Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9545
  • Joined

  • Days Won

    16

Everything posted by யாயினி

  1. ஒரு படம் பார்க்க வெளிக்கிட்டால் கூட சிறிது நேரம் தான் இடைவேளை.. உங்களுக்கு மட்டும் இத்தனை மணி நேரம் இடைவேளை வேணுமா....? ஆக்கங்கள் எழுதி முடிக்க வேண்டிய காலத்துக்கு முன்னர் ஆவது முடிப்பீர்கள் என்று நம்புவோமாக அண்ணா..😀
  2. இது எப்படி இருக்கு என்றால் சின்னப்பிள்ளைகளை படிக்க சொல்லி மேசையில் விட்டால் ஒருக்கா தண்ணீர் விடாய் என்று எழும்புவார்கள். அடுத்த தரம் பசிக்குது அல்லது பாத்ரூம் போகனும் இப்படி தான் இருக்கிறது..🤭😄
  3. தனியின் எழுத்துக்குள் சுமந்திரன் சாணக்கியன் இன்னோரன்ன பேர்வழிகளுக்கு கௌரவ வேடம். அப்பிடி சும்மா எண்டாலும் வந்து எட்டிப் பார்த்துட்டு போவார்கள்.😆
  4. உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சிறியண்ணா.🎁🥳💐
  5. சிட்னி முருகனை விட்டு வேறு எங்காவது மூவ் பண்ணி இருந்து பாருங்கள். வேறு கருப் பொருள் எழுதக் கிடைக்கும்.
  6. நீங்கள் தலைப்யே ஏதோ டப்பிங் படம் மாதிரி எழுதினால் என்ன செய்வது...🤭
  7. இப்படியானவர்களால் வேலை அற்று இருப்பவர்களுக்கு வேலையும் கூடத் தான்.பாவங்கள் நாலு சுவற்றுக்குள்ள அடிபடுகிறம் விழுகிறம் என்றுண்டு ஊரையே கூப்பிடுவது..ஆக்கத்திற்கு நன்றி கண்மணி அக்கா..🤔
  8. தலைப்பு அலைகள் ஓய்வதில்லை படத்தில வாற பாட்டு மாதிரி இருக்கிறது...தொடருங்கள்.🤭
  9. இனிய பிறந்தநாள் நாள் நல் வாழ்த்துக்கள் நுணா மற்றும் அகத்தியன்.🎁💐
  10. உங்கள் நாட்டில் ஒரு நாள் பிந்தியா வலன்ரைன்ஸ் டே வருகிறது அண்ணா...🤔
  11. தித்தித்த தாது எது?

     
     
    insects-901.jpg
     
     
    அதிகாலை நேரம் காளமேகப்புலவர் ஓர் அழகிய பூந்தோட்டத்தினூடாக நடந்து சென்றார். பூக்களில் தேன் உண்ணும் வரிவண்டொன்றும் அவர் செல்லும் வழியில் இருந்த மலர்களில் பறந்து பறந்து தேன் முகர்ந்து சென்றது. அதனைப் பார்த்து இரசித்த காளமேகப் புலவர் பறந்து பறந்து மலர்களின் தேன் உண்ட வரிவண்டிடம் கேள்வி கேட்டார். அவர் புலவராதலால் கேள்வியும் பாடலாகவே வந்தது.
     
    தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
    துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
    தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
    தெத்தாதோ தித்தித்த தாது                     
     
    என்ன பாடலைவாசிக்கும் போது நாக்கு சுளுக்குதா? மதுவுண்ட போதையில் ரீங்காரமிடும் வண்டிடம் கேள்வி கேட்பதானால் அக்கேள்வியும் ஒருவகை ரீங்காரம் போல் இருந்தால் தானே வரிவண்டுக்கு விளங்கும். எனவே வரிவண்டின் மொழியில் காளமேகப்புலவர் கேள்வி கேட்டிருப்பார் என்று நினைக்க வேண்டாம். அது தமிழ் நாட்டு வரிவண்டல்லவா! அதற்கு தமிழ் நன்கு விளங்கும். ஆதலால் தமிழிலேயே கேள்வி கேட்டிருக்கிறார். பாடலைக் கொஞ்சம் பிரித்துப் பார்ப்போம்.
     
    images-106.jpeg
     
    தத்தி தாது ஊதுதி தாதூதித் தத்துதி
    துத்தித் துதைதி துதைத் அத்தாது ஊதிதி
    தித்தித்த தித்தித்த தாது எது தித்தித்தது 
    எத்தாதோ தித்தித்த தாது?
     
    வண்டே! தாவிச்சென்று [தத்தி] மகரந்தத்தை [தாது] ஊதி, மகரந்தத்தை ஊதிய பின்னர் [தாதூதித்] திரும்பவும் தத்திப் போகிறாய் [தத்துதி], துத்தி என்று ரீங்காரம் செய்தபடி [துத்தி] இன்னொரு பூவிற்குச் செல்கிறாய் [துதைதி] அந்தப்பூவை நெருங்கி [துதைத்து] அதன் மகரந்தத்தை [அத்தாது] உண்கிறாய் [ஊதி], உனக்குத் தித்திக்கத் தித்திக்க இனிமையாய் [தித்தித்த தித்தித்த] இருந்த பூ [தாது] எது? நீ சுவைத்த தாதுக்களில் [தித்தித்த தாது]  இனிமையைத் தந்தது [தித்தித்தது] எந்தப்பூந்தாதோ? [எத்தாதோ]

    என்று பழகு தமிழில் காளமேகப்புலவர் வரிவண்டிடம் கேள்வி கேட்டார். அதற்கு அது என்ன பதில் சொல்லியிருக்கும்?
     
    குறிப்பு:
    காளமேகப் புலவரை தமிழின் ‘த’கரவரிசையை மட்டும் வைத்துப் பாட்டு எழுதும்படி கேட்டதற்கு அவர் இப்பாடலை எழுதியதாகாக் கூறுவாரும் உளர்.
    இனிதே,
    தமிழரசி.
  12. Luxury chocolatier Godiva closing all its Canadian stores .பெரும் பாலும் வருட இறுதியில் யாருக்காவது கிவப்ற் கொடுக்க வேண்டும் என்றால்  இந்த சொக்லேட்டும் லின்ட்டும் தான்  வாங்குவது வழமை..பண்டமிக்கால் நஷ்டத்தில் போய் விட்டார்கள் போலும்..மூடு விழா நடக்கப் போகிறது

    1. ஈழப்பிரியன்

      ஈழப்பிரியன்

      இந்த சொக்கலேற் எனக்கும் வீட்டிலுள்ளவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

  13. பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் வாலி.
  14. நீங்கள் கொஞ்சம் நீண்ட நாட்கள் வராது விட்டால் தானியங்கி தானே சில சேவைகளை நிறுத்திடுமாம்..ஆகவே இங்கும் வைத்தியர்கள் வர வேண்டும் அதுவரை பொறுத்திருங்கள்.😆பக்கம் 56 தட்டிப் பார்த்துட்டு இருங்கள்...
  15.  

    அப்படி என்ன பகிரப்படுகிறது இங்கே..ஒண்டும் இல்லை..என்ன தான் பாக்கிறார்கள் இங்கே.😆19,957 profile views

    •  
  16.  

    1. யாயினி

      யாயினி

      பாரட்டை பெற முயற்சிக்காதீர்கள்
      திறமையை வளர்க்க முயற்சியுங்கள்-படித்ததிலிருந்து

    2. யாயினி

      யாயினி

      சிந்து சமவெளி நாகரிக மக்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்களா? பானை எச்சங்கள் காட்டும் ஆய்வு முடிவு

      11 டிசம்பர் 2020
      சிந்து சமவெளி நாகரிகம்

      பட மூலாதாரம்,GETTY IMAGES

       
      படக்குறிப்பு,

      சிந்து சமவெளி நாகரிகத்தில் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட குளியல் குளம்.

      சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வாழ்ந்த மக்கள் மாடு, எருமை, ஆடு ஆகியவற்றின் மாமிசத்தை பெருமளவில் உணவாக உட்கொண்டிருக்கலாம் என சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. சிந்துச் சமவெளி பிரதேசங்களில் கிடைத்த பானைகளில் இருந்த உணவு எச்சங்களை ஆராய்ந்ததில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

      கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சித் துறையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டவரும் தற்போது ஃப்ரான்சில் உள்ள CEPAMல் டாக்டர் பட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருப்பவருமான அக்ஷயேதா சூர்யநாராயண், சிந்து சமவெளி மக்களின் உணவுப் பழக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவு Lipid residues in pottery from the Indus Civilisation in northwest India என்ற தலைப்பில் தற்போது Journal of Archaeological Science என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

      "சிந்துச் சமவெளியில் வாழ்ந்த மக்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவந்தாலும், அங்கு வாழ்ந்த மக்கள் என்னவிதமான உணவை உண்டார்கள் என்ற கேள்வியெழும்போது, அங்கு என்ன பயிர்கள் விளைந்தன என்ற அடிப்படையிலேயே இந்த விவாதங்கள் நடந்துவந்தன.

      ஆனால், அங்கு விளைந்த பயிர்கள், அங்கிருந்த விலங்குகள், அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்கள் ஆகியவற்றை கொண்டு ஒரு முழுமையான ஆய்வை மேற்கொண்டால் மட்டுமே, அவர்களது உணவுப் பழக்கவழக்கம் குறித்த முழுமையான சித்திரத்தைப் பெற முடியும்" என்ற அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

      சிந்து சமவெளி நாகரிகம்

      பட மூலாதாரம்,GETTY IMAGES

      பழங்கால மக்கள் பயன்படுத்திய செராமிக் பாத்திரங்களில் எஞ்சியிருந்து கிடைக்கக்கூடிய கொழுப்பின் எச்சங்களை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம், அந்த பாத்திரங்களைப் பயன்படுத்திய மக்கள் எவ்விதமான உணவை உட்கொண்டார்கள் என்பதை அறிய முடியும்.

      இது போன்ற ஆய்வுகள் தொல்லியலாளர்களால் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோன்ற ஒரு ஆய்வே, தற்போது சிந்துச் சமவெளி நாகரிகப் பகுதிகளில் கிடைத்த பானை ஓடுகளை வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

      சிந்து சமவெளி நாகரிகத்தில் விளைந்த பயிர்கள்

      சிந்து சமவெளி பகுதியில் பார்லி, கோதுமை, அரிசி, ஓட்ஸ், கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவை விளைவிக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர, எள் போன்ற எண்ணெய் வித்துக்கள், திராட்சை, வெள்ளரி, கத்திரிக்காய், மஞ்சள், கடுகு, சணல், பருத்தி போன்றவையும் பயிரிடப்பட்டுள்ளன.

      விலங்குகளைப் பொறுத்தவரை, மாடு மற்றும் எருமைகள் பெருமளவில் வளர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இங்கு கிடைத்த விலங்குகளின் எலும்புகளில் பெருமளவிலானவை அதாவது 50 - 60 சதவீத எலும்புகள் மாடுகள், எருமைகளுடையவை. 10 சதவீத எலும்புகள் ஆடுகளுடையவை. இதன் மூலம், சிந்து சமவெளியில் வசித்த மக்கள் மாட்டிறைச்சியை விருப்ப உணவாகக் கொண்டிருக்கக்கூடும். இதற்கு அடுத்த நிலையில், ஆட்டிறைச்சி அவர்களது உணவுத் தேர்வாக இருந்திருக்கலாம்.

      மாடுகளைப் பொறுத்தவரை 3 - 3.5 ஆண்டுகள் வரை வளர்க்கப்பட்டுள்ளன. பசுக்கள் பாலைப் பெறுவதற்காகவும் காளைகள், பிற வேலைகளைச் செய்யவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பன்றியின் எலும்புகள் கிடைத்தாலும், அவற்றின் பிற தேவை என்ன என்பது முழுமையாகத் தெரியவில்லை. இவை தவிர, மான், பறவைகள் போன்றவற்றின் எலும்புகளும் சிறிய அளவில் கிடைத்திருக்கின்றன.

      பானை ஓடுகள் எப்படி சேகரிக்கப்பட்டன?

      சிந்து சமவெளி நாகரிகத்தில் எடுக்கப்பட்ட பானைகள்.

      பட மூலாதாரம்,GETTY IMAGES

       
      படக்குறிப்பு,

      சிந்து சமவெளி நாகரிக அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட பானை.

      இந்த ஆய்வுக்காக வடமேற்கு இந்தியாவில், அதாவது தற்போதைய ஹரியானாவில் உள்ள சிந்து சமவெளி அகழாய்வுத் தலமான ராகிகடியை ஒட்டியுள்ள ஆலம்கிர்பூர், மாசூத்பூர், லோஹரி ரகோ, கானக், ஃபர்மானா போன்ற சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த பல்வேறு இடங்களில் இருந்து செராமிக் பாத்திரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில் சிந்துச் சமவெளியின் கிராமப்புறங்களும் நகர்ப்புறங்களும் அடங்கும்.

      ஒட்டுமொத்தமாக 172 பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டன. இந்த சேகரிப்பின்போது, பாத்திரங்களின் விளிம்புகள் குறிப்பாக கவனிக்கப்பட்டன. உணவுப் பொருட்களைக் கொதிக்கவைக்கும்போது, அவை விளிம்புகளில் சேர்ந்திருக்கலாம் என்பதால் அவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டது.

      பிறகு, இந்தப் பானை ஓடுகள் 2-5 மி.மீ. அளவுக்கு ட்ரில் செய்யப்பட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பானை ஓடுகளை ஒட்டியுள்ள படிமங்களும் சேகரிக்கப்பட்டன. பிறகு, இந்த மாதிரிகளில் இருந்து கொழுப்புப் புரதங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

      இதன் மூலம் அந்த பானையில் வைக்கப்பட்டிருந்தது தாவரம் சார்ந்த உணவுப் பொருளா அல்லது இறைச்சியா என்பதைக் கண்டறிய முடியும். அதற்குப் பிறகு அதிலிருந்த கொழுப்பு அமிலங்களை ஐசோடோப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதன் மூலம், அவை எந்த விலங்கின் இறைச்சியைச் சேர்ந்தவை என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

      ஆய்வின் முடிவு

      சிந்து சமவெளி நாகரிக முத்திரை.

      பட மூலாதாரம்,DEA / G. NIMATALLAH/GETTY IMAGES

       
      படக்குறிப்பு,

      சிந்து சமவெளி நாகரிக முத்திரை.

      இந்த ஆய்வின் முடிவில், இந்த பானைகளில் பால் பொருட்கள், அசைபோடும் விலங்குகளின் இறைச்சி, தாவரங்கள் ஆகியவை சமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வித்தியாசமின்றி பாத்திரங்களின் பயன்பாடு இருந்தது. தவிர, இந்தப் பாத்திரங்கள் பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

      இந்தப் பகுதியில் பெரிய அளவில் அசைபோடும் பாலூட்டிகள் இருந்திருந்தாலும், பால் பொருட்கள் இந்தப் பாத்திரங்களில் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டது மிகக் குறைவாகவே இருக்கிறது. ஆனால், இதற்கு முன்பாக குஜராத்தில் கிடைத்த பானை ஓடுகளை ஆய்வுசெய்தபோது, அவற்றில் பெருமளவு பால் பொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது (இது தொடர்பான ஆய்வு முடிவு Scientific Reportsல் வெளியானது).

      அடுத்தகட்டமாக, வெவ்வேறு கலாச்சார பின்புலத்திலும் வெவ்வேறு காலநிலைகளிலும் உணவுப் பழக்கத்தில் எப்படி மாற்றங்கள் நிகழ்ந்த என்பதைக் கண்டறியும் ஆய்வுகளை மேற்கொள்ளலாம்; ஆனால், அதற்கு சரியாக காலம் நிர்ணயிக்கப்பட்ட பானை ஓடுகள் தேவைப்படும் எனக் குறிப்பிடுகிறார் அக்ஷயேதா சூர்யநாராயண்.

      மேலும், தெற்காசியப் பகுதிகளில் இப்படிக் கிடைக்கும் உயிர்ம எச்சங்களை ஆய்வுக்குட்படுத்தி, அகழாய்வில் கிடைக்கும் பிற உயிர்மப் பொருட்களையும் வைத்து, வரலாற்றுக்கு முந்தைய தெற்காசிய உணவுப் பழக்க வழக்கத்தின் பன்மைத்துவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும் என்கிறார் அக்ஷயேதா.

      சிந்துச் சமவெளி நாகரிகம் குறித்த சில குறிப்புகள்

      சிந்துவெளி நாகரிகம், மொஹஞ்சதரோ.

      பட மூலாதாரம்,DEA / G. NIMATALLAH /GETTY IMAGES

       
      படக்குறிப்பு,

      சிந்துவெளி நாகரிகம், மொஹஞ்சதரோ.

      தன்னுடைய ஆய்வில் சிந்துச் சமவெளி நாகரிகம் கூறித்த சில பின்னணித் தகவல்களையும் தந்திருக்கிறார் அக்ஷயேதா. சிந்துவெளி நாகரிகம் என்பது வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் உருவான மிகச் சிக்கலான அமைப்புகளை உடைய நாகரிகங்களில் ஒன்று. தற்போதைய பாகிஸ்தான், வடமேற்கு இந்தியா, மேற்கு இந்தியா, ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் இந்த நாகரிகம் பரவியிருந்தது.

      சமவெளிப் பிரதேசம், மலையடிவாரம், பாலைவனங்கள், புதர்க்காடுகள், கடற்கரைகள் என் பல்வேறுவிதமான நிலப்பகுதிகளில் இந்த நாகரிகம் விரிந்து பரந்திருந்தது. கி.மு. 2600க்கும் கி.மு. 1900க்கும் மத்தியில் அதாவது முதிர்ந்த ஹரப்பா நாகரிக காலகட்டத்தில் நகரங்கள் என்று சொல்லக்கூடிய அளவிலான ஐந்து பெரிய குடியிருப்புகள் உருவாயின. இது தவிர, சிறு சிறு குடியிருப்புப் பகுதிகளும் ஏற்பட்டன.

      மணிகள், வளையல்கள், எடை கருவிகள், முத்திரைகள் போன்றவை சிந்துவெளி நாகரிக காலத்தின் மிக முக்கியமான அடையாளங்களாகப் பார்க்கப்படுகின்றன. பண்டமாற்றுக்கான மிகப் பரந்த வலையமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. மிக மதிப்பு வாய்ந்த பொருட்கள்கூட கிராமப்புறங்களில் கிடைக்கும் அளவுக்கு இந்த வலைப்பின்னல் உருவாக்கப்பட்டிருந்தது.

      சிந்துச் சமவெளி நாகரிக காலத்தில், நகர்ப்புற பகுதிகள் கிராமப்புறங்களின் மீது ஆதிக்கம் செலுத்தின என்று சொல்லமுடியாது. இவற்றுக்கு இடையிலான உறவு பெரிதும் பொருளாதாரம் சார்ந்தே இருந்தது.

      ஆனால், கி.மு. 2100க்குப் பிறகு, சிந்துச் சமவெளியின் மேற்குப் பகுதி மெல்லமெல்ல கைவிடப்படலாயிற்று. மாறாக கிழக்குப் பகுதியில், குடியிருப்புகள் எழ ஆரம்பித்தன. சிந்துச் சமவெளியின் நகர நாகரிகத்திற்கே உரிய சிறப்பம்சங்களான எழுத்துகள், முத்திரைகள், எடை கருவிகள் ஆகியவை இந்தப் பிற்கால ஹரப்பா நாகரிக காலத்தில் காணப்படவில்லை.

      சிந்துச் சமவெளியின் நகர்ப்புற தன்மை மாறி, இந்த காலகட்டத்தில் கிராமப்புறம் சார்ந்த குடியிருப்புகளே அதிகம் உருவாயின. இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பருவமழை பொய்த்துப் போனதே மிக முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. கி.மு. 2150ல் துவங்கி, பல நூற்றாண்டுகளுக்கு இந்த நிலை நீடித்தது.

       

      சிந்து சமவெளி நாகரிக மக்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்களா? பானை எச்சங்கள் காட்டும் ஆய்வு முடிவு - BBC News தமிழ்

       

  17. பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய ஆஸ்திரேலியா

    1 ஜனவரி 2021
    Wiradjuri woman Olivia Fox sang the national anthem in indigenous language Dharug in December

    பட மூலாதாரம்,GETTY IMAGES

     
    படக்குறிப்பு,

    Wiradjuri woman Olivia Fox sang the national anthem in indigenous language Dharug in December

    இந்தப் புத்தாண்டு தினத்தில் இருந்து ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேசிய கீதத்தை சில மாற்றங்களோடு பாடுவார்கள் என்று அறிவித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன்.

    தேசிய கீதம் இனி ஆஸ்திரேலியாவை 'இளமையான, சுதந்திரமான' என்று குறிப்பிடாது. அந்நாட்டுப் பூர்வகுடி மக்களின் நீண்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பிரதமரின் இந்த ஆச்சரியமளிக்கும் அறிவிப்பு, பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது.

    ஒற்றுமைக்கான ஊக்கத்தை இந்த மாற்றம் உருவாக்கும் என்று நம்புவதாக மாரிசன் கூறினார்.

    வெள்ளையின ஆங்கிலேயர்கள் 18-ம் நூற்றாண்டில் குடியேறுவதற்கு முன்பே பல பத்தாயிரம் ஆண்டுகளாக மக்கள் வசித்துவரும் தீவு ஆஸ்திரேலியா.

    அட்வான்ஸ் ஆஸ்திரேலியா ஃபேர் என அழைக்கப்படும் தேசிய கீதத்தில் இருந்து 'நாம் இளமையும், சுதந்திரமும் ஆனவர்கள் என்பதால்' என பொருள் தரும் "ஃபார் வீ ஆர் யங் அன் ஃப்ரீ' என்ற வரி நீக்கப்பட்டு, 'ஃபார் வீ ஆர் ஒன் அன் ஃப்ரீ' என்ற வரி சேர்க்கப்பட்டுள்ளது.

    நாம் இளமையானவர்கள் என்று பொருள் தந்த இடம், தற்போது நாம் ஒன்றே என்று பொருள் தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

    நியூ சவுத் வேல்ஸ் மாநில பிரீமியர் கிளாடிஸ் பெரஜிக்லியன் இந்த மாற்றத்தைப் பரிந்துரைத்தார்.

    இந்த மாற்றம் எந்தப் பொருளையும் நீக்கவில்லை. ஆனால், நிறைய பொருள் சேர்த்திருக்கிறது என்று குறிப்பிட்டார் மாரிசன்.

    "இந்த மாற்றம், நாடாக நாம் கடந்து வந்த தூரத்தை அங்கீகரிக்கிறது. 300க்கும் மேற்பட்ட தேசிய மூதாதையரிடம் இருந்தும், மொழிக் குழுக்களிடம் இருந்தும் பெறப்பட்டதே நம் தேசத்தின் கதை என்பதை, புவியில் மிக வெற்றிகரமாக இயங்கும் பன்முக பண்பாடுகள் கொண்ட நாடு நாம் என்பதை இது அங்கீகரிக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

    கொரோனா வைரஸ் உலகத் தொற்றின்போது ஆஸ்திரேலியா ஏற்படுத்திக்கொண்ட ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில் இந்த மாற்றம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    "பூர்வகுடிகள் மூலமாக மிகப் பழமையான தொடர்ச்சியான பண்பாடு நம்மிடம் இருக்கிறது என்பது குறித்து நாம் பெருமைப்படவேண்டும்" என்று தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் அந்தோனி அல்பேனீஸ்.

    சமீப ஆண்டுகளில் பண்பாட்டு, அரசியல் நிகழ்வுகளில் தங்கள் நாட்டின் பழமையான பூர்வகுடி வரலாற்றை அங்கீகரிக்க ஆஸ்திரேலியா பெரும் முயற்சிகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    டிசம்பர் மாதம் தேசிய ரக்பி அணி வீரர்கள் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை ஒரு பூர்வகுடி மொழியில் முதல் முதலாகப் பாடியது குறிப்பிடத்தக்கது. சிட்னி பகுதியை சேர்ந்த இயோரா நேஷன் என்ற மக்கள் குழுவின் மொழியில் தேசிய கீதத்தைப் பாடிய பிறகு அவர்கள், ஆங்கிலத்தில் பாடினார்கள்.

    2px presentational grey line

     

    www.bbc.com
    1. யாயினி

      யாயினி

      பனியில் உறைந்த புராதன காண்டாமிருகம்: 20,000 ஆண்டுகள் முன்பு இறந்த விலங்கு உறுப்புகள் சிதையாமல் கண்டெடுப்பு

      1 ஜனவரி 2021, 05:29 GMT
      வுல்லி ரைனோ வகை காண்டாமிருகத்தின் சிதையாத தொல்லுடல்

      பட மூலாதாரம்,REUTERS

      20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததாக கருதப்படும் காண்டாமிருகம் ஒன்றின் உடல் பெருமளவில் சிதையாமல் மீட்கப்பட்டுள்ளது.

      காரணம் அதன் உடல் பெர்மாஃப்ராஸ்ட் எனப்படும் நிரந்தர உறைபனிப் பரப்பில் புதைந்து கிடந்ததுதான். ரஷ்யாவின் கிழக்கு சைபீரியாவில் அந்த நிரந்தரப் பனிப் பரப்பு உருகியதால் வெளியில் தெரிந்த இந்த உடலை உள்ளூர் மக்கள் மீட்டனர்.

      கெட்டுப் போகாமல், அற்புதமாகப் பதப்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இந்த உடல் பனி ஊழி (ஐஸ் ஏஜ்) காலத்தை சேர்ந்த 'வுல்லி ரைனோ' வகை காண்டாமிருகத்தினுடையது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

      வடகிழக்கு ரஷ்யாவின் யகுடியாவில் உள்ள அபிஸ்கி வட்டாரத்தில் உள்ள நிரந்தர உறைபனி உருகியதால் இந்த உடல் வெளியே தெரிந்தது.

      இந்த விலங்கின் உள் உறுப்புகள் கூட பெரும்பாலும் சிதையவில்லை. இது இந்தப் பிராந்தியத்தில் கிடைத்த பழங்கால விலங்கு உடல்களில் சிறப்பாகப் பதப்படுத்தப்பட்ட நிலையில் கிடைத்தவற்றில் ஒன்று.

      மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்வதற்காக இந்த உடல் அடுத்த மாதம் ஓர் ஆய்வகத்திடம் ஒப்படைக்கப்படும்.

      பனிச்சாலைகள் அமைவதற்காக இப்போது காத்திருக்கிறார்கள். அமைந்த பிறகு, அந்த உடல் யாகுட்ஸ்க் மாநகரத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கே விஞ்ஞானிகள் அதன் உடல் மாதிரிகளை எடுத்து கதிர்வீச்சு கரிம (ரேடியோ கார்பன்) பகுப்பாய்வு செய்வார்கள்.

      இளம் காண்டாமிருகத்தின் உடல்

      பட மூலாதாரம்,REUTERS

       
      படக்குறிப்பு,

      இளம் காண்டாமிருகத்தின் உடல்.

      பிளைஸ்டோசீன் ஊழியின் பிந்தைய காலத்தில், அதாவது 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகள் முன்பு இந்த காண்டாமிருகம் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

      இந்த காண்டாமிருகத்தின் உடலை பரிசோதித்த வேலரி பிளாட்நிகோவ் என்ற ஆய்வாளர் 3 அல்லது 4 வயது ஆனபோது, இது நீரில் மூழ்கியதால் இறந்திருக்கலாம் என்று ரஷ்ய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

      இந்த விலங்கின் பெரும்பங்கு மென்திசுக்களைக் காண முடிகிறது. குடலும், பாலுறுப்பும்கூட இருக்கிறது.

      "மூக்கின் அருகே இருந்த சிறிய கொம்பும் சிறையாமல் கிடைத்துள்ளது. இது மிகவும் அரிதானது. ஏனெனில் வழக்கமாக அந்தக் கொம்பு விரைவில் சிதைந்துவிடும்" என்று கூறியுள்ளார் வேலரி. இந்தப் பெண்மணி ரஷ்ய அறிவியல் கழகத்தில் (ரஷ்யன் அகாடமி ஆஃப் சயின்சஸ்) பணியாற்றும் ஒரு தொல்லுயிரியல் வல்லுநர். யகுடியா 24 டிவி என்ற ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

      அந்தக் கொம்பில் தேய்ந்ததற்கான தடயங்கள் உள்ளன. உணவுக்காக அந்த காண்டாமிருகம் அடிக்கடி கொம்பினை பன்படுத்தியுள்ளது என்பதே இதன் பொருள் என்கிறார் அவர்.

      இளம் வுல்லி காண்டாமிருகத்தின் கொம்பு

      பட மூலாதாரம்,REUTERS

       
      படக்குறிப்பு,

      காண்டாமிருகத்தின் உடலுக்கு அருகே கிடந்த கொம்பு.

      டைரக்டியாக் ஆற்றின் கரையில் இந்த காண்டாமிருகத்தின் உடல் கடந்த ஆகஸ்ட் மாதம் உள்ளூர்வாசி ஒருவரால் கண்டெடுக்கப்பட்டது.

      2014ம் ஆண்டு இன்னொரு இளம் வுல்லி ரைனோ காண்டாமிருகத்தின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே உள்ளது இந்த இடம். 2014ல் கண்டெடுக்கப்பட்ட உடலுக்குரிய காண்டாமிருகத்துக்கு சாஷா என்று விஞ்ஞானிகள் பெயரிட்டனர். சாஷா 34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக மதிப்பிடப்பட்டது.

      1px transparent line

      சைபீரியாவில் கடந்த சில ஆண்டுகளில் வுல்லி ரைனோ வகை காண்டாமிருகங்கள், மாமதம்*, குதிரைக் கன்று, நாய்க்குட்டிகள், குகை சிங்கத்தின் குட்டிகள் போன்றவற்றின் தொல்லுடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

      மாமதங்கள்

      பட மூலாதாரம்,GETTY IMAGES

       
      படக்குறிப்பு,

      யானையைவிட மிகப் பெரிய பேருருவம் கொண்ட மாமதங்களின் ஓவியம். ப்ளைஸ்டோசீன் ஊழியில் வாழ்ந்த உயிரிகள் இவை.

      (*மாமோத் (mammoth) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பேருருவம் கொண்ட அழிந்துவிட்ட யானை போன்ற விலங்குகளை சூழலியல் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் மாமதம் என்று தமிழில் குறிப்பிடுகிறார். தம்முடைய 'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக' என்ற நூலில் இந்த சொல்லை அவர் பயன்படுத்தியுள்ளார்.)

      கடந்த செப்டம்பர் மாதம், வடகிழக்கு ரஷ்யாவின் லையாகோவ்ஸ்கி தீவுகளில் பனி ஊழியில் வாழ்ந்து இறந்த ஒரு கரடியின் உடல் நன்கு பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

      புவி வெப்பமடைந்து வருவதால் ரஷ்யாவின் தூரக் கிழக்கு மற்றும் தூர வடக்குப் பகுதிகளில் உள்ள நிரந்தர உறைபனிப் பரப்பு பெருமளவு உருகிவருவதால் இதைப் போல பனியில் உறைந்து கிடந்த உடல்கள் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன.

      www.bbc.com
    2. யாயினி
  18. கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும் - யாழ் உறவோசை - கருத்துக்களம் (yarl.com) இந்தப் பகுதியில் போய் உங்கள் பிரச்சனையை எழுதுங்கள் வந்து சொல்லுவார்கள்..சிறியண்ணாவை கேட்க நாங்கள் சொல்வது தவறு ஆனாலும் சந்தேகத்தை விளங்கப் படுத்துற படியால் பிரச்சனை இல்லை என்று நினைக்கிறன்..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.