ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
Everything posted by ரசோதரன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣........... பகல் கனவு இல்லை, பையன் சார்.......ஆட்டம் முடியும் நேரம் இங்கு இரவு 9 மணி. இரவு 9 மணிக்கு காண்கிற கனவு பலிக்கும் என்று சொல்வார்கள்..........😋 எட்டு ஓவருக்கு பின், இந்த அமெரிக்கர்கள் வழமை போல நம்பினவர்களை கையை விட்டு விட்டார்கள் என்று நினைத்து, இனி என்ன செய்யலாம் என்று, அப்படியே ஒரு தியான நிலைக்கு போய் விட்டேன். அதற்குப் பிறகு தான் Aaron Jones அடிக்க ஆரம்பித்தார்......பட்டர் ஃபிளை எஃபக்ட்........😀.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍..... இப்படியே எல்லா அணிகளும், கனடா போல, அமெரிக்காவோட விளையாடினால், அமெரிக்கா உலக கோப்பையையே வென்றுவிடும்....🤣 🤣.... நான் இப்ப ஃபோன் எடுத்தால், 'கிரிக்கட்டா, அப்படின்னா என்ன?' என்று கேட்பாங்கள் நந்தன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வாழ்க்கையில் முன்னுக்கு கஷ்டப்படுகிறவர்கள் பின்னுக்கு நல்லா இருப்பினமாம்........🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓ மை கடவுளே, என்னை நீங்கள் இங்கு போட்டியில் கடைசியில் வரச் செய்தாலும், அது எனக்கு பரவாயில்லை. ஆனால் இன்றைக்கு இந்தக் கனடாவை தோற்கச் செய்து விடுங்கள். கடவுளே. கனடா இன்றைக்கு வென்றால், அங்கிருக்கும் என் நண்பர்கள் எல்லோரும் திடீரென்று இன்றைக்கு உடனடி கிரிக்கட் வித்தகர்களாக ஆகிவிடுவார்கள். முந்தி ஒரு தடவை கனடா அணியொன்று கூடைபந்தாட்டத்தில் வென்றவுடன், அவர்கள் போட்ட ஆட்டத்தை நீங்கள் பார்த்தனீர்கள் தானே..........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍.......... நீங்கள் முட்டை என்று சொன்னவுடன் ஒரு விசயம் ஞாபகத்திற்கு வருகின்றது. இலங்கையில் முட்டை பாவனை அதிகமாகி விட்டதாக செய்தியில் இருந்தது. அதனால் தான் நான் இலங்கையை தெரிவு செய்யவில்லை, இலங்கைக்கு இன்னும் நிறைய முட்டைகள் கிடைக்கட்டும், மற்றபடி நான் இலங்கையை தெரிவு செய்யாததற்கு கிரிக்கட் சம்பந்தமான காரணம் ஒன்றும் இல்லை............😀.
-
இறுதி கட்டத் தேர்தலில் வெல்லப் போவது யார்?
பக்கத்தில் இரண்டு டன் ஏசியும், கீழே கடலிற்குள் நீர்மூழ்கிக் கப்பலும் வைத்துக் கொண்டு ஜீ கன்யாகுமாரியில் தியானத்தில் இருப்பதை பார்த்த பின்னும் வட இந்தியாவில் உருகாத ஒரு மனமும் இருக்குமோ.........ஜீ 400 எடுக்க மாட்டார், ஆனாலும் அநேகமாக அடுத்த ஐந்து வருடங்களுக்கும் இவரே தான். ட்ரம்பும் வந்து, அநுரகுமார திஸாநாயக்காவும் சேர்ந்து வந்தால், அடுத்த ஐந்து வருடங்கள் கார்ட்டூன்களின் பொற்காலம் ஆக இருக்கும்..........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍....... இந்த கூட்டத்தில் நாலு விசயம் தெரிந்த மனிதர்களும் இருக்கின்றார்கள்.............
-
தோழர் இரும்பு
'தோழர் இரும்பு' என்னும் இச் சிறுகதை ஜான் சுந்தர் அவர்களால் எழுதப்பட்டு 'அகழ்' இதழில் வெளிவந்திருக்கின்றது. 'தோழர்கள்' எப்போதுமே கொஞ்சம் 'இரும்பு' போன்றவர்கள்தான். கொள்கை, கோட்பாடுகள், இலட்சியம் என்று உறுதியாக, வளைந்து கொடுக்காமல் வாழ்பவர்கள். அவர்கள் சாதாரண மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயல்வதில்லை, அவை ஒவ்வொன்றும் தனித்தனியே முக்கியமானவையாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை போலும். இச் சிறுகதை தோழர்களின் இன்னொரு பக்கத்தை, இளகிய மனங்களை, காட்டுகின்றது. இதை வாசித்த போது இது ஒரு சாதாரண கதையாகத் தான் தெரிந்தது. ஆனாலும் பின்னர் இது தினமும் மனதில் வந்து போகின்றது. கதையில் நிகழும் பிரதான விடயங்களுக்கு பெரிதாக சம்பந்தம் இல்லாமல் இருக்கும் இந்த ஒரு வசனம் எங்களில் பலரை சொல்வது போலவே இருக்கின்றது: ” தோ…இரும்பு கூப்பிடுது.. பேரீச்சம் பழம் கெடந்து துள்ளுது.. நம்ம கிட்ட பேசச்சொல்லு… இப்படி சிரிப்பு வருதான்னு பாக்குறேன்” என்றார் தேன்மலர். ***************** தோழர் இரும்பு (ஜான் சுந்தர்) ----------------------------------------------- வீட்டுச் செலவுக்கு காசு கொடுக்காமல் சாப்பிடுவதில்லை என்கிற முடிவில் இருக்கிறேன். மகள்கள் வற்புறுத்தி சாப்பிட வைத்தாலும் மறுசோறு வாங்குவதில்லை என்று ஒரு வைராக்கியம். நான் என்ன செய்யட்டும்? வேலை வந்தால்தானே? ”ஹூம்… வந்துட்டாலும்….” இந்த கஞ்சத்துக்குப் பிறந்தவர்கள் தருகிற சம்பளம் இருக்கிறதே அதை நினைத்தால் மனக்கண்ணில் ஊறுங்கண்ணீர் தோழர் குணசேகரனின் குரல் வழியே ’ஆறாப்பெருகி ஆனை குளிப்பாட்ட, குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட’ பெருகிப் பெருகி வழிந்து கொண்டே இருக்கும். சின்னமகள் என்னை இழுத்துக் கொண்டு போய் தரையில் அமரச் செய்தாள். பெரியவள் உட்கார்ந்த இடத்துக்கே கைகழுவ பாத்திரமும், தண்ணீர் செம்பும் கொண்டு வந்தாள். வீடு என்று ஒன்று இருந்தால் இப்படி மனுசனைத் தாங்க வேண்டும். அதுவும் மனசு பொறுக்காத கோபத்தில் இருக்கிற போதோ, நெஞ்சு பாரமாய் இருக்கிறபோதோ தாங்கியே தீர வேண்டும். அதை விட்டு விட்டு ஏற்கனவே புண்ணாக கிடப்பதற்குள் விரலை விட்டு குடையக் கூடாது. கடந்த இரண்டு மாதங்களாக தன் சேமிப்பால் இந்த குடும்பச் செலவை சமாளித்து வருகிற என் இணையர் தட்டை வைத்து சோற்றை அன்னக்குத்தியில் அள்ளி வைத்து குழம்பை ஊற்றினார். நான் அவரது கண்களைப் பாராமல் சாப்பிடத் துவங்கினேன்.முருங்கைக் கீரையும் பருப்பும் சேர்ந்தாலே பயங்கரமாயிருக்கும் . இதில் அரைத்த தேங்காயும், தேன்மலரின் பிரத்யேகமான தாளிப்பும் சேர்ந்து கொண்டு மணக்க , குழம்பு அதிபயங்கரமாயிருந்தது. நான் என் வைராக்கியத்தை மறந்து, “இன்னும் கொஞ்சம் சோறு போடுங்க தேன்மலர்” என்றபோது, அலைபேசி ‘தோழர். இரும்பு’ என்று ஒளிர்ந்தது. “வேண்டாம்… போதும் ” தட்டோடு எழுந்தேன். “தோழர்! வண்ட்டன் ரெண்டே நிமிஷம்” என் உற்சாகத்தைக் கண்டதும் இங்கே இன்னொரு தாளிப்பு துவங்கியது. ” தோ…இரும்பு கூப்பிடுது.. பேரீச்சம் பழம் கெடந்து துள்ளுது.. நம்ம கிட்ட பேசச்சொல்லு… இப்படி சிரிப்பு வருதான்னு பாக்குறேன்” என்றார் தேன்மலர். நான் கையைக் கழுவிவிட்டு மொட்டை மாடிப்படிகளுக்கு நடந்தேன். “ இன்னேரத்துக்கு மாடிக்கு போக வேண்டியது நடுசாமத்துல எறங்கி வரவேண்டியது” மணியைப் பார்த்தேன். பத்தரையாகி விட்டிருந்தது. நாளைக்குப் பேசுவோமா? இல்லை. முடியாது. இப்போது இருக்கிற மனக்குடைச்சலில் இருந்து நான் வெளியே வரவேண்டும். தோழர் ‘இரும்பு’என்கிற இரும்பொறை இளஞ்சேரல் மாலெ இயக்கத்தில் பகுதி நேர ஊழியராக இருந்து யோசனைக்கு எட்டாத பெருங்காரியங்கள் செய்தவர். பின்னாட்களில் இயக்கத்திலிருந்து விலகி மனைவியும் குழந்தைகளுமாக திருப்பூரில் வசிக்கிறார். தமிழாசிரியை மகன் என்றாலும் பள்ளியில் கலகம் செய்து படிப்பை முடிக்காமலே வெளியேறியதால் தற்போது பின்னலாடைத் துறையில் பணி. “ஒண்ணுமில்ல தோழர் சாப்புட்டீங்ளா?” வானம் கழுவி விட்டாற்போலிருந்தது. “ஆச்சு தோழர் சொல்லுங்க” தாமதமாக கூடு திரும்புகிற ஏதோ ஒரு பறவை கீச்சிட்டது தோழர் ஒன்றும் இல்லை என்றால் பகிர்ந்து கொள்ள ஏதோ இருக்கிறது என்று பொருள். ஏதோ என்றால் தட்டையான தகவலாக இருக்காது. புதிய களங்களில் எளிய நடையில் மனதை பிடித்துக் கொண்டு போய் அசாத்தியமான பரவச நிலைக்கு தள்ளுகிற முத்துலிங்கத்தின் கதைகள் பற்றியோ, “ஏந்தோழர்? நெசம்மாலுமே அந்தாளுக்கு எம்பது வயசு ஆகுதுங்ளா?”. ‘நல்ல புணர்ச்சிக்கிடையில் அழுகிற பெண்’ வருகிற பூமா.ஈஸ்வர மூர்த்தியின் கவிதை வரியைக் குறித்தோ, “இதென்னுங் தோழர் விசுக்குனு இப்புடி சொல்டாப்ள?”. ஒவ்வொன்றாகத் தொட்டுத்தொட்டு தொடர்ச்சியாக பேசிப்பேசி அவரது சொந்த வாழ்வில் கண்ட மனிதர்களைக் குறித்துப் பேசுவது என்று போகும். “பொம்பள சும்மா ஆறு ஆறறை அடிக்கு கொறையாம இருக்கும் தோழர்.. “ சாட்சியாக நேரில் பார்த்த சம்பவங்களை அசலான கொங்குத்தமிழில் விவரிப்பார். “.. அவரும் ஆதிக்கசாதில பொறந்தவருதானுங்க..ஆனா ஆளு எப்புடி தெரியிங்ளா? ப்யூர் கம்னிஸ்டுங் தோழர்.. தங்கம்னா தங்கம்ங்! சுயசாதிக்காரங் கண்ணுக்குள்றயே வெரல உட்டு ஆட்டிப்போட்டாருங் அவுனுக உடுவானுகளா கொன்ட்டானுக” வீணாகப்போக இருந்த நாளை பேச்சில் வளர்த்தி உருப்படியாக்கித்தருவார். “இங்கே எவன்ட்டயும் எதயிம் பேச முடில தோழர்! ‘ஏனப்பா முந்தியெல்லாம் வெட்டும் குத்துமா நல்லா ரத்தக் கதையா சொல்லுவ? இப்பல்லாம் நெஞ்ச நக்குற கதையா இருக்குதேடா நஞ்சப்பா’ன்றானுக.. இவனுக இப்போதைக்கு பக்குவப்பட மாட்டானுக தோழர்” ” நீங்கயேங்க அதயெல்லாம் சட்டை பண்றீங்க?” “இன்னக்கி ஒரு கலியாணப் பத்திரிக்கை வந்தது தோழர். மனசுக்கே நெம்ப சந்தோசமாயிருச்சுங்” நான் மௌனமாய் இருந்தேன். தோழர் தொடர்ந்தார். எனக்கு தோழர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தால் போதும். “ஒரு இருவது வருஷத்துக்கு முன்னாடி இதே திலுப்பூருல நானும் என்ர ஃப்ரண்டும் டீக்கடயில நின்ட்டுருந்தோம். எனக்கு செம்ம டயர்டாருக்கு. ஏறுவெய்யல்ல வெடி நைட்டு முடிச்சு நிக்கிறன். மறுக்கா பகல் பாக்கோணும். வேல தெரிஞ்ச ஆளுக கெடைக்க மாட்டாங்க தோழர். எதையப் பார்த்தாலும் சலிப்பா இருக்குது…” நான் செருப்பை மாட்டிக் கொண்டு தோழரோடு வானத்துள் இறங்கி நடந்தேன்.சாயம் போன தர்பூசணித் துண்டாக வீதியில் கிடக்கிறது வெளிர் நிலா. “…சரீங்களா? ஒரு குடும்பம் வந்து டீக்கடயோரமா நிக்குது. ஒரு பெரியவரு.. அவரு சம்சாரம், அப்பறம் அவிய பொண்ணு,பையன்” “ம்ம்” மனம் வரைகிற காட்சியில் திருப்பூர் துலங்கும். ” பெரியவருதான் டீய வாங்கி வாங்கி ஒரோருத்தருக்கும் குடுக்குறாப்ள” “செரி” “பொண்ணும் பையனும் டீய வாங்கி குடிக்கிறாங்க… இந்தம்மா டீ டம்ளர வாங்கி கைல வெச்சுட்டு தலய குனிஞ்சே நிக்கிது “ “ஏன்?” ” நமக்குந்தெரீலியே தோழர்… குறுக்க பேசாம கேளுங்க… பெரியவரு சமாதானப்படுத்தற மாதற ஏதோ சொல்லீட்டுருக்காரு” எனக்கு இப்போது உம் கொட்டுவதற்கு யோசனையாக இருந்தது “நம்ம ஃபிரண்டு சும்மா இருக்காம ‘ஏனுங்க ஏதாச்சிம் பிரச்சனைங்களா? உதவி கீணு வேணுமா?’ அப்படின்னு கேட்டுட்டானுங்க “ “இவன் எப்புமே பக்கத்துல இருக்கறவங்க கிட்ட வாய குடுத்து எதயாவது கேப்பானுங்க நேரம் போறதுக்கு “ “உம்மையில உதவியெல்லாஞ் செய்யமாட்டானுங்க எனக்கு நல்லா தெரியிம் “ “பெரியவரு யாராச்சிம் ஏதாச்சிம் கேப்பாங்களான்னு பாத்துட்டுருந்தாப்ள போல “ “அவரு பாட்டுக்கு சொல்ல ஆரம்பிச்சுட்டாப்ள “ “நல்லா வாழ்ந்து கட்ட குடும்பம் “ “கடங்காரனுக தொல்ல” “குடும்பத்தோட கெளம்பி வன்ட்டாங்க “ “ஏதாவது வேல வேணும் “ “இவன் நல்லா ஊ..ஊன்னு கதை கேக்கறானுங்னா?” “ம்ம்….ம்ம்” “நான் நடுல பூந்து எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணங்கட்ட பேசி அவரு கம்பெனில சேத்து வுட்டன்” “நாலு பேருமே… செக்கிங்ல ஒருத்தரு, மடிக்கிறது ஒருத்தரு, பண்டலுக்கு ஒருத்தரு, கடைக்கு போறதுக்கு ஒரு ஆளுன்னு செட்டாயிட்டாங்க” “பெரியவர் வேலை நேரம் போக ,வெளிய மேஞ்சுக்கிட்டுருந்த ஆடு மாடுகள வேடிக்கை பாக்கறது… அதுகளுக்கு தழையப் புடுங்கி போடறதுன்னு இவரா செஞ்சிட்டுருந்திருக்காப்ள… அதுல ஒரு பசுமாட்டுக்கு வாந்தி பேதின்னு என்னவோ தொந்தரவு இருந்திருக்குமாட்டக்குது …” “இவரு ரோட்டோரம் தேடித்தேடி அங்கங்க மொளச்சுக்கெடந்த செடியப் பறிச்சு கசக்கி துணில பொதிஞ்சு மொகமூடியாட்டம் கட்டி வுட்டுருக்காரு அது ரெண்டு மூணு நாள்ள சும்மா கிண்ணுன்னு ரெடியாயிருச்சு” “இதையெல்லாம் ஓனர் பார்த்துட்டே இருந்திருப்பாப்ளயாட்டம் இருக்குது” “பெரியவரே! நீங்க நம்ம தோட்டத்த பாத்துக்கோங்கன்னு சொல்லி தோட்டத்து வீட்டுக்கு குடிபோக சொல்லிட்டாரு” ”அடங்கொன்னியா!” “பெரியவரு ஊர்ல பெரிய பண்ணக்காரரா இருந்திருப்பாராட்டக்குது” “இங்க தோட்டத்து வெளச்சல ரெண்டாக்கி ..” “கால்நடைகள பெருகப்பண்ணி…” “பார்ரா” ” ஆமா தோழர்! கூடுதலா கெணறு தோண்டி…” “நாலஞ்சு வருஷத்துல தோட்டத்த ஜம்முன்னு ஆக்கிட்டாப்ள” “கொஞ்சம் கொஞ்சமா ஊர்ல இருந்த கடனையும் முடிச்சு.. எல்லாத்தையிஞ்செரி பண்ணி மறுக்கா ஊருக்கே போய்ட்டாங்க. இத்தன வருசம் கழிச்சு அவரு புள்ளக்கி கலியாணம்னு நம்மளயும் நாவகம் வெச்சு அழைக்க வந்துருக்காரு தோழர்! “ ” அட! பத்திரிக்கையில புள்ளையூட்டுக்காரன்னு என்ர பேரை அடிச்சிருக்காரு தோழர்!” தோழர் அவரது உடையாத வலுத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். ஆயினும் பெருமிதத்தில் அவர் நெஞ்சம் துடிப்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. ” மனிதர்களை நமக்குத்தான் அணுகத்தெரீல தோழர். எல்லாருமே அருவாக்கத்திய வச்சுட்டு திரியறதாவே நெனச்சுக்குறோம்” “போன வாரம் நீங்க கூப்பிடயில ரயில்வே ஸ்டேஷன்ல பார்சல் போட்டுட்ருக்கேன் தோழர் நான் கூப்பிடுறேன்னு சொன்னன்ல” “ம்ம்…ஆமா….” நான் யோசித்தபடியே ஆமோதித்தேன். “அதுவும் பழைய கதைதான்! திருச்சிலருந்து ஒரு அக்கா ரெண்டு பசங்களோட கெளம்பி இங்க வந்துருச்சு “ “புருஷன் பயங்கர தண்ணிவண்டிங்” “அடி தாங்க முடியாம இந்த பொம்பள, கொழந்தைகள தூக்கிட்டு ரயில்ல வுழுந்து தற்கொலை பண்ணிக்கலாம்னு போயிருக்குது” “அங்க போயி கொழந்தைக மொகத்த பாத்துட்டு இவனுக்கோசரம் நாம ஏஞ்சாகோணும்? கூடவே இந்த ரெண்டயும் ஏங்கொல்லோணும் ? அதுக என்ன பாவம் பண்டுச்சுன்னு ரயிலேறி வந்திருச்சு” ”அப்பறொம்?” “இங்க வந்து எங்க கம்பனில சேந்துருச்சு” ”சிறப்பு தோழர்!” “ரெண்டு பசங்களையும் வச்சுகிட்டு பாவம் அப்படியே வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தது “ “நம்ம கம்பனில ஒரு அண்ணன்.. பேரு சுப்பிரமணி. நாங்க கிண்டலுக்கு சுனாமின்னு கூப்பிட்டு ஓட்டுவோம். ஆச்சு அப்பவே ஒரு முப்பத்தெட்டு பக்கம் ஆயிருச்சு… கலியாணம் இல்லாத கன்னிப்பையன்” “அந்த திருச்சிக்கார அக்காள சுனாமிகட்ட கண்ணக்காட்டி நாங்க சும்மா நக்கலுக்குப் பேச, இந்தாளு பயங்கரமா வெக்கத்துல நெளிவாப்ள… ஒரே காமெடியா இருக்கும் தோழர்.. “ ”பொம்பள பாவம் ரெண்டு பசங்களயும் வெச்சுகிட்டு தனியா கெடந்து பாடுபடுது தோழர்.. நம்மாளுஞ் சும்மாத்தானே மெஷினோட்டறப்ள… சேர்ந்து இருக்கட்டுமேன்னு நாங்க நெனச்சோம்” “அதென்னவோ அந்தக்காளுக்கும் அதே மாதற தோணிருக்கும் போலருக்குது… ரெண்டு பேருக்கும் செட்டாயிப்போச்சு “ ”சிறப்பு….மிகச்சிறப்பு” “சுனாமி ரூம காலி பண்ணிட்டு அந்தக்கா வீட்டுக்கே போயிட்டாப்ள” ”ஓஹோ” “பார்க்கறவன் என்ன பேசுவான்…… ஒரு கவலையுங்கெடயாது “ “கம்பனி பசங்களுக்கு அது ஒரு செக்ஸ் புக்கு கதை தானே தோழர் ? அவனுகளுக்கு வேற என்ன தெரியிம்?” “பொதுப்புத்தி தோழர்” “அந்தாளுக்கு சைக்கிள் கூட ஓட்ட தெரியாது தோழர் ! ரெண்டு பசங்களையும் நடத்தியே சினிமாக்கு கூட்டீட்டு போவாரு” “அந்தக்காள விட அந்த பசங்க மேல சுனாமிக்கு பாசம் “ “பேல்பூரி, காளான், தட்டுவடைன்னு தெனமும் பார்சல் கட்டீட்டு போவாப்ள” “எங்கிட்ட ஒரு தடவ சொன்னாப்ள… ‘நானெல்லாம் அனாதையாவே செத்து போயிருவேன்னு நெனச்சேன் இரும்பு! எனக்கு கூட ரெண்டு குழந்தைகளும் பொண்டாட்டியும் கெடைச்சிருச்சே? இதுங்களுக்காகவே வாழ்ந்துட்டு சந்தோஷமா செத்துருவேன்டா நானு’ன்னு …என்ன தோழர் இது ம்ம்? … எப்படி? எனக்கு அப்போ என்னடா இது காஜி காஜிங்கறானுகளே? அந்த உடல்தேவையைக் கடந்துட்டா அந்தப்பக்கம் ஒரு பெரிய ஏரியா இருக்கு போலருக்குதேன்னு தோணுச்சு ” தோழர் இடைவெளி விட்டு மௌனமாய் இருந்தார். நான் வெகு நேரம் பேசாமலே இருந்ததால் பேசப்போவதாக காட்டிக் கொள்ள, தொண்டையைக் கணைத்துக்கொண்டேன். “ஜப்பான்காரங்க கிட்ட ஒரு பழக்கம் இருக்கு தோழர்!. நல்ல பேரு சொல்வாங்க… மறந்துருச்சு .. உடைஞ்சு சிதறிப்போன பீங்கான் கோப்பைத் துண்டுகள எல்லாம் சேகரிச்சு வெச்சுகிட்டு கவனமா அதையெல்லாம் ஒண்ணா சேர்த்து ஒட்டுறாங்க. ஒட்டுப்போட்ட விரிசல்களோட திரும்பவும் பழைய வடிவத்துக்கு அந்த கோப்பையைக் கொண்டு வந்துடறாங்க. விரிசல்களை மறைக்கறது இல்ல. மாறா அந்த விரிசல்களுக்கு தங்க முலாம் பூசுறாங்க. சுக்கு நூறா உடைஞ்சு சிதறிப்போன அந்த பீங்கான் பாத்திரம் இப்போ தங்க விரிசல்களோட ஒளிருது ,வீட்டு அலமாரிகள்ல அதை வெச்சு அலங்கரிக்கறாங்க. பிசகுகள, தவறுகள, சறுக்கல்கள எல்லாம் அவங்க கொண்டாடுறாங்க. தவறுகளயோ, குறைகளயோ சரி செஞ்சுகிட்டு நிறைவாக்குறதுதான் வாழ்க்கைங்கறத புரிஞ்சுக்கவே இப்படிச் செய்றாங்க போல, சுப்பிரமணி உடைஞ்சு போன அந்தப் பொண்ணுமேல படிஞ்ச தங்கம் தோழர்! நாம அவங்ககிட்ட பேச முடிஞ்சா இன்னும் அருமையா இருக்கும் “என்று சொல்லி முடித்தேன். ” தோழர்!….. முழுசா கேளுங்க ! கத இன்னும் முடியல” என்றார் இரும்பு.”காலம் எப்படியெல்லாம் மாத்தி மாத்திப்போடுது பாருங்க” நான் மறுபடியும் மௌனத்தை கைக்கொண்டேன். “திருச்சிக்கார அக்காளோட பெரிய பையன் படிச்சு ஐ டி ஃபீல்டுக்கு போயிட்டான். கர்நாடகாவுல வேலை கிடைச்சிருச்சு” “பெரியவன் போனானா? அவனுக்கு சாப்பாடு செஞ்சு போட இந்தக்காவும் போயிருச்சு. இங்க திலுப்பூர்ல சின்னவனும், சுனாமியும் தங்கி சமைச்சு, சாப்பிட்டு வேலைக்கு போயிட்டுருந்தாங்க.பெரியவனுக்கு அங்க நல்ல சம்பளம் வரவும், சின்னவனையும் கூப்பிட்டுட்டான். ஓ… இவங்க நம்மள கழட்டிவுடறாங்கன்னு புரிஞ்சிகிட்டு சுனாமி தண்ணிய போட்டு அப்படியே சும்மா சுத்திட்டு இருந்தாப்ள.பழையபடி அனாதையாயிட்டேன் இரும்புன்னு சொல்வாப்ள” “அடப்பாவமே” “கண்ணீர் மட்டும் நிக்காம போயிட்டே இருக்கும் தோழர்,,, கண் கொண்டு பாக்க முடியாது” இரும்பு அழுகிறாரோ என்று எனக்கு சந்தேகம். “ஆனா அவங்கள பத்தி யார் கிட்டயும் ஒரு வார்த்தை தப்பா பேச மாட்டாப்ள. போன வாரம் சின்னவன் வன்ட்டான்” மொட்டை மாடிக் காற்று சிலீரென்று முகத்தை வருடியது. “வந்து எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு ‘எங்கூட கிளம்பு சுனாமி’ங்கறான். இந்தாளு, ‘இல்ல அது நல்லா இருக்காது’ன்னு சொல்றாப்ள.பெரியவனுக்கு கல்யாணம் பேசணும் நீ இல்லாம எப்படினு அவன் கேட்டான் சொந்தக்காரங்க என்னை யாருன்னு கேட்டா என்னன்னு சொல்றது? அது நல்லா இருக்காது” “எவனாச்சும் வந்து கேட்டா எங்க கிட்ட சொல்லு அதெல்லாம் நானும் எங்க அண்ணனும் பார்த்துக்கறோம்னான் பாருங்க கதாநாயகன் மாதற..அங்கே எங்கம்மா வாயத்தொறந்து சொல்லலன்னாலும் அதனால இருக்க முடியல எளச்சு எலும்பாப்போச்சு” “எங்களாலயே இருக்க முடியலய்யா உன்ன விட்டுட்டு “ “நீ என்ன இங்கயே இருந்துர்லாம்னு நினைச்சியாக்கும்? சுனாமி இப்ப கிளம்பப் போறியா இல்லையா ?” “அட உங்க சொந்தக்காரன் யாருன்னு கேட்டா என்னடா சொல்லுவ?” “சுனாமி திரும்பத்திரும்ப கேட்டதுக்கு அந்த பையன் சொல்றான் தோழர்.. “ “எங்க அம்மாவோட லவ்வர்ன்னு சொல்லிக்கிறோம் நீ கிளம்பி வாய்யா மூடீட்டு” “தோழர்! சத்தீமா எனக்கு கண்ணுல தண்ணி வந்துருச்சு தோழர் ..அப்புறம் நான் தான் எல்லாத்தையும் மூட்டை கட்டி ரயில்ல பார்சலா போட்டு அனுப்பி வெச்சுட்டு வந்தேன் “ பிறகு நான் பேச்சை மாற்ற வேண்டி,” ஏன் தோழர்? கல்யாண பத்திரிகை வைக்க வந்தாரே? அந்த பெரியவர்! அவர் குடும்பத்துக்கு உதவணும்னு உங்களுக்கு ஏன் தோணுச்சு? உங்க நண்பர் தானே பேசிட்டு இருந்தாரு நீங்க எதனால நடுவுல புகுந்தீங்க? என்று கேட்டேன் . அவர் சட்டென்று சுனாமியின் கதைக்குள் இருந்து வெளியே வந்தார் . “அது வந்து தோழர் ….அவரு பேசும்போது அவங்க ஊரோட பேரை சொன்னாரு தோழர்! அவங்க ஊரோட பேரைப்பாருங்க ‘அழகிய நிலமங்கலம் ! ‘ தோழர் ! ‘அழகிய நில மங்கலம்’ ஒவ்வொரு சொல்லாக நிறுத்தி திருத்தமாக உச்சரித்தார். “ரொம்ப அழகா இருந்தது தோழர்” இந்த மாதிரி பேரு வச்ச ஊரிலிருந்து ஒரு குடும்பம் வந்து கஷ்டப்படணுமான்னு தோணுச்சு “என்றார். எனக்கு ஏதோ நிறைந்து விட்டது போலிருந்தது. அவரிடம் ‘திரும்பவும் பேசுவோம் தோழர், கூப்பிடறேன்’ என்று பேச்சை முடித்துக் கொண்டு கீழே இறங்கும் போது ‘அழகிய நில மங்கலம்’ என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தேன். https://akazhonline.com/?p=7365
-
பிரபஞ்சத்தின் மிகப்பழைய விண்மீன் மண்டலத்தின் ஒளி விஞ்ஞானிகளைக் குழப்புவது ஏன்?
பெரு வெடிப்பின் (Big Bang) பின் ஒரு மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு முதிர்ச்சி அடைந்த நட்சத்திர திரள் (galaxy) உருவாகியிருப்பது பெரும் ஆச்சரியமான செய்தியே. ஒரு சில புள்ளிகளை மட்டும் வைத்துக் கொண்டு நாங்கள் ஒரு பெரிய கோலத்தை போடுகின்றோமோ என்றும் தோன்றுகின்றது. ஆனாலும் பல ஆயிரம் கோடி வருடங்களின் முன் நடந்த நிகழ்வுகளை இந்த எல்லையில்லா பிரபஞ்சத்தின் ஒரு தூசியான மனிதர்கள் அறிவியல் ரீதியாக ஆராய முற்படுவது மனித வரலாற்றில் ஒரு பெரும் பாய்ச்சலே. பெரு வெடிப்பின் முன் என்ன இருந்தது என்ற ஒரு கேள்வியும் எப்போதும் இருக்கின்றது. பல பதில்களும் இருக்கின்றன. முற்றிலும் வெறும் சூனியமாக இருக்கவில்லை, அப்போதும் ஒரு பிரபஞ்சம் இருந்தது என்ற ஒரு பதிலும் அதில் உண்டு. அப்போதே நட்சத்திர திரள்களும் இருந்தனவோ...........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்கு நாங்கள் பலரும் 'work from home' தானே..........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍.... கலிஃபோர்னியா நேரப்படி பல நாட்களில் காலை வேலை ஆரம்பிக்கும் நேரத்தில் ஒரு போட்டி வருகின்றது. அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி அப்படியே அளவாக இருக்கின்றது.....😀. அடுத்தது பின்னேரம் வேலை முடியும் நேரம் இன்னொரு போட்டி வருகின்றது....இது தான் கொஞ்சம் சிக்கலான நேரம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Boston Celtics என்னுடைய தெரிவு. Dallas Mavericks இறுதிப் போட்டிக்கு போகும் என்றே நான் நினைத்திருக்கவில்லை. லூகா உலகின் மிக சிறந்த ஒரு விளையாட்டு வீரர் தான், ஆனால் இப்பொழுது அவருக்குள்ள ஒரு ஏலியன் போனது போல இன்னும் நன்றாக விளையாடுகின்றார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍..... நீங்கள் இங்கு பழம் தின்று மரம் நட்டவர்.......இந்த தடவை நீங்கள் வெல்கிறீர்கள், இப்பவே மேற்கிந்திய அணிக்கு மாறுங்கள்...........🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍........... சும்மா ஒரு பகிடியாகத்தான் அப்படிச் சொல்லியிருந்தேன்.........அப்பவாவது அவர் களத்தில் குதிப்பார் என்ற ஒரு எதிர்பார்ப்பில்...... 😀...... வேறு வேறு போட்டிகளிலும், வேறு வேறு இடங்களிலும் இதுவே நடந்திருக்கின்றது. அமெரிக்கன் ஃபுட்பால் பற்றிய போட்டிகளில், அதிகம் செய்திகள் தெரிந்து வைத்திருப்பவர்கள் கட்டக் கடைசியில் வருவது மிகச் சாதாரணமாக நடக்கும்.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த உலகத்தை அவ்வளவாக நம்பக்கூடாது. ஏதோ எங்களை விரும்பித் தான் கூப்பிடுகின்றார்களே என்று நினைப்பம், ஆனால் கூப்பிடுவதே கடைசியில் விட்டு கழுதையாக்குவதற்காகவும் இருக்கலாம்..........🤣🤣.....
-
நீரிழிவு நோய்க்கு புதிய மருந்து : சீனாவினது ஆய்வில் வெற்றி!
அவசரப்பட்டு ஒரு முடிவிற்கு வராமல் மற்ற நாட்டுக்காரர்கள் கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது. சைனாவில் மட்டும் 140 மில்லியன் ஆட்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பொறுப்புக் கூறல் இல்லாத தேசம், சில ஆண்டுகளுக்கு தங்களையே சோதித்து கொள்ளட்டும்.......
-
பிரக்ஞானந்தா: சொந்த நாட்டில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இந்திய இளம் செஸ் வீரர்
நேற்று இந்தப் படம் மின்னம்பலத்தில் வந்திருந்தது..............👍
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
🫣........ பின்னே இது மனிதர்களின் மரபணுவில் அடிப்படையாக இருக்கும் ஒரு விடயமோ.............
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
போன மாதம் ராய்ட்டர்ஸ் இங்கு ஒரு கருத்துக் கணிப்பினை நடத்தியது. அதில் ட்ரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பு வந்தால், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களில் 25% ஆனவர்கள் இவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தனர். எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திய வாக்காளர்களில் 60% ஆனவர்கள் இவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சொல்லியிருந்ததாகவும் ஞாபகம். இவரின் தீவிர ஆதரவாளர்கள் இன்னும் தீவிரமாக மாறுவார்கள். தீக்குளிக்கும் வழக்கம் இங்கு இல்லாதது நல்ல ஒரு விடயம். மற்றபடி, இந்த தீர்ப்பு, கிடைக்கப் போகும் தண்டனை எதுவாகினும், இவருக்கு ஒரு பின்னடைவு என்றே நினைக்கின்றேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍.... அதுவே ஏராளன். ஒரு பிரதியை உண்டாக்கி தெரிவுகளை குறித்தால் இப்படி நடக்காது. கணனியில் செய்வது சுலபம், ஃபோனில் என்றால் கொஞ்சம் கஷ்டம் தான்.............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
என்னது, நீங்களுமா...........இப்ப வந்த இன்னொன்றிலும், வாத்தியார் என்று நினைக்கின்றேன், இந்த அணியே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது. கடும் போட்டியாக இருக்குதே.........🤣. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா ரசிகர்களை விட, எங்களின் கைகள் எண்ணிக்கையில் ஓங்குகின்றனவே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍.... இந்த மாதிரி Fantasy Sports போட்டிகளில் முதலாவதாக வருவதும், கடைசியாக வருவதும் தான் கஷ்டம் என்று சொல்வார்கள்.........வந்து விடுவம் போல இப்பவே தெரியுதே.......🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🙏..... கையில் இருந்த காசு முழுவதையும் மேற்கிந்திய அணியை நம்பி கட்டியிருக்கின்றேன். சொந்த ஊரில் நன்றாக விளையாடுகின்றார்களா என்று பார்ப்போம்.......... 👍.... அதுவும் இந்த கூகிள் படிவம் ஏற்கனவே நிரப்பப்பட்டும் இருக்கின்றது. அங்கே இங்கே ஒன்றிரண்டு மாற்றங்கள் செய்தாலே போதுமானதாக இருக்கின்றது.......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
# Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN USA 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI PNG WI 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL SA SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG UGA AFG 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG SCOT ENG 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED NEP NED 😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND IRL IND 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG UGA UGA 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA PAK PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN IRL IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ AFG NZ 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL BAN BAN 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED SA SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI UGA WI 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA BAN SA 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK CAN PAK 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL NEP SL 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS NAM AUS 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA IND IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI NZ WI 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN NED BAN 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG OMA ENG 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG PNG AFG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA IRL IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA NEP SA 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ UGA NZ 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND CAN IND 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM ENG ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS SCOT AUS 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK IRL PAK 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL NED SL 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ PNG NZ 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI AFG WI முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK CAN Select CAN Select IRL Select IRL Select USA Select USA Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) IND #A2 - ? (1 புள்ளிகள்) PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG AUS Select AUS AUS NAM Select NAM Select SCOT Select SCOT Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) AUS #B2 - ? (1 புள்ளிகள்) ENG 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ WI Select WI WI AFG Select AFG Select PNG Select PNG Select UGA Select UGA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) WI #B2 - ? (1 புள்ளிகள்) NZ 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PNG முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA Select SA SA SL Select SL Select BAN Select BAN BAN NED Select NED Select NEP Select NEP Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) SA #B2 - ? (1 புள்ளிகள்) BAN 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 PAK SA SA 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 AUS NZ AUS 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 WI IND WI 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 ENG BAN ENG 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 AUS SA AUS 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 PAK NZ NZ 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 IND BAN IND 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 WI ENG WI 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 PAK AUS AUS 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 NZ SA NZ 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 ENG IND IND 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 WI BAN WI சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND ENG Select ENG Select WI Select WI WI BAN Select BAN Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) WI #அணி 1B - ? (2 புள்ளிகள்) IND 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) PAK Select PAK Select AUS Select AUS AUS NZ Select NZ NZ SA Select SA Select 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) AUS #அணி 2B - ? (1 புள்ளிகள்) NZ 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) WI 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி WI உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) AUS 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PNG 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Brandon King 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) WI 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Pat Cummins 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Glenn Maxwell 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammed Siraj 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Brandon King 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) WI குதித்து விட்டேன், பையன் சார்.........😀. 🤣..... எத்தனை கேள்விகள், எத்தனை தெரிவுகள்..........இப்படி ஒரு சோதனையை முந்தி எங்கேயாவது எழுதச் சொல்லியிருந்தால், படிப்பு அன்றுடனேயே முடிந்திருக்கும்....... 👍.... தெரிவுகளை அனுப்பியிருக்கின்றேன் கிருபன்....🙏
-
நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. பிரதமர் மோடி தகவல்.
😀..... நீங்கள் சொல்வது போலவே அதிகாரம் கிடைத்தால் நானே கடவுள் என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள், எப்போதும் இருப்பார்கள். அதிகாரங்கள் கிடைத்த பின், இன்னும் அமைதியாகவும், எளிமையாகவும் நடப்பவர்களும் எப்போதும் உண்டு. உள்ளே ஒரு சக்கரவர்த்தி என்ற நினைப்பு இருந்தாலும், வெளியே அநியாயத்திற்கு அடக்கமாக இருப்பவர்களும் உண்டு. இந்த வகையினர் இப்பொழுது கொஞ்சம் அதிகம் என்றே நினைக்கின்றேன். பறவைகள் பல விதம் என்பார்கள். அதை விட மனிதர்கள் அதிக விதம். எது என்னவாயினும், ஒருவர் எந்த நிலையிலும் ஏதாவது 'உளறிக் கொட்டி விட்டால்' அதை மற்றவர்களால் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஜீ இப்போது அதிகமாக 'உளறுகின்றார்'. இந்த வாரம் இன்னும் ஒரு பேட்டியில், 'நான் புகழுக்காக எதையும் செய்வதில்லை. என்னுடைய புகழை அளக்கவே முடியாது....' என்று ஏதேதோ சொல்லிக் கொண்டே போனார்..........🫣