Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கையில் மாற்றம்! சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை திங்கட்கிழமை(9) முதல் இரண்டு லட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான தென்னந்தோப்புக் காணிகளிலுள்ள தேங்காய்கள் சதொச ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும், கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் சதொச நிறுவனத்திடமிருந்து தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது. (ச) https://newuthayan.com/article/சதொச_ஊடாக_விற்பனை_செய்யப்படும்_தேங்காய்களின்_எண்ணிக்கையில்_மாற்றம்!
  2. மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு! மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சனத்தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு சில வீடுகள் தகவல் வழங்காமல் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி. அனோஜா செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், தொகை மதிப்பு கணக்கெடுப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்திற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (ச) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_கணக்கெடுப்பு_தொடர்பில்_முக்கிய_அறிவிப்பு!
  3. யாழில் கஞ்சா மீட்பு! யாழ்ப்பாணம் கடற்பரப்பில் 126 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது, மீட்கப்பட்ட கேரள கஞ்சா போதைப்பொருள் 44 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்ததாகவும், கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருள் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையது என தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2024/209080/
  4. பிரான்ஸில் 5 ஆண்டுகளின் பின் திறக்கப்படும் தேவாலயம்; பல உலகத்தலைவர்கள் பங்கேற்பு Shar விளம்பரமபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நோட்ரே டேம் தேவாலயம் 5 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் வழிபாடுகளுக்காக திறக்கப்பட உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த தேவாலயத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து சுமார் 750 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டு இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த தேவாலய திறப்பு விழாவில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் உட்பட பல உலகத் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர்.
  5. இலக்கியம் சிலப்பதிகாரம் காட்டிநிற்கும் புரட்சிச் சிந்தனைகள் - மகாதேவஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா - - மகாதேவஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா - இலக்கியம் சிலம்பின் சிறப்பு சிலப்பதிகாரத்தை ஏன் படிக்க வேண்டும்? சிலப்பதிகாரத்தில் அப்படி என்னதான் பொதிந்து கிடக்கிறது ! சிலப்பதிகாரத்தைவிட வேறு காப்பியங்கள் தமிழில் சிறந்து விளங்கவில்லையா ? என்றெல்லாம் எம க்குமுன்னே பல ஐயங்கள் வந்து நிற்கும் . சிலப்பதிகாரத்தைப் பற்றிய சிறப்பும் அதன் சிந்தனைகருத் துக்களும் சரியான முறையில் எம்மிடம் புகுந்துவிடுமானால் இப்படியான ஐயம் எழுவதற்கே இடமில் லாமல் போய்விடும் என்பது எனது மனக்கருத்தாகும்.தமிழில் வந்த முதல்காப்பியமாக சிலப்பதிகாரமே விளங்குகிறது. இயற்றமிழ் , இசைத்தமிழ் , நாடகத்தமிழ் , மூன்றையும் கொண்ட முதல் தமிழ் காப்பியம் என்னும் பெருமையையும் கொண்டு நிற்கிறது. சேர, சோழ, பாண்டிய, நாடுகளான முத்தமிழ் நாட்டினையும் முழுமைபெறச் செய்த காப்பியமாகவும் அமைந்திருக்கிறது.இலக்கிய உன்னதத்தை வெளிப்படுத்தும் காப்பியமாகவும் இருக்கிறது. தமிழர்களின் பன்முகப்பட்ட சமூகப் பண்பாட்டினைக் காட்டி நிற்கும் காப்பியமாகவும் திகழ்கிறது. வாழ்வியல் நெறிகள், வழிபாட்டு முறைகள், கலைகள், அரசுமுறைகள்,நீதி நிர்வாகம், பெண்களின் சமு தாய நிலை, என்று பலவற்றைக் காட்டி நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் திகழ்கிறது எனலாம். இக் காப்பியத்தை புரட்சிக் காப்பியம், குடிமக்கள் காப்பியம், சமுதாயக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம், தேசியக் காப்பியம், நாடகம் காப்பியம் என்றெல்லாம் பன்முகப் பார்வையில் நின்றும் பாராட்டப்படும் நிலையும் காணப்படுகிறது. இதனால் காலத்தை வென்று நிற்கும் காப்பியமாக சிலப்பதிகாரம் இருக்கி றது என்பது மறுத்துவிட முடியாத உண்மையெனலாம். இதனால் அன்றோ தேசியக்கவி பாரதி " நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் " என்று விதந்தோதி நின்றார் போலும் ! பாரதியின் வாக்கு எத்தனை வலிமையும் பெறுமதியுமானது என்பதிலிருந்தே சிலப்பின் சிறப்புப் புலனாகி நிற்கிறதல்லவா ! சிலப்பதிகாரம் தமிழ் தேசியக் காப்பி யம். சிலப்பதிகாரம் தமிழின் சொத்தாக நிற்கும் காப்பியம். சிலம்பைப் படித்தால் சிந்தனை வளரும் ! சிலம்பை நினைத்தால் பெருமிதம் நிலைக்கும் ! சிலம்பின் புதுப்பாதை நாட்டையோ , சாதியையோ, சமயத்தையோ, சிக்கலுக்குள் புகாவண்ணம் நடுநிலையினைப் பேணி க்காத்து உண்மை ஒளி விளங்கும் வகையில் சிலம்பு மலர்ந்திருக்கிறது. வேற்றுமை பாராட்டும் பாங் கினை சிலம்பு தவிர்த்தே நிற்கிறது எனலாம். சாதிகளுக்கிடையே வேறுபாடுகள் காணாது ஒத்தும் உறழ்ந்தும் செல்ல வேண்டும் என்பது சிலம்பின் புதுப்பாதை எனலாம். கவுந்தி அடிகள் சாதியையோ குலத்தையோ பாராதவராக சிலம்பில் வருகிறார். இதுவும் சிலம்பின் புதுப்பாதையினையே காட்டுகிறது. காவியங்களின் தலைவனாக பெரும்பாலும் சிலம்பின் காலத்து உலக காவியங்களில் அரசர்களே வந் திருந்த வேளை - அரசர்க்கு அடுத்த நிலையில் இருந்த வணிக குலத்தை சேர்ந்தவரை காவியத்தலை மைக்கு காட்டியதும் சிலம்பின் புதுப்பாதை எனலாம். மூன்றாம் வருணமாகக் கொள்ளப்படும் வணிக குலத்து பெண்ணான கண்ணகியை தெய்வமாக்கி எல்லா வருணத்தாருமே வணங்கும் நிலையினை சிலம்பு உருவாக்கி நிற்பதும் சிலம்பின் புதுப்பாதை என்று எண்ண முடிகிறது அல்லவா ! பத்தினித் தெய்வமாக கண்ணகியை வழிபடும் நிலையினை உருவாக்கியமை சங்ககால இலக்கிய மரபில்வந்த கொற்றவை வழிபாட்டின் தொடர்ச்சியே எனலாம்.இதனை நோக்கும் பொழுது கண்ணகியை தேசிய அளவில் தெய்வமாக உருவாக்கும் புதுப்பாதை சிலம்பினால் வருகிறது என்றே எண்ண முடிகிறது.சேர சோழ பாண்டிய நாடுகளுடன் நின்றுவிடாது இலங்கையிலும் இடம்பெறும் நிலைக்கு தேசிய நிலையா க்கிய புதுமை சிலம்பின் புதுமை என்றுதானே பார்க்க முடியும். சுவாமி விபுலானநந்த அடிகளாரின் யாழ் நூல் தோற்றத்துக்கு பாதை அமைத்ததும் சிலம்பன்றோ ! தமிழிசை இயக்கும் உருவாவதற்கு பாதை வகுத்ததும் சிலம்பேயாகும். சிலம்புக்கு முற்பட்ட காலத்துப் புலவர்கள் கையாளாத பல புதிய கவிதை வடிவங்களை சிலம்பில் இடம்பெறச் செய்து இளங்கோ புதுப்பாதையை வருங்காலத்து காட்டி நிற்கிறார்.அகவலும் வெண்பா வுமே மிகுதியாகக் காணப்பட்டது பழைய இலக்கியத்தில் எனலாம். பிற்காலத்தில் தாழிசை, துறை , விருத்தம் என்னும் பெயரில் செய்யுள் இனங்கள் வளர்ந்ததைக் காண்கிறோம்.இவ்வாறான புதிய வடிவ ங்கள் வருவதற்கு வழிகாட்டிய பெருமையும் சிலம்புக்கே உரித்தாகிவிடுகிறது எனலாம். அக்காலத்தில் வழக்கிலிருந்த நாட்டுப் பாடல்களை உள்வாங்கியே கானல்வரிப் பாடல்களும், ஆய்ச்சியர் குரவைப் பாடல்களும் சிலம்பில் வரப்பண்ணியதும் இளங்கோவின் புதுப்பாதைதனையே காட்டுகிறது என்றும் கொள்ள முடிகிறது.அக்கால நாட்டுப் பாடல்களை மனமிருத்தி அதனூடாகப் பெற்றவற்றை புதிய செய் யுள் வடிவங்கள் ஆக்குவதற்கு முயன்று அதனை காப்பியத்திலும் இடம்பெறும் வண்ணம் செய்தமை நல்லவொரு புதுப்பாதை என்றே எண்ண முடிகிறது எனலாம். இதன் மூலம் தமிழ் இலக்கியத்துக்கு இளங்கோ அடிகள் செய்திருக்கும் தொண்டு மிகவும் பெறுமதி மிக்கதென்றே கொள்ளல் வேண்டும். சங்கால இலக்கிய மரபில் காதலும் வீரமும் அறமும் காட்டப்பட்டிருந்தாலும் கதையாக தொடராக இலக்கியத்தில் இடம்பெறவில்லை என்றே கொள்ள முடிகிறது. சங்ககாலத்தை அண்டிய காலத்தில் முதன் முதலாக ஒரு தொடராக ஒரு கதையினை வெளியிட்டு அதில் காதல், வீரம், அறம் , அத்தனையும் காட்டி தமிழ் இலக்கியத்துக்கே புதுப்பாதை காட்டிய வகையிலும் சிலம்பினை காட்டி நிற்கி றார் இளங்கோ அடிகள் என்பதை எவருமே மறுத்துவிட முடியாது என்பது உண்மை எனலாம். தமிழ் இலக்கியத்துக்கே சிலம்பு புதுப்பாதையாக அமைந்தமையால் பின்னர் காப்பியங்கள் பல வரவும் வாய் த்தது என்பதும் மனங்கொள்ளத்தக்கதெனலாம்.பின்னர் வந்த காப்பியங்கள் வழிநூல் வழிவந்து நூலாகி நிற்கின்றன. ஆனால் வழி நூல்கள் எதுவும் இன்றி தானே மூலநூலாய் தமிழ் இலக்கியப் பாதையில் புதுப்பாதை காட்டி அதன்வழி வந்தபெருமையினை சிலம்பதிகாரம் ஒன்றே பெற்று கொள் கிறது என்பதே சிலம்பின் சிறப்பும் பெருமையும் என்பதில் எள்ளளவும் எந்தவித ஐயமும் இல்லை என்பதையே காட்டி நிற்கிறது எனலாம். அறநூல் என்று சிறப்பிக்கும் நூல்களும் ஏனைய நூல்களும் ஆரம்பிக்கும் வேளை கடவுள் துதியி னைப் பாடியே தொடங்கும் மரபே காணப்பட்ட வேளை அவற்றை யெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இயற்கையினைப் பாடியே சிலம்பினை தொடக்கி காவிய மரபில் புதுப்பாதையக் காட்டி நிற்கிறார் இளங்கோ அடிகள் எனலாம். இப்பாதை தமிழ் இலக்கியத்தில் முற்றிலும் மாறுபட்ட வேறுபட்ட புதுப் பாதை என்று அறிஞர்களே வியந்து நிற்கிறார்கள். திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று இயற்கையினையே பாடி அதனையே மங்கல வாழ்த்தாக்கி சிலம்பினை ஆரம்பிக்கின்றார் இளங்கோ அடிகள். இஃது முற்றிலும் வித்தியாசமான புதுப்பாதை அல்லவா ! பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பதுதான் இறையாகும்.ஆகவே அந்த இறையினை இயற்கையில் கண்டு தனது காவியத்தை புதுப்பாதையில் தொடக்கியமை இளங்கோவின் மதி நுட்பத்தை புலப்படுத்தி நிற்கிற தல்லவா ! சிலம்பின் புரட்சி அவதாரங்களையும் அரசர்களையும் ஆளும் வர்க்கத்தையும் கதைக்கு தலைமைதாங்கும் வண்ணமே காப்பியங்கள் வந்திருக்கின்றன. சாதாரண குடிமக்கள் தலைமை என்பது நினைத்துமே பார்க்கமுடியா மரபில் அதனை உடைத்து அவதாரமோ உயர்நிலையோ அல்லாத அதுவும் ஒரு சாதாரண குடிமகளை கதைக்கு தலைமைதாங்க வைத்து மாபெரும் காப்பியத்தை வடிவமைத்த இளங்கோ அடிகளாரின் புரட் சியானது தமிழ் இலக்கியத்தில் நடந்த மிகப்பெரிய புரட்சி என்றே கூறலாம். காப்பியத்தின் பெயரே புரட்சியாகவே மலர்கிறது. கதையின் நாயகியின் பெயராலோ அல்லது நாயகன் பெயராலோ அமையாது ஒரு அணியின் பெயரால் அமையப்பெற்றிருப்பது அடிகளாரின் மற்றொரு புரட்சியாகி நிற்கிறது.காப்பியத்தின் நாயகியான கண்ணகி கற்புத் தெய்வமாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். அந்தத் தெய்வத்தின் திருவடியைக் காண்பதுதான் மிக மிக பொருத்தமாகும். " கண்ணகி காப்பியம் " என்று பெயரிட்டால் அவளது திருமேனிதான் நினைவில் வந்து நிற்கும் என்னும் அச்ச உணர்வினால் அவள் திருவடியை அலங்கரிக்கும் அணியான சிலம்பின் பெயரை வைத்து அவளின் திருவடி ஒன்றே எல்லோர் நெஞ்சிலும் பதியவேண்டும் என்ற புரட்சிகரமான சிந்தனையினாலேதான் இளங்கோ வடிகள் " சிலப்பதிகாரம் " என்னும் பெயரையே சூட்டி இருக்கிறார். இது காப்பிய வரலாற்றில் எண்ணியே பார்க்கமுடியாப் புரட்சி என்று அறிஞர்கள் விதந்து நிற்கிறார்கள். மக்களின் உள்ளங்களை அறிந்தவர் இளங்கோவடிகள். இவருக்கு முன் இருந்த புலவர்கள் வழியில் செல்லாது அவர்கள் தொடாதவற்றை அவர்களால் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஆடல் பாடல் களை ஆசையுடன் நோக்கினார். மக்களின் வாழ்வில் பாடப்பட்ட படல்களைப் பற்றியோ அவர்களின் கூத்து வடிவங்களையோ சங்கநூல்களில் கண்டறியமுடியாதிருக்கிறது.ஆனால் இளங்கோவடிகள் அந்தப் பாடல்களின் உரிமையானவர்களின் கலைகளை மதித்தார். அவற்றுக்கு எழுத்து வடிவம் கொடு த்து தனது காப்பியத்தில் இடம்பெறுமாறு செய்தார். கதையில் எங்கெல்லாம் வைக்கமுடியுமோ அங்கெல்லாம் இப்பாடல்கள் வைத்து அழகு படுத்தினார். கடற்கரையில் செம்படவர் பாடும் பாடும் காதல் பாடல்கள், காவிரியாற்றினைப்பற்றி மக்கள் பாடி வந்த பாடல்கள், வேடர்கள் காளியை வழிபட்டுப் பாடும் பாடல்கள், குரவைப் பாடல்கள், திருமாலை, முருகனை, வழிபாடாற்றும் பாடல்கள், அம்மானைப் பாடல்கள், நெல்குற்றும் பாடல்கள், ஊஞ்சலாடும்போது பாடும் பாடல்கள், எல்லாவற்றையும் உள்வாங்கி அதன்வழியிலே செய்யுள்களை யாத்து அந் தநாட்டு மக்களே வாயாலே பாடப்படுவதாக காப்பியத்தில் அமைத்து காவிய வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார் இளங்கோவடிகள் எனலாம். இப்புரட்சியால் பழங்கால நாட்டுப்புற வடிவங்களை நாம் இன்று கண்டுகொள்ளுவதற்கு சிலம்புதான் ஆதாரவிளங்கின்றது எனலாம். மூன்று நாடு , மூன்று அரசர் , மூன்று கருத்து , மூன்று காண்டம், மூன்று தமிழ் , என்று காட்டிய இளங்கோவடிகள் மூன்று பெண்களைக் காட்டி பண்டையகால கற்பொழுக்கத்தை சிலம்பில் காட்டி யமையும் அவரின் ஒரு புரட்சி என்றே கொள்ளமுடிகிறது. " வாயிலோயே வாயிலோயே அறிவு அறை போகிய பொறியறு நெஞ்சத்து இறைமுறை பிழைத்தோன் வாயிலோயே " என்றும் " தேரா மன்னா செப்புவது உடையேன் " என்றும் கண்ணகி என்னும் பெண்ணை துணிவுடன் பேசவைத்து ஒரு நாட்டின் அரசனையே எதிர்கொள்ளும் புரட்சியை இளங்கோவடிகள் சிலம்பில் காட்டி நிற்கிறார். பாண்டிய மன்னனிடம் நீதிகேட்டு மன்ன னையே குற்றவாளியாக்கி அதனால் மன்னனும் இறந்து வீழ அதனைப்பார்த்த அரசியும் அவ்விடத்தே உயிர் துறந்து தனது கற்பின் திண்மையைக் காட்டி விடுகிறாள். இதைப்பார்த்த கண்ணகி பாண்டியன் தேவியின் கற்புக்கு தனது கற்பு குறைந்தது அன்று எனக்காட்டும் முகமாக " பட்டாங்கு யானும்ஓர் பத்தினியே ஆமாகில் " என்று கண்ணகியை உச்சத்துக்கு கொண்டுபோய் மதுரையை எரிப்பதற்கு ஆணையிடுவது கூட இளங் கோவின் நல்லதோர் உத்தியும் ஒரு புரட்சிச் சிந்தனை எனலலாம். கற்புடை பெண்கள் " பெய் என்றால் மழையும் பெய்யும் " என்னும் வள்ளுவத்தின் சிந்தனை இங்கு கண்ணகியின் வாயிலிருந்து வருகின்ற "எரி " என்னும் சொல்லுக்கு வலுவூட்டி நிற்கிறது என்பதும் நோக்கத்தக்கதே. பாடியதில் புரட்சி. பாத்திரங்கள் படைத்ததில் புரட்சி. கருத்துக்களை முன் கொண்டுவந்து வைத்ததில் புரட்சி. தொடங்கியதில் புரட்சி. குழந்தை இல்லாக் காப்பியமாக சிலம்பினைச் செய்ததும் பெரும் புரட்சி என்றே எடுத்துக் கொள்ள வேண்டியும் இருக்கிறது.இவ்வாறு சிலம்பு முழுவதுமே இளங்கோவடிகளின் புரட்சிச் சிந்தனைகளே நிறைந்து பொலிவினை வழங்கி சிலம்பினை உயர்வாக்கி இருக்கிறது எனலாம். எங்களின் சொத்து முத்தமிழும் விரைவிவர எங்களின் தமிழ் சொத்தாக விளங்குவது சிலப்பதிகாரம். கோவலன் ஒரு கோ - அல்லன். அவன் ஒருசாதாரண குடிமகன். கண்ணகியும் கோ- மகள் அல்ல. அவளும் குடிமகளே. குடிமகனையும் குடிமகளையும் சிலப்பின் தலைவன் தலைவியாக்கி முடிமக்கள் காப்பியம் அல்ல குடி மக்கள் காப்பியம் என்று தமிழில் சிலம்பதிகாரம் அமையப் பெற்றிருப்பதே எங்களுக்கு பெரும் பெரு மையல்லவா ? இதனை எங்கள் சொத்து என்பது மிக மிக பெருமிதமும் அல்லவா ! கம்பனையும் வள் ளுவனையும் வியந்த பாரதி நிறைவில் “ இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை " என்று வியந்து நிற்பதும் எமது தமிழுக்கு வாய்த்த பெருமை அல்லவா! தேசிய ஒற்றுமைக்கு சிலப்பதிகாரம் வழிவகுதிருப்பதும் எங்கள் மொழிக்கு வாய்த்த பெருமை அல்லவா? அரசியல் பிழை த்தால் அறம் நிச்சயம் பதில் தந்தே தீரும்.கற்பு என்பது சமூகத்தின் கட்டாயம். கற்புடன் வாழும் பெண் கள் போற்றப்படுவர்.அவர்கள் வணங்கும் நிலையிலும் உயருவார்கள் என்பதை எல்லாம் சொல்லி நிற்கும் சிலம்பு எங்கள் மொழியின் பெருஞ் சொத்து அல்லவா ! நீதி தவறினால் உயிர்வாழ்தல் கூடாது என்பது எப்பொழுதும் எல்லா நாட்டுக்கும் பொதுவன்றோ ! அதைக்காட்டி நிற்கும் சிலம்பு எமக்கு வாய்த்த பெரும் சொத்தல்லவா ! பரிவும் இடுக்கணும், பாங்குற, நீங்குமின்; தெய்வம் தெளிமின்; தெளிந்தோர்ப் பேணுமின் பொய் உரை அஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்; ஊன் ஊண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்; தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்; செய்ந்நன்றி கொல்லன்மின்; தீ நட்பு இகழ்மின்; பொய்க் கரி போகல்மின்; பொருள்-மொழி நீங்கல்மின்; அறவோர் அவைக்களம் அகலாது அணுகுமின்; பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின்; பிறர் மனை அஞ்சுமின்; பிழை உயிர் ஓம்புமின்; அற மனை காமின்; அல்லவை கடிமின்; கள்ளும், களவும், காமமும், பொய்யும், வெள்ளைக் கோட்டியும், விரகினில், ஒழிமின் இளமையும், செல்வமும், யாக்கையும், நிலையா உள நாள் வரையாது ஒல்லுவது ஒழியாது; செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடுமின்- மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு-என் என்று பண்பாட்டின் பல பண்பட்ட தன்மைகளையெல்லாம் எடுத்துரைத்து அறத்தையும் நீதியையும் அனைவரது அகங்களிலும் அமர்ந்துவிடும் வண்ணம் இலக்கியச் சுவையினை அதனூடாக ஊட்டி எமக்கு எமது மொழியில் வாய்த்திருக்கும் மிகப்பெரிய சொத்தாக இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் விளங்குகிறது. தமிழுக்குக் கிடைத்த சிலம்பதிகாரம் எனும் சொத்தினை கண்ணுங்கருத்துமாய் காப்ப தும் அதன் பெருமகளை உண்மைகளை எடுத்து விளக்குவதும் அதனை உலகெங்கும் பரப்புவதும் ஒவ் வொரு தமிழரதும் தலையாய பொறுப்பாகும். jeyaramiyer@yahoo.com.au https://www.geotamil.com/index.php/2021-02-10-13-39-56/8843-2024-12-07-15-52-43?fbclid=IwY2xjawHBauJleHRuA2FlbQIxMAABHeItyH2x9RkG26Uyv-md1KkRfqVb4xpRnnnnhmSQavJ4CNCAJ3eS-sRtFw_aem_cH71Dl6UHuvD7O37Ad2KvA
  6. ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது ஜா-எல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர். ஜா-எல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜா-எல பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவர் ஆவார். சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த பெறுமதி ஒரு கோடி ரூபா என பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்தவுள்ளதாக ஜா-எல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
  7. பாடசாலை சீருடைகள் தொடர்பில் வெளியான தகவல் எதிர்வரும் காலங்களில் பாடசாலை சீருடைகளைத் தைத்து மாணவர்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன் மூலம், பாடசாலை சீருடைகளை தைப்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் துணிகளை பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகள் மற்றும் விரயத்தைக் குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
  8. வெள்ளத்தினால் வவுணதீவு நல்லம்மாமடு அணைக்கட்டு சேதம் - புனரமைக்குமாறு விவசாயிகள் வேண்டுகோள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளப் பெருக்கினால் வவுணதீவு பிரதேசத்துக்குட்பட்ட இலுப்பட்டிச்சேனை வயற்கண்ணத்தில் அமைந்துள்ள நல்லம்மா மடு எனும் அணைக்கட்டு முற்றாக சேதமடைந்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த அணைக்கட்டில் தேக்கப்படும் நீரைப் பயன்படுத்தி நாம் இப்பகுதியில் 1,050 ஏக்கர் வயலில் வேளாண்மை செய்து வருகிறோம். இது தற்போது உடைபெடுத்துள்ளதனால் எமது வாழ்வாதாரமாக அமைந்துள்ள வேளாண்மைச் செய்கை முற்றாக பாதிப்புறும் நிலைமை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பெரிதும் சேதமடைந்துள்ள, விவசாயத்துக்கு உறுதுணையாக இருந்த அணைக்கட்டை விரைவில் புனர்நிர்மானம் செய்துதர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு, நீர்ப்பாசனம் செய்யப்படுகிற துருசுகளையும் திருத்தியமைத்து தருமாறும் விவசாயிகள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
  9. அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் ! ஒரு கிலோ நாட்டரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பில் அடுத்த பத்து நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். நாட்டில் நெடுஞ்சாலைத் துறைக்காகவே அதிகளவில் முதலீடு செய்யப்படுவதாகவும், அடுத்து நீர்ப்பாசனத் துறைக்கும் விவசாயத் துறைக்குமே அதிக முதலீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, விவசாயிகளுக்கே அதிக நிவாரணங்கள் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார். நெல் கொள்வனவிற்காக வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுவதாகவும் அதனால் மக்களின் அரிசியை நுகரும் உரிமையில் கைவைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அதன்படி அரிசி விலைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நாடு அரிசி ஒரு கிலோ மொத்த விலை 225 ரூபா. சில்லறை விலை 230 ரூபா வெள்ளை அரிசி மொத்த விலை 215 ரூபாய். சில்லறை விலை 220 ரூபா இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி கிலோ 220 ரூபா சம்பா அரிசி மொத்த விலை 235 ரூபா. சில்லறை விலை 240 ரூபா கீறி சம்பா அரிசி மொத்த விலை 255 ரூபா. சில்லறை விலை 260 ரூபா அதேபோல் நாளாந்தம் அரிசி ஆலைகளிலிருந்து வெளிவரும் அரிசியின் அளவினைக் கணக்கிடுமாறும் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்தார். அதேபோன்று அரிசி தொடர்பான பிரச்சினைகளை அரசாங்கத்துடன் சுமூகமாக தீர்த்துக் கொள்ளுமாறும் அரிசி வர்த்தகர்களிடம் ஜனாதிபதி கோரினார். வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்திக குமாநாயக்க, வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.விமலேந்திரராஜா,விவசாய,கால்நடைகள்,காணி, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ.விக்ரமசிங்க,அபிவிருத்தி நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மலர்மதி கங்காதரன், விவசாய திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ்.கே.வாசல,நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஏ.எம்.யூ.பின்னலந்த, ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆய்வு மற்றும் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் ஏ.எல்.சந்திக்க ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/200673
  10. யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் யாழில் திருட்டில் ஈடுபட்ட இளைஞன் கைது! யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் வெளியில் சென்ற சமயம் , வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி, உட்புகுந்த திருடன் வீட்டில் இருந்த ஒன்பதே முக்கால் பவுண் நகைகள் மற்றும் ஒரு தொகை பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளான் சம்பவம் தொடர்பில் வீட்டாரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அப்பகுதியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு திருடிய நகைகள் இளைஞனிடம் இருந்து மீட்டுள்ளதுடன் இளைஞனை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.[ஒ] https://newuthayan.com/article/யாழில்_திருட்டில்_ஈடுபட்ட_இளைஞன்_கைது!
  11. யாழ்ப்பாணம் 22 மணி நேரம் முன் யாழ்ப்பாணத்தில் 4 வயதுச் சிறுவனுக்கு எமனான சவர்காகரம்! யாழ்ப்பாணத்தில் சவர்க்காரத்தில் கால் வழுக்கியதில் சிறுவன் ஒருவன் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் (வயது 04) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 23ஆம் திகதி குறித்த சிறுவன் அயல்வீட்டு சிறுவனுடன் விளையாடி விட்டு வாளியைக் கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கை கழுவியுள்ளான்.இதன்போது சவர்க்காரம் கீழே விழுந்த நிலையில் சவர்க்காரத்தின் மீது கால் மிதிபட்டதில் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளான்.இந்நிலையில், குறித்த சிறுவனை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளான். அவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது https://newuthayan.com/article/சவக்காரம்_விதியான_4_வயது_சிறுவன்!
  12. தாயாரின் இறப்பு வீட்டிக்கு சென்றிருக்கிறார்.இன்று யூருப் செய்தி ஒன்றில் பகிரப்பட்டு இருக்கிறது.
  13. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் பையா.✍️🎂
  14. மரத்தின் அருமை விளக்கும் படம்...... All reaction
  15. இதை நான் நேற்றே பலதும், பத்தும் பகுதியில் இணைத்திருந்தேன்..ஆங்கில ஊடகத்திலிருந்து வந்ததால் யாரும் பெரிதாக கணக்கில் எடுக்கவில்லையோ தெரியாது.. https://ripbook.com/mathysoody-kulathungam-6740e9e1d9923/notice/obituary-6740ea45cb91c
  16. இவர்களுக்கு அடிப்படைத் தேவைகள் ஏதாவது.............. யாராவது பூர்த்தி செய்தார்களா.....?
  17. ஏன் பையா..வைத்தியரின் தந்தையாரின் படங்கள் கூட முகப் புத்தகங்களில் உலாவியதே.பார்க்கும் சந்தர்ப்பம் கிடைகவில்லையா..?
  18. அங்காலை தேர்தல் பிரச்சனை இங்க கொன்ஸ்ரக்ஸன் பிறாப்பிளமாம்..🤭
  19. ஒரு இடத்தை பிடித்துள்ளது என்று ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.💉🖐️
  20. பெயர் குறிப்பிட்டு போடும் அளவுக்கு எனக்கு யாரையும் தெரியாது.அவர்களின் செயல்பாடுகள். பேச்சுவார்த்தைகளில் கூட அறவே உடன்பாடு கிடையாது..வெறும் ஊசி மட்டும் தெரிவு..💉

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.