Everything posted by ரசோதரன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍......... தென் ஆபிரிக்காவைத் தான் எல்லாருக்கும் தெரியுமே........ தென் ஆபிரிக்கா விளையாட ஆரம்பிக்கும் முன்னேயே, டி. ராஜேந்தர் 'நான் ஒரு ராசியில்லா ராஜா.......', 'வாசமில்லா மலர் இது.......' என்று சில பாட்டுகளை தென் ஆபிரிக்கா அணிக்காகத் தான் போட்டாராமே...........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- SL_Cricket_T20.jpg
- மோடியின் வெற்றியை யாழில் கொண்டாடிய சிவசேனை அமைப்பு
அவர்களே இன்னும் அறிக்கை ஒன்றும் விடாமல் முழிசிக் கொண்டு இருக்கின்றார்கள், இவை கொண்டாடுகினம்........ஜீ மூச்சுப் பேச்சில்லாமல் அங்க கிடக்கிறாரோ தெரியாது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣........ நேற்று போட்டியின் பின் இலங்கை அணி பற்றி ஒரு மீம்ஸ் வந்தது, அதைத் தான் தேடிக் கொண்டிருக்கின்றேன்..........- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣.......... இலங்கை அணி ஒரு போட்டியில் வெல்லும். மனதாரச் சொல்கின்றேன். மற்றைய விசயம்........விளையாட்டையும், அரசியலையும் கலக்கக் கூடாது, விட்டிடுவம்..........🤣.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍........ உங்களுக்காக என்றாலும் இலங்கை கிரிக்கட் அணியும், நாதக கட்சியும் (2026 சட்டமன்ற தேர்தலில்) ஒன்றாவது வெல்ல வேண்டும்...........- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
🤣....... ஜீயின் செல்வாக்கு இப்படி அதலபாதாளத்திற்கு போனதால், அவர்களே ஜீயை ஆண்டவனிடம் அனுப்பி விடுவார்களோ..........- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து இந்த இரண்டு அணிகளிலும் யாரோ ஒரு நல்ல மனுசன் இருக்கிறார். கிரவுண்டில் மழை பெய்யுது.........😀.- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
🤣........... நான் எழுதின இரண்டு வரிகளில் ஒன்றை நானே சென்சார் செய்து விட்டுத் தான் அந்தச் செய்தியையே போட்டிருந்தேன்.........ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு சமம் என்று மீண்டும் இன்னொரு தடவை இங்கு நிரூபிக்கப்படுகின்றது...........- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
👍....... ஜீ அவரால் முடிந்த அளவிற்கு எல்லாப் பாத்திரங்களிலும் நல்லாவே நடித்தாரே...........- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
😀........ உகண்டா செய்தால் அது உள்பக்க செய்தி, அதையே இலங்கை செய்தால் அது இன்றைய தலைப்பு செய்தி...........🤣.- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
ரோஜா சொல்லியிருந்தார் ஜெகன் அண்ணா தான் வெல்லுவார் என்று........- மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம்
கடவுள் என்ற ஒரு சக்தியை நம்ப ஆரம்பித்தால், எதுவும் எப்போதும் முடியும் தானே என்று சொல்வார்கள் என்று நினைக்கின்றேன்..........😜- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
👍........ உத்தரபிரதேச மக்களே மோடி & யோகி பிம்பத்தை உடைப்பதில் முன்னுக்கு நிற்கின்றார்கள்.......❤️- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
4% தக்க வைக்கிறதே முடியாது போல............ அவரின் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்கிற விசயத்தால் வந்த சேதம்.......- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
296 இடங்களை ஜீ பெறுவார் என்பது தற்போதைய நிலவரம்.......... மட்டு மட்டாக மீண்டும் வந்து விடுவார்கள் போல.......- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
முந்தாநாள் கூட ஓபிஎஸ் அவர் வென்று மத்திய அமைச்சர் ஆவது பற்றி ஏதோ சொல்லியிருந்தார். சேர்க்கை சரியில்லை...... சுத்திவர நிற்கின்ற நாலு பேர்கள் 'நீங்கள் அமைச்சர் ஆயிடுவீங்க, அண்ணே....' என்று சொல்லியிருப்பார்கள் போல.- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை....இது முற்றிலும் எதிர்பார்க்காதது.- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
ஜீ 6000 வாக்குகளால் பின்னடைவு...... கடவுளுக்கே சோதனையா...- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍.... கடைசி 5 ஓவரும் நல்லாவே இருந்தது. இப்ப முதல் 5 ஓவரில் 5 விக்கட் போயிட்டுது....18/5......- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உகண்டா இது உலகக் கோப்பை என்று தெரியாமல் உள்ளே வந்து விட்டது..... நாலு போட்டிகள் விளையாடினால் தான் வீட்டை போக விடுவார்கள்....- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍...... ஓமான் அணியில் Kashyap Prajapati என்ற பெயரில் ஒரு வீரர் விளையாடுகின்றார். நமீபியாவிற்கு எதிராக முதல் பந்திலேயே அவுட் ஆகினார். Prajapati என்ற பெயரைர் பார்த்ததுமே 'முண்டாசுப்பட்டி' படம் ஞாபகத்திற்கு வந்தது. இவர் உடனேயே அவுட் ஆகினதால், வந்த படம் அப்படியே போய் விட்டது. இவருக்கு குடியுரிமை கொடுத்த மாதிரி மற்ற வெளி ஆட்களுக்கும் கொடுக்கலாம் தானே...........- மெக்சிகோவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக Claudia Sheinbaum
அதே கட்சி, அதே தீவிர இடதுசாரி அரசியல். பெரிதாக மாற்றம் எதுவும் வரப் போவதில்லை என்றே சொல்லலாம். அந் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற வகையில் மகிழ்ச்சியடையலாம். ஆனாலும் அந் நாடு பெரும்பாலும் பெரும் போதைப் பொருள், ஆட் கடத்தல் முதலாளிகளாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றது. அமெரிக்காவிற்கு மெக்சிக்கோவால் இரண்டு பெரிய பிரச்சனைகள், பல ஆதாயங்களும் இருக்கின்றன. முதலாவது பிரச்சனை மெக்சிக்கோவில் இருந்து அமெரிக்கா உள்ளே வரும் போதைப் பொருட்கள். இரண்டாவது பிரச்சனை அமெரிக்கா - மெக்சிக்கோ எல்லையூனூடாக அமெரிக்கா உள்ளே வரும் அகதிகள். இவை இரண்டுக்கும் எந்த தீர்வோ, முடிவோ இந்தப் புதிய தலைவரால் கிட்டப் போவதில்லை........- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓமான் காசை அள்ளி எறிந்து இலங்கையில் இருந்து ஒரு நாலு நல்ல வீரர்களை தூக்கிக் கொண்டு வரலாம் தானே.........இன்றைய ஆட்டதை மட்டும் வைத்துப் பார்த்தால், இலங்கையில் அப்படி ஒரு நாலு நல்ல வீரர்கள் இருக்கிற மாதிரி தெரியவில்லை தான்........ சவூதி இப்படித்தானே கால்ப்பந்து வீரர்கள், கோல்ஃப் வீரர்கள் என்று உலகம் முழுக்க போய் விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கின்றனர்......
Important Information
By using this site, you agree to our Terms of Use.