Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9545
  • Joined

  • Days Won

    16

Everything posted by யாயினி

  1. இவர்கள் இயற்கை ( youtube family) உபாதைக்கு போவதை மட்டும் தான் பப்ளிக்கில் போடமல் இருக்கிறார்கள்..காலப் போக்கில் அதுவும் போடுவார்கள்..🤑
  2.  
    வினாயகர் சதுர்த்தி....✍️
     
    May be an image of 1 person
    1. யாயினி

      யாயினி

      இந்தோனேசியாவின் பாத்தாம் தீவினில் அமிர்தபுவனத் திருக்கோவில் என்ற பழைமையான கோவில் ஒன்றுள்ளது. முழுவதும் வெண்மையான மாவுக்கல்லில் செதுக்கப்பட்ட பேரழகு பிள்ளையார்.
      May be an image of monument and temple
       
      படித்ததிலிருந்து...........
       
       
  3. எது எப்படி இருப்பினும் மருத்துவதுறை சார்ந்தவர்கள் பொறுப்புணர்வோடு நடந்திருக்க வேண்டும்.. வாழ வேண்டிய பிள்ளையின் எதிர்காலத்தை யோசித்து பாருங்கள்.. தாதி தருணம் பார்த்து தனக்கும் சக பணியாளருக்மிடையேயான பிரச்சனையையே முக்கியப்படுத்திக் கொள்கிறார்...
  4. படித்ததும் மனதை என்னமோ செய்கிறது.😌பகிர்வுக்கு நன்றி✍👋
  5. எனக்கு ஒரு ஆசை.🤭.இந்தப் பக்கம் உலாவுற அப்புமாரின், ஆச்சிமாரையும் வர வைக்க வேணும்..😄
  6.  

    1. யாயினி
    2. யாயினி

      யாயினி

      வாழும் போது அடுத்தவன் உதவி தேவைப்படாமல் இருக்கலாம் உதவி இல்லாமல் வாழ்த்திடலாம்.
      ஆனால் போகும் போது அடுத்தவன் உதவியோட தான் போறோம்
      இறுதியில் நமக்கு உதவ போகும் அந்த அடுத்தவன் யார் என்று தெரியாமலே அந்த அடுத்தவனுக்கு நன்றி சொல்லாமலே இந்த உலகத்தில் இருந்து போய் விடுகின்றோம்.
      ஆகையால் வாழும் காலங்களில் அடுத்தவனின் மனசை கஷ்டப்படுத்தாமல் அவரவர்க்கு பிடித்த வாழ்கை வாழ்ந்துவிட்டு போகட்டும் என்று விட்டு விட்டு தலைக்கனம் இல்லாமல் அன்பாக பழகி அன்பாக விடைக்கொடுத்து நாமும் விடைபெறுவோம்🙏
       
      படித்ததிலிருந்து.........
       
  7. மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம்
    May be a doodle of text that says 'எந்த ஏற்றத்துக்கும் ஒரு இறக்கம் உண்டு, எந்தத் துன்பத்துக்கும் ஒரு இறுதி உண்டு, எந்த முயற்சிக்கும் ஒரு பலன உணடு. -சுப்பிரமணிய பாரதியார்'
     
     
     
     
  8. தாத்தா பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தாத்தா..வீட்டை நிக்க முடியாதளவுக்கு வேலை கூடத் தாத்தா அதனால் இங்காலைப் பக்கம் வாறது ரொம்ப குறைவு..🖐️
  9. சரி கார் வாங்கியாச்சோ இல்லயோ எதுக்கும் பாத்து ஓட்டுங்கோ..தண்டவாளங்கள் யாக்கிரதை.🖐️
  10. அப்படியே காது ஏன் திடிரென்று கேட்கும் திறனை இளக்கிறது என்பது பற்றியும் அறியத் தந்தால் நன்றாக இருக்கும்.எனக்கு தான் சில மாதங்களாக ஒரே உடல் நலமின்றி போய் விடுகிறது.எனது வைத்தியர் ஏதோ ஸ்பிறே மற்றும் மாத்திரை எல்லாம் தந்தார் அதனைப் பாவிக்கும் போது பக்க விளைவாக அலர்ஜி வந்து அவதிபட்டு விட்டேன்.
  11. 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு வனத்தை உருவாக்கியுள்ள மணிப்பூர் நபர்!

    மொய்ரெங்தெம் லோயா மருத்து விற்பனை வேலையை ராஜினாமா செய்துவிட்டு மணிப்பூரின் புன்ஷிலோக் பகுதியில் 17 ஆண்டுகள் செலவிட்டு காட்டை உருவாக்கியுள்ளார்.

     

    உலகம் முழுவதும் மனித நடவடிக்கைகளால் காடுகள் அழிந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமேசானில் காட்டுத்தீ ஏற்படுகிறது. இதற்கு விவசாயிகள், தொழிலதிபர்கள் மற்றும் வணிக பங்குதாரர்களே காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால் பலர் இத்தகைய நிலையை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

    மும்பையின் ஆரே வனப்பகுதியில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கான கார் நிறுத்தம் அமைப்பதற்காக மரங்கள் வெட்டப்பட அனுமதியளிக்கப்பட்டதால் இந்த வனப்பகுதியைப் பாதுகாக்க மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறுகிறது. பல தனிநபர்களும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பங்களித்து மற்றவர்களுக்கும் உந்துதலளிக்கின்றனர்.

    மணிப்பூரைச் சேர்ந்த மொய்ரெங்தெம் லோயா, லங்கோல் மலைப்பகுதியில் உள்ள புன்ஷிலோக் காட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் ஒரு வனத்தை உருவாக்கியுள்ளார். 45 வயதான இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றவர்களின் உதவியின்றி தனிநபராக இதைச் செய்துள்ளார். ஏஎன்ஐ உடனான உரையாடலில் கூறும்போது , “இன்று இந்த காட்டின் பரப்பளவு 300 ஏக்கர். இங்கு 250 வகையான செடிகளும் 25 வகையான மூங்கிலும் வளர்கிறது. இங்கு பல்வேறு பறவைகளும் பாம்புகளும் காட்டு விலங்குகளும் உள்ளன,” என்றார். மொய்ரெங்தெமிற்கு சிறு வயது முதலே செடிகள் மற்றும் மரங்கள் மீது ஆர்வம் இருந்து வருகிறது. ”நான் என்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துத் திரும்பியபோது என்னுடைய பகுதியில் இருந்த காடு முழுவதும் அழிந்திருந்ததைப் பார்த்தேன். சிறு செடிகள் மட்டுமே இருந்தது.

    இதைக் கண்டு நான் அதிர்ந்தேன். சுற்றுச்சூழலுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்கிற ஆர்வத்தை இதுவே தூண்டியது,” என்றார். மொய்ரெங்தெம் விரைவிலேயே மருந்து விற்பனை வேலையை ராஜினாமா செய்துவிட்டார். புன்ஷிலோக் பகுதியில் ஒரு சிறு குடிசையை கட்டி வாழத் தொடங்கினார். சுமார் ஆறாண்டுகள் அங்கு தங்கி மூங்கில், ஓக் மரம், அத்தி, மாக்னோலியா, தேக்கு, பலா என பல வகையான மரங்களை நட்டுள்ளார். எனினும் இது எளிதாக இருக்கவில்லை.

    உள்ளூரில் விறகு சேகரிப்பவர்கள் மற்றும் வேட்டையாடுபவர்களிடம் இருந்து மொய்ரெங்தெம் கடும் எதிர்ப்பை சந்தித்தார். மரங்களை வெட்டுவதால் ஏற்படும் சேதங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து தனது நோக்கத்தை நிறைவேற்றினார்.

    மொய்ரெங்தெமின் முயற்சிகள் முதன்மை தலைமை பாதுகாவலர் கெரெய்ல்ஹோவி அங்கமி உள்ளிட்ட பலரது பாராட்டைப் பெற்றது. கெரெய்ல்ஹோவி கூறும்போது, ”அவரது முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். சுற்றுச்சூழலை பாதுகாத்து காடு வளர்ப்பில் ஈடுபடுபவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

    மற்றவர்களும் காடுகளை பாதுகாத்து மீட்டெடுக்க ஊக்குவிக்கிறோம்,” என்றார். மணிப்பூரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி வாலண்டினா எலங்பம் வளர்த்து வந்த இரண்டு மரங்கள் வெட்டப்பட்டபோது அவர் அழுத வீடியோ வெளியானது. இதனால் இந்த ஆண்டு துவக்கத்தில் மணிப்பூர் முதலமைச்சர் பைரன்சிங் அவர்களால் பசுமை மணிப்பூர் திட்டத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டு தலைப்புச் செய்திகளில் இவர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

    Read more at: https://yourstory.com/tamil/manipur-man-who-created-forest-of-300-acres?fbclid=IwAR3NKB46W95IiDeJtJD40s51j8_O4Oti4aQi1p3giQG1J9bd5IK1tPS1oV8

  12. ஜூன் 20, 2023. இன்று உலக அகதிகள் தினம்
    ==================================
    May be an image of 4 people and text that says 'WORLD REFUGEE DAY'
     
     
    நாங்களும் அகதிகள் தான்..
     
     
  13. வேகத்தின் விலை
    நடிகர் மம்முட்டி.
    நடிகர் மம்முட்டி தன் வாழ்வில் சந்தித்த முக்கியமான மனிதர்களையும், மறக்க முடியாத நினைவுகளையும், இறக்கி வைக்கமுடியாத காட்சிகளையும் காழ்ச்சப்பாடு,என்ற கட்டுரைத் தொகுப்பாக மலையாளத்தில் எழுதியிருக்கிறார். அதனை மூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள்”
    என்ற பெயரில் கே.வி.ஷைலஜா தமிழில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.
    இந்த புத்தகத்தில் 23 கட்டுரைகள் இருக்கின்றது. அனைத்து கட்டுரைகளும்
    நம் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் வகையிலே அமைந்துள்ளது. இதனுள் ஒட்டுமொத்த சமூகச் சிந்தனைகள் அடங்கிய தத்துவார்த்தமான படிநிலைகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    அதில் ஒரு கட்டுரை" வேகத்தின் விலை "
    கார் ஓட்டுவது அவருக்கு பிடித்தமான விஷயம். அதுவும் வேகமாக கட்டுப்பாடுடன் ஓட்டுவது அவருக்கு ரொம்ப்ப பிடிக்கும்.
    சென்னையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் போது பெரும்பாலும் அவரே தன்னுடைய காரை ஓட்டிச் செல்வார்.
    ஒருமுறை ஷூட்டிங் முடிந்த ஒரு பின்னிரவில் கோழிக்கோட்டிலிருந்து மஞ்ஞேரிக்கு சென்றுகொண்டிருக்கும்போது நகர எல்லைத் தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் அவருடைய கார் நுழைகிறது.
    பனிப் படர்ந்த இரவில் ஒலி நாடாவை ஒலிக்க விட்டுக் கொண்டு வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தார். நகக்கீறலையொத்த நிலா அவரை துரத்திக் கொண்டே வந்தது. இருபுறமும் வாகை மரங்களுடன் இருந்த சாலையின் வழியாக சென்று கொண்டிருந்தது.
    இனி அவரின் மொழியில் வாசியுங்கள்.
    அந்த அடர் இருளில் ஒரு மெல்லிய எளிய உருவம். பார்க்க ஒடிசலான வயசான முதியவர் ஒருவர் கையில் கை விளக்கு தலையில் முக்காடுடன் கை நீட்டி மின்னல் வேகத்தில் வழிமறித்தார்.
    இடது பக்கம் ஒடித்து மீண்டும் வலப்பக்கம் சாய்ப்பதற்கு இடையில் வண்டி நிலை குறைந்தது. இரவின் நிசப்தத்தில் பிரேக் அடித்தவுடன் ஏற்பட்ட அலரல் ஒலி எங்கோ இருளில் மோதி மீண்டும் என்னை வந்தடைந்தது.
    வண்டியை கட்டுக்குள் கொண்டு கோபத்துடன் ரிவர்ஸ் எடுத்தேன். அந்த முதியவர் எதுவும் அறியாதது போல என் அருகில் வந்தார். அருகில் இருந்த ஒரு கல்மேடையில் ஒரு பெண் சுருண்டு படுத்து இருப்பதை அப்போது தான் பார்த்தேன்.
    கைகூப்பியபடி முதியவர் பேச ஆரம்பித்தார்.
    பாப்பாவுக்கு பிரசவ நேரம். ஆஸ்பத்திரிக்கு போக நீங்க தான் உதவனும். கடவுள் உங்களை நல்ல இடத்துக்கு கொண்டு சேர்ப்பார்."
    திடீரென காருக்கு குறுக்கே வந்த போது ஏற்பட்ட கோபமெல்லாம் சட்டென்று குறைந்து போனது.
    இரவு இரண்டு மணிக்கு எந்த வாகனத்தையும் தேடிப்பிடிக்க முடியாது என்பதால் நான் அவர்களை என்
    வண்டியில் ஏற்றிக் கொண்டேன்.
    அவள் அவருடைய பேத்தி அவள் என்பது தொடர் உரையாடலில் புரிந்து கொண்டேன். நான் மீண்டும் வேகம் எடுத்தேன் அரசு மருத்துவமனை வராண்டாவில் வண்டியை நிறுத்திய சத்தம் கேட்டு அவசரப் பிரிவில் இருந்து 4 ஊழியர்கள் ஓடி வந்தார்கள்.
    அவசரத்தில் வந்த அவர்கள் என்னை யாரென்று அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை.
    அவர்கள் அந்தப் பெண்ணை கைத்தாங்கலாக வண்டியிலிருந்து அழைத்துச் சென்றபின் தான் சமாதானமும் நிம்மதியும் என் முகத்தில்.
    மெல்லிய புன்னகையுடன் நான் வண்டியை திருப்பிக் கொண்டிருக்கும் போது மீண்டும் முதியவர் அருகில் ஓடி வந்தார்.
    ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்கீங்க. கடவுள் உங்களுக்கு ரொம்ப பெரிய உதவி செய்வார். கடவுள் தான் உங்களை எங்க கிட்ட கொண்டு சேர்த்து இருக்கார்.
    உங்க பேர் என்ன என்று கேட்டார். மம்முட்டி என்ற பேரை கேட்டபோது கூட என்னை அவருக்கு தெரியவில்லை. எனது நடிகன் என்ற கிரீடமும் நொறுங்கி விழுந்த கணம் அது.
    என்ன வேலை செய்றீங்க என்று கேட்டேன்.
    அவர் வேட்டியின் மடிப்பில் இருந்து கசங்கிய ஒரு நோட்டு தாளை எடுத்து "இத டீ செலவுக்கு வச்சிக்க"என்று என்னிடம் தந்தார்.
    என் மனத் திருப்திக்காக மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் என கூறி விட்டு
    என் கேள்விக்கு பதில் சொல்லாமல் விறுவென நடந்து மருத்துவமனைக்கு சென்று மறைந்தார்.
    அவர் கொடுத்துச் சென்றது மடித்து வைக்கப்பட்ட ஒரு இரண்டு ரூபாய் தாள். அதை எதற்காக தந்தார் என்று இன்று
    வரை எனக்கு புரியவில்லை.
    ஒருவேளை இரண்டு பேருக்குமான கட்டணமாக இருக்கும். என்னுடைய டிரைவிங் வேகத்தால் ஒரு ஜீவனை காப்பாற்றவும் புதியதொரு ஜீவனை இந்த பூவுலகில் கொண்டு வரவும் செய்த சிறிய உதவிக்காக அதிக சந்தோஷப்பட்டேன்.
    நான் இது வரை நான்கு தேசிய விருது வாங்கி விட்டேன். ஆனாலும் அதை விட இன்னும் பத்திரமாய் பொக்கிஷமாய் அந்த ரெண்டு ரூபாய் நோட்டை நான் பாதுகாத்து வருகிறேன்.
    சிலநேரங்களில் நாம் செய்யும் சிறிய உதவிகள் கிடைப்பவர்களுக்கு பெரிய உதவியாகக் கூட இருக்கும்.
    அதன் பலனாக பூக்கும் மகிழ்ச்சி பூக்கள் வாழ்க்கை பாதை முழுவதும் வெளிச்சம் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
    அனுபவங்கள் வாழ்வெனும்
    வாழ்வில் மின்னும் நட்சத்திரங்கள்.
    ( Bala shares.....))
    May be an image of 1 person and smiling
     
     
    சந்திரோதயம் பக்கதிலிருந்து....
     
    1. யாயினி

      யாயினி

      யாழ்ப்பாணத்தில் மிருதங்க உற்பத்தி..

  14. தங்களின் மருத்துவம் சார்ந்த ஆக்கங்களையும்: நேரம் கிடைக்கும் சமயங்களில் பதிந்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..🖐
  15. நயினாதீவு நாகம்மாள் கொடியேற்றம்.2023

    1. யாயினி

      யாயினி

      யாழில் சிறுதானிய உணவு ஊக்குவிப்புக் கண்காட்சி !

      Digital News Team  

      j-01-600x450.jpg

      சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் கண்காட்சி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள விவசாய திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்றது.

      சிறுதானிய உணவினை ஊக்குவிக்கும் நாள் என்ற தொனிப்பொருளில் குறித்த கண்காட்சி வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

      கம்பு, திணை, வரகு, சாமை என பல வகையான சிறுதானியங்களில் இருந்து எவ்வாறு உணவு தயாரிப்பது என்பது பற்றி அங்கு தெளிவுபடுத்தப்பட்டது. தொடர்ந்து சிறு தானிய உணவுகள் பரிமாறப்பட்டதுடன், உலர் தானிய வகைகளும் விற்பனை செய்யப்பட்டன.

      அத்துடன், தானியங்களின் ஊடாக கிடைக்கும் போஷாக்கு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கண்காட்சியும் நடத்தப்பட்டது.

      நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகள், பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

      சிறுதானிய உணவு ஊக்குவிப்புக் கண்காட்சி யாழில் முன்னெடுப்பு!

      தினக்குரல்.

       
    2. யாயினி

      யாயினி

       
      May be an image of 1 person, smiling, temple and text that says 'ஆழ்ந்த இரங்கல்கள் MEGSTRITE'S COURT DISTRICT MALLAKIM EOFJUDGES 21 11 1945 18 06 2023 முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்கள்'
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       

       

       
  16. Manitoba நெடுஞ்சாலை விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளனர்.
    முழுமையான செய்தி: https://thesiyamnation.com/34629/
    To join our WhatsApp group: https://chat.whatsapp.com/LLoD3OeCNtpJoYmRsjUm3
    See more
  17. Just wanted to say Happy Father’s Day to my dad, along with all the other dads out there. Thanks for everything you do!
    355031690_6397561806963963_7804087508167
     
     
     
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.