Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 2026 தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சியும் படு வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது. தேர்தல் வியூகங்களால் பேர வலிமையை அதிகமாக்க முடியுமா என ஒவ்வொரு கட்சியும் திட்டம் தீட்டிக்கொண்டிருக்கும் சமயத்தில், சீமான் ஆடு மாடுகள், மரங்களுக்காக மாநாடு போட்டுக் கொண்டிருக்கிறார். தேர்தலுக்கு நாதகவின் வியூகம்தான் என்ன? கட்சி தொடங்கியது முதல் இப்போதுவரை சீமான் இரண்டு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். ஒன்று தமிழ்த் தேசியம், மற்றொன்று தனித்துப் போட்டி. 2016 சட்டப்பேரவை தேர்தலில் 1.1 சதவீத வாக்குகளுடன் தொடங்கிய நாம் தமிழர் கட்சியின் பயணம், 2024 மக்களவைத் தேர்தலில் 8.2 சதவீதம் ஆனது. இதனால் இப்போது அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகவும் மாறியுள்ளது நாதக. தேர்தலுக்குத் தேர்தல் வாக்கு சதவீத அடிப்படையில் வளர்ச்சியைக் கண்டாலும், இதுவரை ஒரு தொகுதியில் கூட நாதக வென்றதில்லை என்ற விமர்சனங்களும் அதிகமாகி உள்ளது. ஆனாலும் கூட, சமசரமும் இல்லை, கூட்டணியும் இல்லை என 2026 தேர்தலுக்கு சுமார் 100 வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் சீமான்.தொடக்கத்தில் விஜய்யோடு கூட்டணி வைக்கும் எண்ணத்தோடு பேசி வந்த சீமான், பெரியார் விவகாரத்தால் தவெகவை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். இப்போது இணையத்தில் நாதக, தவெகவினர் இடையேயான யுத்தம் சூடு பறக்கிறது. இப்படி அரசியல் களமே அனல் பறக்கும் வேளையில்தான், தனி ரூட்டில் ஆடு மாடுகள், மரங்கள், மலைகள், தண்ணீருக்கு மாநாடு நடத்திக்கொண்டிருக்கிறார் சீமான். சீமானின் வியூகம் என்ன? - தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் சீமானின் வாக்கு வங்கி தனித்துவமானது. ஏனென்றால், சீமான் பிரபல நடிகரும் அல்ல, பெரிய அரசியல் பின்புலம் கொண்டவரும் அல்ல. இன்னும் சொல்லப்போனால் தேர்தல் செலவுகளுக்கு கூட அவர்களிடம் பெரிதாக நிதியில்லை. இருப்பினும் 8.2 சதவீத வாக்குகள், அதாவது சுமார் 36 லட்சம் பேர் சீமானுக்கு வாக்களித்துள்ளனர். சீமானின் வாக்காளர்களில் பெரும்பாலானோர் இளையோர். அதேபோல, தமிழ்த் தேசியம், சுற்றுச்சூழல், இயற்கை, தமிழர் தொன்மம் எனும் கொள்கை கொண்டோர் நாதகவில் அதிகம் உள்ளனர். இவர்கள்தான் அக்கட்சியின் நிலைத்த வாக்கு வங்கி. இயற்கை, பல்லுயிரியம் பற்றி சீமான் பேசும் பல வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகும். விஜய்யின் அரசியல் வருகை, சினிமா பாசம் கொண்ட இளையோர் மற்றும் பொதுத்தளத்தில் ஒரு சலசலப்பை உருவாக்கியுள்ளது. இது எல்லா கட்சிகளுக்கும் சேதாரம் உண்டாக்குவதைப் போல, நாதக வாக்கு வங்கிக்கும் பாதகத்தை உருவாக்கலாம் என்ற பேச்சு உள்ளது. எனவேதான், தனது ‘முதன்மை வாக்கு வங்கி’யான தமிழ்த் தேசியம், இயற்கை சூழலியல் வாக்குகளை உறுதிப்படுத்த இரு உத்திகளை கையில் எடுத்துள்ளார். தமிழ்த் தேசியத்துக்கு பெரியார், திமுக எதிர்ப்பை வலுவாக்கி வருகிறார். மற்றொரு புறம் அறிவுசார், சூழலியல் தளத்தில் உள்ள வாக்குகளை வலுப்படுத்த மரங்கள், ஆடு மாடுகள், மலைகள், தண்ணீருக்கான மாநாடுகளை நடத்தி வருகிறார். சில கட்சிகளால் விமர்சிக்கப்பட்டாலும், சீமானின் ஆதரவுத் தளம் மட்டுமின்றி பொதுத்தளத்திலும், நாதகவின் ஆடு மாடுகளுக்கான மாநாடு, மாடு மேய்க்கும் போராட்டம், மரங்களின் மாநாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வாக்கு அரசியல், எதிர்ப்பு அரசியலுக்கு மத்தியில் சூழலியல் சார்ந்த போராட்டங்களை சீமான் முன்னெடுப்பது, மாற்றம் விரும்புவோர் மத்தியில் நல்ல இமேஜை உருவாக்கியிருப்பதையும் பார்க்க முடிகிறது. மாடுகள் முன்பு சீமான் பேசியது முதலில் விமர்சிக்கப்பட்டது, மேய்ச்சல் உரிமை சார்ந்த முன்னெடுப்பு என அது மாறியபோது விமர்சனங்கள் அடங்கின. மரங்களோடு சீமான் பேசியதை வைரலாக்கி விமர்சித்தார்கள். அதே கருத்தை நடிகர் சூர்யா பேசியதை பரப்பி பதிலடி கொடுத்தார்கள் தம்பிகள். இன்னொரு கோணத்தில் பார்த்தால், ஆடு மாடுகள் வளர்ப்பு, மரங்கள் வளர்ப்பு, மலை சார்ந்த வாழ்க்கை, தண்ணீர் சார்ந்த தொழில் என ஒவ்வொன்றும் சில சமூகங்களோடு தொடர்புடையது. எனவே இது சார்ந்த வாக்குகளுக்கும் சீமான் குறிவைக்கிறார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இந்த கணக்கில்தான் பனையேறி கள் இறக்கும் போராட்டத்தையும், நெசவாளர் வாழ்வுரிமை மாநாட்டையும் சீமான் சமீபத்தில் நடத்தினார். தேர்தல் நெருக்கத்தில் வேளாண்மை, மீன்பிடித் தொழில், தமிழ் வணிகர்கள் பாதுகாப்பு என பல்வேறு சமூகங்களை குறிவைக்கும் வகையிலான மாநாடுகளுக்கும் நாதக திட்டமிட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் கூட்டணி, கூடுதல் தொகுதிகள், கூடுதல் நிதி என பேரம் பேசிக்கொண்டிருக்கும் சூழலில், தனி ரூட்டில் சீமான் பயணிக்கிறார். எப்படி பார்த்தாலும் மாடுகள், மரங்கள், மலைகள் என வித்தியாசமான மாநாடுகளால் சமூக ஊடகங்களிலும் , அரசியல் களத்திலும் எப்போதும் லைம் லைட்டிலேயே இருக்கிறார் சீமான். இது வாக்குகளாக மாறுமா என தேர்தலின் போதுதான் தெரியும் மரங்கள், மாடுகள், தண்ணீருக்கு மாநாடு: சீமானின் வியூகம் வெல்லுமா? - ஒரு பார்வை | Conference for trees cows water Will Seeman strategy win - hindutamil.in
  2. மூன்று நாள்களாக இந்தியர்களை எதிர்த்து போராடும் ஆஸ்திரேலிய மக்கள்; கண்டிக்கும் அரசு - என்ன பிரச்னை? இந்தியர்களுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் பெரும் போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நடந்து வருகிறது. இந்தப் போராட்டம் ஆஸ்திரேலியாவில் குடியேறி இருக்கும் அனைத்து வெளிநாட்டு மக்களுக்கும் எதிரானது. இருந்தாலும், இது இந்தியர்களுக்கு எதிரான போராட்டம் என்று பார்க்கப்படுவதற்கான காரணம்... ஆஸ்திரேலியர்களுக்கு அடுத்ததாக அந்த நாட்டில் அதிகமாக இருக்கும் மக்கள் தொகை இந்தியாவினுடையது ஆகும். இந்தியர்களின் மக்கள்தொகை 2021-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், அங்கே கிட்டத்தட்ட 9.76 லட்சம் இந்தியர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள்தொகையே 2.6 கோடி தான். இந்தியர்கள் போக, பிற நாட்டினரும் ஆஸ்திரேலியாவில் அதிகம் குடியேறி இருக்கின்றனர். போராட்டம் | March for Australia என்னப் பிரச்னை? இது தான் ஆஸ்திரேலிய மக்களின் கோபத்திற்கு காரணம். 'மார்ச் ஃபார்‌ ஆஸ்திரேலியா' என்று பெயரிட்டு நடத்திவரும் போராட்டம் குறித்து போராட்டக்காரர்கள் கூறுவதாவது... "ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெளிநாட்டு மக்கள் உள்நாட்டில் செயலாற்றுகின்றனர். உள்நாட்டு மக்களைப் பிரிக்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். அதனால், ஆஸ்திரேலியாவின் சொந்த மக்களுக்காகவும், கலாச்சாரத்திற்காகவும், தேசத்திற்காகவும், அதன் எதிர்காலத்தின் உரிமைக்காகவும் இந்தப் போராட்டம்" என்று தெரிவிக்கின்றனர். இந்தப் போராட்டம் ஏதோ ஒரு பகுதியில் மட்டும் நடக்கவில்லை. ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்ன், பிரிஸ்பேன், கான்பெர்ரா, அடிலெய்டு, பெர்த் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அதிக இந்தியர்கள் எப்படி? இந்தப் போராட்டத்தின்போது சில பதாகைகளில் இந்தியர்களுக்கு எதிராக எழுதப்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமான ஒன்று, '100 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவிற்குள் கிரேக்கர்கள் மற்றும்‌ இத்தாலியர்கள் குடியேறியதை விட, கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக இந்தியர்கள்‌ குடியேறி இருக்கிறார்கள்' என்பது ஆகும். 'எப்படி இவ்வளவு இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறினர்' என்ற கேள்வி எழுவது நியாயமானது தான். ஆனால், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் இப்போது குடியேற தொடங்கவில்லை. 1800-ம் ஆண்டு காலக்கட்டத்திலேயே, கூலித் தொழிலாளர்களாக இந்தியர்களை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து சென்றனர் பிரிட்டிஷார்கள். 1970-களில் வெள்ளையர் அல்லாதவர்களின் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்திய இனவெறி கொள்கையான 'வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை' ரத்து செய்யப்பட்ட பின்னர், அந்தக் காலக்கட்டத்தில் இந்திய இன்ஜினீயர்களும், 1990 காலக்கட்டத்தில் இந்திய ஐ.டி ஊழியர்களும் மெல்ல மெல்ல ஆஸ்திரேலியாவில் குடியேறத் தொடங்கினர். போராட்டம் | March for Australia 2006-ம் ஆண்டு அப்போதைய ஆஸ்திரேலிய அரசு, இந்திய மாணவர்களுக்கு எளிதாக குடியுரிமைப் பெற வழி செய்தது. இதன் விளைவே, தற்போதைய நிலை ஆகும். அதிக வெளிநாட்டினர் குடியேறும் டாப் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. இங்கு இருக்கும் எளிய சட்டதிட்டங்கள் தான் வெளிநாட்டினர் அங்கே அதிகம் குடியேறுவதற்கான காரணம் ஆகும். இதனால், இந்தியர்கள் தவிர்த்து, பிற நாட்டினரும் ஆஸ்திரேலியாவில் அதிகம் குடியேறி உள்ளனர். அரசாங்கம் என்ன சொல்கிறது? ஆஸ்திரேலிய அரசாங்கமோ, இந்தப் போராட்டங்களைக் கண்டித்து, "இனவெறி மற்றும் இன மையவாதம் அடிப்படையிலான தீவிர வலதுசாரி செயல்பாடுகளுக்கு இந்த நாட்டில் இடம் கிடையாது" என்று கடுமையாக எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். விரைவில் ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் இந்திய அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான போராட்டம்: முக்கிய காரணங்கள் - Vikatan
  3. 28 Aug, 2025 | 05:20 PM இலங்கையின் மிக முக்கியமான கடல்சார் பாரம்பரியங்களில் ஒன்றான கொடவாய கப்பற் சிதைவிலிருந்து மீட்கப்பட்ட அரிய தொல்பொருட்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி ஒன்று கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BMICH ) நடைபெறவுள்ளது. அமெரிக்கத் தூதரகமும், மத்திய கலாச்சார நிதியத்தின் கடல்சார் தொல்பொருள் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சி, BMICH Cinema Lounge இல் செப்டம்பர் 3 முதல் 5 வரை பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பழமையான கப்பல் தெற்கு இலங்கையில் உள்ள கொடவாய மீன்பிடிக் கிராமத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 2,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட கப்பல் சிதைவு, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பழமையான மரக்கப்பல் சிதைவு என அறியப்படுகிறது. கி.மு. 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இக்கப்பல், இந்து சமுத்திரத்தில் பண்டைய காலத்தில் நடைபெற்ற வர்த்தகம் மற்றும் கடல்வழிப் பயணங்கள் குறித்த அரிய தகவல்களை வெளிப்படுத்துகின்றது. அமெரிக்காவும் இலங்கையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு விடயமான இறையாண்மை உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, அமைதியினையும், பாதுகாப்பினையும் பராமரிப்பதில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் வகிக்கும் முக்கிய பங்கினை இந்தக் கண்காட்சி நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் பங்களிப்பு இந்த திட்டத்திற்கு அமெரிக்க அரசாங்கத்தின் கலாச்சாரப் பாதுகாப்பிற்கான தூதுவர்கள் நிதியம் (AFCP) நிதியளித்துள்ளது. இந்த நிதியுதவியின் மூலம், களிமண் மட்பாண்டங்கள், அரைக்கும் கற்கள், கண்ணாடி மற்றும் உலோக பாளங்கள், கார்னிலியன் மணிகள் உள்ளிட்ட பல தொல்பொருட்கள் நிபுணர்களால் மீட்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்புகள், பிராந்திய வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் பண்டைய காலத்தில் இலங்கை வகித்த முக்கிய பங்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. கண்காட்சியின் நோக்கம் இந்தக் கண்காட்சி மற்றும் ஆய்வரங்கம், கொடவாய தளத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு, இலங்கையின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. இக்கண்காட்சி செப்டம்பர் 3 ஆம் திகதி காலை 11:00 மணிக்கு பொதுமக்களுக்காகத் திறக்கப்படும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை திறந்திருக்கும். கண்காட்சிக்குப் பின்னர், மீட்கப்பட்ட தொல்பொருட்கள் காலியில் உள்ள கடல்சார் தொல்பொருள் நூதனசாலையில் காட்சிப்படுத்தப்படும். இந்தப் புதிய முயற்சி, பாரம்பரியங்களைப் பாதுகாப்பதிலும், எதிர்கால ஆராய்ச்சியை மேம்படுத்துவதிலும் அமெரிக்கா மற்றும் இலங்கை இடையே நிலவும் நீடித்த கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது. மேலும், அமைதி, பாதுகாப்பு மற்றும் இறையாண்மை உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கிய பங்கை நினைவூட்டுவதாகவும் இக்கண்காட்சி அமைகிறது. கொடவாய கப்பற் சிதைவு: இலங்கையின் பழமையான கடல்சார் வரலாற்றை எடுத்துக்காட்டும் அமெரிக்க - இலங்கை கண்காட்சி | Virakesari.lk
  4. 28 Aug, 2025 | 06:27 PM (இராஜதுரை ஹஷான்) எல்லை நிர்ணய குழுவொன்றை மீண்டும் நியமித்தால் மாகாண சபைத் தேர்தலை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் நடத்த முடியாத நிலை ஏற்படும். அரச அதிகாரிகள் மற்றும் மாகாண ஆளுநர்களின் நிர்வாகத்தை காட்டிலும் அரசியல்வாதிகளின் நிர்வாகம் நூற்றுக்கு நூறு சதவீதம் சிறந்தது. தேர்தலை பிற்போடுவதற்காகவே எல்லை நிர்ணய குழு நியமிக்கப்படும். தேர்தலை பிற்போட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் குழுவை சவாலுக்குட்படுத்துவார்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமை தொடர்பில் பெப்ரல் அமைப்பு 28ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது, 2017 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒருசில தந்திரமான நடவடிக்கைகளினால் மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டது.இதனை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இதன் பிரதிபலனாகவே மாகாணசபைகளின் பதவி காலத்தை குறைக்க முடியுமே தவிர அதிகரிக்க முடியாது என்று தீர்ப்பு கிடைக்கப்பெற்றது. பாராளுமன்றத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் உரிய நடவடிக்கைகளை அப்போது எடுக்கவில்லை.அதுவே தவறு.அறிக்கை தாமதப்படுத்தியவர்களே தவறிழைத்தார்கள். எல்லை நிர்ணய குழுவொன்றை மீண்டும் நியமித்தால் மாகாண சபைத் தேர்தலை இன்னும் மூன்று ஆண்டுகளுக்கும் நடத்த முடியாத நிலை ஏற்படும்.அரச அதிகாரிகள் மற்றும் மாகாண ஆளுநர்களின் நிர்வாகத்தை காட்டிலும் அரசியல்வாதிகளின் நிர்வாகம் நூற்றுக்கு நூறு சதவீதம் சிறந்தது. அரசியல்வாதிகளால் இடம்பெறும் ஊழல் மோசடிகளை தடுக்க முடியும்.அரச அதிகாரிகள்,ஆளுநர்களினால் இடம்பெறும் ஊழல்மோசடிகளை எவராலும் தடுக்க முடியாது.மீளாய்வு குழுவுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திலும் சிக்கல் காணப்பட்டது.தேர்தலை பிற்போடுவதற்காகவே எல்லை நிர்ணய குழு நியமிக்கப்படும்.தேர்தலை பிற்போட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்கள் குழுவை சவாலுக்குட்படுத்துவார்கள் என்றார். எல்லை நிர்ணய ஆணைக்குழு மீண்டும் நியமிக்கப்பட்டால் மாகாண சபைத் தேர்தல் 3 ஆண்டுகள் தாமதம் – மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை | Virakesari.lk
  5. 28 Aug, 2025 | 07:13 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் 28ஆம் திகதி வியாழக்கிழமை மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 164 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 36வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 8 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு | Virakesari.lk
  6. 27 Aug, 2025 | 04:13 PM பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை குழுவின் (HDP) உறுப்பினர்கள் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் பிரதமர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கை பிரதமர் ஹரிணி சந்தித்தார். இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் பொருளாதாரம், சட்டங்கள், அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றை வலுப்படுத்துவதில் ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமை குழுவின் பங்களிப்பு எடுத்துக்காட்டப்பட்டது. இதன்போது, பிரதமர், இலங்கையில் பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, சட்டவாக்கத்தின் பலம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு அமெரிக்க காங்கிரஸ் சபையின் ஜனநாயக ஒத்துழைப்புக் குழுத் (HDP) திட்டத்தின் பங்காளித்துவத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் கலந்துகொண்ட HDP பிரதிநிதிகள், பாராளுமன்றத்துடன் முன்னெடுக்கப்படும் கண்காணிப்புச் செயல்முறை, குடிமக்களின் பங்களிப்பு மற்றும் டிஜிட்டல்மயமாக்கல் தொடர்பில் அவர்களது பங்களிப்பை பற்றிச் சுட்டிக்காட்டியதோடு, இக்கலந்துரையாடலின் போது பாராளுமன்றத்திலும் தேசிய தலைமைத்துவத்திலும் பெண்களின் பங்களிப்பு மற்றும் தொழில் படையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது அரசியலில் பெண்களின் பங்களிப்பு மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung, பாராளுமன்ற ஜனநாயக ஒத்துழைப்பு குழுவின் (HDP) நிறைவேற்றுப் பணிப்பாளர் Derek Luyten,, பிரதமரின் செயலர் பிரதீப் சபுதந்திரி, பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலர் சாகரிகா போகாவத்த ஆகியோர் உட்பட வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பிரதமர் ஹரிணி - அமெரிக்கத் தூதர் ஜூலி சங் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கிடையில் கலந்துரையாடல் | Virakesari.lk
  7. 27 Aug, 2025 | 05:43 PM இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் வீதிக்கு குளிரூட்டப்பட்ட இரண்டு பேருந்துகள் திருத்தப்பட்டு மீள் பயன்பாட்டுக்காக இன்று (27) கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இந்த இரண்டு பேருந்துகளும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்ட விருந்தினர்களால் நாடா வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு மீள கையளிக்கப்பட்டது. சமீபத்தில் இலங்கை போக்குவரத்து சபை களஞ்சியத்தால் பழுது பார்க்கப்பட்ட இந்த இரண்டு குளிரூட்டப்பட்ட பேருந்துகளும் யாழ்ப்பாணம் – கொழும்பு சேவைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சிறீபவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபை துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர். குளிரூட்டப்பட்ட இரண்டு பேருந்துகள் யாழ். வீதியில் மீண்டும் சேவையில்! | Virakesari.lk
  8. Published By: Vishnu 27 Aug, 2025 | 07:24 PM செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 169 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 158 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 35வது நாளாக இன்றும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. செம்மணி-சித்துபாத்தி புதைகுழியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு | Virakesari.lk
  9. 26 Aug, 2025 | 04:47 PM வடக்கில் எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் , அதனை எதிர்ப்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது என தமிழ் மக்கள் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கவலை தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நடைப்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் சர்வதேச மைதானம் அமைக்கப்படுவதற்கு தற்போது சில எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளதை அவதானித்துள்ளோம். வடக்கில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். அதற்காக பலரும் நீண்ட காலமாக முயற்சி செய்கின்றனர். அதற்காக பல்வேறு இடங்கள் பரிந்துரைக்கப்பட்டு, மண்டைதீவை தெரிவு செய்தனர். வடமாகாண சபை இயங்கிய கால பகுதியில் கூட அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவை எதனையும் சாத்தியமாக்க தெற்கில் உள்ள எவரும் விரும்பவில்லை. எங்கள் மண்ணின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சர்வதேச தரத்திலான வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும். அதற்காக சர்வதேச விளையாட்டு மைதானம் , சர்வதேச தரத்திலான துடுப்பாட்ட அக்கடமி தேவை. அதற்காக இலங்கை துடுப்பாட்ட சங்கத்துடன் பல்வேறு தடவைகள் பேச்சுக்கள் நடாத்தி கோரிக்கைகளையும் முன் வைத்தும் அது ஏதேனும் சாத்தியமாகவில்லை. தற்போது சர்வதேச மைதானத்தின் ஆரம்ப பணிகள் நடைபெறவுள்ளதாக அறிகிறோம். அது வரவேற்க தக்கது. சர்வதேச தரத்திலான மைதானம் வரும் போதே, எமது வீரர்களுக்கு வாய்ப்புக்கள் அமையும். அது மாத்திரமின்றி பொருளாதார அபிவிருத்தியை நோக்கியும் நாம் முன்னேற முடியும். சர்வதேச மைதானம் அமையப்பெற்று , சர்வதேச போட்டிகள் நடைபெறுமாக இருந்தால், சர்வதேச வீரர்கள், ரசிகர்கள் என பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அதனூடாக எமது சுற்றுலா துறை முன்னேற்றம் அடையும். தற்போது எந்த அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், அதனை எதிர்ப்பது என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருவது கவலைக்குரிய விடயம். சுற்று சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் ஒரு அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டால் அதனை நாம் வரவேற்க வேண்டும். மண்டைதீவில் மைதானம் அமைக்கப்படுவதால், சுற்று சூழலுக்கு பெரும் பாதகம் ஏற்பாடு என்பது எனது நிலைப்பாடு ,அவ்வாறு பாதகம் இருந்தால், அது தொடர்பில் தெரியப்படுத்த வேண்டும் என்றார். மண்டைதீவில் சர்வதேச மைதானம் வேண்டும் ; சட்டத்தரணி வி. மணிவண்ணன் | Virakesari.lk
  10. பிணையில் விடுதலையானார் ரணில் ! 26 Aug, 2025 | 07:26 PM குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை கடந்த 22 ஆம் திகதி அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நோய் நிலைமையை கருத்திலெடுத்த கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்கியுள்ளது. பொது சொத்து சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை (26) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திருமதி நிலுபுலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, குற்றப் புலனாய்வுத் பிரிவிலிருந்து சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் ஆஜரானார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டதரணிகளான திலக் மாரப்பன, அனுஜா பிரேமரத்ன, உப்புல் ஜயசூரிய மற்றும் அலி சப்ரி ஆகியோர் ஆஜராகியிருந்தனர். இன்றைய வழக்கு விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகத நிலையில், சூம் காணொளி தொழில்நுட்பம் மூலம் வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நோய் நிலைமை அதிகரித்துள்ளதால் பாரிய உயிராபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவரை பிணையில் விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன நீதிமன்றில் கோரிக்கையை முன்வைத்த நிலையில், நீதிமன்றம் ரணில் விக்கிரமசிங்கவின் நோய் நிலைமையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் விடுதலை செய்துள்ளது. இந்நிலையில், கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற பகுதியில் எதிர்க்கட்சியினர், ரணிலின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. ( படப்பிடிப்பு ஜே. சுஜீவகுமார் ) பிணையில் விடுதலையானார் ரணில் ! | Virakesari.lk
  11. 26 Aug, 2025 | 04:41 PM யாழ்ப்பாணம், காரைநகர் பகுதியில் குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரமாக இருந்த பசு மாடு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளது. காரைநகரை சேர்ந்த யோகநாதன் என்பவருக்கு சொந்தமான சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு வேளைகள் பால் தர கூடிய மாடே படுகொலை செய்யப்பட்டுள்ளது. மாடு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிமையாளரினால், ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை மாடுகளை களவாடி இறைச்சியாக்கும் சட்டவிரோத கும்பல் பசுமாட்டை தடம் வைத்து பிடிக்க முற்பட்ட வேளையே மாடு உயிரிழந்த நிலையில், மாட்டின் உடலத்தை சம்பவ இடத்தில் இருந்து அகற்ற முடியாத நிலையில் மாட்டினை கைவிட்டு சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தீவகம் பகுதிகளில் வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பல்களினால் தொடர்ந்து களவாடப்பட்டு அவை இறைச்சியாக்கி விற்பனை செய்யப்படுகின்றது. அதனால் அப்பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து வருவதால், அவற்றை கட்டுப்பட்டுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் குற்றக் கும்பலால் கொல்லப்பட்டது பசு மாடு | Virakesari.lk
  12. 26 Aug, 2025 | 08:45 PM நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது. இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வது நாளான இன்றைய தினம் (ஓகஸ்ட் 26) செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ரனிதா ஞானராஜ் தெரிவிக்கின்றார். அகழ்வு தளத்தை பார்வையிட்ட ஊடகவியலாளர்கள் குழந்தைகளினுடையது என சந்தேகிக்கப்படக்கூடிய எலும்புகளை கண்டுள்ளனர், எவ்வாறெனினும் தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே இது தொடர்பில் உறுதிப்படுத்தப்படும் என சட்டத்தரணி ரனிதா கூறுகிறார். செம்மணி புதைகுழியிலிருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டது இன்றைய தினமாகும். செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து இதுவரை குழந்தைகள் உள்ளிட்ட 166 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 32 நாட்கள் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, செம்மணி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உட்பட 150 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. 18 நாட்களின் பின்னர் அகழ்வாய்வுகள் நேற்று (ஓகஸ்ட் 25) மீண்டும் ஆரம்பமாகியபோது ஸ்கேன் பரிசோதனைக்கு அமைய அகழ்வு தளத்தை விரிவுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள சதொச மனித புதைகுழியாகும். அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. 2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்றாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன. இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியான கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழியிலிருந்து குறைந்தது 88 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதன் அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஐந்தாவது பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழியாகும். அங்கு 2013 இல் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு பணிகள் நிறைவடைந்த நேரத்தில், 52 நபர்களின் எச்சங்கள் மீட்கப்பட்டன. மேலும் 16 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் : இலங்கையின் 2 ஆவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது 'செம்மணி' | Virakesari.lk
  13. 26 Aug, 2025 | 07:24 PM (துரைநாயகம் சஞ்சீவன்) சம்பூர் பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக சம்பூர் பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை (26) பட்ஜட் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மாகாண மேல் நீதிமன்ற அனுமதியுடன் மேலதிக நடவடிக்கைக்காக குறித்த வழக்கானது செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. திருகோணமலை சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட விடயம் தொடர்பான வழக்கானது மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி. தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இன்றைய தினம் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த பகுதியில் மேலதிக மனித எச்சங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் உத்திதேச பட்ஜட் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. குறித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்திடம் இருக்கின்ற ஜி.பி.ஆர் என்ற ஸ்கான் இயந்திரத்தை கொண்டு குறித்த பகுதியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்வதற்காக சட்ட வைத்திய அதிகாரி, தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றின் ஊடாக காணாமல் போனோர் அலுவலகத்தினால் ஒப்பமிடப்பட்டு குறித்த உத்தேச பட்ஜட் ஆனது தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பட்ஜட் ஆனது மூதூர் மாவட்ட நீதிமன்ற கட்டளையுடன் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு மாகாண மேல் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேலதிக நடவடிக்கைகள் எடுப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி குறித்த வழக்கானது தவணையிடப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனோர் அலுவலகத்தின் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி எம்.எம்.நஸ்லீம் தெரிவித்தார். சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் ஆயுபு என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் பின்னர் மிதிவெடி அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சம்பூர் பகுதியில் மனித எச்சங்களை ஸ்கான் இயந்திரம் கொண்டு ஆய்வு செய்வதற்காக பட்ஜட் மன்றில் சமர்ப்பிப்பு | Virakesari.lk
  14. ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து! சென்னை: சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ரஜினிகாந்தின் புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லா உச்ச நட்சத்திரமாக, தனிப்பெரும் ஆளுமையாகத் திகழும் ரஜினிகாந்த் தம்முடைய திரைவாழ்வின் பொன்விழா ஆண்டினை காண்பது மிகுந்த மனமகிழ்வை தருகின்றது.நீண்ட நெடிய தம் கலைப்பயணத்தில் இரண்டு தலைமுறை இளையோர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் திரைக்கலைஞராக திகழ்ந்து, தொடர்ந்து 50 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக ஒளிர்வது இந்தியப் பெருநாட்டில் இதுவரை எவரும் நிகழ்த்திடாத ஈடு இணையற்ற தனிமனித பெருஞ்சாதனையாகும். இந்தியப் பெருநாட்டைக் கடந்து, உலகம் முழுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களால் ரசித்து கொண்டாடப்படும் அவருடைய நடிப்புத்திறன் வியந்து போற்றத்தக்கதாகும். 1975 ஆம் ஆண்டு நடிகராக தனது கலைப்பயணத்தை தொடங்கியபோது இருந்த ஆர்வமும், வேகமும், தேடலும் கொண்டு துடிப்புடன் நடித்து, ஏற்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தாரோ, இன்றளவும் சற்றும் குறைவின்றி உழைப்பினைச் செலுத்தும் அவருடைய அர்ப்பணிப்புதான், அவரின் திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் இமாலய வெற்றிகள் பெறச் செய்தன. சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு அவருடைய புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும். எந்நிலை உயர்ந்தாலும் தன்னிலை மாறாது இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் ஆகச்சிறந்த மானுடப் பண்பினை இயல்பிலேயே கொண்ட தமிழ்த்திரையின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த், என்னுடைய நெஞ்சம் நிறைந்த பொன்விழா ஆண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்! ரஜினிகாந்த், இன்னும் பற்பல ஆண்டுகள் தம் இனிய கலைப்பயணத்தைத் தொடர வேண்டுமென்ற எம் பெருவிருப்பத்தைத் தெரிவிப்பதோடு, 'கூலி' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படைப்பாக அமைய என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்' எனத் தெரிவித்துள்ளார் ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து! | Rajinikanth hard work is a life lesson for the youth Seeman congratulates to coolie - hindutamil.in
  15. படகு பழுதாகி கடலில் அந்தரித்த யாழ். மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் மீட்பு! யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு மீனவர்கள், படகு பழுதடைந்து நடுக்கடலில் அந்தரித்த நிலையில், தமிழக மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறைப் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு மீனவர்களுமே, நடுக்கடலில் அந்தரித்த நிலையில், தமிழக மீனவர்களால் மீட்கப்பட்டு கடலோரக் காவற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. படகு பழுதாகி கடலில் அந்தரித்த யாழ். மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் மீட்பு!
  16. யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்! இந்தியாவிலிருந்து MV Express அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல் ஒன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது. இன்று (15) மாலை வரை குறித்த கப்பல், காங்கேசன் துறையில் தரித்து நிற்கும் என துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது. 10 தளங்களை கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்த கப்பலானது இந்தியாவில் இருந்து சுமார் 1,391 சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்ட நிலையில் சுமார் 584 ஊழியர்கள் பணி புரிகின்றனர். குறித்த கப்பலானது கடந்த 2023 ஆம் ஆண்டு 9 தடவைகளும், 2024ஆம் ஆண்டு 6 தடவைகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்!
  17. 15 Aug, 2025 | 06:03 PM புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுத்த கொடியை பறக்கவிட்டு, பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 10 ஆம் திகதி அன்று தனது வீட்டில் இருந்தவேளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசா (அகிலன்) அவர்களின் கொலைக்கு நீதிவேண்டியும் கொலையாளிகளை விரைந்து கைதுசெய்யக்கோரியும் இந்த போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது. இதனால் புங்குடுதீவு - யாழ்பாணம் இடையேயான போக்குவரத்து சேவைகள் இன்றையதினம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நபருக்கு நீதி வேண்டி புங்குடுதீவில் போராட்டம்! | Virakesari.lk
  18. 15 Aug, 2025 | 05:17 PM யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய அமைதிப் படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் , இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினமான இன்றைய தினம்(15) வெள்ளிக்கிழமை பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்திற்கு இந்திய தூதுவர் சென்று அஞ்சலி செலுத்தினர். அதன் போது, யாழ் . மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக குமாரவும் அஞ்சலி செலுத்தினார். விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட “பவன்” நடவடிக்கை மற்றும் 1987 தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான ஏனைய நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது. யாழில் இந்திய அமைதிப்படையின் நினைவு தூபியில் இந்திய துணைத்தூதுவர் எஸ்.சாய் முரளி அஞ்சலி | Virakesari.lk
  19. ‘கூலி’ விமர்சனம்: ரஜினி - லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான முதல் நாளில் இருந்தே ‘கூலி’ படத்துக்கான ஹைப் மிகப் பெரிய அளவில் உருவாகிவிட்டது. காரணம், தமிழின் தற்கால இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டதுதான். அவருடன் ரஜினி என்கிற ஒரு மிகப் பெரிய பிராண்ட் இணையும்போது படம் குறித்த எதிர்பார்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக எக்கச்சக்கமாக எகிறிவிட்டிருந்தது. அத்தகைய எதிர்பார்ப்பை ‘கூலி’ திரைப்படம் நிறைவேற்றியதா என்று பார்க்கலாம். சென்னையில் மேன்ஷன் ஒன்றை நடத்தி வருபவர் தேவா (ரஜினிகாந்த்). தனது இளவயது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) திடீரென மரணம் அடைந்ததை அடுத்து, அவருடைய இறுதிச் சடங்குக்கு வரும் தேவாவை அவமானப்படுத்தி அனுப்பிவிடுகிறார் ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி (ஸ்ருதிஹாசன்). தனது நண்பனின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன என்பதை துப்பறியத் தொடங்கும் தேவாவுக்கு மிகப் பெரிய கடத்தல் கும்பலின் தலைவனான சைமன் (நாகர்ஜுனா) பற்றியும், அவரது வலது கரமாக செயல்படும் தயாளன் (சவுபின் சாஹிர்) பற்றியும் தெரியவருகிறது. இவர்களுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு? தேவா, ராஜசேகரின் பின்னணி என்ன என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘கூலி’ திரைக்கதை. ADVERTISEMENT ’மாநகரம்’ தொடங்கி ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என தனக்கென ஒரு பாணி, விறுவிறுப்பான திரைக்கதை உத்தி மூலம் இந்தியாவின் ‘மோஸ்ட் வான்ட்டட்’ இயக்குநர்களில் ஒருவராக மாறியிருக்கும் லோகேஷ் கனகராஜ், இந்தியாவின் நம்பர் ஒன் சினிமா நட்சத்திரங்களில் ஒருவரான ரஜினியை இயக்கும் வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டாரா என்று கேட்டால், ‘இல்லை’ என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் வெளியானதிலேயே ‘லியோ’ தான் சுமாரான படம் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் தற்போது ‘வீக்’ ஆன திரைக்கதையின் மூலம் லோகேஷின் மிக ஆவரேஜான படம் என்ற பெருமையை ‘கூலி’ தட்டிச் சென்றுள்ளது. வழக்கமான ரஜினி படங்களுக்கே உரிய ‘மாஸ்’ இன்ட்ரோ காட்சி, சத்யராஜின் மரணம், அதற்கான காரணங்களை ரஜினி தேடத் தொடங்குவது என பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைப்பதுடன் தொடங்கும் படம், அடுத்தடுத்த காட்சிகளிலேயே சரியத் தொடங்கி விடுகிறது. அதற்கு காரணம் எந்த ஒரு கதாபாத்திரத்துக்கும், காட்சிகளுக்கும் வலுவான பின்னணி இல்லாததுதான். ஸ்ருதிஹாசன் தொடங்கி சத்யராஜ், நாகர்ஜுனா, ரச்சிதா ராம் என ஏராளமாக கேரக்டர்கள் திரையில் உலவினாலும் இவர்கள் யாருடைய கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்படவில்லை. படம் முழுக்க ரஜினி, சவுபின் இருவருடைய ஆதிக்கம்தான். தனது அட்டகாசமான திரை ஆளுமையால் ரஜினிகாந்த், நட்சத்திர நெரிசல் மிகுந்த படத்தில் வழக்கம் போல ஜொலிக்கிறார். ரஜினியின் சின்னச் சின்ன மேனரிசங்கள் கூட ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. படத்தில் ஆங்காங்கே வரும் ‘ரஜினி ஸ்பெஷல்’ தருணங்கள் படத்தின் நகர்வுக்கு வலுவூட்டுகின்றன. சவுபினுக்கு முழுநீள நெகட்டிவ் கதாபாத்திரம். படம் முழுக்க தனது குரூரத் தன்மை கொண்ட கதாபாத்திரத்துக்கு சிறப்பான முறையில் நியாயம் செய்திருக்கிறார். மற்றபடி நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோருக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். சில காட்சிகளே வந்தாலும் உபேந்திரா வரும் இடங்கள் மாஸ். ஆமீர்கான் கதாபத்திரம் ரோலக்ஸின் இன்னொரு வடிவம். சிறிய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார். லோகேஷின் படங்களில் தொடக்கம் முதல் வரும் ஒரு டம்மி கதாபாத்திரம் திடீரென ஆக்ரோஷம் கொண்டு எழுந்து நிற்கும். உதாரணமாக ‘விக்ரம்’ படத்தில் வரும் ஏஜென்ட் டீனா கதாபாத்திரம். அப்படி இதிலும் லோகேஷ் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது பெரியளவில் கைகொடுக்கவில்லை. இணையத்தில் பெரும் வைரலான ‘மோனிகா’ பாடல் பொருந்தாத இடத்தில் வருகிறது. ஆனால் அதில் பூஜா ஹெக்டேவின் நடனம் சிறப்பு. அனிருத்தின் பின்னணி இசை ‘மாஸ்’ காட்சிகளில் மட்டும் கைகொடுத்திருக்கிறது. ஆனால் மற்ற இடங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை. பாடல்கள் ஏற்கெனவே ஹிட். ‘அரங்கம் அதிரட்டுமே’ பாடல் வரும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது. 80களின் ரஜினியை ரசித்தவர்களுக்கு படத்தில் சிறப்பான ட்ரீட் உள்ளது. நேர்த்தியான முறையில் டீ-ஏஜிங் செய்த தொழில்நுட்பக் குழுவினருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். லோகேஷ் படங்களில் டிரேட்மார்க் ஆக வரும் பழைய பாடல் இதில் சுத்தமாக எடுபடவில்லை. படத்தின் முதல் பாதியிலேயே ரஜினி யார், அவரது நோக்கம்தான் என்ன என்பதை முழுமையாக வெளிப்படுத்தி, இரண்டாம் பாதியில் கேள்விகளுக்கான முடிச்சுகள் அவிழும்படி செய்திருக்கலாம். கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் காட்சியில் தான் பார்வையாளர்களுக்கு முழு உண்மையும் தெரியவருகிறது. கடைசி அரை மணி நேரம் ஆமீர்கான், ரஜினி இடையிலான காட்சிகளும், அந்த ஃப்ளாஷ்பேக்கும் படமாக்கப்பட்ட விதம் சிறப்பு. ஆனால், படத்தின் நீளம் காரணமாக கிட்டத்தட்ட அந்தக் காட்சி வரும்போதே பார்வையாளர்கள் சலிப்படைந்து விடுகின்றனர். மொத்தத்தில் எடுத்துக் கொண்ட கதைக்களம் சிறப்பாக இருந்தாலும், அது சொல்லப்பட்ட விதத்தில் எதிர்பார்த்த சுவாரஸ்யம் இல்லாததால் ‘ஆவரேஜ்’ ஆன படம் என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது ‘கூலி’. ரஜினியின் சின்ன சின்ன மேனரிசங்களும், சவுபினின் வில்லத்தனமுமே பல இடங்களில் படத்தை காப்பாற்றுகின்றன. ‘கூலி’ விமர்சனம்: ரஜினி - லோகி கூட்டணியின் ‘ஆவரேஜ்’ ட்ரீட்மென்ட் எப்படி? | Coolie Movie Review - hindutamil.in
  20. Published By: Digital Desk 2 11 Aug, 2025 | 05:46 PM யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் ஏற்பாட்டில், இரண்டாவது 'யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025' ஆனது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மூன்று தினங்களுக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு ஒன்று திங்கட்கிழமை (11) யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்ற அலுவலகத்தில் இடம்பெற்றது. அப்போது ஏற்பாட்டாளர்கள் இதனைத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "நமது சமூகத்தில் வாசிப்பு கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் சமூகப் பொறுப்பு நமக்கு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பை மேம்படுத்தும் நோக்கில், இந்தப் புத்தகத் திருவிழாவை இலாப நோக்கமின்றிக் கடந்த ஆண்டு சிறப்பாக நடத்தினோம். அதற்கு கிடைத்த பெரும் வரவேற்பே இந்த ஆண்டும் சிறப்பாக ஏற்பாடு செய்ய எங்களை ஊக்குவித்தது" என்றனர். உள்நாட்டு, தேசிய மற்றும் சர்வதேச புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒன்றிணைத்து நடைபெறும் இந்தத் திருவிழாவில், வாசகர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நூலகர்கள் என அனைவரும் ஒரே இடத்தில் பன்மொழிப் பதிப்பகங்களைக் காணவும், தள்ளுபடி விலையில் புத்தகங்களை வாங்கவும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், பிரபல எழுத்தாளர்களைச் சந்தித்துப் பேசவும், புத்தக வெளியீடுகளில் பங்குபெறவும், நாடக நிகழ்வுகளைக் காணவும் ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை புத்தகத் திருவிழாவை ஆரம்பித்து வைப்பதற்காக, பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் சிறப்பு விருந்தினராக மூத்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். மூன்று தினங்களும் புத்தகக் கண்காட்சிக்கு அப்பால் பல்வேறு கலை மற்றும் இலக்கிய நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025! | Virakesari.lk
  21. மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள் - வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம். 1 Aug, 2025 | 02:37 PM மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக்கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் திங்கட்கிழமை (11) குறித்த போராட்டம் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த போராட்டக்காறர்கள், அபிவிருத்தியின் பெயரால் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டங்களை நிறுத்தவேண்டும்.இலங்கையின் மீன்பிடி தொழில் மற்றும், பறவைகளின் பாதுகாப்பு சரணாலயம், இயற்கை காற்றின் வலு முதலானவற்றிற்கு பெயர் பெற்ற இடமாக மன்னார் விளங்குகிறது. இந்தநிலையில் ஏகபோக இராட்சத பல்தேசிய கம்பெனிகளின் இலாப வேட்டையாலும், இலங்கை அரசாங்கங்களின் கையாலாகாத நிலையாலும் அழிவை எதிர் நோக்கி உள்ளது மன்னார் தீவு. ஏற்கனவே உள்ள காற்றாலைகளால் மீன் கரைக்கு வருவது குறைந்துவிட்டது மீன் இனப்பெருக்கம் குன்றிவிட்டது. காற்றாலைகளின் அமைப்பால் தரையில் ஏற்படுத்தப்பட்ட மாறுதல்கள் வடிகாலமைப்பை மாற்றிவெள்ளப்பெருக்கு மற்றும் நிலத்தடி நீர் உவராதலை ஏற்படுத்தியுள்ளது. காற்றாலைகளின் இரைச்சலால் மன்னாருக்கு வரும் வலசைப்பறவைகளின் வருகையை தடுக்கவும் பாதையை மாற்றவும் அவை காற்றாடிகளால் இறக்கும் நிலையையும் ஏற்படுத்திஉள்ளது. இது மட்டுமின்றி மக்களின் வாழ்விலும் காற்றாலைகளின் ஒலி மாசு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மன்னார் மண்ணின் கீழ் இருக்கும் இல்மனைட் தோரியம் போன்ற கனிமவளங்கள் இன்றைய நவீன விஞ்ஞான உபகரணங்கள் மற்றும் இராணுவ தேவைகளுக்காக உலக நாடுகளுக்கு தேவைப்படுகின்றது. அதில் முதலீடு செய்வது பெரும் லாபம் தரும் என்பதால் பல் தேசிய நிறுவனங்கள் முண்டியடக்கின்றன. எனவே மன்னாரில் நடைபெற இருக்கின்ற இவ் அகழ்வு மன்னார் தீவையே மனித வாழ்வுக்கு உகந்ததாக இல்லாமல் செய்துவிடும் அளவிற்கு ஆபத்தானது. இந்த காற்றாலை மற்றும் கனியஅகழ்வு நாட்டின் தேவைக்கானதன்றிபல் தேசிய கம்பெனிகளின் இலாபக் குவிப்புக்கானதே என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என்றனர். வவுனியா சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இப்போராட்டத்தில், அரசியல் தரப்பினர்,சமூக செயற்ப்பாட்டாளர்கள்,பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர். மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள் - வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் | Virakesari.lk
  22. வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை ஆதரிக்கிறோம் : வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் - மனோ கணேசன் Published By: Digital Desk 3 11 Aug, 2025 | 04:21 PM “நீதியான விசாரணை”, “வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை (15) நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம் என தெரிவித்து அறிக்கையொன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஐந்து தமிழ் இளைஞர்கள், 8 ஆம் திகதி முத்தையன் கட்டு இராணுவ முகாமுக்கு சிப்பாய்களால் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அந்த முகாமில் இருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. தப்பிச் சென்றவர்களில் ஒருவரான, கபில்ராஜ், 9 ஆம் திகதி முல்லை முத்தையன் கட்டு குளத்தில் சடலமாக மீட்கபட்டுள்ளார். தப்பிச் சென்ற ஏனைய நால்வர், தம்மை இராணுவத்தினர் கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆகவே என்ன நடந்தது என்பதை ஊகிப்பது கடினமானது அல்ல. இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழரசு கட்சி, “நீதியான விசாரணை”, “ வடகிழக்கில் இருந்து மேலதிக இராணுவம் குறைப்பு” ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து வெள்ளிக்கிழமை நடத்தும் முழு அடைப்பு என்ற ஹர்த்தாலை தாம் ஆதரிக்கிறோம். ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க, இது தொடர்பில் உடன் விசாரணை, தண்டனைக்குரிய சட்ட நடவடிக்கை, ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் இதை அடிப்படையாக கொண்டு, வடக்கு கிழக்கின் மேலதிக இராணுவ பிரசன்னத்தை உடன் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். “இராணுவ பிரசன்னம் குறைப்பு” என்பதுதான் இந்த ஹர்த்தால் சொல்ல போகும் செய்தி. போர் செய்த இராணுவம் சும்மா இருக்காது. அதிலும் இன அடிப்படையிலான போர் செய்த இராணுவ சிப்பாய்களின் மனங்களில் இனவாதம் தங்கி இருக்கத்தான் செய்யும். எனவே அவர்களை தென்னிலங்கைக்கு கொண்டு வந்து, “குளம் வெட்டுவது, குளத்தில் தூர் எடுப்பது, வீதி அமைப்பது, வீடு கட்டுவது, ஹோட்டல் நடத்துவது, தோட்டம் செய்வது, காய்கறி சந்தை நடத்துவது” போன்ற இன்ன பிற அபிவிருத்தி பணிகளில், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அநுர குமார திசாநாயக்க, ஈடுபடுத்த வேண்டும். “இதற்கு முன் இப்படியான சம்பவங்கள் நடக்க வில்லையா? அப்போது நீங்கள் என்ன செய்தீர்கள்?” என எம்மை பார்த்து, தம்மை அறிவாளிகள் என நினைத்து கொண்டு, கேள்வி கேட்கும், ஜேவிபி அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோரின் வாய்களையும் ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் அனுர குமார திசாநாயக்க மூட வேண்டும். “அன்றைய அரசுகள் மாறி, மாறி செய்தவற்றை செய்ய நாம் வரவில்லை. மாற்றி செய்யவே நாம் வந்தோம்”, என நீங்கள் தான் மக்களுக்கு கூறினீர்கள். அதையே தான் நீங்களும் செய்ய வந்தீர்கள் என்றால், நாம் எதிர்க்கத்தான் செய்வோம். அரச இராணுவ பயங்கரவாதத்தை, நாம் அப்போதும் எதிர்த்தோம். இப்போதும் எதிர்கிறோம். எப்போதும் எதிர்ப்போம். வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை முழு அடைப்பு நடை பெற அழைப்பு விடுத்து இருக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் கோரிக்கையை, தமிழ் முற்போக்கு கூட்டணி வரவேற்று, ஆதரவை அறிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். வெள்ளிக்கிழமை ஹர்த்தாலை ஆதரிக்கிறோம் : வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் - மனோ கணேசன் | Virakesari.lk முல்லைத்தீவு இராணுவ தாக்குதல் தொடர்பான ஹர்த்தாலுக்கு இலங்கையராகவும், மலையக தழிழராகவும் ஜீவன் தொண்டமான் முழுமையான ஆதரவு. 11 Aug, 2025 | 01:28 PM முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் – முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் வெள்ளிக்கிழமை (15) அனுசரிக்கப்படவுள்ள ‘ஹர்த்தால்’ போராட்டத்திற்கு ஒரு இலங்கையராகவும், மலையக தமிழராகவும், எனது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துக்கொள்கின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வியாழக்கிழமை (07), முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டுப் பகுதியில் 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர், இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனதாக தேடப்பட்டு வந்தார். பின்னர் கடந்த சனிக்கிழமை (09) அன்று, அவரது சடலம் முத்துஐயன்கட்டுக் குளத்திலிருந்து மீட்கப்பட்டது. நீதிக்கான கோரிக்கையிலும், இராணுவத்தின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நடைபெறவுள்ள இந்த ஹர்த்தாலுக்கு, எனது ஒற்றுமையையும் உறுதியான ஆதரவையும் வெளிப்படுத்துகின்றேன். யுத்தம் நிறைவடைந்து 16 ஆண்டுகள் கடந்த பின்பும், இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் நிகழ்வது மிகவும் வருத்தமளிப்பதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வலியுறுத்துகின்றேன் என்றார். முல்லைத்தீவு இராணுவ தாக்குதல் தொடர்பான ஹர்த்தாலுக்கு இலங்கையராகவும், மலையக தழிழராகவும் ஜீவன் தொண்டமான் முழுமையான ஆதரவு | Virakesari.lk
  23. 11 Aug, 2025 | 05:14 PM இந்நாட்டு கருவாடு உற்பத்தியின் தரத்தை உயர்த்தி, சர்வதேச சந்தைக்கு ஏற்றவாறு அதனை மேம்படுத்தும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சானது, கடந்த வியாழக்கிழமை (07) அமைச்சு கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது. கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், ஏற்றுமதியாளர்கள், பதப்படுத்துபவர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட துறையின் அனைத்து பங்குதாரர்களும் கலந்துகொண்டனர். ஐரோப்பா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற உயர் தரத்தை எதிர்பார்க்கும் சந்தைகளுக்கு இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கருவாடுகளின் தரம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக இருந்தது. இக்கலந்துரையாடலின் போது, பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. உள்நாட்டில் உயர்தரமான கருவாட்டினைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமம் அவர்களின் முக்கிய பிரச்சினையாக இனங்காணப்பட்டது. மேலும், நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் கருவாடு உற்பத்தியின் போது காணப்படும் தரம் தொடர்பான பிரச்சினைகளும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டன. இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள், புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக வலியுறுத்தினார். "இறக்குமதி செய்யும் நாடுகளின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய, உயர்தரமான கருவாடு உற்பத்தியை உருவாக்குவதும், அதன் மூலம் ஏற்றுமதி சந்தையை வலுப்படுத்துவதுமே எமது பிரதான நோக்கமாகும்" என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி, பின்வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் விளக்கினார் தொழில்நுட்ப அறிவை வழங்குதல்: உயர்தரமான கருவாடு உற்பத்திக்காகத் தேவையான நவீன தொழில்நுட்பங்களை உற்பத்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்துதல். தனியார் துறையை ஊக்குவித்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் தரத்திற்கு ஏற்ற தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தனியார் துறைக்குத் தேவையான வசதிகளையும் நிபுணத்துவத்தையும் வழங்குதல். தரத்தை மேம்படுத்துதல்: நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் கருவாடு உற்பத்தியின் தரம் மற்றும் சுகாதார நிலைமைகளை உயர்த்துவதற்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குதல். இக்கலந்துரையாடலில் உற்பத்தியாளர்கள், உயர்தரமான கருவாட்டை உற்பத்தி செய்ய முன்வருவதாக இணக்கம் தெரிவித்தனர். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம், இலங்கையின் கருவாட்டுத் தொழிற்துறையை சர்வதேச மட்டத்தில் ஒரு போட்டித்தன்மை வாய்ந்த துறையாக மாற்றுவதற்கு கடற்றொழில் அமைச்சு எதிர்பார்க்கிறது. கருவாடு ஏற்றுமதி சந்தையை மேம்படுத்துவதற்காக கடற்றொழில் அமைச்சு பங்குதாரர்களுடன் கலந்துரையாடல் | Virakesari.lk
  24. 11 Aug, 2025 | 04:38 PM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓபிபிபி கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் 2020 இல் கடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கில் அத்துரலிய ரத்ன தேரரை தேடி வரும் பொலிஸார் அவர் தலைமறைவாகியுள்ளார் என தெரிவித்துள்ளனர். அத்துரலிய ரத்ன தேரரின் ராஜகிரிய ஆலயம்,தியான நிலையங்கள் உட்பட பல இடங்களிற்கு அவரை தேடிச்சென்றதாக தெரிவித்துள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அவரை எங்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர். அத்துரலிய ரத்ன தேரரை அவரது தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் அவர் நாட்டிலிருந்து தப்பியோடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவ்வேளை மேல்மாகாணத்திற்கான சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபராக விளங்கிய தேசபந்து தென்னக்கோன் ஆகியோருடன் தொடர்புபட்ட சம்பவம் தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அத்துரலிய ரத்னதேரரை தேடுவதாக தெரிவித்துள்ள பொலிஸார் இருவரையும் விசாரணை செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான கையெழுத்தை பெறுவதற்கு அத்துரலிய ரத்ன தேரர் ஓபிபிபி கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமலதிஸ்ஸ கடத்தினார் என்ற குற்றச்சாட்டு உள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் அந்த ஆவணத்தில் கையெழுத்திடாவிட்டால் தன்னை கொலை செய்யப்போவதாக வெதினிகம விமலதிஸ்ஸ தேரர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துரலிய ரத்ன தேரர் தலைமறைவு - தேசிய பட்டியல் ஆசனத்திற்காக பௌத்தமதகுருவை கடத்திய குற்றச்சாட்டின் கீழ் தேடும் பொலிஸார் - கோட்டா - தேசபந்துவிற்கும் தொடர்பு | Virakesari.lk
  25. 11 Aug, 2025 | 05:16 PM கச்சதீவை இலங்கைக்குத் தாரை வார்த்தது மிக பெரிய வரலாற்றுத் தவறென குறிப்பிடுவது தொடர்பாக நாம் அலட்டிக்கொள்ள தோவையில்லை என தெரிவித்து யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய அரசியலில் அதிலும் குறிப்பாகத் தமிழக அரசியலில் அடிக்கடி கச்சதீவு விவகாரம் சூடு பிடிப்பது வழமை. தேர்தல் காலங்களிலும் மற்றும் எல்லைதாண்டி இலங்கைகடற்பரப்பில் இந்திய மீனவர்கள் வந்து இலங்கை மீனவர்களது வளங்களை சூறையாடி, வலைகளைச்சேதமாக்கும் போதும் இலங்கைக்கடற்படையால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படும் போதும் தமிழக முதல்வர் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது போல திரும்பப்பெறுவதுதான் தமிழக மீனவர்களது பிரச்சினைக்குத்தீர்வு என்று கோஷமிடுவது சர்வசாதாரணம். இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சில நாட்களுக்கு முன் கச்சதீவை காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இலங்கைக்குத்தாரை வார்த்தது மிக பெரிய வரலாற்றுத்தவறு என்று குறிப்பிட்டிருந்தார். வட பகுதிக்கு அல்லது முன்னர் வடக்கில் இருந்த யாழ்ப்பாண இராச்சியத்திற்குச் சிறப்பைக் கொடுப்பதற்கு தீவுகள் முக்கியமானதொரு காரணமாகும். மன்னார் துவங்கி காரைதீவு (காரைநகர்), வரையுள்ள இரணைதீவு, பாலைதீவு, நெடுந்தீவு, கச்சதீவு, புங்குடுதீவு, கற்கடதீவு, எழுவைதீவு, நயினாதீவு. மண்டைதீவு, ஆகியவை இவை. இவற்றுள் மன்னார், ஊர்காவற்துறை, மண்டைதீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை தரைவழிப்பாதையால் இலங்கைப்பிரதான நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் எல்லாத்தீவுகளிலும் மக்கள் வசிப்பதில்லை. குறிப்பாக நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கச்சதீவில் மக்கள் வசிப்பத்தில்லை. வருடத்தில் ஒரு முறை மட்டும் இடம் பெறும் கத்தோலிக்க மக்களின் புனித அந்தோனியார் திருநாளுக்கு மட்டும் மக்கள் இலங்கையின் குறிப்பாக வட மாகாணத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் போவார்கள். வடக்கில் பெரும்பான்மையினராக இருக்கும் இந்து மத சகோதரர்களும் கணிசமானளவு தொகையினர் இங்கு வருவதுண்டு. இந்தியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் வருவார்கள் திருநாட் காலங்களில் மக்கள் போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் முக்கிய ஏற்பாடுகளுக்கு இலங்கைக் கடற்படையினர் பொறுப்பாயிருப்பார்கள். கச்சதீவுத் திருநாளுக்கு சில வாரங்குளுக்கு முன் யாழ்ப்பாணச் செயலகத்தில் அரச அதிகாரிகள் பாதுகாப்புத்தரப்பினர் யாழ் மறைமாவட்ட ஆயரின் பிரதிநிதிகள் கூடி திருநாளுக்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வருவது வழக்கம். திருநாள் இல்லாத மற்ற நாட்களில் இலங்கையிலிருந்து மட்டுமல்ல இந்தியாவிலிருந்தும் கடற்தொழில் செய்பவர்கள் சற்று ஓய்வெடுக்க அல்லது வலைகளைக் காயப்போட இங்கு வந்து போவார்கள். இந்தியக் கடற்தொழிலாளர் பெரும் எண்ணிக்கையில் இங்கு வந்து போவதாலும் சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட அந்தோனியார் கோயிலுக்கு இவர்களும் வந்து வழிபட்டுச்செல்வார்கள். நேர்த்திக்கடன் போன்ற கடன்கள் செய்வதற்கும் சில சந்தர்ப்பங்களில் நன்கொடைகள் வழங்குவதற்கும் வருவார்கள். இந்தப் பின்ணனியிலும் கணிசமானளவு இந்தியக் கடற்தொழிலாளர்கள் வருவதாலும் கச்சதீவு இந்தியாவுக்கா இலங்கைக்கா சொந்தம் என்ற ஒரு மயக்கம் உருவானது ஆயினும் 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்னிருந்தே கச்சதீவில் புனித அந்தோனியார் சிற்றாலயம் ஒன்றிருந்தது. இவ்வாலயம் யாழ்ப்பாணக் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கீழ் உள்ள நெடுந்தீவுப் பங்கின் கீழ் இருந்தது. நெடுந்தீவுப் பங்கில் உள்ள பங்குத் தந்தைதான் இவ்வாலயத்திற்கு நேரடிப் பொறுப்பாயிருந்து வந்துள்ளார். கச்சதீவு திருநாளுக்குச் சில நாட்களுக்கு முன் நெடுந்தீவுப் பக்கத்திலிருந்து பங்குத்தந்தையின் பணிப்புரையில் கச்சதீவு மூப்பர்' என்றழைக்கப்பட்ட (மூப்பர் அல்லது கணக்குப்பிள்ளை என்னும் கத்தோலிக்க ஆலய நிர்வாக முறை 16ம் நூற்றாண்டில் புனித சவேரியார் காலத்திலிருந்து ஒரு ஆலயத்தில் குரு நிரந்தரமாத் தங்குவதில்லை யென்றால் அவ்விடங்களில் ஆலயப்பராமரிப்பு, மக்களின் ஆன்மீக நலன் சம்பந்தமான விடயங்களுக்கு இந்த மூப்பரே பொறுப்பாயிருப்பார். பங்குத்தந்தை வரும் போது இவரே அனைத்துக்கும் பொறுப்பு கூறுபவராக இருப்பார். இப்போது அனேகமான ஆலயங்களில் வதிவிடப்பங்குத்தந்தை இருப்பதால் பெரும்பாலும் இந்த மூப்பர் முறை நடைமுறையில் இல்லை.) அல்லது வழிபாடுகளுக்கு ஆயத்தம் செய்பவர் யாத்திரிகளது தேவைகளையும் கவனிப்பார். சில உதவியாளர்களுடன் சென்று அங்குள்ள சிற்றாலயம், அதன் சுற்றுப்புறம் ஆகியவற்றைச் சுத்தம் செய்வார். பங்குத்தந்தையும் சில நாட்களுக்கு முன் சென்று இப்பணிகளை மேற்பார்வை செய்வார். இவ்வாறு செய்த பழைய மூப்பர்களின் வாரிசுகள் இப்போதும் நெடுந்தீவில் உள்ளனர். அண்மைக்காலங்களில் கடற்படையினர் உணவு, குடிநீர் ஏற்பாடுகள் பலவற்றை கடற்படையினர் செய்துவருகின்றனர். யுத்தகாலத்தில் கச்சதீவு திருநாள் ஒழுங்காக இடம் பெற்றிருக்கவில்லை. இங்கு ஒரு தற்காலிக கடற்படை முகாமும் இருந்தது. யுத்தம் முடிவடைந்தபின் யாத்திரைகள் கிரமாக இந்திய இலங்கை யாத்திரிகாகளுடைய பங்குபற்றுதலுடன் இடம் பெற்று வருகின்றன. யாழ்மறை மாவட்ட ஆயரின் பணிப்புரையில் நெடுந்தீவுப் பங்குத்தந்தையே வழிபாட்டுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கின்றார். யாழ் ஆயரின் அழைப்பின்பேரில் தான் இந்தியாவின் தங்கச்சி மடம் பங்குத்தந்தையும் வேறு சில குருக்களும் துறவிகளும் வருகின்றனர். இந்திய யாத்திரிகளது எண்ணிக்கை போன்ற ஏற்பாடுகள் எல்லாம் யாழ் கச்சேரியில் நடக்கும் கூட்டங்களில் முடிவு செய்யப்படுகின்றது. இந்திய யாத்திரிகள் கணிசமானளவு வருகின்றமையால் இந்திய குருக்களுக்கும் கூட்டுத்திருப்பலி மற்றும் வழிபாடுகளில் கணிசமான பங்கு வழங்கப்படுகின்றது. கச்சதீவுப்பெருநாள் ஏற்பாடுகளும், வழிபாட்டு ஒழுங்கமைப்பும் இலங்கை அரசினதும், யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட ஆயரின் பணிப்புரையிலேயே நடைபெற்றுவருகின்றது. நிறைவாக கச்சதீவு கடந்த பல தசாப்தங்களாக (யுத்தகாலம் நீங்கலாக) இந்திய இலங்கை யாத்திரிகள் ஏறக்குறைய சரிக்குச்சரி எண்ணிக்கையில் வந்துபோனமையாலும், திருநாள் இல்லாத வருடத்தின் எஞ்சிய நாட்களின் இரு நாட்டுக்கடற்தொழிலாளரும் கச்சதீவுக்குச் சர்வசாதாரணமாக வந்து ஓய்வெடுத்து இங்கிருந்த அந்தோனியார் சிற்றாலயத்தில் வணங்கிச் சென்றதாலும் அரசியல், புவியியல் ரீதியில் கச்சதீவு யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி குறிப்பாக இந்திய தரப்பில் கேட்கப்பட்டுவந்தது. இப்பகுதியில் இலங்கைக் கடலில் அத்துமீறி வந்து மீன்பிடிப்பதில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுவது போன்ற நிகழ்வுகள் இடம்பெறுவதால் கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது தவறு என்று தமிழக அரசியல் தரப்பிலும் இந்திய மத்தி அரசிலும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. உண்மையில் 1974ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது ஆணித்தரமாக கச்சதீவு இலங்கைக்கே சொந்தம் அதில் இந்தியா உரிமை கொண்டாடப் போவதில்லை என்று அறிவித்தமை கச்சதீவை இலங்கைக்குத்தாரை வார்த்து கொடுத்தமையாகாது. ஏனெனில் கச்சதீவு ஒருபோதும் இந்தியாவின் ஆட்சிக்கும் நிர்வாகத்திற்கும் கீழ் இருந்ததில்லை. இந்த பின்னியில் கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுப்பது அல்லது மிளப்பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனை அப்போதே யாழ் ஆயராக இருந்த கலாநிதி. ณ. தியோகுப்பிள்ளை ஆண்டகை யாழ் ஆயரில்ல ஆவணங்களிலிருந்தும் யாழ் ஆயரின் நிர்வாகத்தின் கீழ் நெடுந்தீவுப் பங்குப் பதிவேடுகள் அங்குள்ளவர்களின் வாய்மொழி பாரம் யபரியங்களிலிருந்தும் சுட்டிக்காட்டியிருக்கின்றார். எனவே ய இந்தியப் பிரதமரின் கூற்றாகிய 1974 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போதுதான் கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அப்போது தமிழ் நாட்டில் தி.மு.க கட்சியும் காங்கிரஸ் ஆட்சியின் பங்காளியாக இருந்தது என்பது பற்றியெல்லாம் நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. புதிய, 2016ம் ஆண்டு தற்போதைய ஆயர் கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை பொறுப்பேற்றபின் பல வருடங்களாக குறிப்பாக போர்க்காலத்தில் கவனிப்பாரற்று சிதைவடைந்த நிலையில் ஒரு பல்லாயிரக்கணக்கான யாத்திரிகள் கலந்துகொள்ளும்படியான ஒரு ஆலயம் கட்டவேண்டிய தேவையை உணர்ந்து கடற்படையினரிடம் அனுசரணையைக் கோரியபோது. அவர்களது அனுசரணையில் ஒரு புதிய அழகிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இந்திய யாத்திரிகர்களும் வருகின்றனர் மற்றும் கடற்தொழிலாளரும் இங்கு மற்ற நாட்களில் வந்து ஓய்வெடுக்கவும் தமது வலைகளைக் காயப்போடவும் அவர்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதி தொடர்ந்து பேணப்படுகின்றது என்றுள்ளது. கச்சதீவு தொடர்பில் இந்தியாவின் கருத்துக்களை நாம் அலட்டிக்கொள்ள தோவையில்லை - யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.