Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 16 Sep, 2025 | 11:15 AM முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்துள்ளனர். அந்தவகையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளின் முறைப்பாட்டையடுத்து நேற்று திங்கட்கிழமை (15) இரவு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உடனடியாக கடற்றொழிலாளர்களுடன் கடலுக்குள் சென்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை நேரடியாகப்பார்வையிட்டதுடன், அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் பலரையும் கடுமையாக எச்சரித்துமிருந்தார். குறிப்பாக கொக்கிளாய் முகத்துவாரம் மற்றும் நாயாறு உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறித் தங்கியுள்ள நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் மீனவர்களாலும், திருகோணமலைப் பகுதி மீனவர்களாலுமே இவ்வாறு மிக அதிகளவில் வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் மற்றும் சுருக்குவலை உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அந்தவகையில் கடலில் இருந்து பார்வையிடும் கரையில்தெரியும் வெளிச்சத்தைவிடவும் சட்டவிரோத வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல் செயற்பாட்டில் ஈடுபடுபடும் படகுகளின் வெளிச்சம் அதிகமாக தென்படுகின்றது. அந்த அளவிற்கு மிக அதிகளவில் சட்டவிரோத வெளிச்சம்பாச்சி மீன்பிடித்தல் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. இந்நிலையில் இந்தநிலமைகளை வன்னிமாட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குநேரடியாக காண்பித்த முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், இவ்வாறான அதிகரித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் முல்லைத்தீவில் சட்டத்திற்குட்பட்டு கடற்றொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களால் கடற்றொழிலில் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தனர். குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக பாராளுமன்றிலும், கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக்குழுக்கூட்டத்திலும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம், கடற்றொழிலாளர் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் தொடர்சியாக குரல் எழுப்பிவருவதை இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார். அத்தோடு இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதை அனுமதிக்கமுடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்தார். எனவே நேரடி களவிஜயத்தின்போது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெறுவதை ஆதாரப்படுத்தும்வகையில் சேகரிக்கப்பட்ட விடயங்களை உரிய இடங்களுக்கு கொண்டுசென்று இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நிறுத்துவதற்குரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார். முல்லை கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக மீனவர்கள் முறையீடு | Virakesari.lk
  2. 16 Sep, 2025 | 11:56 AM 2025 ஆம் ஆண்டின் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இலட்சத்து 41 ஆயிரத்து 881 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டெம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 346,984 ஆகும். அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 156,855 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 120,314 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 102,461 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 95,119 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 85,667 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! | Virakesari.lk
  3. 16 Sep, 2025 | 03:24 PM கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்ட சீன பிரஜை ஒருவர் தலதா மாளிகை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சீன பிரஜை ட்ரோன் கமரா மற்றும் அதனை பறக்க விட பயன்படுத்திய பொருட்களுடன் கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான சீன பிரஜை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள தியவடன நிலமேவின் வீட்டை அண்டிய பகுதியில் ட்ரோன் கமராவை பறக்க விட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்ட சீன பிரஜை கைது! | Virakesari.lk
  4. 16 Sep, 2025 | 04:30 PM புற்றுநோய் சிகிச்சைக்காக லீனியர் ஆக்சிலேட்டர் (Linear Accelerator) கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்யும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்படாமல் இருப்பதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். அநுராதபுரம், பதுளை, குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளுக்கு ஐந்து லீனியர் ஆக்சிலேட்டர் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு 2013ஆம் ஆண்டு திட்டமிட்டிருந்தது. ஆனால் கடந்த கால அரசாங்கங்கள் மற்றும் சுகாதார அமைச்சில் உள்ள பிரச்சினைகள் காரணமாக லீனியர் ஆக்சிலேட்டர் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை 2024ஆம் ஆண்டு வரை கொள்வனவு செய்ய முடியவில்லை. இருப்பினும், புதிய அரசாங்கத்தின் வருகையின் பின்னர் லீனியர் ஆக்சிலேட்டர் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்ய 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக அரசாங்கம் சுமார் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அனுமதி கிடைக்காத காரணத்தினால் இந்த திட்டம் இதுவரை செயற்படுத்தப்படவில்லை. இதனால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். எனவே, இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம கேட்டுக்கொண்டுள்ளார். புற்றுநோய் சிகிச்சைக்கான லீனியர் ஆக்சிலேட்டர் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படாமல் இருப்பதால் நோயாளிகள் கடும் சிரமம்! | Virakesari.lk
  5. 16 Sep, 2025 | 06:49 PM (எம்.மனோசித்ரா) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 2,234 மில்லியன் ரூபா ஆகும் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2006ஆம் ஆண்டு அரச பல்கலைக்கழகங்களில் துணை சுகாதார விஞ்ஞானம் தொடர்பான பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், மருந்து வேதியியல் மற்றும் தாதியியல் துறைகளில் மூன்று பட்டப்படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது, இங்கு மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், மருந்து வேதியியல், தாதியியல் மற்றும் உடற்கல்வி ஆகிய நான்கு பாடத்துறைகளில் அனைத்து இனங்களையும் சேர்ந்த 952 மாணவர்கள் கல்வி கற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார். 2017ஆம் ஆண்டு துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கான கட்டிடத்தை நிர்மாணிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தாலும், நிதி நெருக்கடி காரணமாக அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதன் காரணமாக, பீடத்திற்கு மோசமான உட்கட்டமைப்பு வசதிப் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக, விரிவுரை மண்டபங்கள், ஆய்வகம், ஆய்வுக்கட்டுரை அறை, பரீட்சை மண்டபம் மற்றும் கேட்போர் கூடம் ஆகிய வசதிகளைக் கொண்ட ஒரு புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். யாழ் பல்கலைக்கு 2,234 மில்லியன் செலவில் புதிய கட்டிடம் : துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு நவீன வசதிகள் - அரசாங்கம் | Virakesari.lk
  6. Published By: Digital Desk 3 15 Sep, 2025 | 01:58 PM இலங்கையில் இணையவழி பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருவது குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். சைபர் மோசடி, சுரண்டல்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலர் இதில் ஈடுபடுவது குறித்து கவலைகள் அதிகரித்துள்ளன. சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டுப் பெண்களும் இந்தச் செயல்களில் ஈடுபடுவது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான பாலியல் சேவைகளுக்கான விளம்பரங்கள் பகிரப்படுகின்றன. இதில் நேரடி வீடியோ சேவைகள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்தச் சேவைகளுக்கான கட்டணங்கள், சேவையின் வகையைப் பொறுத்து மாறுபடுகின்றன. உதாரணத்திற்கு, "தாய் முழு உடல் மசாஜ்" சுமார் 10,000 ரூபாய்க்கு விளம்பரப்படுத்தப்படுகிறது. அதேநேரம், நேரடி வீடியோ அமர்வுகளுக்கு 10 நிமிடங்களுக்கு 1,000 ரூபாய் முதல் 30 நிமிடங்களுக்கு 10,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேரடி சந்திப்புகளுக்கு 8,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய விபச்சார விடுதிகள் அல்லது ஸ்பாக்களைப் போலல்லாமல், இந்த இணையத்தள பாலியல் சேவைகள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற என்கிரிப்ட் செய்யப்பட்ட குறுஞ்செய்தி செயலிகள் மற்றும் பெயர் தெரியாத டிஜிட்டல் கட்டண முறைகளைப் பயன்படுத்தி ரகசியமாகச் செயல்படுகின்றன. இதனால், குற்றவாளிகளைக் கண்டறிந்து, சட்ட நடவடிக்கை எடுப்பது பொலிஸாருக்கு சவாலாக உள்ளது. இலங்கையில் உள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாகப் பல பெண்கள் பாலியல் தொழிலை நாடியுள்ளனர். அதேநேரம், சுற்றுலா விசாவில் வரும் வெளிநாட்டுப் பெண்களும் இந்த இணையத்தள பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த இணையத்தள மோசடிகளுடன் தொடர்புடையவை என்றும், வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு சேவையை வழங்காத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கும் பொலிஸார் மேலும், பொது அவமானம் மற்றும் சமூக களங்கத்திற்கு அச்சமடையும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் முறைப்பாடுகள் அளிப்பதில்லை என்பதால், சட்ட நடவடிக்கைகளைத் தொடர்வது கடினமாக உள்ளது என்றும் பொலிஸார் கூறுகின்றனர். இந்தச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கைச் சட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்டவர்களுடன் பாலியல் உறவு கொள்வது சட்டபூர்வ பாலியல் துஷ்பிரயோகமாக கருதப்படுகிறது. இதற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம், இணைய உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இணையத்தள துன்புறுத்தல் மற்றும் தவறான பயன்பாடு போன்ற சிக்கல்களைத் தீர்க்கவும் முயல்கிறது. இந்தச் சட்டம், தடைசெய்யப்பட்ட இணையச் செயல்களில் ஈடுபடும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க இணைய பாதுகாப்பு ஆணையத்தை அமைக்க வழிவகுக்கிறது. இலங்கையில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் தொழில் ! | Virakesari.lk
  7. 15 Sep, 2025 | 03:38 PM மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவணை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கோரிய தொடர் போராட்டத்தின் 2 வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (15) சித்தாண்டியில் பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது மேய்ச்சல் தரை காணியை வர்த்தமானிப்படுத்துமாறு கோரியும் சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களை அகற்றுமாறு கோரியும் சித்தாண்டி முச்சந்தி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பேரணி ஆரம்பமாகி, போராட்டம் நடக்கும் இடம் வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பண்ணையாளர்களின் போராட்டம் இடம்பெறும் இடத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது. மயிலத்தமடு மாதவணை கால்நடை மேய்ச்சல் தரைப் பகுதியில் கால்நடைகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் எதிராக நடத்தப்படும் அநீதிக்கு எதிரான அறவழிப் போராட்டம் இரண்டு வருடங்களை கடந்துள்ள அதாவது 730வது நாளாக நடைபெற்றுவரும் நிலையில் இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. “மயிலத்தமடுவில் உள்ள சட்ட விரோத பயிர்ச்செய்கையாளர்களை வெளியேற்று”, “பண்ணையாளர்கள் தமிழர்கள் என்பதாலா தீர்வு வழங்குவதில் தாமதம்”, “கால்நடை பண்ணையாளர்களின் கோரிக்கையினை நிறைவேற்று”, “பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு மேய்ச்சல் தரையினை வழங்கு”, “730 நாட்கள் கடந்தும் தீர்வு வழங்காதது ஏன்” போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் தமது நியாயமான கோரிக்கையினை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோசங்களும் முன்வைக்கப்பட்டன. பாரம்பரியமாக கால்நடை வளர்ப்பாளர்களால் மேய்ச்சல் தரையாகப் பயன்படுத்தப்பட்டு வந்த மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரையில் அயல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் அத்துமீறிய விவசாய நடவடிக்கை, காடழிப்பு மற்றும் அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகளைக் கொல்லுதல், பண்ணையாளர்களை அச்சுறுத்துதல் போன்ற செயற்பாடுகளை உடன்நிறுத்தி, அத்துமீறுபவர்களை வெளியேற்றி குறித்த பிரதேசத்தை தங்களின் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக வர்த்தமானி பிரகடனப்படுத்தக் கோரி கடந்த 2023ஆம் ஆண்டு இதே நாளில் கால்நடை பண்ணையாளர்கள் தங்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்தனர். இருப்பினும், அரசாங்கங்கள் மாறினாலும் குறித்த மேய்ச்சல் தரை விடயம் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவு எந்த அரசாங்கத்தினாலும் எடுக்கப்படாமை குறித்தும் தங்களின் கோரிக்கைக்கு எந்த அரசும் ஒரு நிரந்தரத் தீர்வினை வழங்க முன்வரவில்லை என்ற நிலைப்பாட்டில் இரண்டு வருட பூர்த்தியினை தற்போதைய அரசுக்கு தங்களின் கோரிக்கையை வெளிப்படுத்தும் முகமாக இன்றைய தினம் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், இ.சிறிநாத், பிரதேச சபைத் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதன்போது அரசாங்கத்துக்கு வழங்குவதற்கான மயிலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் மகஜர் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சங்கத்தின் தலைவர் நிமலன் வழங்கினார். மயிலத்தமடு மாதவணை மேய்ச்சல் தரை பிரச்சினை : போராட்டம் தொடங்கி 2 ஆண்டுகள் பூர்த்தி ; சித்தாண்டியில் பண்ணையாளர்கள் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk
  8. 15 Sep, 2025 | 03:07 PM கடந்த 2008 முதல் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக குறிப்பிடப்பட்ட சந்தேக நபர்களின் பெயர் பட்டியலில் இருந்து முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவின் பெயர் நீதிபதியால் நீக்கப்பட்டதை இரத்து செய்யுமாறு கோரி பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை (15) அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மனு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் ; முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய அனுமதி! | Virakesari.lk
  9. 15 Sep, 2025 | 03:48 PM அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது உணர்வு பூர்வமான சந்திப்பு ஒன்று அங்கே நடந்தது. அரசியல் கைதிகளை சந்தித்துவிட்டு கனத்த இதயத்துடனும் கண்களில் கண்ணீருடனும் அரசியல் கைதிகளின் உறவுகளும் நாங்களும் வெளியே வந்தோம் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளை போகம்பரை சிறையில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், குறுகிய நேரத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் மகளை தந்தையான ஆனந்தசுதாகரன் தொட்டு உணவூட்டிய அந்த நிகழ்ச்சி சம்பவம் மனதை ரணமாக்கியது. இந்த சந்திப்பானது நிரந்தரமாக இந்த பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டுமென இந்த நாட்டின் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றோம். தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு கைதிகள் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படுவது வழமை. ஆனால் இந்த ஆண்டு கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. தமது விடுதலை இடம்பெறும் என கைதிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். மீதமாக உள்ள பத்து அரசியல் கைதிகளும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என வினயமாக ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றோம் என்றார். அரசியல் கைதிகளான தங்களது உறவுகளை சந்தித்த பின் கனத்த நெஞ்சத்துடன் பிரிந்து வந்த உறவுகள் - கோமகன் | Virakesari.lk
  10. 15 Sep, 2025 | 03:41 PM இந்த வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது என கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ தெரிவித்தார். பத்தரமுல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 18 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருவானத்தை பெறுவது என்ற அரசாங்கத்தின் இலக்கை கோடிட்டுக் காட்டியுள்ளார். முந்தைய பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல பிராந்தியங்களில் ஏற்றுமதித்துறை நிலையான வளர்ச்சியைக் காணும் நிலையில், நாடு இப்போது நிலையான மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என அதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்றுமதி வளர்ச்சியைத் தக்கவைத்து விரிவுபடுத்த புதிய சர்வதேச சந்தைகளை அரசாங்கம் தீவிரமாகத் தேடி வருவதாகவும் இதன்போது கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்ஹ தெரிவித்தார். ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 8% அதிகரிப்பு - சதுரங்க அபேசிங்ஹ | Virakesari.lk
  11. 15 Sep, 2025 | 05:46 PM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் போது அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் ஒன்று திரண்டதை குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவிய போது நான் மக்களை அழைத்துவருவதில்லை என அவர் கூறினார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்தார். ஊடகவியலாளர் : முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செப்டெம்பர் 11 ஆம் திகதி கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறும் போது அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் ஒன்று திரண்டதை கண்டோம். உங்களைப் பார்க்க யாரும் வரவில்லையா? மைத்திரிபால சிறிசேன : இல்லை, இல்லை. நான் மக்களை அழைத்துவருவதில்லை. ஊடகவியலாளர் : அதாவது, மக்கள் ஏற்பாடு செய்யப்படுகிறார்களா? மைத்திரிபால சிறிசேன : நான் மக்களை அழைத்துவருவதில்லை. முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தை நான் மதிக்கிறேன். என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நான் மக்களை அழைத்துவருவதில்லை - முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன | Virakesari.lk
  12. 10 Sep, 2025 | 06:50 PM (எம்.ஆர்,எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மட்டக்களப்பு குருக்கல் மடம் சம்பவத்தில் மரணித்தவர்களின் சடலங்களை மீள தோண்டி எடுத்து, அந்த சடலங்களை இஸ்லாமிய மத முறைப்படி நல்லடக்கம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) நிலையியற் கட்டளை 27 2இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பி்ட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், 1990 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் குருக்கள் மடம் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் சிலர் மக்கா யாத்திரைக்கு பின்னர் கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் தங்களின் வீடுகளுக்கு வாகனத்தில் திரும்பும்போது அங்கிருந்த சிறுவர்கள், முதயோர்கள் இளைஞர்கள் என அனைவரையும் விடுதலைப் புலிகள் கடத்திச் சென்று படுகொலைசெய்துள்ளனர். அது தொடர்பில் அவர்களின் உறவினர் ஒருவரினால் களுவாஞ்சிக்குடி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாட்டுக்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் போது வழக்கு விசாரணைகளின் பின்னர் புதைக்கப்பட்ட அனைத்து சடலங்களையும்தோண்டி எடுத்து, சர்வதேச நியதிகளுக்கு அமைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அந்த பிரதேசத்தை முற்றாக பாதுகாப்பாக வைக்குமாறும் இந்த நடவடிக்கைகளை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஊடாக மேற்கொள்ளுமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார். இந்த சம்பவத்தின்போது 170 முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. எனவே நிதிமன்ற உத்திரவின் பிரகாரம் இந்த விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்குமா? இந்த நடவடிக்கையை நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ள நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா? சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களிடம் தேவையான உதவிகளை பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்களா? இங்கு மரணித்தவர்களின் சடலங்களை தோண்டி எடுத்த பின்னர், அவற்றை இஸ்லாமிய மத முறைப்படி நல்லடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா என கேட்கிறேன் என்றார். குருக்கல் மடம் சடலங்களை மீள தோண்டி எடுத்து இஸ்லாமிய மத முறையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் | Virakesari.lk
  13. 10 Sep, 2025 | 06:21 PM தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன், சட்டத்தரணி மகேஸ்வரி, ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பியினரே. இப்படுகொலை தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், அது தொடர்பில் சாட்சியங்கள் அளிக்க தயாராகவுள்ளேன் என ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் உறுப்பினர் சதா என அழைக்கப்படும் சுப்பையா பொன்னையா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் மண்டைதீவு பகுதி இராணுவ முற்றுகைக்குள் இருந்தவேளை, அங்குள்ள மக்களுக்கு நாங்கள் நிவாரண பொருட்கள் கொண்டு சென்றபோது 15 - 20 பேர் அளவில் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை டக்ளஸ் தேவானந்தா பார்க்க வேண்டும் என சொல்லி இராணுவத்தினரிடம் கேட்டு, நாங்கள் நேரில் சென்று அவர்களை பார்த்தோம். அவர்களில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் இருந்தான். நாங்கள் பார்த்து வந்த சில நிமிடங்களில் வெடி சத்தம் கேட்டது. அத்தனை பேரையும் சுட்டு கொன்றுவிட்டார்கள். அதன் பிறகு நாங்கள் நெடுந்தீவு பிரதேசத்தை கைப்பற்றினோம். அவ்வேளை அங்கிருந்த அரச உத்தியோகத்தரான நிக்லஸ் என்பவரை சந்திக்க வருமாறு கேட்டிருந்தனர். அவர் தான் நேரில் வரமாட்டேன் என கூறியதும் அவரை அடித்து சித்திரவதை செய்தவேளை, அவர் உயிரிழந்துவிட்டார். பின்னர் அவரின் உடலை தூக்கில் தொங்கவிட்டனர். டக்ளஸ் தேவானந்தாவின் மெய் பாதுகாவலராக இருந்தவரை புலிகளுடன் தொடர்பு என கொலை செய்தனர். நெல்லியடியை சேர்ந்த சட்டத்தரணி மகேஸ்வரியை கொலை செய்தனர். தம்முடன் முரண்பட்ட ரமேஷ் என்கிற தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதனை கொலை செய்தனர். அந்த கொலைகளை புலிகள் செய்ததாக கூறினார்கள். ஆனால் புலிகள் அவர்களை கொலை செய்யவில்லை. இவர்களே கொலை செய்தனர். இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணியாளர் கே.எஸ்.ராஜா என்பவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வந்து தமது ஊடக பணிகளுக்காக வைத்திருந்தனர். அவரும் இவர்களுடன் முரண்பட்டபோது, காலி முகத்திடல் கடற்கரை பகுதியில் மதுபானத்திற்குள் சைனட் கலந்து கொடுத்து அவரை படுகொலை செய்தனர். மலையகத்தை சேர்ந்த மோகன் மற்றும் விஜி எனும் இருவரையும் கொலை செய்தனர். அவர்களை மலசலகூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி அவர்களின் உடல்களை பொசுக்கினார்கள். யாழ்ப்பாணத்தை சேர்ந்த சூரி என்பவரை கொழும்பில் கொலை செய்து, கடற்கரையில் அவரின் உடலை போடும்போது அப்பகுதி மக்கள் கண்ணுற்று அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தமையால் உடலை போட வந்தவர்களை அந்நேரம் பொலிஸார் கைது செய்திருந்தனர். ஈ.பி.டி.பிக்கு சொந்தமான கொழும்பு பார்க் வீதியில் இருந்த வீட்டில் பல கொலைகள் இடம்பெற்றன. இந்த படுகொலைகளுக்கு சாட்சியங்களாக நான் இருக்கிறேன். விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும், துணிந்து சாட்சி சொல்ல நான் தயார் என்றார். அற்புதன், மகேஸ்வரி, ரூபவாஹினி ராஜா ஆகியோரை கொலை செய்தது ஈ.பி.டி.பியினரே! - சதா | Virakesari.lk
  14. 09 Sep, 2025 | 04:50 PM மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த பிரபல ஹோட்டல் ஒன்றை இரு தினங்களுக்கு மூடி சீல் வைத்து மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சுதர்சனி உத்தரவிட்டுள்ளார் மட்டக்களப்பு நகரிலுள்ள குறித்த உணவு விற்பனை நிலையத்தின் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ டாக்டர் இ.உதயகுமாரின் வழிகாட்டலில் கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி. மிதுன்ராஜ் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த ஹோட்டலை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது மனிதபாவனைக்கு உதவாத பெருமளவிலான உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்தல், மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளின் மீது குறித்த ஹோட்டல் மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் மேற்கொண்ட போது குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் இருதினங்களுக்கு ஹோட்டலை சீல் வைத்து மூடுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ சுதர்ஷினி உத்தரவிட்டார் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த ஹோட்டல் பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்று மிலை(8)சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. இரு தினங்களின் பின்னர் ஹோட்டல் உரிமையாளர் ஹோட்டலினை தூய்மைப்படுத்தி மனித நுகர்விற்கு பொருத்தமான முறையில் உணவு தயாரிக்கும் இடமாக மாற்றி அமைத்தால் மீண்டும் ஹோட்டலை திறப்பதற்கான அனுமதியை பொதுச் சுகாதார பரிசோதவர்கள் வழங்குவார்கள் என கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் மேலும் தெரிவித்தார். குறித்த ஹோட்டல் உரிமையாளர் மீதான வழக்கு எது வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு! | Virakesari.lk
  15. 9 Sep, 2025 | 05:25 PM ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருள் அடங்கிய இரு கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டமைக்கு மேல் மாகாண வடக்கு குற்றபிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே காரணம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள இவ்விடயம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (08) பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் பாதாள உலக குழுவை சேர்ந்த மனுதின பத்மசிரி பெரேரா என்னும் கேல்பத்தர பத்மே மற்றும் கமென்டோ சலிந்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் இந்தோனேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நாடிற்கு அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில் குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, நாட்டினுள் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு அவசியமான மூலப்பொருளான ஒருவகை இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டமை மற்றும் மித்தெனிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் தெரியவந்தது. அதற்கமைய மித்தெனிய பகுதியிலிருந்து போதைப்பொருள் தயாரிப்புக்கான இரசாயனமும் மீட்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சர்வதேச புலனாய்வு பிரிவு ஏற்கனவே தகவல் அளித்திருந்த போதும், சிவப்பு அடையாளமிடப்பட்ட இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே விடுவித்ததாக சமூக வலத்தளங்களில் உண்மைக்குப்புறம்பான கருத்துகள் பகிரப்பட்டுள்ளன. இதுபோன்ற தேவையற்ற வதந்திகளால் விசாரணை அதிகாரிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன் விசாரணைகளுக்கும் இடையூறு ஏற்படுகின்றது. ஆகையால் விசாரணைகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்ப முயலும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார் | Virakesari.lk
  16. இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது. மேலும்..... Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital Israel has carried out a strike on senior Hamas leaders in Qatar's capital Doha A Hamas official says its negotiating team was targeted during a meeting Explosions are heard and smoke is rising above Doha Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital - BBC News
  17. 08 Sep, 2025 | 06:21 PM யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்த வகையில், வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அதேபோல உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இதேவேளை திடீரென வீசிய புயல் காற்றினால் செல்வச் சந்நிதி ஆலயத் திருவிழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் வியாபாரிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர். யாழில் பலத்த காற்றுடன் கூடிய மழை! - 12 பேர் பாதிப்பு | Virakesari.lk
  18. 05 Sep, 2025 | 02:39 PM மீன்வளங்களின் இழப்பைத் தடுக்கவும், உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கவும், 2 ஆண்டுகளில் 250 நிரந்தர நன்னீர் நீர்த்தேக்கங்களில் தடுப்பு வலைகளை நிறுவும் திட்டத்திற்கு அராசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக நீர் திறக்கப்படும்போது, வருடந்தோறும் நன்நீர்த்தேக்கம் ஒன்றிலிருந்து 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கிலோகிராம் வரையிலான மீன்கள் அடித்துச் செல்லப்படுவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இனப்பெருக்க திறன் கொண்ட முதிர்ந்த மீன்களின் இழப்பு, எதிர்கால மீன்வளத்தை கடுமையாகக் குறைத்துள்ளது. மேலும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சத்தான உணவை வழங்குவதில் நன்னீர் மற்றும் மீன்வளர்ப்பு விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இலங்கையில் 95 வகையான நன்னீர் மீன்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் 52 இனங்கள் நாட்டிற்கு சொந்தமானவை என குறிப்பிடப்படுகிறது. 250 நீர்த்தேக்கங்களில் மீன் வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை முன்னெடுப்பு | Virakesari.lk
  19. 05 Sep, 2025 | 04:41 PM கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளையில் இராணுவத்தினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 35வது ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை (5) அனுஷ்டிக்கப்பட்டதுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி போராட்டமும் நடத்தப்பட்டது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முகாமில் தஞ்சமடைந்தவர்களில் 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டாலும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை இழந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெறுகிறார்கள். இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அ.அமலநாயகி, கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர். இதன்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. “எங்கே எங்கே உறவுகள் எங்கே”, “எமக்கு எமது உறவுகள் வேண்டும்”, “எமக்கு நீதி விசாரணை வேண்டும்”, “எமக்கு சர்வதேச விசாரணை வேண்டும்”, “1990-09-05அன்று வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் எங்கே” போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழகத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து கொண்டுசெல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் நினைவாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன. 1990.09.05 அன்று அகதி முகாமுக்குள் நுழைந்த இராணுவம் தங்களை அறிமுகப்படுத்தி, பின்னர் ஒலிபெருக்கி மூலம் குறிப்பிட்ட வயதுடையவர்களை கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் ஒன்றுகூடுமாறு அறிவித்தல் விடுத்துள்ளனர். மைதானத்தில் வரிசையில் நிறுத்தப்பட்டவர்கள் இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்ட முகமூடி மனிதர்கள் முன் நிறுத்தப்பட்டு, முகமூடி மனிதர்களால் தலையாட்டப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டதாக இந்த சம்பவத்தை 35 வருடங்கள் கடந்தும் தங்கள் அனுபவ ரீதியாக பலரும் நினைவுகூருகிறார்கள். இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழுவானது பாதுகாப்பு அமைச்சு உட்பட பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்தது. 1990 செப்டம்பர் 5ஆம் திகதி 32 பேரை மட்டுமே விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் 24 மணிநேரத்துக்குள் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள் எனவும் அவ்வேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த எயர்மார்சல் பெர்னாண்டோ பதில் அனுப்பியிருந்தார். இந்த பதிலை மட்டக்களப்பு சமாதானக் குழு நிராகரித்தது. விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு மூன்றாம் நாள் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு சென்று சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக இருந்த ஜெரி சில்வா உட்பட பாதுகாப்பு உயர்மட்டக் குழுவினரும் சென்றிருந்தனர். இராணுவத்தினரே எமது உறவுகளை அழைத்துச் சென்றதாக மக்களும் முகாம் பொறுப்பாளர்களும் இராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்த வேளை கடும் தொனியில் இராணுவ அதிகாரிகள் பதிலளித்ததாக கூறப்படுகிறது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைக்காக ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு முன்னிலையில் பலர் சாட்சியமளித்தனர். ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே செப்டெம்பர் 5ஆம் திகதி 158 பேரையும், 23ஆம் திகதி 16 பேரையும் கைது செய்து கொண்டுசென்றனர் என தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுவரை இவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் 35வது வருடமாக உறவுகள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு பல்கலையில் தஞ்சமடைந்தபோது இராணுவத்தினால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 158 பேருக்கு நினைவேந்தல் | Virakesari.lk
  20. இலங்கையில் HIV தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2025 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்ளை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வியத்தகு அதிகரிப்பைக் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி,2025 ( National STD/AIDS Control Programme - NSACP 2025) ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் (ஜனவரி முதல் மார்ச் வரை) மொத்தம் 230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு காலாண்டில் பதிவான அதிகபட்ச சம்பவங்கள் 2025 ஆம் முதல் காலாண்டில் பதிவாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பதிவான சம்பவங்களில், 30 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர் இவர்கள் 15–24 வயதுக்குட்பட்டவர்கள், ஏனைய சம்பவங்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள். 2025 ஆம் ஆண்டில் பதிவான HIV தொற்றுகளின் ஆண்-பெண் விகிதம் 6.6:1 ஆக காணப்படுகின்றது. மேலும், 2025 ஆம் ஆண்டில் இதுவரை எச்.ஐ.வி/எய்ட்ஸ் (HIV/AIDS) தொடர்பான 10 இறப்புகள் பதிவாகியுள்ளன 2024 ஆம் ஆண்டில், மொத்தம் 47 நபர்கள் எச்.ஐ.வி/எய்ட்ஸ் (HIV/AIDS) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அந்த வகையில் இலங்கை கடந்த ஆண்டில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான HIV பரிசோதனைகளை நடத்தப்பட்டது. அதிகரித்து வரும் எச்.ஐ.வி நோயாளிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் சமீபத்தில் இலங்கையின் பாடசாலை பாடத்திட்டத்தில் ஆணுறை பயன்பாடு, முன்-வெளிப்பாடு தடுப்பு (PrEP), மற்றும் பிந்தைய-வெளிப்பாடு தடுப்பு (PEP) உள்ளிட்ட HIV/STI தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பரிந்துரைக்கப்பட்டது. Tamilmirror Online || இலங்கையில் HIV தாண்டவம்
  21. யாழில் தனியார் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் தனியார் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் இணையதள வசதி அண்மைக்காலமாக மந்தமான நிலையில் காணப்படுகிறது. இதனை சரி செய்யும் வகையில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தால் தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று ஆழியவளையில் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் இதனை அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் குடும்பஸ்தர் ஒருவர் இதற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். புற்றுநோய் மற்றும் கண் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் இந்த தொலைத்தொடர்பு கோபுரத்தை இதில் நிறுவுவதால் கதிர்வீச்சால் தாம் மேலும் பாதிக்கப்பட்டு, உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பிருப்பதால் தமது பகுதியில் குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைக்க வேண்டாம் என பிரதேச செயலகம், பிரதேச சபையிடம் கடிதம் மூலம் முறைப்பாடளித்துள்ளார் சம்பவ இடத்திற்கு நேற்று வருகை தந்த பருத்தித்துறை பிரதேச சபை அதிகாரிகள் குறித்த தொலை தொடர்பு கோபுரம் எந்தவித அனுமதியும் இன்றி அமைக்கப்படுவதை சுட்டிக்காட்டி உரிய முறையில் அனுமதி பெற்ற பின் பணிகளை தொடருமாறும் அதுவரை பணிகளை இடைநிறுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கிச் சென்றுள்ளனர்.[ஒ] யாழில் தனியார் தொலை தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு!
  22. 03 Sep, 2025 | 05:05 PM யாழ். புதிய செம்மணி வீதிச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக டிப்பர் வாகனங்கள் காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பயணிப்பதற்கு முற்றாக தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனைய பாரவூர்திகள் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரை மற்றும் நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை குறித்த வீதியூடாக பயணிப்பதற்கு தடை விதித்து பொதுப் போக்குவரத்தினை இலகுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்பள்ளி சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பணிக்குச் செல்லும் நேரங்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு பொதுப்போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்குடன் இவ்விடயங்கள் குறித்து நல்லூர் பிரதேச சபையினால் தீர்மானிக்கப்பட்டு, இந்த போக்குவரத்துத் தடை நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் பலகைகள் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, வாகன சாரதிகள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றுமாறு நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் அறிவுறுத்தியுள்ளார். யாழ். ஆடியபாதம் வீதியில் டிப்பர், பாரவூர்தி வாகனங்களுக்கு போக்குவரத்துத் தடை | Virakesari.lk
  23. இலங்கை வரலாற்றில் முதல் ஜனாதிபதியாக கச்சைதீவுக்குள் நேற்று கால்வைத்தார் அநுர! இந்தியாவுக்கான மறைமுக எச்சரிக்கையா? கச்சைதீவு தொடர்பில் தமிழகத்தில் அண்மைக்காலமாகப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றுமாலை கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டார். நிகழ்ச்சி நிரலில் இல்லாத, திடீர்ப் பயணமாக இது அமைந்தது. தமிழகத்தில் எதிர்வரும் வருடத்தின் இரண்டாவது காலாண்டில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் தமது பிரதான தேர்தல் பரப்புரைக்களமாக கச்சதீவைப் பயன்படுத்தி வருகின்றன. கச்சதீவை இலங்கையில் இருந்து மீட்டு, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்பதாகவே பல்வேறு கட்சிகளும் வலியுறுத்திவரும் நிலையில், ஜனாதிபதி அநுர கச்சதீவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளமை இராஜதந்திர வட்டாரங்களில் மிகவும் முக்கியமான விடயமாகப் பார்க்கப்படுகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர். 'கச்சதீவு இலங்கைக்குரியது. அதை இந்தியாவிடம் ஒப்படைக்கும் எண்ணம் இலங்கைக்கு இல்லை. இந்த விடயம் தொடர்பில் இராஜதந்திரிகள் எவரும் கருத்துத் தெரிவிக்கவில்லை. தேர்தலை அடிப்படையாக வைத்து தமிழகத் தலைவர்கள் மேற்கொள்ளும் பரப்புரைகளைக் கண்டுகொள்ளத் தேவையில்லை' என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். அதை நிரூபிக்கும் வகையிலேயே அநுரவின் நேற்றைய பயணம் அமைந்திருந்ததாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை வரலாற்றில் முதல் ஜனாதிபதியாக கச்சைதீவுக்குள் நேற்று கால்வைத்தார் அநுர!
  24. செம்மணிப் புதைகுழிக்கு செல்லவில்லை ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செம்மணிப் புதைகுழிக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளார். ஜனாதிபதி செம்மணிப் புதைகுழியையும் பார்வையிடவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனால், ஜனாதிபதி செம்மணிக்குச் செல்வாரா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. எனினும் செம்மணிக்குச் செல்வதை அநுர தவிர்த்துள்ளார். செம்மணிப் புதைகுழிக்கு செல்லவில்லை ஜனாதிபதி
  25. புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார யாழ்ப்பாணத்துக்கு நேற்று வந்திருந்த நிலையில், அவர் எப்போது யாழ்ப்பாணம் வருகின்றார்? யாழ்ப்பாணத்தில் எங்கு தங்கியிருக்கின்றார்? என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகள் உட்பட அரச பெருந்தலைகள் எவருக்கும் தெரியாமல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அநுர யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்தப்பயணத்தின்போது, முதலாவது நிகழ்வாக காலை 10 மணிக்கு மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பதாக இருந்தது. ஜன திபதியின் பயணத்தை முன்னிட்டு புலனாய்வாளர்கள் உச்சக்கட்டக் கண்காணிப்பைச் செலுத்தியிருந்தனர். இதனால், 31ஆம் திகதி நள்ளிரவே ஜனாதிபதி இராணுவக் காவலரண்களை தாண்டிவிட்டார் என்ற தகவல் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளது. எனினும், யாழ்ப்பாணத்துக்குள் ஜனாதிபதி நுழைந்துவிட்டாரா? அவர் எங்கு சென்றார்? என்று அவர்களால் தொடர்ச்சியாக அறியமுடியவில்லை. இந்த விடயங்கள் தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாத நிலையில் நேற்று அதிகாலை பாதுகாப்பு வட்டாரங்களிலும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் பெரும் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மயிலிட்டித் துறைமுக அபிவிருத்திப் பணிகளுக்காக எந்த வாகனத் தொடரணியும் இல்லாமல் தனி வாகனத்தில் ஜனாதிபதி சென்று இறங்கியபோதே, ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தான் தங்கியிருந்தார் என்ற விடயம் புலனாய்வு அதிகாரிகளுக்கும் அரச வட்டாரங்களுக்கும் தெரியவந்துள்ளது. புலனாய்வு அதிகாரிகளுக்கு 'தண்ணிகாட்டிய' ஜனாதிபதி!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.