Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. சிறுகதை: யாதுமானவள்! - ஶ்ரீரஞ்சனி - - ஶ்ரீரஞ்சனி - சிறுகதை 14 டிசம்பர் 2025 இதுதான் நான் தனித்துச் செல்லும் முதல் பயணம். விமானத்தின் பின்பகுதியில்தான் என் இருக்கை இருந்தது. சூட்கேசை என்னுடன் இழுத்துக்கொண்டு சென்ற நான் என் இருக்கையில் கைப்பையை வைத்துவிட்டு, சூட்கேசை மேல் இறாக்கையில் வைப்பதற்குப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். எட்டக்கூடிய உயரத்தில் அது இல்லையே என எனக்குக் கவலையாக இருந்தது. என் இருக்கையின் பக்கத்தில் இருந்த இளம் பெண் எழுந்து, உதவிவேண்டுமா என ஆங்கிலத்தில் கேட்டபடி உதவிசெய்ய முன்வந்தா. கேட்காமலேயே உதவிசெய்ய முன்வந்த அவவுக்கு வாயாராவும் மனதாரவும் நன்றிகூறியபடி ஆசுவாசத்துடன் அமர்ந்துகொண்டேன். சற்றுநேரத்தில், “நீங்க சுவிற்சிலாந்திலா இருக்கிறீங்க?” என அவவிடம் கேட்டேன். “ஓம், ஒரு medical conferenceக்காக ரொறன்ரோவுக்கு வந்தனான். நீங்க இங்கையா இருக்கிறீங்க?” அவவும் பேச்சைத் தொடர்ந்தா. “ஓ, ரொறன்ரோ உங்களுக்குப் பிடிச்சிருந்ததா? 20 வருஷமா நான் இங்கைதான் இருக்கிறன். ஆனா, என்ர சொந்த நாடு, இலங்கை. அங்கை எனக்குப் படிப்பிச்ச ஒரு ரீச்சரின்ர 75வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக உங்கட நாட்டுக்கு வாறன்.” “ரொறன்ரோவுக்கு ஒரு wow சொல்லலாமெண்டால், உங்களுக்கு மிகப் பெரிய wow சொல்லலாம். ஆசிரியர்களுடனான உறவை அவ்வளவு தூரத்துக்கு நீங்க பேணுவீங்களா?” முகத்தில் விழுந்த சுருட்டை மயிரைக் காதோரம் ஒதுக்கியவாறு புருவங்களை உயர்த்தினா அவ. “மிசிஸ் பரம் வித்தியாசமான ஒரு ரீச்சர். அவ என்ர அபிமானத்துக்குரிய ரீச்சர் மட்டுமில்ல, அவ எனக்கொரு role model.” “ஓ!” “சின்ன வயசில இலங்கையின்ர தலைநகரான கொழும்பிலதான் நாங்க இருந்தனாங்க. அங்கை அப்பா ஒரு புடவைக் கடை வைச்சிருந்தவர். 77ம் ஆண்டு நடந்ததொரு கலவரத்தில அவர் கொலைசெய்யப்பட்டிட்டார். அதாலை பிறகு நாங்க யாழ்ப்பாணத்துக்குப் போகவேண்டியிருந்தது. அப்ப நான் ஏழாம் வகுப்பு....” “ஓ, very sad, I am sorry.” “அது ஒரு காலம்... ம்ம், சோகத்தைத்தவிர எதையும் பாத்ததில்லை. புதுப் பள்ளிக்கூடத்தில நான் தனிச்சுப்போயிருந்தன். என்ர பல் அசிங்கமாக இருக்கு, நான் வடிவில்லை எண்டெல்லாம் கேலிபண்ணிச்சினம். பள்ளிக்கூடம் போறதே பெரிய தண்டனை போலிருந்துது.” “எவ்வளவு தூரம் நீங்க பாதிக்கப்பட்டிருந்திருப்பீங்க எண்டு விளங்குது.” மெல்லிய குரலில் சொன்னா அவ. “அம்மா மொத்தத்திலை ஜடமாகவேயிருந்தா. போதாததுக்கு பணக் கஸ்டம் வேறை. அந்த நேரம் மிசிஸ் பரம் இருந்திருக்காட்டி நான் என்ன செய்திருந்திருப்பன் எண்டு நினைச்ச்சா, இப்பகூட எனக்கு நெஞ்சு கனக்கும். நான் பள்ளிக்கூடத்திலை சேந்த சில நாள்களிலைதான் அங்கை அவவுக்கு வேலை கிடைச்சிருந்தது. இளமையாயும் நல்ல வடிவாயும் இருந்த அவவை எல்லாரும் பிரமிப்போடைதான் பாப்பினம். ஒரு கட்டத்திலை என்ர பிரச்சினை அவவுக்கு விளங்கிச்சுதோ என்னவோ, வீட்டை வா, படிக்கலாமெண்டு தன்ர வீட்டுக்குக் கூப்பிட்டு அவ எனக்குப் பாடம் சொல்லித் தரத் தொடங்கினா. அதுக்குப் பிறகுதான் மற்றவையும் கொஞ்சம் கொஞ்சமாய் என்னோடை பழகத் துவங்கிச்சினம். அவவே என்னிலை கரிசனை காட்டுறா எண்டதுதான், அதுக்குக் காரணமா இருந்திருக்கலாமெண்டு நான் நினைக்கிறன்.” “ஓ, விளங்குது. அப்படியொரு ரீச்சர் கிடைக்க நீங்க கொடுத்துவைச்சிருக்கிறீங்க.” “என்ர பிள்ளையளுக்கும் அவவைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கிறன். ஒரு கட்டத்தில எனக்கு எல்லாமா இருந்த அவவைப் பத்தி, என் வேதனையை விளங்கி எனக்கு உயிர்ப்பளித்த அவவின்ர உளவியலைத்த்தான் அங்கை நடக்கவிருக்கிற கூட்டத்தில பேசப்போகிறன்,” என் குரலில் நன்றியும் பெருமிதமும் கலந்திருந்தது. “அப்ப உங்கடை பேச்சு அந்தமாரி இருக்கும்.” அழகான வெண்ணிறப் பற்கள் தெரிய அவ புன்முறுவல் செய்தா. மூன்று மாதமா யோசித்து, யோசித்து எழுதி, எழுதிப் பின் திருத்தித் திருத்தி நான் எழுதினேனா என நானே வியந்துபோன அந்தப் பேச்சை எண்ணிப்பார்த்துக் கொண்டேன். விமானம் பறக்கத் தொடங்கியது. சூரிய உதயம் யன்னலுக்கூடாகத் தெரிந்தது. செந்நிறச் சூரியக் கதிர்கள் வர்ணஜாலம் காட்டிக்கொண்டிருந்தன. மூன்று தசாப்தங்களின் பின்னர் மிசிஸ் பரமைப் பார்க்கப்போகின்றேன் என மூன்று மாதங்களாக மனசுக்குள் பீறிட்டுக்கொண்டிருந்த களிப்பு இப்போது உச்சத்தை அடைந்திருந்தது. இதயம் ஆனந்தத் தாண்டவமாடியது. பல்கலைக்கழகத்துக்காகக் காத்திருந்த காலங்களில் அவ பள்ளிக்கூடம் முடிந்து எங்களின் ஒழுங்கையால் போவதைப் பார்ப்பதற்காக ஒழுங்கையில் தற்செயலாக நிற்பதுபோல, ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விடயம் செய்துகொண்டு நின்றது நினைவுக்கு வர எனக்குள் சிரிப்பு வந்தது. மீளவும் மிசிஸ் பரமோடை உறவைத் தொடர வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்பதில் நிறைவாக இருந்தது. பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால் பொறுப்பில்லை. நிதி நெருக்கடியில்லை. வேலையில் லீவு கிடைக்குமா என யோசிக்க வேண்டியதில்லை. நினைத்ததைச் செய்யமுடிகிறது, முதுமை சில வகைகளில் உதவியாக இருக்கின்றதுதான் என நன்றியுடன் நினைத்துக்கொண்டேன். X X X X விமானம் தரையிறங்கியபோது இரவாகியிருந்தது. செயற்கை ஒளியில் சுவிற்சிலாந்து பிரகாசித்தது. “மிசிஸ் பரமின்ரை புண்ணியத்திலை உன்னைப் பாக்க முடிஞ்சிருக்கு. பாத்து எத்தனை வருஷமாய்ச்சு,” கட்டிக்கொண்டாள் என்னைக் கூட்டிச்செல்ல விமான நிலையத்துக்கு வந்திருந்த என் மைத்துனி அருள். “என்ன செய்ய அருள், இப்பத்தான் நேரம் வந்திருக்கு, இனி அடிக்கடி வருவன்!” “ஓ, மிசிஸ் பரமைப் பாக்கலாம் எண்டபடியால், இனி அடிக்கடி வருவாய்.” “இல்லையடியப்பா, பிள்ளையள் வளர்ந்திட்டுதுகள் இனிப் பொறுப்பில்லையெண்டு சொல்றன்.” “நீ சொன்னாப்பிறகு, அவவின்ர பேச்சுகளைக் கேட்கிறனான். மனிசி அந்தமாரித்தான் பேசுது.” “அவ உண்மையிலேயே ஒரு காந்தமடி.” “வீட்டுக்குப் போய் குளிச்சு உடைமாற்றிக்கொண்டு படுக்கைக்குச்சென்றபோது, “விடியக் கோயிலுக்குப் போவம், என்ன? முதலிலை முருகனைப் போய்த் தரிசிப்பம்.” என்றாள் அருள். “ஓகே, போவம்.” ரொறன்ரோவிலை கோயிலுக்குப் போறனியோ?” “அங்கை போறனானோ, இல்லையோ, நீ போகேக்கே நான் வரத்தானே வேணும்.” “நாளைக்குத் தேர் எண்டபடியால், உனக்குத் தெரிஞ்ச ஆக்களும் அங்கை வரக்கூடும்” “ஆக்களைப் பாக்கத்தானே அந்தக் காலத்திலும் மாவிட்டபுரத்துக்கு, கீரிமலைக்கு எண்டெல்லாம் போறனாங்கள்,” கண்ணடித்தேன் நான். “உனக்கெல்லாம் பகிடிதான். சாமி கும்பிடப் போறம். போற இடத்திலை ஆக்களைப் பாக்கிறம்.” “சரி, சரி. முதலிலை சாமியைக் கும்பிடுவம். பிறகு ஆர் வந்திருக்கினமெண்டு பாப்பம்.” சிரித்தேன் நான். X X X X தேர் வெளிவீதியில் சுற்றிவந்துகொண்டிருந்தது. வீதி மக்கள் வெள்ளத்தால் நிறைந்து வழிந்தது. “பக்க கோடிகளுக்கு எங்கும் குறைவில்லை,” அருளுக்குக் கூறிச் சிரித்தேன். திடீரென என் முகத்தை இரண்டு கைகள் மூடிக்கொள்ள, ‘யாரெண்டு சொல்லும் பாப்போம்,” எனக் குரலொன்று ஒலித்தது. குரலை எனக்கு மட்டுக்கட்டவே முடியவில்லை. தடுமாறிய என் முன்னால் கைகளை எடுத்துவிட்டுச் சிரித்தபடி நின்றிருந்தாள் சொர்ணா. “ஏய் சொர்ணா, நீர் எங்கையிருக்கிறீர் எண்டு நான் இப்ப எத்தனை வருஷமா தேடிக்கொண்டிருக்கிறன். சோசல் மீடியாக்கள் ஒண்டிலும் நீர் இல்லையா?” சொர்ணாவைக் கண்ட மகிழ்ச்சியில் என் மனம் துள்ளியது. எங்களின் பாடசாலையில் எட்டாம் வகுப்பில் வந்துசேர்ந்திருந்த சொர்ணாவும் நானும் பன்னிரண்டாம் வகுப்புவரை உற்ற சினேகிதிகளாக இருந்தோம். 83 கலவரத்தின் பின்னர் சொர்ணா திருமணமாகி வெளிநாடு சென்றுவிட்டதாக அறிந்தேன். அத்துடன் தொடர்பு விட்டுப்போயிருந்தது. “மலேசியாவிலை இருந்தனாங்க, இப்ப இங்கை வந்து மூண்டு வருஷமாகுது. உம்மை இங்கை சந்திப்பனெண்டு நான் நினைக்கவேயில்லை. நீரும் இங்கையா இருக்கிறீர்?” “இல்லை, நான் கனடாவிலை இருக்கிறன். மிசிஸ் பரமுக்கு பவள விழா நடக்குதெல்லோ. கேள்விப்பட்டனீரோ? அதுதான் வந்தனான்.” “ஓ.” சுரத்தில்லாமல் சொன்னாள் சொர்ணா. பின்னர் பரஸ்பரம் எங்களின் வாழ்க்கையைப் பற்றிக் கதைத்தபடி, தொலைபேசி இலக்கங்களைப் பரிமாறிக் கொண்டோம். அருள் என்னைவிட 10 வயது இளையவள் என்பதால் சொர்ணா என் சினேகிதி என்பது அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் என் சினேகிதியைச் சந்தித்துக்கொண்டதில் அவளுக்கும் சந்தோஷமாக இருந்தது. பின்னர் அருளுக்குத் தெரிந்தவர்கள், அவர்கள் இவர்கள் எனக் கதைத்துமுடித்து வீட்டுக்குப் போனோம். பயண அலுப்பும், கோவில் அலுப்பும் என்னை நித்திரை மயக்கத்துக்குள் அமிழ்த்திவிட்டது. X X X X வியாழனும் வெள்ளியும் ஊர் பார்ப்பதில் மறைந்துபோனது. மலைகளும் நீர்நிலைகளும் சூழ்ந்த சுவிற்சிலாந்தின் அழகு கண்களுக்குப் பெருவிருந்தாயிருந்தது. ஞாயிற்றுக்கிழமைதான் மிசிஸ் பரமின் பவள விழா. சனிக்கிழமைதான் சொர்ணாவைச் சந்திப்பதாக இருந்தது. அவளைச் சந்திக்கும்போது பவளவிழாவுக்கு அவளும் வருவதை உறுதிப்படுத்த வேண்டுமென நினைத்துக்கொண்டேன். அன்று நான் பேசப்போகும் பேச்சு எப்படியிருந்ததெனச் சொல்வதற்கும் பூசிமெழுகாமல் கதைக்கும் சொர்ணா வருவது நல்லதென நினைத்தேன். அத்துடன் மிசிஸ் பரம் சொர்ணாவினதும் ஆசிரியராக இருந்ததால், சொர்ணா வருவா என்ற நம்பிக்கையும் இருந்தது. இரவுச் சாப்பாட்டுக்கு வரும்படி சொர்ணாவை அருள் அழைத்திருந்தாள். முதல் நாளிரவு தொலைபேசியில் பேசிய சொர்ணா, பகவதியையும் அழைத்து வரட்டுமா, பகவதியும் உம்மைப் பார்க்க ஆசைப்படுகிறா என்றாள். ஓ, நிச்சயமாக, பகவதியும் இங்கேயா இருக்கிறா. எனக்கும் அவவைப் பார்க்க ஆசையாயிருக்கு. கூட்டிக்கொண்டு வாரும் என்றேன், நான். மாலை ஐந்து மணியளவில் பகவதியும் சொர்ணாவும் வந்திறங்கினர். பகவதி அன்று பார்த்தமாதிரியே இருந்தாள். “தனிச்சுச் சுதந்திரமாய் சுத்துற காலம் வசந்திக்கு வந்திருக்கு,” நக்கலடித்தாள் பகவதி. “நீர் மட்டும் என்னவாம்? எங்கை மனிசன், எங்கை பிள்ளையள்?” நானும் பகவதியை வம்புக்கிழுத்தேன். “அவையும் வந்தால் நாங்க என்னெண்டு பழங்கதையள் கதைக்கிறது. அவைக்குப் போரடிக்குமெண்டு விட்டிட்டு வந்திட்டம்,” என்றாள் சொர்ணா சீரியசாக. நேரம் போனதே தெரியாமல் வம்பளந்துகொண்டிருந்தோம். எங்களின் சிரிப்பொலியில் அருளின் வீடு அதிர்ந்தது. “ஏழு மணியாகுது, வாங்கோ சாப்பிடுவம்,” என அருள் கூப்பிட்டாள். தோசை முறுகலாகவும் ருசியாகவும் இருந்தது. தோசை சுடப் பஞ்சிப்பட்டு, கடையில் வாங்குமெனக்கு தோசைகளை ஒவ்வொன்றாக அருள் சுட்டுத் தந்தது, ஒரு காலத்தில் அம்மா சுடச்சுடச் காத்திருந்து சாப்பிடுவதை நினைவுபடுத்தியது. “தோசை சுடுறதுக்காகக் காய்ஞ்ச தென்னோலைகளை ஒண்டொண்டாப் பிரிச்செடுத்து அம்மா கட்டாக்குறதை, பிறகு ஓலைகள் எரியேக்கை சுவாலை உயரமாய் எழுந்து தேயுறதை ... எல்லாத்தையும் பாக்கிறதிலை ஒரு சுகம் இருந்தது. எல்லாம் ஒரு காலம். இப்ப எனக்கு இந்தத் தோசைகள் அம்மாவையும் அவ தோசை சுடுறதையும் ஞாபகப்படுத்துது,” என்றேன் நான். “கொழும்பில இருக்கேக்கையும் அப்படியோ அம்மா தோசை சுட்டவ?” வெகுளித்தனமாகக் கேட்பதுபோல என்னைக் கேலிசெய்தாள் பகவதி. “கொழும்பு வாழ்க்கை ஆருக்கு ஞாபகமிருக்கு. அப்பாவை அழிச்ச அந்தக் கொழும்பு வாழ்க்கையை மறக்கோணுமெண்டு மறந்தனோ, என்னவோ. எனக்கது ஒண்டுமே நினைவில்லை. .ஆனா யாழ்ப்பாணத்துக்கு வந்ததும் மிசிஸ் பரம் செய்ததுகளை வாழ்க்கைக்கு மறக்கேலாது.” சில கணங்கள் பெரும் அமைதி நிலவியது. நான் அதை உடைத்தேன். “It’s okay. அப்பா போய், இப்ப எத்தனை வருஷமாச்சு. மனசிலை வடுவாயிருக்குதான், ஆனா, அந்த நேரத்திலை பட்ட வேதனை இப்ப இல்லை. கொழும்பை ஏன் ஞாபகப்படுத்தினதெண்டு நீர் கவலைப்படத் தேவையில்லை, பகவதி.” “அதில்லை, வசந்தி. நீர் மிசிஸ் பரமை உச்சந்தலையிலை வைச்சிருக்கிறீர். அதுதான் சொல்லலாமோ வேண்டாமோ எண்டு யோசிக்கிறம்,” சொர்ணாவைப் பார்த்தபடி சொன்னாள் பகவதி. “என்னத்தைச் சொல்லலாமோ, வேண்டாமோ எண்டு யோசிக்கிறியள்?” “அவவைப் பத்தித்தான். அந்த நேரத்திலை ஒத்தடமாயிருந்த மிசிஸ் பரமைத்தான் உமக்குத் தெரியும். அவ ஒத்தடமாயிருந்தா, ஏனெண்டால் உங்களுக்கிடையில முரண்கள் இருக்கேல்லை.” தோளைக் குலுக்கியபடி சொன்னாள் அவள். “எனக்கு விளங்கேல்லை.” “நான் என்ன சொல்றன் எண்டால், அவவை முன்னுக்கு வைச்சால், அவவோடை முரண்படாட்டா ஒரு பிரச்சினையும் வராது... அருள், உண்மையிலேயே தோசை சுப்பர். சம்பலும்தான். இஞ்சிபோட்டு அரைச்சிருக்கிறீர், என்ன?” தலையைக் கீழும் மேலுமாக ஆட்டின அருள் “தாங்கஸ்,” என்றாள். எனக்கோ கதை திசைமாறுவது விருப்பமில்லாமல் இருந்தது. “என்ன நடந்தது எண்டு சொல்லுமன்?” அவசரப்பட்டேன் நான். “சொர்ணா இப்ப நடத்துற முதியோர் சங்கத்தை அவதான் முதலில நடத்தினவ. பிறகு கொமிற்றியிலை கருத்து வேறுபாடு வந்தவுடனை எல்லாத்தையும் உதறிப்போட்டுப் போட்டா. கணக்கு வழக்குகளைக்கூடக் குடுக்கேல்லை. கடைசியில சொர்ணா தான் அந்தப் பொறுப்பை எடுக்கவேண்டியிருந்துது. எல்லாத்தையும் சரிப்பண்ணலாமெண்டு அவவின்ர வீட்டுக்கு சொர்ணா நாலைஞ்சு தடவை போய்க் கெஞ்சிக் கேட்டும் பழைய பைல்கள் ஒண்டையும் அவ குடுக்கமாட்டன் எண்டிட்டா. அதாலை ஒடிற்றிங்கிலை சங்கம் பட்டபாடு சொல்லிமுடியாது.” “ஏன் அப்படிச் செய்தவ, எனக்கு நம்பேலாமல் இருக்கு!” குழப்பத்துடன் நான் சொர்ணாவைப் பார்த்தேன். “அதுதான் சொன்னனே, முரண்வரேக்கைதான் ஒராளின்ரை சுயம் தெரியும். இவையின்ர சங்கச் செயலாளர் அவவுக்கு ஆதரவாயிருக்கேல்லை எண்டதாலை அவரின்ர மனிசி செத்ததுக்குக்கூடத் துயரம் விசாரிக்கேல்லையாம் எண்டால் பாருமன்.” “அவ இப்பிடிச் செய்தவ எண்டதை எனக்கு நம்பேலாமல் இருக்கு.” “நீர் இதையும் நம்பமாட்டீர். இங்கை அவ வந்திருந்த துவக்கத்தில பிள்ளையளோடை சரியாய்க் கஷ்டப்பட்டவ. சொல்லிக் காட்டக்கூடாது எண்டாலும், உமக்கு விளங்கட்டுமெண்டதாகச் சொல்றன். நான் அவவுக்கு நிறைய உதவிசெய்திருக்கிறன். ஜக்கற், அது இதெண்டு கணக்குப்பாக்காமல் வாங்கிக்கொடுத்திருக்கிறன். அப்படியிருந்தும், அவ பேசின ஒரு பேச்சிலை இருந்த ஒரு பிழையைச் சுட்டிக்காட்டிட்டன் எண்டு என்னை இப்ப தூரவைச்சிட்டா. சொர்ணாவின்ர பிரச்சினையைத் தீக்கிறதுக்காக நானும் ஏதாவது செய்வமெண்டு பாத்தன். ஆனா அந்த மனுசி கதைச்சால்தானே. அவவின்ர வண்டவாளங்கள் தெரிஞ்சிருந்தால், நீர் இங்கை வந்திப்பீரோ என்னவோ! …. நாங்களும்தான் பிழைவிடுறனாங்கதான், இல்லையெண்டில்லை. ஆனா, பெரிய ஆள்தோரணையிலை மனிசரா வாழோணுமெண்டு மற்றவைக்கு ஆலோசனை வழங்கிற, வழிகாட்டியா இருக்கிறதா பெயரெடுக்கிற இவ இப்பிடி நடக்கலாமோ...?” தலையை மேலும் கீழும் ஆட்டியபடி என் முகத்தைப் பார்த்தாள், பகவதி. “எனக்கு என்னத்தைச் சொல்லுறதெண்டு தெரியேல்லை, பகவதி… நீர் கேட்கிற கேள்வியில அர்த்தமிருக்கு... அவவுக்கு இப்பிடியுயொரு பக்கமிருக்குமெண்டு நான் கனவிலும் நினைக்கேல்லை.” “பகவதி சொன்னதெல்லாம் உண்மை, வசந்தி. ஆனா, அதுக்காண்டி... நீர் அவவை வெறுக்கோணும் எண்டில்லை. உமக்கு அந்த நேரம் அவ எல்லாமா இருந்திருக்கிறா. அதுக்கு நீர் நன்றியாய் இருக்கத்தானே வேணும்.” மென்மையாகவும் உறுதியாகவும் சொன்னாள் சொர்ணா. “எண்டாலும், உங்களுக்கு இப்பிடி நடந்திருக்கேக்கை, எப்படி நான் அவவை உயர்த்திப் பேசுறது?” “இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய். அழைப்பிதழிலை பேரெல்லாம் போட்டாச்சு, பேசத்தானே வேணும்,” என்கிறாள் அருள், தோசையை என் தட்டில் வைத்தபடி. எனக்குத் திடீரெனப் பசி போய்விட்டது. X X X X அந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, மண்டபம் மலர் அலங்காரங்களாலும், வண்ண விளக்குகளாலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நண்பர்கள் எல்லோரும் ஆரவாரமாகக் கூடியிருந்தனர். பொன்மஞ்சள் நிறச் சீலையில் மேடையின் நடுவில் மலர்மாலையுடன் மிசிஸ் பரம் அமர்ந்திருந்தா. பக்கத்தில் அவவின் கணவர் பரம் அவவின் சேலை நிறத்துக்குத் தோதான சேர்ட்டுடன் கையில் ஒரு கைத்தடியுடன் இருந்தார். மாணவர்களின் வாழ்த்துகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அவர்களின் வாழ்க்கையில் அவ எவ்வளவு தூரம் பங்களித்திருந்தா என ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டே இருந்தனர். நானும் அருளும் போய் எங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்து கொண்டோம். என் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. நன்றியைப் பகிர்வது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் என் சினேகிதிகளின் அனுபவங்களைப் புறக்கணிக்காமல் இருப்பதற்கும் உள்ளதென என் மனம் எனக்கு ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தது. என் பெயர் அழைக்கப்பட்டது. என் இதயம் துடிக்க மறுத்ததுபோல, நெஞ்சுக்குள் அடைத்தது. மூன்று மாதங்களாகத் தயாரித்த பேச்சு கையில் இருந்தது. ஆனால், மனதில் சொர்ணாவும் பகவதியும் கூறிய கதைகள்தான் சுழன்று கொண்டிருந்தன. ‘வசந்தி மோகன்,’ என் பெயரை அழைத்துக்கொண்டிருப்பவரின் குரல் மீளவும் ஒலித்தது. மெதுவாக எழும்பினேன். மேடைக்குப் போகும் படிகளில் இரண்டு படிகளைத் தாண்டிவிட்டேன். ஆனால் அடுத்த படியில் காலடி எடுத்துவைக்க முடியவில்லை. என் தலை என்னையும் அறியாமல் இடமும் வலமும் ஆடியது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு, ஆழமாக மூச்செடுத்தேன். ‘பேசினால் உண்மை வெளிப்படும். பேசாதே,’ என என் மூளை எச்சரித்தது. தொண்டை காய்ந்து போயிருந்தது. மெதுவாக ஒலிவாங்கிக்கு முன்னால் போய் நின்றுகொண்டேன். “அன்பான மிசிஸ் பரம் அவர்களே, ஆசிரியர்களே, என் அன்புத் தோழர்களே, மிசிஸ் பரம், எனக்கு ஆசிரியர் மட்டுமல்ல. தனிமையிலும் துயரத்திலும் நான் சிக்கித்தவித்தபோது, எனக்கு ஆதாரசுருதியாக இருந்த ஒரு கனிவான மனிதர். ‘நீ முக்கியமானவள்’ எனச் சொல்லும் தோரணையில் அவர் என்னுடன் நடந்த விதமும் அவரின் அன்பும் என் வாழ்க்கையை மாற்றியது. என் வாழ்க்கையின் இருண்ட அந்த நாள்கள் என் நினைவுக்கு வரும்போதெல்லாம், மிசிஸ் பரம் காட்டிய வெளிச்சம் ஒருபோதும் என் நினைவுக்கு வராமல் போனதில்லை. அவர் காட்டிய கருணைக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். ஆனால், நண்பர்களே,” - ஒரு கணம் நிறுத்தினேன். “மனிதர்களைப் பற்றிய ஒரு உண்மையை நாங்களெல்லாம் ஏற்கவேண்டும். மனிதர்களில் எவரும் ஒரு முகம் கொண்டவர்கள் அல்லர். ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் இருக்கின்றன. அதிலும் சிலருக்கு முற்றிலும் எதிரெதிரான முகங்கள் உள்ளன. அதனால், ஒருவருக்குத் தெய்வமாகத் தோன்றுபவர், இன்னொருவருக்கு அரக்கராகத் தெரியலாம். குறித்தவரின் நினைவுகள் ஒருவரை மகிழ்விக்கின்ற அதேவேளையில் இன்னொருவருக்கு வலியைக் கொடுக்கலாம்.” மீளவும் ஒரு கணம் என் பேச்சை நிறுத்திவிட்டு மிசிஸ் பரமைத் திரும்பிப் பார்த்தேன். அவரின் முகத்தில் ஆழ்ந்த சிந்தனையின் ரேகைகள் ஓடுவதுபோல எனக்குத் தெரிந்தது. மண்டபத்தில் ஓரிரு கணங்கள் பெரும் அமைதி நிலவியது. பின் நீண்டதொரு கைதட்டல் ஒலித்தது. நான் தொடர்ந்தேன். “எனவே முழுமையானதொரு மனிதரைப் பற்றிப் பேசுவதற்கு நான் இங்கே வரவில்லை. வாழ்க்கையில் நான் இழந்துபோன பிடிப்பை மீளப் பெற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருந்த ஒருவரைப் பற்றியே பேச வந்திருக்கிறேன்...” “தெல்லிப்பழைச் சைவ வித்தியாசாலையில் மிசிஸ் பரம் ஆசிரியராகப் பதவியேற்றபோது, அவரின் அபிமான மாணவியாக இருந்த வசந்திக்கு நன்றி கூறிக்கொண்டு, இனி அடுத்ததாக....” தலைமை வகித்தவர் பேசிக்கொண்டிருந்தார். அருளின் அருகே வந்தமர்ந்த எனக்கு உடம்பு படபடத்தது. முகத்தில் அனல் அடிப்பது போலிருந்தது. என் கைகளை இறுகப்பற்றிக் கொண்ட அருள், “வீட்டுக்குப் போவோமா” என்றாள். sri.vije@gmail.com https://www.geotamil.com/index.php/2021-02-11-18-01-46/9494-2025-12-14-13-07-25
  2. போண்டியில் இடம் பெற்ற சம்பவத்தின் பின் ரொறன்டோவில் பொலிசாரால் விடுக்க பட்டுள்ள வேண்டுகோள். Toronto Police Service 3h · We are closely monitoring events in Australia and any activity that may target Jewish people, and we remain committed to protecting our communities. If you see anything suspicious please report it immediately. Your vigilance helps keep our community safe.
  3. சரி.இனிமேல் காணொளிகள் போடுவதை தவிர்க்கிறேன்.இப்படி சித்தரிச்சு போட்டால் தான் கூடுதல் வியூஸ் போகும் என்றதனாலும் போடுகிறார்கள்.
  4. அனேக விடையங்கள் இப்போ யூருப்காரர்களால் வெளி வருவதனால் யூருப்களை இணைக்க வேண்டிய நிலை.இறப்பதற்கு முன் தன்னுடைய நிலைமைய அந்தப் பிள்ளை பதிவு செய்திருக்கிறார்..இப்படியான இறப்புக்களுக்கு பின்னராவது தமிழ்கடைகள் வைத்திருப்பவர்கள் கொஞ்சமாவது மனிதாபிமானத்தோடு நடவுங்கள்.
  5. மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது! written by admin December 7, 2025 மீண்டும் அணைந்தது அணையா விளக்கு: யாழ். நினைவுத் தூபி மீண்டும் உடைத்து எறியப்பட்டது! யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில், வரவேற்பு வளைவுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ‘அணையா விளக்கு’ போராட்ட நினைவுத்தூபி, இனந்தெரியாத விஷமிகளால் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 7, 2025) மீண்டும் உடைத்து எறியப்பட்டுள்ளது. இந்த நினைவுத் தூபி, செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி கோரியும் ‘மக்கள் செயல்’ எனும் இளையோர்களால் கடந்த ஜூன் மாதம் நடந்த போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்டது. தொடரும் அத்துமீறல்! அமைதி வழியில் நீதி கோரும் இந்த நினைவுத்தூபி, கடந்த ஒக்டோபர் மாதமும் விஷமிகளால் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. அன்றைய தினமே அது மீண்டும் நிறுவப்பட்ட போதிலும், தற்போது இரண்டாவது முறையாக உடைத்து எறியப்பட்டுள்ளது. மக்கள் உணர்வுகளுடனும் போராட்டக் கோரிக்கைகளுடனும் தொடர்புடைய ஒரு நினைவுச் சின்னம் தொடர்ந்து இலக்கு வைக்கப்படுவது கவலை அளிக்கிறது. https://globaltamilnews.net/2025/223798/
  6. இதை கவிதைக் களத்தில் இணைக்க மறந்து வீட்டீர்களா கோபி..?
  7. நிலத்தடி நீர் பாதுகாப்புக்கு இன்றியமையாத வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயமாகும் written by admin December 6, 2025 “வழுக்கையாற்றைப் பாதுகாப்பது காலத்தின் கட்டாயம்!” – ஆளுநர் நா.வேதநாயகன். யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாப்பதில் இன்றியமையாத வழுக்கையாற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளுக்கு வடக்கு மாகாண நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்துள்ளார். ‘பங்கேற்புச் செயல் ஆய்வின் ஊடாக நீர் பாதுகாப்பு’ (WASPAR) திட்டத்தின் கீழ், வழுக்கையாறு தொடர்பான ஆய்வின் முடிவுகளை நடைமுறைப்படுத்த இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. 🌊 இயற்கையின் கோபம் அல்ல, நம் தவறு! சுன்னாகத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகளுடனான விசேட கலந்தாய்வில் உரையாற்றிய ஆளுநர், காலநிலை மாற்றம் குறித்துக் கடுமையான கருத்துக்களைப் பகிர்ந்தார்: வழுக்கையாறு போன்ற இயற்கையான நீரோட்டப் பாதைகள் தூர்ந்து போனதும், ஆக்கிரமிக்கப்பட்டதும், பராமரிப்பின்றிக் கிடப்பதுமே இன்றைய பேரிடர்களுக்கு மூல காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 🗺️ வழுக்கையாற்றின் முக்கியத்துவம் என்ன? யாழ். குடாநாட்டின் உயிர்நாடியாக வழுக்கையாறு திகழ்கிறது. மயிலிட்டித்துறையிலிருந்து அராலித்துறை வரை செல்லும் இந்த வடிகால்: நிலத்தடி நீரைச் செறிவூட்டுகிறது: முறையாகப் பராமரித்தால் மட்டுமே வலிகாமம் பகுதியின் கிணறுகளில் நீர் சுரக்கும். உவர் நீர் ஊடுருவலைத் தடுக்கிறது: கடலின் உப்பு நீர் உட்புகுவதைக் கட்டுப்படுத்துகிறது. வெள்ளத் தடுப்பு: கனமழை காலங்களில் வலிகாமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழாமல் இருக்க, இந்த ஆறு தடையின்றி ஓட வேண்டும். 🛠️ அடுத்து வரும் நடவடிக்கைகள்: உலக வங்கியின் நிதியுதவியுடன் அடுத்த ஆண்டு குளங்களைத் தூர்வாரும் செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது. வழுக்கையாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள குளங்களும் இதில் தூர்வாரப்படும். 🤝 மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆளுநரின் வேண்டுகோள்: “யாழ்ப்பாணத்தின் குடிநீருக்கும் விவசாயத்துக்கும் நிலத்தடி நீரே ஆதாரம் என்பதை உணர்ந்து, எமது நீரின் அளவையும் தரத்தையும் பாதுகாப்பது அனைவரதும் பொறுப்பாகும்.” யாழ்ப்பாணத்தின் நீர் வளத்தைக் காக்க, இந்தத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்! https://globaltamilnews.net/2025/223694/
  8. கடந்த வருடம் காலவதியான அரிசியைத் தான் குடுத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல இன்னும் கப்பலில் பொருட்கள் அனுப்ப பட இருக்கிறது என்று செயதிகளில் கேட்க முடிகிறது. கப்பலில் இருந்த பொருட்கள் இலங்கைக்கு அனுப்ப பட்டது என்றால். அவசர நிலையில் எப்படி இலங்கையின் இலச்சினை பைகளில் பொறிக்கப்பட்டது.?
  9. முகப் புத்தகத்திலும் எழுதிப் போட்டு கிடந்தது.தாக்கபட்டு இறந்த இந்த நபரும் அவரது துணைவியாரும் படிக்கும் பிள்ளைகளை தவறான வழிக்கு கொண்டு போகிறார்களாம்.இவரை விட இவரது மனைவியே (போதைகளை விற்று கூடுதலாக) தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் எழுதிஇருந்தது.எதனால் இப்படி நடந்தது என்று யூருப்காரர்களோ , பத்திரிகைகாரர்களோ இவர்களின் அயலவர்களிடம் போய் விசாரித்த போது அவரகளே சொல்லி இருக்கிறார்கள்.இந்தக் குடும்பம் பற்றி.ஊரிலிருப்பவர்களுக்கு இருப்பதை வைத்து வாழ முடியாமலிருக்கிறது.
  10. உங்கள் எழுத்து ஏன் இந்த செய்தியை இங்கு கொண்டு வந்து போட்டேன் என்று இருக்கிறது..
  11. கொட்டும் மழைக்குள் இளைஞன் வெட்டிப் படுகொலை written by admin November 30, 2025 *** யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளாா், திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞன் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். அதன் பிரகாரம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர் , தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் ஆடியபாதம் வீதி ஊடாக தனது வீடு நோக்கி பயணித்த வேளை காவல் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் , திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் அடங்கிய வன்முறை கும்பல் அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து , பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர். தாக்குதலாளிகளிடம் இருந்து உயிரை காக்க வாள் வெட்டு காயங்களுடன் வீதியில் சுமார் 50 மீட்டர் தூரம் ஓடி சென்றவரை ,தாக்குதலாளிகள் துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர். ஓடி சென்றவர் வர்த்தகநிலையம் ஒன்றின் முன்பாக விழுந்த போது,துரத்தி வந்த நால்வரும் சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டதில் , இளைஞனின் கால் ஒன்று கணுக்காலுடன் துண்டாட்டப்பட்டுள்ளது. அதனை அடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , நோயாளர் காவு வண்டியில் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் இளைஞன் உயிரிழந்துள்ளாா். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்பகை காரணமாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களில் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் தாக்குதலாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். https://globaltamilnews.net/2025/223286/
  12. இரவா, பகலா செய்திகளை வந்து பார்த்துட்டு தான் போறனான்.உங்கள் செய்தி இணைப்புக்களுக்கு மிக்க நன்றி ஏராளன்.நீங்களும் பத்திரமாக இருங்கள்.
  13. யாழ் பல்கலை உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளில் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு! ஒரே பார்வையில்! written by admin November 27, 2025 யாழ். பல்கலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வில் மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். கொடிகாமம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , கொடிகாமம் துயிலுமில்லத்தின் முன்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் மேரியனின் தாயான கந்தையா நாகராணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். கோப்பாய் துயிலுமில்லம்! யாழ்ப்பாணம் , கோப்பாய் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தாயான நடேசு தவமணி பொது சுடரினை ஏற்றி வைத்தார். நல்லூர் நினைவாலயத்தில் யாழ்ப்பாணம் ,நல்லூர் மாவீரர் நினைவலையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மாவீரர் கப்டன் பண்டிதரின் தாயார் பொது சுடரினை ஏற்றி வைத்தார். எள்ளங்குளம் துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , வடமராட்சி எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான இரத்தினம் செல்லத்தம்பி பொது சுடரினை ஏற்றி வைத்தார். சாட்டி துயிலுமில்லம் யாழ்ப்பாணம் , தீவகம் சாட்டி துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தலில் மூன்று மாவீரர்களின் தந்தையான செல்லர் அருளம்பலம் பொது சுடரினை ஏற்றி வைத்தார். மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவு கூறும் ‘மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு’ இன்று (27) வியாழன் மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டும் மழையிலும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. -தமிழர் தாயகத்திற்காக உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் வகையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினம் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வருகிறது. அதற்கு அமைவாக மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (27) மாலை மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது . மாலை 6.5 மணியளவில் மாவீரர் ஒருவரின் தாயினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். https://globaltamilnews.net/2025/223152/
  14. லவ் பெயிலியர் அதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பதிவொன்று பார்த்தேன்..🤔
  15. அனைத்து மக்களுக்காகவும் மரணித்த மா வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.🕯️🙏
  16. உங்கள் வீட்டு குட்டி புது வரவுக்கு வாழ்த்துக்கள்.🖐
  17. இளையராஜாவின் காப்புரிமை கோரலுக்கு கங்கை அமரனின் ஆதரவு written by admin November 25, 2025 தமிழ் திரையுலகில் இசையமைப்பாளா் இளையராஜாவின் பாடல்களுக்கான காப்புரிமை (copy right) குறித்த சா்ச்சை எப்போதும் சூடான விவாத பொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது தம்பியும் பிரபல இயக்குநருமான கங்கை அமரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குத் தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாக விளக்கம் அளித்துள்ளார். இளையராஜா தன்னுடைய பாடல்களை சினிமாவில் பயன்படுத்துவதற்கு காப்புரிமை கேட்டுத் தொடர்ந்து வழக்குப் போடுவது குறித்து கங்கை அமரனிடம் கேட்கப்பட்ட போது . ‘ஆமாம் அண்ணன் கேட்பதில் எந்த தவறும் இல்லையே! அண்ணன் என்ன எதிர்பார்க்கிறார்? அவருடைய பாடல்களை இப்போதுள்ள படங்களில் பயன்படுத்தும் போது ‘இந்தப் பாடல் இளையராஜாவுக்குச் சொந்தமானது’ என்று ஒரு நன்றிக் குறிப்பு போடத்தானே கேட்கிறார்? அப்படிப் போடுவதில் என்ன தப்பு இருக்கிறது? அதைச் செய்யாதவர்கள் இடம்தான் இளையராஜா காப்புரிமை கேட்கிறார்’ என தன்னுடைய அண்ணனுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். மேலும் ஒரு பாடலை பயன்படுத்தும் போது ஒரு சில வரிகளை மட்டும் பயன்படுத்தினால் அது காப்புரிமை பட்டியலில் வராது. ஆனால் ஒரு பாடலை அப்படியே முழுவதுமாக பயன்படுத்தும் போது அது கண்டிப்பாக காப்புரிமை என்றுதானே வரும்? ‘ பொட்டு வெச்ச தங்கக்குடம், சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா’ போன்ற பாடல்களை எல்லாம் சிலர் பயன்படுத்துறாங்க. குறைவாகப் பயன்படுத்தினால் கூடப் பரவாயில்லை . முழுப் பாடலையும் பயன்படுத்தினால் தான் பிரச்சனையே வருகிறது’ என கங்கை அமரன் தன் வாதத்தை உறுதிப்படுத்தியுள்ளார். https://globaltamilnews.net/2025/223052/
  18. சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது – நடிகர் ஜெயராம் விசாரனை வளையத்துள்? written by admin November 23, 2025 கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பிரபல நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. விரைவில் விசாரணை நடத்தவும் எஸ்ஐடி திட்டமிட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் கருவறையின் வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க நகை கவசங்கள் 2019ஆம் ஆண்டு கழற்றப்பட்டு செப்பனிடும் பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர் தங்க முலாம் பூசி மீண்டும் அதனை மீண்டும் கோயிலுகு கொண்டு சென்றனர். அப்போது அவற்றின் எடை குறைந்ததாக குற்றம் சாட்டு எழுந்தது.. மேலும் அந்த சிலைகளில் இருந்த தங்கம் திருடப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இந்தக் குற்றச்சாட்டு கேரள சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்க்கட்சிகள் அரசு மீதும், தேவசம் போர்டு மீதும் குற்றம் சாட்டின. இந்த நிலையில் உரிய விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) அமைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தங்க கவசங்களை புதுப்பிக்கும் செலவை ஏற்றுக் கொண்ட பெங்களூர் தொழில் அதிபர் உன்னிகிருஷ்ணன் முதலில் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்திலுள்ள டவுனில் நகைக்கடை நடத்தி வரும் தங்க வியாபாரியான கோவர்தன் நகைக்கடையில் இருந்து 478 கிராம் தங்க நகை மீட்கப்பட்டது. இதற்கிடையில் தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகர் ஜெயராம் மீதும் சர்ச்சை எழுந்தது. 2019-ம் ஆண்டு சபரிமலை ஐய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை வைத்து சென்னையில் நடைபெற்ற ஒரு பூஜையில் அவர் கலந்து கொண்டதே இந்தக் குற்றச்சாட்டுக்கு காரணமாக அமைந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஜெயராம்: “கடந்த 50 ஆண்டுகளாக நான் சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தராக உள்ளேன். கடந்த 2019-ம் ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவில் துவாரபாலகர் சிலைகளை காட்சிப்படுத்திய பூஜையில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் பேரில்தான் அந்த பூஜையில் பங்கேற்றேன். ஆனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு அது தற்போது இப்படி ஒரு பிரச்சினையை தரும் என நான் நினைத்ததில்லை. உண்மை வெளிவரட்டும். நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதன் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் வாசு, பத்மகுமார் மற்றும் சிலர் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வுக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜெயராமிடம் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட இருப்பதாக வெளியாகும் தகவல் சினிமா வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Global Tamil Newsசபரிமலை தங்கக் கடத்தல் விவகாரம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத...கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் உள்ள துவார பாலகர் சிலை தங்கத்…
  19. இன்னும் பல வருடங்கள் ஆயுள், ஆரோக்கியத்தோடு இருவரும் வாழ வேண்டும்.இதை விட வேறு எப்படி சொல்வது.,மிகவும் நெகிழ்வான சந்திப்பாக அமைந்திருக்கும்.!
  20. ஒரு நாட்டுக்கு முதல் தடவையாக வரும் ஒருவர் அதுவும் எங்கள் நாட்டிலிருந்து வருபவர்கள் எதிர் நோக்கும் சட்ட சிக்கல் பற்றி உண்மையாகவே உங்களுக்கு தெரியாது தானா.?.வைத்தியர் அர்ச்சனா ஊர் பாரளமன்றில் எப்படி பேசினாலும் அவர்களுக்கும் பழகி விட்ட போலும், ஆனால் ஒரு புதிய நாட்டுக்கு வரும் போது அனைத்து நடை முறைகளை கடைப்பிடிக்க வேணும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும், அவருக்கும் தெரிந்திருக்கும்.வேணாம்..சில இடங்களில் எழுதுவது சுத்த வேஸ்ட்.
  21. நான் ஐ போண் வழியாக வந்து எழுதி பார்த்து விட்டு தான் இதனை எழுதுகிறேன்.நீங்களும் உங்கள் போண் ஊடாகவே யாழில் உள் வந்து எழுத வேண்டிய பகுதிக்கு கீளே உள்ள பெட்டியில் எழுதி விட்டு, மேலே உள்ள பெட்டியில் கொப்பி பேஸ்ட் செய்யுங்கள்.உங்களுக்கு இலகுவாக இருக்கும் என்பதற்காக இதை எழுதுகிறேன்.மற்றப்படி ஒன்றுமில்லை.
  22. அங்கு ஓரிருவர் கதைத்தால் உடனே கட்சி அரசியலாக்கி இந்த வார கட்டுரைக்கு முதலே எழுதி வைத்திருந்தாரோ? நிலாந்தன்.எடிட் பண்ணும் போது கொஞ்சம் பிழை வருகிறது..பொறுத்துக் கொள்ளுங்கள் ஈழப்பிரியன் அய்யா.மற்றும் ஏராளன். இவரை பற்றி இங்கு ஏதாவது எழுதினால் நமது முகப் புத்தக பக்கம் பெரிய பந்தி, பந்தியாக எழுதி போட்டு விட்டு இருந்து விடுவார்.(அதுவும் இன்பொக்சில்).கடந்த கால அரசியல் , நமக்கே கொஞ்சம் வெறுப்பை தருவது போல் எழுதி போட்டு விட்டுவார்..இப்போ கொஞ்சக் காலத்திற்கு முன் அப்படி ஒன்று வந்து கிடந்தது நான் அதனை நீக்கி விட்டேன்..கமலகாசன் ஒரு திரைப்படததில் பத்திரிகை நிருபராக வருவாரே.இவர்களுக்கு இருக்க கூடிய மரியாதை அவ்வளவு தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.