்கின்றது. இதன் பின்னர் சீமான் அவர்கள் இன்னும் பெரிதாக மேலே போவார் என்று எதிர்பார்க்க முடியாது. அரசியலில், தேர்தலில் வரும் மாற்றங்கள் படிப்படியானவை அல்ல, அவை குறுகிய காலத்தில், சில தேர்தல்களிலேயே நாலு கால் பாய்ச்சலில் நடக்கவேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த போட்டியை முழுக்க பார்க்கக் கூடியதாக இருக்கும், என்னுடைய நேரம் பின்னேரம் 4:30 மணிக்கு இது தொடங்குகின்றது........👍 இந்தப் போட்டியில் இலங்கை தோற்க வேண்டும், இலங்கை கப்டன் வண்டுவை எல்லோரும் சேர்ந்து நசுக்க வேண்டும் என்பது தானே உங்களின் ஆவல்..........🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பருத்தி மூட்டை குடோனிலயே இருந்திருக்கலாம்.........🤣......மூன்று போட்டிகள் முடிவிலும் ஒரு மாற்றமும் இருக்காது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாகிஸ்தான் அதிகமாக முன்னேறினால், அமெரிக்கா வெளியால் போனாலும் போய் விடும்...........விடக் கூடாது...... ஒரு தேசிக்காயில் குங்குமத்தை பூசி உருட்டப் போகிறேன்...........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாகிஸ்தான் பக்குவமா விளையாடுது.........ஓவர் நைட்ல திருந்தி விட்டார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூயோர்க் மைதானத்தில் இருந்த நான்கு பிட்சுகளில் இன்று விளையாடுவது நாலாவது பிட்ச், இதுவரை விளையாடாதது. இதில் கனடா ஒரு 150 ஓட்டங்கள் அடிப்பார்கள் போல என்று கமெண்ட்ரியில் சொல்ல........கண் பட்டுப் போட்டுது........கனடா 55/5 10 ஓவர்களில்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உலகமே இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தான் வெல்லும் என்று நினைக்குது........ஆனால் பாகிஸ்தான் அணிக்கு தான் தங்கள் மேலேயே கொஞ்சம் சந்தேகமாக கிடக்குது போல......அவர்களின் பயிற்சியாளர் வீரர்களுக்கு செம டோஸ் விட்டிருக்கின்றார்........... இதை விட இன்னும் ஒரு போட்டி தானே.....அதுக்குப் பிறகு முழிச்சுப் பார்க்கட்டும்.......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பாகிஸ்தான் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது. இந்தப் போட்டியிலிருந்து விளையாட ஆரம்பித்து, அப்படியே கோப்பையை வெல்லப் போவதாக பாகிஸ்தான் சொல்லுகின்றது......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்கள் AVAST இல் exception list இல் யாழின் URL களை சேர்த்த பின்னும் யாழில் உட்புக முடியவில்லையா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எல்லோரும் 'வாங்கோ, வாங்கோ...' என்றெல்லோ அவரை வரவேற்றார்கள். 23 வது இடத்திற்கு ஆள் வந்து விட்டார், நாங்கள் மற்ற 22 இடங்களிற்கு போட்டி போடுவோம் என்று நினைத்திருக்க..... அமெரிக்காவும், பங்களாதேஷும் வெல்லும் என்று எவர் எதிர்பார்த்தார்.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣..... குருஜீ, நீங்கள் வாழ்க்கை வெறுத்த ஒரு கட்டத்தில் இருப்பதாகத் தெரிகின்றது. வாழ்க்கையின் அடிப்படையே வாழ்க்கை ஒரு வட்டம் என்பது தான் - இன்று கீழே, நாளை மேலே. கவலையை விடுங்கள். இன்று கீழே, நாளைக்கு இதை விடக் கீழே என்ற ஒரு நிலைமையும் சில வேளைகளில் வரக்கூடும். அந்த நேரத்தில் வட்டம் மாற வேண்டும், இன்னொரு வட்டத்திற்குள் புக வேண்டும். நீங்கள் ஐரோப்பா கால்ப்பந்து போட்டியை ஆரம்பியுங்கள் ..........🤣.
-
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.பாண்டியன் அறிவித்ததன் பின்னணி என்ன?
தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த இந்திய மாநிலங்களிலும் அந்த மாநிலத்தை சேராதா ஒருவர் ஒரு முக்கிய அரசியல்வாதி ஆவது சாத்தியம் இல்லாத ஒரு விடயம். வி.கே. பாண்டியன் உண்மையில் எதை நோக்கி போய்க் கொண்டிருந்தார் என்பது இப்பொழுது தெரியாமல் போய்விட்டது. திறமையான நிர்வாகியும், நிர்வாகத்தில் ஊழல், லஞ்சம் அற்றவர் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது. மோடிஜீ கன்யாகுமரியில் இரண்டு நாட்கள் இடைவெளி இல்லாமல் தியானத்தில் இருந்ததே தொலைந்து போன புரி ஜெகன்நாதர் கருவூலச் சாவியை கண்டுபிடிக்கவே என்று ஒரு பகிடி ஓடிக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டிற்கு சாவி வந்து விட்டது என்றவர்கள் இப்பொழுது ஆட்சியை பிடித்து விட்டனர். இப்பொழுது சாவியை எடுத்துக் கொண்டு போய் கருவூலத்தை திறக்க வேண்டியது தானே.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣.... ஒரு மணித்தியாலம் பிந்தி நியமனப் பத்திரம் தாக்கல் செய்ததைத் தானே சொல்கிறீர்கள்........
-
நிலவின் வளங்களை கைப்பற்ற புதிய விண்வெளி பந்தயம் - முந்துவது யார்?
மனிதர்களுக்கு தேவையானதும், பெறுமதிமிக்கதுமான உலோகங்களோ அல்லது மூலகங்களோ நிச்சயம் சந்திரனில் இருக்கும். அவற்றை அங்கே தேடிக் கண்டுபிடிக்கவும், பூமிக்கு எடுத்து வரவும் தேவையான தொழில்நுட்பங்களையும் நாங்கள் அடைந்துவிடுவோம். ஆனால், அங்கு போய் வரும் வசதியுள்ள வலிமையான பணக்கார நாடுகளே இவற்றால் இன்னும் வலிமை கூடியவையாக மாறப் போகின்றன.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மன்னிக்க வேண்டும், குருஜீ. இப்ப காலம் மாறிப் போச்சு..... இப்ப சின்ன அணிகள், பெரிய அணிகள் வேற: பெரிய அணிகள்: ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, ........... சின்ன அணிகள்: இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, ............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣....... என்னுடைய வேலைக்கு உலை வைக்கிற திட்டம் அண்ணைக்கு......🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
❤️...... நடந்திட்டுதே....... தென் ஆபிரிக்கா நான்கு ஓட்டங்களால் போராடி வென்றது......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எல்லா மாட்சுகளுக்கும் இப்படி நகம் கடிக்க வேண்டி இருந்தால், புதிசு புதுசா நகத்திற்கு எங்கே போவது....பக்கத்தில் இருக்கும் மனிதர்களின் நகங்களை தான் டப்பென்று பாய்ந்து கடிக்க வேண்டும் போல........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்ட ஒரு பிளேன் டீயே இன்னும் முடியல....... Anrich Nortje ஐபிஎல் இல் விட்டதை இந்த உலகக் கோப்பையில் பிடிக்கின்றார் என்று கமெண்ட்ரியில் சொல்லுகின்றனர்.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஒரு பிளேன் டீ போடப் போக, ஒரு விக்கட் விழுந்திட்டுது........10 பிளேன் டீ போட, பங்களாதேஷே காலியாகும் போல..........😜.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣..... காலங்காத்தால வெறும் வயிறு........பகோடா, வடை என்று ஆசை காட்டி விட்டீர்கள்.......ஒரு பிளேன் டீயை போட்டுக் கொண்டு, ஒன்றைத் தூக்க வேண்டியது தான்.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣....... இப்ப நொறுக்கிறம் பங்களாதேஷை அப்பளமாக......சுடுகிறம் வடையாக.....
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிறந்த நாள் பிள்ளையும் அவுட்......நீங்கள் சொன்னது போலவே இந்தியா அளவு ஓட்டங்களை தான் இவர்கள் எடுக்கப் போகின்றார்கள். பங்களாதேஷ் பாகிஸ்தான் அளவு ஓட்டங்களை எடுக்க.....கணக்கு சரிதானே.......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா அணியை பார்க்கிறதே ஒரு த்ரிலிங்கான அனுபவம்.......ஆட்கள் அவுட்டாக்கும் என்ற நினைக்க அடிக்கின்றார்கள்.....அடடே, அடிக்கின்றார்களே என்று நினைக்க அவுட் ஆகின்றனர். இவர்கள் தோற்கத்தான் போகின்றார்கள் என்று பலரும் நினைக்க, வென்றும் விடுவார்கள் இன்றும்........😜