Jump to content

யாயினி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9545
  • Joined

  • Days Won

    16

Everything posted by யாயினி

  1. இந்தப் பகுதியையும் ஒரு முறை கண்டு கொண்டால் நன்று... யாரவது Carpal tunnel surgery செய்தவர்கள் இருக்கிறீங்கள்? - நலமோடு நாம் வாழ - கருத்துக்களம் (yarl.com)
  2. கசப்பான வேப்பம்

    பூவிருந்து தேனீக்கள்

     தேனை எடுப்பதில்

     தவறுவதில்லை.

    சில கசப்பான

    அனுபவங்கள்

    நமக்கு நல்ல

    விஷயங்களை கற்றுதர 

    ஒருபோதும் 

    தவறுவதில்லை... படித்ததிலிருந்து

     

  3. நாளை அதாவது 25.12.2020 நத்தார் தினத்தைக் கொண்டாடவிருக்கும் அனைத்து யாழ்கள உறவுகளுககும் மனம் நிறைந்த நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.Merry Christmas Best Wishes.🙏✍️

     
  4. யாழின் முகப்பை அடிக்கடி பார்த்து நீக்க வேண்டியதை அடிக்கடி சரி பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்..மாவீரர் நாளோடு இணைக்கபட்ட ஒன்று இன்னும் இருக்கிறது போல் தெரிகிறது..எனக்கு தான் அப்படியோ தெரியவில்லை.
  5.  

    1. Show previous comments  1 more
    2. யாயினி

      யாயினி

      வேலை தொடங்கி நான்கே மாதங்கள் தான் முன்று மாதம் சம்பளம் எடுத்தேன். சரியாக முன்று மாதங்கள் முடிய மறுபடியும் கொரோணா தொற்றின் அதிகரிப்பால் ஒரு மாதத்த்திற்கு மேலாக வேலை இல்லை.இனிமேல் ஜனவரிககு பிற்பாடு தான் எனக்கு மறுபடியும் வேலை...அதுவும் ???
       

    3. யாயினி
    4. யாயினி

      யாயினி

      நேயத்தை உன்பால் வைத்தேன்!

       

       

      IMG_5278.JPG
       

       

      நேயத்தை உன்பால் வைத்தேன்

      நெஞ்சமே கோயிலாய் கொண்டாய்

      காயத்தே நோய்கள் தீண்டி

      கனலிடைக் கருகல் காணாய்

      தேயத்தே வாழும் மாந்தர்

      தொல்வினை தீர்த்து வைப்பாய்

      மாயத்தை தொழிலாய்க் கொண்டாய்

      மறந்திடல் அழகோ சொல்வாய்

      இனிதே,

      தமிழரசி.

       

       
       
  6. முதல் ஒரு ரோஜாப் பூ படம் இணைக்க பார்த்தால் அது யாரோவின்ட பேஸ் புக் இணைப்பு வருது சக்.sorry

    1. யாயினி

      யாயினி

      யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே - திருமூலர் திருமந்திரம்
       
      இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும். எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம். பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்னை கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை.
       
      சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார். இதை யாரும் செய்யலாம். ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம்.
       
      தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும் செய்யக் கூடிய எளிமையானதே. இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையா பரவாயில்லை. அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு.
       
      இல்லையென்று சொன்னாலும் அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே. நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க வேண்டாம். நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவைகளில் எந்த ஒன்றையாவது செய்து பார்க்கலாமே. ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்பட்டு விடுவார்.
       
      சில துளசி இலைகளில் மகா விஷ்ணு வசப்பட்டு விடுவார். சில துளி கங்கா தீர்த்தம் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார். சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள். இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம். ஆன்மீகம் என்றால் அன்புதான்.
       
      படித்ததிலிருந்து...
       
    2. யாயினி
    3. யாயினி
  7. மடைச் சாம்பிராணிக்கு எங்கே போவது?

    இன்இதழ்.கொம்
    சாம்பிராணிப் பூ
    %25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2582.jpg
    பனியாலும் மழையாலும் காற்றாலும் குளிரால் வாடிய பண்டைய மனிதனை இயற்கையில் கிடைத்த காய்ந்த மரங்களே காத்தன. மரங்களை எரித்து அது கொடுத்த வெப்பத்தின் கதகதப்பில் குளிரைப் போக்கிய மனிதன் மரங்களுக்கு மரம் அவை கொடுக்கும் வெப்பமும் மணமும் வேறுபடுவதைக் கண்டான். எந்தெந்த மரங்களின் புகை கண்ணில் கண்ணீரைப் பெருக்கவில்லை என்பதையும் பார்த்து அறிந்தான். அத்துடன் எரியும் புகையின் மணத்தை நுகர்ந்த போது நறுமணப் புகை அவனைக் கவர்ந்தது. கண்ணீரை வரவழைக்காத நறுமணத்தைக் கொடுத்த மரங்களின் புகை ஏன் மரத்துக்கு மரம் வேறுபடுகிறது என்பதை ஆராய்ந்தான்.
     
    அந்த ஆய்வின் விளைவாகப் பல அரிய விடயங்களைக் கண்டறிந்தான். ஒருசில மரத்தின் புகை கொடிய
    விலங்குகளை, நச்சுப் பாம்புகளை, பூச்சி புழுக்களை தம்மிடம் நெருங்க விடாததைக் கண்டான். வேறு சில மரங்களின் புகை தமக்கு வந்த நோய்களைப் போக்குவதையும் காயங்களை மாற்றுவதையும் பார்த்தறிந்தான். சில மரங்களில் இயற்கையாக வடிந்த மரப்பால் காற்றின் வெம்மையில் காய்ந்து கெட்டியாகிக் கட்டியாய் மரத்தோடு ஒட்டிக் கிடப்பதையும் கண்டறிந்தான். [வேப்பமரப்பிசின், முதிரமரப்பிசின் போன்று ஒட்டிக்கிடந்தன]. 
     
     
    மரத்திலிருந்து வடிந்த சாம்பிராணி
    Boswellia.jpg
     
    மரங்களை எரித்துப் புகையை உண்டாக்குவதை விட  மரங்களில் இருந்து வடிந்த பாற்கட்டிகளை சேகரித்து வைத்து தனக்குத் தேவையான போது நெருப்புத் தணலின் மேல் தூவி புகையை உண்டாக்குவது இலகுவாக இருந்ததை அறிந்தான். அந்த மரப்பாற் கட்டிகளில் எவை நறுமணத்தையும் அதிக புகையையும் கொடுத்து தமக்கு வந்த நோய்களையும்  நீக்கினவோ அம்மரங்களை நட்டு வளர்த்தான். அப்பாற்கட்டிகளை சேகரித்து செல்லும் வழியிலும் தங்கும் இடங்களிலும் வேண்டிய போது அவற்றைப் பயன்படுத்தினான். 
     
    இவ்வாறு மரப்புகையின் தன்மையைக் கண்டறிந்த பண்டைய மனித இனங்களில் தமிழினமும் ஒன்று. சங்கத்தமிழரின் வாழ்வியல் அதனை நன்கு எடுத்துக் காட்டுகிறது. சங்கத் தமிழர் போரினால் ஏற்பட்ட விழுப்புண்ணை மாற்றும் மருந்தாக நறுமணப் புகையைப் பயன்படுத்தியதை புறநானூற்றில் அரிசில்கிழார் எனும் சங்ககாலப் புலவர்
     
    “நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ
    காக்கம் வம்மோ காதலம் தோழி!
    வேந்துறு விழுமம் தாங்கிய
    பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகைப் புண்ணே”
                                                          - (புறநானூறு: 281)
    எனப் பாடியிருப்பதால் அறியலாம். அதாவது ‘அன்புடைய [காதலம்] தோழியே[தோழி]! வேந்தனுக்காக [வேந்துறு] விழுப்புண்பட்ட [விழுமம்தாங்கிய], பூக்கள் பொறித்த [பூம்பொறிக்] கழலை அணிந்த காலுடைய [கழற்கால்] நெடுந்தகையின் புண்ணை; மாளிகையில் [நெடு நகர் வரைப்பில்] நறுமணம் கமழ்கின்ற [கடி நறை] புகையை புகைத்து [புகைஇ] காக்க [காக்கம்] வருக [வம்மோ]’ எனத் தலைவி ஒருத்தி தன் தோழியை அழைக்கிறாள். வீரத்தினை எடுத்துக்காட்ட மாவீரர்கள் காலில் அணியும் அணிகலனைக் கழல் என்பர்.
     
    புகையிட்டு புண்களை நோய்களைக் குணமாக்கும் வழக்கம் தமிழரிடையே பண்டைக்காலம் தொடக்கம் இன்றுவரை இருந்து வருகிறது என நினைக்கிறேன். ஏனெனில் நான் சிறியவளாக இருந்த பொழுது எனக்கு வந்த ஒவ்வாமையைப் போக்க என் தந்தை புகையூட்டினார். சிறியவளாக இருந்த காலத்தில் இயற்கையைப் பெரிதும் காதலித்தேன். பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அம்மா தரும் சிற்றுண்டியை உண்பேன். விளையாடுவதற்குப் பதிலாக வெள்ளைத் தாள்களை எடுத்துச் சென்று மரஞ் செடி, கொடிகளின் இலை, பூ, காய், பழம் மட்டும் அல்லாமல் கண்ணில் படும் பூச்சி, புழு, பறவைகள், விலங்குகள் யாவற்றையும் கீறுவதும் ஆடிப்பாடித் திரிவதும் எனது பொழுது போக்கு. சில வேளைகளில் இலை, பூ, காய், பழங்களை அவற்றின் சுவை அறியக் கடித்துப் பார்ப்பதும் உண்டு. 
     
    ஒரு நாள் மாலை வீட்டுக்கு வந்தும் வழமைபோல அம்மா என்னைக் குளிப்பாட்டி துடைத்தார். அவவின் கண் முன்பே என் உடலெங்கும் திட்டுத் திட்டாகத் தடித்துக் கடிக்கத் தொடங்கியது. ‘என்ன சாப்பிட்டிங்க?’ என்று கேட்டார். நான் கீறி வைத்திருந்த படங்களைக் காட்டினேன். அவவுக்கே சில காய்களின் பெயர் தெரியாது. எது நஞ்சு! எது நஞ்சில்லை! என்பதும் தெரியாது. என்னை டாக்டரிடம் அழைத்துச் செல்வதற்காக உடைமாற்றினார். அப்போது வெளியே சென்றிருந்த என் தந்தை வந்தார். ‘மகளைப் பாருங்க, உடம்பெல்லாம் தடிக்கிறது டாக்டரிடம் கூட்டிப்போவோம்’ என்றார்.  
     
    எனது பொழுது போக்கு என்ன என்பது என் தந்தைக்குத் தெரியும். ‘மகள்! நீங்க கடித்துப் பார்தீங்களா? சாப்பிட்டீங்களா?’ எனக் கேட்டபடியே நான் கீறிய படங்களைப் பார்த்தார். [படங்களின் அருகே அது புளிக்குமா? கசக்குமா? இனிக்குமா? நாக்கில் ஒட்டுமா என எழுதிவைத்திருப்பேன்]. இது ஒவ்வாமை என்றார். இதற்கு டாக்டரிடம் போகவேண்டிய தேவையில்லை. போனாலும் அவர்கள் இதனை மாற்றுவார்களே ஒழிய முற்றிலும் குணமாக்க மாட்டார்கள் என்றார். எனக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. ‘மாற்றுவார்கள் ஆனால் முற்றிலும் குணமாக்க மாட்டார்கள் என்றால் என்ன என்றேன்? ஆங்கில மருத்துவம் ஒரு நோயை இன்னொரு நோயாக மாற்றும். தமிழ் மருத்துவம் நோயை முற்றாகக் குணமாக்கும் என்றார்.
     
    எங்கள் வீட்டில் நின்றவரிடம் தென்னை மரத்தின் இளங்குருத்தோலையை வெட்டிக் கொண்டுவரும்படி கூறினார். முற்றத்தில் நெருப்பிட்டு தணலின் மேல் தென்னங்குருத்தை பரவி, அதிலிருந்து புகை வரத்தொடங்க, இடமும் வலமுமாக இரண்டுமுறை புகையை சுற்றி வரும்படி கூறி ஒரு முறை கடக்கவைத்தார். அவ்வளவே! சிறிது நேரத்தில் உடலெங்கும் உண்டான தடிப்புகளும் மறைந்து கடியும் நின்றது. அதன் பின்னர் உணவால் எந்த ஒரு ஒவ்வாமையும் எனக்கு வரவில்லை. பாருங்கள் எதுவித மருந்தும் பத்தியமும் இன்றி சில நிமிட நேரத்தில் தென்னங்குருத்தின் புகை ஒவ்வாமையை நீக்கியதே. இது நம் முன்னோர் கண்டறிந்திருந்த அநுபவ உண்மை அல்லவா?
    வாடிய கற்றாழை மடல்
    %25E0%25AE%25B5%25E0%25AE%25BE%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%2B%25E0%25AE%2595%25E0%25AE%25B1%25E0%25AF%258D%25E0%25AE%25B1%25E0%25AE%25BE%25E0%25AE%25B4%25E0%25AF%2588%2B%25E0%25AE%25AE%25E0%25AE%259F%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg
     
    தென்னங்குருத்து மட்டுமல்ல பனங்குருத்து, வாழைக் குருத்து, வேப்பந்தளிர், ஆடாதோடைச் சருகு, வாடிச்சருகான கற்றாழை மடல் போன்ற பலவகை இலைகளின் புகையையும் வெள்ளெருக்கம்பூ, மாம்பூ போன்ற பல பூக்களின் புகையையும் குங்கிலியம், சாம்பிராணி போன்றவற்றின் புகையையும் நம்முன்னோர் பயன்படுத்தி நோய்களை நீக்கியதை வாகடங்கள் [வைத்திய ஏடுகள்] கூறுவதால் அறியலாம். இவற்றின் புகை ஈ, நுளம்பு, சிலந்தி, தேள் போன்றனவற்றின் தொல்லைகளில் இருந்து காத்ததோடு, கிருமி கொல்லியாக தொற்று நோய்களையும் தடுத்தது.
    குங்கிலிய மரம்
    shorea%2Brobusta%2B%2528kungliam%2529.jpeg
     
    குங்கிலியம் என்று சொன்னதும் சைவசமயத்தவர் மனக்கண்ணில் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான குங்கிலியக்கலய நாயனாரே வருவார். பல்லாயிர வருடங்களாக குங்கிலியத்தை மனிதர் பயன்படுத்தி வருவதை வரலாறு காட்டுகிறது. குங்கிலிய மரத்திலிருந்து[shorea robusta] வடிந்த பாற்கட்டியே குங்கிலியமாகும். தெற்காசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட குங்கிலிய மரத்தை சால் மரம் என்றும் கூறுவர். இவை மிக உயரமாக வளரக்கூடியவை. ஜலரி என்று அழைக்கப்படும் மரம் மூன்று மீட்டர் உயரம் வரை வளரும். 
    குங்கிலியம்
    Sal%2B-%2BShorea%2Brobusta%2B%25E0%25AE%25B0%25E0%25AF%2586%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%25A9%25E0%25AF%258D.JPG
     
    மருத்துவ வாகடங்கள், நிகண்டுகள் குங்கிலியத்தை குங்கிலிகம், குங்குலியம், குக்குலு என்றும் குறிக்கின்றன. குங்குதல் என்றால் நிலைகெடல் அல்லது குறைதல் என்ற கருத்தைத் தரும். தணலில் தூவப்படும் குங்கிலியம் உருகித் தன் நிலைகெட்டுப் போவதால் குங்கிலியம் என அழைத்தனர். குங்குலிய மரத்தில் பல இனங்கள் உண்டு. இனத்துக்கு இனம் குங்கிலியத்தின் நிறமும் மணமும் மாறுபடுவதோடு நோய் நீக்கும் தன்மையும் வேறுபடுகிறது. செங்குங்குலியம், பச்சைக் குங்குலியம், வெண்குங்குலியம், மஞ்சள் நிறக்குங்கிலியம், கருங்குங்குலியம், எருமைக்கண் குங்குலியம், பறங்கிக் குங்குலியம் எனக் குங்கிலியம் பலவகைப்படும். இலங்கையில் கிடைத்த ஒருவகைக் குங்கிலியத்தை இங்கிலாந்தில் ஒரு அந்தர் £14.50 என்ற விலைக்கு 1883ம் ஆண்டில் விற்றிருக்கிறார்கள்.
     
    நாம் கடவுளர்க்குக் தூபம் காட்டும்போது இடும்  சாம்பிராணியும்[Frankincense - C20H32O4] மரத்தில் இருந்து வடிந்து காய்ந்த பாற்கட்டியே. ஐயாயிர வருடங்களுக்கு மேலாகச் சாம்பிராணியை மனிதர் பயன்படுத்துகின்றனர். சிலர் குங்கிலியமும் சாம்பிராணியும் ஒன்று என்று கருதுகின்றனர். வெவ்வேறு விதமான மரங்களில் இருந்தே இரண்டும் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து வெவ்வேறு அமிலங்கள் கிடைக்கின்றறன. குங்கிலியத்தில் Stearic acid [C18H36O2] இருக்கிறது. சாம்பிராணியில் Boswellic acid [C30H48O3]இருக்கிறது. அவை பலவைகையான நோய்களை நீக்கின்றன. 
    குங்குலியப்பூ
    kungkuliyam.jpg
    நம் முன்னோர் பெண்களின் கர்ப்பப்பைக் கட்டிகளையும் கர்ப்பப்பையில் ஏற்படும் புற்றுநோயையும் சாம்பிராணி நீக்குமென்பதை அறிந்திருந்தனர் என்பதற்கு நமது மருத்துவ வாகடங்களே சான்றாகும். ஆயிரக்கணக்கான வருடங்களாக நம்மவர்கள் முழுகியதும் தலைமயிருக்கு சாம்பிராணிப் புகை இட்டார்கள். சாம்பிராணியின் புகை மூளையில் கட்டி [Brain Tumour] உண்டாகாது தடுத்ததுடன் தலைமயிர் நரைக்காதும் காத்தது. மேலை நாட்டு மோகத்தில் நாம் அதைக் கைவிட்டு hairdryer போடுகிறோம்.
     
    பண்டை நாளில் இருந்து இன்றுவரை உலகில் உள்ள எல்லாமதப் பூசைகளிலும் கோயில்களிலும் தூபமாக குங்குலியமும் சாம்பிராணியும் போடுகிறார்கள். அவை கலப்படம் இல்லாது இருக்கும்வரை அவற்றால் மனிதருக்கு நன்மையே கிடைக்கின்றன. இன்றைய உலகம் செய்துவரும் நகரமயமாக்கல் என்னும் நாகரீகத்தால் காடுகளை அழிக்கிறோம்.  உயர்ந்த கோபுரங்களோடு கோயில்களைக் கட்டி அழகு பார்க்கிறோம். கோயிலைப் புனிதமாக்கும் எண்ணத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை மரங்களை வெட்டி, புல் பூண்டுகளைச் செருக்கி பளிங்குக் கற்களைப் பதித்து நமது செல்வச் செழிப்பைப் பறை அடிக்கிறோம். ஆனால் கோயில்களில் தூபமாகப் போடும் சாம்பிராணி மரத்தையோ குங்குலிய மரத்தையோ எந்த சமயத்தைச் சேர்ந்தோராவது நட்டு வளர்க்கிறார்களா? இம்மரங்களை எந்தக் கோயிலின் அருகிலாவது பார்த்ததுண்டா? 
    சாம்பிராணிமரம்
    Frankincense-Tree-Salalah-300x244.jpg
     
    ஒருமரத்திலிருந்து ஒருவருடத்திற்கு ஒரு கிலோ சாம்பிராணியோ ஒருகிலோ குங்குலியமோ பெறமுடியுமென்பதே மிகவும் வேதனையான விடையமாகும். அந்நாளில் இயற்கையாக மரப்பட்டையில் உண்டாகும் வெடிப்பில் இருந்து வடிந்த சாம்பிராணியைப் பெற்ற நாம் இப்போது மரத்தைக் கீறி சாம்பிராணி பெறுகிறோம். உலகம் 85% சாம்பிராணியை சோமாலியாவில் இருந்தே பெற்றுவந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் அங்கும் காடுகள் அழிக்கப்படுவதாலும் மரம் நடுவார் இன்மையாலும் சாம்பிராணி உற்பத்தி வீழ்ச்சி அடைகிறது. மேலே படத்தில் பாருங்கள் அந்த வெளியில் எத்தனை மரங்கள் நிற்கின்றன. அத்துடன் இம்மரங்கள் மிக மிக மெதுவாக வளர்வன. இன்றைய விஞ்ஞான உலகமும் சாம்பிராணியில் உள்ள இரசாயனப் பொருட்கள் புற்றுநோயை நீக்குவதைக் கண்டு கொண்டன.
     
    சாம்பிராணி கிருமிகளைக் கொல்வதால் உணவு சமைக்கும் இடத்தில் சாம்பிராணிப்புகை இட்டனர். அப்புகை சமைத்த உணவுகள் கெட்டுப் போகாது காத்தது. உணவு சமைக்கும்  சமையலறை - அகடுக்களை, மடைப்பள்ளி எனவும் அழைக்கப்படும். இரண்டாயிர வருடங்களுக்கு முன்பே இலங்கையின் மாந்தையில் வாழ்ந்தோர் வீமன் எழுதிய மடைநூல் சொல்லியபடி சமையல் செய்ததை
    “பனிவரை மார்பன்[வீமன்] பயந்த நுண்பொருள்
    பனுவலின்[நூல்] வழாஅப்[வழுவாது] பல்வேறு அடிசில்[உணவு]” 
                                              - (சிறுபாணாற்றுப்படை: 240 - 241)
    என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. இவ்வரிகளுக்கு உரைஎழுதிய நச்சினார்க்கினியார் ‘பனிவரை மார்பன் பயந்த நுண் பொருள் பனுவலை’ - வீமன் எழுதிய மடைநூல் என்கிறார். எனவே மடையில் இட்ட சாம்பிராணியே மடைச் சாம்பிராணி.
     
    பேச்சு வழக்கில் அது மடச்சாம்பிராணியாக மருவிவிட்டது. புத்தி குறைந்தோரைப் பார்த்து மடச்சாம்பிராணி என்று தமிழர் திட்டுவது உண்டல்லவா? ‘மடைச்சாம்பிராணிக்கு/மடச்சாம்பிராணிக்கு எங்கே போவது?’ என்று நம்மை நாமே கேட்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. நம் நாட்டில் வளரக்கூடிய இனத்தைச் சேர்ந்த சாம்பிராணி, குங்கிலிய மரங்களை நாம் வளர்க்கலாம். இல்லையேல் மாமன்னன் அலெக்சாண்டரைப் போல் சாம்பிராணிக்காக நாடுகளைப் கைப்பற்ற வேண்டிய நிலை வரும். 
     
    அலெக்சாண்டர் சிறுவனாக இருந்த பொழுது லியோனிடாஸ்[Lionidas] என்பவரிடம் கல்வி கற்றார். ஒரு நாள் அலெக்சாண்டர் கைநிறைய சாம்பிராணியை அள்ளி நெருப்பில் தூவுவதைக் கண்ட லியோனிடாஸ், “இப்படி நெருப்பில் இட்டு சாம்பிராணியை வீணாக்க  இது விளையும் நாடுகளைக் கைப்பற்ற வேண்டும்” என்று கண்டித்தார். அது நடந்து இருபது ஆண்டுகளின் பின் அலெக்சாண்டர் கி மு 332ல் காஷா[Gaza]வைக் கைப்பற்றினார். அப்போது தனது ஆசிரியருக்கு கப்பல் நிறைய சாம்பிராணியை அனுப்பிவைத்ததோடு ‘கஞ்சத்தனம் இல்லாது தாராளமாகச் சாம்பிராணியைப் பாவியுங்கள்’ எனத் துண்டெழுதி அனுப்பினான். அலெக்சாண்டரைப் போல் நாடுகளைக் கைப்பற்ற முடிந்தாலும் சாம்பிராணி மரங்களுக்கு எங்கே போவது? 
    இனிதே, 
    தமிஇன்இதழ்.கொம்ழரசி.
    1. ஒலீவன்

      ஒலீவன்

      தேவையான பதிவு

  8. உங்கள் இடத்தில் நிரந்தர வதிவிட உரிமைக்கு இது ஏல்லாம் கேட்கிறார்களா...? இங்கு சில வைத்தியசாலைகளில் ஸ்ரோக் வந்த நோயாளியின் ஞாபக சக்தியை அறிவதற்காக இவ்வாறன கேள்விகள் கேட்பதை கண் ஊடாக பார்த்திருக்கிறேன்.இருந்தாலும் நல்ல தகவல்கள் அடங்கிய பகுதி நன்றி பகிர்வுக்கு.
  9. பிந்திய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அக்கா.பேர்த்திக்கு. என்ன பெயர் வைத்தீர்கள். ✍️
  10.  

    நாளைக்கு கால நிலை இப்படி தான் இருக்கும்..❄️❄️.

    1. யாயினி

      யாயினி

      இந்த பக்கம் வந்து எட்டிப் பார்க்கும் உறவுகள் உங்கள் எண்ண கருத்துக்களையும் வைச்சுட்டுப் போனால் நன்றாக இருக்கும்..அப்படி ஒன்றும் விசேடமான பகுதி அல்ல இது.. ஆனாலும் சின்ன ஆர்வம்.😀✍️

  11. கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டத்தை அறிவித்த சமஷ்டி அரசு!

    By
    Seelan
     -
    December 12, 2020 - 9:40 PM
     
    Share
     
     
     
    vikatan_2020-07_b5dd6ff5-51b5-4811-8272-

    கனடாவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் எவரேனும் தடுப்பூசியின் மிக மிக அரிதான பக்க விளைவுகளால் பாதிக்கப்படுமிடத்து அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டத்தை சமஷ்டி அரசு உடனடியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

    கனடாவில் அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜேர்மனியின் பயோஎன்ரெக் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகிய “பைசர் – பயோஎன்ரெக்” தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

    கனெடிய மாகாணங்களில் வரும் நாட்களில் நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கவுள்ளது.முதலாவது தொகுதி தடுப்பூசி புட்டிகள் வரும் திங்களன்று கனடா மண்ணில் வந்திறங்கும் என்று மருந்துக் கொள்முதலுக்குப் பொறுப்பான அமைச்சர் அனிதா ஆனந்த் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

    எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மருத்துவப்பணியாளர்களதுக்கும் முன்னுரிமை அடிப்படையில் முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், அதேவேளை 16 வயதுக்கு குறைந்தோருக்கு தடுப்பூசி ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரிட்டன், பஹ்ரைன் நாடுகளை அடுத்து பைசர் -பயோஎன்ரெக் தடுப்பூசியை பாவனைக்கு அனுமதிக்கின்ற மூன்றாவது நாடு கனடா ஆகும்.

    மிகவும் அரிதான பக்கவிளைவுகள் கொண்ட வைரஸ் தடுப்பூசி குறித்து மக்களிடையே நம்பிக்கையும் ஒத்துழைப்பும் உள்ள போதிலும் எல்லா கனடியர்களது பாதுகாப்புக்காகவும் தடுப்பூசி பாதிப்பு நஷ்டஈடு திட்டம் ஒன்றை (compensation program) தமது அரசு அறிமுகம் செய்வதாக பிரதமர் ஜஸ்ரின் ரூடோ (Justin Trudeau) தெரிவித்திருக்கிறார்.

    அனைத்து தடுப்பூசிகளினாலும் ஏற்படக் கூடிய பாதிப்புகளுக்கு நஷ்டஈடுஈடு வழங்கும் இதுபோன்ற திட்டம் கனடாவில் அறிமுகமாவது இதுவே முதல் முறையாகும்.

    வைரஸ் தடுப்பூசியால் ஒவ்வாமை போன்ற சிறு பக்கவிளைவுகளைத்தவிர கடுமையான பாதிப்புகள் ஏற்படுவது ஒரு மில்லியன் பேரில் ஒருவருக்கு என்ற ரீதியில் மிக அரிதானது என அரசு உறுதி அளித்திருக்கிறது.

    இதேவேளை கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

     
  12. Ontario reported nearly 2,300 new COVID-19 cases on Tuesday, in part due to timing changes in how numbers are gathered, shattering all previous records for case growth in a day.cp24.com

  13. நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டங்கள் எல்லாம் வழமை போன்று இந்த ஆண்டும் வருகிறது..ஆனாலும் கோவிட் 19 பிரச்சனையால் அனேகமான கொண்டாட்டங்கள் இல்லை.அண்மையில் வேலையில் .இணைந்து கொண்டதனால் எனது வேலையிடத்து பொறுப்பதிகாரிகளை பார்க்கும் ஆவல் உண்டு.ஆனாலும் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு இல்லாமலே போய் விடுகிறது..அவரவர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.✍️

  14. ஒருவரின் அரசியலும் ஒவ்வொரு இடத்திலும் நின்று, நின்று தான் போகும் என்று நினைக்கிறன் பார்க்கலாம்..😆
  15. இந்த மாத இறுதிக்குள் கனடாவுக்கான கோவிட்19 தடுப்பூசிகள் கிடைக்கும் என ஜஸ்டின் ருடோ அறிவித்துள்ளார்.

    1. யாயினி

      யாயினி

      வேலையும் நானும்...✍️😀

      கடந்த சில மாதங்களாக இருக்க நிக்க விடாமல் ஒரே வேலை வந்து கொண்டு இருந்தது..ஏதோ ஒன்றை உருப்படியாக செய்கிறேன்..என்ற திருப்தி..

      அதுவும் நம் மக்களுக்காக  செய்யும் போது மிகவும் சந்தோசமாக இருந்தது.. இப்போ மறுபடியும் கொரோனாவால் வேலை டவுணுக்கு போய் விட்டது...
      பல இனத்தவர்களோடும் பழகும் வாய்ப்பு மற்றுய் நிறைய பிரச்சினைகளை நாளாந்தம்  அறிந்து கொள்ள முடிகிறது.மூடிந்து.

      சில வேளைகளில் வீடுகளுக்கு கூட போக நேரிடும்.அந்த சமயத்தில் நம்மவர்கள் நடந்து கொள்ளும் முறை அந்தரமாகவும் இருக்கும.. இப்படி நிறைய... இன்னும் நீண்ட தூரம் போகவேண்டும்..அவ்வப்போது வரும்....✍️
       

    2. யாயினி

      யாயினி

      இன்று அம்மாவின் எட்டாம் மாத நினைவு நாள்.யாருக்கும் இருக்கும் போது அதன் அருமை தெரியாது..இல்லை என்றபோது மட்டுமே அதன் வலி தெரியும்.இனி எப்போதுமே காண முடியாது.🙏

    3. யாயினி
  16.  

    இன்று கொரோணாவின் தாக்கம் ஒப்பீட்டளவில் அதிகரித்து விட்டது 1800 மேலாகி விட்டது என்று சொல்கிறார்கள்.வெளியில் செல்பவர்கள் சற்று அவதானமாக இருப்பது நன்று.

  17. வருடத்தில் ஒரு நாள் மட்டும் இந்தப் பகுதிக்குள் வருவேன் அது இன்றைய நாள்.எமக்காக தங்கள் உயிரகளை ஆகுதியாக்கிய அனைத்து உறவுகளுககும் எனது அஞ்சலிகள்.🙏🙏
  18. நாளை 21.11.2020 முதல் மாவீரர் வாரம் ஆரம்பம்.

    1. யாயினி
    2. யாயினி

      யாயினி

      ஆண்டு முடிவுக்கு மேலும் 40 உள்ளன.
       

    3. யாயினி
  19. நான் பார்ப்பவை,.கேட்பவை,.ரசிப்பவை உங்கள் பார்வைக்காகவும் இங்கு பதிவிடுகிறேன் பிடித்தால் பார்த்து மகிழுங்கள்.

  20. இன்று வேலையிடத்தில் கொரோனா பரவல் பற்றி கேட்ட கேள்விக்கு குளோஸ் கொன்ராக் யாராச்சும் என்றால் ,வந்தவர்  பதில் கொடுத்த விதம் வைவ்ப் கிட்ட வந்தால் கொரோனா வாற மாதிரி இருக்காம்.😀

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.