Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by யாயினி

  1. உள்ளூர் செய்திகள் 1 மணி நேரம் முன் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் :அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட வாக்குறுதி எதிர்வரும் காலங்களில் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் இடம்பெறாது என அமைச்சரவை பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ தமிழ் ஊடகவியலாளர்கள் மாத்திரம் அல்ல சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகம் சார்ந்த ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பாக நாம் கடந்த காலங்களில் கருத்துக்களை வெளியிட்டு இருந்தோம். ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அது தொடர்பாக அரசாங்கம் நிபந்தனைகள் இன்றி செயற்படும். கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடக்கம் படுகொலை செய்யப்பட்ட சகல ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த விசாரணைகள் கடந்த காலங்களில் மறைக்கப்பட்டிருந்தன. அதனை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த நிறுவனத்தின் சேவையிலிருந்து இருந்து அகற்றப்பட்டிருந்தார்கள். அல்லது நாட்டை விட்டு வெளியே செல்லுமாறு வற்புறுத்திய நிலை காணப்பட்டது.அத்துடன், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையவர்கள் தொடர்பான படுகொலைகள் மட்டுமல்ல ஊழல் தொடர்பான சகல விடயங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டவர்கள் கூட நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.நாம் அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பாக தேடிப் பார்த்தபோது காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் போன்றவற்றின் அறிக்கைகளின் பிரகாரம் இவ்வாறான குற்றங்களுடன் தொடர்பான ஆவணங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன. அதனால் நாம் அந்த செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்து முறையாக மேற்கொண்டு வருகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://newuthayan.com/article/ஊடகவியலாளர்கள்_மீதான_படுகொலைகள்_:அரசாங்கத்தால்_அளிக்கப்பட்ட_வாக்குறுதி
  2. கொழும்பு 41 நிமிடம் நேரம் முன் சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனி இடம்- சீனத் தூதுவர் கீ சென் ஹொங் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கு தேவையான சீருடைகளை சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக கையளித்தது. இதற்கான நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் நேற்று நடைபெற்றது. இலங்கை மாணவர்களின் நூறு வீதத் தேவையை பூர்த்தி செய்வதற்காக 5.2 பில்லியன் பெறுமதியான பாடசாலை சீருடைகள் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சீனத் தூதுவர் கீ சென் ஹொங், சீனாவின் இதயத்தில் இலங்கைக்கு எப்போதும் தனித்துவமான இடம் உள்ளது என குறிப்பிட்டார். 2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளை சீனத் தூதுவர் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளித்தார். இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர சேனவிரத்ன, கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய; எமது நாட்டுக்கு கல்வி மிகவும் முக்கியமானது. எமது அரசாங்கமும் அதற்கு முன்னுரிமை அளிக்கிறது. எமது நாட்டின் அபிவிருத்திக்கு கல்வி ஒரு அடிப்படை வழியாக காணப்படுகிறது. எந்தவொரு சமூக பொருளாதார பாகுபாடின்றி தராதரம் பாராமல் அனைத்து பிள்ளைகளும் கண்ணியத்துடன் அணுக கல்வியில் முதலீடு செய்வது அவசியமாகும். அதற்கான பல கருத்திட்டங்களை நாம் ஏற்கனவே முன்வைத்துள்ளோம். நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் அறநெறி பாடசாலைகளுக்கு தேவையான சீருடைகளை சீன அரசாங்கம் கையளித்துள்ளது. சீன அரசாங்கத்தின் இந்த ஒத்துழைப்பு அளப்பரியது. சீன அரசாங்கத்தின் இந்த ஒத்துழைப்புக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம்- என்றார். (ச) https://newuthayan.com/article/சீனாவின்_இதயத்தில்_இலங்கைக்கு_எப்போதும்_தனி_இடம்-__சீனத்_தூதுவர்_கீ_சென்_ஹொங் 55
  3. உள்ளூர் செய்திகள் 2 மணி நேரம் முன் ஆபாச புகைப்படங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட இளைஞன் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறப்படும் இளைஞன் ஒருவன் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் புத்தளம், முந்தல் , பத்துலுஓயா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம், முந்தல், பத்துலுஓயா பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞன் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://newuthayan.com/article/ஆபாச_புகைப்படங்கள்_காணொளிகளை_சமூக_ஊடகங்களில்_வெளியிட்ட_இளைஞன்
  4. கொழும்பு 1 மணி நேரம் முன் தேங்காய் விலை உயர்வுக்கான காரணம் இதுதான் அண்மைக்காலமாக இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதுடன் விலையும் உயர்வடைந்துள்ளமை குறித்து முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கருத்து வெளியிட்டுள்ளார். அதன்படிஇ வருடாந்தம் 200 மில்லியன் தேங்காய்களை குரங்குகள் அழித்தமையே தேங்காய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டமாகஇ இலங்கையின் குரங்குகளை சீன மிருகக்காட்சிசாலைகளுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். ஆனால்இ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்திற்குச் சென்று தடுத்து நிறுத்தி, மரத்தில் புடவை கட்டுதல் தாள்களை தொங்கவிடுதல், நிலத்தின் ஒரு பகுதியை மீண்டும் புல்வெளிக்கு விடுதல் போன்ற நடைமுறைக்கு மாறான தீர்வுகளை வழங்கியதாகவும் இந்த நிலையில் குரங்குகளை சீனாவுக்கு திருப்பி அனுப்ப இன்னும் வாய்ப்பு இருப்பதால் அந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை நாட்டில் கடந்த சில தினங்களாக தேங்காய் 200 முதல் 220 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/தேங்காய்_விலை_உயர்வுக்கான_காரணம்_இதுதான்
  5. தொடர் சுகவீனம்; இளம் தாய் சாவு! ஐந்து நாள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த 33வயதுடைய சுரேஷ்குமார் ரஞ்சிதா என்பவரே உயிரிழந்தவராவார். கடந்த மூன்று தினங்களாக இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பனடோல் உட்கொண்டுள்ளார். காய்ச்சல் குணமடையாத நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது அவர் மயங்கியுள்ள நிலையில் உடனடியாக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார். https://newuthayan.com/article/தொடர்_சுகவீனம்;_இளம்_தாய்_சாவு! யாழ்ப்பாணம் 42 நிமிடம் நேரம் முன் யாழில் பரவி வரும் மர்மக் காய்ச்சல் ; சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு! யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ள நிலையில், இது சுகாதார அதிகாரிகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக‘எலிக்காய்ச்சல்’எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் நோயுடன் இது தொடர்புடையதா என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொற்றாநோய் பிரிவின் மருத்துவர் குமுது வீரகோன் இந்த விடயத்தை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நோயாளிகள் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகளுடன் உள்ளனர். நோய்க்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த சுகாதார அதிகாரிகள் குறிதத் நபர்களிடமிருந்து மாதிரிகளை சேகரித்து வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். இதேவேளை, லெப்டோஸ்பிரோசிஸ் இலங்கையில் தொடர்ந்தும் ஒரு முக்கிய சுகாதார பிரச்சினையாக உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில், நாட்டில் 9ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிக்காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இந்த ஆண்டு பதிவாகிய வழக்குகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவானதை விட அதிகரித்துள்ளதாகவும் மருத்துவர் இதன்போது சுட்டிக்காட்டினார். (ச) https://newuthayan.com/article/யாழில்_பரவி_வரும்_மர்மக்_காய்ச்சல்_;_சுகாதார_அமைச்சின்_தொற்றுநோய்_பிரிவு!
  6. ரணில் அரசாங்கத்தின் சகாக்களின் மதுபானசாலைகளிலிருந்து 7 பில்லியன் ரூபா வரிப்பணத்தை வசூலிக்க நடவடிக்கை - அரசாங்கம் (எம்.மனோசித்ரா) மக்களின் வரிப்பணத்தில் ஓய்வு காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கியமை தொடர்பில் நையாண்டிக் கருத்தினை வெளியிடுவது பொறுத்தமற்றது. அவரது சகாக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களால் நடத்திச் செல்லப்பட்ட மதுபானசாலைகளால் வழங்கப்படவுள்ள 7 பில்லியன் ரூபா வரிப்பணத்தை வசூலிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மதுபானசாலை அனுமதிப்பத்திரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், வருடத்துக்கு 250 - 300 அனுமதிப்பத்திரங்களை வழங்கி அதிலிருந்து கிடைக்கும் வரி வருமானத்தின் ஊடாக வர்த்தகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்டிருந்தார். நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தனது ஓய்வு காலத்தை கழித்துக் கொண்டிருக்கும் ஒருவர் இவ்வாறு நையாண்டிக் கருத்தினை வெளியிடுவது பொறுத்தமற்றது. மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை வழங்குவது சாதாரண விடயமல்ல. இவ்வாறு அனுமதி பத்திரங்களை வழங்கியதன் மூலம் மக்களால் கொள்வனவு செய்யப்பட்ட மதுபான போத்தல்களால் கிடைக்கப் பெற்ற வரிப்பணத்தை சேமிப்பதற்கும் இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுபான போத்தல்களை விற்பனை செய்தமையால் மதுபானசாலை உரிமையாளர்கள் பெற்றுக் கொண்ட வருமானத்துக்கான வரி சுங்கத் திணைக்களத்துக்கு வழங்கப்படவில்லை. அலோசியசுக்கு சொந்தமான 3 நிறுவனங்கள் 2022ஆம் ஆண்டு முதல் வரி செலுத்தவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த போது, தனது சகாக்களால் இதுவரை காலமும் செலுத்தப்படாமலிருந்த வரியை சேகரிப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதேபோன்று அவரது அமைச்சரவையில் அங்கத்துவம் வகித்த அமைச்சர்களால் நிர்வகித்துச் செல்லப்பட்ட மதுபானசாலைகளிலிருந்து 7 பில்லியன் ரூபா வரை வரி செலுத்தப்பட வேண்டியுள்ளது. இவ்வாறு இதுவரை செலுத்தப்படாமலுள்ள வரியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையே நாம் முன்னெடுத்திருக்கின்றோம். அலோசியசுக்கு சொந்தமான 3 நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. செலுத்தப்படாமலுள்ள வரித்தொகைக்கு பதிலாக அவர்களது சொத்துக்களை அரசுடைமையாக்க முடியும் என்று சட்டத்திலிருந்தால் அதற்குரிய நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும். ஆனால் துரதிஷ்டவசமாக அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கான ஏற்பாடுகள் மாத்திரமே சட்டத்தில் காணப்படுகின்றன. மேலும் நிறுவனங்களின் செயற்பாடுகள் செயலிழந்துள்ளன. தேவையேற்படின் அவற்றுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதிப்பத்திரங்களை வழங்கி மதுபானசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில், தென்னை வளர்ப்பினை ஊக்குவித்திருந்தால் அல்லது அதற்கு வழங்கிய முக்கியத்துவத்தை நெல்லை களஞ்சியப்படுத்துவதற்கு வழங்கியிருந்தால் இன்று நாட்டில் இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்காது என்றார்.
  7. ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு அமெரிக்கா பயணத்தடை விதிப்பு! ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரசேகர மற்றும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஆகியோருக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது. இவர்கள் ஊழலில் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு இவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. உதயங்க வீரதுங்க இலங்கைக்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது ஊழல் நடவடிக்கையைத் திட்டமிட்டு முன்னெடுத்து அதனால் நன்மையடைந்துள்ளார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, இலங்கை எயார்பஸ்ஸை அதிக விலைக்குக் கொள்வனவு செய்வதை உறுதி செய்வதற்காக இலஞ்சம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகின்றது. (ச) https://newuthayan.com/article/ஸ்ரீலங்கன்_எயார்_லைன்ஸின்_முன்னாள்_பிரதம_நிறைவேற்று_அதிகாரிக்கு_அமெரிக்கா_பயணத்தடை_விதிப்பு!
  8. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி மட்டக்களப்பில் போராட்டம்! மட்டக்களப்பில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானதுஇ காந்திபூங்காவில் இன்று (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தந்தை செல்வா பூங்கா வீதி சுற்றுவட்டத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நா.உறுப்பினர் வைத்தியர் இ. சிறிநாத். ஞா.சிறிநேசன்இ முன்னாள் நா. உறுப்பினர் பா.அரியேந்திரன் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் நடராசா உட்பட ஆயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவுகள் ஒன்று கூடியுள்ளனர். பின்னர் ஒன்று கூடியவர்கள் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்வர்களின் புகைகப்படங்கள் மற்றும் கொலைகாரர்களால் நீதி வழங்க முடியுமா? நாங்கள் கேட்பது இழைப்பீடையே மரண சான்றிதழையே அல்ல முறையான நீதி விசாரணையைஇ எமது உரிமை எமது எதிர்காலம் எப்போதுஇ எமது உறவுகள் எங்கேஇ என பல வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றுள்ளனர். இதையடுத்துஇ குறித்த ஊர்வலமானது தந்தை செல்வா பூங்கா வீதி சுற்றுவட்டத்திலிருந்து நகர் மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்தையடைந்து காந்திபூங்காவை சென்றடைந்து அதனை தொடர்ந்து காந்திபூங்காவில் 11.00 மணிவரை போராட்டத்தை முன்னெடுத்த போராட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/காணாமல்_ஆக்கப்பட்டோருக்கு_நீதிகோரி_மட்டக்களப்பில்_போராட்டம்!
  9. அதிகரிக்கும் கேக்கின் விலை! எதிர்வரும் பண்டிகை காலத்தில் கேக் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறியுள்ளார். கேக் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை மற்றும் வரி அதிகமாக இருப்பதால் கேக் தயாரிப்பில் அதிக செலவு ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படிகேக் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான நல்லெண்ணெய் கோதுமை மா முட்டை உள்ளிட்டவற்றின் விலை குறைக்கப்பட்டால் கேக் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியும் என அவர் கூறியுள்ளார். அத்துடன், இந்த நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு புதிய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சரிடம் தமது சங்கம் சந்தர்ப்பம் கோரிய போதிலும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்கான கேக்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும், தற்போது சந்தையில் ஒரு கிலோ தரமான கேக்குகள் ஆயிரம் ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். https://newuthayan.com/article/அதிகரிக்கும்_கேக்கின்_விலை!
  10. அரச பங்களா தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் பங்களா வீடுகள், விசும்பாய மற்றும் பல்வேறு பிரதேசங்களில் உள்ள ஜனாதிபதி மாளிகைகளை பாவிப்பதற்காக பொருத்தமான முறைமையை அறிமுகம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொது நிர்வாகஇ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் 50 அரச சுற்றுலா மாளிகை மனைகள் கொழும்பு 7 மற்றும் கொழும்பு 5 ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ளன. முன்னாள் ஜனாதிபதிகள்இ அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு மேற்குறித்த மாளிகை மனைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் கொழும்புஇ கண்டிஇ நுவரெலியஇ மஹியங்கனை, அனுராதபுரம்இ கதிர்காமம், யாழ்ப்பாணம், எம்பிலிப்பிட்டிய மற்றும் பெருந்தோட்டப் பிரதேசங்களிலுள்ள ஜனாதிபதி மாளிகைகள் தவிர ஏனைய ஜனாதிபதி மாளிகைகள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுவதில்லை. அதற்கு மேலதிகமாக பல அரச தலைவர்களின் உத்தியோகபூர்வ விடுதிகளாகப் பயன்படுத்தப்பட்ட கொழும்பு 2 இல் அமைந்துள்ள விசும்பாய தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிர்வாக அதிகாரத்தின் கீழுள்ளதுடன் பிரதமர் அலவலகத்தின் நிர்வாக அதிகாரத்தின் கீழ் நுவரெலியா பிரதமருக்கான உத்தியோகபூர்வ விடுதி உள்ளது. மேற்குறித்த அரச சொத்துக்களின் பராமரிப்புக்காக பெருமளவு நிதி செலவிடப்படுகின்ற போதிலும்இ குறித்த சொத்துக்கள் குறை பயன்பாட்டில் காணப்படுகின்றன. எனவே மேற்குறித்த வளாகங்கள் மற்றும் வீடுகளை பொருளாதார ரீதியில் உற்பத்தித்திறனாக பயன்படுத்தக்கூடிய வகையில் பொருத்தமான முறைமையை முன்மொழிவதற்கான அதிகாரிகள் குழுவை நியமிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பொது நிர்வாகஇ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/அரச_பங்களா_தொடர்பில்_எடுக்கப்பட்டுள்ள_தீர்மானம்
  11. மீண்டும் ஒன்றிணையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இனம்சார்ந்த விடுதலையினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற வகையில் நாம் தமிழ்தேசிய கூட்டமைப்பாக ஒன்றிணைய வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெறப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் இன்றையதினம் (10) கழகங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. வவுனியாவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருடன்கலந்துரையாடல் ஒன்றை இன்று நடாத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம். எமது நாடாளுமன்றக் குழுவில் ஒரு ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த ஒற்றுமை இல்லாமையினால் எமது தேசத்தில் பல மாற்றங்கள் உருவாகியுள்ளது. அது தொடர்ந்தால் இங்கு இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுவிடும். எனவே இனம்சார்ந்த விடுதலையினை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற வகையிலே நாம் ஒன்றிணைய வேண்டும். ஒன்றிணைந்தால் மக்கள் எங்களுடன் நிற்பார்கள். எனவே நாடாளுமன்றுக்குள்ளும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாக சேர்ந்து பொதுவிடயங்களில் ஒன்றாக குரல்கொடுக்கும் நிலையினை ஏற்படுத்தவேண்டும். அத்துடன் வடகிழக்கில் முன்னர் ஒன்றாக இருந்த கட்சிகளை மீள ஒன்றிணைத்து தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயற்படலாமா என்பது தொடர்பிலும் பேசிக்கொண்டிருக்கிறோம். அத்துடன் பெருவாரியான வாக்குகளை பெற்ற இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி பேசியபோது ஒருமணி கூட வெளியில் இருந்து இறக்குமதி செய்ய மாட்டோம் என்று சொல்லியிருந்தார். ஆனால் இன்று நிலைமை மாறி இறக்குமதி செய்யும் சூழல் வந்துள்ளது. சர்வதேச நாணய நிதிய விடயத்தில் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்காமல் இவர்கள் கையொயப்பம் இட்டுள்ளனர். எனவே இந்த நிலைமையில் அரசாங்கம் சென்றால் மீண்டும் வரிசையுகம் வரும் சந்தர்ப்பம் ஏற்படும். எனவே அரசாங்கம் நிதானமாக செயற்படவேண்டும். இன்று சாதாரண மக்கள் கூட தேங்காய் வாங்கமுடியாத நிலமை ஏற்ப்பட்டுள்ளது. எனவே ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் சூழலை மாற்றவேண்டும்” என தெரிவித்தார். https://newuthayan.com/article/மீண்டும்_ஒன்றிணையும்__தமிழ்தேசிய_கூட்டமைப்பு
  12. மூடப்படும் ஆயிரக்கணக்கான மதுபான சாலைகள் பல மதுபான ஆலைகள் மற்றும் மதுபானக் கடைகள் வரி செலுத்தாததால், 2025ம் ஆண்டுக்கான மதுவரி உரிமம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடளாவிய ரீதியில் சுமார் நான்காயிரத்து 500 மதுபான நிறுவனங்கள் மற்றும் மதுபானசாலைகள் உள்ளதாகவும் தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான உரிமங்களை சுமார் 200 பேருக்கு பெற்றுக்கொள்வதற்கான வரி அனுமதி அறிக்கைகளை உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடம் இருந்து மதுவரி திணைக்களம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், நிர்ணயிக்கப்பட்ட முறையில் வரி செலுத்தியவர்களின் அனுமதி அறிக்கைகளை உள்நாட்டு இறைவரி திணைக்களம் மதுவரி திணைக்களத்திற்கு வழங்கும் என மதுபான அனுமதிப்பத்திரம் பெறுவோர் சங்கத்தின் தவிசாளர் அஜித் உடுகம தெரிவித்துள்ளார். அத்தோடு, இதுவரை செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தாதவர்களும் உரிய வரியைச் செலுத்தி அதற்கான தகுதிகளைப் பெற்று அனுமதி அறிக்கைகளை அனுப்புமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதேவேளை, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடந்த வருடங்களில் பல்வேறு முறைகளின் மூலம் கலால் திணைக்களத்திற்கு அனுமதி அறிக்கைகளை அனுப்பிய போதிலும், இம்முறை அவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாதது மதுவரி திணைக்களத்திற்கு அனுமதி அறிக்கைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். https://newuthayan.com/article/மூடப்படும்_ஆயிரக்கணக்கான_மதுபான_சாலைகள்
  13. யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கே பதில் சொல்ல மறுக்கும் சொல்ல முடியாது போ என மிரட்டும் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!! அங்கே சிகிச்சை பெறுகின்ற மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற பொழுது அவர்களுக்கு பதில் அளிப்பாரா??? இல்லை என்பதை இதன் மூலம் நமக்கு தெளிவாக தெரிகின்றது . இவ்வாறான யாழ் போதன வைத்தியசாலை பணிப்பாளராக இவ்வளவு காலம் பணியாற்றுகிறார் என்றால் அவர்கள் பின்னால் அரசியல் செல்வாக்கு இருக்கின்றது என்றே பொருள்படும். வைத்தியர் Mp Archchuna Ramanathan கேட்க்கும் வினாவுக்கு அவர் பதில் சொல்லியிருந்தால் இவ்வளவு பிரச்சினை வராது. நாயை வெளியேற்றுவது போல் பாதுகாப்பு அதிகாரியை பணிக்கின்றார் உண்மையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உரிய மரியாதை கொடுத்து தான் ஆக வேண்டும் யாராக இருந்தாலும். வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற ஊழியர்கள் தொடர்பான பிரச்சனை தொடர்பாக வினாவுவதற்காக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால்!!!! ஒரு அநீதி இடம்பெறும் போது அதனை கேள்வி கேட்க வினாவுவதற்கு பொதுமக்களுக்கு உரிமை இருக்கின்றதா இல்லை!!! சிகிச்சையின் போது இடம்பெறுகின்ற கொலைகள் எந்த கணக்கில் காட்டப்படுகின்றதோ?? ஒவ்வொரு உயிரிழப்புக்கு பின்னால் அவர்களது குடும்பம் படுகின்ற வேதனைகள் சொல்லன்னா துயரங்கள் அவர்களை நம்பி இருக்கின்ற குடும்பத்தின் நிலை யாராவது எண்ணி பார்த்து இருக்கிறீர்களா?? யாழ் போதானா வைத்தியசாலை பணிப்பாளரின் இவருடைய மனநிலையில் குறைபாடு இருக்கின்றது. வைத்தியசாலை பணிப்பாளருக்கு உரிய மரியாதை அவர் அனைவரிடமும் எதிர்பார்ப்பது போல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை கொடுத்துத்தான் ஆக வேண்டும் இல்லை என்று அடம் பிடிப்பது எவ்வாறு??? பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்டு வைத்தியரை வெளியேற்ற முயல்வதா அவரது செயற்பாடு!!!! உரியவர்கள் வினாவுகின்ற பொழுது அதற்குரிய பதிலை கொடுத்திருக்க வேண்டும் அல்லவா??? ஒரு பதவி நிலை அதிகாரியாக இருந்தால் சரியான முறையில் பதில்களை வழங்குதல் வேண்டும்.. அனைவருக்கும் இதனை பகிர்வதன் மூலம் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்...... Ramanathan ArchchunaAll reactio
  14. நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின்சாரசபைக்கு செலவு குறைவு; மின் கட்டணத்தைக் கண்டு முதலீட்டாளர்கள் பதறி ஓடுகின்றனர் - நளின் பண்டார சாடல் 10 Dec, 2024 | 02:07 AM (எம்.மனோசித்ரா) நீர் மின் உற்பத்தியினுடாக 65 சதவீத மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால் இலங்கை மின்சாரசபைக்கு செலவு குறைவடைந்துள்ளது. இதனால் பாரிய இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் ஏன் மின் கட்டணத்தை குறைக்க முடியாது. இலங்கையின் மின் கட்டணத்தைக் கண்டு முதலீட்டாளர்கள் பதறி ஓடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். திங்கட்கிழமை (9) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், வருடத்துக்கு இரு திருத்தங்கள் எனக் காணப்பட்ட முறைமை ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் 4 ஆக அதிகரிக்கப்பட்டது. ஒக்டோபரில் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். எனினும் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. எனினும் ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய ஜனவரியில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது. கடந்த மார்ச்சில் 4 சதவீதம் மாத்திரமே மின் கட்டணத்தை குறைக்க முடியும் என்று இலங்கை மின்சாரசபை கூறிய போது, இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலையிட்டு 21 சதவீத கட்டண குறைப்பினை பாவனையாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தது. ஜூலையிம் மின்சாரசபை 4 சதவீதம் எனக் கூறிய போதிலும், 22.9 சதவீத கட்டண குறைப்பினை மேற்கொள்வதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது. தற்போது 65 சதவீதம் நீர் மின் உற்பத்தியே இடம்பெறுகிறது. மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஊடாக 17 சதவீத மின் உற்பத்தி இடம்பெறுகிறது. நிலக்கரி உள்ளிட்ட செலவு குறைந்த முறைமை ஊடாக குறிப்பிட்டளவு மின் உற்பத்தி இடம்பெறும் அதேவேளை, 5 சதவீத மின் உற்பத்தி மாத்திரமே எரிபொருட்களால் இடம்பெறுகிறது. நீர்மின் உற்பத்தியின் போது ஒரு மின் அலகுக்கு 57.85 சதத்துக்கும் 2.50 ரூபாவே செலவாகிறது. ஆனால் எரிபொருள் ஊடான மின் உற்பத்திக்கு அலகொன்றுக்கு 105 ரூபா வரை செலவிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது 65 சதவீதம் நீர் மின் உற்பத்தி என்பதால் மின்சாரசபைக்கு பாரிய தொகை மிஞ்சுகிறது. ஜே.வி.பி.யினரால் 76 ஆண்டுகள் சாபக் காலம் எனக் கூறப்படும் காலகட்டத்தில் அமைக்கப்பட்ட விக்டோரியா, ரந்தெனிகல, ரன்தம்பே, சமனலவாவி, கொத்மலை நீர் தேக்கங்களாலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நன்மையை அனுபவிக்கிறது. தேர்தல் மேடைகளில் 30 சதவீதமாக மின் கட்டணம் குறைக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஆனால் அவ்வாறு 30 சதவீதத்தால் மின் கட்டணத்தை குறைப்பதற்கு 3 ஆண்டுகள் செல்லும் என்று வசந்த சமரசிங்க குறிப்பிடுகின்றார். மின் கட்டண திருத்தம் குறித்த தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் வசந்த சமரசிங்கவுக்கு இல்லை என்பதை கூட அவர் அறியாமலிருக்கின்றார். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கே அந்த அதிகாரம் இருக்கிறது. மின் கட்டண அதிகரிப்பால் சாதாரண மக்கள் மாத்திரமின்றி, சிறு மற்றும் பாரிய தொழிற்சாலைகளை நடத்துவோரும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றார். ஆனால் அவர்கள் மின் கட்டணத்தைப் பார்த்து பதறி ஓடுகின்றனர். எனவே மக்களை ஏமாற்ற முயற்சிக்காமல் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மின் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
  15. அமைச்சரவையில் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை குறித்து டில்வினனிடம் கரிசனையை வெளிப்படுத்திய ஷுரா சபையினர் 10 Dec, 2024 | 02:11 AM தேசிய ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் முக்கிய கட்டமைப்பான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் தேசிய ஷுரா சபை பிரதிநிதிகள், இதுகுறித்து விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வாவை கடந்த வெள்ளிக்கிழமை (6) சந்தித்த தேசிய ஷுரா சபையின் பிரதிநிதிகள், தேசிய மற்றும் சமூக மட்டத்திலான பிரச்சினைகள் குறித்து பரந்துபட்ட அடிப்படையில் கலந்துரையாடியிருந்தனர். இதன்போது பொருளாதார மீட்சியை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத்தயாராக இருப்பதாக தெரிவித்த அப்பிரதிநிதிகள், முன்னுரிமை வழங்கி தீர்வுகாணப்படவேண்டிய 27 விடயங்களை உள்ளடக்கி தாம் ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளர்களிடம் வழங்கியிருந்த ஆவணத்தை டில்வின் சில்வாவிடம் கையளித்தனர். அதேபோன்று கல்வி, பொருளாதாரம், அரசியல் உள்ளடங்கலாக நாட்டின் சகல துறைகளுக்கும் அவசியமான பங்களிப்பை வழங்கக்கூடிய அறிவும் திறனும் உடைய பலர் முஸ்லிம் சமூகத்துக்குள் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்தோடு நாட்டின் முன்னேற்றத்தை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விதமாக சமூக மட்டத்திலான கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர். அதேவேளை தேசிய ரீதியில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் முக்கிய கட்டமைப்பான அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்படாமை தொடர்பில் தமது சமூகம் கொண்டிருக்கும் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய அப்பிரதிநிதிகள், இதுகுறித்து விசேட அவதானம் செலுத்தப்படவேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினர். மேலும் அராபிய மற்றும் இஸ்லாமிய நாடுகளில் சுமார் 20 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் பணிபுரிவதாகவும், வருடாந்தம் வெளிநாடுகளில் பணிபுரிவோரால் நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படும் பணத்தில் அவர்களது பங்களிப்பு 85 சதவீதமாகக் காணப்படுவதாகவும் டில்வின் சில்வாவிடம் சுட்டிக்காட்டிய அவர்கள், எனவே இந்நாடுகளுடன் வலுவான தொடர்பைப் பேணவேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தனர்.
  16. அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல் சூழ்ச்சி; அமைச்சர் வசந்த சமரசிங்க 10 Dec, 2024 | 12:53 AM (இராஜதுரை ஹஷான்) தேர்தலில் படுதோல்வியடைந்த தரப்பினர் அனைவரும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்க சூழ்ச்சி செய்கின்றனரென வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். அரிசி தட்டுப்பாட்டின் பின்னணியில் பாரிய அரசியல் சூழ்ச்சி உள்ளது. அனைத்து சூழ்ச்சிகளையும் சட்டத்தின் ஊடாக தோற்கடிப்போம் என்றும் குறிப்பிட்டார். அரிசி, தேங்காய் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர், அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரிசி உற்பத்தியாளர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதோ அல்லது அவர்களின் தொழிற்றுறையை கேள்விக்குள்ளாக்குவதோ எமது நோக்கமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லை கொள்வனவு செய்து அவற்றை அரிசியாக்குவதற்கான புதிய திட்டங்களை அரச கட்டமைப்பில் முன்னெடுப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்களின் மாபியாக்களுக்கு ஒருபோதும் அடிபணிய போவதில்லை என்றார்.
  17. பெருவணிகர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு இடமளிக்காதீர்கள் - அரசாங்கத்திடம் மக்கள் போராட்ட முன்னணி வலியுறுத்தல் 10 Dec, 2024 | 02:14 AM (நா.தனுஜா) சிறார்கள் மத்தியில் மந்தபோசணை நிலை மிக உயர்வான மட்டத்தில் காணப்படும் இலங்கையில், பேரளவு அரிசி உற்பத்தியாளர்கள் அரிசி உற்பத்தியை வியாபாரமாக்குவதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது என மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தரிந்து உடுவரகெதர வலியுறுத்தியுள்ளார். அரிசிக்கான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணியினால் திங்கட்கிழமை (9) கொழும்பு லயன்ஸ் கிளப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: அரிசி விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிரடித் தீர்மானங்களை மேற்கொள்வதைப் பார்த்தோம். ஆனால் சந்தையில் அரிசி இல்லை. இருக்கின்ற அரிசியின் அளவு போதுமானதாக இல்லை தற்போது அரிசி தட்டுப்பாட்டுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களைக் கூறுகிறார்கள். ஆனால் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் கடந்த ஆண்டுகளில் நாம் தேவையை விட அதிகமாக அரிசியை உற்பத்தி செய்திருக்கிறோம். அவ்வாறிருக்கையில் இப்போது அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பேரளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் அரிசியைத் திட்டமிட்டுப் பதுக்கியிருக்கிறார்கள். அதனூடாக அவர்கள் அதிக இலாபமீட்டுவதற்கு முனைகிறார்கள். இலங்கையின் நுகர்வோர் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம் பொருட்களை விற்பனை செய்யாமல் பதுக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் தற்போது இச்சட்டம் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஆகையிலேயே உற்பத்தியாளர்கள் இவ்வாறான முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இப்போது அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு அமைவாக அரிசி உற்பத்தியாளர்கள் ஒரு கிலோ அரிசி விற்பனையின் ஊடாக 50 ரூபாவுக்கும் மேல் வருமானமீட்டுகிறார்கள். அவ்வாறிருக்கையில் டட்லி சிறிசேன ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி, உண்மைக்குப் புறம்பான விடயங்களைக் கூறுகிறார். இந்நிலையில் அதிகாரிகள் ஊடாக அரிசி ஆலைகளில் சோதனை நடாத்தவிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற வேடிக்கை நடவடிக்கைகள் அவசியமற்றவை. மாறாக மந்தபோசணை உயர்வாகக் காணப்படும் இலங்கையில், இனினும் அரிசி உற்பத்தியை வியாபாரமாக மாற்ற இடமளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
  18. உதயங்க வீரதுங்க கபிலசந்திரசேனவிற்கு அமெரிக்கா பயணத்தடை – ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு 10 Dec, 2024 | 05:47 AM ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும் குறிப்பிடத்தக்க ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதித்துள்ளது.
  19. உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கவில்லை - ரணில் 10 Dec, 2024 | 02:33 AM மதுபான அனுமதிப்பத்திரங்கள் உரிய முறைக்கு புறம்பாக எவருக்கும் வழங்கவில்லை எனவும், குறித்த அனுமதிப்பத்திரத்தால் அரசாங்கம் 3 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க மதுபான அனுமதிப்பத்திரங்களை அரசியல் இலஞ்சமாக பெற்றுக் கொடுத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட முறைக்கு புறம்பாக ஒரு கலால் அனுமதிப்பத்திரம் கூட வழங்கப்படவில்லை எனவும், புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதன் மூலம் இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பின்பற்றப்பட்ட முறையின் சட்டபூர்வமான தன்மையை தேர்தல்கள் ஆணைக்குழு 2024 ஓகஸ்ட் 19 ஆம் திகதி கலால் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பிய கடிதத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. முறையான வருமானம் ஈட்டும் கலால் உரிமங்களை தொடரவோ அல்லது ரத்து செய்யவோ தற்போதைய அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  20. திடீர் காய்ச்சலால் யாழ்.போதனாவில் மூவர் உயிரிழப்பு எலிக்காய்ச்சலா என சந்தேகம் திடீர் காய்ச்சல் காரணமாக யாழ் . போதனா வைத்தியசாலையில் மூவர் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் சாதாரண காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் மந்திகை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அதேபோன்று காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் கிளிநொச்சி மருத்துவனையில் சேர்க்கப்பட்டிருந்த 28 வயதுடைய ஒருவரும் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அத்துடன், நாவற்குழி பகுதியை சேர்ந்த ஒருவரும் காய்ச்சல், இருமல் அறிகுறிகளுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர்கள் மூவரின் காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில் மூவரும் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்புக்கு எலிக்காய்ச்சல் அல்லது உண்ணிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கூற்று மாதிரிகள் சட்டமருத்துவ அதிகாரியால் மேலதிக பரிசோதனைகளுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, இரு நாள்களுக்குள் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகளை சாதாரண விடயமாகக் கடந்துவிட முடியாது. கடுமையான சுவாசத் தொகுதி பாதிப்புக் காரணமாகவே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. கடந்த சில நாள்களாக வடக்கில் கடும் மழை பெய்திருக்கும் நிலையில் எலிக்காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கின்றன. ஆனால் இந்த உயிரிழப்புக்களுக்குக் எலிக்காய்ச்சல் காரணம் என்று இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. உண்ணிக்காய்ச்சல் அல்லது ஏதேனும் வைரஸ் காய்ச்சல்கூடக் காரணமாக இருக்கலாம். கொழும்பில் இருந்து ஆய்வறிக்கை வந்தபின்னரே காரணத்தைச் சரியாகக் கூறமுடியும். ஆயினும், பொதுமக்கள் இதுதொடர்பாக விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம். பொதுமக்கள் சுகாதாரத்தைச் சரியாகப் பேணிச் செயற்பட வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம் மற்றும் சுத்தமான குடிதண்ணீர் பாவனை அவசியமானது. அத்துடன் காய்ச்சல், இருமல் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாககத் தகுதிவாய்ந்த மருத்துவரை நாடி உரிய சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/209108/
  21. கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 1.1 மில்லியன் ரூபாயை மோசடி செய்தவர் கைது! பணத்தை 16 பேரிடம் பெற்று மோசடி செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் வவுனியா, மன்னார், மாங்குளம், கிளிநொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வசித்து வந்தவர்களிடம் நபர் ஒருவர் கனடாவில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்கு வேலைக்கு அனுப்புவதாகவும், முதல் கட்டமாக ஒரு தொகைப் பணத்தை தருமாறும், மிகுதிப் பணத்தை கனடா சென்று வேலை செய்து கொடுக்கலாம் எனவும் கூறி பணம் பெற்றுள்ளார். அந்த வகையில் 16 பேரிடமும் 5 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்று 1 கோடி 10 இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட 16 பேரும் வவுனியா காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2024/209114/
  22. இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.இலங்கையில் கடவுச்சீட்டு பணிகளைத் துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/313390
  23. யாழில் நாளை பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை நாளை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதன்படி, இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் சேவையும் இடம்பெறவுள்ளதாக மாவட்டச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை பிறப்புச் சான்றிதழ் பெறாதவர்கள் உரிய ஆவணங்களுடன் நாளை சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்டச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். https://thinakkural.lk/article/313413
  24. எம்.பி.யின் வாகனத்தில் மோதிய பெண் உயிரிழப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி, வென்னப்புவ பகுதியில் பெண் பாதசாரி ஒருவரை மோதியதில் அவர் உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 70 வயதுடைய யாசகம் செய்யும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (8) பிற்பகல் கொழும்பு – புத்தளம் வீதியில் போலவத்தை சந்தியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் சாரதியான 60 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். https://thinakkural.lk/article/313374

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.