Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9545
  • Joined

  • Days Won

    16

Everything posted by யாயினி

  1. மேலோட்டமாக பதியப்பட்டு இருந்த தகவலைக் கொண்டு வந்து உங்களின் பக்கத்து வீட்டில் ஒட்டி விட்டேன்..அது இண்டைக்கு இங்கன நிக்கிற றபிக் பொலிஸார் தூக்கிட்டினம் போல காணம்..சிவனே என்று இருந்திட்டா போதும் போல ஆகிடுது.. எனிவே..எனது நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்..எப்போ கனடாவில் வெளியீடு அறியத் தாருங்கள்.🖐️
  2. 🎄அனைவருக்கும் இனிய நத்தார் விடுமுறை கால நல் வாழ்த்துகள் 🎄
     
     
  3. பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் தம்பி.🖐
  4. முடிந்தால் உங்கள் சக பணியாளர்களோடு ஆலோசித்து அடுத்து வரும் பணிகளில் பராமரிக்க கூடியவர்களுக்கு மரக்கன்றுகளை கூட கொடுக்கலாம்.புத்தண்ணாவும் கடந்த காலங்களில் ஊக்குப்பாக செய்திருக்கிறார்தானே.அண்மையில் கொழும்பில் நடந்த திருமண வீடு ஒன்றில் அன்பளிப்பாக மரக்கன்றுகளை கொடுத்திருக்கிறார்கள்.முன்னாள் ஒவிபரப்பாளர் ஒருவரின் முகப் புத்தகத்தில் காணக் கூடியதாக இருந்தது.
  5. பக்கத்து வீட்டு அய்யாவை அஞ்சலா ஒழுங்கான சைக்கயாறிக் டொக்ரரிட்ட காட்டாமல் வைத்திருந்தது எவ்வளவு தப்பு...சுமே அக்கா பக்கத்து வீட்டில பாதியையா, இல்ல முழுசா படம் எடுத்து இங்க சொருகி விட்டு இருக்கிறியள்..அது இரண்டாவது தப்பு.பிறைவேசி.✍️😆
  6. ஆண்டு முடிவிற்கு இருப்பவை இன்னும் பத்து நாட்கள்...✍️

  7. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நிழலியண்ணா.✍️
  8. உடனயே அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி.✍️
  9. வாசிக்க வேண்டும்..எங்கு வாங்கினீர்கள் சுவியண்ண..✍️🖐️ கடந்த மே மாதம் பதிவிட்டு இருக்கிறீர்கள்..இப்போது தான் விவாதிக்கப்படுகிறது..எது எப்படி இருப்பினும்..கனடாவில் எங்கு வாங்கலாம் என்பதையும் யாராவது அறியத் தாருங்கள்....
  10. Suggested for you  ·   · 
     
     
    May be an image of text that says 'அன்பிற சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு பாரதி YourQuote.in uote.in'
     
     
     
     
    1. யாயினி

      யாயினி

      மகாகவி பாரதியாரின் பிறந்ததினம்.. 11.12.1882

  11. ஈழத்து இலக்கிய உலகின் தகவல் பெட்டகம் அழிந்து விட்டது. பேராசிரியர் செ. யோகராசா, ஈழத்து இலக்கிய உலகின் தகவல் பெட்டகமாக விளங்கியவர். பெருமை பேசாத மனிதர். எந்த நேரத்திலும் இலக்கிய ரீதியான தேவைகளுக்காக அணுகுபவர்களுக்கு குறித்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தனது பங்களிப்பை செய்வர். சாதாரணமாக அனைவருடனும் பழக்க கூடியவர். அவருடன் கதைக்கின்ற போது பல புதிய ஆய்வுகள், தகவல்கள் சார்ந்த விடயங்கள் அறிய கூடியதாக இருக்கும். ஒருவரை பற்றியும் குறை கதைக்க மாட்டார். புதிதாக எதையாவது கண்டு பிடித்து வெளிப்படுத்த வேண்டும் என்பதே எப்போதும் அவரது சிந்தனையாக இருக்கும். இறுதியாக 2 கிழமைக்கு முன்னர் ராணி சிறீதரனின் 'கடவுள் தான் அனுப்பினரா?' நூலுக்கு முன்னுரையை அனுப்பி வைத்தார். இது தான் கடைசி போலும். மேலும் இர்ஷாத்தின் ஹைக்கூ தொகுதி முன்னுரையும் வெளிவராது என்னிடம் இருக்கிறது. ஜீவநதி ஆரம்பித்த காலம் முதல் எந்த இக்கட்டான நேரத்திலும் கட்டுரை கேட்டாலும் விரைவாக தருவார். ஜீவந்தியில் அவரது 40 மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகி உள்ளன. அதனை தொகுத்து நூலாக்க எண்ணி இருந்தோம். பரணீ 2024 செய்வோம் என சொல்லி இருந்தார். எங்கட அவை நிகழ்வில் அவரை வருகையாளராக அழைத்து அந்த நூலையும் வெளியீடு செய்ய 2 வருடமாக முயற்சித்தேன். முடியாமலே போய்விட்டது... இது தான் எனது அவசரத்துக்கு காரணம்...எதையும் நாளைக்கு என தள்ளி போடுவதில் எனக்கு விருப்பம் இல்லை... பல புதிய விடயங்களை, பல இலைமறைகாயாய் இருந்த படைப்பாளிகளை, படைப்புகளை ஜீவந்தியில் அறிமுகம் செய்தார். அவரது சிறப்பிதழையாவது வெளியீடு செய்ய முடிந்தது என நினைத்து மனதை தேற்றி கொள்கிறேன். அவரது குரல் வழி ஆவணப்படுதலை 3 மணித்தியாலம் செய்துள்ளேன். தேவை படுவோர் aavanaham.org இல் கேட்கலாம். கடைசி நேரத்தில் கூட தனது நோய் பற்றி எனக்கு சொல்லவில்லை. நண்பர் அஜந்தகுமாருக்கு சொல்லி உள்ளார் "பரணீக்கு தனக்கு என்ன நோய் என சொல்லவேண்டாம்... பரணீ அறிந்தால் கவலை படும்... பரணீக்கு சொல்ல வேண்டாம்' இதை விட அவருக்கும் எனக்குமான அன்பை சொல்ல வேறு வார்த்தைகள் இல்லை... ஜீவநதிக்கு சேரின் இழப்பு பேரிழப்பு... ஜீவநதிக்கு மட்டுமல்ல ஈழத்து சஞ்சிகைகள், இலக்கிய உலகில் ஈடு செய்ய முடியாத இழப்பு.... நினைக்க முடியாத இழப்பு... உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது சேர்... ஏன் சேர் உங்களை கவனிக்காமல் விட்டீர்கள். எங்கடை தொடர் இழப்புகளையும் வர போகும் 5 - 10 வருடத்தில் அடைய போகும் இழப்புகளையும் நினைக்க மிகவும் பயமாக உள்ளது... எமது இலக்கிய உலகம் வனாந்தரமாகுமோ? ..... அவரால் ஆக்க பட்ட மாணவர்கள் அவர் புகழை எடுத்து செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களுக்கு விடை கொடுக்க முடியவில்லை சேர்... உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்... https://aavanaham.org/islandora/object/noolaham%3A26029 +4
  12. இரு பக்க தாத்தா பாட்டி மாரோடும் தற்போததைய காலத்தில் வாழ இயலாது .. ஏன் பெற்றோரோடு கூட இருப்பது கடினம்.காரணம் ஓரளவுக்கு பின் புரிந்துணர்வு குறைந்து கொண்டு வந்து விடும்.இதை நான் கண் கூடா பார்த்தனான்..ஒரு குடும்பத்தில் நான்கு: ஐந்து பிள்ளைகள் உள்ளார்கள் என்றால் எல்லாரும் எல்லா நேரமும் உதவியாக இருக்க மாட்டார்கள்..யாராவது ஒரு பிள்ளை பெற்றோர் அல்லது பேரன், பேர்த்திகள் கூட இருந்தால் அவர்களுடைய இறுதிக் காலம் வரை அனைத்துப் பொறுப்புக்களையும் அந்த பெண்ணோ அல்லது ஆணோ மட்டுமே ஏற்க வேண்டிய காலம் இப்போ..எதுவும் கேட்பதற்கு: பேசுவதற்கு இலகுவாக இருக்கும் அவற்றுக்குள் இறங்கினால் மட்டுமே அதனுடைய நிலைமைகள் புரியும்..✍️🖐️
  13. முன்பு நேசக்கரம் இயங்கிய போது இப்படியான உதவித் திட்டங்கள் நடந்தது..பலரும் அறிந்திருப்பீர்கள் மறுடியும் கல்வி கற்க வசதிக் குறைவானவர்களை இனம் கண்டு , மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் உதவிட முன் வரும் பட்சத்தில், ஏராளன் மாணவர்களின் கல்வி முன்ளேற்றத்திலும் அக்கறை காட்டுவார் என்று நம்புகின்றேன்.✍️
  14. மாவீரர் வாரம் ஆரம்பம் 21.11.2023

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.