Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. தும்புதடியினுள் போதைப்பொருளை மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் கைது Published By: Vishnu 01 Jan, 2025 | 01:27 AM (செ.சுபதர்ஷனி) 10 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் தும்புதடியினுள் மறைத்து சிறைச்சாலைக்குள் கொண்டுசெல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை திங்கட்கிழமை (30) பார்வையிட சென்றிருந்த பெண் ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு தனது கணவரை பார்வையிட சென்ற பெண் உணவு மற்றும் பானங்களை கொண்டு சென்று வழங்கியுள்ளதுடன், சிறைச்சாலை வளாகத்தை சுத்தம் செய்வதற்கென கூறி பிளாஸ்டிக் தும்புத்தடி ஒன்றையும் கொண்டு வந்து சிறைக்கைதியிடம் வழங்க முற்பட்டுள்ளார். இதன்போது அங்கிருந்த அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தும்புத்தடியை பரிசோதித்த நிலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான போதைப்பொருள் சிறைச்சாலை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹெரோயின், ஐஸ், ஹசிஸ் மற்றும் ஹேஷ் ஆகிய போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் களுத்துறை வடக்குப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சந்தேகநபர் 35 வயதான பாணந்துறை அலுபோமுல்ல பகுதியை சேர்ந்தவராவார். மேலும் சிறைச்சாலையினுள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக போதைப்பொருளை கொண்டு வந்து வழங்க முற்பட்டுள்ளதாக சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது. இதேவேளை கைதான சந்தேகநபர் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/202671
  2. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்தந்த ஆண்டுகளில் என்னவெல்லாம் செய்தோம், பார்த்தோம் என்ற தொகுப்பு ஒன்று வரும்.இப்போ ஒரு சில ஆண்டுகளாக அந்தப் பகுதி வருவதில்லை.உங்களின் வருடச் செய்முறையைப் பார்த்துட்டு மறுபடியும் வந்துட்டு என்று நினைத்தேன்.🖐️
  3. இந்தப் பகுதியை விவாத மேடை ஆக்க வேண்டாமே என்று பார்க்கிறேன்..ரம்பின் முடிவுக்கு நான் முழு ஆதரவு.ஒருவர் தன் திறமையை வளர்த்துக் கொள்வதற்கோ அல்லது வருமானம் ஈட்டுவதற்கோ நான் எதிர்ப்பு இல்லை.ஆனால் அடுத்த வீட்டு பிள்ளையை பாவாடை சேலைக்கு போடும் சட்டையோடு நிற்க வைத்து படம் மற்றும் வீடீயோ எடுத்து விளம்பரப்படுத்துவது மகா தப்பு.அப்படியானவர்ளிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.நன்றி.
  4. இந்தப் பதிவைக் கண்டதும்.ஒரு விடையத்தை சுட்டிக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்..யாரும் தவறாக நினைக்க வேணாம். இந்த ரிக்ரொக், யூருப், முகப் புத்தகத்தில் இருக்கும் சில மேககப் விற்பன்னர்கள் பொதுவாக பெண்கள் சேலை கட்டத் தெரியாதவர்களுக்காக கட்டிக் காட்டுறோம் என்று அவர்களிடம் மேக்கப் செய்யப் போகும் சில பெண்பிள்ளைகளை பாவாடை, சட்டையோடு நிற்க விட்டு சேலை கட்டும் விதத்தை வீடியோடு எடுத்து பப்பிளிக்கில் போடுகிறார்கள்.அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்கிறார்கள் இல்லை..ரிக்ரொக் போன்ற தளங்களை பார்ப்பர்கள் எதனால் இப்படியான விடையங்களை சொல்கிறேன் என்று புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேுன்..மிக, மிக குப்பைத் தளம் என்றால் அது ரிக் ரொக் தான்..தங்கள் வருவாய்க்காக இப்படி நடக்கிறது..
  5. அனேகமாக செய்யப் பட வேண்டியவற்றை வைத்தியர் அர்ச்சனாவிற்று சுட்டிகாட்டும் போது கவனத்தில் எடுக்கப்படுகிறது.ஆகவே இந்த சுகாதார கேடான களிப்பிடங்களுக்கும், கிணறுகளுக்குமான தூரம் எவ்வாறு இருக்க வேண்டும் மற்றும் இதர விடையங்களையும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்வது நன்று..
  6. வெளிநாட்டு நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டங்களில் பாரிய நிதியிழப்பு : தேசிய கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டு 29 Dec, 2024 (நமது நிருபர்) பல முக்கிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதங்கள், திறன் இன்மை மற்றும் தவறான முகாமை காரணமாக சுமார் 1.44 பில்லியன் ரூபா இழப்பு அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த அண்மைய தேசிய கணக்காய்வறிக்கை இந்த விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளது. குறித்த அறிக்கையின் பிரகாரம், தற்போது முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் மற்றும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த கணக்காய்வு அண்மையில் நிறைவுக்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் 38 நகர்ப்புற மற்றும் கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்கள் மற்றும் பொது, உள்நாட்டு பாடசாலை சுகாதாரத் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்ட கால அளவிலிருந்து ஏழுமடங்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், கட்டுமானத்துறையில் ஒப்பந்ததாரர்களை முன்னகர்த்திச் செல்வதற்கு அரசாங்கத்தால் பல நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், 330 முதல் 2,158 நாட்கள் வரையிலான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சால் செயற்படுத்தப்பட்ட, முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களாக இவை காணப்படுகின்றன. குறித்த திட்டங்கள் நீர் வழங்கல், வடிகாலமைப்பு மற்றும் சுகாதாரத் திட்டங்களின் விரிவாக்கம், தேசிய சமூக நீர் வழங்கல் துறையின் திறன் மேம்பாடு, துறை பயிற்சி, நீர் தர அடையாளம், முகாமை ஆகிய நான்க கூறுகளாக காணப்படுகின்றன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 183.90 மில்லியன் டொலர்கள் (27,590 மில்லியன் ரூபா) ஆகும், இதில் 165 மில்லியன் டொலர்கள் (24,750 மில்லியன் ரூபா) சர்வதேச அபிவிருத்தி சங்கத்தால் நிதியளிக்கப்படுகிறது, மீதமுள்ள 2,840 மில்லியன் ரூபா இலங்கை அரசாங்கத்தாலும் சமூக அமைப்புக்களின் பங்களிப்புகளாலும் ஈடுசெய்யப்படுகின்றது. குறித்த திட்டமானது 2015 டிசம்பர் 7ஆம் திகதியன்று தொடங்கப்பட்டது, ஆரம்பத்தில் 2020 டிசம்பர் 31 ஆம் திகதியன்று முடிக்க திட்டமிடப்பட்டது, ஆனால் 2023 டிசம்பர் 31, வரை ஒப்பந்தக்காரர்களுக்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான திட்டங்களில் கோட்டியாகுமபுர மணல் வடிகட்டி தொட்டி பிரதானமானதாகும், அங்கு தொட்டிகள் பயன்படுத்தப்படாததால் 1.7 மில்லியன் ரூபா முதலீடு பயனற்ற நிலையில் உள்ளது. இதேபோல், கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தில் முறையற்ற திட்ட துணைப்பிரிவுக்காக 599 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது, இது அரசாங்க கொள்முதல் வழிகாட்டுதல்களை மீறியது மற்றும் திட்ட காலக்கெடுவில் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று முழலங்காவில் நீர் வழங்கல் திட்டத்தில், கூடுதல் பணிச் செயற்பாடுகள் மற்றும் திட்ட முன்னெடுப்பு நோக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, செலவில் 267 மில்லியன் ரூபா மேலதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், கிராமப்புற நீர் வழங்கல் திட்டங்களுக்கு சமூக பங்களிப்புகளில் 551 மில்லியன் ரூபா வசூலிப்பதற்கு தவறவிடப்பட்டுள்ளதால் நிதியில் குறிப்பிடத்தக்க பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு மாறாக, கிளிநொச்சி மாவட்ட திட்டங்களுக்கான துணை ஒப்பந்ததாரர்களுக்கு 19 மில்லியன் ரூபா நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சிகைளால் மொத்தமாக 1,437.7 மில்லியன் (தோராயமாக 1.44 பில்லியன் ரூபா) நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகும். இந்த தாமதங்கள் மற்றும் திறமையின்மைக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கணக்காய்வு அறிக்கையில் அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். https://www.virakesari.lk/article/202456
  7. ஓட்டமாவடி - காவத்தமுனை வயலில் யானை உயிரிழப்பு! 30 Dec, 2024 கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை - வட்ட எனும் வயல் பகுதியில் யானை ஒன்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை உயிரிழந்துள்ளது. இந்த யானை ஞாயிற்றுக்கிழமை (29) காலை எழும்ப முடியாத நிலையில் வயலில் விழுந்து கிடந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். இவ்வாறு எழும்ப முடியாமல் விழுந்து கிடந்த யானைக்கு சிகிச்சையளிக்க வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிகாரிகள் பார்வையிட்டு சிகிச்சையளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் யானை உயிரிழந்துள்ளது. https://www.virakesari.lk/article/202501
  8. கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 401 பேர் கைது 30 Dec, 2024 நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போக்குவரத்து நடவடிக்கைக்கு அமைய திங்கட்கிழமை (30) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 401 பேர் உள்ளடங்களாக 8068 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி புத்திக மனதுங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய கடந்த 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் விசேட போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (29) காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் 401 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் செலுத்திய 53 சாரதிகள், அதிக வேகத்தில் வாகம் செலுத்திய 48 சாரதிகள், விதி மீறல்களில் ஈடபட்ட 1350 சாரதிகள், அனுமதிபத்திர உரிமை மீறல் தொடர்பில் 865 சாரதிகள் மற்றும் ஏனைய போக்குவரத்து விதிமீறல்களுடன் தொடர்புடைய 5,351 சாரதிகள் உள்ளடங்களாக 8,068 சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் தொடக்கம் 30 ஆயிரத்துக்கு இடைப்பட்ட தொகையில் தண்டப்பணம் விதிக்கப்படுவதுடன் அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படும். மேலும் பொது போக்குவரத்து வாகன சாரதிகள் மேற்படி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படும் பட்சத்தில் அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என்பதையும் கவனத்தில் கொள்வதும் அவசியம். மது போதையில் வாகனத்தை செலுத்துவதை தவிர்க்குமாறு அனைத்து வாகன சாரதிகளிடமும் கோரிக்கை விடுக்கிறேன். மேலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் மேற்படி விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார். https://www.virakesari.lk/article/202502
  9. இலங்கையின் புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை இடும் பொறுப்பு புதிய அமைச்சர்வைக்கு வழங்கப்பட்டுள்ளது - நளிந்த ஜயதிஸ 30 Dec, 2024 இலங்கையின் புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை இடும் பொறுப்பு புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை நேர்மையாகவும் மிகத் துல்லியமாகவும் பொறுப்புடனும் நிறைவேற்ற புதிய அமைச்சரவை தனது அதிகபட்ச ஆற்றலுடன் முழு நேர கடமையில் ஈடுபட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இலங்கை அறக்கட்டளைகளின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய, கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை அறக்கட்டளைக்கு விஜயம் செய்திருந்த நிலையில் இலங்கை அறக்கட்டளை ஊழியர்களிடம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மதிப்பிற்குரிய இலங்கை அரசின் அடித்தளத்தைத் திட்டமிடும், பணி மற்றும் தொலைநோக்கு பார்வையை வழிநடத்தக்கூடிய அறிவுசார் வளங்களை உருவாக்கி, அரசியல்வாதிக்கு சரியான வழிகாட்டலை வழங்கும் நிறுவனமாக இலங்கை அறக்கட்டளை நிறுவனம் மாற்றப்பட வேண்டும். சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை அறக்கட்டளை நிறுவனம் தற்போது முன்னணி வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு முதியோர் கல்வி மற்றும் பயிற்சி மையமாக இயங்கி வருகிறது. அறக்கட்டளை நிறுவனத்தில் ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இங்கு பணிபுரியும் அனைவரும் அரசாங்கத்தின் திசையை தீர்மானிக்கும் மிக முக்கிய பிரஜைகளாகவும் அதிகாரிகளாகவும் இருப்பது அவசியம். அரசாங்கத்தின் எதிர்கால நோக்கை இனங்கண்டு அவர்கள் செயற்பட வேண்டும். அதற்கு தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. இலங்கையின் புதிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை இடும் பொறுப்பு புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை நேர்மையாகவும் மிகத் துல்லியமாகவும் பொறுப்புடனும் நிறைவேற்ற புதிய அமைச்சரவை தனது அதிகபட்ச ஆற்றலுடன் முழு நேர கடமையில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு அர்ப்பணிப்புடன் செயற்படும் புதிய அமைச்சரவை மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. கடந்த பொதுத் தேர்தலில் இந்நாட்டு மக்கள் பெரும்பான்மை பலத்தை எமக்கு வழங்கியுள்ளனர். இந்த ஐந்து வருட காலப்பகுதியில் நாட்டை முன்னேறாமல் ஏனைய அரசாங்கத்தைப் போல வேறு ஏதேனும் விடயங்களை மேற்கொள்ள முடியும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அரசாங்கத்தால் முன்னேறிச் செல்வது எளிதான விடயம் எனினும் நாடு ஒருபோதும் முன்னேறாது. புதிய அமைச்சர்கள் கடமைகளை ஆரம்பித்து ஐந்து வாரங்கள் மாத்திரமே நிறைவுப் பெற்றுள்ளது. அமைச்சர்களை நேரில் சந்திப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை, அவர்கள் தொலைபேசியில் உரையாடுவதில்லை, ஊடக அறிக்கைகளை வெளியிடுவதில்லை, நேர்காணல்களை வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. எவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும் இலங்கை அரசுக்கு ஓர் சிறந்த அடித்தளத்தை அமைக்கும் பணியை நிறைவேற்றுவதற்கு எமது அமைச்சரவை அயராது உழைத்து வருவதை நான் பொறுப்புடன் கூற கடமைப்பட்டுள்ளேன். கடந்த அரசாங்கத்தில் இவ்வாறு அர்ப்பணிப்பின்றி முறையான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் தரவுகள் மற்றும் தகவல்கள் இன்றி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் போன்றோர் பதவிவகித்தமையாலும், தன்னிச்சையான முடிவுகளை மேற்கொண்டமையாலும் உருவாக்கிய நெருக்கடிகளுக்கு இந்நாட்டு மக்கள் முகங் கொடுத்து வருகின்றனர். தற்போது நாட்டில் தேங்காய்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதற்கு குரங்குகள் மாத்திரம் காரணமல்ல. குரங்குகள் அவற்றை சேதப்படுத்துவதற்கு முன்னரே தேங்காய் விளைச்சளில் தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது. எனினும் கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் அதை கவனத்தில் கொள்ளவில்லை. ஆகையால் எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலை ஏற்படாத வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்படு வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/202503
  10. வடகிழக்கில் மாணவர்களின் கல்வியில் மீள் எழுச்சி தேவை; அதற்கு உதவத் தயார் - ரவிகரன் எம்.பி 30 Dec, 2024 வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் கடந்தகாலங்களில் எழுச்சி பெற்றிருந்த மாணவர்களின் கல்வி, தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதாக வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கவலைதெரிவித்துள்ளார். இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ள கல்வியில் மீள் எழுச்சி தேவையெனவும், அதற்காக உதவுவற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திருகோணமலை - பத்தாம்குறிச்சி, அறிவொளிமையம் கல்விநிலையத்தில், கல்விபயிலும் மாணவர்கள் தமது கல்விச் சுற்றுலாவின்போது, முல்லைத்தீவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த மாணவர்கள் வன்னிநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் இல்லத்திற்குசென்றதுடன், கலந்துரையாடலொன்றிலும் ஈடுபட்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலில் மாணவர்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்தகாலங்களில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாணவர்களின் கல்வித்தரம் முன்னிலையில் இருந்தது. ஆனால் தற்போது வடக்கு, கிழக்கில் எமது மாணவர்களின் கல்வித்தரம் குறைவடைந்து செல்கின்ற நிலைகளைக் காண்கின்றோம். இந்த நிலை மாறவேண்டும். எனவே அனைவரும் கல்விகற்கவேண்டும், சிறந்த பெறுபேறுகளைப் பெறவேண்டும், உயர்ந்த நிலைகளைப் பெறவேண்டும் என்பதே மாணவர்கள் அனைவரதும் ஒரே இலக்காக இருக்கவேண்டும். எமது மாணவர்கள் கல்வியில் பிரதேசம், மாவட்டம், மாகாணம் என்ற நிலைகளைக் கடந்து தேசிய ரீதியிலும் வெற்றிபெறவேண்டும். மாணவர்கள் சிறந்தமுறையில் கல்விகற்பதற்காக உதவிகளை வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்திஜீவிகள், புலம்பெயர் உறவுகள் என அனைவரும் தயாராக இருக்கின்றோம். இவ்வாறிருக்கும்போது வடக்கு, கிழக்கு மாணவர்கள் தேசியரீதியில் முதல்நிலை பெற்றார்கள் என்ற நிலையை ஏன் ஏற்படுத்தமுடியாது. அது மாணவர்களான உங்களின் கைகளிலேயே இருக்கின்றது. அதேவேளை கல்வியில் சிறந்து விளங்குவதைப்போல, ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்கவேண்டும். வடக்கு, கிழக்குத் தமிழ் பிள்ளைகள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்கள் என்ற நிலையைக்கொண்டுவரவேண்டும். இவ்வாறு எமது மாணவர்கள் ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்துவிளங்கும்போது எமது அடுத்தடுத்த சந்ததியினர் சிறந்து விளங்குவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/202504
  11. 16 அடி நீளமான முதலையொன்று பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. 30 Dec, 2024 மட்டக்களப்பு புளியந்தீவு வாவிக்கரை வீதி இரண்டில் சுமார் 16 அடி நீளமான முதலையொன்று ஞாயிற்றுகிழமை (29) பொதுமக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு பிரதேச ஆற்றில் தென்பட்ட இந்த முதலை ஞாயிற்றுகிழமை (29) மாலை கரைக்கு வந்தது. இதன்போதே, பொதுமக்கள் முதலையைப் பிடித்தனர். https://www.virakesari.lk/article/202505
  12. எம்.பி.க்களின் சொத்துக்கள், பொறுப்புக்களை சமர்ப்பிப்பதற்கு பெப்ரவரி 15 வரை காலக்கெடு 28 Dec, 2024 (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்துமூலமாக அறிவுறுத்தியுள்ளது. புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் 82(ஏ) பிரிவின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்ததை தொடர்ந்து 3 மாத காலத்துக்குள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருடாந்தம் ஜூன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை 2025.02.15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.
  13. கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாதென அரசு அறிவிப்பு 28 Dec, 2024 (நமது நிருபர்) கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் இனி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே விண்ணப்பித்துள்ளோர் மற்றும் காத்திருப்போருக்கு பொருந்தாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். போலி உத்தரவு கடிதங்கள் மூலம் பலர் விண்ணப்பிப்பதால், மோசடிகளை தடுக்க, பணி உத்தரவு கடிதங்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் கனடாவில் தற்போது தற்காலிகமாக பணியாற்றும் மற்றும் பணியாற்றுவதற்கான பணி உத்தரவு பெற்றுள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். இதுகுறித்து கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர் மார்க் மில்லர் கூறும்போது, நமது பொருளாதாரத்திற்குத் தேவையான திறமையாளர்களை ஈர்க்கும் அதே வேளையில், மோசடியைக் குறைப்பதற்கு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கனடாவின் வெற்றிக்கு குடியேற்றம் எப்போதுமே ஒரு மூலக்கல்லாக இருந்து வருகிறது. கனடாவிற்கு சிறந்த மற்றும் பிரகாசமானவற்றை வரவேற்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் . இதன் மூலம் அனைவருக்கும் தரமான வேலைகள், வீடுகள் மற்றும் அவர்கள் செழிக்கத் தேவையான ஆதரவைப் பெறலாம் என்றார்.
  14. தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 28 பேர் பலி ! 29 Dec, 2024 தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையைவிட்டு விலகி அங்கிருந்த வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமான விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தமாக 181 பேர் இருந்துள்ளனர். குறித்த விமானம் தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவுக்கு திரும்பியுள்ளது. தென் கொரியாவின் சியோலில் இருந்து 288 கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ள தெற்கு ஜெயோலா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டுள்ளது. தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையைவிட்டு விலகி அங்கிருந்த வேலி ஒன்றுடன் வேகமாக மோதி விபத்திற்குள்ளானதில் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமான விபத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
  15. எதிர்வரும் காலங்களில் ஆட்சி மாற்றங்கள் வரும் போது தும்புத்தடி முறிக்கும் நிலை எல்லாம் ஏற்படாது என்று நினைககிறேன்.,காரணம்.,பதினெட்டு வயதை கடந்த படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய தற்காப்பு பயிற்சிகள் என்று பாடசாலைகள் ஊடாக வரக் கூடும்.அண்மையில் முகப் புத்தகத்தில் எழுதும் சகோதரி ஒருவரின் ஆக்கம் ஒன்று படிக்கும் சந்தர்ப்பத்தில் புரிந்து கொண்டேன். 🤭🤭
  16. அய்யா மனித உடல் இயந்திரமல்ல..வைத்தியர்களோ, தாதிகளோ ஒரு சின்னப் பிழை விட்டாலும் உயிருக்கு உத்தரவாதமில்லை...பில்கேட்சின் தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கும் ..மருத்துவத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது..சோ.. கொஞ்சம் காலத்திற்கு ஏற்றால்,நாம் வாழும் நாடுகளுக்கு ஏற்றால் போல் சிந்தியுங்கள்..நன்றி.
  17. நீடிக்கும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் நேற்று தெரிவித்துள்ளார். அரிசிக்கான தட்டுப்பாடு நீங்கவில்லை என்றும் பொருட்களுக்கான விலை குறைவடையவில்லை என்றும் இன்று பலர் முறைப்பாடுகளை முன்வைக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகின்றது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். இது தொடர்பான தெளிவுகளை நாங்கள் பெற்றுள்ளோம். இதற்கான பொறுப்பைக் கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும். நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்கும் போது பெரும்பாலான நெல் களஞ்சியசாலைகள் தனியாரிடமே இருந்தன. இந்த நிலைமையை சீர் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற பிரதியமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/நீடிக்கும்_அத்தியாவசிய_பொருட்களுக்கான_தட்டுப்பாடு
  18. 2025ஆம் ஆண்டு தேசிய தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் 2025ஆம் ஆண்டு தேசிய தைப்பொங்கல் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு புத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் தேசிய கொண்டாட்டத்தை 2025 ஜனவரி 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பல வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது. இதில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் இதர அதிகாரிகளும் கலந்துகொண்டனர். https://newuthayan.com/article/2025ஆம்_ஆண்டு_தேசிய_தைப்பொங்கல்_விழா_யாழ்ப்பாணத்தில்
  19. டகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லை – அமைச்சர் சந்திரசேகரம் தடாலடி ! By arulmolivarman December 27, 2024 0 ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லை – அமைச்சர் சந்திரசேகரம் தடாலடி ! பா உ அர்ச்சுனாவுக்கும் சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராசாவுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, பொது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்ற முடிவுக்கு வர அமைச்சர் சந்திரசேகரன் நிர்ப்பந்திக்கப்பட்டார். டிசம்பர் 26 நேற்று, கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதன்போதே, இனிமேல் பொது மக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என அவர் தெரிவித்தார். மேலும் அங்கு பேசிய அமைச்சர் உங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிறீதரன் எம்.பி, வைத்தியர் அர்ச்சுனா, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்துக்கு கொண்டு வாருங்கள் என குறிப்பிட்டு பிரச்சினையை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வந்தார். கிளி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும், சமூக செயற்பாட்டாளர் தம்பி தம்பிராசா மற்றும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. வழமை போல கல்வித் தகமை உள்ளதா..?, நீங்கள் மக்களால் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தம்பிராசாவுக்கு யார் அனுமதி, எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை ஏன் உள்ளே விடுகின்றீர்கள்? தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள் போன்ற கருத்துக்களை முன்வைத்து, அடக்கு முறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசாவை பா.உ அரச்சுனா பேச, தம்பி தம்பிராசாவும் எதிர்த்துப்பேசவே கூட்டம் அமைதியையிழந்ததது. https://www.thesamnet.co.uk/?p=110013
  20. உங்களின் தங்கை முதியோர் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்பவராக இருக்கலாம் அல்லது அதன் நடத்துணராக இருக்கலாம்..தற்போதைய காலத்தில் எந்த விதமான சான்றிதழ்களும் இல்லாமல் இப்படியான பணிகளை செய்ய முடியாது..சட்டப்படி அவர் ஒரு பயிற்றபட்ட தாதியாக இருக்க வேணும்.பத்து வயோதிபர்களை மற்றும் நோயாளர்களை வைத்திருந்தால் அதுவும் ஒரு மருத்துவமனை மாதிரியே தான்.
  21. இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்! இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளி சிறிதரன்! நேற்று நடைபெற்ற கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மிகவும் சிக்கலான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. காணிப்பதிவு முறைகேடுகள், போதைப்பொருள் மற்றும் கசிப்பு பாவனை அதிகரிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது. இரணைமடுக் குளத்தின் தண்ணீரை யாழ் கொண்டு செல்வது தொடர்பான உரையாடலும் முக்கிய இடத்தைப் பெற்றது. யாழில் ஏற்பட்டுவரும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக 1960களில் ஆறுமுகம் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனையே நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசனக் குளமாகிய இந்தக் குளத்தைப் புனரமைத்து, அதன் அணைக்கட்டை உயர்த்தி மேலதிக நீரைச் சேமித்து, யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். ஏற்கனவே இத்திட்டத்தின்படி தண்ணீர் விநயோகம் செய்யக்கூடியமாதிரி குழாய்கள் பொருத்தப்பட்டு வேலைகள் ஆரம்பித்திருந்த நிலையில் இத்திட்டம் இடை நடுவில் தடைப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வன்னி விவசாயிகள் எதிர்க்கின்றனர். கிளிநொச்சி ஒரு விவசாய மாவட்டமாக இருக்கும் பட்சத்தில் இரணமடுக்குளத்திலிருந்து ஆயிரக்கான ஏக்கர் வயல்காணிகளுக்கு இன்னும் நீர்ப்பாசன வசதிகள் செய்து தரப்படவில்லை என கிளிநொச்சி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். அதனால் இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்க அனுமதிக்கப் போவதில்லை என்று கிளிநொச்சி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றார். இவரது வாக்கு வங்கி கிளிநொச்சி என்ற வகையில் சிறிதரன் கிளிநொச்சி விவசாயிகளின் பக்கம் நிற்பதில் ஒரு நியாயமும் உள்ளது. அதேபோல் இராமநாதன் அர்ச்சுனாவின் வாக்கு வங்கி யாழ்ப்பாணத்தில் இருப்பதால் தண்ணியை யாழ் கொண்டு வருவது அவரது வாக்கு வங்கிக்கு முக்கியம். ஒருபக்கம் சமமான வளப்பங்கீடு பற்றி பேசினாலும் மறுபக்கம் வளச்சுரண்டல் தொடர்பிலும் விழிப்பாக இருக்க வேண்டும். யாழ் மாவட்டத்தின் நீர்ப்பற்றாக்குறைக்கு அம்மாவட்டத்தின் தவறான மற்றும் பொறுப்பற்ற நீர் மேலாண்மையே காரணம். யாழிலில் காணப்பட்ட பல நீர் நிலைகள் மூடப்பட்டு சட்டவிரோத கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஊதிப் பெருத்த நகரத்தாலும் முறையற்ற கழிவகற்றலாலும் நன்னீர் நிலைகள் பாவனைக்கு ஏற்றதாக இல்லாமல் பழுதடைந்துள்ளன. குறிப்பாக சுண்ணாகம் மின்சார உற்பத்தி மசகு எண்ணெய்க் கழிவுகள் நிலத்திற்கடியில் விடப்பட்டதால் அப்பகுதியின் நிலத்தடிநீர் கெட்டுப் போனமையும் குறிப்பிடத்தக்கது. ஏன் யாழ் மாவட்டம் மாற்றுத் திட்டங்களை ஆலோசிக்க கூடாது. கடல் நீரை நன்னீராக சுத்திகரித்தல், மழை நீரை சேகரிக்கலாம், சட்டவிரோத கட்டிடங்களை தகர்த்து நீர்நிலைகளை மீட்டு புனரமைக்கலாம் என கிளிநொச்சியில் சூழலியல் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். https://www.thesamnet.co.uk/?p=110016
  22. நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைப்பு (எம்.வை.எம்.சியாம்) 1.6 பில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சர்வதேச பொலிஸாரால் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களான கணவனும் மனைவியும் வியாழக்கிழமை (26) இந்தியாவிலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் சந்தேக நபர்கள் நேற்று கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். பிரிவெல்த் குளோபல் எனும் நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்துள்ள சந்தேக நபர்கள் அதிக இலாபத்தை பெற்றுத்தருவதாக்கூறி 160 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளனர்.இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் குறித்த நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது. இந்நிலையில் சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.மேலும் சந்தேக நபர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் சிவப்பு எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய சந்தேகநபர்கள் இந்தியாவின் வேதநாயகம் பிரதேசத்தில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்ததுடன் மூன்று வருடங்கள் அங்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் நேற்றுமுன்தினம் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். கொழும்பு 5 பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் அவரது 43 வயதுடைய மனைவி மற்றும் 14 வயதுடைய மகனும் நேற்றுமுன்தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இருவேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர். சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய குறித்த நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்டிருக்க வில்லை எனவும் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அத்துடன் சந்தேக நபர்கள் சம்மாந்துறை, கல்முனை, அம்பாறை ஆகிய பகுதிகளில் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து வியாபாரத்தை ஆரம்பித்ததாகவும் வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டதையடுத்து நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி மோசடி தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.