ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது
Everything posted by ரசோதரன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍....... நான் தென் ஆபிரிக்கா மற்றும் பங்களாதேஷைத் தான் தெரிவு செய்தனான். என் வீட்டு எறும்புக்கு கிரிக்கட் கொஞ்சம் தெரிந்திருக்குது. அது ஏதோ சும்மா ஓடுது என்று தான் நான் அப்ப நினைத்தனான்..........🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
-
ஆளும் கட்சி எம்.பிக்களுக்கான கூட்டத்தில் மோதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில்
அப்படி நான் சொல்ல வரவில்லை. எங்களின் கவனம் அதில் இருக்கவில்லை என்று சொல்ல வந்தேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முக்கியமான நேபாள வீரர் ஒருவருக்கு அமெரிக்கா விசா மறுத்து விட்டது என்று செய்திகளில் இருந்தது. அவர் அவருடைய சொந்த மண்ணில் ஏதோ கடும் பிரளி செய்தார் என்றும், அதனால் அவருக்கு அமெரிக்கா விசா கொடுக்கவில்லை என்றும் இருந்தது.
-
மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம்
அங்கே ஒரு கணக்குக்கு இன்னொரு கணக்கு சரியாகிவிடும்...............🤣.
-
ஆளும் கட்சி எம்.பிக்களுக்கான கூட்டத்தில் மோதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில்
உங்களின் ஆதங்கம் புரிகின்றது. பாகுபாடு மட்டும் தான் இதற்கான ஒரு காரணம் இல்லை என்று நான் நினைக்கின்றேன்.
-
மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம்
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி வெற்றி பெறவும், விருதுநகர் லோக்சபா வேட்பாளர் ராதிகா வெற்றி பெற வேண்டியும் நடிகர் சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம் செய்தார். தமிழகத்தில் மார்ச் 19ல் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்நிலையில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். மேலும் பா.ஜ., சார்பில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் ராதிகா போட்டியிடுவதை ஒட்டி அவரது கணவர் சரத்குமாருடன் இணைந்து சூறாவளி பிரசாரம் செய்தனர். இந்நிலையில் நாளை(ஜூன் 4) லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் பல்வேறு மையங்களில் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பா.ஜ., பிரமுகர், நடிகருமான சரத்குமார் 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க வேண்டும் என விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்கப் பிரதக்ஷணம் செய்தார். இருவரும் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பாஜக வேட்பாளர் ராதிகா மற்றும் அவர் கணவர் நடிகர் சரத்குமார் இருவரும் இணைந்து ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ததை ஒட்டி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலும் சரத்குமார், ராதிகா இருவரும் சாமி தரிசனம் செய்தனர். https://minnambalam.com/political-news/saratkumar-performed-angapradhsshan-at-temple-to-win-radhika-in-virudhunagar/ https://www.dinamalar.com/cinemanews/121715
-
ஆளும் கட்சி எம்.பிக்களுக்கான கூட்டத்தில் மோதல்: நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில்
கிரிக்கெட்டில் எங்களுக்கு விழுகிற அடியை எப்படி தடுக்கலாம் என்ற யோசனையில் முழு நாடும் இருக்க, இவர்கள் இடையில் வருகின்றார்கள். எங்காவது ஓரமாக ஒதுங்கி நின்று சண்டையை போடுங்கோ........
-
A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு
புளூதூத் மற்றும் தொலைபேசி இணைப்பு ஊடாக குறுக்கு வழிகளில் பரீட்சைகளை எழுதினார்கள் என்றால், தொலைபேசிப் பாவனை நிரலை எடுத்து குற்றத்தை நிரூபிக்க கூடியதாக இருக்கும். வேறு வழிகளிலும் என்றாலும், எங்காவது ஏதாவது log entries இருப்பதிற்கு சாத்தியம் உள்ளது. அந்த நாட்களில் சில சிங்களமாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பரீட்சைகளில் மேற்பார்வையில் இருக்கும் ஆசிரியர்களே எங்களுக்கு கேள்விகளுக்கு பதில்களை சொல்லித் தருவதாகவே தாங்கள் நினைத்திருந்ததாக சொல்லியிருக்கின்றனர். ஏனென்றால் அன்று நாங்கள் மிக அதிகமான பரீட்சைப் பெறுபேறுகளை எடுத்துக் கொண்டிருந்தோம். உதாரணமாக, 1985ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் இலங்கை முழுவதற்கும் ஒரேயொரு 4A மட்டுமே வந்திருந்தது. யாழ் மாவட்ட மாணவன் ஒருவனே அதைப் பெற்றிருந்தார். அந்த சிங்கள் மாணவர்களின் அபிப்பிராயத்தைக் கேட்டு, சிரிப்பதை தவிர வேறு எந்த உணர்வும் வரவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா இன்னும் கொஞ்சம் வேகமாக அடித்து இருக்கலாம். நெட் ரன் ரேட்டில் பங்களாதேஷ் உள்ளே வர, இலங்கை வெளியே போகும் நிலை வர வேண்டும்.......
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
❤️....... நாங்கள் வென்றால், 'இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம்.....' என்று சொல்லி விட்டு, அதுக்குப் பிறகு அடக்கமாக ஒரு பெரிய மனுசன் மாதிரி இருப்பம்......நாங்கள் மட்டும் தோற்றம் என்றால், 'ஜஸ்ட் மிஸ்....' என்று ஆரம்பித்து ஒரு பாரதம் அளவிற்கு நீட்டுவோம்........🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
❤️........ போகிற போக்கைப் பார்த்தால், எல்லா தெய்வங்களும் தினமும் இங்கே களத்திற்கு ஆறுதல் சொல்ல வர வேண்டும் போல தெரியுதே........இன்றைக்கு ஆறுதல் நம்ம குருஜிக்கு.........😋.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣......... அந்த நேரத்தில் வேற மாதிரி ஒரு உருட்டொன்றை உருட்டுவோம்........😋 எனக்கு இவர் யாரென்றே தெரியாது. இவர் தான் இன்று உலகிலேயே சிறந்த வேகப் பந்து வீச்சாளராக்கும் என்று தான் நினைத்தேன்.............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣...... எங்களின் அணிக்கு, மேற்கிந்தியா, என்ன சோதனை காத்திருக்குதோ....அன்றைக்கு பையன் சார் நம்மளை வைச்சு செய்யப் போகின்றார்........🤣.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த மாட்சில் மட்டுமே எத்தனை சாதனைகள், இரண்டு அணிகளிலும்........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
77 முடிஞ்சுது. 77 என்றாலே இலங்கைக்கு ஒரு கேடு போல.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
😋............ இதே பிரச்சனை தான் அந்த நாட்களில் எனக்கும் இருந்திருக்குது...........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தம்புள்ள சந்தை தான் பெரிய சந்தை.......ஏதோ என்னாலான உதவி........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்க எல்லோருக்கும் கிரிக்கட் கொஞ்சம் தெரியும் என்ற படியால், அப்படி ஒரு தெரிவை செய்திருக்க மாட்டார்கள்.........🤣. யார் கண்டது இப்படி ஆகும் என்று.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
திட்டாதீங்க....திட்டாதீங்க.....இந்த உலக கோப்பை போனால் அடுத்த உலக கோப்பை இருக்குது தானே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வண்டுவும் அவுட்டா................32/3...........நமீபியா எதிர் ஓமான் மாட்சே இதை விட நல்லா இருந்ததே.........
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
❤️...... அமெரிக்கர்களிடம் ஒரு பழக்கம் இருக்குது. எங்கேயாவது போய் ஒரு மூன்று நான்கு மணித்தியாலங்கள் அப்படியே ஜாலியாக சும்மா இருக்கிறது என்றால், முதலாவது ஆளாக அங்கே நிற்பார்கள். இந்த கிரிக்கட் போட்டிகளுக்கும் அப்படித்தான் போகின்றார்கள் போல.......... ஜாடைமாடையாக கடைசியில் எப்படியும் முயலை வென்றிடுவம் என்று சொல்வது போல தெரிகின்றது............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சீச்சீ...... அப்படி எல்லாம் கிடையவே கிடையாது. இந்த உவமான உவமேயங்கள் அதுவா வாறது.......🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
😀...... எல்லாம் நல்லாகவே போகுது, ஈழப்பிரியன். எங்களின் அணி எதிரணிக்கு ஏற்ற அளவில் மட்டுமே இப்ப விளையாடுது. எல்லா வித்தைகளையும் இப்பவே இறக்கி விடக் கூடாது, செமி பைனல் & பைனல் ஆட்டங்களில் முழுவதையும் இறக்குவது தான் எங்களின் திட்டம்........🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍........ இன்னும் கொஞ்ச ரன்கள் இல்லை, பையன் சார், ஓமான் ஒரே ஒரு ரன் கூட அடிச்சிருந்தாலே போதும்...... வாத்தியாருக்கே கணக்கு சொல்லிக் கொடுக்கிற அளவிற்கு வளர்ந்திட்டன்.......😋. என்னுடைய நேரம் பின்னேரம் 5:30 மணிக்கு தொடங்கினது 9:00 மணிக்கு முடிந்தது. நமீபியாவிற்கு விளையாடின ஒரே ஒரு வீரரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் நடிகை நமீதாவின் நிறத்தில் இருந்தார்கள். பெயர்கள் எதுவும் போட்டிருக்கா விட்டால், இது தான் இங்கிலாந்து அணியாக்கும் என்று நான் நினைத்திருப்பன்.