Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரசோதரன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரசோதரன்

  1. நியூசிலாந்து வீரர்களுக்கு மைதானம் பிரச்சனை மாதிரி தெரியல......கண்ணில தான் பிரச்சனை....
  2. 🤣........ இது ஆஸ்திரேலியாவில் எந்தப் பூங்கா........அந்தப் பக்கமே போகமாட்டேன். ஈழப்பிரியன் அண்ணைதான் அப்படி (கொஞ்சம் உறுதியாக....) சொல்லிக்கொண்டு திரிகின்றார். நான் அப்படியும் இருக்குமா, அப்படி இருக்காது என்ற இரண்டுக்கும் இடையில் நடுவில் தான் நிற்கின்றேன்.......🤣.
  3. இதை தான் இப்போது பலரும் சொல்கின்றனர். தமிழ்வின் தங்களின் பங்காக மேலதிகமாக நாலு கண்களும், இரண்டு மூக்குகளும் வைப்பார்களே............ ஆஸ்திரேலியா பிட்ச் தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டார்கள்..............😜
  4. 'Saving Private Ryan' இந் நிகழ்வை அடிப்படையாக வைத்து 1998 இல் அந்த அருமையான ஒரு படம். இது 1999 இல் நிறைய ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, சில விருதுகளையும் வென்றது. என்னுடன் வேலை செய்யும் ஒருவர் அவரின் தாத்தா, அவர் ஒரு முன்னாள் படை வீரர் மற்றும் நார்மண்டி தரையிறக்கத்தில் பங்குபற்றியவர், இந்த வாரம் அங்கு போயிருப்பதாகச் சொன்னார்.
  5. 🤣........ குகுடுப்பை சாஸ்திரம் போலவே சொல்லியிருக்கின்றீர்கள். அப்படியே பலிக்கப் போகுது. நாங்க சும்மா 'குண்டக்க மண்டக்க' என்று போடவில்லை... ஒவ்வொரு தெரிவிற்கும் பின்னால் எவ்வளவு 'திங்கிங்' இருந்தது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள். உதாரணம்: உகண்டா எதிர் PNG. PNG என்றால் ஒரு கழகமா அல்லது நாடா என்று முதலில் ஒரே குழப்பம். அப்புறம் அது ஒரு நாடு தான் என்று தெரிந்ததது...அந்தக் குழப்பத்திலேயே உகண்டாவை தெரிவு செய்ய, உகண்டா வென்றது வரலாறு..........
  6. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தலைவர் அண்ணாமலை தோல்வியடைந்தால் மொட்டை அடித்து கொள்கிறேன் என மாற்று கட்சி நண்பர்களிடம் சவால் விட்ட அக்கட்சியின் நிர்வாகி, அண்ணாமலை தோல்வியடைந்ததையடுத்து மொட்டையடித்து கொண்டு பஜாரில் வலம் வந்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உடன்குடி ஒன்றிய பாஜ மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு செயலாளராக ஜெயசங்கர் என்பவர் இருந்து வருகிறார். இவர், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார் என அப்பகுதியை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதிமுக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர்கள், அப்படி வெற்றி பெறவில்லையென்றால் என்ன செய்வீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார். வெற்றி பெறவில்லையென்றால் பரமன்குறிச்சி பஜாரில் வைத்து மொட்டையடித்து பஜார் பகுதியில் வலம் வருகிறேன் என சவால் விட்டுள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மேலும் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தோல்வியை தழுவினார். இதையடுத்து மாற்று கட்சி நண்பர்களிடம் சவால் விட்டிருந்த ஜெயசங்கர் நேற்று பரமன்குறிச்சி பஜாரில் வைத்து மொட்டையடித்து கொண்டு பஜாரை வலம் வந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. https://www.dinakaran.com/loksabhaelections_annamalai_thoothukudi/ https://minnambalam.com/tamil-nadu/annamalai-defeat-bjp-worker-who-lost-in-the-key-and-got-shaved/
  7. இவர்கள் மூவரும் என்ன இரண்டு பக்கமும் பேசுகின்றார்கள்..........இவர்களே போட்டுக் கொடுக்கின்றார்கள், பின்னர் இவர்களே தட்டியும் கொடுக்கின்றார்கள். எல்லா இடத்திலும் தோற்றாலும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் போட்டியிட்டது என்பது தான் பாஜகவின் உச்சமாக இருக்கும் தமிழ்நாட்டில். இப்படியே அண்ணாமலையார் அவரேயாக ஒதுங்குவதும் அவருக்கு நல்லது தான். நடிகர் விஜய் நாதகவிற்கும், விசிகவிற்கும் வாழ்த்துகள் தெரிவித்து இருக்கின்றார். அடுத்த தேர்தலிற்கு இன்னொரு புதுக் கூட்டணி, அணி தயாராகின்றதோ?
  8. சிங்கங்கள் ஏற்கனவே தங்களை ஏயார்போட்டில் ஏழு மணித்தியாலங்கள் காக்க வைத்ததாகவும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டல் மைதானத்தில் இருந்து அதிக தூரத்தில் இருப்பதாகவும் குறை சொல்லியிருக்கின்றார்கள். சிங்கங்கள் எது நடந்தாலும், அதற்கு இப்பவே தயராகவே இருக்கின்றார்கள் போல........🤣. பங்களாதேஷின் தேசிய விலங்கு எது என்று தேடிப் பார்த்தேன்........... சரியான தெரிவும், போட்டியும்!
  9. பங்களாதேஷ் வெல்லப் போகுது என்று போட்ட நால்வரும் ஒரு பயங்கரமான காம்பினேஷனாக தெரியுதே...😜
  10. 👍........ கனடாவின் முதலாவது உலக கோப்பை வெற்றி அல்லது அப்படி ஏதோ கமெண்ட்ரியில் சொன்னார்கள்...👍
  11. இந்தப் பிள்ளை ஏன் இப்படி சுத்தி சுத்தி ஓடுது........கனடா வென்றால், அங்கே எவரும் இரண்டு காலும் பூமியில் பட நிற்க மாட்டினம் போல..........🤣. ஃபோன் பக்கத்திலேயே இருக்குது, 'எப்படி அயர்லாந்திற்கு குடுத்தம்........' என்று இப்ப கூப்பிட்டுச் சொல்வார்கள்................
  12. கேணி - Small Tank? சிரமதானம் - Community Service? பிழையாகக் கூட இருக்கலாம், அதனால் தான் '?' அங்கே இருக்கின்றது.......😀.
  13. இந்த அயர்லாந்து இங்கிலாந்தோட முரண்டு பட்டுக் கொண்டிருந்தார்களே, அதால கிரிக்கெட்டில் நல்லா வந்திருப்பார்கள் ஆக்கும் என்று ஒரு பொது அறிவை பயன்படுத்தி தான் நான் அயர்லாந்தை தெரிவு செய்தேன்............பையன் சார், இந்த டீமை அயர்லாந்துச் சந்தையில கீரை விக்க அனுப்புவம்......🤣
  14. கோஷான் நினைத்ததை சாதித்து விட்டார்.............🤣.
  15. 🤣....... அமெரிக்காவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறீர்கள்.........
  16. 🤣....... நாங்க ஒரு ஓரம் சாரமா இருந்து கிரிக்கட் பற்றி மட்டும் கதைக்கிறது பிடிக்கவில்லை உங்களுக்கு, அது தான் ரஷ்யாவை உள்ளே இழுக்கிறீங்க.....😜 நேற்று இரவு ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். நம்மவர் தான். ரஷ்யாவின் ஏவுகணைகள் உலகம் எங்கும் போகும் என்றார். ஆனால் உக்ரேனுக்குள்ள சரியாகப் போகுதில்லையோ........என்று யோசிக்காமல் சட்டென்று கேட்டு விட்டேன். சரியாகக் கோபப்பட்டார். நான் அப்படி அவரை கேட்டிருக்கக்கூடாது.
  17. நியூ யோர்க் பிட்ச் சரியில்லை என்று ஒரே குற்றச்சாட்டாக இருக்கின்றது. ஐசிசி அமெரிக்க கிரிக்கெட் கவுன்சிலை எச்சரித்திருத்திருக்கிறார்களாம் என்று இலங்கை டெயிலி மிர்ரரில் செய்தி போட்டிருக்கின்றார்கள்.
  18. 🙏..... சிலரால் தான் இவை முடியும். தமிழக நாடாளுமன்ற தேர்தலை அவர், @கந்தப்பு, தானே நடத்தி இருந்தவர்......👍 அந்த நேரம் வெளியில் நின்ற படியால் அதில் பங்குபற்ற முடியாமல் போய் விட்டது. என்ன பகிடியா.........ஈழப்பிரியன் அண்ணாவும், கோஷானும் எதிர்பார்த்தார்களே......❤️.
  19. 👍........ கனடாவை ஒரே அமுக்கா அமுக்கி விட்டு, தாங்கள் ஒரு பத்து ஓவர்களில் அடிச்சு முடிக்கிற துணிவோட அயர்லாந்து தலைவர் நம்பிக்கையாக இருக்கின்றார்........
  20. ஓ, நீங்கள் தான் அதுவா.............கவலையை விடுங்கள், நாங்கள் பலர் கடகம் வைச்சுக் கொண்டு நிற்கிறம், எங்களுக்கும் கிடைக்கத் தான் போகுது.........
  21. அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமாவது நடக்கவே நடக்காது, கோஷான். இங்கு கால்ப்பந்தாட்டமே, மெஸ்ஸி வந்த பின்னும், மெது மெதுவாகவே மூச்சு விடுகின்றது. இவர்கள் சில விடயங்களில் மாறவே மாட்டார்கள். இன்னமும் இறாத்தல், அடி, அங்குலம் என்பது போல முதல் நாலு விளையாட்டுகளும் அப்படியே இருக்கும் - அமெரிக்கன் ஃபுட்பால், பேஸ்பால், பாஸ்கட்பால், ஐஸ் ஹாக்கி.
  22. எனக்கும் என்னுடையதை நம்ப கஷ்டமாகத்தானிருக்கிறது, நந்தன். நந்தன் ஏன் முடிவுகளைப் பார்த்து சிரிக்கின்றார் என்று நினைத்தேன், இப்பதானே விளங்குது.........இன்னும் நிறைய தூரம் இருக்குது நந்தன்.
  23. அமெரிக்கா பாகிஸ்தானை வென்றதே பெரிய மலையாள மாந்திரீகம் ஆகக் கிடக்குது.......அதிலும் அந்த அமெரிக்க ஓபனிங் துடுப்பாட்டக்காரர் ஒரு பகுதி நேர கிரிக்கெட் வீரராம்........முழு நேர சாப்ட்ஃவேர் இன்ஜினியராம்............கம்பனியில் வேலை குறைவு போல.....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.