இதைப்படிக்கும் போது ஒரு வெள்ளையினத்து மனிதர் நினைவுக்கு வருகிறார்..இங்குள்ள முக்கிய மருத்துவமனை ஒன்றின் கான்சர் நோயாளி..மருத்துவமனையிலயே தங்கியிருக்கும் நிவைக்கு தள்ளப்பட்டிருக்கும் ஒருவர்..தன் சக்திக்கு மேற்பட்ட வேலைகள் செய்வதைப் பார்க்கும் போது மிகவும் கவலையாக இருக்கும்..மருத்துவமனையின் வெளிப்புறத்தில் நின்றால் அந்த சுற்றாடலை ௬ட்டி துடைச்சு அள்ளி சுத்தப்படுத்திக் கொண்டு நிப்பார் ; அது முடிந்ததும் சக நோயாளர்களை வீல் செயாரில் வைத்து தள்ளிக் கொண்டு அவர்கள் விருப்பபடும் இடங்களிலும் விடுவார் ௬ட்டி வருவார்..அவரும் ஒரு நோயாழியாய் இருந்து கொண்டு பிற விடையங்களையும் கவனிப்பதை பார்க்கும் போது ஒரு புறம் கவலையாக இருக்கும் மறு புறம் அவர் தன் நேரத்தை வீணடிக்கவில்லை பொன்னான நேரம் ஆக்கி கொள்கிறார்..சுத்தம் சுகம் தரும் அல்லவா...